வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, August 14, 2010

கம்பன் யாத்த இரமாயண காவியத்தின் மீது 'தீ பரவட்டும்'

கம்பன் யாத்த இரமாயண காவியத்தின் மீது தீ பரவட்டும் என்று எழுச்சிப் போர் முரசு கொட்டினார் அறிஞர் அண்ணா.

மிகப் பெரிய பண்டிதர்களான ரா.பி.சேதுப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களின் கருத்துகளை மறுத்துப் பேசி, கம்பராமாயணம் தமிழர்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டு களுடன், அண்ணா அவர்களுக்கே உரித்தான நளினத்துடனும், கம்பீரத்துடனும் விவாதக் கணைகளைத் தொடுத்தார்.

மறுத்துப் பேசியவர்களில் ஒருவர் எனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி நழுவினார். இன்னொருவர் தோல்வியையும் நாகரிகத்தோடு ஏற்றுக் கொண்டார்.

காடேக ராமன் கிளம்பும்போது உடன் வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில், சீதை கூறும் மொழியின் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறியுள்ளபடியே கம்பர் எடுத்து எழுதியிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களிடம் ஆபாச குணங்கள் கிடந்ததைத் தமிழர் கண்டு, அவர்களை தெய் வங்களென்று போற்றும் கீழ் நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள். கம்பரோ, கவித் திறமையினால் ஆரிய இராமனைக் குற்றங்குறையற்ற சற்பாத்திரனாக்கிக் காட்டி வழிபாட்டுக்குரிய தெய்வமாக்கிவிட்டார்.

என்பதுதான் அறிஞர் அண்ணாவின் விவாதம். கம்பனின் கவித் திறனை அவர் எந்த இடத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.

ஒரு சமயம் தஞ்சாவூரில் ஒரு வாலிபர் சங்கக் கூட்டத்துக்கு தந்தை பெரியார் தலைமை வகித்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழன்பர் ஒருவர், பெரியார் இராமாயணத்தைக் குறை கூறுவது தவறு; கலை உணர்ச்சிக்காகவும் அதனைப் போற்ற வேண்டும் என்று கூறினார். அதற்கு அந்த மேடையிலேயே தந்தை பெரியார் மிக அழகாகப் பதில் சொன்னார்.

நான் கலை உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல் கம்ப ராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அதில் உள்ள மூட நம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்று பதில் சொன்னார்.

கம்ப இராமாயணத்தை தன்மான இயக்கம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், தமிழர் தலைவர் வீரமணி போன்றவர்கள் இனக் கண்ணோட்டத்தில் அது இழிவைத் தருகிறது என்ற காரணத்தால் அதனைக் கொளுத்தவேண்டும் என்றனர்- ஏன், கொளுத்தியும் காட்டினர்.

இராமாயணம் தீட்டிய கம்பனே கூட வையகம் என்னை ஏசுமோ, மாசு வந்து எய்துமோ என்றுதான் குற்றவுணர்வுடன் தொடங்குகிறான். அவனுக் கிருந்த கற்பனைத் திறனுக்கும், காவியப் புலமைக்கும் தேர்ந்த ஒரு இலக்கியத்தைப் படைத்திருக்க முடியும். போயும் போயும் ஒரு தழுவல் இலக்கியமாகவா படைக்க வேண்டும்? ஆனால் வரலாறு நெடுக இன்றுவரை நடந்து வந்து கொண் டிருக்கும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தில், எதிரியின் பக்கம் நிற்க தனது அளப்பரிய திறமையை அர்ப்பணித்து, ஆழ்வார் என்ற துரோகப் பட்டத்தை ஏன் சுமக்க வேண்டும்?

1948 இல் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்பு மாநாட்டில் உரையாற்றிய அறிஞர் அண்ணா அவர்கள் எந்த அளவுக்குச் சென்று கருத்துரை புகன்றார் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

திருவள்ளுவர் படத்தைத் திறக்கிறோம் என்றால், அதற்கு முன் கம்பன் படத்தை எரித்து விட்டு, அதனைச் செய்ய வேண்டும் என்று கூறு கிறார் என்றால், அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டிருப்போர், திராவிட பாரம்பரியம் என்பதில் பெருமை கொள்வோர், சென்னையிலே கம்பனுக்கு விழா எடுக்கின்றனர். ஆண்டுதோறும் அதனை ஒரு திட்டமிட்ட வகையில் செய்து கொண்டு இருக் கின்றனர் என்றால், அது சரியானதுதானா? அய்யாவையும், அண்ணாவையும் மதிக்கும் செயல்தானா? இனமானத்துக்கு ஏற்றதுதானா? என்பதை சீர்தூக்கிப் பார்ப்பார்களாக!

அண்ணாவின் அந்தத் தீ பரவட்டும் கொள்கையை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதை முன்னெடுப்போம்!

-------- விடுதலை தலையங்கம் (14.08.2010)
                                                                                                                                                        

2 comments:

அப்பாதுரை said...

அண்ணாவின் எழுத்தைப் படிக்கத்தான் ஈ காக்கா இல்லை; இன்னும் கம்ப ராமாயணம் சிறப்போடு தான் இருக்கிறது. கலைஞருடைய 1970 கால கம்பன் விழா சொற்பொழிவுகளைப் படித்துப் பாருங்களேன், அண்ணாவின் தம்பிகள் அடித்த பல்டி புரியும்.

நம்பி said...

அப்பாதுரை said...
//அண்ணாவின் எழுத்தைப் படிக்கத்தான் ஈ காக்கா இல்லை;....இன்னும் கம்ப ராமாயணம் சிறப்போடு தான் இருக்கிறது. //

கம்ப ராமாயண எழுத்தைப் படிக்க என்ன கிராஸ் பெல்ட் ஈ காக்கா இருக்கிறதா...?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]