வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, September 22, 2010

இந்து மதத்தில் எல்லாம் ஆண் - பெண் உடற்சேர்க்கை பற்றிதான்!

இந்து மதத்தில் அ தொடங்கி ஃ முடிய உள்ள எல்லாச் சமாச்சாரங்களும் ஆண் - பெண் உடற்சேர்க்கை பற்றிதான்! தனிமையில் பாதுகாக்கப்படும் நாகரிகமாகக் கருதியவற்றை நடுவீதியில் அம்மணமாக்கிக் கொண்டாடு வதுதான் இந்து மதத்தின் இழிவும் - ஆபாசமும் நெளியும் தத்துவார்த்த சாக்கடையாகும்.

திருநீறு என்றாலும், சந் தனம் என்றாலும், நாமம் என்றாலும், இத்தியாதி இத் தியாதிதான். பெண்கள் நெற்றி யில் வைத்துக் கொள்கிறார்களே - அதன் சமாச்சாரம்தான் என்ன?

சிவபெருமான் என்ற இந்து மதக் கடவுளின் இடுப்பில் பார்வதியும், தலையில் கங்கை யும் மனைவிகளாக உள்ளனர் - தலையில் உள்ள கங்காதேவி மாதவிடாயின்போது கசிந்த ரத்தம் சிவபெருமான் நெற்றியில் வடிவதுதான் இந்தக் குங்கும மாம்.

இந்தச் சிவபெருமான் இருக்கிறானே... அசல் காட்டு மிராண்டி. இதுகுறித்து தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

புலித்தோல் அரைக்கு இசைத்து

வெள்ளருக்கம்பூ சடைக்கு முடிந்து

சுடலைப் பொடி பூசி

கொன்றைப் பூச்சூடி

தும்பை மாலை அணிந்து

மண்டை ஓடு கையேந்தி

எலும்பு வடம் தாங்கி

மான், மழு, ஈட்டி,

சூலம் கைப்பிடித்து

கோவண ஆண்டியாய்

விடை(மாடு) ஏறி

ஒரு காலைத் தூக்கிக்கொண்டு

பேயோடு ஆடுகிறவன்

காட்டுமிராண்டியாய் இல்லாமல்

நகரவாசி - நாகரிகக்காரனாக

இருக்க முடியுமா?

(விடுதலை, 18.7.1956)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளதில் ஒரு கால் புள் ளியை மறுக்கத்தான் முடியுமா?

அப்படிப்பட்ட காட்டு மிராண்டிக் காலத்தில் எந்த அளவுக்கு அறிவு இருந்ததோ அந்த அளவுக்குத்தான் இது போன்ற குங்குமக் கதைகளைப் புனைந்திருப்பார்கள்.

புராணப் பிரசங்கிகள் என்ன கூறுகிறார்கள்?

மலட்டு நிலத்தை மாத விலக்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின், விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாதவிலக்கு சினைப் படும் வளத்தை அறிமுகப்படுத்து வது என்பது உண்மையே! இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாத விலக்கு வேளையில் ஏற்படும் இரத்தக் கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்னும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக பெண்கள் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.

(செ. கணேசலிங்கம் எழுதிய பெண்ணடிமை தீர... எனும் நூலிலிருந்து)

எப்படி இருக்கிறது இந்து மதத்தின் ரசனையும் - புத்தியும்1

இப்பொழுது நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு இந்த அய்தீகம் தெரியுமா என்றால், தெரியாது தான். உடுத்திக் கொள்ளும் உடை, செருப்பு இவற்றிற்குப் பொருத்தமாக (ஆயவஉ) வண்ண வண்ணப் பொட்டுகளை நெற் றியில் வைத்துக் கொள்கின் றனர்.

இதுகுறித்து பிரபல தோல் நோய் வல்லுநர் மருத்துவர் தம்பையா கூறுவதைக் கவனிக்கவேண்டும்.

நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். 15 வருடங்களுக்கு முன் பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சுது. நவீன உலகத்தில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்ஸ் கலக்கப்படுகின்றன - இதனால் தோலில் பிரச்சினைகள் ஏற் படுகின்றன. முதலில் குங்குமம், விபூதி இடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குவேன் என்று பிரபல மருத்துவர் தம் பையா கூறியுள்ளார் (ஜூனியர் விகடன், 26.10.1997).

குங்குமக் கதை எதில் தொடங்கி எதில் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா?

- விடுதலை மயிலாடன், 22.09.2010
                                                                        

3 comments:

Muthukumara Rajan said...

எப்போம் ஆத்திகவாதியாக மாறிநீர்கள்.

காமம் உலகின் அடிப்படை .. காமம் இல்லை என்றால் உலகம் இல்லை .

-----
சிவபெருமான் என்ற இந்து மதக் கடவுளின் இடுப்பில் பார்வதியும், தலையில் கங்கை யும் மனைவிகளாக உள்ளனர் - தலையில் உள்ள கங்காதேவி மாதவிடாயின்போது கசிந்த ரத்தம் சிவபெருமான் நெற்றியில் வடிவதுதான் இந்தக் குங்கும மாம்.
----
எந்த நூலஇல் உள்ளது

என்னக்கு தெரிந்தவரை பெண்ணின் உயிர் அணுவை குறிக்கிறது.

அப்படியே 'மாதவிடாயின்போது கசிந்த ரத்தம் ' இருந்தாலும் என்ன ..

ஒசை said...

சரியா தான் சொல்லி இருக்கீங்க. குங்குமம் வைச்சா அலர்ஜி தான். அதே மாதிரி திராவிட கழக முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொடுக்கிற டாஸ்மாக் சரக்கு அடிச்சா, ஒரு நாளைக்கு இல்லேன்னாலும் ஒரு நாளைக்கு பரலோகம் தான். இது சமூகத்தின் அலர்ஜி இல்லையா. அதப்பத்தி மட்டும் ஏன் எந்த பகுத்தறிவு தோழர்களும் வாயே திறக்க மாட்டேங்கிறாங்க. குங்கும அலர்ஜிய விட, குடி கெடுக்கிற குடி மேலா.

நம்பி said...

//ஒசை. said...

சரியா தான் சொல்லி இருக்கீங்க. குங்குமம் வைச்சா அலர்ஜி தான். அதே மாதிரி திராவிட கழக முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொடுக்கிற டாஸ்மாக் சரக்கு அடிச்சா, ஒரு நாளைக்கு இல்லேன்னாலும் ஒரு நாளைக்கு பரலோகம் தான். இது சமூகத்தின் அலர்ஜி இல்லையா. //
10:29 PM

அப்ப அடிக்காதே....விட்டுரு அதை எதுக்கு இங்க வந்து கேக்கற, யாருனா உன்னை சரக்கு அடிக்க சொன்னாங்களா...நீ சரக்கு அடிக்கலனா என்ன பெரிய லாசா என்ன?....சரக்கு அடிக்க சொல்லி யாரும் உன்னை கம்பல் பண்ணலியே...?

ஆனா குங்குமம் வைக்க சொல்லி கம்பல் பன்றியே...என்ன பின்னூட்டம் போடறே நீ...

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]