வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label மரணதண்டனை-தி.மு.க-ஜெயலலிதா-சி.பி.ஐ. Show all posts
Showing posts with label மரணதண்டனை-தி.மு.க-ஜெயலலிதா-சி.பி.ஐ. Show all posts

Monday, August 29, 2011

கருணை காட்ட விரும்பாத ஜெயலலிதா சட்டமன்றத்தில் தி.மு.கவை நோக்கி திசை திருப்பும் பேச்சு.

மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினிக்கு தூக்குதண்டனையை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டதற்கு காரணம் கலைஞரால் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது உண்மை அதற்காக இன்றும் அவரை பாராட்டவேண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.

அன்று ஒருவருக்கு வழங்கப்பட்ட கருணையே இன்று மற்ற மூவருக்கும் வழங்குங்கள் என்று கேட்பதற்கு முகாந்திரத்தை வழங்கி இருக்கிறது.

ஒருவேளை அன்று நால்வருக்கு அதே அமைச்சரவை கருணை காட்ட பரிந்துரை செய்திருந்தால், நால்வருக்கும் சேர்ந்து அந்த கோரிக்கை மறுக்கபடுவதற்கு வாய்ப்பிருந்தது.

நால்வருக்கும் தண்டனை குறைப்புக்கு பரிந்துரை செய்திருந்தால், மறுக்கபடுவதோடு மட்டுமல்லாமல், தி.மு.க ராஜீவை கொன்றது அதுவே அந்த குற்றவாளிகளை தப்பிக்கவைக்கிறது என்று கூசாமல் ஜெயலலிதா பேசியிருப்பார்.

ஜெயலலிதா இந்த மூவருக்கும் கருனைகாட்டமாட்டார் அவர் குணம் அப்படித்தான் என்பது உண்மையான திராவிட இனஉணர்வாளர்கள், அரசியலை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும்.

ஈவு இரக்கமற்ற அந்த பெண்மணியின் அறிக்கை 23.10.2008 அன்று நமது எம்ஜியாரில் வெளிடப்பட்டது.

நளினிக்கு கலைஞரால் கருணை காட்டப்பட்டது என்ற உண்மை தெரியாத ஜெயலலிதா அந்த அறிக்கையின் ஒருபகுதியில் கூறியிருப்பதாவது....

“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? எது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆறஅம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.” இவ்வாறு செல்கிறது அறிக்கை.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்ற கருணையற்ற எண்ணம் கொண்ட ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் தி.மு.கவை கைகாட்டும் உச்சிகுடுமி சானக்கியதனத்தை காட்டியிருக்கிறார். தனது அரசால் முடியாது என்று சட்டவிதிகளை சுட்டிக்காட்டும் ஜெயலலிதா, குறைந்த பட்சம் ஒரு கட்சியின் தலைவியாக தார்மீக அடிப்படையில் இந்த மரணதண்டனைக்கு எதிராக கருத்தை கருணையோடு தெரிவிப்பதற்குமா சட்டவிதிகள் தடுக்கின்றன???!!!

இத்தனைக்கும் பிறகு அந்த பரிதாபத்திற்குரிய தாயார் அற்புதம் அம்மையார்.”அம்மா என் மகனை காப்பாற்றுங்கள்” என்று மன்றாடுகிறார். இளைஞர்கள் இன உணர்வாளர்கள் போராடுகிறார்கள், ஒருவர் தன் இன்னுயிரை இழந்திருக்கிறார், தமிழக மக்கள் அனைவரும் அவர்களை விடுதலை செய்தால் என்ன ஆகிவிட போகிறது என முனுமுனுக்கிறார்கள்.

இன்னமும் கூலிக்கு மாரடிப்பவராய், ஜெயலலிதாவின் கொள்கை பரப்பு துறையை குத்தகை எடுத்தவராய், சீமான் கலைஞரை குற்றம் சாட்டி அறிக்கை விடுகிறார். ஜெயலலிதா சீமான் இருவரின் நோக்கங்களை இந்த கட்டுரை தகர்க்கும் என்று நம்புகிறேன்.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. நேரு உட்பட பலர் காந்தியை சந்தித்து மூவரையும் விடுதலை செய்ய ஆங்கிலேய அரசிடம் கோரிக்கை வைக்க சொன்னபோது, அவர்கள் அகிம்ஸா தர்மத்திற்கு எதிரானவர்கள் என்று கூறி மறுத்துவிட்டார். உயிரை காக்கும் வாய்பிருந்தும் சொந்த புகழை காக்க முயன்ற காந்தி, ஆங்கிலேய அரசோடு சேர்ந்து குற்றம் சாட்டபடவேண்டியவர் விடுதலை பெற்ற இந்தியாவில். அதுபோன்ற வரலாற்று தவறை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செய்துவிடக்கூடாது.

இந்த கட்டுரையை ஒரு வேகத்தில் எழுதினாலும்.........


ஒரு தமிழனாய் என் மாநில முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்....தமிழர்கள்...பெரும்பான்மையினோர் விருப்பத்தை...வேதனையை உணர்ந்து தயவுசெய்து இந்த மூவரையும் மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற உங்களால் ஆன அனைத்து முயற்சியையும் எடுங்கள்...உங்கள் ஆதரவை தாருங்கள் என மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.... இதற்கு உங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை...கருணை உள்ளம் மட்டும் இருந்தால் போதும் தாயே....

- திராவிடப் புரட்சி முகநூல் பகுதியில் எழுதிய கட்டுரை


Tamil 10 top sites [www.tamil10 .com ]