Tuesday, February 15, 2011
மதம் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத் தான் தீர வேண்டும்.
மதம் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கடைசி யில் விஞ் ஞானத்தின் முன் மண்டியிட்டுத் தான் தீர வேண்டும்.
அப்படி மண்டியிடச் செய் தவர் களுள்
இத்தாலி நாட் டைச் சேர்ந்த கலிலியோ என்னும் விஞ்ஞானி மிக மிக
முக்கியமானவர். அவரின் பிறந்த பொன்னாள் இந்நாள் (1564).
வானவியலின் தந்தை என்று வருணிக்கப்படுபவர் இவர். இசைக் கலைஞரின் மகனாகப் பிறந்தவர். பைசா நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
கணிதத்துறைப் பேரா சிரியராக பைசா பல்கலைக் கழகத்திலும், படூவா பல் கலைக் கழகத்திலும் பணி புரிந்தார்.
அவருடைய ஆய்வுக் களம் என்பது விண்தான். வியாழன் கிரகத்தின் துணைக் கோள்களை முதலில் கண்டவர் இவர்தான்.
ஏற்கெனவே இருந்து வந்த தொலைநோக்கியைத் தம்
ஆய்வுத் திறனால் மேலும் செழுமைப்படுத்தினார். வியாழனைச் சுற்றியுள்ள
துணைக் கோள்கள் வியா ழனைச் சுற்றி வருவதைக் கண்டறிந்தார்.
மத உலகைப் பொருத்த வரை இது ஓர்
அதிர்ச்சியான தகவலாகும். பூமியைத்தான் எல்லாக் கிரகங்களும் சுற்றிக்
கொண்டிருந்தன என்பது தான் மதத்தின் நம்பிக்கை. பைபிள் கோட்பாடும்கூட!
சூரியக் குடும்பமும் பூமியைத் தான் சுற்றுவதாக அன் றைக்கு இருந்த அவர்களின்
அறிவு அவர்களை நம்ப வைத்தது. அதற்கு முதல் அடி கொடுத்தவர் கோபர்நிக்கஸ்.
சூரியனை மய்யப்படுத்திய அவரின் கண்டுபிடிப்பை வழிமொழிந்தார் புரூனோ.
மதவாதிகளால் பொறுத் துக் கொள்ள
முடியவில்லை. மதம் யானைக்குப் பிடித் தாலும் ஆபத்து - மனித னுக்குப்
பிடித்தாலும் ஆபத் தாயிற்றே! கொலைகாரர்கள் கல்லால் அடித்தே கோபர் நிகசைக்
கொன்றனர். புரூ னோவோ உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அதே கருத்துகளைத் தான் கலிலியோவும் கூறி
னார். மதம் மருண்டது என் றாலும், உயிருக்கு ஆபத் தில்லை; மாறாக வாழ்நாள்
முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
விண்ணைப் பார்த்துப் பார்த்து ஆய்ந்து
ஆய்ந்து அந்த இரு விழிகளோ படிப்படியாக பார்வையை இழந்து கடைசிக் காலத்தில்
முற்றிலும் பார்வையற்றவரா னார்! 1642 சனவரி 8இல் மரணமுற்றார்.
கலிலியோ மறைந்து நூறு ஆண்டுகள் கழித்து
1737 ஆம் ஆண்டு அவரது உடல் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்டு சாண்டா கிளாஸ்
தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம்
செய்யப்பட்டது.
360 ஆண்டுகளுக்குப் பிறகு 1992 அக்டோபர்
திங் களில் ரோமன் கத்தோலிக்க மதப்பீடம் ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு தலை
வணங்கியது. கணித வல்லு நர் வானியல் விஞ்ஞானி கலிலியோ கண்டுபிடித்துச் சொன்ன
கருத்து சரிதான் என்று ஒப்புக் கொண்டது. குழு ஒன்றை அமைத்து கலிலியோ
சொன்னதுபற்றி ஆய்வு செய்யப் பணித்தது. ஆம், பூமிதான் சூரியனைச்
சுற்றுகிறது. கலிலியோ கண்டுபிடிப்பு சரியே என்று அவர்கள் தெரிவித்தனர்.
கலிலியோவுக்கு அளிக்கப் பட்ட தண்டனை தவறு என்று வெளிப்படையாக ஒப்புக்
கொண்டது கத்தோலிக்க மதப்பீடம்! (செய்தி 1992 அக்டோபர் 31)
புரூனோவைக் கொளுத் தியதுபோல கலிலியோவைக் கொல்லாமல் விட்டார்களே, அதுவரை மகிழ்ச்சிதான்.
------------- விடுதலை , மயிலாடன் (15-02-2011)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
CLICK THE LINK AND READ
===>இந்துக்களே! விழிமின்! எழுமின்!? நமக்கு எத்தனை கடவுள்கள்? முன்னுரை. நமக்கு எத்தனை கடவுள்கள்?
ஹிந்துக்களாகிய நமது வேத நூல்கள என்ற புனித நூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன?
இவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா?
நீங்கள் ஓர் உண்மையான ஹிந்துவாக இருந்தால் .....இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால் .....ஏனைய ஹிந்து சகோதரர்களையும் இந்த நூலைப் படிக்கத் தூண்டி - உண்மையை ஊரறியச் செய்யுங்கள்.
..
கடவுளை மறந்து மனிதனை நினைத்தால் மதவியாதிகள் ஒழிந்து பக்குவப்பட்ட சமுதாயம் மலரும்.
Post a Comment