வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label விநாயகன்-கணபதி-பிள்ளையார்-பெரியார். Show all posts
Showing posts with label விநாயகன்-கணபதி-பிள்ளையார்-பெரியார். Show all posts

Wednesday, August 31, 2011

ஒரு கடவுளுக்குப் பல பிறப்பா? விநாயகன் கதைகளைக் கேளீர்!

1. முரண்பட்ட வரலாறு

பிள்ளையார்பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்தபின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம் மையை உடைத்ததனால் பெரியார் அவர் கள் என்ன அடாத செயலைச் செய்து விட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட் டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூற முடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.
கணபதி, பெண் இல்லாமல் ஆணுக் குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி, தன் உடல் அழுக்கை உருண் டையாக்கி விளையாடிக் கொண்டி ருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை: கணபதியின் பிறப்பை வேறு விதமாகச் சித்தரிக்கிறது. பார்வதி, தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்துவாரத் தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்றுவிட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவுபடுத்த வில்லை. பிரம்ம வர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப் பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தானாம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத் தானாம். ஆனால், ஸ்கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றினுள் புகுந்து குழந்தை யின் தலையைக் கடித்து தின்று விட்டா ளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே, அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சசன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும், கண்ணும் இல்லாத இக் குழந்தை தனக்குத் தலை இல்லையென் பதை எங்ஙனம் உணர்ந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக்கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவதாவது:

சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.

(ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்ற நூலில் பக்கம், 365, 40, 41, 42)

2. விநாயகன் இடைக்கால வரவே!

அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகனைப்பற்றிய குறிப்பு காணப் படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடே விநாயகன் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மனின், தானைத் தலைவனாகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டன் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியி லிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.

ஞானசம்பந்தரும், பொடி நுகரும் சிறுத் தொண்டர்க் கருள் செய்யும் பொருட்டாகக் கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே என்று பாடுகிறார்.

(டாக்டர் சோ. ந. கந்தசாமி, தமிழ்த் துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஞான விநாயகர் என்னும் கட்டுரையில், பக்கம் 20)

3. பண்டை இலக்கியத்தில் விநாயகன் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகன் வழிபாடு சொல் லப்படவில்லை. திருஞானசம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகன் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்று வித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதி யில் வாதாபி என்ற நகர்மேல் படை எடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது, அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டுவந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என் பதும், வாதாபியிலிருந்து கொணர்ந்த மையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங் கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகிறான் என்ற கட்டுரையில், பக்கம் 17)

(மேல் இரு கருத்துகட்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குட முழுக்கு விழா மலர், 8.9.1978)

4. சிவனுக்குப் புதிய உறவு

பாடல் பெற்ற கோயில்களில், நாயன் மார் காலத்தில் விநாயகனை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகன் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம்பெற்றிருப்பதுபோல, விநாயகன் இடம்பெறவில்லை. விநாய கன் வழிபாடு பம்பாய் மாகாணத் தில்தான் மிகுதியாகக் காணப் படுகிறது. அம் மாகாணம் பல்லவர் காலத்தில் பண் டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந் தது. சிறுத்தொண்ட நாயனார் சாளுக்கிய நாட்டுத் தலை நகரான வாதாபியைக் கைபற்றியபோது இப்புதிய கடவுளை அங்குக் கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத் திருவுருவத் தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்துவந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அதுமுதல் சீராளன் கோயில் கணபதீச் சுரம் எனப் பெயர் பெற்றது என்பது தெரிகிறது. இக் கணபதீச்சுரமே சம்பந்தர் பாடல்களிலும் இடம்பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெரு மானுக்கும் உறவு முறை கற்பிக்கப் பட்டது. அதன் பயனாக விநாயகன் சிவபெருமானுக்கு முதல் திருமகனாகக் கருதப்பட்டான். இவ் விநாயகன், வாதாபியிலிருந்து குடி யேறிய தெய்வம் என்பதை வாதாபி கணபதி பஜேம் பஜேம் என்னும் ஸ்தோத்திரத்தாலும் நன்குணரலாம்.

(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய சைவ சமயம் என்ற நூலில், பக்கம் 62)

---தொகுப்பு: குடந்தய் வய்.மு. கும்பலிங்கன், விடுதலை 31-08-2011

 


Tamil 10 top sites [www.tamil10 .com ]