வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, September 08, 2010

திராவிடன் என்று சொல்லுவதிலே நாம் உரிமை பெறுகிறோம்

தமிழன் என்று சொல்லும் போது பெருமையும், திராவிடன் என்று சொல்லும் போது உரிமை உணர்வும் பெறுகிறோம் என்றார் தமிழக நிதி அமைச்சர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். நேற்று (7.9.2010) சென்னை - பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தைத் தொடங்கி வைத்து தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:


எனது வாழ்க்கையில் முக்கியமான நாள்

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று உணர்வுபூர்வமாக அழைத்த மரியாதைக் குரிய வீரமணி அவர்களுக்கு எனது உளமார்ந்த மகிழ்ச்சியை, நன்றியைத் தெரிவித்துக் கொள் கின்றேன்.

எனது பொது வாழ்க்கை வரலாற்றில் இதை ஒரு மிக முக்கியமான நாளாக நான் கருதுகின்றேன். நிலைகுலைந்து போன திராவிடத்தை, வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறவேண்டும் மேலும் வலிவூட்ட வேண்டும், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வீரமணி அவர்களுடைய வழிகாட்டுதலோடு அவர் புரவலராக இருந்து கொண்டு இந்த திராவிடர் வரலாற்று மய்யம் இன்றைக்குத் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

வீரமணி ஆற்றி வருகின்ற பணி

வீரமணி அவர்கள் ஆற்றிக் கொண்டு வருகின்ற பணி ஆழமான பணி, அழுத்தமான பணி! ஆகவே உள்ளபடியே இதில் கட்டாயம் இடம் பெற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். நிச்சய மாக இந்த அமைப்பு வளரும். நல்ல ஒளிவிடக்கூடிய வகையிலே திகழும்; ஏற்றம் பெறும்.

அந்தக் காலத்திலேயே கேள்வி

தமிழர்கள் என்ற பெயர் இருந்தால் போதாதா? திராவிடர் கழகம் என்ற பெயர் இருக்க வேண்டுமா? என்று அந்தக் காலத்திலேயே சிலர் என்னிடம் கேட்டதுண்டு.

பார்ப்பனர்களை விலக்கினால் இருப்பது அவர்கள்தான் திராவிடர்கள் என்று சொன்னேன்.
பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஒழிக்க வேதங்களைப் பரப்பும் கூட்டத்தை ஒழிக்கப் புறப்பட்ட இயக்கம், திராவிடர் இயக்கம்.

தமிழன் என்று சொல்லுவதிலே நாம் பெருமை பெறுகிறோம். திராவிடன் என்று சொல்லுவதிலே நாம் உரிமை பெறுகிறோம்.

பெரியார் ஏற்படுத்திய உணர்வு

தந்தை பெரியார் அவர்கள் ஏற்படுத்திய உணர்வுதான் நீண்ட நெடுங்காலமாக இந்த மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு ஆராய்ச்சி செய்ய வந்த ஜெர்மன்காரர்கள் எல்லாம் பார்த்தது வடமொழியைத்தான். வடமொழிக்கு முன்பே இருந்தது தமிழ் மொழி.

மாக்ஸ் முல்லர் பார்த்தது

பிராமணர்கள் வடமொழியை உயர்ந்த மொழி என்று சொன்னார்கள். தேவ பாஷை என்று சொன்னார்கள். இதைப் பார்த்த மேலை நாட்டு அறிஞர் மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி யைத்தான் பார்த்தார்கள். அதுதான் அவர்களுக்குத் தெரிந்த மொழியாக, அறியக்கூடிய மொழியாக அன்றைக்கு இருந்தது. வடமொழிதான் சிறந்த மொழி என்று சொல்லி மாக்ஸ் முல்லரே வேதத்தை மொழி பெயர்த்தார்.

நீதிமன்றங்களில் சமஸ்கிருதம்

நீதிமன்றங்களில் அன்றைக்கு வாதாடக்கூடிய மொழிகளாக பார்சி மொழி, சமஸ்கிருதம்தான் இருந்தன. பார்சி மொழி முஸ்லிம்களுக்காகவும் சமஸ்கிருத மொழி இந்து மக்களின் எண்ணத்தை, கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லக்கூடிய மொழி யாகவும் அன்றைக்கு நீதிமன்றங்களிலே இருந்தன.

எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம்தான் மூலம். இதிலிருந்து தான் தமிழ், தெலுங்கு மலை யாளம் போன்ற மொழிகள் தோன்றின என்று ஒரு கருத்தைப் பிரச்சாரத்தின் மூலம் பரப்பினார்கள்.

பிராமணர்களைத் தவிர மீதி யாரும் மனிதர்கள் இல்லை என்று பிராமணர்களே சொன்னார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய ஆதிக்கம் இருந் தது. பிரம்மா முகத்தில் பிறந்தவன் பிராமணன் என்றால், மற்றவன் தொடையில் பிறந்தவன் என் றால் தொடையையா பார்த்துக் கொண்டிருப் பார்கள்?

சமஸ்கிருத உதவி இல்லை என்றால் தமிழ் மொழி இயங்காது என்று சொன்னார்கள். இந்தியா - ஆரிய நாடாம்!

இந்தியா என்றால் அது ஆரிய நாடு என்று சொன்னார்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆராய்ச்சியில் அந்தக் காலத்தில் தமிழ் மொழி இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

தமிழ்மொழி ஒரு தனி மொழி. அது ஒரு தனி குடும்பம். அது திராவிடக் குடும்பம் என்பதை 1858ஆம் ஆண்டிலே கால்டுவெல் சொன்னது ஒப் பியன் மொழி நூல் வாயிலாக நிலை நாட்டப் பட்டிருக்கிறது.

ஜம்சுகிருத மொழி

நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் வடமொழியைப் புறக்கணித்து தமிழ் மொழிக்காகப் பாடுபட்டவர்கள். அவர் பேசுகிற பொழுது வடமொழியைத் தாழ்த்தி - புரியும்படி கேலியாகப் பேசுவார். ஜம்சுகிருத மொழி அது உயர்ந்தவர்களின் மொழி என்று சொல்லப்படுகிறது.அந்த ஜம்சு கிருத மொழி செத்துப்போன மொழி என்று பேசும்பொழுது சொல்லுவார்.

நானும், நாவலரும் ஒன்றாக படித்த காலத்தில்

நானும், நாவலர் நெடுஞ்செழியனும் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்த காலம். அவர் மன்றத் தலைவராக இருந்தார், நான் செயலாளராக இருந் தேன். நாவலர் சோமசுந்தர பாரதியார் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபொழுது வடமொழி ஜம்சு கிருதம் செத்துப்போன மொழி என்று சொன்னார்.

ஒருவர் திடீரென எழுந்து பேச அனுமதி கேட்டார். நாவலர் சோமசுந்தர பாரதியும் அனுமதி தந்தார். அவர் சொன்னார் -

சமஸ்கிருத மொழி பிறக்கவே இல்லையே, பிறந்தால் தானே செத்துப்போவதற்கு? என்று இப்படி ஒரு பதிலைச் சொன்னார்.

சமஸ்கிருதம்-பிச்சைப் பாத்திரம் போன்றது

சமஸ்கிருத மொழி பாலி மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட மொழி, அது பிச்சைப் பாத்திரம் போன்றது. பார்ப்பனிய ஆதிக்கத்தால் நாட்டை ஆண்டது.

புத்தர், மகாவீரர்கூட தமிழ் வழியிலேதான் வந்தவர்கள்தாம். பிராமணர்கள் மேல் ஜாதிக் காரர்கள் என்பதை புத்தர் ஒத்துக் கொள்ளவில்லை. கடவுளை ஏற்காதவர் புத்தர்.

ஹத்தி தும்பா கல்வெட்டு

ஹத்தி தும்பா என்ற கல்வெட்டு புவனேஸ்வருக்கு அருகில் உள்ளது. கி.மு. 175ஆம் ஆண்டுகளுக்கும் முன்பு எழுதப்பட்ட கல்வெட்டு; தமிழ் மூவேந்தர்களின் கூட்டணியை உடைத்தது. கரவேலா என்ற மன்னன்தான் என்று சொன்னார்.

இவர் சொன்னதை நினைத்துப் பார்த் தேன். மூவேந்தர் கூட்டணியை உடைத் தவன் கரவேலா.

அதற்குப் பிறகுதான் சிலப்பதிகாரம் தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் கனகவிசயன் என்ற பிராமணன் தலையில் கல்லைக் கொண்டு வந்தான் சேரன் செங்குட்டுவன் என்றிருக்கிறது. தனித்தனியே இப்படி பார்ப்பனர்களை பழிவாங்கியிருக்கலாம்.

கூட்டணியை உடைத்தாலும், தனிப்பட்ட முறையிலே வெற்றி பெறு வான் தமிழன் (பலத்த கைதட்டல்). புத்தரை விட தெளிவானவர் திரு வள்ளுவர்.

திருவள்ளுவர் சொன்ன கருத்து களைப் பார்த்தால் உலகத்தில் இது வரை யாரும் அந்த மாதிரி, அந்த அளவுக்கு கருத்துச் சொல்லியிருக்க முடியாது. திருவள்ளுவன் ஒரு தமிழன். அவன் ஓட்டு கேட்காதவன். அவன் இந்த ஜாதி என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. திருக்குறள் நூல் தான் தமிழுக்கே உள்ள தனிப் பெருமை.
திருக்குறள் மனித குல மேம்பாட் டிற்கான நூல். மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே எழுதப் பட்ட நூல். இல்லற வாழ்வில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற கருத்து களைச் சொல்லிக் கொடுத்த நூல்.

ஆரியர்கள் எல்லாம் செல்வாக்குப் பெறாத காலத்தில் அவர் இருந்திருக் கிறார். திருக்குறளை எழுதியிருக் கின்றார். ஆரியத்திற்கு எதிரானது திராவிடம். இந்து
மதத்தைப் பரப்பு வதுதான் ஆரியத்தின் நிலை.

தந்தை பெரியார் ஆரியத்தை பார்ப்பனர்களை புயலென எதிர்த்தார். எனக்கு சோறு எங்கே என்று கேட்டார்; என்னுடைய பங்கு எங்கே என்று கேட்டார். இல்லை என்றார்கள். பார்த்தார், கடையையே இழுத்து மூடு என்று சொல்லி மக்களுக்காகப் போராட்டம் நடத்தியவர்.

சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லா தாருக்கு நடந்த கொடுமை! வ.வே.சு. அய்யருக்கு எதிர்ப்பு தெரிவித்தார் பெரியார்.

தமிழர்களை மனித நேயத்தோடு நடத்த வேண்டுமென்பதற்காக தோற்று விக்கப்பட்ட இயக்கம் தான் திராவிடர் இயக்கம்.

தமிழ்ச் செம்மொழி என்பதையும், ஆரிய மொழிகளை விட உயர்ந்த மொழி என்பதையும் நிலைநாட்டியவர் கலைஞர்.

ஃபாதர் ஹீராஸ் வெளிநாட்டுக் காரர். அவரிடம் நாங்கள் கையொப்பம் (ஆட்டோகிராப்) கேட்ட பொழுது அவர் என்ன எழுதிக் கொடுத்தார் என்றால், நான் ஸ்பெயின் நாட்டி லிருந்து வந்த திராவிடன் என்று எழுதிக் கொடுத்தார்.

இந்த அமைப்பு தமிழர்களுக்கு திராவிடர் வரலாற்றை எடுத்துச் சொல்லக்கூடிய அமைப்பாகத் திகழும். நாமெல்லாம் விழிப்போடு இருக்க வேண்டும். கூட்டாக இருந்து தமிழ் மக்களுக்காக திராவிடர் வரலாற்றை எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு வீரமணி அவர்கள் நங்கூரமாக இருக்கிறார். நமது தமிழக முதல்வர் கலைஞர் வெற்றிக் கொடி யைப் பறக்கவிடுபவராக இருக்கிறார்.

- இவ்வாறு பேராசிரியர் தனது உரையில் குறிப்பிட்டார்.

------ நன்றி விடுதலை (08.09.2010)

9 comments:

ஒசை said...

தமிழன் என்று சொல்லும் போது பெருமையும், திராவிடன் என்று சொல்லும் போது உரிமை உணர்வும் பெறுகிறோம் ///

ஈழப்போரில் குறைந்தப்பட்ச உரிமைகளை பெற்று இருந்தால் கூட பெருமைபடுவதில் பெருமை இருந்திருக்கும்.
தமிழகத்திற்கான நியாயமான நீர் வளங்களை, ஏனைய திராவிட மொழி பேசுபவன் பகிர்ந்து கொண்டிருந்தால், திராவிட உரிமை உண்மையாக இருந்திருக்கும். செயல் படாத தன்மைக்கு பெருமையும், உரிமையும் என்ன வேண்டி கிடக்கிறது. எதுகை மோனையாக பேசி ஈழ மற்றும் இந்திய தமிழனின் சாபத்தை வாங்காதீர்கள்.

Unknown said...

வாய் சொல் வீரர்கள்!
இனிமேலும் இப்படி எதுகைமோனையிலே பேசி பேசி தமிழர்களை ஏமாற்ற முடியும் என்று நம்புகிறார்களா!?!?

அது சரி என்ன செய்வது நம் ஆட்கள் தான் 1000 ரூபாய்க்கும், குவார்ட்டர்+பிரியாணிக்கும் பலியாகிவிடுகிறார்களே

பரணீதரன் said...

/*ஈழப்போரில் குறைந்தப்பட்ச உரிமைகளை பெற்று இருந்தால் கூட பெருமைபடுவதில் பெருமை இருந்திருக்கும்.
தமிழகத்திற்கான நியாயமான நீர் வளங்களை, ஏனைய திராவிட மொழி பேசுபவன் பகிர்ந்து கொண்டிருந்தால், திராவிட உரிமை உண்மையாக இருந்திருக்கும். செயல் படாத தன்மைக்கு பெருமையும், உரிமையும் என்ன வேண்டி கிடக்கிறது. எதுகை மோனையாக பேசி ஈழ மற்றும் இந்திய தமிழனின் சாபத்தை வாங்காதீர்கள். */

முதல்ல நீங்க பார்ப்பனியத்திடம் இருந்து விடுதலை வாங்குகள்......பிறகு ஈழம் பற்றி பீத்தலாம்......திராவிடர் கழகத்திற்கு ஈழம் பற்றி சொல்லி தர வேண்டியதில்லை...ஈழம் மற்றும் தேசியத்தலைவரை தமிழகத்திற்கு அடையாளம் காட்டிய இயக்கம்......அதன் நிலை பாட்டில் இன்றும் வேறுபாடு கிடையாது......ஈழ விடுதலை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் ஆற்றிய பணி என்னவோ? குறைந்தது பார்ப்பனிய பத்திரிகை வாங்காது புறக்கணித்தது உண்டா?

ஒசை said...

நாம் பார்ப்பணியனின் பத்திரிகையை வாங்குவதை வெகு காலம் ஆகிவிட்டது./// இப்போது நாம் பேசுவது அன்பழகன் குறித்தான கருத்துக்கு எதிர்கருத்து. கேரளன், முல்லை பெரியார் அணையை உடைக்க போகிறேன். திராவிடம் பேசி என்ன சாதித்தீர்கள் என்பதை சொல்லுங்கள்.///
எம் தேசிய தலைவரை அடையாளங் காட்டியதோடு, அடக்கமும் அல்லவா செய்து விட்டது.

பரணீதரன் said...

/*கேரளன், முல்லை பெரியார் அணையை உடைக்க போகிறேன். திராவிடம் பேசி என்ன சாதித்தீர்கள் என்பதை சொல்லுங்கள் */
திராவிடர் என்ற சொல்லை தென்னிந்தியாவில் தமிழக மக்கள் ஏற்றுகொண்ட அளவுக்கு மற்ற மாநில மக்கள் ஏற்று கொள்ளாததனால் தான் நீங்கள் சொல்லும் விளைவு........அதோடு மட்டும் அல்ல மற்ற மாநிலத்தில் பாருங்கள் ரெட்டி,நாயர்...என்று தன் பெயர் முன்னாடி போட்டுகொண்டு அது பெருமை என்று நினைத்துக்கொண்டுள்ளர்கள்.(அது எவளவு பெரிய பதவியில் இருந்தாலும்)...அப்படிப்பட்ட அறிவற்றவர்கள் நீங்கள் சொல்லும் செயலை செய்வது ஒன்றும் வியப்பல்லவே...

Thamizhan said...

ஈழத்தைப் பற்றிப் பேசும் தமிழன்பர்களின் குமுறல்கள் நன்றாகப் புரிகின்றது. ஈழத்தின் எதிரி புது டில்லியும், சோனியாவும் என்பதைப் புரிந்து கொள்ளாததன் விளைவு இன்றும் தொடர்கிறது.யார் தமிழகத்தின் முதல்வ்ராக இருந்தாலும் வெறும் பொம்மைதான்.புது டில்லிதான் எல்லாம் என்பதை மாற்ற வேண்டும்.அந்த மாற்றம் வரும்வரை எல்லாமே வீண் பேச்சுத்தான்.தமிழின எதிர்ப்பு புது டில்லியில் பார்ப்பன ஆதிக்கத்தால் திமிருடன்,தந்திரமாகச் செயல் படுவதைப் புரிந்து செயல்பட்டால் தமிழன் வாழ்வான்,இல்லையேல் அடுத்த ஈழத்தமிழர் படுகொலை தமிழகத்துத் தமிழருக்கு.இதையெடுத்துச் சொல்லும் துணிவும் அறிவும் இப்போதே செயல்படட்டும்.

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

தாயகம் என்றால் தான் ஒத்து கொள்விர்களா?.. உண்மையில் ஈழத்திற்கு குரல் கொடுத்தவர்கள் திராவிடர் என்று மார் தட்டியவர்களே !... இருண்ட கடலில் இருந்து ஓளிமுகு கரையை கட்டிய, காட்டிய எம் தந்தை பெரியாரும் அதை தான் விரும்புவார் !

நம்பி said...

ஒசை. said...
// ஈழப்போரில் குறைந்தப்பட்ச உரிமைகளை பெற்று இருந்தால் கூட பெருமைபடுவதில் பெருமை இருந்திருக்கும்.
தமிழகத்திற்கான நியாயமான நீர் வளங்களை, ஏனைய திராவிட மொழி பேசுபவன் பகிர்ந்து கொண்டிருந்தால், திராவிட உரிமை உண்மையாக இருந்திருக்கும். செயல் படாத தன்மைக்கு பெருமையும், உரிமையும் என்ன வேண்டி கிடக்கிறது. எதுகை மோனையாக பேசி ஈழ மற்றும் இந்திய தமிழனின் சாபத்தை வாங்காதீர்கள்.
10:28 AM //

ஈழப்போரா? அப்படி என்றால் என்ன?

விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமா...? இல்லை மற்ற ஆரம்ப கால தொட்டு போராடிய அனைத்து இயக்கங்களுமா...? முதலில் இதற்கு இலங்கையில் முழு அளவு ஆதரவு இருக்கிறதா?

இருந்தால் எத்தனை சதவீதம்?

6 சதவீதம் இருக்குமா? அதாவது 300000 லட்சம் தமிழ் மக்கள் என்று வைத்துக்கொள்வோம் மிச்சம் அதாவது தோராயமாக 2700000 தமிழ் மக்களாக இருப்பவர்கள் ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை....? அவர்களை ஏன் ஒன்று சேர்க்க முடியவில்லை...அங்கேயே முடியவில்லை இங்கே வந்து இங்குள்ள மக்களை எப்படி ஒன்று சேர்க்க முனைகிறீர்கள்.

இந்நேரத்திற்கு ஒரு பிரளயமே நடைபெற்றிருக்கவேண்டுமே...அங்கே என்ன திராவிட இயக்கங்களா இருக்கிறது...? இல்லை காங்கிரஸ் இருக்கிறதா?

ஈழம் எந்த பகுதியை, நாட்டைச் சேர்ந்ததோ அந்த நாட்டிலிருந்தே ஒருவரையும் ஒன்று சேர்க்க முடியவில்லையே இங்கு வந்து தமிழக மக்களை சொறிவதற்கான காரணம் என்ன?

அப்படி என்றால் எங்களுக்காக இலங்கையில் இருப்பவர்கள் குரல் கொடுப்பார்களா? எங்கள் விவாசயப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பீர்களா? இட ஒதுக்கீட்டுக்காக போராடுவீர்களா? தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து போராடுவீர்களா....

நீ என்னை பார்க்கமாட்டாய் நான் உன்னை பார்க்க மாட்டேன் அவ்வளவு தான் முடிந்தது.

பெரிய அக்கறையுடன் எழுதுபவரே எத்தனை இயக்கங்கள் இருந்தது...அதில் இத்தனை இயக்கங்கள் இப்போது இருக்கின்றன...அவர்கள் ஒருவரையொருவர் ஏன் அடித்துக் கொண்டார்கள்...அந்த இயக்கங்களிடம் எல்லாம் ஜதி வெறிகள் இருந்தது என்பதெல்லாம் தெரியுமா...? இன்னும் எனெனவெல்லாம் நடந்தது என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொண்டு வந்து அளக்கலாம்....


இங்கே போய்....ஆல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை

டக்ளஸ் தேவனந்தா, டெலோ சிறீ சபா ரத்தினம், பிளாட், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், போன்றவர்கள் இப்போது எப்படி உள்ளார்கள்...என்ன நடைபெறுகிறது...இப்போது...என்ன இல்லை...எத்தனை தமிழர்கள் தமிழர்களாலேயே கொல்லப்பட்டனர் என்பதையெல்லாம் நன்றாக வாசித்து விட்டு அப்புறம் நீங்கள் இஷ்டம் போல் அளக்கலாம்.

இயக்கங்களிடையே ஜாதி வெறி இருந்தது அதாவது தெரியுமா...? முடநம்பிக்கைகள் இருந்தது...? இதெல்லாம் தெரியுமா? எப்படி தெரியும்? பார்ப்பனீயத்திற்கு என்ன தெரியும்.....? எல்லோரையும் ஏமாற்ற தெரியும்.

என்ன? சாபம் உடுறியா?....உன் ஊத்தை சாபம் இங்கு எவரையும் ஒன்று பண்ணாது.

நம்பி said...

ஆல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை

http://www.tamilarangam.net/index.php?option=com_content&view=category&id=328:2011-01-25-14-17-01&Itemid=85

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]