வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, May 30, 2011

தி.க - தி.மு.க வை விமர்சிக்க நான் தயாராகவில்லை --- சின்னக்குத்தூசி


எழுத்தாளர் சின்ன குத்தூசி அவர்களின் நினை வேந்தல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது (29.5.2011).

கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் பேசினார்கள்.

அடிப்படையில் பெரியார் சிந்தனையாளராக அவர் வாழ்ந்து மறைந்ததை அனைவரும் பாராட்டினார்கள்.

மனிதர்கள் பிறக்கிறார்கள் - வாழ்கிறார்கள், மறை கிறார்கள் - ஆனாலும் அனைவரும் மக்களால் பாராட்டப் படுவதில்லை. மனித குலத்துக்குத் தொண்டு செய்தவர்கள் போற்றப்படுகிறார்கள்.

இதுபற்றி தந்தை பெரியார் கூறுவதை இந்நேரத்தில் எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்.

மனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவே அவன் தனக்காகப் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல் புரிவது தான் மனிதத் தன்மை (21.7.1962) என்று கூறுகிறார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

குடும்பம் என்கிற தனி வாழ்க்கையைத் தவிர்த்து, முழு நேரமும் எழுத்துப் பணியை மேற்கொண்டவர் சின்ன குத்தூசி. அது பெரும்பாலும் அரசியல் தன்மை கொண்டதாக இருந்தாலும் அதில் அடிப்படையான சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வு - திராவிடர் இயக்கப் பார்வை என்பது முதல் நிலையில் இருக்கும் என்பதுதான் அவர் எழுத்துகளுக்குரிய தனிச் சிறப்பாகும்.

காலச் சுவடு என்னும் இதழ் சின்னக்குத்தூசி அவர்களைப் பேட்டி கண்டது.

கேள்வி: எல்லா விஷயங்கள் பற்றியும் விமர்சிக்கிறீர்கள். ஆனால் தி.க. - தி.மு.க. சம்பந்தப்பட்டது என்றால் மட்டும் மவுனம் சாதிக்கிறீர்களே; இது எப்படி சரியாகும்?

சின்னக் குத்தூசி: தி.க., தி.மு.க. ஆகிய இரு இயக்கங்கள் பற்றியும் ஓச்சல், ஒழிச்சல் இல்லாமல் கேலி செய்ய, கண்டிக்க, தாக்கிட என்று எத்தனையோ பத்திரிகைகள் இருக்கின்றன. எத்தனை எத்தனையோ எழுத்தாளர் பெரு மக்களும் இருக்கிறார்கள்.

ஓரிரு சந்தர்ப்பங்களில் தி.க.வும், தி.மு.க.வுமே ஒன்றையொன்று தாக்கி விமர்சனப் போர் நடத்து கின்றன. என்னைப் பொறுத்தவரையில் தி.க. - தி.மு.க., ஆகிய இரு அமைப்புகள் பற்றியும் எத்தனைப் பேர் எத்தனைவிதமான குறைகளைக் கூறினாலும், அந்த இரு அமைப்புகள் இருக்கும் வரையில்தான் சமூக சீர்திருத் தத்துக்கான காரியங்கள் தொடர்ந்து நடைபெறும். அந்த இரு அமைப்புகளும் இல்லாவிட்டால் இங்கே சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு போன்றவைகளை இந்த அளவுக்கு அழுத்தமாக வலியுறுத்தி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கக் கூடிய அமைப்புகள் வேறு எதுவும் என் கண்ணுக்குப்படவில்லை. ஆகவே தி.க., தி.மு.க., வன்முறைகளைப் பெரிதுபடுத்திப் பார்த்து, அவைகளை அழித்துவிடத் துடிக்கும் பேனா வீரர்கள் அணியில் இடம் பெற நான் விரும்பவில்லை. எந்த ஒரு காரணத்துக்காகவும் அவர்களைக் கடுமையாக விமர்சிக்கவும் நான் தயாராகவில்லை
என்று சின்ன குத்தூசி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இது ஓர் ஆழமான கருத்து என்பதில் அய்யமில்லை. பிறப்பில் பேதம் பேசும் வருணாசிரம தர்மம் வேரூன்றப்பட்ட சமூக அமைப்பில், அவற்றை வீழ்த்தும் சமூகப் புரட்சி இயக்கமாக திராவிடர் கழகமும், அரசியலில் தி.மு.க.வும் இருப்பதால் இந்த முடிவினை எழுத்தாளர் சின்னகுத்தூசி மேற்கொண்டார். நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலை எடுத்துக் கொண்டாலும் பார்ப்பன சக்திகள் கண் மூடித்தனமாக தி.மு.க.வை எதிர்த்ததன் பின்னணியைச் சற்று கூர்ந்து நோக்க வேண்டும்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், தமிழ் செம்மொழி அங்கீகாரம், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம், தீட்சதப் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடமாக இருந்த சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத் துறைக்குக் கொண்டு வந்த நிலை - வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் கோட்பாட்டுக்கு விரோதமாக அவரால் உண்டாக் கப்பட்ட சத்திய ஞானசபையில் ஊடுருவி, லிங்க உருவ வழிபாட்டைத் திணித்த அர்ச்சகர்ப் பார்ப்பனரை வெளியேற்றியது உள்ளிட்ட செயல்கள் தந்தை பெரியார் வழி - சீர்திருத்த எண்ண வழி நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அல்லவா?

அதற்கு முன் அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தானே சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும்  என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திக்கு இடம் இல்லை என்ற நிலையும் உறுதிபடுத்தப்பட்டது.

திராவிடர் கழகத்தால்  பிரச்சாரம் மூலம் சீர்திருத்தக் கருத்துகள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கப்படு வதையும், அதற்கான சட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படு வதையும் காண்பவர்களுக்கு எழுத்தாளர் சின்னகுத்தூசி அவர்களின் பேட்டியில் கூறப்பட்ட கருத்தின் அருமை கண்டிப்பாகப் புரியாமற் போகாது.

அந்த அடிப்படையில்தான் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் அவரின் பெயரால் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் ஒருவருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பல்கலைக் கழகவேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்களால் நேற்றைய நினைவேந்தல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இது ஒரு பொருத்தமான அறிவிப்பாகும்.

சின்னகுத்தூசி அவர்களை  கடைசி காலத்தில் பேணிக் காத்த நக்கீரன் குழுமத்திற்கு விடுதலை குழுமம் தன் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

--------- விடுதலை தலையங்கம், 30-05-2011


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]