வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, August 22, 2011

ஊழல் ஒழிப்பு ஒரு சீசன் சினிமா போல ஆகிவிடக் கூடாது

மக்களிடம் ஊழல் என்றால் பெரும் கொந்தளிப்பு இருப்பதை உணர்ந்துகொண்டு உள்நோக்கத்தோடு செயல்படும் ஹசாரே போன்ற வழிபோக்கர்களுக்கு அதரவு என்பது அவர் பின் இருந்துகொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். ,பி.ஜி.பி காவி கும்பலுக்கு கொடுக்கும் ஆதரவுதான்........70 வயது ஆனா இந்த ஹசாரே இவளவு நாள் எங்கிருந்தார்?. 1969 ல் சட்ட முன்வரைவு பெற்ற லோக்பால் மசோதா பல காரணங்களால் கடந்த காலத்தில் தடைபட்டபோது இந்த ஹசாரே எங்கிருந்தார்? இப்பொழுது திடீர் என்று எங்கிருந்து போந்துகொண்டு வந்தது ஊழல் ஒழிப்பு ஆவேசம்? ....இந்த உண்மைகளை ஆழ்ந்து நோக்கினால் இவர் உண்ணாநோன்பின் உள்நோக்கம் புரியும்......இவர் யோகிதை சொன்னால் நேரம் பத்தாது.
திருட்டை ஒழிக்கிறேன் என்று திருடன் சொன்னால் அவர் பின்னாலும் போகவேண்டுமோ? அப்படித்தான் இந்த ஹசாரே.....கடந்த கால உண்ணாவிரத போராட்டத்தில் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு மட்டும் ரூ.50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி உதவி செய்தவர்கள் யார்? யார்? இதற்காக ரூ.82 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 4 நாள் உண்ணாவிரதத்துக்கு இவ்வளவு செலவு தேவையா? 4 நாள் உண்ணாவிரதத்துக்கு ரூ.50 லட்சம் செலவு செய்துள்ள இவர் ஊழலை ஒழிப்பேன் என்பது எப்படி?...உண்ணாவிரதம் என்பது சண்டித்தனம் என்று பெரியார் சொன்னது எவளவு உண்மை என்பது இந்த ஆசாமியின் மிரட்டல் மூலம் தெரிகிறதே....

இரு தினங்களுக்கு முன்பு நந்தன் நீல்கனி தனது பேட்டியில் மிக அருமையான ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்...சமூக அளவில் முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான மக்களின் வேதனைகள், விரக்திகள், கோபங்களை நான் அங்கீகரிக்கிறேன், மதிக்கிறேன். அதேசமயம், புற்றுநோயாக மாறியுள்ள ஊழலை ஒழிக்க ஒரு சட்டம் போதுமானது என்று கருதுவது தவறானது.அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவும் சரி, அன்னா ஹஸாரே குழுவினர் கூறும் ஜன் லோக்பால் மசோதாவும் சரி, ஊழலை ஒழிக்கும் ஒரே ஆயுதம் அல்ல. இந்த சட்டம் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று நினைப்பது கற்பனைக்கு சரி வருமே தவிர நிஜத்தில் சாத்தியமில்லாதது... இதில் உள்ள உண்மை புரிந்தால் இந்த ஹசாரே ஆசாமியை நாங்கள் ஏன் குறைகூறுகிறோம் என்பது தெள்ளதெளிவாக தெரியும்.
ஊழலை ஒழிப்பது என்பது ஏதோ ஒரு போராட்டத்தினால் முடிவுக்கு வருவது அல்ல....திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல சமுகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இதனை ஒழிக்க அவர்கள் முதலில் திருந்தவேண்டும்....அதோடு மட்டுமல்லமால் அரசும் சில நடவடிக்களை சமுகத்தின் அடித்தளத்தில் இருந்து எடுக்கவேண்டும்..... ஊழலை ஒழிக்க நடவடிக்கை என்று நினைக்கும் போது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்த அறிக்கையின் சில பகுதி நினைவு வருகிறது...

ஊழல் ஒழிப்பு என்பது வெறும் சட்டப் பிரச் சினைதானா? அல்ல, அது ஒரு சமூகப் பிரச்சினை; வேரைத் தேடிச் சென்று வேரோடும் வேரடி மண்ணோடும் அதனைக் களைய முன்வர வேண்டும்.

(1) தேர்தல் முறைகளில் அடிப்படை மாற்றம் - பல விதிமுறைகளில் மாற்றம்.

(2) போலீஸ் - கிரிமினல் - சட்ட நடவடிக்கைகளில் திருத்தம்.

(3) நீதித்துறையில் தாமதம் - ஏழைகளால் வழக்கு மன்றத்திற்கே போக முடியாத சூழ்நிலை - இவை எல்லாம் மாற்றப்படல் வேண்டும்.

(4) குடியரசுத் தலைவரின் சம்பளமே 10 ஆயிரம் என்ற விதி இப்போது காணாமற்போயிற்றே! நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் முதல், பலூன் போல ஊதிய உச்சவரம்பற்ற சம்பளம் (தனியார்துறை உட்பட) இவைகளில் துணிந்து கை வைத்து மாற்றம் செய்தால் ஒழிய ஊழலை ஒழித்துக் கட்டவே முடியாது!

இப்போது வரப் போகும் சட்டம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கும் தன்மையைப் போன்றது தான்.

பனிப்பாறையின் முனையைக் (Tip of the Ice berg) கண்டே எல்லாம் முடிந்து விடும் என்று கருதி ஏமாறக் கூடாது; பனிப் பாறைகளை உடைக்கும் சப்மெரின்களாக சட்டங்களும், சமுதாய விழிப்புணர்வுகளும் தேவை!

ஊழல்பற்றி பேசும் பலரில் எத்தனைப் பேர் தங்கள் உண்மை வருமானத்தின்படி வருமான வரி செலுத்தும் உத்தமர்கள் என்பதை அவர்களையே கேட்டுக் கொண்டால் மிஞ்சுபவர் எவர்? எத்தனை பேர்? ஓட்டுக்குப் பணம் வாங்கிட மறுப்பவர்கள் எத்தனை பேர்?

ஊழல் ஒழிப்பு ஒரு சீசன் சினிமா போல ஆகிவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடு, பகுத்தறிவுடன் நோய் நாடி நோய் முதல் நாடினால் ஒழிய அது ஒழியாது!


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]