வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, September 07, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-93: பிரபாகரன் விடுத்த வேண்டுகோள்

இப் பிரச்னைகளுக்கு நடுவே, 25-9-1987 அன்று பிரபாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பிற இயக்கங்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்று இணைய வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார். அதன் முக்கியப் பகுதி வருமாறு:
""அன்றும் சரி, இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்தச் சக்தி பின்னணியில் இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன்.
தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அந்நிய அரசுச் சக்தி ஒன்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் துரோகத் தலைமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு புலிகளோடு வந்து சேருங்கள்; புலிகளாக மாறுங்கள்; புலிகளின் லட்சியப் போராட்டத்தில் அணி திரளுங்கள். நீங்கள் எந்த லட்சியத்துக்காக இந்த அமைப்புகளிடம் சேர்ந்தீர்களோ அந்த லட்சியப்பாதையில் எமது விடுதலை இயக்கமே வீறுநடை போடுகிறது. ஆகவே, தமிழீழ லட்சியப்பற்றுடைய போராளிகள் யாவரையும் நாம் அரவணைத்துக் கொள்ளத்தயார். உங்களை எமது அணியில் சேர்த்துப் போராளிகளாக கெüரவிக்கத் தயார். எமது தோழர்களாகப் பராமரிக்கத் தயார்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
பிரபாகரனின் வேண்டுகோள் பிற இயக்க உறுப்பினர்களைச் சிந்திக்க வைத்தது. சிலர் துணிந்து இயக்கத்தில் சேர்ந்தனர். பலர் இயக்கத் தலைமை என்ன செய்யுமோ என்று பயந்து புலிகளுடனும் சேராமல், தாங்கள் இருந்த இயக்கத்திலும் இருக்க முடியாமல் வெளியேறினார்கள்.
இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடனான ஒரு மோதலில் சுரேஷ் என்பவர் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டம் ஒன்று அவ்வியக்கத்துக்கு இருப்பதாகத் தெரியவந்ததையொட்டி, அந்த இயக்கத்தையும், "பிளாட்' இயக்கத்தையும், தமிழீழ ராணுவத்தையும் தடை செய்வதாக 14-12-1987 அன்று புலிகள் இயக்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பையொட்டி, "பிளாட்' இயக்கமும் தமிழீழ ராணுவமும் தனது இயக்க வேலைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கும் புலிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் எழுந்து கொண்டே இருந்தன. ஆக, ஈ.என்.எல்.எஃப். என்கிற அமைப்பு திம்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரே ஆண்டில் சிதைந்துவிட்டது.
பிரபாகரனின் தலைமையில் இயங்கும் விடுதலைப் புலிகள் எப்போதும் சிங்களவர்களிடம் விரோதம் பாராட்டியதில்லை. அப்பாவி சிங்கள மக்களைத் தாக்குவதில்லை என்கிற கொள்கையை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். தமிழர் பகுதிகளில் அமைந்திருந்த ராணுவ முகாம்களில் சிங்களச் சிப்பாய்கள் பலமாதம் அடைபட்டுக்கிடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்டான குடிநீர்த் தேவைகள், உணவு சமைக்க விறகு முதலியவற்றை அவ்வீரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அளித்து உதவியிருக்கிறார்கள்.
இலங்கை மக்கள் கட்சித் தலைவரான விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணத்துக்கு இருமுறை வந்தார். முதல் தடவை யாழ் கோட்டையில் அடைபட்டுக்கிடந்த சிங்கள ராணுவக் கைதிகளைப் பார்க்க வந்தார். யாழ் தளபதியாக இருந்த கிட்டு அவரை அனுமதித்தார். சிங்களக் கைதிகளுடன் தாராளமாகப் பேச அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதேபோன்று இரண்டாவது முறையும் சில புத்தபிக்குகள், பத்திரிகையாளர்கள் சகிதம் அவர் வர விரும்பினார். சிங்கள அரசு அவர்கள் யாழ்ப்பாணம் செல்லத் தடை விதித்ததே தவிர, விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை வரவேற்றது.
அவர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தின் தளபதி கிட்டு பேசும்போது, ""நாங்கள் எங்களது உரிமைக்காகவே போராடுகிறோம். எந்த சிங்களப் பகுதியையும் நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. எங்களது இயக்க வீரர்கள் தாமாக முன்வந்து உயிரைத் தியாகம் செய்கிறார்கள். ஆனால் ராணுவத்தினர் தங்கள் உழைப்புக்காகச் சம்பளம் பெறுகிறார்கள். அதற்காகவே ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். போர் நடவடிக்கைகளில் வீரர்கள் கைது செய்யப்படுவது நடக்கக்கூடியதுதான். யாழில், மன்னாரில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை நிபந்தனை எதுவுமின்றி நாங்கள் விடுவித்தோம். ஆனால் எமது உறுப்பினர்கள் 19 பேரும், ஆயிரக்கணக்கான தமிழர்களும் இன்று சிறையில் வாடுகிறார்கள். அவர்களில் இரு வீரர்களை விடுவிக்கும்படி கேட்கிறோம். யுத்தக் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது நடைமுறையில் உள்ளது. ராணுவத்தில் ஒவ்வொரு சிப்பாயும் மரியாதை இழக்கின்றனர். முன்பு விஜயகுமாரணதுங்கா இங்கு வந்த பின்னர்தான் தெற்கில் உள்ள மக்களுக்கும் உலகுக்கும் இந்தப் பிரச்னை தெரியவந்தது. நாங்கள் குருமாரையும் உங்களையும் கேட்பது என்னவென்றால், நீங்கள் அரசை நிர்ப்பந்தித்து வீரர்களை விடுவிக்கச் செய்யுங்கள்'' என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த விஜயகுமாரணதுங்கா, ""தமிழ்ப் போராளிகளின் மீது நம்பிக்கை வைத்து, வடக்கிலும் தெற்கிலும் இருக்கக்கூடிய உரிமை மறுக்கப்பட்ட மக்களின் பொதுப்போராட்டத்தில் வடக்கு-தெற்கு பாலம் ஒன்றை அமைப்பதே எமது பிரதான நோக்கம்'' என்றார்.
இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இரு சிங்களக் கைதிகளான லெப்டினன்ட் சந்திரஸ்ரீ, பாந்தரா ஆகிய இருவரையும் டிசம்பர் 19, 1986, காலை 8-10 மணிக்கு சிங்கள கேப்டன் கொத்லவாலாவிடம் ஒப்படைத்தனர். பதிலுக்கு சிங்களத் தரப்பில் மேஜர் அருணா மற்றும் ஒரு போராளி ஆகிய இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சி யாழ் கோட்டைக்கு வெளியே நடைபெற்றது. இதில் கையளிக்கப்பட்ட மேஜர் அருணா, கடற்படைத்தாக்குதலில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது மரணத்துக்கு இரங்கல் மற்றும் வேலைநிறுத்தம் எல்லாம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் உயிருடன் இருந்தது தெரியவந்தது. அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவரது முகமும் தீக்காயங்கள் ஏற்பட்டு கருகிய நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் அவர் கடற்படையினரால் பிடிக்கப்பட்டபோது, அவர் தன்னைப் படகோட்டி என்று கூறியதுடன், தனது பெயர் செல்வசாமி செல்வகுமார் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வகையாகப் பிடிபட்ட அனைவரும் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பல வாரங்கள் கழித்து அருணா இறக்கவில்லை என்று தெரியவந்ததும், கைதிகள் பரிமாற்றத்தில் எந்தக் கைதியை விடுவிக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது "செல்வகுமார்' என்று தெரிவிக்கப்பட்டார். அருணா உயிருடன் இருக்கிறார்; அவர் பெயர்தான் செல்வகுமார் எனத் தெரியவந்தால் சிங்களப்படை மறுக்கும் என்று தெரிந்தே இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றது.
அதே போன்று விடுதலைப் புலிகள் தரப்பில் கையளிக்கப்பட்ட லெப்டினன்ட் சந்திரஸ்ரீயும் மன்னாரில் நடைபெற்ற தாக்குதலில் இறந்துபோனதாக முன்பே அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்களக் கைதிகளை அழைத்துச் செல்ல பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியே வந்திருந்தார். (ஆதாரம்: பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்).
சிங்களவர்களின் போக்கு எப்போதும் தமிழருக்கு எதிராகவே இருந்தது. இதுகுறித்து பிரபாகரன் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த காலத்தில் எல்லாம் எங்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அக்கறை காட்டவில்லை.
எங்களின் ஆயுதப் போராட்டம் விரிவடைந்ததே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக்காலமான 1972-ஆம் ஆண்டில்தான். அப்போது அவர் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினார். அந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஏற்கெனவே தமிழர்கள் அனுபவித்த கொஞ்சநஞ்ச உரிமைகளும் பறிக்கப்பட்டன.
இடதுசாரிகளை நாங்கள் நம்பலாம் என்றால் அதற்கும் சாத்தியமில்லாது போயிற்று. 1972-ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவர்கள் முட்டுக் கொடுத்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர் கெனமன் இருவரும் ஸ்ரீமாவோ ஆட்சியில், கூட்டணி அரசின் அங்கமாக இருந்தபோதுதான் இந்த அநியாயம் நடந்தது. இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவரே பழம்பெரும் இடதுசாரியான கொல்வின் ஆர்.டி.சில்வாதான். இந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம் என்று தமிழர் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தார்கள். இதற்கு ஒத்துழைத்த ஒரு சில தமிழ்த் துரோகிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர் மத்தியில் ஒரு சிங்களவர் அல்லது ஒரு கட்சி ஆதரவு நிலை எடுத்தால், அங்கே அந்தக் கட்சியும் அவரும் இயங்க முடியாது என்று காட்டினார்கள். இதற்கு விஜயகுமாரணதுங்காவின் கட்சியே சாட்சியாக இருக்கிறது. அவர்கள் மேடையிட்டுப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. விஜயகுமாரணதுங்காவே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் இதர சிங்கள அரசியல் கட்சிகளை நாம் மட்டும் எப்படி நம்பமுடியும்' என்றார். (இந்து நாளிதழ் பேட்டி, 4,5 செப்டம்பர் 1986).
கேள்வி : எதிர்காலத் தமிழீழத்தில், "ஒரு கட்சி ஆட்சிதான் இருக்கும். சர்வாதிகாரம் தலைதூக்கும்' என்றெல்லாம் கூறி உங்களது இயக்கத்தை ஆதரிக்கலாமா என்று ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பிரபாகரன் :"எமது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து எமது அரசு அமையும். மக்களுக்கு விருப்பமான கட்சியை அவர்கள் தேர்வு செய்வார்கள். இந்தியாவில் மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்தது. போராட்டத்தில் பங்குகொள்ளாதவர்களே இதுபோன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்களிப்பு எதுவும் செய்யாது, அதே நேரத்தில் களத்தில் விலகி நின்றுகொண்டு, தலைமைப் பதவியை அடையக் கனவு காணும் சிலரின் மனதிலேயே இந்த அச்ச உணர்வு தலைதூக்கியுள்ளன.'
கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தம் என்ன?
பிரபாகரன் : சோசலிசமும் - தமிழீழமும். இவை குறிக்கோள், அடிப்படைக் கோட்பாடு.
கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகள், டெலோ இரண்டும் தேசியவாதக் கோட்பாட்டில் இயங்கும் கட்சிகள் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் இரண்டும்தான் சோசலிச சித்தாந்தத்தில் பிறந்தவை என்றும் வேறுபாடு உள்ளதே?
பிரபாகரன் : சித்தாந்த ரீதியில் எல்லா இயக்கங்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால், நடைமுறையில்தான் அதன் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சோசலிசம் என்பது இன்று பல ரகங்களைக் கொண்டதாக இருக்கிறது. சோசலிசத்திற்கு ஒருவர் அளிக்கும் விளக்கத்திலிருந்தும் அதை நடைமுறைப்படுத்தும் தன்மையிலிருந்தும் அதன் வேறுபாடுகள் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
இன்று எல்லோரும் தம்மை ஒரு சோசலிசவாதி என்றே கூறிக்கொள்கிறார்கள். ஜெயவர்த்தனா கூட ஒரு காலத்தில் அப்படிக் கூறிக்கொண்டு, இடதுசாரி நூல்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர்தான். ஆக, சோசலிசம் பேசுகிற ஒருவர் அதை நடைமுறைப்படுத்தும்போதுதான், தன்மை வெளியாகும்.
எமது மக்களின் விருப்பங்களையும், நலன்களையும் முழுமையாகப் பேணும் ஓர் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கட்டியமைப்பதே எமது லட்சியம். எமது கலாசாரம், எமது பாரம்பரியம், எமது வரலாறு ஆகியவற்றுக்கு உகந்ததாக அந்தச் சமுதாய அமைப்பு அமைய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு கனவு உண்டு. அதனைச் செயல்படுத்தவே சிந்திக்கிறோம்; போராடுகிறோம். எங்கள் சமுதாயத்திட்டத்தில் பெருமுதலாளிகள் இருக்கமாட்டார்கள்; நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பர்.
மலையகத் தமிழர் பற்றியும் கிழக்கு மாகாணம் குறித்தும் பிரபாகரன் குறிப்பிடுகையில், "தமிழ்த் தேசியம் என்று நாம் குறிப்பிடும்போது வடக்கு-கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தென்னிலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்துவரும் பாட்டாளி மக்களையும் நாங்கள் குறிக்கிறோம். எங்களது தமிழ்த் தேசிய அமைப்பில் மலையகத் தமிழர், இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களைச் சார்ந்தவர்களும் மதச்சார்பு அற்றோருமான தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அடங்குவர். தமிழீழம் எனும்போது, தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான அமைப்பையே குறிக்கிறோம்' (வே.பிரபாகரன்-சோசலிச தமிழீழத்தை நோக்கி - பக்.28-29/ ஆதாரம்"" பழ.நெடுமாறன்).
கேள்வி : "உங்களது இயக்க ஆட்கள் சயனைட் குப்பியைக் கழுத்தில் அணிந்திருப்பதாகக் கூறுகிறார்களே?'
பிரபாகரன் : "உண்மைதான். இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதுவே எங்களின் பலம். இதுவே எங்கள் உயிருமாகும். இந்தக் குப்பி எங்கள் கழுத்தில் இருக்கும்வரை எங்களுக்கு வெற்றி ஒன்றே குறி. அதை அடையவே தீவிரம் காட்டுவோம். அதை அடைய முடியாத நிலை வரும்போது, அந்தப் போராளி மற்றவரைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்கிற நிலையில் - அந்தக் கட்டம் வரும்போதுதான் சயனைட் குப்பியைக் கடிப்பார். இல்லையென்றால் எமக்கு உறுதுணையாக இருந்த பலரும் அவர்களது குடும்பமும் சிங்களச் சிறைகளில் சிக்க வேண்டியிருக்கும். எங்கள் தோழர்கள் பலர் இவ்வகையில் தியாகிகளாய் உயிர்விட்டிருக்கிறார்கள். எங்களது இயக்க ஆட்களை நீங்கள் சிறைகளில் அதிகம் பார்க்க முடியாது. எதிரிகளிடையே ஊடறுத்து முன்னேறிக்கொண்டே இருப்பவன்தான் சயனைட் போராளி' என்றார்.

நன்றி தினமணி

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 92: சகோதர இயக்கங்களிடையே மோதல்

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும். இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்:
""தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் வகுப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறப்பட்டது. இதே கொள்கை டெலோவிடமும் இருந்தது. ஈபிஆர்எல்எப்-ஐப் பொறுத்தவரையில் மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை. ஆயினும் இந்திய ராணுவத்தின் (அமைதிப்படை) வருகைக்குப் பின் அவர்கள் நடந்து கொண்டவிதம், "எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதை உறுதி செய்தது'' என லண்டனில் இருந்து வெளிவந்த "ஈழ பூமி' என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.
""ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் ("ரா' அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்''
""டெலோ இயக்கத்துக்குள் தாஸýக்கும், பொபிக்குமிடையே ஏற்பட்டப் பிரச்னையில், இயக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீசபாரத்தினம் விரும்பினாலும் அவரின் பரிவு பொபி மீதே இருந்தது''
""பேச்சுவார்த்தைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 மார்ச் 11-ஆம் தேதி அங்கு ஐந்து மெய்க்காவலர்களுடன் தாஸ் வந்தபோது பொபி குழுவினரால் அழிக்கப்பட்டனர்''
""(திம்புப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவருள் இருவராகிய சத்தியேந்திராவும், சந்திரகாசனும் டெலோ இயக்கத்தவர் ஆவர். இவர்களின் வெளியேற்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் காரணம் என டெலோ இயக்கத்தினர் சந்தேகப்பட்டனர்''
""இந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம், ராஜலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியவர்களைக் கொல்லும்படி ஸ்ரீசபாரத்தினம் தனது தளபதிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனம் மூலம் உத்தரவிட்டார்''
""வடமராட்சிக்குப் பொறுப்பானவர், துரைரத்தினத்தையும் ராஜலிங்கத்தையும் கொல்ல மறுத்துவிட்டார். ஆனால் வி.தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் வகையாக மாட்டிக் கொண்டனர் (1985 செப். 2) - என்று "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில் புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார். இவர் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இந்தக் குறிப்புகளை அளித்துள்ளார்.
தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் இருவரின் மரணம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக் கொலைகளைச் செய்தது யார் என்று பெரிய ஆராய்ச்சியே நடைபெற்றது. இந்தக் கொலைகளுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருப்பர் என்றே பெரும்பாலானோர் கருதினர்.
இதுகுறித்து பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனிடம் பேசும்போது, அவர் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறியுள்ளார். பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற நூலில்,
""நாங்கள் ஏன் இந்தக் கொலைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அவசியம் என்ன? அதிலும் தர்மலிங்கம் எங்களால் நன்கு மதிக்கப்பட்டவர். யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதவர். எங்கள்பால் அன்பு கொண்டவர். காரணமில்லாமல் எதற்காக நாங்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும். இந்தக் கொலைகளை யார் செய்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மைக் குற்றவாளி பிடிபடுவார்'' என்று பிரபாகரன் கூறியதையும் எடுத்தாண்டுள்ளார்.
பின்னர் 1986-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் நடந்த மோதலில் டெலோ உறுப்பினர் பழனிவேல்-தங்கராசா என்னும் பேராளி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர், "தலைமையின் உத்தரவு. இது ஓர் அரசியல் தந்திரம்; விளக்கம் தேவையில்லை' என்று பொபி கூறினார்.
விசாரணையில் பழனிவேல் தங்கராசா மேலும் கூறியதாவது:
""எங்களுக்குப் பழுப்புநிற மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார் வழங்கப்பட்டது. நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் வலண்டையன் தலைமையில் இயங்கினோம். ஆலாலசுந்தரம் வீட்டுக்குச் சென்றோம். அவரைப் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கத்தின் இருப்பிடத்துக்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு "கோண்டாவில்' என்ற ஊருக்குப் போனோம். தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் இறக்கிவிட்டுவிட்டு, ஆலாலசுந்தரத்தை நல்லூர் கூட்டிச் சென்றோம். அவரை நானும் வலண்டையனும் கொன்றோம். பின்னர் தர்மலிங்கத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், தாவடி ரோட்டில் வைத்து அவரை சிட்டிபாபு கொன்றார்''
இந்த உண்மை வெளிவந்ததும் விமர்சனம் வேறு வகையாகத் திரும்பியது.
மதுரையில் 1986 மே 5-ஆம் தேதியன்று நடைபெற்ற டெசோ மாநாட்டின்போது, விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் ஏற்பட்ட செய்தி அறிந்து, அம்மாநாட்டின் தலைவர்கள், அங்கே இருந்த இலங்கைத் தமிழர் தலைவர்களை, ""ஒற்றுமையுடன் இருப்போம். எங்களுக்குள் மோதலில் ஈடுபட மாட்டோம்'' என்று உறுதி கேட்டார்கள். அவர்களும் அவ்வாறே உறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தவர்கள் அனைவரும் மதுரையில் இருக்க, இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.
இதன் பின்னணி என்ன?
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மேஜர் அருணா 1986 ஏப்ரல் 27-ஆம் தேதி சிங்களக் கடற்படையினருடன், கடலில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இதையொட்டி யாழ்குடாப் பகுதியில் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அஞ்சலி செலுத்தும் வகையில் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.
அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சிங்களக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 11 பேரை டெலோ இயக்கம் இழந்திருந்தது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் இயக்க வீரருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவதா எனக் கேட்டு மறுநாள் 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய டெலோ இயக்கம் அறிவுறுத்தியது.
இதற்கு மறுத்த கல்வியங்காட்டுப் பகுதி மீது டெலோ தாக்குதலைத் தொடுத்ததும் இதைத் தடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் மேஜர் பஷீர்காக்கா, லெப்டினன்ட் முரளி ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீசபாரத்தினத்தின் பழைய நண்பர் என்ற முறையில் விடுதலைப் புலிகளின் தளபதி கேப்டன் லிங்கம் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடன் டெலோ முகாமுக்குச் சென்றார். ஆனால் அங்கே லிங்கம் கொல்லப்பட்டார் (தகவல்: பழ.நெடுமாறன்-பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்).
இதன் பின்னர் டெலோ இயக்கத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் மூண்டது. இரு இயக்கங்களுக்குமிடையே நடந்த ஒருவார மோதலில் டெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உயிரிழந்தார். (6.5.1986).
இந்த மரணத்துக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட டெசோ தலைவர்கள் வருத்தமும் வேதனையும் தெரிவித்தனர். இனி டெசோ அமைப்பு இயங்காது என்று மு.கருணாநிதி அறிவித்தார். முரசொலி நாளிதழ் அவர் எழுதிய இரங்கற்கவிதையை வெளியிட்டது. ஈபிஆர்எல்எஃப் இயக்கம் மட்டும் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதற்கு, யாழ்ப்பாணத்தில் இரங்கல் ஊர்வலம் ஒன்றை நடத்தியது.
பலத்த விமர்சனங்களுக்கான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில்தான் இருந்தார். இது குறித்து பிரபாகரன் கூறுகையில், "லிங்கத்தின் சாவுச் செய்தி வந்தபோது நானே கொதிப்படைந்தேன். களத்திலிருந்த எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. லிங்கம் படுகொலை மற்றும் எங்களது முக்கியத் தோழர்கள் கைது என்பது தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆழமான சதியின் விளைவாகவே இவை நிகழ்ந்துள்ளன.
இந்திய உளவு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே சென்னையிலிருந்த ஸ்ரீசபாரத்தினம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார் என்பதும், எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.
ஸ்ரீசபாரத்தினத்தையோ, டெலோ இயக்கத்தையோ திட்டமிட்டு நாங்கள் அழிக்கவில்லை. நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் எங்களை அழித்துவிட டெலோ இயக்கத்தினர் முயன்றிருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்- பழ.நெடுமாறன் -பக்.51).

நன்றி தினமணி

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-100: ராஜீவ் காந்தி தாக்கப்பட்டார்!


1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இணைப்பாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
1. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் உடன்பாட்டின் இரண்டாவது பத்தி மற்றும் அதன் துணை பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கவனிக்க, இந்தியத் தேர்தல் கமிஷனின் பிரதிநிதி ஒருவரை மேதகு இலங்கை அதிபர் அழைப்பார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.
2. அதேபோன்று இருநாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தின் பத்தி 2.8-இல் குறிப்பிட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்களின்போது அதனை மேற்பார்வையிட இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரை இலங்கை அதிபர் அழைக்கவும் ஏற்றுக்கொண்டனர்.
3. மாகாணசபைத் தேர்தல் நடைபெற உகந்த நிலையை உருவாக்க, கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் இருந்து ஊர்க்காவல் படையினரும் துணை ராணுவப்படையினரும் திருப்பி அழைக்கப்படுவர். இதனைச் செய்ய ஜனாதிபதி உடன்படுகிறார்.
இன வன்முறையின்போது கொண்டு நிறுத்தப்பட்ட துணை ராணுவத் துருப்புகளை இலங்கையின் நிரந்தரப் பாதுகாப்புப் படையாக ஏற்றுக்கொள்வது அதிபரின் அதிகாரத்திற்கு உரியது.
4. தமிழ்ப் போராளிகள் தங்கள் வசமுள்ள ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் என்பதை இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் ஏற்றுக் கொள்கின்றனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய இரு அமைப்புகளின் மூத்த பிரதிநிதி ஒருவரின் முன் இந்த ஆயுத ஒப்படைப்பு நடைபெறும்.
5. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பிரதிநிதிகள் அடங்கிய இந்திய - இலங்கை கூட்டு கண்காணிப்புக் குழு ஒன்று அமைப்பதையும், 1987 ஜூலை மாதம் 31-ஆம் தேதி முதல் ஏற்படும் போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் ஏற்கின்றனர்.
6. ஒப்பந்தத்தில் பத்தி எண் 2.14, 2.16 (இ)யில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி போர் நிறுத்தம் நடவடிக்கையை உறுதிப்படுத்த, இந்திய அமைதி காக்கும் படை ஒன்றை, தேவைப்பட்டால் இலங்கை அதிபர் அழைக்கக்கூடும். ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு ராஜீவ் காந்தி ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த சில கவலைகளும், உணர்வுகளும் இன்றைக்கும் கூடப் பொருத்தமானதாகவே இருப்பது மட்டுமல்லாமல், இலங்கை அரசு இந்தியாவைப் பல விஷயங்களில் வஞ்சித்து வருகிறது என்பதை உறுதியும் படுத்துகிறது.
ராஜீவ் எழுதிய கடிதத்தில் காணப்பட்ட முக்கியமான அம்சங்கள் வருமாறு:
1. மிகுந்த அக்கறையுடன் இரு நாடுகளுக்குமிடையே நூற்றாண்டுகளாய் பேணி பாதுகாக்கப்பட்டுத் தொடர்ந்து வரும் நம் நட்புறவு... இந்த வேளையில் அது இன்னும் வலுப்பெற்று அதை மீண்டும் இருநாடுகளும் நிரூபிக்கும் வகையில் நம் இரு நாடுகளின் அதன் எல்லைப் பகுதிக்குள் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்புக்கு எதிராக, சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் சக்திகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
2. இதே உத்வேகமும் எண்ணமும் கொண்டுள்ளதை நம் பேச்சுவார்த்தையில் வெளிப்படுத்திய நீங்கள்... இந்தியாவின் சில எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.
அ.) நீங்களும் நானும் முன்பு பேசி ஒத்துக்கொண்டது போல இலங்கைக்காக மற்ற நாடுகளின் ராணுவத்தினரையோ அல்லது வல்லுநர்களையோ இந்தியாவைப் அனுமதித்ததுபோன்று, அனுமதிக்காமலிருப்பதே இந்திய இலங்கை உறவுக்குப் பாலமாகும்.
இ.) திருகோணமலை அல்லது ஏனைய மற்ற பகுதிகளில், மற்ற நாடுகளின் ராணுவ பயன்பாட்டிற்கு அனுமதிக்காமலிருப்பது இந்தியாவின் எண்ணத்திற்கு ஒத்துப்போவதாகும்.
உ.) மீண்டும் திருகோணமலை ஆயில் நிறுவனக் கிடங்குப் பணி இருநாட்டு கூட்டு முயற்சியுடன் தொடரும்.
இலங்கை அரசு வெளிநாட்டு தகவல் மற்றும் ஒலிபரப்பு நிறுவனங்களை அனுமதித்து, அவர்கள் அங்கு செயல்பட்டு வருவதை மறுபரிசீலனை செய்து இந்தத் தகவல் ஒலிபரப்பு பொதுவான துறையாக மட்டும் செயல்படவேண்டும். ராணுவ மற்றும் வல்லுநர் தன்மைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
3. அதே உத்வேகத்துடன் இந்தியாவும் செயல்படும்.
அ.) தீவிரவாதச் செயல்கள், தனி நாடுவேண்டி போராடுபவர்கள், குழுக்களைச் சேர்ப்பவர்கள் இந்த மாதிரி செயல்களைச் செய்பவர்கள் என கண்டுபிடிக்கப்படும் இலங்கைப் பிரஜைகள் நாடு கடத்தப்படுவர்.
இ.) இலங்கைக்குத் தேவையான ராணுவ உதவி மற்றும் ராணுவப் பயிற்சிகள் வழங்கப்படும்.
4. இந்தியாவும் இலங்கையும் தொடர்ந்து பொதுவான விஷயங்களில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில்கொண்டு இருவரும் கலந்துபேசி இருதரப்பைப் பலப்படுத்தியும் மேலும் இந்தக் கடிதத்தில் கண்டுள்ள மற்ற விஷயங்களைப் பற்றியும் கவனிக்கவேண்டும்.
5. நம் இருவருக்குமிடையே உருவான ஒப்பந்தப்படி மேலே குறிப்பிட்டவைகள் சரியானபடி இருப்பதாக தயவுகூர்ந்து பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். எனது மிக, மிக உயர்வான சலுகைகளின்படியான வாக்குறுதிகளை மனதில் கொண்டு தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
(ஒப்பந்த நகல் உதவி : ஏன் எரிகிறது ஈழம்-கே.கே.ரமேஷ்)
இந்தியா திரும்ப இருந்த ராஜீவ் காந்திக்கு கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட இருந்தது. பல்வேறு ஒத்திகைக்குப் பின்னர் அந்த நேரமும் வந்தது. ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் அணிவகுப்பு குறித்து ஆய்வு செய்து ஒப்புதலும் அளித்தனர்.
அவர்கள் ஆய்வு செய்த முக்கிய விஷயம் என்னவென்றால், அணிவகுப்பு மரியாதையில் வீரர்கள் பிடித்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் உள்ளதா என்பதைக் கண்டறிவதுதான்! இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் எகிப்து அதிபர் அன்வர் சதாத் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி நடைமுறைக்கு வந்தது.
1978-இல் எகிப்து அதிபர் அன்வர் சதாத் இஸ்ரேலியப் பிரதமர் பெனகம் பெகினுடன், அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். "காம்ப் டேவிட் ஒப்பந்தம்' என்று அழைக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அரபுநாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக எகிப்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், 1981-ஆம் ஆண்டில் எகிப்து அதிபர் அன்வர் சதாத், தனது நாட்டின் அணிவகுப்பில், தனது வீரனாலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின் உலகநாடுகள் அணிவகுப்பு துப்பாக்கிகளில் குண்டு நிரப்புவதைத் தடைசெய்தனர்.
இதே நடைமுறைப்படிதான் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புப் பிரிவினரும் சோதனை மேற்கொண்டனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அணிவகுப்பு மரியாதைக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டவர் ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனா.
அவர் ராணுவத்தினருக்கு அணிவகுப்பில் பயன்படுத்தும் துப்பாக்கிகளில் குண்டுகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டபோது சிங்கள ராணுவத் தலைமை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ராணுவ வீரர்களின்மீது அவநம்பிக்கை கொண்டதாக இச்செயல் அமையும் என வாதிட்டனர். ஆனால், ராஜீவ் காந்தி அணிவகுப்பில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று ரவி ஜெயவர்த்தனா, குண்டுகளை அகற்றும்படி உத்தரவிட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், ராஜீவ் காந்தி அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு வருகையில், கடற்படையைச் சேர்ந்த விஜயமுனி விஜிதா ரோகண டி சில்வா என்கிற சிப்பாய் தான் பிடித்திருந்த துப்பாக்கியின் அடிக்கட்டையால், ராஜீவ் காந்தியின் பின்தலையில் வேகமாகத் தாக்க முயன்றார். பின்தலையில் தாக்கினால் ஒரு மனிதன் செயலிழப்பான் என்பது ராணுவப் பயிற்சியில் சொல்லிக்கொடுக்கப்படும் சூத்திரங்களில் ஒன்று. இவ்வாறு சிங்களச் சிப்பாய் தாக்குவதை உணர்ந்த ராஜீவ் காந்தி தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார். துப்பாக்கியின் அடிக்கட்டை அவரது தோளில் பட்டது.
ராணுவ உயர் அதிகாரிகள், ஜெயவர்த்தனாவின் சகாக்கள் முன்னிலையில்தான் இச்சம்பவம் நடைபெற்றது. ஆனால் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரிதான் ஓடோடிச்சென்று அந்தச் சிங்களச் சிப்பாயை இயங்கவிடாமல் பிடித்து அமுக்கினார்.
சிங்களப் படையினர் எத்தகைய கொடூரமான மனநிலையினர் என்பதையும் கொலைவெறி மிகுந்தவர்கள் என்பதையும் இச்சம்பவம் உலகத்திற்கு அடையாளம் காட்டியது.
இந்நிலையில், இந்த சம்பவங்களின் பின்குறிப்பாக கீழ்க்கண்டவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்:
இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சமயத்தில், இதில் கலந்துகொள்ளவிரும்பாத அந்நாட்டின் பிரதமர் பிரேமதாச தாய்லாந்து சென்றுவிடுகிறார். ஒரு நாட்டின் பிரதமர், தனது நாட்டுக்கு வேறொரு நாட்டின் பிரதமர் வரும்போது, வெளிநாட்டுக்குச் செல்வது என்பது, உலகில் வேறெங்கும் நடைபெறாத சம்பவமாகும்.
அதுமட்டுமன்றி அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி மற்றும் முக்கிய அமைச்சர்களும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததும் புதுமையானதுதான். இச்செயல் அனைத்தும் இந்தியாவை அவமானப்படுத்தவேண்டும் என்பதே ஆகும்.
ராஜீவ் காந்தியை அணிவகுப்பின்போது தாக்கிய விஜயமுனி பிரேமதாசவின் ஆதரவாளர் என்றும் அப்போது பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அவரது தூண்டுதலின்பேரிலேயே மேற்கண்ட தாக்குதல் சம்பவம் நடைபெற்றது என்றும் விமர்சித்தவர்களும் உண்டு. அதை மெய்ப்பிப்பது போன்றே, பிற்காலத்தில் பிரேமதாசா அந்நாட்டின் அதிபராக வந்ததும் ராஜீவ் காந்தியைத் தாக்கிய விஜயமுனியை நிபந்தனை ஏதுமின்று விடுதலை செய்த நிகழ்ச்சி அமைந்தது.
"ராணுவ அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, பதவி விலக வேண்டும்' என்றார் இலங்கை நிதியமைச்சர் ரோனி டிமெல். ரோனி டிமெல்லின் கருத்துக்கு அதலத் முதலி சூடாகப் பதிலளித்தார். "இலங்கைக் கடற்படை, அதிபர் ஜெயவர்த்தனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரோனி டிமெல் இப்படியெல்லாம் கோரிக்கை வைத்து அதிபரைச் சிறுமைப்படுத்துகிறார்.'
ஆனால் அதுலத் முதலியின் பாதுகாப்பு இலாகா பறிக்கப்படவும் இல்லை, இந்தியாவும் அந்த சம்பவத்தைப் பெரிது படுத்தவில்லை.
ராணுவ அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டு அதனால் மரணமடைந்திருந்தால்! இந்த விஷயத்தில் இந்திய அரசின் மௌனமும், ஜெயவர்த்தனா அரசின் கண்டும் காணாமலும் இருந்த போக்கும் விடையில்லாத புதிர்களாக இன்றுவரை தொடர்கின்றன...

நன்றி தினமணி

Sunday, September 06, 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 91: பிரபாகரனின் தளபதிகள்


படம்: கிட்டு - மாத்தையா - கே.பி. கரிகாலன் - பொட்டு அம்மான் - சுப.தமிழ்ச்செல்வன் - காசி ஆனந்தன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீச்சும் பிரபாகரனின் சாதனைகளும் ஒப்பிட முடியாதவை. இயக்கமும், பிரபாகரனும் வெற்றியடைய பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். போராளிகளாக பல்லாயிரம் இளைஞர்கள் சேர்ந்து, பயிற்சி பெற்று பல்வேறு பகுதிகளில் செயலாற்றியும் வந்திருக்கிறார்கள்.


தமிழீழம் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிக்கென தளபதிகளும் நியமிக்கப்பட்டார்கள்.


இந்தத் தளபதிகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள் மாத்தையா, கிட்டு, விக்டர், புலேந்திரன், குமரப்பா ஆகியோராவர். இவர்கள் அனைவரும் பிரபாகரனின் பால்ய கால நண்பர்கள் ஆவர்.


இயக்கத்தில் பெரும்பாலும் வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களே முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவதாக ஒரு பிரசாரம் எழுந்தது.


இதுகுறித்து யாழ்த் தளபதியாக இருந்த கிட்டு ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:


வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூறியதோடல்லாமல், அதற்கு மேலும் சென்று ஒரு குறிப்பிட்ட சாதியினரே அதிகம் உள்ளனர் என்றும் பிரசாரம் செய்கிறார்கள். இந்தப் பிரசாரத்தின் நோக்கம் என்னவென்றால், தமிழ்ச் சமுதாயம் முழுவதும் எங்கள் இயக்கத்தில் இணைந்து விடக் கூடாது என்பதுதான்.


உண்மையான செய்தி என்னவென்றால், பிரபாகரன் இந்த இயக்கத்தை முதலில் ஆரம்பித்தபோது, அவரோடு இணைந்தவர்கள் அவரது நண்பர்கள், பள்ளியில் படித்தவர்கள், உறவினர்கள் மற்றும் ஊரார்தான்.


அதுமட்டுமல்ல; இயக்கமும் வல்வெட்டித் துறையிலேயே ஆரம்பமானது. நாங்கள் வளர்ந்தோம் - பின்னர் தமிழீழத்தைச் சேர்ந்த பலர் இயக்கத்தில் இணைந்தனர். எங்கள் இயக்கத்தில் "சீனியாரிட்டிபடி' முதலில் இணைந்தவர்களுக்கு முன்னுரிமைகள் அதாவது பதவிப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இது இயல்பான ஒன்று.


முதலாவது படையணியிலுள்ளவர்கள் பயிற்சி பெற்று தளபதிகளாக இருக்கிறார்கள். ஏனைய பகுதிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களுக்கு "சீனியாரிட்டிபடி' பதவிப் பொறுப்புகள் நாளடைவில் கிடைக்கும். சாதி அடிப்படையில் இயக்கம் இயங்குவதாகச் சொல்வது சுத்தப் பொய்.


பிரபாகரனுக்கும் இயக்கத்துக்கும் உறுதுணையாக பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை மட்டும் இங்கே பார்க்கலாம்.


பேபி சுப்ரமணியம்: கிருபாகரன் என்பது இவரின் முழுப்பெயராகும். இளங்குமரன் என்றும் பிற்காலத்தில் அறியப்பட்டார். காங்கேசன் துறையைச் சேர்ந்தவர். குடும்பமே கோயில் பணியில் ஈடுபட்டிருந்தது. அம்மா, பார்வையற்ற அண்ணன், இரு சகோதரிகள் கொண்ட ஏழ்மையான குடும்பம். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியில் பங்கு பெற்று அதன் தலைவர் செல்வநாயகத்தின் கூடவே இருந்தவர். பின்னர் பிரபாகரனுடன் இணைந்தார். விடுதலைப் புலிகளின் பிரசாரப் பணியில் இருந்தார். சாதாரணமாக இவரைப் பார்க்கும்போது "போராளி' என நினைக்கவே முடியாது. அவ்வளவு சாதுவாக இருப்பார்.


கிட்டு என்கிற கிருஷ்ணகுமார்: யாழ்ப்பாணம் தளபதியாக இருந்தவர். இவரின் தாயார் ராஜலட்சுமி தமிழரசுக் கட்சியின் மாதர் பிரிவில் தலைவராக இருந்தவர். கிட்டுவுக்கு ஒரு வயது நடக்கையில், அறப்போராட்டத்தில் அம்மாவுடன் சிறை சென்றவர் (1961இல்), பின்னர் 1987-இல் யாழ் நகரை சிங்கள ராணுவப் பிடியில் இருந்து மீட்டவர். சிங்கள ராணுவத்தை யாழ் கோட்டைக்குள்ளேயே சுருண்டு கிடக்கச் செய்தவர். ஒரு சமரில் தனது காலை இழந்தார். 1993-இல் இந்தியக் கடற்படையினரிடம் சிக்கி, மரணத்தைத் தழுவினார்.


மாத்தையா என்கிற மகேந்திர ராஜா: வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர். வெளிநாடு போக இருந்தவர் பிரபாகரனால் ஈர்க்கப்பட்டார். மென்மையாகப் பேசுவார். பிரபாகரனுடன் நீண்டநேரம் உரையாடும் உரிமை பெற்றவர்களில் ஒருவர். பிரேமதாசா-விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்கிற அரசியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். வவுனியா தளபதியாக இருந்தார். கிட்டுவுக்குப் பிறகு யாழ்ப்பாணப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.


சங்கர்: பிரபாகரனின் பால்யகால நண்பர். மெய்க்காப்பாளர்களில் ஒருவர். வல்வெட்டித் துறையில் 1982-இல் சங்கர் தங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்ததும், அந்த வீட்டில் இருந்து தப்பிக்கும்போது, வயிற்றில் குண்டு பாய்ந்தது. மதுரையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பிரபாகரன் சங்கரின் கையை எடுத்து, தன் கையில் வைத்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கையிலேயே, அந்த இருபத்திரண்டு வயது இளைஞனின் உயிர் பிரிந்தது. அவர் உயிர்த் துறந்த நவம்பர் 27-ஆம் தேதி, மாவீரர் தினமாக அறிவிக்கப்பட்டது.


கேபி (எ) பத்மநாதன்: குமரன் பத்தன், கேபி, குட்டி என்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் பத்மநாதன் மயிலிட்டியைச் சேர்ந்தவர். சர்வதேச நடவடிக்கைகளுக்காக இவர் பணிக்கப்பட்டார். ஆயுதங்கள் பற்றிய விவரம் இவரது விரல் நுனியில்; கொள்முதல் பொறுப்பாளர்.


கரிகாலன்: திருகோணமலையைச் சேர்ந்தவர். பள்ளியில் இருந்து நேரே பிரபாகரனிடம் வந்தவர். பிரேமதாசாவுடன் அமைதி உடன்பாடு ஏற்பட்டபோது எதிர்த்தவர். பிரபாகரனுடன் நேரடியாக வாதிக்கும் உரிமை பெற்றவர்.


அன்டன் பாலசிங்கம்: வடமராட்சியைச் சேர்ந்தவர். வீரகேசரி, பிரிட்டிஷ் தூதரகம் முதலியவற்றில் பணிபுரிந்தவர். அந்த வேலையை விட்டுவிட்டு லண்டன் சென்றார். அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். லண்டனில் மாணவர் பேரவைக் கிளையில் பங்காற்றினார். பிரபாகரன் தொடர்பு கிடைத்ததும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை வகுப்பாளராக, அரசியல் ஆலோசகராக மாறினார். ஆங்கில வெளியீடுகள் அனைத்திலும் இவரது பார்வை இருக்கும். சமரசப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர்.


பொட்டுஅம்மான் (எ) சிவசங்கரன் சிவலிங்கம்: அரியாலையைச் சேர்ந்தவர். பதினெட்டு வயதில் இருந்தே மாணவர் பேரவையில் பங்கு பற்றினார். தெற்காசியா மட்டுமல்ல வட, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், கீழைத் தேசங்களின் அரசியலும் அத்துப்படி. புலனாய்வில் புலி. இவர் கணிப்பு என்பது இயக்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கும். பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர், இவருக்கும் பிரபாகரன்தான் நம்பிக்கை.


சுப. தமிழ்ச்செல்வன்: தென்மராட்சியைச் சேர்ந்தவர். பின்தங்கிய சமூகத்தவர். பொதுவுடைமைவாதி. கிட்டுவுக்குப் பிறகு அதிகார பூர்வ யாழ் பொறுப்பாளர் ஆனார். அரசியல் பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆகி, அன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து பணியாற்றி பேச்சுவார்த்தைகளிலும் பங்கு பெற்றார். ஸ்ரீலங்கா ராணுவத் தாக்குதலில் மரணமடைந்தார்.


காசி ஆனந்தன்: மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 7 ஆண்டுகள் கண்டியிலும் கொழும்பிலும் இலங்கை அரசின் சிறைகளில் வாடியவர். தமிழீழம் என்ற சொல், தமிழ் விடுதலைப்புலிகள் என்ற இயக்கப்பெயர் யாவும் இவர் தந்தவை. பிரபாகரனின் நெருங்கிய சகா. "மாமனிதர்' என்ற பட்டம் பிரபாகரன் இவருக்கு வழங்கியது.

நன்றி தினமணி

Tuesday, April 28, 2009

பாவேந்தர் பிறந்த நாளில் அவர் பற்றி ஒரு பதிவு.................


1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.
1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.
1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.
1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.
1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.
1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.
1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.
1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.
1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.
1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.
1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.
1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.
1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.
1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.
1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.
1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.
1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..
1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.
1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.
1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.
1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.
(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)
1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)
1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.
1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.
1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".
1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.
1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.
1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.
1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.
1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.
1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.
1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.
1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.
1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.
1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.
1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.
1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.
அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.
1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.
1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.
1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.
1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.
1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.
1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.
1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.
1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.
1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.
1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. 1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.
"பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.
1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.
1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.
1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.
1970, சனவரி - இரமணி மறைவு.
1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.
1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.
1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.

நன்றி: புரட்சிப் பாவலரின் "சிரிக்கும் சிந்தனைகள்" நூலிலிருந்து


Monday, April 27, 2009

தள்ளாத வயதிலும் அய்யா.............................




Monday, April 20, 2009

காட்டிக்கொடுக்கும் கருணா...... ஒரு போராளி துரோகியான கதை

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமை, துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது.




இந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமை, விவேகம், போர்த்திறன், விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இக்காலத்தில் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களின் லெப்டினன்ட் கர்னல் கண்ணனுக்கு உதவியாளராக இருந்து முக்கியத் தாக்குதல்களில் ஈடுபட்டார்.

1985 - 1987ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிரடிப் படையும் ராணுவமும் பல தாக்குதல்களில் தோல்வியைத் தழுவியமைக்குக் கண்ணனும் கருணாவுமே மூல காரணம். கண்ணன் எக்காலத்திலும் கீழே படுத்துப் பதுங்கிப் போர் செய்பவரல்ல. சிங்களப் படைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் வீரம் படைத்தவர் - தன் படைகளுக்குப் பின்னே நின்று போர் புரியாமல் முன்னே சென்று எதிரிகளை அழிக்கும் இவர் சிங்கள ராணுவத்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அதில் கருணாவின் பங்கும் அதிகமாக இருந்தது.

இந்த நேரத்தில் கிழக்கிலங்கையில் அதிகமான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். பிரபாகரன் அங்கே தானாகவே இயங்கிப் போர்புரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தளபதியாகவும் தலைவராகவும் நியமிக்க எண்ணியபொழுது கண்ணனின் பெயரே முன் இருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தலைவராகக் கண்ணனின் பெயரை நினைத்திருந்த சமயம் 1990இல் ராணுவத்துக்கெதிரான கடும்போர் மூண்டது. அதில் சிங்கள ராணுவம் மோசமான தோல்வியைத் தழுவியமைக்குக் கருணாவின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். லெப்டினன்ட் கர்னல் கண்ணன் மட்டக்களப்பு, அம்பாறைத் தளபதியாகவே போர்க்களத்திலிருந்து திரும்புகிறார். இந்நேரத்தில் தானே தளபதியாகவும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தலைவனாகவும் ஆக வேண்டுமென்ற எண்ணம் கருணாவின் மனத்தில் எழுந்தது. தனக்கென்று விசுவாசமானவர்களைத் தேர்ந்தெடுத்தார். உள்சதியும் துரோகமும் உருவான இதற்கு உடன்பட்ட லெப்டினன்ட் ரூபன் என்பவர் கருணாவின் உறவினர் மட்டுமல்ல அவருக்கு மிக நெருக்கமானவரும்கூட.



சிங்களப் படையினரை வெற்றிகொண்டு தலைவராக இருப்பிடம் திரும்பிய லெப்டினன்ட் கர்னல் கண்ணன் ஒரு சிங்கள ராணுவத் தளபதியின் உடலில் அபூர்வமான நவீனத் துப்பாக்கியைப் பார்த்து அதை எடுப்பதற்குக் கீழே குனிந்தபொழுது தலையில் சுடப்பட்டு அங்கேயே இறந்தார். சிங்கள ராணுவம் பல கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி ஓடிவிட்ட பிறகு கண்ணனை யார் சுட்டிருப்பார்கள்? இந்தக் கேள்வி தலைவர் பிரபாகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணுவத் தாக்குதலில் தளபதி கண்ணன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பிரபாகரனுக்குக் கருணா அறிவித்தார்.



லெப்டினன்ட் கர்னல் கண்ணனின் இறப்பில் ஏதோ ‘சதி’ நடந்திருக்கிறது என்பதை அறிந்த பிரபாகரன் ரூபனைத் தன்னை வந்து உடனே பார்க்கும்படி உத்தரவிட்டார். ரூபன் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ரூபனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரக் கருணாவை நம்பியே மக்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர்.

1994 - 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. இவ்வெற்றிக்குப் பிறகு, பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவராகக் கருணா உருவானார். தன் உடன் பிறந்த தம்பிபோலவே இவரை நடத்தினார் பிரபாகரன். பிரபாகரன் தங்கியிருக்கும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கருணாவுக்குக் கிட்டியது.

2002இல் ரனில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற இருந்தது. மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதற்கு முன் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்களின் ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் பிரபாகரன் தலைமையில் இரவு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் கருணாவும் இருந்தார்.

A9 சாலையைச் சீர்செய்ய ரூபாய் 600 கோடியை உலக வங்கி மூலம் ஒதுக்கியிருந்தது ஸ்ரீலங்கா. இந்தச் சாலையைச் சீர்ப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் நான் கிளிநொச்சிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமாதான காலமான அந்நேரத்தில் யாரும் என்னோடு வர முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு, நான் தனியாகவே அங்கே சென்றடைந்தேன். போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கிளிநொச்சியை அடைந்து அன்றே யாழ்ப்பாணம்வரை செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அன்றுதான் கிளிநொச்சியில் ரகசிய இடமொன்றில் தாய்லாந்து செல்ல வேண்டிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை அங்கே தங்கச்சொல்லிவிட்டார்கள். என் ஆஸ்திரேலிய நண்பர் ஜோய் மகேஸ்வரனும் அந்தத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர். அவர் பின்னிரவு முடிந்தால் என்னைச் சந்திக்க வருவதாகச் செய்தியனுப்பினார். அதிகாலை 2:30 மணிக்கு என்னோடு அந்த கி9 சாலை பற்றிப் பேசுவதற்கு உயர் மட்டக்குழு வந்தது. அவர்கள் உலகச் சாலை அமைப்பின் புதிய முறைகளுக்கு 18 ஆண்டுகள் பின்தங்கியிருந்தார்கள். அது அவர்களின் குற்றமல்ல. 18 ஆண்டுகள் போர்ச்சூழலில் அவர்கள் இந்தச் சாலையமைப்பின் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் ஆச்சரியம். அப்பொழுதுதான் கருணாவை எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.



அந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் ‘சரியான ஆளல்ல’ என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை. மறுநாள் நான் யாழ்ப்பாணம் புறப்படும் பொழுது கருணா தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் புலிகள் தரப்பில் ராணுவப் பேச்சாளராகப் பிரபாகரனால் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அதன் பிறகு ஜெனிவா, நார்வே மற்றும் பல இடங்களுக்குக் கருணா, பிரபாகரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் பிரபாகரனின் மற்றொரு முகம்போலவே கருணா இயங்கினார்.


வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்பொழுதே இவருக்கும் சிங்களத் தரப்பு அரசாங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாகக் கருணா அவர்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்தார். கொழும்பில் ரகசியமாகத் தங்கிய இடங்களில் இவருக்கும் சிங்கள அரசுக்கும் பேரங்கள் நடைபெற்றன. விடுதலை இயக்கத்தை இரண்டாகப் பிரிப்பதே முதல் வேலையாக இவரிடம் தரப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கில் பணம் கைமாறியது. இவர் பிற்காலத்தில் லண்டனுக்குச் சென்றதற்கும் இந்தப் பணம் கைமாறியதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செய்யத் அலி ஷாகிர் மௌலானாதான் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் நடுநிலை நாயகர்.



இந்நேரத்தில் மற்றொரு தரப்பும் இந்தப் ‘பிரிக்கும்’ பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. இந்திய உளவுப் படைப்பிரிவின் ‘ரா’தான் அது. கருணா அவர்களின் பக்கம் மிக ரகசியமாக நெருங்கியதைப் பிரபாகரன் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.

ஆனையிறவு வெற்றி, கருணாவின் அர்ப்பணிப்பு, வேகம் மற்றும் பிரபாகரனிடம் அவர் காட்டிய மரியாதை இவையெல்லாம் இந்தத் திரைக்குப் பின்னே நடந்துகொண்டிருந்த துரோகத்தை அவர் கண்களுக்குப் புலப்படவிடாமல் செய்துவிட்டன. இத்தனைக்கும் கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்து, பொறாமையால், கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார். ஆனால் அடுத்தடுத்து கருணாவின் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறிவருவதை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினார். தன்னை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு கண்காணிக்கிறது என்பதை உணர்ந்த கருணா மிகவும் உஷாராகி மட்டக்களப்பு உளவுப் பிரிவைக் கைதுசெய்து தனக்கெதிரானவர்களைச் சுட்டுத்தள்ளினார்.


இந்த நேரத்தில் பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புப் பரிட்சைகள் நடந்துகொண்டிருந்தன. பிரபாகரன் இதைக் கருத்தில்கொண்டு எந்தக் குழப்பமும் பள்ளி மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகக் கருணாவின் மீதும் அவருடைய சக தோழர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பொறுமைகாத்தார். 41 நாட்களுக்குப் பிறகு பரிட்சை முடிந்ததும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபாகரன்.



கருணாவின் தம்பி ‘றெஜி’யைப் படைப் பிரிவுக்கும் நிதிப் பொறுப்பாளராகக் குகனேஷ்வரனையும் தொழிற் பொறுப்பாளராக இப்போதைய கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானையும் கருணா நியமித்தார். மாவட்டப் பொறுப்பாளராகத் தனது நம்பிக்கைக்குரிய தீபன் என்பவரை நியமித்தார்.


இதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார். கருணா தொடர்ந்து இலங்கையில் இருக்க முடியாத சூழலில் லண்டன் புறப்படும்பொழுது, கிழக்கிலங்கையில் தேர்தல் வந்தது. ராஜபக்சேயால் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பியதும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தலைதூக்கின. நிதி மோசடி செய்தார் கருணா என்று அறிக்கைவிட்டு ரகு என்பவரைப் பிள்ளையான் கட்சியின் தலைவராக்கினார். கருணா எப்படி இதை ஏற்றுக்கொள்வார்? கருணாவால் ரகு சுட்டுக்கொல்லப்பட்டார்.


காட்டிக்கொடுத்தமைக்குக் கூலியாகப் பணம் மட்டும் கிடைத்தது. பதவி இல்லாமல் கருணாவால் இருக்க முடியவில்லை. கருணாவைத் தனிமைப்படுத்தினால் ஆபத்து என்றுணர்ந்த ராஜபக்சே அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இப்பொழுது அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளார்.

கருணாவுக்கு ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். இதில் சகோதரர் ‘றெஜி’ சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். சகோதரிகள் மூவரும் கணவர்மார்களுடன் தாய்லாந்தில் அகதிகளாக உள்ளனர். கருணாவின் மனைவி விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான சூசை என்பவரின் சகோதரி. அண்மையில் கடற்புலிகளின் தாக்குதலில் ஒரு சூப்பர் பீரங்கிப் படகை இலங்கைக் கடற்படை இழந்ததும் மற்றொன்று கடும் சேதமுற்றதும் சூசையின் தலைமையில்தான்.


கடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார். இதன் பிறகே கருணாவிற்கு மட்டக்களப்புக்குத் தளபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.


பிள்ளையான் முதலமைச்சர் பதவி வகிப்பது கருணாவிற்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றுகூடப் பகிரங்க அறிக்கைவிட்டார். இருவருக்குமான இந்தப் பதவிப் போராட்டத்தைத் தணிக்கவே ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பிள்ளையான் தனது துணை ராணுவக் குழுவைக் கலைத்துவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதுபோலவே தனது 2000 பேர் கொண்ட படையையும் சிங்கள ராணுவத்தோடு இணைத்துவிட்டார் கருணா.



பிரபாகரனின் விடுதலைப் புலிகள் படைக்கும் கருணாவின் விசுவாசப் படைக்கும் நடந்த சண்டைகள் ‘தாயாதி’ச் சண்டைகள். ஆனால் சிங்களப் படையில் இணைந்து கருணாவின் படையில் உள்ளவர்கள் புலிகளுக்கு எதிராக எப்படித் துப்பாக்கி தூக்குவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள மிகப் பெரிய கேள்வி.



கருணாவின் துரோகத் தாவலுக்கு இந்திய ‘ரா’ உளவுப் பிரிவுடன் கூட்டாக வழியமைத்த செய்யது அலி ஷாகிர் மௌலானா இப்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே ஒளிந்து வாழ்கிறார். கருணாவும் பிள்ளையானும் எதிர் எதிர் நிலையில் செயல்படுகிறார்கள். இவர்கள் எங்கே போய் ஒளியப் போகிறார்கள்? கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா? தமிழர்களுக்குச் சிங்கள அரசால் ஏற்பட்ட இன்னல்களைவிடக் கருணா, பிள்ளையான் மூலம் ஏற்பட்டவையே அதிகம். காட்டிக்கொடுப்பதும், கைக்கூலி வாங்குவதும் அதற்குத் தமிழனே காரணமாக இருப்பதும்தான் மிகப் பெரிய துயரம்.

மறைந்த மலேசியக் கவிஞர் கா. பெருமாள் எழுதிய கவிதைதான் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.



தமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத்
தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறாம்.



நன்றி -- காலச்சுவடு .


Friday, April 17, 2009

புத்தகங்களை நேசிப்போம்

ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’’ஹென்றி வார்ட் பீச்சர் (Decoration of the heart)

தனிமைத் தீவில் ஒரு வருடம் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு. ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல். மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார். பெண் விடுதலைக்கான ஒற்றைவரி தீர்வாக ‘என் மவுனம் நான் வாசித்த புத்தகங்களின் சாரத்தால் ஆனது’ என்ற ஹெலன் கெல்லர் தனது வாய் பேச முடியாத மவுனத்தை வர்ணித்தார். ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரி ஏழு நாள் உண்ணாநோன்பிருந்து வென்றார் 29 வருடங்களாக சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா.பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே பெரியது. ஒரு கோடியே நாற்பது லட்சம் நூல்கள்! 150 மொழிகளில் புத்தகங்களை லெனின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றாராம்! குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம். ஊரை விட்டும் இனத்தை விட்டும் முப்பதாண்டு தள்ளி வைக்கப்பட்டு வேறு பெயரில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டபோது பார்த்த வேலை நூலக உதவியாளர் வேலை! ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின். ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா. விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அப்போதைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா. துப்பாக்கிகளைவிட பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங். எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் சில முகவரிகளைக் கொடுத்தபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர். தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங். புத்தகங்களை நேசிப்போம்... வாசிப்போம். உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்.

நன்றி - கீற்று

Wednesday, April 01, 2009

சுயமரியாதை என்பதே நம் பெரும்சொத்து!

சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நேற்று (31.3.09) மாலை ஒரு "திருவிழா!" கொள்கை விழா - புத்தம் புதிய தகவல்களை வரலாற்றுக்கு வாரி வழங்கிய காப்பிய விழா!
"முரசொலி அறக்கட்டளை - 2008" ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருது, முரசொலி மாறன் சிறப்பு விருது, ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கும் விழாவும் வெகுநேர்த் தியாக நடைபெற்றது.

மாலை 4 மணிமுதலே அரங்கத்திற்குள் மக்கள் அமர்ந்த வண்ணமேயிருந்தனர்.
விழா தொடங்கப் படும்போது கூட்டம் அலைமோதியது. அரங்கத்தின் வெளியிலும் மக்கள் கூட்டம்.
கண் பார்வையற்றவர்கள் - ஆனால் அகத்தில் ஒளி நிறைந்த சோதரிகள் பங்கேற்ற இன்னிசை விழா தேன் மாரியாகப் பொழிந்து கொண்டிருந் தது. ஆட்டோ கிராப் திரைப்படப் புகழ் கோம கனின் ராகப்பிரியா குழு வினர், கலைஞர் ஆட்சி யின் சாதனைகள், கொள் கைகள் அடங்கிய பாடல் களைப் பாடி மக்கள் மன் றத்தைக் கிறங்க வைத் தனர்.

சரியாக மாலை 6 மணிக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விழா மேடைக்கு வருகை தந் தார்.
முரசொலி அறக்கட் டளையின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முரசொலி அறக்கட் டளை கடந்த காலத்தில் அளித்த விருதுகள் விவ ரங்களைத் தொகுத்துத் தந்தார்.
தந்தை செல்வாபடத் திறப்பு
ஈழத் தந்தை செல்வா அவர்களின் 112 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பதால் முதலாவதாக அவரின் உருவப் படத் தினை முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத் தார்.
1972 இல் தந்தை செல்வா அவர்கள் தந்தை பெரியார் அவர்களையும் தம்மையும் சந்தித்த விவ ரங்களைப் பசுமையாக நினைவு கூர்ந்தார் முத லமைச்சர்.
ஈழ தமிழர் தம் சோக வரலாற்றினையும் எடுத் துக்கூறி அங்கே அவதி யுறும் நம்மின மக்களுக் காக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் போர்க்குரல் கொடுத்து வருகிற பெற் றியையும் குறிப்பிட்டுக் கூறினார்.
ஒரு இயக்கம் திரா விடர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் இந்த இரட்டைக் குழல் துப் பாக்கிகள்தான் ஈழத் தமி ழர்களுக்காக அன்றும், இன்றும் விழித்துக் கொண்டிருக்கிறது - பாடு பட்டுக் கொண்டிருக் கிறது என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள் ளுங்கள் என்று பசுமரத் தாணிபோல பதிய வைத்தார் .

மக்களை திசை திருப்ப ஈழத் தமிழர்ப் பிரச்சினையைப் பயன் படுத்திக் கொள்ளும் போக்கினைச் சுட்டிக் காட்டிய மானமிகு கலை ஞர் அவர்கள் தமிழர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் எச்சரித்தார்.
வரலாறு தெரியாதவர் கள் ஈழத் தமிழர்களுக் காக நாம் போராடிய போது, பொது வாழ்வுக் களத்திலே இல்லாதவர் கள் எல்லாம் இன்று எகிறிக் குதிப்பதையும் நாசுக்காகவும் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத் துவர் இராமதாசு எல் லோரையும் எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற போக் கிலே பேசுகிறாரே - கடந்த காலத்தில் அவ ரின் நிலைப்பாடு என்ன?
பா.ம.க.வின் அதி காரப்பூர்வமான கட்சி ஏடாகவிருந்த தினப் புரட்சி (29.6.1989) என்ன எழுதியது?
தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புல னாய்வுத் துறையினர் அதி களவில் குவிக்கப்பட்டு இருப்பதால் விடுதலைப் புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாரா ளுமன்ற செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி யிருப்பதாகக் கூறப்படு கிறது என்று செய்தி வெளியிடவில்லையா?
இதைவிட காட்டிக் கொடுக்கும் எட்டப்பத் தனம் வேறு எதுவாகத் தானிருக்க முடியும்?

இந்த எடுத்துக் காட்டை முதல்வர் கலை ஞர் அவர்கள் விழாவில் கூறவில்லையென்றாலும், இன்றைக்கு இவர்கள் தான் ஈழத் தமிழர்களுக் காகப் பாடுபடுவதாகக் கூறி, மற்றவர்களை மட் டந்தட்டும் போக்கில் பேட்டிகளைக் கொடுக்கி றார்களே - அதற்காகத் தான் இந்த எடுத்துக் காட்டு.
நேற்றைய விழாவில் ஈழத் தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திர காசன் அவர்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்க ளுக்காக தி.மு.க.வும், அதன் தலைவர் கலைஞர் அவர் களும் தொடர்ந்து ஆதர வுக்கரம் கொடுத்துக் கொண்டிருப்பதையும், இந்த இக்கட்டான கால கட்டத்தில் அந்த உதவி தொடரவேண்டும் என் றும் உருக்கமுடன் கேட் டுக்கொண்டார்.

விருதுகள் பொற்கிழிகள் அளிப்பு
திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலை வர் கி. வீரமணி அவர் களின் சாதனைக் குறிப் பினை தளபதி மு.க. ஸ்டா லின் படித்தார். சிறப் பான தகவல்களை அது உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது.
முதலமைச்சர் கலை ஞர் அவர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்குப் பொன் னாடை போர்த்தி, கலை ஞர் விருதினை வழங்கி ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியையும் காசோலையாக அளித் தார்.
அதுபோலவே - பழம்பெரும் எழுத்தாள ரான சோலை அவர் களுக்கும், புகைப்பட நிபுணர் யோகா அவர் களுக்கும் விருதும், ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியும் கலைஞர் அவர்களால் அளிக்கப் பட்டன.

முரசொலி மாறன் சிறப்பு விருது திரைப்பட நடிகர் தியாகு அவர் களுக்கு முதல்வர் கலை ஞர் அவர்களால் அளிக் கப்பட்டது. ரூபாய் ஒரு லட்சத்துக்கான பொற் கிழியும் வழங்கப்பட் டது. இவர்களின் சாத னைக் குறிப்புகளையும் தளபதி மு.க. ஸ்டாலின் படித்தார்.
தமிழர்களில் ஆற்ற லாளர்களை- உயர்த் தப்படவேண்டியவர் களை - உயர்த்தும் இன மானப் பெருவிழா என்று இதனைக் கூற வேண்டும்.
தமிழர் தலைவர் ஏற்புரை
விருது அளிக்கப்பட் டவர்களின் சார்பில் திராவிடர் கழகத் தலை வர் - தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செறி வாக உரையாற்றினார்.
எடுத்த எடுப்பிலேயே, முரசொலி ஏடு என்பது கலைஞர் அவர்களின் பிள்ளைகளில் மூத்த பிள்ளை என்பதைக் குறிப் பிட்டபோது அரங்கமே எழுந்து கரவொலி எழுப் பியது.

கலைஞர் அவர் களால் கையேடாகத் தொடங்கப்பட்ட முர சொலியின் வயது 67; தந்தை பெரியார் அவர் களின் விடுதலைக்கு வயது 75 என்பதை எடுத் துக்காட்டி, முரசொலி அறக்கட்டளை தமக்கு (விடுதலை ஆசிரியருக்கு) விருது வழங்கும் நாள் - தன் வாழ்நாளில் என் றென்றைக்கும் மறக்க முடியாத நாள் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
சாதனைக் குறிப்பு களில் கூறப்பட்ட புகழ் மொழிகள் - அடக்க வுணர்ச்சி காரணமாக தாம் குனிந்து கொண்டி ருந்ததாகத் தமிழர் தலை வர் குறிப்பிட்டார் (பழைய காலத்து மணப் பெண்போல).
சாதனைக் குறிப்பு களைப் படித்த - முர சொலி அறக்கட்டளை யின் தலைவர் மு.க. ஸ்டா லின் அவர்களைப்பற்றி முக்கியமான ஒன்றை, குறிப்பிடத் தவறவில்லை திராவிடர் கழகத் தலை வர்.

மிசா கைதியாக சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டபோது நடை பெற்ற ஒரு கொடிய நிகழ்வை நினைவுபடுத் தினார்.
ஒன்பதாம் எண் பிளாக் - இரவு ஒன்பது மணி - ரத்தம் சொட்டச் சொட்ட என்மீது ஒரு உருவம் வந்து விழுந்தது. (வஞ்சம் தீர்க்கும் கொடிய மிருகங்களால் தாக்கப் பட்ட நிலையில்) அந்த உருவம் வேறு யாருமல்ல - இங்கே சாதனைக் குறிப்புகளைப் படித் தாரே - எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கப்படுபவராக விருக்கிறாரே - அந்தத் தளபதிதான் ரத்தம் சொட் டச் சொட்ட என்மீது தூக்கி எறியப்பட்டவர்தான்.
இன்றைக்கு மாண்பு மிகுவாக அவர் இருக்க லாம். இந்த மாண்புமிகு களுக்குப் பின்னால் தியாக வரலாறு இருக் கிறது என்பதைச் சுட்டிக் காட்டினார் தமிழர் தலை வர்.

இதுவரை ஏட்டில் வெளிவராத புத்தம் புதிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தி பல்லாயி ரக்கணக்கான பார்வை யாளர்கள் மத்தியிலும், ஏன் பத்திரிகையாளர் கள் மத்தியிலும் ஒரு ஆச் சரியக் குறியை ஏற்படுத் தினார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

தி.மு.க.வையும், அ.தி. மு.க.வையும் மீண்டும் ஒன்றிணைக்கும் ஏற்பாடு பற்றிய தகவல் அது.
எழுத்தாளர் சோலை இதோ இங்கே வீற்றிருக் கிறார். சரியான சாட்சியத் தோடுதான் கூறுகிறேன் என்ற பீடிகையோடு ஆரம்பித்தார்.
ஒரு நாள் எழுத்தாளர் சோலை விடுதலை அலு வலகத்துக்கு வந்தார். வந்தவர் சாதாரணமாக வரவில்லை; ஒரு முக்கிய தகவலைச் சுமந்து வந்த தூதுவராக வந்தார்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தங்களை அழைத்து வரச் சொன்னார் என்பதுதான் அந்த அரிய தகவல். அதன்படி ராமாவரம் தோட்டத்துக்கு ஆசிரி யர் வீரமணி சென்றார். தம்மோடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார்.
தி.மு.க.வோடு அ.தி. மு.க. இணையவேண்டும் என்று விரும்புகிறேன் என்ற கருத்தை வெளி யிட்டார். அந்தத் தக வலை கலைஞர் அவர் களிடத்தில் தொலைப் பேசிமூலம் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் தெரிவித்தார்.
கலைஞர் அவர்கள் அப்பொழுது வைத்த நிபந்தனைகள் கட்சியின் பெயர் - அண்ணாவால் உண்டாக்கப்பட்ட அந்த தி.மு.க. என்றேயிருக்க வேண்டும். கொடியில் அண்ணாவின் உருவம் இருப்பதால் இன்றைய அ.தி.மு.க. கொடி அப் படியே இருக்கவேண் டும். முதலமைச்சராக எம்.ஜி.ஆர். அவர்களே தொடரட்டும்.
திராவிட இயக்கப் பின்னணி அய்யா, அண்ணா ஆகியோர் களின் சிந்தனைகள், இலட்சியங்கள் என்ற பார்வையில், அதன் தன்மை கட்டிக் காக்கப்பட வேண்டும் என்ற அவசி யத்தில் நான் கட்சியின் தலைவராகயிருப்பேன்; திராவிட இயக்க சமூக நீதிக் கொள்கையின்படி வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்படவேண் டும் என்று கலைஞர் அவர்கள் கூறினார்.

அப்பொழுது ஒரு கருத்தையும் கலைஞர் அவர்கள் கூறினார்கள். இதற்கு முன்பும் இத்த கைய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன; பலர் முயன்றார்கள். கடைசி யில் அவர்கள் ஏமாற்றப் பட்டனர். நீங்கள் எந்தப் பட்டியலில் இருக்கிறீர் கள் என்று எனக்குத் தெரியாது என்று கலை ஞர் அவர்கள் கூறியதை யும் கூறினார் தமிழர் தலைவர்.

இந்தத் தகவல்களை ஒவ்வொன்றாக அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தபோது, அடுத்து என்ன சொல் லப் போகிறார்? அடுத்து என்ன சொல்லப் போகி றார்? என்ற ஆவல் ஏதோ மர்ம நாவலைப் படிப்பதுபோல பார்வை யாளர்கள் ஆர்வத்தின் பிடியிலே சிக்கிக் கொண் டனர் (இதன் தொடர்ச் சியாக நிறைவுரையில் மேலும் பல தகவல் களைக் கூறினார் கலை ஞர்).
விருது பெற்ற தமிழர் தலைவர் அவர்கள் திரு வாரூரில் கலைஞர் அவர் கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து 1945 (மே 1) இல் நடத்தப்பட்ட தென் மண்டலத் திரா விட மாணவர் மாநாட் டுக்கு தாம் அழைக்கப் பட்டதையும், புகை வண்டி நிலையத்திலி ருந்து மேள தாளங்களு டன் அழைத்துச் செல் லப்பட்டதையும் (மற்ற தலைவர்களோடு) மாநாட்டில் நாகூர் அனிபா அவர்களோடு தாமும் பாட்டுப் பாடிய தையும் போர்க்களம் நோக்கி என்ற தலைப் பில் மாநாட்டில் பேசி தையும் தமிழர் தலைவர் - குடிஅரசு இதழிலிருந்து (12.5.1945) மலரும் நினை வுகளாக எடுத்துக்காட்டி னார்.
85 அகவை நிறைந்த கலைஞர் அவர்களுக்கும் 75 அகவை நிறைந்து விட்ட மானமிகு வீர மணி அவர்களுக்கும் உள்ள உறவு வைர விழா வையும் (60 ஆண்டு) கடந்தது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
மற்றொரு முக்கிய அறிவிப்பினை ஏற்புரை யில் வெளியிட்டார்; தனக்கு அளிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்படும்.

இதழியல் துறை ஒன்று அப்பல்கலைக் கழகத்தில் தொடங்கப் பட்டு அதில் மாணவர் கள் தயாரிக்கப்படுவார் கள். இந்தத் துறையில் தமிழர்கள் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர். இந்த நிதி இந்தத் துறைக் குப் பயன்படுத்தப்படும். இந்த முயற்சிக்கான புர வலராக இதழியில் துறை யில் மூத்தவரான மான மிகு கலைஞர் அவர்களே இருப்பார்கள் என்று தமிழர் தலைவர் அறி வித்தபோது பலத்த கர வொலிமூலம் வரவேற்பு இருந்தது.
இந்தத் துறையில் ஆனந்தவிகடன்களும், இந்துவும்தான் ஆதிக் கம் செலுத்தி வருகின் றன. இந்த நிலையில் தமி ழர் தலைவர் அறிவித்தது காலத்தாற் மேற்கொள் ளப்பட்ட அரிய முயற்சி என்று தமிழின எழுத்தா ளர்கள், இதழியலாளர் களின் கருத்தாகவே இருக்கிறது.

இனமானப் பேராசிரியர் அன்பழகனார்
மாணவர் பருவந் தொட்டு வீரமணி அவர் கள் இந்த இயக்கத்தில் வீறுநடை போட்டு வரு பவர். பெரியார் கொள் கைகளைப் பரப்புவதில் உறுதியாகவும் இருக்கக் கூடியவர். அந்தக் கொள் கைகளைப் பரப்புவது தான் தனது ஒரே கடமை என்பதிலே உறுதியாக இருக்கக் கூடியவர்.
திராவிட முன்னேற் றக் கழகம் அரசியலில் இருந்து தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தாலும் அதற்கு அடிப்படை யான சமூகப் பணி ஆற் றுவதற்குத் திராவிடர் கழகத்தின் பணி அவசிய மாகிறது என்றும், சமூக அரசியல் அடிப்படைத் தளத்தை அருமையாகச் சுட்டிக்காட்டினார்.
மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர்
தம் உடல்நலம் குன்றி யிருப்பதால், சக்கர நாற் காலியில் வந்தாலும் எனக்கு மாமருந்து என் பது நீங்கள்தான்; மாலை நேரப் பொதுக்கூட்டங் கள்தான் - மக்களைச் சந்திப்பதுதான் என்று சொன்னாரே முதல்வர் கலைஞர் - அருமை, அருமை, இது அருமை யிலும் அருமையாகும்.
தமது தலைவர் தந்தை பெரியார் அவர்களிடம் கற்றுக்கொண்ட ஈரோட்டு மூலிகையின் இரகசியம் இது!

தமிழர் தலைவரைப் பற்றிக் கூறும்போது திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்று அறிஞர் அண்ணா அவர்களால் வீரமணி சிறுவனாகியிருந்தபோதே அடையாளம் காட்டப் பட்டவர் என்பதை நினைவுபடுத்தினார்.

ஈரோட்டுக் குருகுலத் தில் மாணவர் சுற்றுப் பயணத்தில் வீரமணி யோடு கலந்துகொண்ட தையெல்லாம் மகிழ்ச்சி யோடு நினைவு கூர்ந்தார்.
வீரமணி என்றால் இரட்டைக் குழல் துப் பாக்கியில் ஒரு குழல் அது. இன்னொரு குழல் தி.மு.க.; வீரமணியின் ஆரம்ப கால ஆரோக்கியமான பகுத் தறிவும் இன் றைக்கு அவர் அந்தப் பகுத்தறிவைப் பரப்புகிற எடுத்துக் கொள்கிற முயற்சிகளும், பெரியார் அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற அந்தப் பெரும் சொத்தும் - வீடு வாசல் அல்ல, இயந்திரங் கள் அல்ல, பத்திரிகைகள் அல்ல, சுயமரியாதை என் கிற அந்தப் பெரும் சொத்தை இன்றைக்குக் காப்பாற்றி வருகிற ஒரு பெருமகனாக வீரமணி விளங்குகிறார். எனவே, அவருக்கு விருது அளிப் பதில் நாங்கள் பெருமை அடைகிறோம். முர சொலி அறக்கட்டளை பெருமை அடைகிறது என்று நறுக் குத் தெறித்த சொல் மணி களால் அடிப்படைச் சித் தாந்தத்தின் சித்திரத்தை வரைந்து காட்டினார் வாழும் திராவிட இயக்க மூத்த தலைவரான கலை ஞர் அவர்கள்.
பழம்பெரும் எழுத் தாளர் சோலை, ஒளிப் பட நிபுணர் யோகா, திரைப்பட நடிகர் தியாகு ஆகியோர் குறித்தும் சிறப்பான பாராட்டுகள் விழாவில் வழங்கப்பட் டன.

ஏதோ ஒரு பாராட்டு விழா - விருது வழங்கும் விழா, பொற்கிழி அளிக் கும் விழா என்ற அளவில் இல்லாமல், ஒரு இன மான திருவிழாவாகவும் பகுத்தறிவுச் சங்கநாதம் ஒலிக்கும் அரங்கமாக வும், திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் இலட் சியச் சுடரை ஏந்தும் எழுச்சி விழாவாகவும் தமிழர்களை அடையா ளம் கண்டு தம் தோளில் தூக்கிக் காட்டி தமிழர் தம் ஆற்றலை அறிவிப் பது - பாராட்டுவது - ஊக்குவிப்பது தமிழர்தம் கடமை என்பதை தமி ழர்களுக்கு உணர்த்தும் உன்னத விழாவாக இவ் விழா அமைந்திருந்தது என்றே கூறவேண்டும்.

தமிழா இன உணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு!! என்ற இரு வரி வெளிச்சத்தைத் தமிழர்களுக்கு தந்தை பெரி யார் வழியில், விழியில் தந்தவர் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள்.
அவருக்குப் பாராட்டு என்பது இந்தக் கொள்கைகளுக்குப் பாராட்டு என்றுதானே பொருள்!
நன்றி : விடுதலை


Wednesday, March 04, 2009

பெரியார் நூல்கள் நாட்டுடைமை:யாரும் கவலைப்படத் தேவையில்லை

தந்தை பெரியார் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதித் தாருங்கள். தினமணி வெளியிடுகிறதா என்று பார்ப்போம். அதே நேரத்தில் பெரியார் கண்ட இயக்கத்தையும் தந்தை பெரியாரால் அடையாளங் காட்டப்பட்ட தலைவரைக் குறித்தும் வேண்டுமென்றே கெட்ட நோக்கத்தோடு யாரேனும் ஒருவர் கட்டுரை எழுதினால்,அதனை எடுப்பாக வெளியிட தினமணி தயாராக இருக்கிறது.
பார்ப்பனர்களைப்பற்றியும், பார்ப்பனர்களுக்குத் துணை போகக் கூடிய நபர்களைப் பற்றியும் இதன் மூலம் நன்றாகவே அடையாளம் காண முடியும்.
திரு எஸ்.வி. ராஜதுரைஎன்பார் எழுதிய கட்டுரை இந்த வகையில்தான் தினமணியில் (26.2.2009) வெளியிடப்பட்டுள்ளது.
பெரியார்: நாட்டுடைமையாக்குதலின் அரசியல் - என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. தலைப்பே குழப்பமாக உள்ளது; உள்ளடக்கத்தைக் கேட்கவும் வேண்டுமா?
பெரியாரின் பேச்சுகள் காலவரிசைப்படி வெளியிடப்பட வேண்டுமா? தலைப்பு வாரியாக வெளியிடப்பட வேண்டுமா என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
காலவரிசைப்படி என்று கூறி ஆயிரம் ஆயிரம் பக்கங்களில் பெரிய பெரிய தொகுதிகளாக அதிக விலை போட்டு வெளியிட்டால் அது கண்டிப்பாக அலமாரியில் தான் தூங்கிக் கொண்டிருக்கும்!
ஏதோ அறிவு ஜீவிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன்படக் கூடும். ஆனால் வெகு மக்களுக்குத் தந்தை பெரியார் அவர்களின் கருத்து போய்ச் சேராது.
தலைப்பு வாரியாகப் போட்டு, 300 பக்கங்களுக்கு மிகைப்படாமல் மலிவு விலையில் வெளியிடும்போதுதான் கடைகோடி பொது மக்களுக்கும் போய்ச் சேர முடியும்.
திராவிடர் கழகம், பெரியார் கொள்கைகள் மக்களுக்குப் போய் சேருவதைப்பற்றி கவலை கொண்டுள்ள இயக்கமாகும். வேறு சிலருக்கோ பெரியார் கொள்கை பொது மக்களுக்குப் போய் சேர்ந்துவிடக் கூடாது; அது அலமாரிகளில் முடக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது அல்லது போதிய புரிதல் இல்லாமல் அப்படி கூறிக் கொண்டிருக்கின்றனர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரியாரைப்பற்றி கவலைப்படுவதுபோல காட்டிக் கொள்ளும் இவர்கள், தந்தை பெரியார் காலத்தில் உயிருடன் உலவவில்லையா? அந்தக் கால கட்டத்தில் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது உதவிகரமாக இருந்தவர்கள் தானா? இப்பொழுது என்ன திடீர் பக்தி பீறிட்டுக் கிளம்புகிறது என்று தெரியவில்லை.
அதுவும் இவர் யார் என்றால், பெரியார் திடலில் உள்ள நூலகம் - ஆய்வகத்தை முழுமையாகப் பயன்படுத்தி நூல் எழுதி முடித்து, விற்பனையாக்கி அந்த நூலகத்தையே குறைகூறும், தலை சிறந்த நன்றிக்குரிய பெரும்பண்பு படைத்தவர்! இவருக்குத் தோழி யார் என்றால் ஒரு பார்ப்பன அம்மையார். இதுதான் இவர் பெரியாரின் கொள்கையை உள்வாங்கிக் கொண்ட தன்மையின் இலட்சணம்!
பெரியார் கொள்கையை அது பிறந்தகத்திடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று அந்தப் பார்ப்பன அம்மையார் எழுதுகிறார்.
பெரியார் கொள்கைக்காக அந்த அம்மையார் அரும்பாடுபட்டு உழைத்திருக்கின்றார் என்று நம்புவோமாக! நாளைக்கே பெரியாரின் கொள்கைகளை மீட்டு பட்டிதொட்டி எங்கும் பெரியார் கொள்கையைப் பரப்பிட அபாரத் திட்டங்களையும் தூக்க முடியாமல் கழுத்து வலிக்க சுமந்து கொண்டு நிற்கிறார் என்று கூட நம்புவோமாக! போராட்டங்களை முன்னெடுத்து சிறைச்சாலைக்குக்கூட சிரித்தமுகத்துடன் கிளம்ப இவர்கள் தயாராக இருப்பதாகவும் நம்புவோமாக!
எப்படிப்பட்டவர்கள் எல்லாம் பெரியார் கண்ட இயக்கத்தையும், அதன் தலைவரையும் விமர்சனம் செய்யப் புறப்பட்டு இருக்கிறார்கள் பார்த்தீர்களா?
பெரியார் எழுத்துகளை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
இவர்கள் எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள்? முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் அதன் தலைவர் வீரமணி எப்படியெல்லாம் செயல்பட்டு வருகிறார் என்பதைத் தெளிவாகச் சொன்ன பிறகும் எதற்கு இவர்களுக்கு இந்த வீண் வேலை?
2008 பிப்ரவரி 18-ஆம் நாள் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80-ஆம் ஆண்டு விழாவில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களே - திராவிடர் கழகம் பெரியார் நூல்களை - கருத்துகளை வெளியிட்டு வருவது குறித்து தெளிவாகக் கூறினாரே!
உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்ல வேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்துக்குத் தரக்கூடிய இந்த ஆற்றல் நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப் போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் - இதற்காகப் பாடம் படிக்க வேண்டும் - என்று கூறி விட்டாரே!
இவ்வளவு தெளிவாக இருக்கக்கூடிய ஒரு முதலமைச்சரிடம் இவர்கள் வேண்டுகோள் வைப்பது - அவர்களின் அறியாமையைத்தான் வெளிப்படுத்தும்.
கால வரிசை கால வரிசை என்று கிளிப்பிள்ளைபோல பாடம் படிக்கிறார்களே, கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி தீண்டாமை போன்ற தலைப்பில் வெளியிடப்படும் தொகுதிகளில் அடங்கியுள்ள கட்டுரைகள் எல்லாமே கால வரிசைப்படி தொகுக்கப்பட்டவைதான் என்பதை மறைக்கப் பார்ப்பது - ஏன்?
இன்னொன்றையும் சொல்கிறார்கள் - பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் ஆகிய அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும்; அதுவும் காலவரிசைப்படியான தொகுப்புகளாக என்பதுதானேயன்றி பெரியாரின் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்பதல்ல - என்று எழுதுகிறார் திருவாளர் ராஜதுரை. இந்த வகையைச் சார்ந்தவர்களுக்குள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடா?
பெரியாரின் நூல்களில் அவரின் எழுத்துகள்; பேச்சுகள் இல்லையா? இதுவரை 31 தொகுதிகளை வெளியிட்டுள்ளோமே எல்லாம் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு இருக்கவில்லையா?
எதையோ நினைத்துக் கொண்டு - அவலை நினைத்து உரலை இடித்த கதையாக கதைக்கிறார்களே தவிர அவற்றில் நியாயமோ, தர்க்கமோ, கொள்கை நோக்கோ, உண்மையோ அறவே கிடையாது.
பெரியார் என்ற முழுப் புரட்சியாளரின் ஒவ்வொரு எழுத்தும் மிக முக்கியமானவை, ஒரு அரைப்புள்ளிகூட முக்கியத்துவம் வாய்ந்தது.
தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்த இன எதிரிகளோ நாணயமற்றவர்கள்; எதையும் திரித்து வெளியிடும் திரிநூலர்கள்; அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க சிலர் புறப்பட்டுள்ளார்களோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
சேலத்தில் 1971-இல் தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெண்ணுரிமைபற்றிய புரட்சிகரமான தீர்மானத்தை இந்து தினமணி துக்ளக் உட்பட எப்படியெல்லாம் திரித்து ளியிட்டன!
தந்தை பெரியார் உயிரோடு இருக்கும்போதே இந்த வேலையைச் செய்தவர்கள், பெரியாரின் எழுத்துகளை, பேச்சுகளை யாரும் வெளியிடலாம் என்று திறந்து விட்டால் சகட்டுமேனிக்குத் திரிபு வேலையைச் செய்திட உரிமம் அளித்ததுபோல ஆகிவிடாதா? அப்படி திரித்து வெளியிட்டால் மறுத்து எழுதுவதுதானே நமது வேலை என்று தங்கள் விவாதத்துக்கு முட்டுக்கால் கொடுக்கிறார்கள் - எந்தெந்த இடங்களில் எல்லாம் இவை நடக்கின்றன என்று, அறிவது சாத்தியப்படக் கூடியதுதானா? பட்டுப்புடவையை இரவல் கொடுத்து சீமாட்டி செல்லும் இடமெல்லாம் பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதை என்று தந்தை பெரியார் சொன்னதுதான் இங்கு நினைவிற்கு வருகிறது.
இந்து போன்ற ஏடுகள் தந்தை பெரியாரின் தீர்மானத்தை திரித்து வெளியிட்ட போது இவர்கள் எல்லாம் உயிரோடு இல்லையா? அல்லது பிறக்கவேயில்லையா? எந்தவகையில் தந்தை பெரியாருக்குத் துணையாக நின்றவர்கள் இவர்கள்? தமிழர் தலைவர்தான் நீதிமன்றம் வரை சென்று இந்துவை மன்னிப்பு வாங்கச் செய்தார் என்ற வரலாறெல்லாம் தெரியுமா?
ஏதோ இந்து ஏடு கண்ணுக்குத் தெரிந்து எழுதியது - எதிர்த்தோம் முடிந்தது; மூலைமுடுக்கில் நடக்கும் எத்துவேலைகள் எல்லாம் நம் கவனத்துக்கு வருமா?
பாரதியார் அப்படி ஒன்றும் புரட்சிவாதியல்ல; அப்படியிருந்தும் பாரதியார் நூல்களை வெளியிடுபவர்கள் பாரதியார் கருத்துகளைத் திரித்து வெளியிட்டுள்ளதாக, பாரதியாரின் பெயர்த்தி விஜயபாரதி என்பவர் குமுறியுள்ளாரே! தஞ்சைப் பல்கலைக் கழகம் 1970-இல் பதிப்பித்து வெளியிட்டுள்ள பாரதி பாடல்கள் - ஆய்வுப் பதிப்பு எனும் நூலில் பாரதி எழுதாத படைப்புகள் அவர் எழுதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல்களைக் கூறியுள்ளாரே! (Sunday Express) - 18.1.2009)
இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள் ராஜதுரைகள்? நம் கண் முன்னே காணும் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பெரியார் பொன் மொழிகள் என்ற ஒரு நூலை திருச்சியில் தனியார் பதிப்பகத்தார் வெளியிட்டனர். அந்த நூலில் இடம் பெற்ற கருத்துகளுக்காக தந்தை பெரியார் தண்டனை விதிக்கப்பட்டாரே! சிறை சென்றாரே! அந்த நூலில் இடம் பெற்ற கருத்துகள் தமது ஒப்புதலைப் பெற்றவையில்லை - சரியானவை என்றும் கூற முடியாது - அவர்களாகவே வெளியிட்டது என்று தந்தை பெரியார் கூறிடவில்லையா?
பகுத்தறிவுவாதியான புத்தர் கருத்துகளையே பாட பேதம் செய்துள்ளனரே - இந்த வரலாற்றுப் பாடத்தைத் தெரிந்து கொண்டவர்கள் மாபெரும் புரட்சியாளரான தந்தை பெரியார் கருத்துகளை வெளியிடும்போது போதிய பாதுகாப்பும், விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் பெற்றிருக்க வேண்டாமா?
தந்தை பெரியார் நூல்களை விற்பதால் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தா பேசுகிறோம்? இன்னும் சொல்லப் போனால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள் போல மலிவான விலையில் நூல்களை வெளியிடுவோர் யார்? வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிவிடலாமா? எழுதிவிடலாமா?
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம். அந்த நிறுவனத்திலிருந்து பெரியார் இட்ட கட்டளைப்படி நூல்கள் முறையாக வெளியிடப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் கொண்டு செல்ல செறிவான ஏற்பாடுகளும் இருந்து வருகின்றன.
பல தலைவர்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியிருக்கலாம். தந்தை பெரியார் அவர்களுக்கு அந்த நிலை ஏற்படவில்லை - காரணம் தொலைநோக்கோடு தந்தை பெரியார் ஏற்பாடுகளைச் செவ்வனே செய்து வைத்துள்ளார். அதற்கேற்றவர்களையும் தயாரித்துஅறிமுகப்படுத்தியும் இருந்தார். அதன்படி செயல்பாடுகளும் நடந்து வருகின்றன.
எனவே, இந்த வகையில் யாருடைய அறிவுரையும் எங்களுக்குத் தேவைப்படவில்லை.
இடைஇடையே இது போல் வந்து போகும் குறும்புகளையும், குறுக்குச் சால்களையும் கடந்துதான் இந்த இயக்கமும், இயக்கத் தலைமையும் இலட்சியப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன.
எதை எந்த நேரத்தில் எப்படிசெய்ய வேண்டும் என்ற எண்ணமும், திட்டமும் இயக்கத்திடம் நிரம்பவே இருக்கின்றன. எங்கள் பயணம் தொடரும். பெரியார் கருத்து நாட்டு மக்களுக்கு உரியதுதான். அந்தக் கருத்துகளை நாட்டு மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதுபற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.
எத்தனையோ விளக்கங்களை எடுத்துக் கூறியிருந்தும் வீம்புக்காக இந்தப் பிரச்சனையை சிலர் கூறிக் கொண்டிருப்பதும், அதற்குப் பார்ப்பன ஊடகங்கள் மூக்கைச் சொரிந்து விடுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை.

----------------------------------- நன்றி - விடுதலை

Wednesday, February 04, 2009

முதல்வருக்கு சந்திரகாசன் கடிதம் - தங்கள் உடல்நலனும் ஆட்சியும் முக்கியம்!

முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உடல்நல னும் மிக முக்கியம் என்று ஈழ அகதிகள் மற்றும் மறுவாழ்வுக் கான அமைப்பின் பொறுப்பாளரான சா.செ. சந்திரகாசன் (ஈழத் தந்தை செல்வா அவர்களின் மகன்) அவர்கள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதம் வருமாறு:-

வணக்கம். தாங்கள் முதுகுவலி காரணமாக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருப்பது அறிந்து துடித்துப் போனோம். இம்மடல் தங்கள் கைக்குக் கிடைப்பதற்கு உள்ளாகவே தாங்கள் முழு நலம் பெற்று திரும்பிவிட்டீர்கள் என்ற நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புகின்றோம். தங்கள் உடல்நலத்தையும், உள நலத்தையும் கெடுக்கக்கூடிய எத்தனையோ நிகழ்வுகள். எனினும், தங்கள் நலத்தில்தான் தமிழ்கூறும் நல்லுலகத்தின் நலனே தங்கியுள்ளது என்பதால், உங்கள் உடல் - உள நலம் உங் களுக்கு மட்டுமல்ல, தமிழின நலத்திற்கும் இன்றியமையாதது. ஆகவே, அருள்கூர்ந்து முதற்கண் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.


தங்களின் ஆட்சி முக்கியம்
ஈழத்தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும், தாங்கள் ஆட்சியிலிருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளி யிட முடிகின்றது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தி, தங்கள் ஆதங்கத்தை உலகிற்குத் தெரிவிக்க முடிகிறது. இந்தியாவும், உலகமும் மெல்லவேனும் இலங்கைத் தமிழர் உயிர்க் காப்பிலும், உரிமைக் காப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றன.

எனவே, தங்கள் உடல் நலத்தைப் போலவே தமிழகத்தில் தங் களுடைய ஆட்சியும் - நலமும் பலமும் பெற்றுத் தொடர்வது இன்றியமையாததாகும். தடாகத்தில் நீர் இருந்தால்தான் தாமரை மலரும். மீன் வளம் பெருகும். பறவைகள் நாடிவரும். சூழவுள்ள நிலங்களில் செழிப்புத் திகழும். அதுபோல் தமிழாய்ந்த தமிழராகிய, மொழி உணர்வும், இன உணர்வும், மாந்த நேயமும் கொண்டவராகிய தங்கள் ஆட்சி தொடர்வது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்களுக்கும், எங்குமுள்ள தமிழர்களுக்கும் இன்றியமையாததாகும்.

ஈழத்தமிழர் உரிமைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கு எதிரான போரை நிறுத்தத் தாங்கள் பதவி துறக்க வேண்டு மென்ற கோரிக்கை அறியாமையில் இருந்து எழுவதாகும். ஈழத் தமிழர்களே அதை விரும்பவில்லை. ஈட்டி இழந்த நிலையில் கேடயத்தையும் தூக்கியெறிய வேண்டுமென்று கேட்பது போன்றதாகும் அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதை எவர் மறுத்தாலும் அதனை ஏற்க முடியாது.


பாராட்டுதலுக்குரிய கலைஞரின் அணுகுமுறை
இந்திய நடுவண் அரசை எங்களுக்காக - ஈழத் தமிழர்களுக் காக இயங்கச் செய்வதில் உங்கள் பங்கு முக்கியமானது. தமிழக அரசில் தாங்கள் தொடர்ந்தால் அதனை சிறப்பாகச் சாதிக்க முடியும் என்பதைத் தமிழீழ மக்களும், தமிழக மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். மிக ஆழமான சிந்தனையுடன் கூடிய மிகப்பக்குவமான உங்கள் அணுகுமுறையைப் பாராட்டுகிறோம்.

தற்போதைய குழப்பங்களும், கொந்தளிப்புகளும் முடிவுக்கு வந்து, இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு கண்ட பின், நாட் டைக் கட்டியெழுப்புவது என்பது பெரும் பணியாகும். இவ் வளவு பெரிய தமிழ்நாட்டை, இன்னும் சொன்னால் இந்தி யாவையே எத்தனையோ பிரச்சினைகளுக்கு நடுவில் புதிய புதிய திட்டங்கள்மூலம் வானளாவ உயர்த்தியிருக்கும் தங்களின் வழிகாட்டுதலும், உதவிகளும் எங்களுக்கு இன்றியமையாதவை யாகும். அவற்றை வழங்கி ஊக்குவிக்கவேண்டும் என்று நாங்கள் இப்போதே விண்ணப்பித்துக் கொள்கிறோம்.

ஆதலால், சவாலை, அழுத்தங்களைக் கண்டு கவலை கொள்ளாமல், தமிழின நலன்களையும், தங்கள் நலன்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தங்களை நேரில் வந்து காண ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி ஒப்புதல் தரவேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

------------------------------------------------------------

மேலே உள்ள கடிதத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்வது உண்மையில் யாருடைய ஆதரவு இருந்தால் தமிழ் ஈழம் பெறலாம் என்பது. ஆனால் இங்குள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உண்மையில் தன்னை ஈழ போராட்த்திர்க்காக குரல் கொடுப்பவர்கள் என்று சொல்லி கொள்பவர்களின் ஒரே குறிக்கோள் கலைஞர் ஆட்சியை கவிழ்த்து ஒரு நாசமா போன ஈழத்திற்கு எதிராக போராடக்கூடிய ஒரு ஆட்சியை கொண்டு வரத்தான் படுபட்டுகொண்டிருக்கிரர்கள், இந்த உண்மை குரல் ஈழ விரும்பிகள்.

இந்த ஈழ மக்களுக்க (இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்) குரல் கொடுக்கும் ஒரு அரசியல் கட்சியாவது , முதல்வரிடம் போயி நீங்கள் காங்கிரசிடம் இருந்து பிரிந்து அதரவை வாபஸ் வாங்குங்கள், நாங்கள் இருக்கிறோம் உங்கள் மாநில ஆட்சியை பாதுகாக்க என்று கூறி இருப்பர்கலேயனால், நாம் நினைக்கலாம் இவரால் உண்மையிலேயே ஈழ மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறார்கள் என்று . இவர்கள் முதல்வர் சொன்னதுபோல் அண்ணன் எப்போ சாவன் திண்ணை எப்போ காலியாகும் என்று இருப்பவர்கள் தானே

இவர்கள் நினைப்பது போல் அவர் வாபஸ் பெற்றால் எல்லாம் நடந்து விடுமா? 1991 நடந்தது என்ன? தமிழில விடுதலைப்புலிகளின் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டதாக கூறி தி.மு.க ஆட்சியை கலைத்தார்கள், அதன் பிறகு நடந்ததது என்ன அம்மாவின் ஆட்சியில். எனவே தமிழ் ஈழத்திற்கும், ஈழ போராளிகளுக்குமாக தனது ஆட்சியை கலைஞர் இழந்து அந்த அனுபவம் எல்லாம் பெற்றுவிட்டார். எனவே இப்போ பொழுது ஆட்சியை இழந்தால் ஈழ போராளிகளுக்கும் , ஈழ மக்களுக்கும் இன்னும் கொடுமை மிக அதிகரிக்குமே தவிர ஒன்றும் குறைந்து விடாது .

காங்கிரசில் இருந்து தி.மு.க வெளியில் வந்தால் நிச்சயமாக அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமையும். இந்த கூட்டணியை ரொம்பவே தமிழ் ஈழத்திற்க்கும் அதன் போராளிகளுக்கும் ஆதரவானது. அப்புறம் உள்ளதும் போச்சடா நொள்ள கண்ணா என்று எல்லா தமிழ் மக்களும் வாயில் விரலை வைத்துக்கொண்டு தங்களுடைய கொஞ்ச நஞ்ச உணர்வுகளை கூட வெளி படுத்தும் வாய்ப்பு இல்லாமல் போக வேண்டிய நிலைமை தான் ஏற்படும்.அப்புறம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் எல்லாம் மேடையில் நின்று கை உயர்த்த முடியாது. மாறாக சிறையில் நின்றுதான் கை உயர்த்த முடியும்.

தமிழீழ தேசிய தலைவர் கூறுவது போல நம்முடைய தாகம்... தமிழில தாயகம்!

எனவே தமிழக முதல்வரின் உணர்வுகளை புரிந்து கொண்டு நாமும் சில விடயங்களில் அவருடன் ஒத்துழைக்கவே வேண்டும் இது போன்ற இக்கட்டான நிலைகளில்.



Thursday, January 08, 2009

தமிழர் திருநாள் - பகுத்தறிவு பொங்கல் பொங்குக!....

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பார்பனர்கள் தான் சங்கராந்தி என்று கூறி தங்களது ஆரியக் கலாச்சாரத்தையொட்டி - வடமொழியில் பெயரிட்டு சங்கராந்திதான் கொண்டாடு வார்களே தவிர - ஒருபோதும் பொங்கல் என்று வாய் தவறியும் சொல்லிவிடமாட்டார்கள்!
அதனிலும் மதச்சேற்றைப் போட்டுக் குழப்பி சங்கராந்தி என்றும் பெயரிட்டு தங்கள் முத்திரையைக் குத்தி வைத்து இருக்கின்றனர். அந்த மதநாற்றத்தை இதோ கேளுங்கள்

சூரியன் தனுர்; ராசியில் சஞ்சரிக்குங் காலம் இது தேவர்களுக்கு விடியற் காலம். மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தட்சீணாயனம் ஆறு மாத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத் தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவமாய் அதஞ்செய்திருந்த படியால் அப்பசுக்களைக் கொண்டு அப்புலியுருக்கொண்ட சக்தியை ஓட்டின நாள். இதனை மாட்டுப்பொங்கல் சொல்லுவார்களாம்.

இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தைமாதம் முதலில் அறுத்த, முதற்பயிரை மழைக்கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின் அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற , கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தலை அவிழ்த்துவிட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண்பொங்கல் எனவும் சொல்லுவார்களாம்.

இப்படி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டு வருணபகவான், சூரியன் என்று கூறி நம் தமிழர் திருநாளை மதத்தோடு தொடர்பு படுத்தி வைத்து இங்கு நம் தமிழர்களை முட்டாளாக்கி வைத்து அவர்கள் குளிரக்காயகிரர்கள். இது தெரியாமல் நம் மக்களே சிலர் கூமுட்டைகலாகி, அவர்களின் மூட விலங்கினில் இருந்து வெளிய வரமுடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த அடிமட்ட கூமுட்டை மக்களுக்கு எவளவு கூறினாலும் நீ பெரியார் இயக்கத்தை சேர்ந்தவன் தானே அதனால் தான் இப்படி சொல்லுகிறாய் நாங்கள் நம்ப தயாராக இல்லை என்று சொல்லுவதோடு மட்டும்மல்லாமல், நாத்திகம் பேசும் நீ ஏன் இந்த விழாவை கொண்டாடுகிறாய் என்கிற ஒரு வக்கிர புத்தி யோசனையில் ஒரு கேள்வி வேறு நம்மிடம் கேட்கிறார்கள் இந்த அதிபுத்திசாலி மூட அடிமைகள்.

படிக்கதவர்கள்தான் இதனை நம்புகிறார்கள் என்றால், படித்த நம் அறிவுசிவிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இந்த கல்வியறிவு இல்லாதவர்கள் கூட நம் கருத்தை சற்று யோசித்து ஏதோ சரி போல தெரிகிறதே என்று ஏற்க தயாராகிறார்கள். அனால் இந்த படித்த அறிவுசிவிகள் நாம் சொல்லுவதையும் ஏற்க மறுத்து வேதண்டவதம் செய்வார்கள். சரி அதற்க்கு ஆதாரமான நூலை தருகிறேன் உன்றி படித்து உண்மையாவது தெரிந்துகொள் என்று அவர் வழிக்கு விட்டாலும், எ அப்பா இந்த வெட்டி வேலை (ஒருமணி நேரத்துக்கு மேல் போனில் கடலை போடுவது, செக்ஸ் புக் படிப்பது, இன்னும் எவலோவோ...... இதெல்லாம் பயனுள்ளது அனால் நல்ல நூல்களை படித்து பகுத்தறிவை வளர்ப்பது இவர்கள் பாசையில் வெட்டி வேலை.) எல்லாம் எங்களுக்கு எதுக்கு.

பெரியார் இயக்கத்தை சேர்ந்த யார் எழுதும் நூலும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று புலம்பல் வேறு. என்னமோ பெரியாரும் அவர் வழிவந்தவர்களும் புத்தகம் எழுதி பிழைப்பு நடத்த வந்தவர்கள் போல. இந்த அடிமட்ட கூமுட்டைகளை பார்பனர்களின் மூட சூழ்ச்சி நூல்களில் (உதாரணம்: பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம் ...........நீளும்) இருந்து மீட்டு எடுத்து, சூத்திர பட்டதை ஒழித்து, அறிவும், நாணமும் கொண்ட சுயமரியாதை உள்ளவர்களாக்க தானே பெரியாரும் அவர் தொண்டர்களும் பாடுபட்டார்களே தவிர வேற என்ன வெங்காயம். சும்மோ ஏதோ கேள்வி கேட்க வேண்டும் வாதம் செய்ய வேண்டும் இல்லாமல் இதோ தமிழர் திருநாளான பகுத்தறிவு பொங்கல் என்ன என தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!.....

(அறிஞர் அண்ணாவின் பொங்கல் மலர் கட்டுரையில் இருந்து ......)

பொங்கல் புதுநாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.

ஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விடடதற்காகக் கொண்டாடும் நாளன்று! ஆரியர் பண்டிகை, வெறியாட்டம்! அவைகள் சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள். பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.
பாடுபட்டால் பலன் உண்டு! உழைத்தால் வாழ்வுண்டு! என்ற மூலக் கொள்கைக்கு ஏற்றநாள் அது.

காட்டைத் திருத்தி, நிலமாக், மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.

உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனதில் இருத்த வேண்டி, பாற்கொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல்! எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.அந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை நினைவிலிருத்துவர் என நம்புகிறோம்.திருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்கத் தன்னாட்சி முளைக்கவில்லை.

வரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, மார்க்கம் ஆகியவைகள் ஆரியத்தால் சிதைக்கப்படாதிருக்கவேண்டித் தன்மானம் எனும வரம்பு கட்டத் தவறியதால், இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.

உழுது நீர்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும கோரமான களை இருக்கிறது. பார்ப்பனீயம் எனம் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்தருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும் கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவைகள் போக்கப்படா முன்னம், பயிர் ஏது? இவகைளைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.

எனவே பொங்கல் பண்டிகை என்பது அறிஞர் அண்ணா கூறியது போல பழயன கழிதலும் புதுவென புகுதலும் ஆகும். எனவே ஒவ்வொரு பொங்கலுக்கும் புதிய சிந்தனை பொங்கி பழைய சிந்தனைகளை வேறுடன் அறுத்து ஆண்டுதோறும் பகுத்தறிவு பொங்கலாக கொண்டாடுவோமாக!.....

புத்துயிர் பெறட்டும் பகுத்தறிவு பொங்கல் !
புதுமை பொங்கட்டும் !

(தமிழக முதல்வரின் முயற்சியால் இவ்வாண்டு பொங்கல் தமிழ் புத்தாண்டோடு சேர்ந்துவருவது தேனினும் இனிமையான புதுமை பொங்கல்)

Tuesday, January 06, 2009

உத்தரவாதம் கொடுப்பார்களா ராஜபக்சேயின் பக்தர்கள்?....

இலங்கை தலைநகரான கொழும்புவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என மகிந்தா ராஜபக்சேயைக் குடியரசுத் தலைவராகக் கொண்ட சிங்கள வெறி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், இது மூன்றாவது முறையாகத் தமிழர்களை இழிவுபடுத்தவும், அச்சத்திற்கு உள்ளாக்கவும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஆகும் (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4).

காலை 6 மணிமுதல் குளிரையும் பொருட்படுத்தாது, பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்துத் தமிழர்களும், கொழும்பு காவல் நிலையங்களுக்குமுன் காணப்பட்டனர்; மாலை நெடு நேரங்கழித்தும் பதிவு வேலை நடந்தது.

கிளிநொச்சியைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிவிட்டதாக, சிங்களவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்துவரும் சூழல்; அந்நிலை யில் இதுநாள்வரை ஈழத்தை ஆதரிக்காத தமிழரும்கூட, பதிவு செய்யும் அவமானத்துடன் வாழ்வதைவிட, எப்படியும் ஈழத்தை அடைந்துவிட்டால் மானத்தோடு வாழலாமே என எண்ணத் தொடங்கிவிட்டனர் எனச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறீலங்கா எல்லாச் சமூகத்தினருக்கும் உரியது எனில் தமிழ ருக்கெதிராகத் தொல்லை தரவும், அவமானம் உண்டாகவும் வகை யிலான நடவடிக்கைகள் ஏன்? எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர், கொழும்புவாழ் தமிழர்கள்.
மேற்கண்ட செய்தியை டெக்கான் கிரானிக்கல் ஆங்கில ஏடு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது (5.1.2009).

ராஜபக்சேயின் சிங்களவெறி ஆட்சிக்காக பாதப்பூஜை செய்யும் இந்நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் இந்த நிலைக்கு என்ன நியாயத்தைக் கற்பிக்கப் போகிறார்கள்?

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே தமிழர்கள். அப்படியிருக்கும்பொழுது காவல் நிலையத்துக்குச் சென்று ஏன் அவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் - தங்களைப்பற்றிய தகவலைத் தெரிவிக்கவேண்டும்?

அப்படியென்றால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அனை வரும் கிரிமினல்களா? குற்றவாளிகள் குறிப்பிட்ட இடத்தில் தங்கிக் கொண்டு நாள்தோறும் காவல் நிலையத்துக்குச் சென்று கையொப்ப மிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிப்பதுண்டு - அதே நிலைதான் கொழும்பில் வாழும் தமிழர்களுக்குமா?

சில ஆண்டுகளுக்குமுன் கொழும்பில் வந்து உற்றார், உறவினர்கள், தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்ற உத்தரவு போட்டது மட்டுமின்றி பலாத்காரமாக வெளியேற்றிய வெறியர்தான் இந்த ராஜ பக்சே. கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிய நிலையில், உச்சநீதி மன்றம் எச்சரித்த நிலையில், ஆச்சரியமாக இந்தியாவும் குரல் கொடுத்தவுடன், அந்த நிலை பின்வாங்கப்பட்டது.

விடுதலைப்புலிகளிடம் இருந்த ஒரு பகுதி தங்கள் வசம் வந்துவிட்டது என்ற இறுமாப்பின் அடுத்தகட்டமாக குடிமக்களான தமிழர்களின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது போலும்! விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாகக் கூறி தமிழர்களான குடிமக்களைக் கொன்று குவித்தும் இன்னும் வெறியடங்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

இராணுவத்தின்மூலம் தீர்வு ஏற்படாது என்ற இந்திய நிலையில் மாற்றம் இல்லை என்றும், அரசியல் தீர்வுதான் சரியானது என்றும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கரமேனன் நேற்றுகூட கிளிப்பிள்ளைபோல சொல்லியிருக்கிறார்.

அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு அரசே முதலமைச்சர் தலைமை யில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, போரை நிறுத்த வழி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டும் இலங்கையில் நடந்தது என்ன? போரைத் தடுக்க இந்திய அரசு மேற் கொண்ட நாணயமான செயல்முறை என்ன? வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்புவதாகக் கூறிய பிரதமரின் வாக்குறுதி என்னாயிற்று?

அதற்குப் பின்னாலே வெளியுறவுச் செயலாளர் இவ்வாறு கூறுவதைக் கண்டு சம்பந்தப்பட்ட மக்கள் நகைக்க மாட்டார்களா? இந்தியாவின் நம்பகத்தன்மையே கூட இப்பொழுது கேள்விக் குறியாகி விட்டதே!
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், ஈழத்தமிழர்ப் பிரச்சினை யில் இந்திய அரசு நடந்துகொண்ட தன்மையில் கடும் வெறுப்பும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை இந்திய அரசு உணருமா?
போராளிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக விவாதத்துக்காக ஒப்புக்கொள்வதாகவே வைத்துக்கொள்வோம் - அடுத்து ராஜபக்சே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையான உரிமைகளைக் கொடுக்கப் போகிறார்கள்? ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தமான வடக்கு கிழக்கு மாகாண இணைப்புகளை உறுதிப்படுத்துவாரா?

ராஜபக்சேவுக்குக் காலைக் கழுவிவிடும் பக்தர்கள் அதற்கு உத்தரவாதம் கொடுப்பார்களா?

நன்றி: விடுதலை



Tamil 10 top sites [www.tamil10 .com ]