மகாகவி பாரதியாரின் 132-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் இருந்து அவரது இல்லம் வரை ஜதி பல்லக்கில் தூக்கி வந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், வழக்குரைஞர் சுமதி. உடன் (இடமிருந்து) காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், பொற்றாமரை பொதுச்செயலாளர் கி.சங்கரன், பாஜக தேசிய செயலர் தமிழிசை செüந்தரராஜன், மாநில செயலர் வானதி ஸ்ரீநிவாசன்./////////
இந்த செய்தியை இன்றைய (12-12-2013) தினமணியில் படித்துவிட்டு தான் இந்த பதிவு எழுதினேன்...சும்மா பாரதியை எதிர்க்க வேண்டும் என்று எழுதவில்லை என்பதை தோழர்களுக்கு அறிவித்து கொள்கிறேன்
வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.
நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி’
இப்படி நால் வருணம் வேண்டும்..குலக்கல்வி வேண்டும் என்று பாடியவன் மகாகவி என்று அழைக்கப்படும் பாரதி.
முகத்தில் பிறப்பார் உண்டோ முட்டாளே
தோளில் பிறப்பார் உண்டோ தொழும்பனே
இடையில் பிறப்பார் உண்டோ எருமையே
காலில் பிறப்பார் உண்டோ கழுதையே
நான்முகன் என்பான் உளனோ நாயே
புளுகடா புகன்றவை எலாம் போக்கிலியே!
இப்படி நால் வருணத்தை உருவாக்கியவனை சாட்டையால் அடிப்பது போன்று கேள்வி கேட்டு பாடியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். எங்கே பாரதியை பல்லக்கில் தூக்கும் கூட்டம் எங்கள் பாவேந்தர் பாரதிதாசனை தூக்கி செல்லட்டும் பார்க்கலாம்!!! அப்படி செய்தால் அவர்கள் தான் ஓரிஜினலா கவி நடை ரசிப்பவர்கள்.
No comments:
Post a Comment