வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 07, 2014

நூல் விமர்சனம் - அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்



அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
கே.சந்துரு
மணற்கேணி
முதல் தளம், பு/எண்:10, ப/எண்:288, டாக்டர் நடேசன் சாலை, சென்னை-05
விலை : ரூ.95
கைப்பேசி : 9443033305

திருத்தி எழுதிய தீர்ப்புகள்...

அது கல்லறையானாலும் சரி, கழிப்பறையானாலும் சரி, பாதையை மறித்து நிற்கும் தீண்டாமைச் சுவரானாலும் சரி, பொதுப் பேருந்துகளில் அமர்ந்து பயணம் செய்யும் உரிமையானாலும் சரி, சமூகத்தின் அடித்தட்டில் உள்ள தலித்-பழங்குடி இனத்தவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அதிகார வர்க்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்க வேண்டிய நிலையே இன்னும் நீடிக்கிறது.பொது நீர்நிலையில் தண்ணீர் எடுக்கவும், கோயிலில் நுழையவும் அண்ணல் அம்பேத்கர் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது என்றால் அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெறுவதற்கே நீதிமன்றங்களின் உதவியை நாட வேண்டிய அவல நிலையில் தான் அவர்கள் இன்றளவும் இருந்து வருகிறார்கள்.

ஆதிக்க வர்க்கத்தினரின், சாதியினரின் எதிர்ப்புகளை தினந்தோறும் சந்தித்து, ஒவ்வொரு படியாக ஏறி வரும் அவர்கள் இறுதியாகத் தஞ்சம் புகும் நீதிமன்ற வளாகத்தில் அவர்களது உரிமைக் குரல்கள் எதிரொலிப்பது என்பதோ அரிதிலும் அரிது என்றே கூறி விடலாம். சாதிய ஆதிக்க வெறி நிறைந்த வட மாநிலங்கள் மட்டுமல்ல; திராவிடர்களின் பெருமையை பறைசாற்றி வரும் தமிழ் மண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை ஆதி திராவிடர்கள் என்று பட்டம் சூட்டப்பட்ட தலித்துகள் ஒவ்வொரு கணமும் எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள். 44 தலித் மக்களை வெண்மணி கிராமத்தில் உயிரோடு எரிக்கும் அளவிற்குத் தஞ்சை நிலப்பிரபுக்கள் ஒன்றும் கல்நெஞ்சக்காரர்கள் அல்ல என்று சான்றிதழ் வழங்கிய, வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடிப் பெண்களை மாட்சிமை பொருந்திய அரசு ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்க மாட்டார்கள் என்று நற்சான்றிதழ் வழங்கிய அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து இந்த வறியவர்களுக்கு ஆதரவான குரல் ஒன்றும் எழுந்தது.

நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள்தான் அந்தக் குரலுக்கு உரியவர். கல்லூரிப் பருவத்தில் தலித்-பழங்குடி மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராடியதைப் போலவே, வழக்குரை ஞராக, மூத்த வழக்குரைஞராக செயல்பட்ட நேரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை நீதிமன்ற வளாகத்தில் ஓங்கி ஒலித்தவர் அவர். 2006ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட போது, அவரது இந்த சமூக நீதிப் பணி தொடருமா? என்ற தயக்கம் உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டதும் உண்மைதான். எனினும் எந்தப் பதவியில் இருந்தாலும் மக்களுக்குச் சேவை செய்யமுடியும் என்று பதவி ஏற்ற நாளிலேயே அறிவித்த அவர் அதை வெற்றிகரமாக நிரூபித்தும் காட்டினார்.

அவர் நீதிநாயகமாக இருந்த ஏழு ஆண்டுகளில் 96,000 வழக்குகளில் இறுதித் தீர்ப்பை வழங்கியது மட்டுமே ஒரு சாதனை அல்ல. அவர் முன்னே வந்த வழக்குகளில் பலவும் ஆதிக்க சக்திகளின், அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை கண்ணோட்டத்தை, தலித் எதிர்ப்பு நோக் கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த நிலையில், சமூக நீதியின் வெளிச்சத்தின் துணை கொண்டு, அண்ணல் அம்பேத்கரின் வீரிய எழுத்துக்களின் வெளிச்சத்திலிருந்து அவர் வழங் கிய தீர்ப்புகள் காலத்தை வென்றவையாக நீடிக்கும். நீதிநாயகம் கே. சந்துரு வழங்கிய குறிப்பிட்ட சில தீர்ப்புகளை உள்ளடக்கிய வகையில் “அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” என்ற நூலை மணற்கேணி பதிப்பகம் வெளியிட் டுள்ளது. அவர் வழக்குரைஞராக இருந்தபோது நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி ஒரு வார இதழில் தொடராக எழுதி பின்னர் நூலாக வெளிவந்த “ஆர்டர்! ஆர்டர்” என்ற நூல் நீதி கோரி வருவோர் நீதிமன்றங்களில் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்து மிக எளிமையாக விளக்கி யது எனில் தலித்-பழங்குடிப் பிரிவினருக்கு ஆதரவாக அவர் வழங்கிய தீர்ப்புகளின் பின்னணியையும் தீர்ப்பு வழங்க அவர் எடுத்துக் கொண்ட வரலாற்று, அரசியல், இலக்கிய ஆதாரங்களையும் விரிவாக விளக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வரும் பிரிவினருக்கு சமூகநீதி கிடைக்கும் வகையில் அவர் வழங்கிய தீர்ப்புகளில் அம்பேத்கரின் அறிவார்ந்த கருத்துக்களை மேற்கோள் காட்டியும், அமெரிக்காவின் நிறவெறியைப் போன்றே சாதி-ஆதிக்க வெறி இங்கே தலைவிரித்து ஆடுவதைச் சுட்டிக் காட்டியும் உள்ளார்.

கல்லறை உரிமைக்கான தலித்துகளின் கோரிக்கையின் மீது உத்தரவு பிறப்பிக்கையில்(கல்லறைதான்) சமரசம் உலாவும் இடமே – நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமேஎன்ற சினிமாப் பாடலை மேற்கோளாகக் காட்டியும் நீதிநாயகம் சந்துரு வழங்கிய தீர்ப்பைப் போன்று பல தீர்ப்புகளின் பின்னணியை விளக்குவதாக இந்த நூல் அமைந்துள்ளது.இத்தகைய தீர்ப்புகள் ஒரு நூலாகத் தொகுக்கப்பட மற்றொரு காரணமும் உண்டு என்று அவர் கூறியுள்ளது அனைவரும் கவனிக்கத்தக்க, கவலை கொள்ளத் தக்க ஒன்றாகும். “தமிழகம் முழுவ தும் பரவலான பாராட்டுக்களை எனது தீர்ப்புகள் பெற்றாலும் கூட, துரதிர்ஷ்டவசமாக, (பின்னா ளில் வழக்குரைஞர்கள் வாதம் புரியவோ, தீர்ப்புகளில் மேற்கோளாக, முன் உதாரணமாகக் காட்டு வதற்கு உதவும் வகையில்) தீர்ப்புகளை தொகுத்து வெளிவரும் சட்ட இதழ்களில் அந்தத் தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை. அதற்கு அந்த இதழ்களின் நவீன தீண்டாமையும் ஒருவேளை காரணமாக இருக்கலாம்” என்ற வரிகள் 66 ஆண்டுகால விடுதலைக்குப் பிறகும் அண்ணல் அம்பேத்கரின் சமூக நீதிக்கான போராட்டத்தின் தேவை இன்றும் நீடிக்கிறது என்பதையே உணர்த்துகின்றன.

இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். 1970களின் இறுதியில் தாழ்த்தப்பட்ட- பழங்குடி இனத்தவருக்கு ரயில்வே துறையில் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி. ஆர். கிருஷ்ணய்யர், ஓ. சின்னப்ப ரெட்டி ஆகிய இருவரும் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழில் கொண்டுவர வேண்டும் என்று அப்போது வழக்குரைஞராக இருந்த சந்துரு ஆர்வமாக இருந்தார். அப்போது சிறையில் இருந்த தியாகு இந்தத் தீர்ப்பை தமிழில் மொழி பெயர்த்து வழங்கினார்.

அதனை சரிபார்த்து கொடுத்ததோடு, சென்னை புக் ஹவுஸ் வெளியீடாக வந்த தாழ்த்தப்பட்ட- பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பற்றி என்ற அந்த நூலுக்கு சந்துரு முன்னுரை வழங்கியதோடு அந்த நூல் வழக்கறிஞர்கள் மத்தியில் பரவலாகச் செல்லவும் உதவி புரிந்தார் என்பதையும் இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். இச்சம்பவத்தை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. நீதித்துறையின் படிக்கட்டுகளில் ஏறி சமூக நீதியை நிலைநாட்டுவது என்பது அளப்பரியதொரு போராட்டமாகும். அப் போராட்டத்தில் கிடைக்கும் தீர்ப்பு என்பது மற்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போ ராட அடித்தட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதோடு, மற்ற நீதிமன்றங்களும், நீதிநாயகங்களும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை கேட்க உதவி புரியும் என்ற நோக்கத்தில்தான் இத்தகைய வரலாற்றைத் திருத்தி எழுதிய தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் வரவேண்டிய அவசியம் உள்ளது.

அத்தகைய முயற்சிகள் தொடர, இவ்வகையான நூல்கள் ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கே அவர் மறைந்து 34 ஆண்டு களுக்குப் பிறகே அவரது நூற்றாண்டு விழாவின்போது திடீரென்று நினைவிற்கு வந்ததுபோல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்பதை நினைவு கூர்கையில், ஆதிக்க சக்திகளின் இரும்புக் கண்ணிகளை உடைத்தெறிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த நூல் விளங்குகிறது என்றே கூறலாம். சமூகநீதிக்காகப் போராடுவோருக்கு ஊக்கம் தரும் வகையிலான இந்த நூலை போராளிகள் அனைவரும் வாங்கிப் படித்து, பரவலாக அறியச் செய்வது அவசரமானதொரு சமூகக் கடமை யாகும்.

நன்றி: தீக்கதிர்,08-06-2014


நூல் அறிமுகம் - சாதிச் சழக்குகள் வெளியும் வேலிகளும்


சாதிச் சழக்குகள் வெளியும் வேலிகளும்
ஆசிரியர்: தி.சு. நடராசன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட். 41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098
பக்: 32 விலை ரூ. 20/-

மனிதர்கள் வாழிடங்கள் மற்றும் வைதிக மரபி னால் எப்படி மன்னராட்சி காலத்தில் பிரித்து வைக்கப்பட்டனர். அரசு அதிகாரமும், பிராமணியமும், வைதிகமும், மனுவும், கீதையும் இணைந்து மண், உழைப்பு , உற்பத்தி, வியர்வை இவற்றை எப்படி அடிமைப்படுத்தின என் பதை குறைந்த பக்கங்களில் இந்நூல் சொல்ல முயற்சிக்கிறது.சாதிக் கலவர கூத்துகளை அதற்கு பின்னால் இருந்து இயக்கும் பெரிய மனிதர்களை இந்நூல் பட்டியலிடுகிறது. சாதியை வேரோடும், வேரடிமண்ணோடும் வீழ்த்த இந்நூலும் ஒரு ஆயுதமாகும். சாதி அமைப்பு உயர் சாதியால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. ஆனால் சாதிச் சண்டைகள், பெரும்பாலும் அடித்தளத்தில் தான் நடக்கிறது. ஏன் இந்தச் சூழல்? இந்நூல் அது குறித்து பேசுகிறது. சாதிக்கு எதிராக பல கோணங்களில் நாம் சிந்தித்தாக வேண்டும்; செயல்பட்டாக வேண்டும். இந்நூல் ஒரு பாதையில் பயணிக்கிறது.

நன்றி: தீக்கதிர், 08-06-2014


Friday, March 21, 2014

மோடியின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்.இவர்களுடைய சித்தாந்தம் என்ன?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் முன்னிறுத் தப்பட்டுள்ள பிரதம மந்திரி வேட்பாளர் நரேந் திர மோடி முகமூடி அணிந்துகொண்டு நாடு முழுவதும் வலம் வருகிறார். ஒரே நாளில் இரண்டு மூன்று மாநிலங்களுக்குக்கூட தனி விமானத்தில் பறந்து செல்கிறார். இவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் பயிற்சி பெற்று இளம் வயதி லிருந்து ஆர்எஸ்எஸ் இட்ட பணிகளை மிக விசுவாசமாக செய்து வருபவர். இப்பொழுது கூட ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை குஜராத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றி வந்த காரணத்தால் அதையே இந்தியா முழுமையாக செயல்படுத்திட ஆர்.எஸ்.எஸ். பணித்துள்ளது. இவர்களுடைய சித்தாந்தம் என்ன? கொள்கை கோட்பாடுகள் என்ன, குஜராத்தில் எப்படிசெயல்படுத்தி வருகிறது என்ற உண் மைகளை முழுமையாக திரைபோட்டு மறைத்து சுய உருவம் தெரியாமல் முக மூடி அணிந்து பிரச்சாரம் செய்து மக்களைஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் சில அம்சங்களை முதலில் பார்ப் போம். இவை எப்படி குஜராத்தில் செயல் படுத்தப்பட்டுள்ளன என்பதை பின்னால் பார்க்கலாம்.

நேருவின் எச்சரிக்கை

ஜவஹர்லால் அவர் காலத்திலேயே இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை சுட்டிக்காட்டினார். தனது சுய சரிதையில் ‘பிரிட்டிஷ் ஆட்சி முழுமையாக அகற்றப்பட்ட பிறகு மேல்தட்டு மத்திய வர்க்கத்தினர் மற் றும் பணக்கார வர்க்கத்தினர் ஆதரவுடன் பாசிசம் வேகமாக வளர்ந்தாலும் வளரலாம்’ என்றார் நேரு. “சிறுபான்மையினரின் வகுப்பு வாதத்தைவிட மிக மிக அபாயகரமானது பெரும்பான்மையினரின் வகுப்புவாதம்” (1948, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நேரு உரை). “சிறுபான்மையினர் வகுப்புவாதத்தை நாம் சுலபமாக கண்டுகொள்ள இயலும், புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் பெரும் பான்மையினரின் வகுப்புவாதம் தேசியவாதம் எனக்கொள்ள வைக்க முடியும்” (1961ல் நேரு சுட்டிக்காட்டியது). “நான் இந்து தேசியவாதி” என்கிறார் மோடி. “இந்தியாவிற்கு வாக்களியுங்கள்” என்கிறது மோடியின் விளம்பரம். இந்து தேசிய வாதம், இந்திய தேசியவாதமல்ல இதுதான் இன்று இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. முழு வெற்றி பெற்றால் இந்தியா, பாகிஸ்தான் போன்று ஆக்கப்பட்டுவிடும். அங்கு இஸ் லாமிய தேசியவாதம் என்றால் இங்கு இந்து தேசியவாதம்.

பாசிசத்தின் இந்திய வடிவம்

ஆர்எஸ்எஸ் 1925ல் துவக்கப்பட்டது. இதை துவக்கிய முதல் சர்சங்சாலக் ஹெட் கேவாரின் குருநாதர் டாக்டர் பி.எஸ்.மூஞ்சே 1931ல் இத்தாலிக்கு சென்று பாசிச ஆட்சித் தலைவர் முசோலினியை சந்தித்து பாசிச அமைப்பு முறைகளைப் பற்றி 13 பக்க குறிப்புவெளியிட்டார். (நேரு மியூசியம் நூலகத்தி லுள்ளது). பாசிஸ்ட் கட்சி பாணியில் சிறு வர்கள் பயிற்சி (6-18 வயது) இளைஞர்கள் உடற்பயிற்சி, ராணுவப் பயிற்சி (இதற்காக நாக்பூரிலும் நாசிக்கிலும் இரண்டு ராணுவப் பயிற்சி பள்ளிகள் துவங்கி இன்றும் செயல்பட்டுக்கொண்டு வருகின்றன) அணி வகுப்புகள், டிரில்கள் ஆகியவை விலக்கப் பட்டுள்ளன. “எதிரி மக்கள் கூட்டத்தைத் தாக்கிஅதிகபட்சம் கொலை செய்து காயமடைய வைத்து வெற்றிகாணும் திறன் கொள்ள இந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது” மூஞ்சே தனது திட்டக் குறிப்பில் முன்வைக்கிறார்.

“இந்து, இந்தியாவின் ஒற்றுமைக்கும் இந்துக்களின் ராணுவ மறுமலர்ச்சிக்கும் பாசிசம் தெளிவான வழிகாட்டுகின்றது ஹெட் கேவார் தலைமையிலுள்ள ஆர்எஸ்எஸ் இதுபோன்ற நிறுவனமாகும். ஹெட்கேவாரின் அமைப்பை விரிவுபடுத்தவும் இதர மாநிலங் களுக்கு பரப்பவும் எனது எஞ்சியுள்ள வாழ் நாளை கழிப்பேன்” என்றும் எழுதினார் மூஞ்சே.இவர் ஜெர்மனிக்கும் சென்று ஹிட்லரின் நாஜிக் கட்சி அமைப்பை பற்றியும் தெரிந்து கொண்டார். (இறுதியில் 1943ல் இந்த முசோலினி மக்களால் தெருக்களில் அடித்துக்கொல்லப்பட்டதும் ஹிட்லர் விஷம் குடித்தும் செத்ததும் வேறு கதை).

1934 ஜனவரி 31ம் தேதி “பாசிசமும் முசோலினியும்” என்ற தலைப்பில் பம்பாயில் நடந்தகூட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் முதல் சர்சங் சாலக் (1925-1940) ஹெட்கேவார் தலைமை வகித்தார். இதில் உரையாற்றிய மூஞ்சே, “இந்து தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்து மதத்தை இந்தியா முழுவதும் கட்டுவதற்கு நான் திட்டத்தை தயாரித்துள்ளேன். இத் தாலியின் முசோலினி ஜெர்மனியின் ஹிட்லர் போன்று ஒரு சர்வாதிகாரி இல்லாமல் இந்த லட்சியத்தை செயல்படுத்த இய லாது” என்றார். இத்தகைய பயிற்சி பெற்ற ஒருவரை தற்காலத்திற்கேற்றவாறு உருவாக்கு வதற்கான முதல் முயற்சியில் இன்று ஆர்எஸ்எஸ் ஈடு பட்டிருக்கின்றது.

இந்து தேசியமா, இந்திய தேசியமா?

இந்திய தேசியத்தை ஒரு “விசித்திரமான மிருகம்”, ஒரு “பூதாகரமான பிரமை” என்று ஆர்எஸ்எஸ்சின் இரண்டாம் சர்சங்காலக் கோல் வார்க்கர் விளக்கினார். இது ஒரு ஹம்பக் தேசியம் என்றார்.“இப்படிப்பட்டஒரு மோசடி தேசியத்திற்கு உயிருண்டாக்க முயற்சிக்கின்றனர். ஒரு காளையின் கால்களையும், ஒரு கழுதையின் தலையையும், ஒரு யானையின் துதிக்கையும் இணைத்து ஒரு விசித்திரமான மிருகத்தை உருவாக்கும் முயற்சிக்கு ஒப்பாகும். இதன் விளைவு ஒரு பூதாகரமான பிணம்தான். இது ஒரு உயிருள்ள உயிரினமாக இருக்க முடியாது. இதில் சில அசைவுகள் தென்பட்டால் அதை அழுகிவரும் சடலத்தில் உற்பத்தியாகும் கிருமிகளின் செயல்பாடுதான்” .

(குரு கோல்வார்க்கர் - ஞானகங்கை பக்.239)மேலும் நமக்கு முன்னால் உள்ள கேள்வி யாதெனில் “இஸ்லாத்திற்கோ, கிறிஸ்து வத்திற்கோ மதம் மாற்றப்பட்டவர்களின் போக்கு என்ன என்பதை அவர்கள் இந்தநாட்டில்தான் பிறந்திருக்கிறார்கள் சந்தேக மில்லை. ஆனால் இதனிடம் பக்தி விசுவாசத்துடன் வாழ்கின்றார்களா? இந்தநாட்டிடம் நன்றி விசுவாசம் பாராட்டு கின்றார்களா?... மதம் மாறுவதுடன் கூட இந்து ராஷ்ட்ரியத்திடம் உள்ள அன்பு நெகிழ்ச்சியும் பக்தி பாவனையும் அழிந்துவிட்டது” (ஞான கங்கை பக்கம் 193)“ஆகவே நாம் கூறுவதெல்லாம் இதுதான்.

இவர்கள் தமது மன அமைப்பு நிலையை கைவிட்டுவிட்டு இந்து தேசிய வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிடவேண்டும். தங்களு டைய மூதாதையருக்கு சொந்தமான பக்திமுறைகளையும் பின்பற்றட்டும்.... மீண்டும் திரும்பி வந்து உடையிலும், பழக்க வழக்கங்களிலும் திருமண சடங்குகளையும் இறுதிச்சடங்குகளையும் நடத்துவதிலும் அதுபோன்ற மற்றெல்லா நிகழ்ச்சிகளிலும் தங்கள் முன்னோர்களான ஹிந்துக்களின் வாழ்க்கை முறையுடன் இரண்டறக் கலக்கவேண்டும். வழிதவறிய சகோதரர்களைப் போல் மீண்டும் நமது தர்மத்திடம் இரண்டற கலந்துவிட வேண்டும்” (ஞா.க.பக்.197, 200).

அரசியல் சாசனம் மாற்றப்படவேண்டுமாம்!

“நமது நாட்டின் கூட்டாட்சித்தன்மை பேச்செல்லாம் நிரந்தரமாக குழிதோண்டிப் புதைக்க வேண்டும். பாரதம் என்ற ஒரே ராஜ்யம் தானிருக்க வேண்டும். பூரண சுயாட் சியோ அரைகுறை சுயாட்சியோ உள்ள எல்லாமாநிலங்களையும் துடைத்தெறிய வேண்டும்”“ஒரே தேசம், ஒரே ராஜ்யம், ஒரே சட்டமன்றம், ஒரே நிர்வாகம் என்று பிரகடனப்படுத்த வேண்டும்... மாநிலவாதம், மொழிவாதம், குறுகிய கட்சிவாதம் அல்லது வேறு எவ்விதமான தற்பெருமை உணர்ச்சிகளுக்கு இடம்தரக்கூடாது”“அரசியல் சாசனத்தை மீண்டும் பரி சீலனை செய்து ஒற்றை அரசு முறையை (Unitary form of govt)நிறுவி திருத்தி எழுத வேண்டும். அதன் மூலம் நாம் அனைவரும் தனித்தனி இனங்களைச் சார்ந்தவர்கள்.. என்பதை பொய்யாக்கவேண்டும்.” (Ph.f. g¡. 686, 687)

“நமது தேசிய மொழிப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பிடிக்கும் வரை இந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தரவேண்டியிருக்கும்” (ஞா.க. பக். 171)வாஜ்பேயின் ஆட்சியிலிருந்த காலத்தில் அரசியல் சட்டத்தை மாற்றியமைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (ஒய்.வெங்கடாச் சலையா தலைமையில்) ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. நால்வர் கொண்ட கமிட்டி (சுவாமிவாம தேவ், சுவாமி முக்தானந்த் சரஸ்வதி, சுவாமி நிரஞ்சன் தேவ்தீர்த், சின்மையானந்தா) அமைக்கப்பட்டு 63 பக்க அறிக் கையும் சமர்ப்பிக்கப்பட்டது. “இன்றைய அர சியல் சட்டம் தூக்கி எறியப்பட வேண்டும்” “இந்துத்துவா அரசியல் சட்டம் இடம்பெற வேண்டும்” என்றனர். இவர்கள் முயற்சி அன்று வெற்றிபெறவில்லை.பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா சென்றி ருந்தபொழுது விஷ்வ இந்து பரிஷத்தினர் எப்பொழுது அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்படும்? எப்பொழுது அரசியல் சட்டம் மாற்றம் செய்யப்படும்? என்று கேட்கப் பட்டபொழுது “நாடாளுமன்றத்தில் நமக்குத் தனி பெரும்பான்மை கிடைத்தபின் இவைகள் நிறைவேற்றப்படும்” என்றார்.இன்று தீவிர ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் நரேந்திர மோடி இவைகளையெல்லாம் ஒளித்து வைத்துக்கொண்டு மோடி வித்தை காட்டுகிறார்.உலகிலேயே சிறந்த மதம் இந்து மதம், ஏனெனில் அது மதமே அல்ல என்றார் ஜார்ஜ் பெர்னாட்ஷா. ஏனெனில் இது அனைவரையும் அணைத்துக்கொள்ளும், நாத்தீகர்கள் உட்பட விவேகானந்தர் கூட நாத்தீகம் பேசினார்.

அவ்வளவு தாராளமானது, சகிப்புத்தன்மை கொண்டது.கேள்வி என்னவென்றால் மூஞ்சே, சாவர்க்கர், ஆர்எஸ்எஸ் சர்சங்சாலக்குகள் ஹெட்கேவார் (1925-40) குருகோல்வார்க்கர் தேவ்ராஸ், இன்றைய சர்சங்காலக் மோகன்பகத் ஆகியோரின் கொள்கைகள் மாற்றப்பட் டுள்ளனவா? (இவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா சித்பவன் பிராமணர்கள்!) இந்தமன அமைப்பு நிலை ( (mind set) ) கைவிடப் பட்டுள்ளதா? இதற்கு ஆர்எஸ்எஸ்ஸின் பதில் என்ன? மோடியின் தன்னிலை விளக்கம் என்ன?

நன்றி: தீக்கதிர்,21-03-2014



Thursday, January 30, 2014

பெரும்பான்மையான இந்துக்கள் என்பதால் மதசார்பின்மையா?

பெரும்பான்மையான இந்துக்கள் மதசார்பின்மையாக இருப்பதால் தான் இந்தியா அனைத்து சமுகத்தையும் அரவணைத்து செல்லும் நிலைமை இருக்கிறதாம்....இது,இந்த கருத்து மேம்போக்காக பார்த்தால் ஏதோ பெரிதா மத சார்பின்மை பற்றி பேசியது போன்று தோன்றும்....ஆனால் இது உண்மை மறைத்து பேசும் பேச்சு என்பது பார்ப்பன மதத்தை ஆழமாக அறிந்தவர்கள் உணர்வார்கள்.

இந்தியாவில் இந்து என்பது பார்ப்பனர்களை தவிர யாரும் விரும்பி ஏற்றுகொண்டது இல்லை...பெரும்பான்மையான மக்கள் (பார்ப்பனர்களை தவிர) 'இந்து' என்று பலி சுமத்தப்பட்டு இருக்கிறார்கள்...எனவே இப்படி பலி சுமத்தப்பட்ட மக்கள் அதை பற்றி கவலை படுவதில்லை......அந்த பலியை சுமந்து கொண்டு அதனால் ஏற்படும் சூத்திர , பஞ்சம பட்ட இழிவு பற்றியும் கவலை கொள்வது கிடையாது...அப்படி 'இந்து' என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை...எனவே, அந்த பார்ப்பன மதத்தின் மீது இந்த பெரும்பான்மை மக்களுக்கு பற்றும் கிடையாது வெறுப்பும் கிடையாது...கீதையா, பாகவதமா, மனுதர்மமா...எதாவது இருந்துவிட்டு போகட்டும்...அதில் என்ன இருந்தா நமக்கென்ன..இதுதான் பார்ப்பனரல்லாத, இந்து என்று பலி சுமத்தபட்ட பெரும்பான்மை மக்களின் நிலைமை...ஏதோ இந்து ன்னு சொல்கிறார்கள்....சொல்லிட்டு போகட்டும் என்றுதான் அவர்கள் இருக்கிறாக்கள். இதுதான் உண்மை. இந்த பார்ப்பன மதத்தால் அலைகழிக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மலம் அல்லும், செருப்பு தைக்கும், உழவு தொழில் செய்யும் ஒடுக்கப்ட்டவனுக்கு என்ன வெங்காயம் தெரியும்...மக்களோடு மக்களாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அவன் மனிதர்களை அரவணைத்து செல்லும் மனிதநேய மிக்க மாண்பாளன் தான்...அந்த மனிதநேயம், ஏதோ இந்த கேடுகட்ட பார்ப்பன மதத்தால் வந்தது இல்லை....எனவே திரிக்க வேண்டாம்....

இந்த பார்ப்பன இந்து மதத்தால் நல்லா பலன் அனுபவிக்கும், குண்டி வளர்க்கும் பார்ப்பனர்கள் தான் இந்து கோசம் போடுவதும்...அவர்களுக்கு எதாவது ஆபத்து வரும்பொழுது, நாங்க பெரும்பான்மை என்று மற்ற மக்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு பொது புத்தி, பொது பிரச்சனை, போன்று கூட்டம் காண்பிக்கவும் முயற்சிப்பார்கள்...இதை பார்ப்பன இந்து மதம் பற்றி ஆராய்ந்து அறிந்தவர்கள் உணர்வார்கள்...ஒரிஜினல் இந்துவாகிய எந்த பார்ப்பானும் இது வரை யாரையும் அரவணைத்து சென்றதா சரித்திரம் இல்லை. இதுதான் பார்ப்பன இந்து மத உண்மை முகம்...நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமையும் ஆதிக்க ஆரியத்திடம் இருந்து போராடி பெற்ற உரிமைகள்...எனவே, பெரும்பான்மையாக இந்துக்கள் இருப்பதால் தான் மதசார்பின்மை கொடி கட்டி பறக்கிறது என்று பம்மாத்து செய்து உழைக்கும் மக்களிடம் உண்மையை மறைக்க வேண்டாம்.


Monday, January 27, 2014

முஸ்லீம் லீக் மதவாதமா?

முஸ்லீம் லீக் என்று மதத்தின் பெயராலேயே கட்சி வைத்திருக்கிறார்களே...அவர்களுடன் தி.மு.க வும் இடதுசாரிகளும் மாறி மாறி கூட்டணி வைக்கிறார்களே..அது மதவாதம் இல்லையா? என்று தன்னை பெரிய அரசியல் அறிவாளி என்று சொல்லும் காவியருவி மணியன் பேசியுள்ளார். இதை கேட்டு வாயால் சிரிக்க முடியவில்லை

மதவாதம் என்ன என்பது தெரிந்தே...காவிகளுக்கு தேர்தல் புரோக்கர் என்கிற போதையில் பேசியுள்ளார் காவியருவி மணியன்....தங்களை பாதுகாத்து கொள்ளவும், தங்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளை பெறவும் ஒரு குழுவாக ஒன்று சேர்வதும்...அதே நேரத்தில் மற்றவர்களை ஒடுக்கவும், அவர்களை அழிக்கவும், மற்றவரது அடிப்படை உரிமைகளை தட்டி பறிக்கவும் ஒரு கட்சி இருக்குமென்றால் அது புறக்கணிக்க பட வேண்டிய ஒன்று...இதில் இரண்டாவது வகை தான் ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல். இந்த அடிப்படை கூட தெரியாதவரா காவியருவி மணியன்?

முஸ்லீம் லீக் என்று பெயர் வைத்துகொண்டு எந்த ராமர் கோயிலை இடித்தார்கள்? எந்த பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை தடுத்தார்கள்? சொல்ல முடியுமா மணியன். offense மற்றும் defense க்கு இயக்கம் நடத்துவது மணியனுக்கு புரியாதா?

ஆணாதிக்கத்தின் கொடுமையால் அடிமைபடுத்தபட்ட பெண்கள் ஒரு அமைப்பாக செயல் படுகிறார்கள் என்று...ஆண்களும் ஒரு அமைப்பு ஏற்படுத்தி வைத்து கொண்டு அதற்கு வியாக்கியானம் சொல்ல முடியுமா? ஆதிக்கம் செலுத்தும் பார்பனர்கள் சங்கம் வைத்து கொள்வதற்கும்...ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒரு அணியில் இணைத்து போராடுவதற்கும் வேறுபாடு இல்லையா? இதெல்லாம் தெரியாதா மணியா??? உங்களுக்கு காவி போதை தலைக்கேறிவிட்டது. கொஞ்ச நாளைக்கு பேசுவதை நிறுத்திகொள்ளுங்கள்.


Thursday, December 12, 2013

பாரதியை பல்லக்கில் தூக்கும் கூட்டம் பாவேந்தர் பாரதிதாசனை தூக்கி செல்லட்டும் பார்க்கலாம்!!!



மகாகவி பாரதியாரின் 132-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் இருந்து அவரது இல்லம் வரை ஜதி பல்லக்கில் தூக்கி வந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், வழக்குரைஞர் சுமதி. உடன் (இடமிருந்து) காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், பொற்றாமரை பொதுச்செயலாளர் கி.சங்கரன், பாஜக தேசிய செயலர் தமிழிசை செüந்தரராஜன், மாநில செயலர் வானதி ஸ்ரீநிவாசன்./////////

இந்த செய்தியை இன்றைய (12-12-2013) தினமணியில் படித்துவிட்டு தான்  இந்த பதிவு எழுதினேன்...சும்மா பாரதியை எதிர்க்க வேண்டும் என்று எழுதவில்லை என்பதை தோழர்களுக்கு அறிவித்து கொள்கிறேன்

வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.

நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி’

இப்படி நால் வருணம் வேண்டும்..குலக்கல்வி வேண்டும் என்று பாடியவன் மகாகவி என்று அழைக்கப்படும் பாரதி.


முகத்தில் பிறப்பார் உண்டோ முட்டாளே
தோளில் பிறப்பார் உண்டோ தொழும்பனே
இடையில் பிறப்பார் உண்டோ எருமையே
காலில் பிறப்பார் உண்டோ கழுதையே
நான்முகன் என்பான் உளனோ நாயே
புளுகடா புகன்றவை எலாம் போக்கிலியே!

இப்படி நால் வருணத்தை உருவாக்கியவனை சாட்டையால் அடிப்பது போன்று கேள்வி கேட்டு  பாடியவர்  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். எங்கே பாரதியை பல்லக்கில் தூக்கும் கூட்டம் எங்கள் பாவேந்தர் பாரதிதாசனை தூக்கி செல்லட்டும் பார்க்கலாம்!!! அப்படி செய்தால் அவர்கள் தான் ஓரிஜினலா கவி நடை ரசிப்பவர்கள்.




Wednesday, June 12, 2013

எவ்வளவு கேடுகெட்ட பெண்ணடிமை தனம்??????

அர்த்த்தமுள்ள (????) இந்து மததத்தின் மனுநீதியின் ஒன்பதாவது அத்தியாயத்தின் 3 வது ஸ்லோகம் 

பால்யே பிதிர்வஸே விஷ்டேது
பாணிக்ரஹா யௌவ்வனே
புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
நபஜேத் ஸ்த்ரீ ஸ்வதந்த்தரம்

 அதாவது, பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன்  சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். என்று முதல் மூன்று வரிகளுக்கு அர்த்தம்.

நான்காவது வரி இன்னும் தெளிவாக சொல்லுகிறது, அதாவது, "பெண்ணே உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள் - ஆகவே ஆண் சொல்படி கேள்.” (ஆதாரம் நூல் : "சாதி மதம் வர்க்கம்", ஆசிரியர் கே வரதராசன்,வெளியீடு: பாரதி புத்தகாலயம் )

எவ்வளவு கேடுகெட்ட பெண்ணடிமை தனம்...எப்படி இருக்குது பார்த்தீர்களா? பெண்களே உங்களை பெற்றுடுத்த பெற்றோர்கள் இப்படி கூறினால் கூட பொறுத்துக்கொள்ள முடியாதுதானே....இதனை எதிர்த்து பெண்கள் போராட வேண்டாமா? கேள்வி கேட்க வேண்டாமா? சரி குறைந்தபட்சம் இப்படி மனுநீதி  கூறும் இந்து மத கடவுளுக்கு அர்ச்சனை கூடை தூக்காமல் இருந்தால் போதுமே? இப்படி மனு நீதியை கூறும் கடவுளை ஒழிக்க பெண்கள் தான் தீர்வு காணவேண்டும். 


Monday, May 27, 2013

எவ்வளவு மகா அயோக்கியத்தனம்!

சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார் என்று  ஒரு பத்திரிகை எழுதுது. இந்த பத்திரிகை தான் தமிழ், வெங்காயம் என்று கதை அளந்து ஊரை ஏமாற்றும் பத்திரிகை.

கலைஞர் அவர்களை கருணாநிதி என்று எழுதும் சூரியன் பத்திரிக்கைக்கு இதனை பார்த்தாவது உணர்வு வருமா?????

எவ்வளவு மகா அயோக்கியத்தனம் ; பல பெண்களிடம் பாலியல் வல்லுறவு; ரியல் எஸ்டேட் கேப்புமாரி தனம், சங்கரராமன் கொலை வழக்கில் 60 நாள் போலிஸ் காவல் என்று அம்பலப்பட்டு அசிங்கப்பட்ட ஜெயேந்திரனை...ஏதோ பெரிய யோகியன் போல் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று ஒரு பத்திரிக்கைகாரன் எழுதுகிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய மகா மகா அயோக்கியன். 

இந்த அக்கிரமத்தை படிக்கும் போது மனுதர்மம் பற்றி அறிவு ஆசான் தந்தை பெரியார் சொன்ன கருத்து தான் நம் கண்முன்னே வந்து நிற்கிறது.

மனுதர்மம் என்பது என்ன? பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் மேலானவன்; வணகதக்கவன். பார்ப்பானல்லாதவன் எவ்வளவு யோக்கியனாக இருந்தாலும் வெறுக்கத் தக்கவன் என்பதுதானே? இராமாயணம் தரும் படிப்பினையும் இதுதானே?


Wednesday, December 19, 2012

பெண்களுக்கு எதிரான வன்முறை..இனியாவது குறையுமா?


நமது சமுகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ அவை அத்துனையும் அனைத்து சமுகத்து பெண்களும் அனுபவிக்கிறார்கள் என்று தந்தை பெரியார் கூறி இருக்கிறார்....பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இந்த சமுகம் இன்னமும் செய்துகொண்டு தான் இருக்கிறது. அது மதத்தின் பேரால், சாதியின் பெயரால், குடும்ப கவுரவத்தின் பெயரால், பாலியல் வக்கிர சம்பவத்தினால் என்று அடுக்கி கொண்டே போகலாம். ரெண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த சம்பவம் மட்டும் காட்டு தீ போன்று எங்கும் பரவியுள்ளது.அது பற்றி ஒரு பார்வை.

டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் ஞாயிறு இரவு பலாத்காரம் செய்யப்பட்ட மருத்தவ மாணவி டெல்லி சரப்தர்ஜங்
பற்றிய செய்தி பாராளுமன்றம் வரை எதிரொலித்து உள்ளது. மிகப்பெரிய ஆச்சரியம் தான் என்றாலும் மறுபுறம் இதனை வரவேற்க வேண்டியது பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கும் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். இது நாள் வரை எவ்வளவோ பெண்கள் இது போன்ற சம்பவங்களில் சிக்கி தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்...உயிரை பறிகொடுத்துள்ளனர்....அப்பொழுதெல்லாம் இது இப்படி பூதாகரமாக எதிரொலிக்கவில்லை...இப்பொழுது அந்த மாணவிக்கு நடந்துள்ள இந்த கோர சம்பவம் இந்தியாவின் தலைநகரமாம் டெல்லி யில் என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது. அதுவும் ஊடகங்கள் அதிகமாக ஒப்பாரி வைக்கின்றன...இப்பொழுது வைத்து என்ன பயன்? பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் இப்படி ஒப்பாரிவைத்து இருந்தால் எதாவது பலன் கிடைத்து இது போன்ற சம்பவம் நடக்காமல் இருந்திருக்கும். ஆனால் நமது ஊடங்கள் தலைகீழ்...எது அதிகமாக மக்களால் பேசப்படுகிறதோ அதனை சார்ந்து செய்தி வெளியிட்டு தங்கள் கல்லாவை நிரப்பி கொள்ளவதே முதல் வேலையாக கொண்டுள்ளன.

இதனை தான் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மறைமுகமாக கூறியுள்ளார்..."மாணவிக்கு நடந்திருப்பது மிகப் பயங்கர கொடுமைதான் அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதே சம்பவம் இந்திய கிராமங்களில் நடந்திருந்தால் இதே அளவுக்கு கண்டன அலை எழுந்திருக்குமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கேட்பது மிகச்சரி என்றாலும் அனைவரின் இந்த கண்டனத்தை புறந்தள்ளி விடமுடியாது..ஏதோ இந்த மாணவிக்கு நடந்திருக்கும் இந்த சம்பவத்தின் மூலமாவாது ஒட்டுமொத்த பெண்களுக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்ப்பாட்டை செய்யவேண்டும் என்ற நோக்கில் நாம் இதனை அணுக வேண்டும்.....அதுவும் நமது இந்திய பாராளுமன்றமும் மற்றும் ஊடகங்களின் ஆதரவும் ஒன்றுசேரும்போது அதனை சாதகமாக பயன்படுத்தி இது போன்ற ஆநீதிகள் பெண்களுக்கு இனிமேலும் நடக்காமல் பாதுகாக்க ஆவணம் செய்யவேண்டும். செய்வார்களா? இல்லை பெண்களுக்கு எதிரான பல லட்சம் சம்பவங்களில் இதுவும் கலந்து காணமல் போய்விடுமா...பொறுந்திருந்து பார்ப்போம்.


Tuesday, December 18, 2012

சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே..

பார்ப்பனரல்லாத பெண்களை கோயிலில் விபசாரம் செய்ய வைத்த...தேவதாசி மசோதா ஒழிப்பின் ஒரு முக்கிய நிகழ்வுவை பல இடத்தில் கூறி இருந்தாலும்...மீண்டும் அது பற்றி ஒரு மீள் பதிவு.


நீதிக் கட்சி ஆட்சியில் (1930) தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது,

திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.


கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் - தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது என்று கூச்சல் போட்டார்.

தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி - மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார்.

`மோட்ச லோகம் செல்வதுபற்றி திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் நேற்று அவையிலே பேசினார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் - தேவர்களுக்கு அடியார்களாக இருந்து, எங்கள் பெண்களே தொடர்ந்து மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

இனிமேல் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்டு, தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே - அதில் எங்களுக்கு எந்தவித அட்டியும் இல்லை என்று சொன்னாரே பார்க்கலாம்

வாயாடி சத்தியமூர்த்தி வாயில் ஆயிரம் ஊசிகள் போட்டுத் தைத்தது போல அமுங்கினி போல உட்கார்ந்தார்.


நன்றி: விடுதலை, 09-12-2007



ஜாதிக் கலவரங்களின் சூத்ரதாரி யார்?


ஒருத்தர் என்னிடம் கேட்டார்...நீங்க பார்ப்பனர்களை மட்டுமே திட்டுரின்களே...இந்த ஊர்ல சாதி கலவரங்கள் ஏற்ப்படுவது யாரால் என்று கேட்டார்? நான் திரும்ப கேட்டேன்; அக்கிரகாரத்தில் அமைதியாக, தனியாக, அனைத்து வசதிகளையும் காலம் காலமாக அனுபவித்து கொண்டு உட்கார்திருக்கும் பார்ப்பான் எதுக்கு நம்ம கிட்ட வந்து சண்டை போட வேண்டும்? நம்ம ஆட்களை சாதி மூலம் பிரித்து வைத்து அடிச்சுக்க வைத்தது அவன்தானே....பிறகு அவன் எதுக்கு நேரடியாக சண்டை போடவேண்டும்....எருதுகளின் ஒற்றுமையை பிரித்து சிங்கம் வேட்டையாடும் தந்திரம் தான் பார்ப்பான் தந்திரம் என்று கூறினேன்.....சரி அந்த தோழர்க்கு மட்டுமல்ல..மற்ற சிலரும் இதே போல் நினைக்கிறார்கள்...இதோ அவர்களுக்காக மேலும் சில விளக்கங்கள்....ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கோள் காட்டிய "ஏணிப் படிக்கட்டு ஜாதி அமைப்பு முறையில் ஜாதிக் கலவரங்களின் சூத்ரதாரி யார்?" என்ற கீழ்க்கண்ட விளக்கத்தையும் தருகிறேன்.
அம்பேத்கர் மிக அழகாக, சொன்னார்; தந்தை பெரியார் கருத்தும், அம்பேத்கர் கருத்தும் மாறுபட்ட கருத்தல்ல; இரண்டு கருத்துகளும் ஒரே மாதிரி. Graded inequality.
அடுக்குமுறை - ஏணிப் படிக்கட்டில், மேலே ஒருவன் நிற்கிறான்; அடுத்தபடிக்கட்டில் இன்னொருவனை நிற்க வைத்துவிட்டான்; அதற்கடுத்த படிக்கட்டில் இன்னொருவன் நாலாவது படிக்கட்டில் கீழே ஒருவன் நிற்கிறான்; அய்ந்தாவது படிக் கட்டில் பஞ்சமர் என்று சொன்னான்.
மேல் படிக்கட்டில் நிற்கின்றவன் மிக சாமர்த் தியமாக கீழே உள்ளவர்களை எல்லோரையும் பிரித்து வைத்துவிட்டு, ஏணியை லேசாக ஆட்டி விட்டான். அப்படி ஆட்டினால் என்னாகும்? இரண்டாவது ஆளு, கீழே உள்ள மூணாவது ஆள்மீது வேகமாக விழுந்தான்;
மூணாவது ஆள் நான்காவது ஆள்மீது மிக வேகமாக விழுந்தான்; நான்காவது ஆள் கீழே உள்ள அய்ந்தாவது ஆள்மீது இன்னும் வேகமாக விழுந்தான். கீழே உள்ள அய்ந்தாவது ஆள் கீழே விழுந்து அடி பட்டவுடன், அய்ந்தாவது ஆளும், நான்காவது ஆளும் சண்டை போட்டுக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர்.
ஏணியில் முதல் படிக்கட்டில் இருக்கிறானே ஒன்றாவது ஆள் - ஏணியை லேசாக அசைத்தவன் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மொழியில் சொல்ல வேண்டுமானால் மேற்படியான் அவன் என்ன கேட்கிறான் என்றால், என்னங்க உங்களுக்குள் தகராறு என்று. கீழே விழுந்தவன் கேட்கிறான், எங்களுக்கும், முதல் படிக்கட்டில் இருக்கிறவனுக்கும் எப் பொழுதும் சண்டை வருவதில்லையே என்று!
எப்படி சண்டை வரும்? பக்கத்தில் எவன் நெருங்குகிறானோ அவனோடுதானே சண்டை வரும். இதுதான் நாட்டில் நடைபெறக்கூடிய ஜாதிக் கலவரங்கள், ஜாதி மோதல்கள், இந்தப் பிரிவுகள் இப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.இதனைப் புரிந்துகொள்வதற்கே பெரியாரு டைய கண்ணாடி தேவை; இதனைப் புரிந்து கொள்வதற்கே பெரியாருடைய சிந்தனை தேவை.
இதற்க்கு மேலும் புரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல்....பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு...பார்ப்பானுக்கு அடிமையாக இருந்துகொண்டு....சாதி வெறியர்கள் செய்யும் தவறை பயன்படுத்தி பார்ப்பானுக்கு சப்பைக்கட்டு கட்டினால்...உங்களை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.


Saturday, December 15, 2012

சும்மா ஆடுமா 'சோ' வின் குடுமி? ஜாதிக்கு உத்வேகம் கிடைத்தால் விட்டு விடுவார்களா சங்கராச்சாரியாரின் சீடர்கள்?


பா.ம.க. நிறுவனர் மருத்துவர்  திரு. ச. இராமதாசு அவர்கள் தலித் - தலித் அல்லாதார் என்ற அமைப்பினை உருவாக்கி வரும் இந்தக் கால கட்டத்தில் அவருக்கு ஒரு வக்கில் கிடைத்துள்ளார். அவர்தான் திருவாளர் துக்ளக் சோ ராமசாமி அய்யர்வாள்!
அதுதானே பார்த்தோம். ஜாதிக்கு எள் மூக்கு அளவுக்கு எங்கேனும் உத்வேகம் கிடைத்தால் விட்டு விடுவார்களா சங்கராச்சாரியாரின் சீடர்கள்?
இந்த வார துக்ளக் இதழில் (19.12.2012) நினைத்தேன் என்று எழுதுகிறாராம். திருவாளர் சோ.
எடுத்த எடுப்பிலேயே பொய்யான தகவல் ஒன்றை முதலாகப் போட்டு அதற்கு மேல் அடுக்கடுக்காக தனக்கே உரித்தான பித்தலாட்ட பின்னல் கணக்குகளைப் போட்டுக் கொண்டே போகிறார்!
சில ஜாதி அமைப்புகளைச் சேர்த்துக் கொண்டு தலித்களுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க வாருங்கள் _ தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு எதிராக ஒரு அணி அமைப்போம் என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறவில்லை. ஆனால் பல ஜாதிகளை இணைத்து, ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க அவர் முன்வந் துள்ளது இந்த எண்ணத்தில் தான் என்பது எல்லோருக்கும் புரிகிறது!  அந்த அடிப் படையில் பல கட்சிகளைச் சார்ந்த தலை வர்கள் அவருடைய முயற்சிகளைக் கண் டித்துள்ளனர். ஆனால் ராமதாஸ் செய்கிற முயற்சிக்கு ஒரு பின்னணி இருக்கிறது. இவ்வாறு திருவாளர் சோ எழுதி யுள்ளார்.
மருத்துவர் இராமதாசு அவர்கள் சொன்னதைக் கூட சொல்லாததாக ஆக்க வேண்டும் என்பதிலே இந்த சோவுக்கு அப்படி என்ன அக்கறை!
12.11.2012 அன்று மருத்துவர் இராமதாசு அவர்கள் அளித்த பேட்டியில் அவர் கூறியது என்ன? சென்றவர்களுக்கு நன்கு தெரியும்.
அப்பட்டமாக ஒளிவு மறைவின்றி சொன்னது தலித் அல்லாதார்கள் ஒன்று சேர்ந்து ஓர் அணி அமைக்கப்படும் என்று கூறியிருக்க, சோ அதனை ஏன் இருட்டடிக்க முயற்சிக்கிறார்?
இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் மருத்துவரை ஒரு துருப்பாகப் பயன்படுத்தி தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் உரச முடியாதே!
அதுவும் திராவிடர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி மருத்துவர் புறப்பட்டுள்ள இந்த நேரம் _ அவரைப் பயன்படுத்திக் கொண்டால் பார்ப்பனர் எதிர்ப்பு என்னும் தமிழ் நிலத்தின் புயல் காற்றைப் புறந் தள்ளிவிட முடியாதா என்ற நப்பாசை!
சும்மா ஆடுமா சோவின் குடுமி என்று ஒரு நூலை எழுதினார் தோழர் தினகரன் சின்னராசு.
அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.
நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து , டாக்டராக வேலை பார்த்த தில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கிய பின்பு வரை நான் ஜாதி வெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும். படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும். 3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான். மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்கள் வன்னி யர்கள். நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை. தீப்பந்தம் எடுத்துச் சென்று கொளுத்துவதாக பிரசாரம் செய்கிறார்கள். நமது கைகளை வெட்டுவதாக கூறுகிறார்கள். நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள். நமது பெண்களுக்குக் காதல் - வலை வீசி கடத்திச் செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக் கும்போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் உளுந் தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஒட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள். இரட்டை இலை, சூரியன், கைக்கு போட்டால் நமக்கு நாமே அழித்துக் கொள்வதாகும். வன்னியன் மாம்பழத்திற்கு ஒட்டுப் போடுங்கள்.
ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வர வேண்டும். வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு அக்னி சட்டி, மஞ்சள் கொடி  பறக்க வேண்டும்.
2016ஆம் ஆண்டு நடக்கும் சட்ட மன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி களிலும் அப்படியே வெற்றி பெறு வோம். எல்லோரும் விழிப்பாக இருங் கள் சிந்தியுங்கள் மற்ற கட்சிகளை மறந்து பாமகவை நினையுங்கள் என்று பேசியதுகூட சோ வாளுக்குத் தெரியாதா?
ஜாதிக் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க அவர் முனைந்துள்ளதாக சோ சொல்லுகிறாரே. அதுகூட அந்தரங்க சுத்தியல்ல என்பது இந்தப் பேச்சு வெளிப்படுத்திடவில்லையா? புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்ற கதை யல்லவா இது! நியாயமாக துக்ளக் எப்படி விமர்சித்திருக்க வேண்டும்? இதே துக்ளக் (15.10.2003 பக்கம் 21) பா.ம.க. பற்றி எப்படி விமர்சித்து இருந்தது?
இதோ: வன்னியர் கட்சியா, வித்தியாச மான கட்சியா - எனும் தலைப்பில் இதே துக்ளக் (15.10.2003 - பக்கம் 21) என்ன எழுதிற்று?
வன்னியர் சங்கமாக சுமார் ஒன்பது ஆண்டுகள் செயல்பட்டு வந்த அமைப்பு 1989ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி சீரணி அரங்க கூட்டத்தில்தான் பாட்டாளி மக்கள் கட்சியாக மலர்ந்தது. தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மதவழிச் சிறுபான்மையினர் ஆகியோ ருக்காக - பாடுபடுவதே கட்சியின் கொள்கை என்று அறிவிக்கப்பட்டது. அப் போது எழுப்பப்பட்ட சமூக நல்லிணக்கம் என்ற பா.ம.க.வின் கோஷம் பல தரப்பிலும் வரவேற்கப் பெற்றது. என்று எழுதப்பட்டு இருந்ததே துக்ளக்கில்
தாழ்த்தப்பட்டோரையும் பிற்படுத்தப் பட்டோரையும் சிறுபான்மையினரையும் இணைத்து அரசியல் நடத்தப் போவதாகச் சொன்னவர்கள், இப்பொழுது அதற்கு முரண்பாடாக தாழ்த்தப்பட்டோரைத் தவிர்த்து வெறும் ஜாதிக் கட்சிகளோடு கூட்டு அமைப்பது பற்றி துக்ளக் தனக்கே உரித்தான பாணியில் கேலி செய்யாதது ஏன்?
மாறாக அதனை நியாயப்படுத்தி எழுத வேண்டிய அவசியம் ஏன்? தாழ்த்தப்பட்ட மக்களை மருத்துவர் கைவிட்டு விட்டாரே என்ற ஆனந்தத்தில் மருத்துவரைத் தூக்கி வைத்துக் கொஞ்சுகிறது என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் கூட்டணி இந்துத்து வாவுக்கு எதிரானதாயிற்றே! பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களே!
எப்படியோ அந்த முயற்சியைக் கைவிட்டு வெறும் ஜாதி டப்பாவுக்குள் மருத்துவர் அடங்கி விட்டால் அக்கிரகார ஏட்டுக்கு ஆனந்தம் புடைத்துக் கொண்டு கிளம்பாதா?
வெகு தூரம் போக வேண்டாம். இந்த ஆண்டு துவக்கத்திலேயே கூட (22.1.2012) சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறு பான்மை சமுதாய மக்கள் பிரதிநிதிகளைக் கூட்டி இந்த அணியை பலப்படுத்துவோம் என்று கூறவில்லையா?
(தமிழ் ஓசை  23.1.2012 பக்கம் 4)
இந்த 11 மாத இடைவெளியில்தான் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் டி ஷர்ட் போட்டு கூலிங் கிளாஸ் போட்டு வன்னிய சமூகப் பெண்களை மயக்குகிறார்களா?
சகோதரர் திருமாவளவன் இருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம் என்று சொன்னதெல்லாம் ஏமாற்று வேலையா? ஏன் இதைப்பற்றி எல்லாம் துக்ளக் விமர்சிக்கவில்லை?
இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட ஷெட்யூல்டு சிறுபான்மை இன மக்கள் ஆதிக்க சக்தியான பாரதீய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு எதிராக மதசார்பற்ற தன்மை, சமூக நீதி சனநாயகம், சமத்துவம் இவைகளைப் பெறுவதற்கு ஓரணியில் திரளுவது அவர்களது தலையாய கடமையாகும்.
இதே எண்ணம் கொண்ட தலைவர்கள், கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் நின்று தீய சக்திகளை எதிர்க்க தயாராக இருக்க வேண்டும்! -
இதையும் சொன்னவர் சாட்சாத் மருத்துவர்தான். (தினப்புரட்சி 9.11.1990 பக்கம் 1)
தேர்தலின் போது 3 தொகுதி ஒதுக்குவ தாக வாங்கிய ரூ.2½ கோடியை டாக்டர் ராமதாஸ் திருப்பித் தர வேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி பேட்டி அளித்தாரே (தினத்தந்தி 11.10.2010).
கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னைத் தோற்கடித்தவர் ராமதாஸ்தான் என்னுடைய தோல்விக்கு முழு முதற் காரணமான இருந்தது மட்டுமின்றி திமுக கூட்டணியில் இடம் பெற்ற எங்களுக்கு மூன்று தொகுதி ஒதுக்குவதாக உறுதியளித்து என்னிடம் 2½ கோடி ரூபாய் வாங்கினார்.
3 சீட்டுக்காக எங்கள் கட்சிப் பணத்தை ராமதாசிடம் கொடுத்தோம். உறுதியளித்தபடி  சீட்டுத் தரவில்லை. என் தோல்விக்குக் காரணமான ராமதாஸ் தேசிய ஜனநாயக முன்னணி தலைவர்களான பிரதமர் வாஜ்பாய், முதல் அமைச்சர் கருணாநிதி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதுதான் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும்.
ராமதாஸ்மீது வன்னிய சமுதாய மக்கள் வைத்திருந்த நம்பிக்கை போய் விட்டது. அவர் செல்வாக்கை இழந்துவிட்டார் என்று அதே பேட்டியில் கூறியனாரே வாழப்பாடி ராமமூர்த்தி (தினத்தந்தி 11.10.2000) இதெல்லாம் சோவுக்குத் தெரியா?
22.2.1991 நாளிட்ட தினப்புரட்சி நாள் ஏட்டில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் எழுதிய கடிதம்.
எங்களை கூடத்தான் கேட்கிறார்கள் பார்ப்பானே நாட்டை விட்டு வெளியேறு என்று தீர்மானம் போடுகிறீர்களே அதனால் ஓட்டு உங்களுக்குப் பாதிக்காதா? என்கிறார்கள். நாங்கள் சொல்லவில்லையா?
பார்ப்பனர்களுக்குப் மற்ற உயர் சாதியினருக்கும் தமிழகத்தில் 8%(அ)10% ஒதுக்கீடு கேட்பதே பாட்டாளி மக்கள் கட்சிதான் என்றார்.
இது யாருடைய அறிக்கை?
இடஒதுக்கீட்டிற்காகப் போராட்டம் நடத்தப்பட்டது என்றால், அதனால் பலனடைந்திருப்பது குறிப்பிட்ட ஒரு ஜாதி மட்டுமல்ல, ஏறக்குறைய 107 ஜாதிகள் பலனடைந்திருக்கின்றன. ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த இந்த ஜாதிகள் இன்று பலனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் அதிகாரம் பொருளாதார முன்னேற்றம் பெற்றிருக்கின்றன. அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களின் போர் முரசாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு இந்த இரு இயக்கங்களும் வளர்ச்சியின் சிகரத்தை நோக்கி தொடர்ந்து வீறுநடை போட்டு வருகின்றன. உலகத் தமிழர்களின் அடையாளம் அழிந்து போகாமல் தடுக்கவும், உள்ளூர்த் தமிழர்களின் உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்கும், பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வளர்ச்சியையும், செல்வாக்கையும் கண்டு பொறுக்க முடியாத ஆதிக்கச் சக்திகள் கடந்த காலங்களில் ஜாதி எனும் முத்திரை குத்தி தோற்றுப் போயிருக்கின்றன. துருப்பிடித்துப் போன அந்த ஆயுதத்தை வீசி எங்களை அழிக்க முயன்று அவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள்.
- _ பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை இது (25.2.2008) இந்த அறிக்கைக்கு என்ன பதில்? மருத்துவர் கூறுவாரா -_ அவரின் வக்கில் சோதான் கூறுவாரா?

இதோ மருத்துவர் மேலும் பேசுகிறார்: பெரியார் காலத்திலிருந்து இன்றுவரை பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்ட செட்யூல்டு, சிறுபான்மை வெகு மக்களின் (90%) முன்னேற்றத்தை எதிர்ப்பதால் தான் நாங்களும் அந்த ஆதிக்க வெறி பிடித்த பார்ப்பனீயத்தை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எங்கள் தயவில் வாழ வேண்டிய பார்ப்பனர்கள் எங்களுக்கே குழி பறிக்க நினைத்தால், ஆபத்து அவர்களுக்குத்தானே தவிர எங்களுக்கல்ல.
இதனால் பார்ப்பனர் ஒட்டுப் போட மாட்டார்கள் என்றால் அதிலும் எங்களுக்கு நட்டம் இல்லை. 3% பார்ப்பனர் ஒட்டைவிட 97% மற்ற சாதியினர் முன்னேற்றமும் அவர்களின் வாக்குகளுமே எங்களுக்கு முக்கியம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு தம் கட்சியின் கொள்கைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
அதில் ஒன்று பார்ப்பனர்களை எக்காரணம் கொண்டும் உறுப்பினராகக் கட்சியில் சேர்ப்பதில்லை.
இன்னொன்று பிற்படுத்தப்பட்ட செட்யூல்டு இன மொழி வாரி, மதவாரிச் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளாரே.
அந்த மருத்துவர் இராமதாசை சோ கூட்டத்துக்குப் பிடிக்கவே பிடிக்காது.
தாழ்த்தப்பட்டவர்களை விலக்கி, சிறுபான்மை மக்களையும் கை விட்டு, வெறும் ஜாதிக் கட்சியாகப் பலகீனப்பட்டு பா.ம.க. நிற்கும்போது சபாஷ் போடுவது - பார்ப்பனர்களுக்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சியும் _- தந்திரமும் தவிர வேறு என்ன?
ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு தான் ஜாதி அமைப்புகள் பல தோன்ற ஆரம்பித்து விட்டன. ஒருஅமைப்புக்கு ஜாதி விரோதம் தான் அடிப்படை எனும்போது இன் னொரு அமைப்புக்கு ஜாதிப்பற்றுதான் அடிப்படை என்று அமைவதில் வியப் பில்லை அல்லவா! என்று மருத்துவரின் ஜாதிக்கட்சிக்கு வக்காலத்துப் போட்டுப் பேசுகிறார் சோ.
எவ்வளவுப் பெரிய திரிபு வேலை! ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டதாம்!
பார்ப்பனர்கள் என்பவர்கள் ஒரு ஜாதியா? இனமா? வருணமா? முதலில் அதில் தெளிவு இருக்க வேண்டும்.
தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத்துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து வகுப்புத்துவேஷிகள் வகுப்புத்துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று லாலாலஜபதிராய் கூறுவதைத்தான் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.
பார்ப்பனர்கள் தங்களைப் பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவர்கள் என்பார்கள் இந்த உலகத்தையே பிராமணர்களுக்காகப் பிர்மா படைத்தான் என்பார்கள்.
கடவுளுக்கு மேலே பிராமணன் என்று இவர்களின் சங்கராச்சாரியார்கள் கூறுவார்கள்.
பெரும்பான்மையான சமூக மக்களைப் பார்த்து சூத்திரர்கள் என்பார்கள். தங்களின் வேசி மக்கள் என்று எழுதி வைப்பார்கள்.
இதனைக் கேட்டுக் கொண்டு எருமை மாடு மாதிரி இருந்தால் துவேஷ மற்றவர்கள்; - எதிர்த்துக் கேட்டால் சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்று குரல் கொடுத்தால் ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டது திராவிடர் கழகம் -தலைவர் ஈ.வெ.ரா. என்று இந்த 2012லும் எழுதக் கூடிய துணிவு மருத்துவர் இராமதாசு போன்றவர்களால் வந்தது என்று கருதுவதற்கு இடம் உண்டு.
In Fact in one Occasion Rajaji proudly said he valued his Brahmin hood more than his Chief Ministership (Caravan Appril (1) 1978.
முதலமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக மதிக்கிறேன் என்று சொன்ன ராஜாஜி துவேஷியல்லவாம் ;- இப்படி சொல்லுகின்றவரை எதிர்த்தால் அது ஒரு ஜாதி மீதான விரோதமாம்.
இதே துக்ளக் சோ ராமசாமி, திராவிடர் கழகத் தலைவரிடம் பேட்டி கண்டபோது திராவிடர் கழகத் தலைவர் ஒரு கேள்வி கேட்டு மடக்கினாரே!
நீங்கள் உங்கள் சட்டையைக் கழற்றுங்கள்; நான் என் சட்டையைக் கழற்றுகிறேன் யார் முதுகில் ஜாதி சின்னம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்ற வினாவை எழுப்பியபோது விழி பிதுங்கி நின்றவர்தானே இந்த சோ ராமசாமி
எங்கள் வீட்டுப் பெரியவர்களை நான் அதிர்ச்சிக்கு ஆளாக்க விரும்பவில்லை என்று கூறித் தானே சமாளித்தார். இவர்கள் வீட்டுப் பெரியவர்கள் மகிழ வேண்டும் என்றால் நாம் எல்லோரும் வேசி மக்கள் ஆக வேண்டுமாம்.
இந்த லட்சணத்தில் பெரியார் ஒரு ஜாதிமீது வெறுப்புக் கொண்டார். என் றெல்லாம் எழுதுவது அசல் போக்கிரித் தனம் அல்லாமல் வேறு என்னவாம்?
ஒரு சமூக அமைப்பில், அந்தச் சூத்திர, பஞ்ச மக்களுக்காக கல்வி வேண்டும், வேலை வாய்ப்பு வேண்டும் மற்றவர் களுக்கு உள்ளது போன்ற அனைத்து உரிமைகளும் சட்டப்படி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போராடினால் அது எப்படி துவேஷமாகும்?
அது மனித உரிமையாகும்.
இதனை எதிர்ப்பவர்கள்தான் துவேஷத்தின் ஊற்றுக் கண்ணாவார்; இன்னும் அந்த  விடாப்பிடி வர்ண திமிரோடு இருக்கக் கூடியவர்கள் என்று பொருள்.
அதன் வடிவமாகத் தான் இன்று வரை சோ ராமசாமிகள் உருவங்களில் நடமாடிக் கொண்டும் இருக்கின்றனர்.
மற்ற சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்து விட்டதாம். ஆனால் நிராதரவாக பிராமணப் பசங்கதான் இருக்கிறார்களாம். ரிட்டையரான பிராமண பென்ஷன்னர்கள் உதவ வேண்டும் என்று சொல்லும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரகேசரேந்திர சரஸ்வதி இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கம் யூனல் பேஸிஸில் பேசியாக வேண்டி யிருக்கிறது என்று சொல்லுகிறாரே! (தெய்வத்தின் குரல் - 3ஆம் பகுதி)
எல்லாவற்றையும் துறந்த ஒரு லோகக் குரு கம்யூனலாகப் பேசுகின்றேன் என்று ஒப்புக் கொள்கிறாரே _ இதற்கு சோவின் பதில் என்ன?
எல்லாவற்றையும் கடந்தவர்தானாம் -_ தான் ஒரு பிராமணன்  என்பதைத்தவிர; இப்படிப்பட்ட யோக்கிதையில் உள்ளவர்கள்தான் பெரியாரைப் பார்த்துக் கம்யூனல் என்கிறார்கள்.
வாயால் சிரிக்க முடிகிறதா?
பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்டீன் என்ற பாடிய திருமூலர் இனத் துவேஷியா?
இந்தியாவின் சமூகப் புரட்சியாளர்கள் நாராயணகுரு, மகாத்மா பாபூலே, அண் ணல் அம்பேத்கர் உள்பட அனைவரும் பார்ப்பனர் எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தனரே!
ஏன் - இவர்களின் விவேகானந்தர் பார்ப்பனர்கள்மீது வீசாத வெடி குண்டா?
சித்தர்கள் எப்படி?
சித்தர்கள் சுளுக்கு எடுக்கவில்லையா? மறைமலை அடிகள் கா.சு. பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் பார்ப்பனர்களை வெளுத்து வாங்கவில்லையா? அவ்வையார் நூலெனிலோ கோல் சாயும் என்று கூற வில்லையா?
கல் மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை என் செயப் படைத்தாய்? என்று விவேக சிந்தாமணி (பாடல் எண் 82) பாடவில்லையா?
வேமன்னா தோலுரிக்கவில்லையா? புத்தர் புரட்டி எடுக்க வில்லையா?
இவர்களை எல்லாம் எந்தப் பட்டியலில் வைக்கப் போவதாக துக்ளக் கூட்டத்துக்கு உத்தேசம்?
நீங்கள் ஏன் ஆன்டிபிராமின் (Anti Brahmin) என்று திருவாளர் சோ கேட்ட கேள்விக்கு வீஆர் புரோ ஹீயுமன் (Pro Human) அதனால் ஆண்டி பிராமின் என்று பதில் சொன்னாரே தமிழர் தலைவர் கி.வீரமணி அதனை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.
மின்சாரம், விடுதலை (15-12-2012) http://www.viduthalai.in/page-1/50808.html


Saturday, March 31, 2012

எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்



அண்ணா என்ற பெயர் அண்ணா தி.மு.க.வால் கொச்சைப்படுத் தப்படுகிறது. திராவிட என்ற ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான இன அடையாளத் தத்துவம் தரைமட்டமாக்கப்படுகிறது.
பவுத்தமார்க்கத்தில் பார்ப்பனர்கள் புகுந்து திரிபுவாதப் புயலை நுழைத்து சேதப்படுத்தியதுபோல திராவிடர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி உருக்குலைக்கும் வேலை வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நீதிக்கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்று ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மாநாட்டில் (6.10.1929) தீர்மானம் ஒன்றை  ஏ.பி. பாத்ரோ முன்மொழிந்தார். தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆர்.கே. சண்முகம் அவர்களும் கடுமையாக (ஆங்கிலத்தில் பேசி) எதிர்த்தார்.
மக்கள் பிறவியில் ஜாதி உண் டென்ற கொள்கை உள்ளவரையில் நமது கட்சியில் எந்தப் பார்ப்பன ரையும் எவ்வித நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாலும் சேர்ப்பது நமக்குப் பயன்படாது என்றார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களின் உரைக்குப் பிறகு கூட்டத்தின் தலைவர் முனுசாமி நாயுடு வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற பாத்ரோவின் தீர்மானத்துக்கு வெறும் ஏழு வாக்குகளும், அதனை எதிர்த்த தந்தை பெரியார் அவர் களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட வாக்கு களும் கிடைத்து தீர்மானம் தோல்வியைத் தழுவியது.
இரண்டாவது தீர்மானமாக பார்ப்பனர்களைச் சட்டசபையில் சேர்த்துக்  கொள்ளலாம் என்பதாகும். அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டதால் அந்தத் தீர்மான மும் தோற்றுப் போனது.
(குடிஅரசு 13.10.1929)
நெல்லூர் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே, அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட தந்தை பெரியார் குடிஅரசு இதழில் பின் வருமாறு எழுதினார் (22.9.1929).
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால், அவ்வியக்கம் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட் டது போல் இயக்கம் செத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் ஆகிவிடும் என்பதை மட்டும் அழுத்தந் திருத்தமாய் உறுதியாகச் சொல்கிறோம் என்று எழுதினாரே!
1929இல் தந்தை பெரியார் எச்சரித்ததை இப்பொழுது 2012இல் க(ச)ட்சியாகப் பார்க்க முடிகிறது.
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்தபோது திராவிடர் என்பதற்குப் பதிலாக திராவிட என்பதோடு நிறுத்திக் கொண்டு பார்ப்பனர்களும் தி.மு.க.வில் சேரலாம் என்ற கதவைக் கொஞ்சம் திறந்துவிட்டது.
வி.பி. இராமன் போன்ற பார்ப் பனர்கள் தி.மு.க.வில் சேர ஆரம்பித் தனர். ஆனாலும் தேர்தலில் ஈடுபட முடிவு எடுத்த திமுக இதுவரை எந்த ஒரு பார்ப்பனரையும் திமுக வேட் பாளராக நிறுத்தவில்லை என்பது இமயமலை போன்ற உண்மையாகும். தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடம் உண்டா? என்பதுதான் அந்தக் கேள்வி.
என்னை நம்பி யாரும் வர வில்லையே! என்பதுதான் அண்ணா அவர்கள் அளித்த அழகான பதில். இன்றுவரை தி.மு.க.வில் இந்த நிலை உறுதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
தி.மு.க.விலிருந்து பிரிந்து அண்ணா தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்.
ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். எச். வெங்கட்ரமண ஹண்டே என்ற பார்ப்பனருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவறான வழிகாட்டி, தீராப் பழியைத் தேடிக் கொண்டார். கட்சிக்கு செல்வி ஜெயலலிதா என்ற பார்ப்பனப் பெண்மணியை கொள்கை பரப்புச் செயலாளராகவே ஆக்கி, திராவிடர் இயக்கத்தின் ஆதார அடி வேர்மீதே வெடி குண்டை வீசினார்.
ஆம், வரலாற்றில் பவுத்த மார்க்கத்துக்குப் பார்ப்பனர்களால் ஏற்பட்ட பாதகம் அ.இ.அ.தி.மு.க.வின் பார்ப்பனத் தன்மை மூலம் ஏற்பட்டு விட்டது.
அதன் அப்பட்டமான அடை யாளம்தான் சேது சமுத்திரத் திட்டம் செயல்பாட்டுக்கு வரக் கூடாது; ராமன் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் வழக்குத் தொடுத்ததாகும்.
இப்பொழுது அடுத்த கட்டமாக, ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுதியுள்ள கடிதமாகும். (28.9.2012).
அண்ணாவின் பெயரைக் கட்சி யிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் இப்படிஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதி இருப்பது எந்த வகையில் சரி?
அண்ணா ராமனை ஏற்றுக் கொண்டவரா?
இராமாயணத்தை அண்ணா அவர்கள் ஒப்புக் கொண்டதுண்டா?
தீ பரவட்டும்! என்ற சொல்லை யாவது செல்வி ஜெயலலிதா கேள்விப் பட்டு இருப்பாரா? தீ பரவட்டும் என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளதே அறிவாரா?
டாக்டர் ரா. பி. சேதுபிள்ளை அவர் களோடு சென்னையிலும், நாவலர் சோமசுந்தர பாரதியாரோடு சேலத்திலும்  இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும்  கொளுத்துவதா கூடாதா? என்ற விவாதப் போரில், கொளுத்தப்பட வேண்டும் என்ப தற்கான காரண காரியங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்துத் திணற அடித்த வரலாறு எல்லாம் அறிந்தவரா இந்த அம்மையார்?
திராவிடர் இயக்கப் பெரும் புலவர் குழந்தை அவர்களை அறிவாரா? அவர் எழுதிய இராவண காவியம் பற்றி கேள்வியாவது பட்டதுண்டா?
அந்த நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டது தெரியுமா? பிறகு கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது அந்தத் தடை நீக்கப்பட்ட வரலாறெல்லாம் புரியுமா?
புலவர் குழந்தையின் இராவண காவியத்துக்கு அண்ணா தந்த அணிந்துரையை ஒருமுறை செல்வி ஜெயலலிதா படித்துப் பார்க்கட்டும்! -- இதுவரை படிக்காவிட்டால் படிக்குமாறு இந்த நேரத்தில் பரிந்துரையும் செய்கிறோம்.
இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர் களுக்குத் தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது.  தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவு றுத்தவே இராவண காவியம் நூல்.
இராவணகாவியமும், இராமா யணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இரா வணனைத் தேவனாக்க அல்ல,  தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே!
இராமாயணம்பற்றி அண்ணாவே இவ்வளவு எழுதியிருக்கிறார் என்றால், தந்தை பெரியார் அவர்கள் எழுதிக் குவித்ததோ. அளவிடற்கரியது. குறிப்பாக தந்தை பெரியார் எழுதி இலட்சக்கணக்கில் வெளிவந்திருக்கும் இராமாயணப் பாத்திரங்கள் இராமாயணக் குறிப்புகள் என்ற இரு நூல்களைப் படித்தாக வேண்டும்.
சச்சு இராமாயணம் என்று அது இந்தியிலும் வெளி வந்துள்ளது. Ramayana A True Reading என்று ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.
திராவிடர் இயக்கத்திற்குத் தலைமை வகிப்பது என்றால் சாதாரணமானதா? இந்த அடிப்படை உயிர் எழுத்துக் களையும், மெய்யெழுத்துக்களையும் படிக்காமல், உணராமல், ஏற்காமல் எப்படி திராவிடர் இயக்கத்தில் உறுப்பினராகக்கூட ஆக முடியும்? உறுப்பினராகவே ஆக முடியாது என்றால் எப்படி கட்சியின் பொதுச் செயலாளராக இருக்க முடியும்?
இது ஒன்றும் அரசியல் அல்ல- _ அடாவடித்தனமாகப் பேசுவதற்கு?
ஒரு மாபெரும் இயக்க வரலாற்றின் ஆரம்பப் பாடங்கள்.
கடைசி கடைசியாக நமது கேள்விகள் மூன்றே மூன்றுதான்!
அண்ணாவின் கொள்கையை ஏற்காதவர் எப்படி அண்ணா தி.மு.க.வுக்கு பொதுச் செயலாளராக இருக்க முடியும்?
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை சீரணிக்க முடியாதவர் எப்படி திராவிட இயக்கத்தில் இடம் பெற முடியும்?
திராவிடர் இயக்கச் சித்தாந்தத்தின் எதிரியாக இருக்கக் கூடியவர் திராவிட இயக்கத்தில் இருக்க முடியுமா? இது அசல் ஊடுருவல் அல்லவா?
இப்பொழுது ஒரே வழி தான் இருக்கிறது. இந்தக் கொள்கைகளை ஏற்கா விட்டால் கட்சியிலிருந்து விலகி நிற்க வேண்டும் இல்லை இவர்தான் தலைமை வகிக்க வேண்டும் என்றால் கட்சியின் பெயரிலிருந்து அண்ணா வையும், திராவிட பெயரையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.
அதுதான் அறிவு நாணயம் என்பது.
இறுதியாக அண்ணா திமுக தொண்டர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்.
அய்யாவையும் அண்ணாவையும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கக் கொள்கைகளையும் ஏற்காத ஒருவர்தான் உங்களுக்குத் தலைவரா? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
--- நன்றி: விடுதலை ஞாயிறு மலர், 31-03-2012


Tamil 10 top sites [www.tamil10 .com ]