வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, June 04, 2010

தகுதியற்ற தருமிக்குப் பரிசு

மதுரை; வேனிற்காலம். மிகப் பெரிய பூஞ்சோலை ஒன்று; பொது-மக்கள் ஏராளமாகக் கூடி இருக் கிறார்கள்.
அங்கே அரசனும், அரசியோடு வந்து, தங்கி இளைப்பாற, சித்திரக் கூடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசன் வந்து தங்கினான். அப்பூஞ்சோலையில், செங்கமலம், ஆம்பல், காந்தள், செண்பகம், முல்லை என ஏராளமான மலர்கள் பூத்து மணம்பரப்பிக் கொண்டிருந்தன.

அவர்களைச் சுற்றிலும், இவ்வளவு மலர்கள் நறுமணம் வீசிக்கொண்டிருந்த போதிலும், மன்னனுக்குத் தன் அருகில் இருந்த அரசியின் கூந்தலில் தனியொரு நறுமணம்_மாறுபட்ட மணம் கமழ்வதாக உணர்ந்தான்.

“திரும்பித்தன் தேவிதன்னை நோக்கினான்
தேவி அய்ம்பால்
இரும்பித்தை வாசமாகி இருந்தது
ஈண்டுஇவ் வாசம்
சுரும்புவிற்குத் தெரியா தென்னா
சூழ்ந்து இறும்பூச தொண்டீது
அரும்பித்தைக் கியல்போ செய்கையோ
வெனஅய்யம் கொண்டான்’’

அரசனல்லவா? உடனே தனக்கு ஏற்பட்ட அய்யத்தை அறிவித்து, தீர்த்துவைப்பவருக்கு ஆயிரம் பொன் பரிசு எனக் கூறினான்.

இங்கே நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். தமிழன் எங்கே தாழ்ந்தான் வீழ்ந்தான் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை. மங் கையின் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா என்று ஆராய்வது தான் ஒரு அரசனின் வேலையா? இந்த லட்சணத்தில் அவனது ஆட்சி எந்தப் போக்கில் இருந்திருக்கும்.
அறிவிப்பைக் கேட்டவர்களில், தருமி என்கிற திருமணமாகாத பார்ப் பனப் பையனும் ஒருவன். நேரே கோயி லுக்குப் போனான். புலம்பினான். நான் வேதம் படித்தவன், இல்லற வாழ்வின்றி உன்னை நான் அர்ச்சனை செய்ய முடியவில்லை. நான் திருமணம் செய்துகொள்ள உதவிட வேண்டும். இது பதமான நேரம். ஒரு பாடல் தந்தால் மன்னன் கருத்துக்கிசைய நான் பிழைத்துப் போவேன் என்று கேட்டான்.

உடனே, கம்ப்யூட்டர் பிரிண்டரில் இருந்து வந்து விழுவது போல ஓலைச் சுவடிப் பாட்டு ஒன்று வந்து விழுந்தது.

அவ்வளவுதான், தருமி அப்போதே தனக்கு ஆயிரம் பொன் கிடைத்து விட்டது போல மகிழ்ந்தான். இப்படிப் பட்ட நேரத்தில், இயல்பாகவே ஒரு செருக்குத் தோன்றும். அப்படிப்பட்ட செருக்கோடு, நாவலர் கழகம் நண்ணினான்!

கவிதையைக் காட்டினான். அங் கிருந்த புலவர்கள், கவிதையைப் பார்த்துவிட்டு ‘பேஷ் பேஷ்’’ என்றனர். அரசனும் ஏற்றான். தருமிக்கு ஆயிரம் பொன் வழங்க ஆணையிட்டான்.
பேராசைக்காரனான பார்ப்பான், வாங்கப் போன போது, ஒரு குரல் ‘நில்’ என்றது. ‘நேர்ந்து கீரன் நில்லென விலக்கினான். குற்றம் உள்ளது இக்கவி என்று கூறினான். இதில் ஒரு உண்மை விளங்கும். அந்த அவையில் அக் கவிதையை ஆழ்ந்து பார்த்தவர் நக்கீரர் ஒருவரே என்பது.

அவ்வளவுதான்! தருமிக்கு எப்படி இருக்கும்? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டும்முன் தட்டிவிட்டானே என்று தானே இருக்கும்.

தலையைத் தொங்கபோட்டுக் கொண்டு, மீண்டும் பரமசிவனிடம் போனான். அங்கே,....

“பெறுபொருள் இழந்தேன் என்றுப் பேசிலன்
யார்க்கும் மேலாம்
கறைகெழு மிடற்றோய் நின்றன் கவிக்குற்றம்
சில்வாழ்நாட்சிற்
றறிவுடைப் புலவர் சொன்னால் யாருனை
மதிக்க வல்லார்’’ என்கிறான்.

இந்தப் பாட்டின் நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். வந்து கேட்ட போது இந்தப் பார்ப்பனன் கெஞ்சிய கெஞ்சலும், கிடைக்காதபோது தூக்கி எறிந்து பேசுவதையும் கவனிக்க வேண்டும்.

“யோவ் கதியல்லாத எனக்குத்தப்பான
பாட்டைக் கொடுத்தாயே’’ என்று வசைபாடுகிறான்.

உடனே, மனித உருவில் பார்ப்பனப் பரமசிவன் வெளிப்பட்டான்; அவன் எப்போதும் புராணங்களில் பார்ப்பானாகத்தான் வெளிப்படுவான்.

‘நூலாய்ந்தோர் வைகும் திருந்தவைக் கனத்தைச் சேர்ந்தான். அங்கிருந்தவர் களைப் பார்த்து,

‘யாரை நம்கவிக்குக் குற்றம் இயம்பினாரென்றான்’
அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் கீரன்.

(இங்குதான் பெரியார் தெரிகிறார்) பின் குற்றம் யாதெனக் கீரன் சொற் குற்றம் இல்லை, வேறு பொருள் குற்றம் என்றான்

‘பொருட் குற்றம் என்ன?’’ என்றான்
“புனை மலர்ச்சார்பாலன்றி
அற்குழற்கு நாற்றமில்லை’’ என்றான்.

நீ வணங்கும் காளத்தி ஞானப் பூங்கோதைக்குமா என்கிறான் பரம சிவன். அவருடைய கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை என்கிறான். (கோயில் சிலை கல். அதற்கு இயற்கைக் கூந்தல் ஏது)

உடனே பரமசிவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. நெற்றிக்கண்ணைத் திறந்தானாம்.

‘முற்றும் நீர் கண்ணானாலும்
மொழிந்த நும்பாடல் குற்றம்’ என்றான்.

தீயின் வெப்பம் தாளாது கீரன் குளத்தில் வீழ்ந்தான். பரமசிவன் ஓடிவிட்டான்; மறைந்துவிட்டான் இதுகதை.

பரமசிவன் என்பவன், தான் எழுதிய பாட்டு குற்றமற்றது என்று விளக்கம் சொல்லிக் கேட்டவரையும், அவை யையும் ஏற்க வைத்திருக்க வேண்டும். அவனால் கீரனின் கேள்விக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை. உடனே பார்ப்பனருக்கே உரிய வன்முறையில் இறங்கிவிட்டார்கள். பார்ப்பானுக்குக் கிடைக்க இருந்ததைக் கெடுத்துவிட்ட நக்கீரனைத் தீயிட்டுத் கொளுத்திவிட் டார்கள்; கொளுத்திவிட்டு ஓடிவிட் டார்கள்; இதுதான் மறைந்துவிட்டான் என்பதன் உட்பொருள்.

தருமி ‘கல்லாதவன்’ கல்லாதவனுக்கு அந்தப் பரிசு கிடைக்க உதவலாமா? பார்ப்பானுக்கு என்றால் எல்லா விதி முறைகளும் செயல்படாது. தகுதி திறமை பேசுகிற கூட்டம் தகுதியில் லாதவனுக்குக் கொடுக்க ஆசைப் படலாமா?

இறுதியில், மறைந்து இருந்து கீரனின் தமிழோடு விளையாட வந்தோம் என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம், தப்பாட்டம், பார்ப்பனப் பம்மாத்து!.
ஆனாலும், இறுதியில் தகுதியற்ற தருமிக்கே பரிசு வழங்கப்படுகிறது. இதுதான்
பார்பனியம்; மனுதர்மம் கோலோச்சுவது ஆகும்.

இதுதான் புராணங்களின் கொள்கை. மொத்தத்தில், புராண இதிகாச, ஆகம, ஸ்ருதி, ஸ்மிருதி வேதங்கள் எல்லாம் ஒரு மய்யத்தை _ பார்ப்பன நலத்தை முக்கியமாகக் கொண்டு எழுதப்பட்டன வாகும்.

எல்லாம் பார்ப்பனருக்கே கிடைக்க வேண்டும்; தருவது எல்லாம் பார்ப் பானுக்கே தரவேண்டும்; பார்ப்பானே எல்லாம் அடைய வேண்டும். பார்ப் பானுக்கே வாரிக் கொடுக்க வேண்டும். அவனே அனுபவிக்க வேண்டும். எல்லாம் அவாளுக்கே உரியவை என்ற நோக்கத்தை, கருத்தை, வலியுறுத்தவே எழுதப்பட்டவை. பக்தி, கோயில், கடவுள் என்ற போர்வையில் அவை காப்பாற்றப்பட்டு வருகின்றன.

தருமிக்குக் கொடுக்கப்பட்டது மனுதர்மப்படிக்குத்தானே. வேறு யாரும் கவிதை கொண்டுவர வில்லையா? இதைச் சிந்தித்தாலே பார்ப்பானுடைய அயோக்கியத்தனம் வெளிப்படும்.

குறிப்பாக, பார்ப்பனரை எதிர்ப்பதில் கலங்காத நெஞ்சும், பின்வாங்காத போர்க்குணமும் நக்கீரரை நினைவு படுத்தியது. வாழ்க சங்கப் புலவர் நக்கீரர்!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!! 

---- நன்றி விடுதலை ஞாயிறு மலர் (22.05.2010)
                                                                                                                                                                  
                                                                                                                                

3 comments:

Unknown said...

நக்கீரன் பார்பனனா இல்லையா ?

பரணீதரன் said...

நக்கீரன் பார்பனராக இருந்தால் ஏன் இவளவு பிரச்சனை?

dondu(#11168674346665545885) said...

இது பற்றி நான் இட்டப் பதிவு: பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_30.html

சமீபத்தில் 1970-ல் நான் திருவிளையாடல் படம் பார்த்த போது யோசித்த சில விஷயங்களை இங்கு பதிவிடுகிறேன்.

கூந்தல் என்பது ஒரு ஆர்கானிக் பொருள். அதற்கு மணம் உண்டு என்று ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் கூடக் கூறிவிடுவான். பிறகு ஏன் நக்கீரன் இல்லை என்றார்? ஏனெனில் அப்போது ப்ளஸ் டூ கிடையாது என்று கூறி விடலாமா?

உண்மை ஏறத்தாழ நான் மேலே கூறியதுதான். அதாவது அக்காலத்தில் இந்த அறிவு பரவலாக இல்லை. கண்டிப்பாக ஆயுர்வேத வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் ஒரு நொடியில் விடை கூறியிருப்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் உடலில் பருவம் செய்யும் மாறுதல்களில் அவளது வியர்வை மணமும் மாறும். தலையில் இருக்கும் வியர்வையின் மணம் கூந்தலுக்குப் பரவும். முடிகள் வாசனைகளை நிறுத்திவைத்துக் கொள்ளும் ஊடகங்கள். ஐந்தறிவு கொண்ட நாய் கூட அதை அறியும். பெண் நாயை அது முகர்ந்து பார்ப்பது அதில் அடங்கும். உடல் உறவுக்குத் தயாராகும் ஆண் பெண் உடல்களில் வரும் மாற்றங்கள் மணங்களாக உருவெடுத்து கூந்தல் இயற்கை மணம் பெறுகிறது.

இங்கு இயற்கை மணத்திற்கும் ஒரு வரையறை செய்கிறேன். அதாவது எது செயற்கை மணம் இல்லையோ, அதுவே இயற்கை மணம். ஆக, வாசனாதி திரவியங்கள் கொடுக்கும் மணம் இல்லை.

ஆனால் கேனத்தனமாக அரசன் புலவர்களிடம் போய்க் கேட்டு வைத்தான். பாருங்கள், "இதனை இவனால் முடிக்கும் என ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்பது போல வரும் குறளை மன்னன் மறந்திருப்பானோ?

எது எப்படியோ, புலவர்களிடம் கேட்டு அவர்கள் விழிக்க, தண்டோரா போடச் செய்து தருமி வந்து புலம்பி, சிவபெருமான் மண்டபத்தில் இருந்து கொண்டு எழுதித் தந்ததை கொண்டு போய் கொடுத்து, சிவபெருமானிடம் மீண்டு வந்து, "உதைக்காம விட்டாங்களே" என்று அல்ப திருப்திப்பட்டு என்றெல்லாம் கதை போகிறது.

என்னமோ சொற்குற்றம் பரவாயில்லையாம், பொருள் குற்றம்தான் தவறு என்று கூறி, இருப்பதிலேயே பெரிய பொருள் குற்றம் செய்கிறார் நக்கீரர், ஏனெனில் அவர் ப்ளஸ் டூ படிக்கவில்லை.

இப்போது இக்கதையை நான் கீழ்க்கண்டவாறு மாற்றுகிறேன்.

சிவபெருமான்: ஆக, உயர்குல மாதரின் கூந்தலில் கூட இயற்கைமணம் இல்லையா?
நக்கீரன்: இல்லை
சிவபெருமான்: தேவலோகப் பெண்டிர்கள்?
நக்கீரன்: இல்லை, நான் வணங்கும் பார்வதி தேவியிடமும் இல்லை
சிவபெருமான்: நக்கீரா இப்போது என்னைப் பார்.
நக்கீரன்: நீர் முக்கண் முதல்வனே ஆனாலும் குற்றம் குற்றமே.

அடுத்த சீன் பொற்றாமரைக் குளத்தருகில்.
பாண்டிய மன்னன்: சொக்கேசரே என்ன இது விளையாட்டு.
சிவபெருமான்: ஷண்பகப் பாண்டியனே, உமது நக்கீரன் தேவலோகப் பெண்டிர் கூந்தல் கூட இயற்கை மணம் கொண்டதில்லை என்று கூறுகிறான். அவன் என்ன நேரில் பார்த்தானா? நேரில் பார்த்தவனான என்னிடமே இவ்வாறு விதண்டாவாதம் செய்தால் என்ன செய்வது. சரி உனக்காக நக்கீரனை பிழைக்கச் செய்கிறேன்.
நக்கீரன்: மன்னிக்க வேண்டும் சிவபெருமானே நீங்கள் வளர்த்த தமிழில் பிழை இருக்கலாகாது என்பதால்தான் வாது புரிந்தேன்.
சிவபெருமான்: அதற்காக விதண்டாவாதம் செய்தால் எப்படி? நீர் ஏதேனும் தேவலோக மங்கையரைக் கண்டீரா? நான் கண்டவன். என்னிடமே கேட்டுத் தெரிந்து கொள்வதுதானே முறை? இல்லையென்றால் உமது புலமைச் சக்தியால் பார்வதி தேவியிடமே பிரார்த்தித்து அவரை வரச் செய்து அவரைக் கேட்பதுதானே முறை. இல்லாமல் அனுமானத்தில் பேசினால் எப்படி?
பாண்டியன்: (தலையைப் பிய்த்துக் கொண்டு) ஐயோ கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டா இல்லையா?
சிவபெருமான்: அது தெய்வ ரகசியம் பாண்டியனே.
பாண்டியன்: பிறகு எப்போதுதான் தெரிந்து கொள்வது?
சிவபெருமான்: பல நூறாண்டுகள் கழித்து தமிழ்மணத்தில் டோண்டு ராகவன் என்பவர் இது பற்றி எழுதிடுவார். பிழைத்துக் கிடந்தால் அப்போது படித்து தெரிந்து கொள்.

இப்போது டோண்டு ராகவன் பேசுகிறேன்:
ஷண்பகப் பாண்டியனே எழுதி விட்டேன். முடிந்தால் படித்துக் கொள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]