வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, May 23, 2011

பத்திரிகை நரிகளின் முகத்திரையைக் கிழிக்கும் அரிய கட்டுரை

ஊழல்பற்றி ஊளையிடும் பத்திரிகை நரிகளின் முகத்திரையைக் கிழித்து முதுகு எலும்பை முறிக்கும் அரிய கட்டுரை இது.

தமிழின அழிப்புப் போரை சிங்கள ராணுவம் மட்டும் அல்லாமல் இந்திய பார்ப்பன ஊடகங்களும் சமீபகாலமாக நடத்தி வருகின்றன. அப்பாவி மக்களை காக்கவே இந்த போர் என்று சிங்கள ராணுவம் சொல்லியது போலவே ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பதே தங்கள் நோக்கம் என்று இந்திய ஊடகங் களும் சொல்கின்றன!

சிங்கள ராணுவம் செய்ததும் இந்திய ஊடகங்கள் செய்வதும் வெகுமக்களின் நன்மைக்கே என்று உலகம் நம்பும் அளவுக்கு காட்சிகள் நேர்த்தியாக அரங்கேற்றப்படுகின்றன. தமிழக மக்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசும் சிங்கள ராணு வமும் வெளியிடும் கருத்துகளை நம்புவதற்கு தயாரில்லை.

ராஜபக்சே குற்றவாளிதான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், இந்திய பார்ப்பன ஊடகங்களை இவர்கள் நம்புவதுதான் நம்மை உறுத்துகிறது. இந்திய ஊடகங்கள் அனைத்தும் கடந்த 6 மாதகாலமாக ஊழலுக்கு எதிராக செய்தி போடுகிறோம் என் கிற பெயரில் நடத்திய அடாவடித் தனத்தை நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

குறிப்பாக இந்திய காட்சி ஊடகத் தொலைக்காட்சி களான சி.என்.என்.அய்.பி.என்., டைம்ஸ் நவ், என்.டி.டி.வி. போன் றவை அளவுக்கு அதிகமாக கூச்ச லிட்டன. ராஜ்தீப் சர்தேசாயும் அரு ணாப் கோசுவாமியும் பர்கா தத்தும் தான் இனி இந்த நாட்டை காப் பாற்றும் வல்லமை வாய்ந்தவர்கள் என்று ஆங்கிலம் தெரிந்த அறிவு ஜீவிகள் நம்பும் வகையில் செய்திகள் ஒளிபரப்பாகின. அச்சு ஊடகங்களில் தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற வையும் ஊழலுக்கு எதிராக பதாகை கள் தூக்கின.

இவற்றுள் காட்சி ஊடகங்களின் யோக்கியத் தன்மையை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

சி.என்.என்.அய்.பி.என். செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாய் மன்னிப்புக் கேட்டார்! என்ன காரணத்திற்காக எனில், ஒரு சிறப்பு நிகழ்ச்சியில், அன்றைய நாளின் முக்கிய செய்திப் பற்றிய மக்களின் கருத்துகளை டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் இருந்து எடுத்து அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார் கள்.

அப்படி சி.என்.என்.அய்.பி.என். ஒளிபரப்பிய டிவிட்டர் கருத்துகளில் பல போலியானவை என்று ஒரு பார்வையாளர் கண்டுபிடித்து கட்டுரை எழுதியதும் அந்த தொலைக்காட்சி நிறுவனம், ‘‘We deeply regret the error and apologise for the same. We will take all steps to ensure that this is not repeated’’ இப்படி மன்னிப்புக் கேட்டது.

இது ஏறக்குறைய தினமலர் பத்திரிகையில் வெளியாகும் போலி ஆசிரியர் கடிதத்துக்கு ஒப்பானது தான்.

அடுத்து, நம்ம டைம்ஸ் நைவ் தொலைக்காட்சியின் பண்புநலனைப் பார்ப்போம்!

டைம்ஸ் குழுமத்தின் ‘Medianet’ திட்டம் பலத்த எதிர்ப்புக்கு உள் ளானது. அந்த திட்டத்தின்படி, திரைப்படக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், நிறுவன அதிபர்கள் போன்ற பணம் கொழிக்கும் பிரபலங்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெறுவதற்கு தம் பத்திரிகையிலும் தொலைக்காட்சி யிலும் இடம் ஒதுக்கப்படும்.

எது உண்மை செய்தி எது பணம் வாங்கிக் கொண்டு போடும் செய்தி என்கிற வேறுபாடே மக்களுக்கு தெரியாமல் போய்விடும் என்று பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அந்த நிறுவனம் அந்தச் சாக்கடையில் இருந்து இன்னும் எழவில்லை. அதன் பிறகு 2008ஆம் ஆண்டு புதுவகை திட்டத்தை கொண்டு வந்தது டைம்ஸ் குழுமம்.

அதன்படி, பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதனுடைய பங்குகளை வாங்கிக் கொள்வது. அது எப்படி எனில், பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் போடப்படும் விளம்பரங்களுக்கு பணம் வாங்கிக் கொள்ளாமல் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்வது.

அந்த வகையில் 2008ஆம் ஆண்டு வரை சுமார் 200 நிறுவனங்களில் தன் ஒப்பந்தத்தை நீட்டியிருந்தது இந்த டைம்ஸ் குழுமம்.

இப்படி பங்கு வாங்கியிருக்கும் நிறுவனங்கள் பற்றி நல்ல செய்திகளை போடுவதும் கெட்ட செய்திகளை தவிர்ப்பதும் அதன் மூலம் நிறுவனங்களின் பங்கு கள் சரியாமல் பார்த்துக் கொள் வதுமான ஊடக தர்மம் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியது.

அதன்பிறகு, பங்குச்சந்தையை கண்காணிக்கும் SEBI அமைப்பு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டது.

அதில், ஊடகங்களில் பிற நிறுவனங்கள் பற்றிய செய்திகள் எப்படி ஒளிபரப் பப்படுகிறது அல்லது அச்சிடப்படுகிறது என்கிற விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.

அந்த விளக்கங்கள் எல்லாம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்று நாம் ஆராயத் தேவையில்லை. இவைகள் தான் டைம்ஸ் குழுமத்தின் சிறப்புகள். மூன்றாவதாக என்.டி .டி.வி.யின் சிறப்பம்சங்கள் பற்றி சிறிது பார்ப்போம்.

‘NDTV juggles funds, shares abroad, avoids tax’ என்று தலைப்பிட்டு சண்டே கார்டியன் இதழில் அதன் உதவி ஆசிரியர் சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இங்கிலாந்தில் தொடங்கப்பட்டி ருக்கும் கிளை நிறுவனத்தின் மூலமே எல்லா கணக்குகளும் பரிவர்த் தனைகளும் செய்யப்படுவதாகவும் அதன் மூலம் இந்தியாவில் வரி கட்டாமல் ஏய்ப்பு செய்வதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இப்படி என்.டி.டி.வி. நிறுவனம் வரி ஏய்ப்பு செய்த தொகை பல கோடிகள் இருக்கும் என்று அந்த கட்டுரையில் ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டப்பட் டுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் பார்ப்பன ஊடகங்களின் புனிதத்தன்மையை பற்றி புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களுக்கும்(!) பொது மக்களுக்கும் தமிழ் ஊடகங்களின் தரம் பற்றி நன்கு தெரியும்.

திக்.. திக்... திகார்!, அடுத்த குறி!, காக்க காக்க கனிமொழி காக்க!, தயாளுவை சீண்டும் ராஜாத்தி!, ராஜாத்தி ஸ்டிரைக்! இப்படி இன் னும் எத்தனை எத்தனையோ தலைப்புகளில் கட்டுரைகள் வெளி யிடுகின்றன தமிழ்ப் பத்திரிகைள். இந்த மாதிரி தலைப்புகளில் கற் பனைக் குதிரையை தட்டிவிட்டு தங்கள் அனுமானத்திற்கு செய்தி களையும் கட்டுரைகளையும் எழுது வது என்ன வகையான இதழியல் என்று புரியவில்லை.

ஒருவரை நீதிமன்றங்கள் தண்டிப்பதற்கு முன்பே ஊடகங்கள் தண்டித்து விடுகின்றன என்கிற புகார் நூறு சதவிகிதம் நியாயம் தான். அந்த அள வுக்கு இந்த பார்ப்பன பத்திரிகைகள் எழுத்து அடாவடித்தனம் செய்கிறது.

எது எப்படி நடைபெற்றதோ அதை அப்படியே மக்களுக்கு செய்தியாக சொல்ல வேண்டும் என்கிற அடிப் படை இதழியல் இலக்கணத்தைப் பற்றி இங்கே ஒருவரும் கவலைப் படுவதாய் தெரியவில்லை.

கட்சிகள் மற்றும் இயக்கங்களால் நடத்தப்படும் பத்திரிகைகள் நடுநிலை என்று ஒருபோதும் சொல்லிக் கொள்வ தில்லை. அவைகள் கொள்கைகளை எடுத்தும் சொல்லும் பத்திரிகைகள். ஆனால், நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகள் எப்படி நடந்து கொள்கின்றன. தாங்கள் சொல்வதுதான் கருத்து.

இதை தான் மக்கள் நம்ப வேண்டும் என்கிற திமிரில் அவை எழுதிகின்றன. மோடிப் பற்றி சஞ்சீவ் பட் கூறி யிருக்கும் குற்றச்சாட்டு இந்த பத்திரி கைகளுக்கு முக்கியமானதாக தெரிய வில்லை. ஏதோ பெயருக்கு அந்த செய்தியை போடுகிறார்கள்.

ஆயிரக் கணக்கான மக்களின் உயிரை எடுக்க மோடி இணக்கம் தெரிவித்தது பெரிய செய்தியா?, இல்லையா?, ஜெய லலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் வாய்தா மேல் வாய்தா வாங்குவது ஊழல் எதிர்ப்பு வளையத்துக்குள் வராத செய்தியா?, அன்னா அசாரே நடத்தும் அறக்கட்டளையின் கணக்குவழக்கில் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதே இது மிகப் பெரிய செய்தி இல்லையா?

வெகுமக்கள் ஊடகக் கோட் பாடுகளில் இரண்டை மட்டும் இங்கே சிறிது பார்ப்போம்.

Agenda Setting theory என்பது செய்தி ஊடகங்கள் அதனுடைய கருத்தை எண்ணத்தை திருப்பி திருப்பி மக்கள் மத்தியில பரப்புவதன் மூலம் அதை ஒரு பொதுக் கருத்தாக மாற்றுவது. இந்தக் கோட்பாடு, எந்த செய்திக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்கிறது என்பதை பற்றி சொல்கிறது.

Mugic bullet theory என்பது ஊட கங்கள் எந்த கருத்தை சொன்னாலும் அதை மக்கள் நம்பி ஏற்றுக் கொள் வார்கள். உலகப் போர் நடை பெற்றபோது வானொலியில் என்ன செய்திகள் சொல்லப்பட்டனவோ அதை மக்கள் அப்படியே நம்பி னார்கள் என்பதில் இருந்து இந்தக் கோட்பாடு பிறந்தது. நாஜி ஜெர்மானியர்கள் இப்படி தான் உலகப் போர் செய்திகளை அந்நாட்டு மக்களுக்குச் சொன்னார்கள்.

இந்தக் கோட்டுபாடுகளின் மொத்த உருவமாக இன்றைய வெகுஜன ஊடகங்கள் திகழ்கின்றன.

இப்படிதான், தி இந்து உள்ளிட்ட ஆங்கில பத்திரிகைகள், ஈழப்போர் பற்றிய அய்.நாவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் தராததோடு, அதை இருட்டடிப்பு செய்யவும் செய்தன. ஆனால், தமிழக முதலமைச்சர் கலைஞர் மீது கண்டபடி புகார் கூற மட்டும் இவை தயங்குவதில்லை. இதேபோல், தமிழ்ப் பத்திரிகைகளும் செய்திகளை இருட்டடிப்பு செய் வதில் தேர்ந்தவைகளாக இருக் கின்றன.

எதன் அடிப்படையில் இந்தக் கோட்பாடுகளை நம் நாட்டுப் பத்திரிகைகள் செயல்படுத்துகின்றன என்பதற்கு நாம் பெரிய ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. பார்ப்பனீயத்தை காப்பதும் தமிழினத்தை வீழ்த்துவதும் தான் அதன் அடிப்படை. இதன்படி தான் பத்திரிகைகளில் செய்திகள் முக்கியத் துவம் பெருவதும் சில செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுவதும் நடைபெறுகின்றன.

அதனால் தான், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாங்கேவை தேடிப் போய் செய்திகளை பெற்று அதை வெளியிடும் தி இந்து பத்திரிகைக்கு அய்.நா.வின் அறிக்கைப் புலப் படவில்லை.

ஊழல் ஒழிப்பு கதா நாயகனாக அன்னா அசாரே தூக்கிப்பிடிக்கப்பட்டதும் இந்துத் துவ சக்திகளுக்கு வலுவூட்டி ஆட்சியில் அமர வைப்பதற்கான ஒரு முன்னோட்டம்தான்.

Corruption என்றால் வெறும் ஊழல் என்று மட்டும் பொருள் கொள்ள முடியாது. எல்லா வகையான அயோக்கியத்தனமும் அதில் உள்ளடங்கும். அதன்படி, ஊடக தர்மத்தை கடைப் பிடிக்காதவர்களும் குற்றவாளிகள் தான்! நடுநிலை என்று கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றுவதும் குற்றம் தான்! நாட்டைப் பிடித்த நோய்களில் பத்திரிகையும் ஒன்று என்றார் பெரியார்!

அந்த கிழவன் சொல்லிய எதுவும் இதுவரை பொய்யாகிவிடவில்லை என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

இதை புரிந்துகொண்டு, பார்ப்பன ஊடகங்கள் தொடுக்கும் இன அழிப்புப் போருக்கு எதிராக அணி திரள்வோம்! பார்ப்பன ஊடகங் களைப் புறக்கணிப்போம்!

-------- புதுக்குடியான், விடுதலை ஞாயிறு மலர் (21-05-2011)


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]