வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, May 11, 2011

1930 ஆம் வருடத்திலேயே தாலியின்றி மாலை நேரத்தில் நடைபெற்ற திருமணம்

திருவாளர் தமிழ்ப் பண்டிதர் சாமி. சிதம்பரனார் அவர்கட்கும், கும்பகோணம் திரு. குப்புசாமி பிள்ளை குமாரத்தி திருமதி சிவகாமி அம்மாள் அவர்கட்கும் 5.5.1930 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திரு. ஈ.வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுயமரி யாதை மாநாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும்.

திருமதி ஈ.வெ.ரா. நாகம் மாளவர்கள் அவர்கள் திருமண வைபவத்தை நடத்தி வைப்பார் கள்.

- ஈ.வெ. ராமசாமி

- இவ்வாறு ஓர் அறிவிப்பு குடிஅரசு இதழில் (4.5.1930) வெளிவந்துள்ளது.

சிவகாமி அம்மையார் சிறு வயதில் திருமணம் செய்து இளவயதிலேயே கணவனை இழந்தவர்.

அவருக்கு எப்படியும் மறு மணம் செய்து வைக்கவேண்டும் என்பதிலே பெண்ணின் தந்தை யார் குப்புசாமி பிள்ளை அவர் களைவிட அதிக ஆர்வமும், அக்கறையும் காட்டியவர் தந்தை பெரியார் ஆவார்.

இதனை மணமகளின் தந்தையார் குப்புசாமி அவர்களே குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாடு ஈரோட்டிலே ஏற்பாடாகி இருந்தது. அந்த மாநாட்டுக்கு முன்பாகவே அந்தப் பந்தலில் சிவகாமி - சிதம்பரனார் புனர் விவாஹம் நடைபெற்றது. (அப்படித்தான் அந்தக் காலகட்டத்தில் குடிஅரசு வெளியிட்டு இருந் தது- 11.5.1930 குடிஅரசு, பக்கம் 12) தாலியின்றி மாலை நேரத் தில் நடைபெற்றது அந்தக் காலத்தில் பெரும் புரட்சிதானே!

திருமணத்தை நாகம்மை யார் முன்னின்று நடத்தி வைத் தார்கள். அப்பொழுது மண மக்கள் உறுதிமொழிகளைக் கூறினார்கள்.

மணமகள்
உறுதி மொழி


இன்றிலிருந்து அன்பி னால் நமது இன்ப இல்லற வாழ்வு ஆரம்பமாகின்றது - அந்நல்வாழ்விற்கு இன்றியமை யாததாகிய எனது அன்பு, எனது கூட்டுறவு முதலியவைகளை சமூக முன்னேற்றத் தொண்டிற் கான எல்லாத் துறைகளிலும் தந்துதவி, நமது நியாயமான விருப்பத்திற்கு மாற்றமில்லாது என்றென்றும் எனது அருமை ஆருயிர்த் துணைவராக இன்று முதல் ஏற்றுக் கொள்கிறேன்.

இதேபோல, மணமகனும் கூறினார். இந்த உறுதிமொழி அச்சிட்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்று மாலை 4 மணிக்கு பெரியார் மாளிகையிலிருந்து மணமக்களை மோட்டாரில் வைத்து மேள தாளங்கள் முழங்க, பிரமுகர்கள் குழாம் சூழ மாநாட்டுச் சிங்காரக் கொட்ட கைக்கு அழைத்து வந்தனர்.

திருமணத்திற்குப் பின் சாமி. சிதம்பரனார் (தமிழ் ஆசிரியர்) திருவாரூருக்கு மாற்றலானார்.
இதற்காகவே, திருவாரூ ருக்குத் தந்தை பெரியாரும், நாகம்மையாரும் வரவேண்டும் என்று கூறி (5.6.1930) பெரிய ஊர்வலமும், வரவேற்பும் நிகழ்த் தப்பட்டன.

திருவாரூரில் சில நாள்கள் தங்கி இருந்து சிவகாமி அம்மை யாருக்குக் குடும்பப் பாங்கு களைப் பயிற்றுவித்து வந்தார் அன்னை நாகம்மையார் என்ப தெல்லாம் சாதாரணமானதுதானா?

தந்தை பெரியாருக்குப் பரந்து விரிந்த தமிழர் குடும்பமே தமது குடும்பம் என்பதற்கும், அதில் நாகம்மையார் அவர் களின் பாத்திரம் எத்தகையது என்பதற்கும் இது ஒரே ஒரு பருக்கை எடுத்துக்காட்டாகும்.

இன்று அன்னை நாகம்மை யார் நினைவு நாள் (1933).
-  மயிலாடன் எழுதியது, விடுதலை 11-05-2011


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]