வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, September 04, 2010

ஏழுமலையான் வெறும் வெத்து வேட்டு..ஏழுமலையானுக்கே நாமம்

நாமக் கடவுள் திருப்பதி ஏழுமலையானுக்கே நாமம் போடும் வேலை திருப்பதி கோயில் வட்டாரத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

கோவிந்தக் கடவுளுக்கே கோவிந்தா கோவிந்தா என்று கோவிந்தம் போட வைத்து விட்டனர். திருப்பதிக் கோயில் நகைகள் பற்றிய ஒழுங்கான கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும் அளவுக்கு ஆங்கே மோசடிகள் முற்றி வெடிக்க ஆரம்பித்துவிட்டன.

அரசியல் சாராத சில அமைப்புகள் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றன. உலகத்தையே காப்பாற்றுவதாக நீட்டி முழக்கப்படும் உலகநாதனை ஏழுமலையானைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கோஷம் போட்டுப் பயணத்தைத் தொடங்கின.
உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருப்பதியிலிருந்து ஒரு கோடி தந்திகளை பிரதமருக்கு அனுப்பிடப் போகிறார்களாம்.

சினிமா நடிகர் சிரஞ்சீவி தமது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர்களுடன் நடந்து சென்று கோவிந்தக் கடவுளை கோவிந்தா ஆகாமல் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சருமான சந்திரபாபு நாயுடுவும் களத்தில் குதித்து விட்டார். திருப்பதியில் நடைபெறும் ஊழல்பற்றி சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உரத்த குரலில் பேசி வருகிறார்.

டில்லியில் செய்தியாளர்களிடமே இதனைக் கூறியுள்ளார். கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் திடீரென மாயமாகி விட்டன. வஸ்திர அலங்கார சேவை டிக்கெட் விற்றதில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. சி.பி.அய். விசாரணை நடத்தி ஊழல் பெருச்சாளிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இவர்கள் ஒன்றும் நாத்திகர்கள் அல்லர் ஏழுமலையானை அனுதினமும் சாமியறையில் வைத்து சாஷ்டாங்கக் கும்பிடு போடக் கூடியவர்கள்தாம்.

சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஏழுமலையானை சிறப்புத் தரிசனத்தின் மூலம் கும்பிடுத் தண்டம் போடுபவர்கள்தாம்.

அத்தகைய ஆத்திக சிரோன்மணிகளே குற்றப் பத்திரிகை படிக்கிறார்கள் என்றால் நிலைமை மிகமிக மோசமாக இருக்கிறது ஏழுமலையான் கோயிலில் என்பதுதான் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். 16,200 பேர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஊழியர்களாம். நாள் ஒன்றுக்கு 85 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பக்தர்கள் திரளுகிறார்களாம். உண்டியல் வசூல் நாள் ஒன்றுக்கு ஒரு கோடியைத் தாண்டுமாம். அன்றாடம் எண்ணப்பட்டு பத்து வங்கிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறதாம். (உண்டியல் எண்ணும்போது சக்தி வாய்ந்த காமிராக்களை வைத்துக் கண்காணிக்கிறார்கள் வாழ்க பக்த கோடிகளின் நேர்மை!)

ஸ்டேட் பாங்கில் மூன்றரை டன் தங்கம் இருப்பு உள்ளதாம். நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிகளாம்.

நீண்ட நெடுங்காலமாகக் கோயில் பெருச்சாளிகளான பார்ப்பனர்கள் கொள்ளை அடித்துக் குபேர வாழ்வு வாழ்ந்து கொண்டுள்ளனர் அண்மையில் தான் இவை வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன.

நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பெஜரி வாட கோபால் ரெட்டி என்பவர் திருப்பதி கோயிலுக்குச் சொந்தமான நகைகளின் கண்காட்சி நடத்தும் யோசனை ஒன்றைத் தெரிவித்தார்.

இதற்காக, சோழர், பல்லவர், கிருஷ்ணதேவராயர், விஜயநகர மன்னர் போன்றவர்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு அளித்த நன்கொடைகளின் உபயங்களின் விவரத்தைத் தெரிவிக்குமாறு திருப்பதி தேவஸ்தானத்துக்குத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவற்றிற்குரிய பதில் தர முடியாது என்று திருப்பதி தேவஸ்தானம் பதில் எழுதிற்று. மன்னர் கிருஷ்ண தேவராயர் தமது ஆட்சிக்காலத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க ஏழு முறை வந்துள்ளாராம். ஒவ்வொரு முறையும் விலை உயர்ந்த பவுன், வைர நகைகளைக் காணிக்கையாகக் கொட்டியிருக்கிறார்.

1513ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி தமது மனைவிகள் இருவருடன் (திருமலாதேவி, சின்னாதேவி) கிருஷ்ணதேவராயர் நாமக் கடவுளைத் தரிசனம் செய்ய வந்த போது நவரத்தினக் கிரீடம் ஒன்றையும், 25 வெள்ளித் தட்டுகளையும், 2 தங்கக் கிண்ணங்களையும் காணிக்கையாகப் படைத்திருக்கிறார்.

1513ஆம் ஆண்டு மே 2ஆம் தேதியும்; ஜூன் 13 ஆம் தேதியும் அடுத்தடுத்துத் திருப்பதிக்கு வந்திருக்கிறார். மூலவருக்கு விலை மதிப்பில்லா நகைகளை அளித்துள்ளார். உற்சவர்களுக்கு 3 தங்க மணி மகுடங்களை வழங்கியுள்ளார்.

1514 ஜூலை 6ஆம் தேதி 30 ஆயிரம் வராகன்களில் தங்கக் காசுகளால் ஏழுமலையானுக்குக் கனகாபிஷேகம் செய்துள்ளார்.

1515ஆம் ஆண்டில் ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க மகர தோரணம் ஒன்றை காணிக்கையாக்கினார்.

1518இல் செப்டம்பர் 9ஆம் நாளன்று கோயில் கருவறை விமானக் கோபுரத்தில் 30 ஆயிரம் வராகனில் தங்கத் தகடு பதித்தார்.

1521 பிப்ரவரி 17இல் நவரத்தினக் கிரீடத்தைச் சூட்டினார்; விலை மதிப்பு மிக்க வைரப் பீதாம்பரத்தையும் தம் பக்தியின் பரிசாக அளித்தார்.

கிருஷ்ண தேவராயர் முடிசூட்டிய 500ஆவது ஆண்டினை ஒட்டி பெரு விழா எடுப்பது என்றும், அப்பொழுது, ஏழுமலையான் கோயிலுக்குக் கிருஷ்ண தேவராயர் காணிக்கையாக அளித்த நகைகளைக் கண்காட்சியாக வைப்பது என்றும் முடிவு செய்த நிலையில்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் திடுக்கிட வைக்கும் மோசடிகள் அம்பலத்திற்கு வர ஆரம்பித்தன.

அந்த நகைகளை எல்லாம் உருக்கி டாலர்களாக மாற்றி விட்டோம் என்று கூற ஆரம்பித்தனர். அது நம்பும்படியாக இல்லை என்று பக்தர்களே குமுற ஆரம்பித்து விட்டனர். டாலர் மோசடி டாலர் சேஷாத்திரி என்பது தேவஸ்தான வட்டாரத்தில் பிரபலமான பெயர். நகைப் பாதுகாப்புப் பிரிவில் முக்கிய நபராக இருந்தார். ஓய்வுக்குப்பிறகும் ஒப்பந்த அடிப்படையில் அதே பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தார்.
இவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் 500 கிராம் எடை கொண்ட 300 தங்க டாலர்கள் காணாமல் போயின; யாரோ ஓர் அப்பாவி பணி நீக்கம் செய்யப்பட்டார். டாலர் சேஷாத்திரி என்னும் அளவுக்குப் பேர் கெட்ட இந்த சேஷாத்திரியின் நகத்தில் மண் படாத அளவுக்குச் செல்வாக்குச் சங்கு சக்கரத்தைக் கையில் ஏந்தி நின்றார்.

இரண்டு நாள்கள் விற்பனைக்குத் தேவைப்படும் டாலர்களைத்தான் விற்பனைப் பிரிவுக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த விதிமுறைகளையெல்லாம் வீசி எறிந்துவிட்டு, மூன்று மாதங்களுக்குத் தேவையான டாலர்களை விற்பனைப் பிரிவுக்குத் தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

அவர்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரி ரமணகுமார். தேவஸ்தானத்துக்குப் பரிந்துரை செய்திருந்தும், அதனை யாரும் சட்டை செய்யவில்லை. சேஷாத்திரியல்லவா சட்டம் அவர்களைச் சேவிக்குமே தவிர செயல்படாது.

தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பானாம் கோவிந்தன். அவனின் நகைகளையே காப்பாற்றிக் கொள்ள முடியாத அந்தச் செங்குத்துக் கல்லுக்குச் சக்தியிருக்கிறது என்று நம்பி பணத்தையும் பவுன்களையும் கொட்டிக் குவிக்கிறார்களே இந்த மக்களை என்னவென்று சொல்லுவது!

உண்டியல்களின் பக்கத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் நிற்கிறார்களே இது ஒன்று போதாதா, ஏழுமலையான் வெறும் வெத்து வேட்டு என்பதற்கு?

-----------  விடுதலை (05.09.2010) ஞாயிறு மலர்
                                                               

4 comments:

ஒசை said...

பாதுகாப்பு மந்திரிக்கும் பாதுகாப்பு தேவைப்படும் போது, திருப்பதி ஏழுமலையானால் மட்டும் என்ன செய்ய முடியும்

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

அப்போ பெருமாளும் ஒரு காலத்தில் அரசியல் துறையில் இருந்த ஆசான் தானே ? ஓசை அவர்களே ? அப்போ பெருமாளும் வெத்து தான் போலும்

Kartheesan said...

இது ஒரு முட்டாள்தனமான கட்டுரை. வழிபடும் இடங்கள் அந்தந்த மதத்தினருக்கு சொர்க்கம். அடுத்த மதத்தினருக்கோ அல்லது தி.க.வினருக்கோ நரகம். அவர்கள் அதை திட்டிக்கொண்டும், கொள்ளையிட முயற்சிகள் செய்துகொண்டும் இருப்பர். அது பொருட்டே பாதுகாப்பு கடவுள் இருக்கும் இடம் என்று சொல்லப்படும் கோவில்கள் மசூதிகள் ஆலயங்கள் போன்றவற்றிக்கு கொடுக்கபடுகிறது. கடவுள் அந்த கல்லில்தான் இருப்பார் என்று நம்பும் மக்கள் அங்கு போய் வழிபடுகிறார்கள். நம்பாதவர்கள் சங்கமித்ரன் போல புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பெருமாள் பெயரை சொல்லி முழு வியாபாரமாக்கிய முட்டாள்களை மட்டுமே விரட்ட வேண்டும். இந்த உலகில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை நம்புகிறேன். ஆனால் கல்லை நட்டி வைத்து விட்டு அதற்கு மாலை போட்டு அதனிடமே எனக்கு அதை தா இதை தா என்று கேட்பதை அடியோடு வெறுக்கிறேன்.
(இம்மாதிரியான பல மதத்தினரின் நம்பிக்கைக்கு பாத்திரமான இடங்களில் ஏற்படும் இடையூறு, நாட்டில் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் என்று சங்கமித்ரனுக்கு தெரியாமல் போனது ஏனோ?)

நம்பி said...

Kartheesan said...
//இந்த உலகில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் //
Kartheesan said...
//ஆனால் பெருமாள் பெயரை சொல்லி முழு வியாபாரமாக்கிய முட்டாள்களை மட்டுமே விரட்ட வேண்டும். //
Kartheesan said...
//கடவுள் அந்த கல்லில்தான் இருப்பார் என்று நம்பும் மக்கள் அங்கு போய் வழிபடுகிறார்கள்.//
Kartheesan said...
//ஆனால் கல்லை நட்டி வைத்து விட்டு அதற்கு மாலை போட்டு அதனிடமே எனக்கு அதை தா இதை தா என்று கேட்பதை அடியோடு வெறுக்கிறேன்.//
Kartheesan said...
நம்பாதவர்கள் சங்கமித்ரன் போல புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலே உள்ளதை பார்த்தால் எல்லா புலம்பலையும் Kartheesan பண்ண மாதிரி தான் இருக்கிறது...கல் என்று கூறி புகழ்ந்ததும், கல்லை வெறுத்ததும் ஒரே ஆள் போலத்தான் தெரிகிறது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]