வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, June 03, 2010

பெண்களை அடிமை படுத்தி இருக்கும் தமிழ்ப் புலவர்கள்

அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் எதில் மேலும் பற்று உள்ளவர் கிடையாது. அவர் ஒர் மானுட பற்றாளர். மனிதனை எவை அடிமை படுத்தினாலும் அதனை எதிர்த்தவர். அதற்க்கு ஒரு உதாரணமாக, அய்யா அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் ஆற்றிய உரையின்  தொகுப்பை பெரியார் களஞ்சியம் (பெண்ணுரிமை)  தொகுதியில் இருந்து எடுத்து நான் பதிவாக போட்டுள்ளேன்.

தமிழினத்துக்கு துரோகம் செய்தவர்கள்

1 வள்ளுவன்
2 தொல்காப்பியன்
3 கம்பன்
4  சேக்கிழார்
5 இளங்கோ.

இவர்கள் அத்தனை பெரும் அயோக்கியர்கள். வள்ளுவனை வேண்டுமானால் தெரியாமல் செய்தான் என்று மன்னிக்கலாம். மீதி நான்கு பெரும் தெரிந்தே செய்த அயோகியர்கலாவர்கள். இந்தக் கம்பன் தன் இனத்தையே காட்டிக்க் கொடுத்த துரோகி. பார்ப்பானுக்கு கூலியாக இருந்தவன். சேக்கிழாரை எடுத்துக்கொண்டால், நம் அறிவிற்கோ, மானத்திர்க்கோ, நம்மவர்கள் முன்னேற்றத்திர்க்காகவோ எதுவுமே கிடையாது.

இவர்கள் அனைவருமே பெண்களை இழிவுபடுத்தியவர்கள், அடிமையாக்கியவர்களாவர். நான் சேக்கிழாரை வெளுத்து வாங்குவதை கேள்விப்பட்டு மறைமலையடிகளே, என்னிடம் சொன்னார். "நீ பெரிய புராணத்தில் மட்டும் கைவைக்கதேஎன்று". அதையே தான் திரு.வி.க வும் சொன்னார். இருவரும் சைவர்கலாதனால் அதில் அவர்களுக்கு அவ்வளவு பக்தி. தொல்காப்பியன் நம்மை நாலு ஜாதியாகப் பிரித்து நம்மை கடை ஜாதியாக்கி இருக்கிறான்.


ஜாதியை பற்றியாவது, எவனாவது ஒருவன் இவன் பேசி இருப்பான். எதற்காக உயர்ந்த ஜாதி, கீழ் ஜாதி இருக்க வேண்டுமென்று பேசி இருப்பான். ஆனால், பரிதாபத்துக்குரிய நம் பெண்களின் - தாய்மார்களின் இழிவை நீக்க வேண்டுமென்று எங்களை (திராவிடர் கழகத்தை) தவிர, வேறு எவரும் தோன்றி தொண்ட்ற்றாட்டவில்லை. நாங்கள் தான் அவர்களின் இழிவினை போக்கப் பாடுபட்டு வருகிறோம். நமது இலக்கியங்கள் யாவும் நம் பெண்களை அடிமைகளாக இருக்க வேண்டுமென்றே வலியுறுத்துகின்றன.

எல்லோராலும் சிறந்த அறிவாளி என்று ஒப்புக் கொள்ளப்படும் வள்ளுவன் என்ன சொல்லிருகிறான். "தற்கொண்டான் பேணி", தன்னை அடிமையாக, வேலைக்காரியாக கொண்டவனை காப்பாற்றி என்று சொன்னனே தவிர, "தற்கொண்டான்" தன்னை கொண்டவளை காப்பாற்ற வேண்டுமென்று ஆணுக்கு நீதி சொல்லவில்லை. வள்ளுவரை மிகப் பிரமாதப்படுத்தி, அவர் கருத்து முக்காலத்திற்கும் ஏற்றது, வெங்காயம் என்றல்லாம் சொல்லுகிறார்கள். அந்த வள்ளுவனே பெண்களை பற்றிச் சொல்லும்போது என்ன சொல்லுகிறான்? பெண்கள் தங்கள் கணவன்மார்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும். கணவனைத் தெய்வமாகக் கருதி, அவனை தொழ வேண்டும். அவன் மனம் கோனாதவாறு அவனுக்குப் பணிவிடை செய்யவேண்டும். அவன் என்ன செய்தாலும் அதை சகித்துக் கொண்டு அவனுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கிறானே ஒழிய, பெண்களுக்கு ஆண்கள் தொண்டு செய்ய வேண்டும். பெண்கள் சொல்லுகிறபடி ஆண்கள் நடந்து கொள்ளவேண்டுமென்று ஒரு வரி கூட சொல்லவில்லை. பகுத்தறிவாளர் என்று ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிற வள்ளுவனே இப்படியென்றால், மற்ற புலவர்களை பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. நம் அறிந்கர்களும், புலவர்களும் நமக்கு  மனித  தர்மத்திற்கு  குறளைத் தான் எடுத்துக்  காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவன் தான் எல்லாவற்றிர்க்கும் என்பது பொருந்தாது.

நமக்கு நீதி சொன்னவர்கள் அத்துணை பேரும் பெண்கள் ஒழுக்கமாகக் கற்போடு, அச்சம், நாணம், மடம்,பயிர்ப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அறிவுரை கூறி இருக்கிறார்களே ஒழிய, ஆண்கள் கற்பைப் பற்றி எவனும் ஒரு வரி கூட சொன்னது கிடையாது.

அவ்வை ஒரு பெண்ணாக இருந்தும் அவள் பெண்கள் பேச்சைக் கேட்பவர்களுக்கு மானம், ஈனம் இருக்காது என்று சொல்லி இருக்கிறாள். மற்றவர்கள் சொல்லியிருப்பதற்கு கேட்கவா வேண்டும். நமக்கு இருக்கிற இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள், நீதி நூல்கள் அத்தனையும் பெண்களை இழிவுபடுத்துவனவாகவும், அடிமை படுத்துவனவாகவும், நம் இழிவை நிலை பெற செய்வதாகுமே இருக்கின்றன.

இப்படி அய்யா அவர்கள் கடல் போல் உரை நிகழ்த்தி உள்ளார்கள். எனவே அவரை பார்ப்பனியத்தின் (பெண்ணுரிமையில் பார்ப்பனிய பெண்களுக்கும் சேர்த்துதான் அய்யா அவர்கள் போராடினார்கள்) எதிரி என்றும் சும்மா ஏதோ ஒரு சாராருக்கு மட்டும் பேசினார் ஏற்றும் கட்டு கதை விடுபவர்கள் கொஞ்சம் புரிந்து கொள்வார்களாக.
                                                                                                                                                            


3 comments:

குறும்பன் said...

//வள்ளுவனை வேண்டுமானால் தெரியாமல் செய்தான் என்று மன்னிக்கலாம்.//
எப்படி வள்ளுவனை மட்டும் மன்னிக்கலாம் என்று விளக்குவீரா?

இதில் தொல்காப்பியன் எப்படி வந்தாரென்று விளக்குவீரா?

பரணீதரன் said...

அதுவும் பெரியார் சொல்லி இருக்கிறார் தோழரே...ஆரியன் இங்கு வரும்போது பெண்களோடு வரவில்லை. இங்குள்ள பெண்களை சரிபடுத்தி தான் வாழ்ந்துகொண்டிருந்தான். பெண்கள் அவனுக்கு அடங்காமல் போகவே அவர்களை கட்டு படுத்த சடங்கு சம்பிரதாயங்களை உண்டாக்கியதாக தொல்காப்பியத்திலே சொல்லி இருக்கிறான்.

"பொய்யும் வலுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் காரணம் என்ப" என்று பார்பனரிடேயே ஒழுக்கம் கெட்ட பின் பார்பனர்களால் செய்யப்பட்டது தான் இந்த சடங்கு.

நம் புலவர்கள் அய்யோகியர்கலதாளால் அய்யர் என்றால் நம் புலவர்கள் பெரியவர்கள் என்று சொல்லி தப்பித்து கொள்ளப் பார்ப்பார்கள்.

அதற்காகவே வேறொரு சூத்திரத்தில் "மேலோர் மூவர்க்கும் புணர்ந்த காரணம் கிழோர்க்காகிய காலமும் உண்டே". பார்பனர்களால் மேல் ஜாதி காரர்களுக்கு உண்டாகிய சடங்கு கீழ் ஜாதிகாரர்களுக்கும் பொருந்தும் என்று நம் புலவர்கள் கூறி யுள்ளார்கள்

நம் புலவர்கள் வயிற்று பிளைப்பிர்க்ககவும் எதையும் விற்க கூடியவர்களாகவும் இருப்பதாலும் மானமற்றவர்களாக இருப்பதாலும் இந்த உண்ம்மஎல்லாம் மக்களிடம் எடுத்து சொல்லுவது கிடையாது.

பரணீதரன் said...

/*எப்படி வள்ளுவனை மட்டும் மன்னிக்கலாம் என்று விளக்குவீரா?*/

அந்த பதிவிலேயே இருக்கு தோழரே...இதோ அந்த பகுதி ...........

நம் அறிந்கர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்கு குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவன் தான் எல்லாவற்றிர்க்கும் என்பது பொருந்தாது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]