வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, February 04, 2009

முதல்வருக்கு சந்திரகாசன் கடிதம் - தங்கள் உடல்நலனும் ஆட்சியும் முக்கியம்!

முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உடல்நல னும் மிக முக்கியம் என்று ஈழ அகதிகள் மற்றும் மறுவாழ்வுக் கான அமைப்பின் பொறுப்பாளரான சா.செ. சந்திரகாசன் (ஈழத் தந்தை செல்வா அவர்களின் மகன்) அவர்கள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதம் வருமாறு:-

வணக்கம். தாங்கள் முதுகுவலி காரணமாக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருப்பது அறிந்து துடித்துப் போனோம். இம்மடல் தங்கள் கைக்குக் கிடைப்பதற்கு உள்ளாகவே தாங்கள் முழு நலம் பெற்று திரும்பிவிட்டீர்கள் என்ற நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புகின்றோம். தங்கள் உடல்நலத்தையும், உள நலத்தையும் கெடுக்கக்கூடிய எத்தனையோ நிகழ்வுகள். எனினும், தங்கள் நலத்தில்தான் தமிழ்கூறும் நல்லுலகத்தின் நலனே தங்கியுள்ளது என்பதால், உங்கள் உடல் - உள நலம் உங் களுக்கு மட்டுமல்ல, தமிழின நலத்திற்கும் இன்றியமையாதது. ஆகவே, அருள்கூர்ந்து முதற்கண் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.


தங்களின் ஆட்சி முக்கியம்
ஈழத்தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும், தாங்கள் ஆட்சியிலிருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளி யிட முடிகின்றது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தி, தங்கள் ஆதங்கத்தை உலகிற்குத் தெரிவிக்க முடிகிறது. இந்தியாவும், உலகமும் மெல்லவேனும் இலங்கைத் தமிழர் உயிர்க் காப்பிலும், உரிமைக் காப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றன.

எனவே, தங்கள் உடல் நலத்தைப் போலவே தமிழகத்தில் தங் களுடைய ஆட்சியும் - நலமும் பலமும் பெற்றுத் தொடர்வது இன்றியமையாததாகும். தடாகத்தில் நீர் இருந்தால்தான் தாமரை மலரும். மீன் வளம் பெருகும். பறவைகள் நாடிவரும். சூழவுள்ள நிலங்களில் செழிப்புத் திகழும். அதுபோல் தமிழாய்ந்த தமிழராகிய, மொழி உணர்வும், இன உணர்வும், மாந்த நேயமும் கொண்டவராகிய தங்கள் ஆட்சி தொடர்வது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்களுக்கும், எங்குமுள்ள தமிழர்களுக்கும் இன்றியமையாததாகும்.

ஈழத்தமிழர் உரிமைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கு எதிரான போரை நிறுத்தத் தாங்கள் பதவி துறக்க வேண்டு மென்ற கோரிக்கை அறியாமையில் இருந்து எழுவதாகும். ஈழத் தமிழர்களே அதை விரும்பவில்லை. ஈட்டி இழந்த நிலையில் கேடயத்தையும் தூக்கியெறிய வேண்டுமென்று கேட்பது போன்றதாகும் அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதை எவர் மறுத்தாலும் அதனை ஏற்க முடியாது.


பாராட்டுதலுக்குரிய கலைஞரின் அணுகுமுறை
இந்திய நடுவண் அரசை எங்களுக்காக - ஈழத் தமிழர்களுக் காக இயங்கச் செய்வதில் உங்கள் பங்கு முக்கியமானது. தமிழக அரசில் தாங்கள் தொடர்ந்தால் அதனை சிறப்பாகச் சாதிக்க முடியும் என்பதைத் தமிழீழ மக்களும், தமிழக மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். மிக ஆழமான சிந்தனையுடன் கூடிய மிகப்பக்குவமான உங்கள் அணுகுமுறையைப் பாராட்டுகிறோம்.

தற்போதைய குழப்பங்களும், கொந்தளிப்புகளும் முடிவுக்கு வந்து, இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு கண்ட பின், நாட் டைக் கட்டியெழுப்புவது என்பது பெரும் பணியாகும். இவ் வளவு பெரிய தமிழ்நாட்டை, இன்னும் சொன்னால் இந்தி யாவையே எத்தனையோ பிரச்சினைகளுக்கு நடுவில் புதிய புதிய திட்டங்கள்மூலம் வானளாவ உயர்த்தியிருக்கும் தங்களின் வழிகாட்டுதலும், உதவிகளும் எங்களுக்கு இன்றியமையாதவை யாகும். அவற்றை வழங்கி ஊக்குவிக்கவேண்டும் என்று நாங்கள் இப்போதே விண்ணப்பித்துக் கொள்கிறோம்.

ஆதலால், சவாலை, அழுத்தங்களைக் கண்டு கவலை கொள்ளாமல், தமிழின நலன்களையும், தங்கள் நலன்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தங்களை நேரில் வந்து காண ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி ஒப்புதல் தரவேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

------------------------------------------------------------

மேலே உள்ள கடிதத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்வது உண்மையில் யாருடைய ஆதரவு இருந்தால் தமிழ் ஈழம் பெறலாம் என்பது. ஆனால் இங்குள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உண்மையில் தன்னை ஈழ போராட்த்திர்க்காக குரல் கொடுப்பவர்கள் என்று சொல்லி கொள்பவர்களின் ஒரே குறிக்கோள் கலைஞர் ஆட்சியை கவிழ்த்து ஒரு நாசமா போன ஈழத்திற்கு எதிராக போராடக்கூடிய ஒரு ஆட்சியை கொண்டு வரத்தான் படுபட்டுகொண்டிருக்கிரர்கள், இந்த உண்மை குரல் ஈழ விரும்பிகள்.

இந்த ஈழ மக்களுக்க (இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்) குரல் கொடுக்கும் ஒரு அரசியல் கட்சியாவது , முதல்வரிடம் போயி நீங்கள் காங்கிரசிடம் இருந்து பிரிந்து அதரவை வாபஸ் வாங்குங்கள், நாங்கள் இருக்கிறோம் உங்கள் மாநில ஆட்சியை பாதுகாக்க என்று கூறி இருப்பர்கலேயனால், நாம் நினைக்கலாம் இவரால் உண்மையிலேயே ஈழ மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறார்கள் என்று . இவர்கள் முதல்வர் சொன்னதுபோல் அண்ணன் எப்போ சாவன் திண்ணை எப்போ காலியாகும் என்று இருப்பவர்கள் தானே

இவர்கள் நினைப்பது போல் அவர் வாபஸ் பெற்றால் எல்லாம் நடந்து விடுமா? 1991 நடந்தது என்ன? தமிழில விடுதலைப்புலிகளின் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டதாக கூறி தி.மு.க ஆட்சியை கலைத்தார்கள், அதன் பிறகு நடந்ததது என்ன அம்மாவின் ஆட்சியில். எனவே தமிழ் ஈழத்திற்கும், ஈழ போராளிகளுக்குமாக தனது ஆட்சியை கலைஞர் இழந்து அந்த அனுபவம் எல்லாம் பெற்றுவிட்டார். எனவே இப்போ பொழுது ஆட்சியை இழந்தால் ஈழ போராளிகளுக்கும் , ஈழ மக்களுக்கும் இன்னும் கொடுமை மிக அதிகரிக்குமே தவிர ஒன்றும் குறைந்து விடாது .

காங்கிரசில் இருந்து தி.மு.க வெளியில் வந்தால் நிச்சயமாக அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமையும். இந்த கூட்டணியை ரொம்பவே தமிழ் ஈழத்திற்க்கும் அதன் போராளிகளுக்கும் ஆதரவானது. அப்புறம் உள்ளதும் போச்சடா நொள்ள கண்ணா என்று எல்லா தமிழ் மக்களும் வாயில் விரலை வைத்துக்கொண்டு தங்களுடைய கொஞ்ச நஞ்ச உணர்வுகளை கூட வெளி படுத்தும் வாய்ப்பு இல்லாமல் போக வேண்டிய நிலைமை தான் ஏற்படும்.அப்புறம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் எல்லாம் மேடையில் நின்று கை உயர்த்த முடியாது. மாறாக சிறையில் நின்றுதான் கை உயர்த்த முடியும்.

தமிழீழ தேசிய தலைவர் கூறுவது போல நம்முடைய தாகம்... தமிழில தாயகம்!

எனவே தமிழக முதல்வரின் உணர்வுகளை புரிந்து கொண்டு நாமும் சில விடயங்களில் அவருடன் ஒத்துழைக்கவே வேண்டும் இது போன்ற இக்கட்டான நிலைகளில்.2 comments:

Anonymous said...

மக்கள் எல்லோரும் மாண்டபின் தமிழ் ஈழம் யாருக்காக பிறக்கும்? முத்து வேலனுக்கும் அவனுடைய மனைவி மற்றும் கூத்தியா மக்களுக்குமா..... சுயமரியாதை என்றால் அர்த்தம் என்ன தெரியுமா உனக்கு..........தாத்தா மருமகளுக்கு அடிவருடிகிட்டு இருக்கான், நீ தாத்தாவுக்கு கழுவிவிடற இதுக்கு பேருதான் சுயமரியாதையா....வெக்கம் கெட்ட நாய்களா.....அடுத்தவன் பிணத்தின் மேல் பிழைப்பு நடத்தும் பிணம் தின்னும் கழுகுகளா....இந்த பாவம் சும்மா விடாது.....கிழவனுக்கு நல்ல சாவு வரதுடா......சேலம் Modern Theatre ல வேலை செய்யும் பொது பிச்சைகாரிகளிடம் தாகம் தீர்த்தவன் தானே உங்கள் தலைவன்....தொண்டனிடம் மட்டும் என்ன எதிர்பார்க்கமுடியும். தன் வினை தன்னை சுடாது விடாது.....

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]