Thursday, January 08, 2009
தமிழர் திருநாள் - பகுத்தறிவு பொங்கல் பொங்குக!....
அதனிலும் மதச்சேற்றைப் போட்டுக் குழப்பி சங்கராந்தி என்றும் பெயரிட்டு தங்கள் முத்திரையைக் குத்தி வைத்து இருக்கின்றனர். அந்த மதநாற்றத்தை இதோ கேளுங்கள்
சூரியன் தனுர்; ராசியில் சஞ்சரிக்குங் காலம் இது தேவர்களுக்கு விடியற் காலம். மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தட்சீணாயனம் ஆறு மாத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத் தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவமாய் அதஞ்செய்திருந்த படியால் அப்பசுக்களைக் கொண்டு அப்புலியுருக்கொண்ட சக்தியை ஓட்டின நாள். இதனை மாட்டுப்பொங்கல் சொல்லுவார்களாம்.
இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தைமாதம் முதலில் அறுத்த, முதற்பயிரை மழைக்கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின் அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற , கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தலை அவிழ்த்துவிட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண்பொங்கல் எனவும் சொல்லுவார்களாம்.
இப்படி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டு வருணபகவான், சூரியன் என்று கூறி நம் தமிழர் திருநாளை மதத்தோடு தொடர்பு படுத்தி வைத்து இங்கு நம் தமிழர்களை முட்டாளாக்கி வைத்து அவர்கள் குளிரக்காயகிரர்கள். இது தெரியாமல் நம் மக்களே சிலர் கூமுட்டைகலாகி, அவர்களின் மூட விலங்கினில் இருந்து வெளிய வரமுடியாமல் தவிக்கிறார்கள்.
இந்த அடிமட்ட கூமுட்டை மக்களுக்கு எவளவு கூறினாலும் நீ பெரியார் இயக்கத்தை சேர்ந்தவன் தானே அதனால் தான் இப்படி சொல்லுகிறாய் நாங்கள் நம்ப தயாராக இல்லை என்று சொல்லுவதோடு மட்டும்மல்லாமல், நாத்திகம் பேசும் நீ ஏன் இந்த விழாவை கொண்டாடுகிறாய் என்கிற ஒரு வக்கிர புத்தி யோசனையில் ஒரு கேள்வி வேறு நம்மிடம் கேட்கிறார்கள் இந்த அதிபுத்திசாலி மூட அடிமைகள்.
படிக்கதவர்கள்தான் இதனை நம்புகிறார்கள் என்றால், படித்த நம் அறிவுசிவிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இந்த கல்வியறிவு இல்லாதவர்கள் கூட நம் கருத்தை சற்று யோசித்து ஏதோ சரி போல தெரிகிறதே என்று ஏற்க தயாராகிறார்கள். அனால் இந்த படித்த அறிவுசிவிகள் நாம் சொல்லுவதையும் ஏற்க மறுத்து வேதண்டவதம் செய்வார்கள். சரி அதற்க்கு ஆதாரமான நூலை தருகிறேன் உன்றி படித்து உண்மையாவது தெரிந்துகொள் என்று அவர் வழிக்கு விட்டாலும், எ அப்பா இந்த வெட்டி வேலை (ஒருமணி நேரத்துக்கு மேல் போனில் கடலை போடுவது, செக்ஸ் புக் படிப்பது, இன்னும் எவலோவோ...... இதெல்லாம் பயனுள்ளது அனால் நல்ல நூல்களை படித்து பகுத்தறிவை வளர்ப்பது இவர்கள் பாசையில் வெட்டி வேலை.) எல்லாம் எங்களுக்கு எதுக்கு.
பெரியார் இயக்கத்தை சேர்ந்த யார் எழுதும் நூலும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று புலம்பல் வேறு. என்னமோ பெரியாரும் அவர் வழிவந்தவர்களும் புத்தகம் எழுதி பிழைப்பு நடத்த வந்தவர்கள் போல. இந்த அடிமட்ட கூமுட்டைகளை பார்பனர்களின் மூட சூழ்ச்சி நூல்களில் (உதாரணம்: பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம் ...........நீளும்) இருந்து மீட்டு எடுத்து, சூத்திர பட்டதை ஒழித்து, அறிவும், நாணமும் கொண்ட சுயமரியாதை உள்ளவர்களாக்க தானே பெரியாரும் அவர் தொண்டர்களும் பாடுபட்டார்களே தவிர வேற என்ன வெங்காயம். சும்மோ ஏதோ கேள்வி கேட்க வேண்டும் வாதம் செய்ய வேண்டும் இல்லாமல் இதோ தமிழர் திருநாளான பகுத்தறிவு பொங்கல் என்ன என தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!.....
(அறிஞர் அண்ணாவின் பொங்கல் மலர் கட்டுரையில் இருந்து ......)
பொங்கல் புதுநாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.
ஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விடடதற்காகக் கொண்டாடும் நாளன்று! ஆரியர் பண்டிகை, வெறியாட்டம்! அவைகள் சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள். பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.
பாடுபட்டால் பலன் உண்டு! உழைத்தால் வாழ்வுண்டு! என்ற மூலக் கொள்கைக்கு ஏற்றநாள் அது.
காட்டைத் திருத்தி, நிலமாக், மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.
உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனதில் இருத்த வேண்டி, பாற்கொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல்! எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.அந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை நினைவிலிருத்துவர் என நம்புகிறோம்.திருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்கத் தன்னாட்சி முளைக்கவில்லை.
வரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, மார்க்கம் ஆகியவைகள் ஆரியத்தால் சிதைக்கப்படாதிருக்கவேண்டித் தன்மானம் எனும வரம்பு கட்டத் தவறியதால், இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.
உழுது நீர்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும கோரமான களை இருக்கிறது. பார்ப்பனீயம் எனம் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்தருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும் கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவைகள் போக்கப்படா முன்னம், பயிர் ஏது? இவகைளைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.
எனவே பொங்கல் பண்டிகை என்பது அறிஞர் அண்ணா கூறியது போல பழயன கழிதலும் புதுவென புகுதலும் ஆகும். எனவே ஒவ்வொரு பொங்கலுக்கும் புதிய சிந்தனை பொங்கி பழைய சிந்தனைகளை வேறுடன் அறுத்து ஆண்டுதோறும் பகுத்தறிவு பொங்கலாக கொண்டாடுவோமாக!.....
புத்துயிர் பெறட்டும் பகுத்தறிவு பொங்கல் !
புதுமை பொங்கட்டும் !
(தமிழக முதல்வரின் முயற்சியால் இவ்வாண்டு பொங்கல் தமிழ் புத்தாண்டோடு சேர்ந்துவருவது தேனினும் இனிமையான புதுமை பொங்கல்)
Tuesday, January 06, 2009
உத்தரவாதம் கொடுப்பார்களா ராஜபக்சேயின் பக்தர்கள்?....
இலங்கை தலைநகரான கொழும்புவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என மகிந்தா ராஜபக்சேயைக் குடியரசுத் தலைவராகக் கொண்ட சிங்கள வெறி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், இது மூன்றாவது முறையாகத் தமிழர்களை இழிவுபடுத்தவும், அச்சத்திற்கு உள்ளாக்கவும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஆகும் (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4).
காலை 6 மணிமுதல் குளிரையும் பொருட்படுத்தாது, பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்துத் தமிழர்களும், கொழும்பு காவல் நிலையங்களுக்குமுன் காணப்பட்டனர்; மாலை நெடு நேரங்கழித்தும் பதிவு வேலை நடந்தது.
கிளிநொச்சியைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிவிட்டதாக, சிங்களவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்துவரும் சூழல்; அந்நிலை யில் இதுநாள்வரை ஈழத்தை ஆதரிக்காத தமிழரும்கூட, பதிவு செய்யும் அவமானத்துடன் வாழ்வதைவிட, எப்படியும் ஈழத்தை அடைந்துவிட்டால் மானத்தோடு வாழலாமே என எண்ணத் தொடங்கிவிட்டனர் எனச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறீலங்கா எல்லாச் சமூகத்தினருக்கும் உரியது எனில் தமிழ ருக்கெதிராகத் தொல்லை தரவும், அவமானம் உண்டாகவும் வகை யிலான நடவடிக்கைகள் ஏன்? எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர், கொழும்புவாழ் தமிழர்கள்.
மேற்கண்ட செய்தியை டெக்கான் கிரானிக்கல் ஆங்கில ஏடு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது (5.1.2009).
ராஜபக்சேயின் சிங்களவெறி ஆட்சிக்காக பாதப்பூஜை செய்யும் இந்நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் இந்த நிலைக்கு என்ன நியாயத்தைக் கற்பிக்கப் போகிறார்கள்?
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே தமிழர்கள். அப்படியிருக்கும்பொழுது காவல் நிலையத்துக்குச் சென்று ஏன் அவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் - தங்களைப்பற்றிய தகவலைத் தெரிவிக்கவேண்டும்?
அப்படியென்றால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அனை வரும் கிரிமினல்களா? குற்றவாளிகள் குறிப்பிட்ட இடத்தில் தங்கிக் கொண்டு நாள்தோறும் காவல் நிலையத்துக்குச் சென்று கையொப்ப மிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிப்பதுண்டு - அதே நிலைதான் கொழும்பில் வாழும் தமிழர்களுக்குமா?
சில ஆண்டுகளுக்குமுன் கொழும்பில் வந்து உற்றார், உறவினர்கள், தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்ற உத்தரவு போட்டது மட்டுமின்றி பலாத்காரமாக வெளியேற்றிய வெறியர்தான் இந்த ராஜ பக்சே. கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிய நிலையில், உச்சநீதி மன்றம் எச்சரித்த நிலையில், ஆச்சரியமாக இந்தியாவும் குரல் கொடுத்தவுடன், அந்த நிலை பின்வாங்கப்பட்டது.
விடுதலைப்புலிகளிடம் இருந்த ஒரு பகுதி தங்கள் வசம் வந்துவிட்டது என்ற இறுமாப்பின் அடுத்தகட்டமாக குடிமக்களான தமிழர்களின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது போலும்! விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாகக் கூறி தமிழர்களான குடிமக்களைக் கொன்று குவித்தும் இன்னும் வெறியடங்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
இராணுவத்தின்மூலம் தீர்வு ஏற்படாது என்ற இந்திய நிலையில் மாற்றம் இல்லை என்றும், அரசியல் தீர்வுதான் சரியானது என்றும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கரமேனன் நேற்றுகூட கிளிப்பிள்ளைபோல சொல்லியிருக்கிறார்.
அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு அரசே முதலமைச்சர் தலைமை யில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, போரை நிறுத்த வழி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டும் இலங்கையில் நடந்தது என்ன? போரைத் தடுக்க இந்திய அரசு மேற் கொண்ட நாணயமான செயல்முறை என்ன? வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்புவதாகக் கூறிய பிரதமரின் வாக்குறுதி என்னாயிற்று?
அதற்குப் பின்னாலே வெளியுறவுச் செயலாளர் இவ்வாறு கூறுவதைக் கண்டு சம்பந்தப்பட்ட மக்கள் நகைக்க மாட்டார்களா? இந்தியாவின் நம்பகத்தன்மையே கூட இப்பொழுது கேள்விக் குறியாகி விட்டதே!
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், ஈழத்தமிழர்ப் பிரச்சினை யில் இந்திய அரசு நடந்துகொண்ட தன்மையில் கடும் வெறுப்பும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை இந்திய அரசு உணருமா?
போராளிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக விவாதத்துக்காக ஒப்புக்கொள்வதாகவே வைத்துக்கொள்வோம் - அடுத்து ராஜபக்சே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையான உரிமைகளைக் கொடுக்கப் போகிறார்கள்? ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தமான வடக்கு கிழக்கு மாகாண இணைப்புகளை உறுதிப்படுத்துவாரா?
ராஜபக்சேவுக்குக் காலைக் கழுவிவிடும் பக்தர்கள் அதற்கு உத்தரவாதம் கொடுப்பார்களா?
நன்றி: விடுதலை
Saturday, December 27, 2008
பெரியாரின் நூல்கள் நாட்டுடமை ஆவதும் மற்ற தலைவர்களின் நூல்கள் நாட்டுடமை ஆவதற்கும் உள்ள வேறுபாடு ......
பெரியாருக்கும் மற்ற சமுக சிந்தனை உள்ள தலைவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மற்ற தலைவர்கள் தங்கள் கருத்துகளை மறைமுகமாகவும், எதிரிகளுக்கு சொல்லும் பதிலில் சில வரைமுறைகளை கடைபிடித்து தாக்க கூடியவர்கள். உதாரணத்திற்கு மார்க்ஸ், எங்கல்ஸ் அவர்கள் எல்லாம் எதிரிகளை தாக்குவதற்கு சில மறைமுக சொற்களை உபயோகிப்பவர்கள். ஏன் அண்ணா, அம்பேத்கார் மற்றும் பாரதிதாசன் கூட அப்படியே. அதனால் தான் அண்ணா அவர்கள் பிற்காலத்தில் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று சொல்லி பிரிந்து சென்றார். எனவே தான் சிலர் நாத்திக வேகம் குறைந்ததாக சொல்லுவார்கள். ( அனால் அண்ணா அவர்கள் அப்படியல்ல என்பது திராவிட இயக்க வரலாறு தெரிந்தவர்கள் அறிவர்) .உதாரணத்திற்கு ஜாதியை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை 26.11.1957 அன்று தந்தை பெரியார் நடத்தினார். அப்பொழுது
நேரு எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டவர்களை காட்டுமிராண்டி என்று அர்த்தமின்றி சொல்லி வருகிறார்.
இதை யாருக்கும் தைரியமாக எதிர்க்கின்ற துணிவு வருவதில்லை.
பெரியார் தான் நேரு அஞ்சி நடுங்கும் வண்ணம் சுடச்சுட பதில் தருகிறார்.
மற்றவர்கள் காட்டுமிராண்டி என்று அதிகார ஆணவத்துடன் சொல்லும் நேரு, பெரியாரிடம் சொல்லும் போது நடுங்கிக் கொண்டேதான் சொல்ல முடியும்.
பெரியாரிடம் தான் நேரு பயப்படுகிறார். பெரியாருக்குத்தான் வடநாட்டு ஆதிக்கத்தை நடுங்க வைக்கும் ஆற்றல் உண்டு என்பன போன்ற ஆழ்ந்த கருத்துடன் உள்ள கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறதை மேல இணைத்துள்ளேன்.
இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமானால், சிலர் அம்பேத்கரும் பெரியாரும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்று நினைக்கிறார்கள் ஆனால் அதில் எனக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லை. அய்யா அவர்கள் மதமே கூடாது என்றவர்கள் அனால் அண்ணல் அவர்கள் புத்தமதத்தில் தன்னை இனயிது கொண்டவர். இருவரின் பாதையில் சிர் சில வேறுபாடுகள் இருபினும், சேரும் இடம் ஒன்று என்பதை ஒப்புக்கொள்கிறேன். அப்படியே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வைத்துகொண்டல் கூட நாணயத்தின் ஒரு புறத்தில் பூ இருக்கும் மறுபுறம் உங்களுக்கே தெரியும் (தலை அதுவும் சற்றும் பயமுறுத்தும் படி இருக்கும்) அதுதான் அய்யா அவர்கள். எதையும் கம்பிரமாக, எதிரிகள் கூனி குறுகி மற்றும் வெட்க பட கூடிய அளவிற்கு பதில் அளிக்க கூடியவர். அவருடைய அணைத்து சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துகளும் அப்படியே.
இன்னும் சொல்ல போனால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான் ஒரு பார்ப்பான் ( அண்ணல் அவர்களை லண்டனில் லா படிக்க வைத்தவர் ) மூலமாக அடிமை படுத்தி அவன் இழிவாக பேசியதால் தான் பார்பன எதிர்பிற்கும் தன் இன மக்களுக்கும் போராட வந்தார். அதனை போலவே காந்தி அடிகள் தன் தாயாருக்கு மது , மாது ஆகியவற்றை விட்டுவிடுவேன் என்று சத்தியம் செய்து கொடுத்து அதனை காப்பாற்ற தான் அதனை எதிர்த்தார் மற்றும் சமூகத்திற்கும் அதனை வலியுறுத்தினார். அதனை போலவே தெனாபிரிக்கா பயணத்தில் தானும் அங்கெ பாதிக்கப்பட்டதால் தான் ஒரு பெரிய போராட்டத்தில் இறங்க வேண்டியவராக ஆகினார் காந்தி அடிகள். ஆனால் அய்யா பகுத்தறிவு பகலவன் அது போல எதுவும் தனக்கென்று தனிப்பட்ட பாதிப்பு இல்லாமல் நல்ல உயர் வகுப்பில் பிறந்து நன்றாக சொகுசு வாழ்கை வாழ்ந்தவர். அப்படிப்பட்டவர் நம் மக்கள் இழி மக்களாக வாழ்வதை பார்த்து , திராவிட மக்கள் அனைவர்க்கும் ஒன்றாக போராட தனக்கு இருந்த பதவிகள் அனைத்தையும் இழந்து பொது வாழ்க்கைக்கு வந்தவர். அதனால் நாம் அய்யாவை யாருடனும் ஒப்பிட தேவையில்லை தயவு செய்து யாருடன் நம் அய்யாவை இணைக்காதிர் அவர் ஒரு சுய சிந்தனையாளர் அதோடு பார்பனர் எதிர்ப்பை மிக மிக வலிமையாக எடுத்து கூறியவர்.
உதரனத்திற்க்கு அய்யாவின் கடவுள் மறுப்பு வாசகங்கள் அவரின் அணைத்து சிலைகளுக்கும் கீழே பொறிக்கப்பட்டிருக்கும் (அந்த வாசகங்கள் உங்களுக்கு தெரிந்ததே). அதனை முதல் முதலில் சிலையின் கீழ் பொரிக்க பட்டபோது அதனை பொரிக்க கூடாது, அது எங்களையும் மற்ற இறை நம்பிக்கை உள்ள அனைவரையும் இழிவாகவும் புண்படுத்தும் படியும் இருப்பதாக சொல்லி ஒரு கூட்டம் நீதிமன்றத்திற்கு ஓலை கொண்டுசென்று அதில் தோல்வியும் கண்டது. இப்படி அய்யாவின் ஒரு சிறிய வாசகத்திற்கே இந்த ஆட்டம் போட்ட கூட்டம் அய்யாவின் மற்ற சொற்பொழிவுகளிலும் நூல்களிலும் வரும் கடுன்சொர்களை எப்படி அப்படியே பயன்படுத்தும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும். மேலும் காந்தி அடிகள் கோவிலை பற்றி கூறிய ( கோவில்கள் குச்சிகாரிகளின் விடுதி ) வாசகங்கள் கூட நான் பெரியார் பேசியதன் தொகுப்பின் வாயிலாக அறிந்தேனே ஒழிய காந்தி அடிகளின் எந்த நூலிலும் இதனை குறுப்பிட்டு எழுதியதாக எந்த பதிபகமும் வெளியிட்டதாக தெரியவில்லை.
இப்படியான அய்யாவின் எழுத்துகளை , சொற்பொழிவுகளை நம் சக தோழர்களே சில இடங்களில் பேசும்போது சென்சார் செய்து விட்டுதான் பேசுகிறார்கள். மற்றபடி எழுதும்போது எளிதிவிடுகிரர்கள். அய்யாவின் குட்டையில் ஊறி சிலரே இப்படியாக இருக்க மற்ற நய வஞ்சக கூட்டம் நடத்தி வரும் பதிபகங்கள் எப்படி இவைகளை அப்படியே மக்களிடம் கொண்டு சொல்லும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.
அய்யாவின் சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் வரும் சொற்கள் யாவும் அய்யாவின் சொற்பொழிவு கேட்டவர்கள் அல்லது படித்தவர்கள் அறிந்தவை அகவே நான் நெனைக்கிறேன் இருந்தும் சிலவற்றை தந்துள்ளேன் .
- உங்களை யாராவது சூத்திரன் என்றல் வாட தேவடியாள் மொவனே என்று கூர் என்றார் .
- அலங்காரம் பண்ணும் பெண்கள் என்னை பொறுத்த வரை தாசிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை என்றார்.
- ராமன் ஒரு குடிகாரன் சீதை ஒரு விபச்சாரி என்றார். மேலும் ராமன் படத்தை செருப்பால் அடித்தேன் எதற்காக என்று முழுவதும் விளக்கி உள்ளார்
இவை மிகவும் சிலவே . மேல் சொன்னவை போல எந்த ஒரு சமுக சிந்தனையாளரும் பேசியதாக இல்லை. இவற்றை இந்த நய வஞ்சக பதிப்பக கூட்டம் அப்படியே மக்களிடம் கொண்டு செல்லுமா ?
நாட்டுடமை ஆக்கினால் யார்வேண்டும் ஆனாலும் வெளியிடலாம் அதனால் எண்ணிக்கை (Quantity) அதிகமாகும் என்று நாம் நினைக்க கூடும் . ஆனால் நாம் எண்ணிக்கையை அதிக படுத்துவதை விட குறைந்த அளவில் வெளியிட்டாலும் அதில் உண்மை போய்விடாமல் (Quality ) பார்த்துக்கொள்ள வேண்டும்
அய்யாவின் எழுத்துகள், சொற்பொழிவுகள் அனைத்தும் மற்ற எல்ல தலைவர்களின் எழுத்துக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இதனை மற்றவர்கள் வெளியிட்டால் தன் கருத்துகளை மாற்றி திரிதுவிடுவர்கள் என்ற என்னதிளும்தான் அய்யா அவர்களே பெரியார் சுயமரியாதை நிறுவனத்தை நிறுவி உள்ளார் என்று நான் நினைக்கிறன். அய்யா அவர்கள் பிற்காலத்தில் வருவதை முன்கூடியே சிந்திக்க கூடியவர். ( "இனி வரும் உலகம்" என்ற நூல் ஒரு உதாரணம் ). அதனால் தான் நய வஞ்சக கூட்டத்திடம் இருந்து தனுடைய கொள்கைகளை நிலைநாட்ட அன்றே இதனை செயிதுள்ளார்கள் என்பதே என் கருது.
எனவே நாட்டுடமை ஆக்கினால் , பெரியாரியம், புத்தமதம் எப்படி கடவுள் மதமாக (ஹினயானம் - உருவ வழிபாடு , மகாயானம் - உருவம் இல்லாதது. இந்த பிரிவினை செய்ததும் ஒரு பார்ப்பான் தான் அந்த கதை தேவை பட்டாள் விளக்குகிறேன் ) சித்தரிக்க பட்டு, புத்தர் என்ற பகுத்தறிவு வாதியை கடவுளாய் சித்தரிக்கப்பட்டு நம் முன் நிறுத்தியதை போல சில நூட்ரண்டுகளில் ஏன் சில வருடங்களில் நம் எதிர்கால சந்ததியினருக்கு பெரியார் சாமியார் ஆகி பூஜை போட சொல்லி கொடுத்துவிடுவார்கள். ( அதுவும் தாடி வைத்திருப்பதால் மிகவும் சில மதங்களிலே சாமியார் ஆக்கிவிடும் இந்த வஞ்சக கூட்டம்).
எனவே பெரியாரிய கொள்கையை பின்பற்றும் நாம் பெரியாருக்கு செய்யும் தொண்டாக நினைத்து அவரை பிற்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல சமுக சீர்த்திருதவதியாக அடையாளம் காண்பிக்க வழிவகுப்போம்.
Thursday, December 25, 2008
தினமலத்தின் ஆவேசம்.......
ஏய் தினமல பார்பன முண்டமே நீ கருத்துப்படம் வெளியிட்டு தஞ்சாவூரில் வாங்கிகொண்டது பத்தாத இன்னும் உனக்கு வேண்டுமோ.
சம்பதமே இல்லாமல் வம்புக்கு இழுத்து உள்ளது இன்றைய(26-dec-2008) தினமலம். அதாவது கி.வீரமணி தன்னுடைய பெயரை நியூமரலாஜி பார்த்து மீ.கி வீரமணி என மாற்றி உள்ளாராம்.
யாரிடம்,எந்த சவண்டி பார்ப்பானிடம் போய் ஆசிரியர் வீரமணி அவர்கள் நியூமரலாஜ் பார்த்தார் என்பதை வெளியிட்டால் நாங்கள் எங்களுடைய பகுத்தறிவு பணியை விட்டுவிட்டு உன்னுடன் சேர்ந்து பி பொறுக்க வருகிறோம். நியூமரலாஜ் பார்த்த செய்தியை வெளியிட்ட உனக்கு நிச்சயம் எந்த மடயனிடம் பார்த்து என்பதும் திரிந்திருக்க வேண்டும்.
எப்படி சிண்டு முடியலாம், எப்படி வம்புக்கு இழுக்கலாம் என்று இருந்த உனக்கு கலைங்கரின் பேட்டி வாயில் அவல் போட்டது போல ஆயிற்று. நீ என்னதான் உன் சிண்டுமுடியும் முள்ளமாரி தனத்தை கண்பித்தலும் எங்களின் பகுத்தரிவுபணி ஒற்றுமையை பிரிக்கமுடியாது. கனவு காணாதே.
உண்மை போன்ற சவண்டி,முள்ளமரிகளுக்கு தெரியவில்லை என்றால் எங்களிடம் கேட்டால் சொல்லுகிறோம் ஆசிரியர் எப்பொழுது எங்கே எதற்க்காக பெயரை மாற்றினார் என்று. அதனை விடு விட்டு உன் பி திங்கும் புத்தியை கண்பிகிரையே ஏன். ஆமாம் அந்தந்டையும் உனக்கு பகுத்தறிவு இருந்தால் தானே சிந்திப்பதற்கு. உண்மையை சொல்லுகிறேன் கேட்டுக்கொள். சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் இனி எல்லா பெண்களும் தன் குழந்தைகளுக்கு தன்னுடைய பெயரையும் சேர்த்து எழுதுங்கள் என்று தீர்மானம் போட்டு, இனி தன் பெயருக்கு முன்னால் மீ என்று தனது தாயின் பெயரை போட்டுகொல்பதாக அறிவதேரே ஒழிய வேற என்ன வெங்காயம் வேண்டியிருக்கு. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல உன் பின் புத்திக்கு நியூமேரலாஜ் தவிர வேறு என்ன பகுத்தறிவு சிந்தனை தோன்ற போகிறது அல்லது தோன்றி இருந்திருக்கிறது.
Monday, December 15, 2008
Thursday, December 11, 2008
புலிகளின் அனுபவமுள்ள படையணிகளாலேயே எமக்கு அதிக இழப்புக்கள்: சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கும் அனுபவமுள்ள படையணிகளால்தான் படைத்தரப்பினர் அதிக இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் 'பிஸ்னஸ் ருடே' இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்த முக்கிய பகுதிகள் வருமாறு:
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்தேன்.
போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம்.
இராணுவத்தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தேன்.
எனது சிந்தனைகள் மரபு வழியிலானது அல்ல, அது வேறுபட்டதாகவே இருந்தது. இளநிலை அதிகாரிகளை களமுனை கட்டளை அதிகாரிகளாக நியமித்தேன்.
உதாரணமாக, ஐந்தாவது நிலையில் உள்ள மூத்த அதிகாரியையே யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாக நியமிப்பது வழக்கம்.
ஆனால், மூத்த அதிகாரிகளின் நிலையில் 15 ஆவது இடத்தில் இருந்தவர் யாழ். குடாநாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அதன் பலா பலன்கள் அதிகம்.
அதனைப் போலவே 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா மூப்பு அடிப்படையில் 45 ஆவது இடத்தில் இருப்பவர். அவர், தற்போது பூநகரியை கைப்பற்றியுள்ளார்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவின் ஆதரவும் எனக்கு இருந்தது. நாம் இருவரும் இணைந்து தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொள்வனவு செய்ததுடன், பயிற்சி மற்றும் உத்திகளையும் வடிவமைத்திருந்தோம்.
பதவிக்கு நாம் வந்த போது 40,000 சிப்பாய்களுக்கு தலைக்கவசம் கிடையாது, பலரிடம் ஒரு தொகுதி சீருடைகளும், ஒரு சோடி சப்பாத்துக்களுமே இருந்தன. 40,000 பேருக்கான அங்கிகளுக்கும் தட்டுப்பாடு காணப்பட்டது. எல்லாவற்றையும் நாம் சீர் செய்தோம்.
படையினரின் எண்ணிக்கையிலும் நாம் பலவீனமாக இருந்தோம், சில பற்றலியன்கள் சிதைவடைந்திருந்தன. ஐந்து டிவிசன்களை நான் உருவாக்கியுள்ளேன்.
முன்னர் ஒரு வருடத்திற்கு 3 ஆயிரம் பேரையே படையில் சேர்க்க முடிந்தது, தற்போது நாம் ஒரு மாதத்திற்கு அதனை எட்டி வருகின்றோம்.
கடந்த வருடம் 32 ஆயிரம் படையினரையும் இந்த வருடம் 34,000 ஆயிரம் படையினரையும் சேர்த்துள்ளோம்.
பதவிக்கு நான் வரும்போது இராணுவம் 1 லட்சத்து 16 ஆயிரம் பேரைக் கொண்டிருந்தது. தற்போது அது 1 லட்சத்து 70 ஆயிரம் பேரைக் கொண்டுள்ளது. நான் 50 பற்றலியன்களை உருவாக்கியுள்ளேன்.
தற்போதைய போரில் விடுதலைப் புலிகள் தம்மை தயார்படுத்தவில்லை. போர் ஆரம்பிக்கும் போது அவர்கள் 10 ஆயிரம் பேரை கொண்டிருந்தனர்.
பின்னர் மேற்கொண்ட படைச் சேர்ப்புக்களால் அவர்களின் பலம் 15 ஆயிரமாக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 12 ஆயிரம் பேர் தற்போது கொல்லப்பட்டு விட்டனர்.
எனவே, அவர்களில் தற்போது 2,500 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை உள்ளது.
எனினும், விடுதலைப் புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவே தான் படைத்தரப்பு அதிகம் இழப்புக்களை சந்தித்து வருகின்றது.
மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, அது இலகுவான நடவடிக்கை அல்ல என்றார் அவர்.
நன்றி: புதினம்
Tuesday, December 09, 2008
பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?
எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.
பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.
பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. தனது பதினோராவது வயதிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தாய்மை என்னும் புனிதத்தையோ அன்றிப் புளகாங்கிதத்தையோ உணர முடியாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையைத் தான் சுமந்து தாயான லிபேரியக் கறுப்புஇனஇளம் பெண்போராளி ஒருத்தி சொல்கிறாள் ஒரு ஆணை விட ஒரு பெண்ணினால்தான் முழுமன ஈடுபாட்டுடனும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட முடியுமென்றும் ஒரு ஆணை விடப் பெண்ணிடம்தான் வலிமை அதிகம் என்றும்.
அது உண்மைதான். பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.
இருந்தும் பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?
ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும், போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.
இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது.
குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில் குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.
ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.
அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.
இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. விலங்குகளிடமும் இருந்தது. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கும் இருந்தது.இந்த விலங்குகளிடமிருந்தான பாதுகாப்புத் தேடல்தான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தத் தொடங்கியது.
காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது. ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போதுபெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.
இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே. அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள். ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில் விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பெண்களிடம் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள். இங்கே இரும்பு ஒரு தற்பாதுகாப்பு ஆயுதமாகவே இருந்தது. சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள்.
இன்று மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் விலங்குகளே இல்லை. மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு அவைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்றும் இப்படியான அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியமில்லை.
ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.பெண்ணை மட்டும் அடங்கு என்று சொல்ல இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம். அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.காட்டு வாழ்க்கையை விட்டு நாட்டில் வீடு கட்டி பாதுகாப்பாக வாழும் நிலைக்கு நாம் என்றைக்கோ வந்து விட்டோம்.
இருந்தும் மூளையில் பதியப் பட்ட அடிப்படையான ஆதிகாலப் பிரச்சனையை கருத்தில் கூடக் கொள்ளாமல் இன்னும் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் எனக் கண்மூடித்தனமாக் கருதுகிறோம்.அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்... வீட்டினுள் தங்கினார்கள் என்றால், இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டுமென நினைக்கிறோம்.
உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும். ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும் என்றால் அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள். ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புகள்.
ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது. ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வௌ;வேறு வழிகளில் செயற் படுகின்றன. இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை.
அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப் படுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்.
இதே நேரம் இவையெல்லாம் பிழை. முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.
இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.இப்போது கூட உங்கள் மனதில் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். அவர்கள் சுதந்திரமாகத்தானே திரிகிறார்கள் என்ற சிந்தனை ஓடலாம். ஆயுதந் தூக்கிப் போரிடுகிறார்கள் என்ற பிரமிப்பு ஏற்படலாம். இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே..! இன்னுமா திருப்தியில்லை என்ற எரிச்சல் எழலாம்.
உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயம் பேணப்பட வேண்டும். அவள் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப் பட்ட சில எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.
கருப்பையில் மூன்று மாதக் கருவாக இருக்கும் போதே ஒரு குழந்தை தாயின் உணர்வுகள், தாயைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள்.. என்று எல்லாவற்றையும் கிரகிக்கத் தொடங்கி விடும். வெளியில் கேட்கும் சினிமாப் பாடலைக் கூட மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடும். இது இன்றைய ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.இதன் விளைவுகளை பெற்றோர்கள் சரியான முறையில் சிந்தித்து ஒரு பெண் தாயாகத் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் இதை கருவுக்குள் உருவெடுத்திருக்கும் எமது பிள்ளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பிறந்த பின்னும் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விடயத்திலும்; ஆண் குழந்தை பெண் குழுந்தை என்ற பேதமின்றி பாரபட்சமின்றி அவர்களை வளர்க்க வேண்டும். அவர்கள் முன் பேசுவது கூட நான் ஆண் என்றோ, அல்லது நான் பெண் என்றோ எந்த விதமான தாழ்வு மனப் பான்மையையும் அவர்கள் மனதில் விதைக்கப் படாத விதமாக இருக்க வேண்டும்.
இப்படியான அவதானம் மிகுந்த செயற்பாடுகள் மனித மூளையில் ஆழப் பதிந்திருக்கும் பெண் அடங்க வேண்டியவள்தான் என்ற உள்ளுணர்வை அழித்தொழிக்க ஏதுவாக அமையும்.காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று விடும். அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.
ஈழமுரசு (3.3.2004 - 9.3.2004)
Thursday, November 27, 2008
படிப்பது ஜாதியை வளர்ப்பதற்கல்ல!
சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதி அடிப்படையில் நடந்த மோதல்கள் உள்ளபடியே வெட்கப்படத் தக்கதாகும்.
எதிர்கால உலகைப் படைக்கக்கூடியவர்கள் என்று கணிக்கப்படக்கூடிய மாணவர்கள் - அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்களின்அறிவு எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது வெட்கமும், வேதனையும் கலந்து நம்மைத் தாக்குகின்றன; தலையைத் தொங்கப் போடவும் வைக்கிறது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர் களும் கல்வி, வேலை வாய்ப்புகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் புலிப் பாய்ச்சலாக அமையவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார். அவர் கண்ட இயக்கம் அன்று முதல் இந்தச் சமூக விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களும் சரி, பார்ப்பனிய வருணாசிரம அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்தாம். கல்விப் பக்கம் அவர்கள் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் குறியாக இருந்தவர்கள்தாம்.
இரண்டு முறை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்துக்கு முதலமைச்சராக இருந்திருக்கிறார். அந்த இரண்டு முறையுமே கிராமத்துப் பள்ளிகளை இழுத்து மூடுவதில்தான் குறியாக இருந்தார். காரணம், கிராமங்களில் தான் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட வர்களும் படிக்கக் கூடியவர்கள்.
இரண்டு முறையும் அவரைப் பதவியிலிருந்து விரட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்தான். 1952 இல் குலக்கல்வி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி அப்பன் தொழிலைப் பிள்ளைகள் கற்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்த மகானுபாவரும் அவரேதான்.
தீப்பந்தமும், தீப்பெட்டியும் தயாராக இருக்கட்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் ஆணையிட்ட பிறகே, தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார் என்ற வரலாறுகள் எல்லாம் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.
வைக்கத்திலே தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதுகூட நம் பாடத் திட்டங்களில் இடம்பெறுவது இல்லை.
மாணவர்களிடையே நடந்த இந்த ஜாதி மோதலுக்குப் பிறகாவது பாடத்திட்டத்திலே சமூகச் சீர்திருத்தம், தீண்டாமை, ஜாதி ஒழிப்புப்பற்றிய பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
கிராமப்பகுதிகளிலே ஜாதியை வளர்க்கும் அமைப்புகள் ஊர் நாட்டாமைகள் இன்னும் இருக்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து கல்லூரிகளுக்கும் படிக்க வரும் மாணவர்கள் அந்தத் தொற்று நோயைச் சுமந்து வருகிறார்கள். எனவே, இதன் மூலத்தையும் அறிந்து அதில் கைவைக்க வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இட ஒதுக்கீடு கொடுப்பதால்தான் ஜாதி வளர்கிறது என்கிற ஒன்றைக் கிளப்பிட முயலுகிறார்கள்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னையில் இதுகுறித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஒருவர் - தலித் மாணவர்களுக்கு மாநில அரசு இட ஒதுக்கீடு கொடுத்து ஒதுக்கி வைத்துவிட்டது (தீக்கதிர், 26.11.2008, பக்கம் 6) என்று குற்றப்பத்திரிகை படித்துள்ளார்.
இட ஒதுக்கீடு என்பது உரிமைகள் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் உதவியே தவிர, ஜாதியை வளர்ப் பதற்கான கூறு அல்ல. இட ஒதுக்கீடு விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை - அணுகுமுறை மாறி யிருக்கிறதா? என்று தெரியவில்லை.
அதேபோல, சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை - உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள், நுழைவுத் தேர்வு முறை தேவை என்ற ஒரு யோசனையைக் கூறியிருக்கிறார்.
நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களைத் தேர்வு செய்த நேரத்தில், சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியிலே தகராறுகள், அடிதடிகள் நடக்கவில்லையா?
ஒரு அரசு சட்டம் இயற்றி, நீதிமன்றமும் ஒப்புக்கொண்ட ஒன்றை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மறுதலித்துப் பேசுவது நியாயமும் அல்ல, நீதியும் அல்ல.
மனித உணர்வுக்கும், உறவுக்கும் ஜாதி தீங்கானது என்பதை மாணவச் சமுதாயம் உணர்ந்திட வேண்டும்.
படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச் சாக்கடையில் வீழ்வதற்கல்ல!
நன்றி : விடுதலை (27.11.2008)
Wednesday, November 26, 2008
எதிர்பாரப்பை உருவாக்கியுள்ள மாவீரர் நாள்......
மற்றொரு மாவீரை நாளை அனுட்டிக்க உலகம் வாழும் ஈழத் தமிழ் மக்கள் கரம் கோர்த்து நிற்கின்றார்கள். வழக்கமான மாவீரர் நாளை விட இம்முறை மாவீரர் நாள் அதிக எதிர்பார்ப்புக்கள் நிறைந்ததாக இருக்கின்றது. குறிப்பாக மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் என்ன கூறப்போகின்றார் என்பதை அறிய தமிழ் மக்கள் மட்டுமன்றி ஈழ அரசியலில் அக்கறை கொண்ட அனைவருமே ஆவலாகக் காத்திருக்கின்றனர்..மேலும்
நன்றி : நிலவரம்
Tuesday, November 25, 2008
மனைவியை விற்கும் வேதனைக் கணவர்.....
அனால், மேலைநாட்டுக்காரர்கள் அப்படி அல்ல சாம்பாருக்கு சரியாக மசாலா போடாவிட்டால் கூட மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு இளம் பெண்ணுடன் கைகோத்துக்கொண்டுவிடுவார்கள்.
கனடா நாட்டை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளால் பெருந்தொல்லை. பொருத்து பார்த்த அவர் மனைவிக்கு சரியான சாட்டையடி தர நினைத்தார்.
இதற்க்காக அவர் செய்த காரியம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள பிரபலமான கார் விற்பனை இணையத்தளத்தில் மனைவி விற்பனைக்கு என்று விளம்பரம் கொடுத்துவிட்டார். இணையத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு.
1. என் மனைவி விற்பனைக்கு !
2. மாடல் 1983
3. நன்றாக இயங்கும் நிலையில் குட் கண்டிசன்.
4. இதுவரை ஒரே ஆள்தான் ஒட்டியது. நீங்கள் இரண்டாவது ஒனேர்.
5. 3 வயது, 5 வயதில் டூல்ஸ் பாக்ஸ் உண்டு.
6. குறைந்தபட்ச விலை ஆயிரம் டாலர்.
இப்படிப்பட்ட விளம்பரத்தை பார்த்துவிட்டு ஏராளமான பேர் அவரை தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர். அனால் ஆயிரம் டாலருக்கு குறைவாக கேட்பதால் இன்னும் அவர் யாருக்கும் விற்க வில்லை.
என்ன ஒரு வில்லத்தனம்.....இந்த கணவனாக வொர்க் பன்னுவருக்கு.....
Monday, November 17, 2008
தினமலத்தின் சிண்டு முடித்தனம்......
அதில் விடுதலை புலிகள் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் தன் இன மக்களை அளித்துக்கொண்டிருக்கிராரம் மேலும் தமிழக திரை உலகத்தினரை மதிப்பதும் இல்லையாம். இப்படி பல பொய்களை டக்லஸ் அவிழ்த்துவிட்டிருக்கிறார். அதனை இந்த தினமலம் வெளியிட்டு தமிழர் நலம் காக்கிறதாம். இதனை பெரிய எழுத்தில் வெளியிட்ட இந்த சிண்டு முடியும் கூடத்திற்கு டெல்லியில் இரண்டு தமிழ் எம்.பிக்கள் திரு பிரபாகரனை பற்றி பதினைந்து நிமிடம் பேட்டி அளித்துள்ளார். இதனை ஏன் இந்த நடு நிலை என கூறிக்கொள்ளும் தினமலம் வெளியிடவில்லை.
அந்த டக்லஸ் சொன்னது போல திரு பிரபாகரன் தன் இனமக்களை அளிப்பவர் என்றால் ஏன் ஒரு பொதுமக்கள் (சிங்கள மக்களையும் சேர்த்து) கூட பாதிக்கப்படாமல் கொழும்பு மின்தளத்தின் மீது விமான தாக்குதல் நடத்த வேண்டும். இது போல பல தாக்குதல்களை பிரபாகரன் நடத்துகிறார்( 2001 விமான தளம் தாக்குதல் உள்ளிட்டு). இதில் இருந்தாவது இந்த தினமலத்திற்கு புரியாத பிரபாகரன் எப்பொழுதும் ஒரு பொதுமக்கள் கூட பாதிக்க படக்கூடாது என நினைப்பவர் என்று. எனவே இலங்கை ராணுவம் தமிழர் இனபடுகொலை நடத்துவது போல சிங்கள மக்களை கொள்வது விடுதலை புலிகளின் நோக்கம் அல்ல. அவர்கள் தாக்குவது அனைத்தும் சிங்கள அரசையும் அதனை சர்ந்தவைகளையும் மட்டுமே.
ஏய் தினமலமே நீ என்னதான் நடு நிலை, தமிழன் நலன் என்று கூறினாலும் இங்கு தமிழர்கள் ஏமாறும் சூத்திரர்களாக இல்லை. அந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. எனவே இந்த மாதிரி டக்லஸ் எழுதினாரு சங்கராசாரி எழுதினாரு அப்படின்னு நீ வெளிட்டு கொண்டிருக்க வேண்டியதுதான் அனால் அந்த பொய்களை யாரும் நம்ப தயாராக இல்லை. நீயும் உன் திண்ணை தூங்கி கூட்டமும் இது போன்று நீங்களே எழுதி நீங்களே படித்துக்கொண்டு தமிழனை இப்படியாவது இழிவுபடுதுகிரோமே என்று ஆறுதல் பட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
தமிழர்களே இனியாவது பார்பன ஏடுகளை புறக்கணிப்போம்.....
Saturday, November 15, 2008
பூநகரி வெற்றியை ஒரு வார விழாவாக கொண்டாடுகிறது சிறிலங்கா அரசு....
தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதற்கு தலைநகர் கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் தொடர் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பூநகரி ஊடாக செல்லும் ஏ-32 வீதியை படையினர் முழுமையாக கைப்பறிய செய்தியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடாக இன்று சனிக்கிழமை இரவு அறிவித்ததுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.
இதனையடுத்து அரச தலைவர் செயலகத்தின் ஆலோசனையில் விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள கிராமங்களில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு வெற்றி விழா கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்களை விமல வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் வெற்றி விழா மிக விரைவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.
இப்பொழுதாவது புரிந்து கொள்ளுமா இந்த மத்திய அரசு. மகிந்தே அரசு அங்கு நடத்தும் போர் இன அழிப்பு போர் என்று. அவர் சொல்லும் தமிழ் இனம் காப்பாற்றப்படும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று இனியும் இவர்கள் புரிந்து கொண்டு நடக்கவில்லை என்றால் தமிழனின் தயவால் ஆட்சி நடுத்தும் அவர்களின் தமிழ் விரோத ஆட்சி தேவை இல்லை என்பதே ஒவ்வரு தமிழனின் கோரிக்கை.
Thursday, November 13, 2008
பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிப்போம்!
சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று சொன்ன டாக்டர் டி.எம். நாயர் வாயில் சர்க்கரையைத்தான் போடவேண்டும்.
ஒவ்வொரு நிமிடத்திலும் நாடு அந்த நிலையைப் பார்த்துக்கொண்டுதான், அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறது.
குறிப்பாக, ஈழத் தமிழர் பிரச்சினையில் பார்ப்பன மக்கள் நடந்துகொண்டு வரும் போக்கைக் கவனிக்கும் எவரும் பொறுமையை இழக்கத்தான் செய்வார்கள்.
தமிழர்களை சிங்களவர்கள் வெறுப்பதைவிட பல மடங்கு அதிகமாக இந்தப் பார்ப்பனர்கள் வெறுப்பதை அறிய முடிகிறது.
அதுவும் ஏடு நடத்தும் பார்ப்பனர்கள், எழுதுகோல் பிடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்கள் தமிழர்கள் மீதான தங்களின் பரம்பரை வன்மத்தை, இந்தச் சந்தர்ப்பத்தில் பல மடங்கு பெருக்கியே காட்டுகிறார்கள்.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும் என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு (6.11.2008) பார்ப்பன ஏடுகள், ஊடகங்களின் தமிழர் விரோதப் போக்கினை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, கடைசியாக தமிழர்களே, பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்கவேண்டாமா? என்ற வினாவை எழுப்பியபோது, புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! என்று பார்வையாளர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்.
தமிழர்களின் இந்த உணர்வைக்கூட அவர்கள் கொச்சைப்படுத்துவார்கள் - கேலி செய்வார்கள் என்பதை அறியாதவர்களா நாம்?
இந்தியா டுடே என்ற தமிழ் வார ஏட்டில் (5.11.2008) வாஸந்தி என்ற பார்ப்பன அம்மையார் ஏன் இந்த வார்த்தைப் போர்? என்ற தலைப்பில் நஞ்சைப் பிழிந்து கொடுத்துள்ளார்.
தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர், மனத்துக்குத் தெம்பைத் தருவது; முக்கியமாக அவரது பரம வைரியான அ.தி.மு.க. தலைவி, திடீரென்று ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு ஆதரவுக் கரம் நீட்டி கருணாநிதி வெறும் வேஷதாரி என்று சொன்னதும், அடிபட்ட வேங்கையாகப் பொங்க வைப்பது. எதிர்க்கட்சியி னரின் பொறுப்பற்ற விமர்சனத்துக்கெல்லாம் பதில் சொல்ல முதல்வர் ஏன் மெனக்கிடுகிறார் என்பது புரியவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஆழம் தெரியாமல் காலை விட்டதில் தேசியத் தலைவராக உருவாகி வந்த பிம்பத்தில் கீறல் விழுந்ததை அவர் கவனிக்கவில்லை. முரசொலியில் வெளியிடப்படும் அறிக்கைகளும், மடல்களும் அவரது தன்னம்பிக்கை தளர்ந்து போனதைத் தெரிவிக்கின்றன. தன்னைவிட ஜெயலலிதா தமிழினப் பற்றுடையவர் இல்லை என்பதை பக்கம் பக்கமாக விளக்கும் பலவீனம் அவருக்கு ஏற்பட்டு இருப்பது விசித்திரம். புலிகளின் பகிரங்க அபிமானியான ம.தி.மு.க. தலைவர், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகங்களை வாபஸ் பெறவேண்டும் என்று சொன்னால், அதை யாரும் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. ஆனால், மத்திய அரசில் முக்கிய பங்கு உள்ள தி.மு.க. தலைவர் தாமே முடுக்கிவிட்டுக் கொண்ட உணர்ச்சி வேகத்தில் சிக்குண்டு, அண்டை நாட்டின் இறையாண்மையை கவனத்தில் கொள்ளாமல் பேசுவது சர்ச்சைக்குரியது.
பழுத்த அரசியல்வாதியான முதல்வருக்கும், சட்ட சாஸனத்தின் மேல் பதவிப் பிரமாணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை என்பது வேறு நாடு என்பது அவர்களை நிர்ப்பந்திப்பதோ, எச்சரிக்கை விடுவதோ அந்த நாட்டின் இறையாண்மைக்கு விரோதமானது என்பதும் தெரியாதா? வங்கதேசப் போர் நடத்தி கிழக்குப் பாகிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத் தரவில்லையா என்று நமது தமிழ் உணர்வுள்ள கட்சித் தலைவர்கள் ஈழப்போருக்கு உதவச் சொல்கிறார்கள். நாம் பாகிஸ்தானுக்குச் சொந்தமாக இருந்த கிழக்குப் பகுதியில் நுழைந்து போரிட்டது மாபெரும் தவறு.
- இதுதான் பார்ப்பன அம்மையாரின் கடைந்தெடுத்த நச்சு எழுத்துகள்.
தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர் கலைஞருக்குத் தெம்பைத் தருகிறதாம்.
எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேலி, லோகக் குரு என்ற பட்டப் பெயர் மட்டும் இவர்களுக்கெல்லாம் இனி இனி என்று இனிக்கும்.
ஆமாம்! அவர்கள் நம்பிக்கைப்படி ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் அவர்தான் தலைவர். வாடிகன் நகருக்குக்கூட சங்கராசாரிதான் குரு - இதனை நாம் நம்பவேண்டும் - அப்படி நம்பாவிட்டால், ஏற்காவிட்டால் அதற்காக அவர் தயாராகச் சூட்ட வைத்திருக்கும் பட்டம் இனத் துவேஷம்!
கடலைத் தாண்டிச் செல்லுவதே தோஷம் என்று எழுதி வைத்திருக்கிற அதே கூட்டம்தான் சங்கராச்சாரியாரை லோகக்குரு - உலகத்துக்கே குரு என்று சொல் லுகிறது - இப்படியெல்லாம் நாம் கேள்வி எழுப்பினால், அதற்கும் ஒரு பட்டத்தை நமக்குச் சூட்ட தயாராக வைத்திருக்கிறார்கள் - அதுதான் விதண்டாவாதம் என்னும் பட்டம்.பயங்கரவாதம் என்பதில்கூட அவர்களுக்கு இரட்டை அளவுகோல் உண்டு. இராமன், சம்பூகன் என்ற சாதுவை வாளால் வெட்டிக் கொன்றால் அவர்கள் தயாராக வைத்திருக்கும் சொலவடை தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தைச் செய்வதும் ஒருவகை தர்மம்தான் என்பதுதான்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி - அவர்கள் கண்ணோட்டத்தில் மகாசமர்த்தன் - நிருவாகி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். ஒரே வாரத்தில் கலவரத்தை அடக்கிய திறமைசாலி - பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்று நூல் பிடித்ததுபோல பார்ப்பனர்கள் எழுதுவார்கள்.
கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்த சங்கராச் சாரியாரை வரவேற்று தம் சொந்த காரில் அழைத்து வந்து காஞ்சி மடத்துக்குக் கொண்டு வந்து அமர்த்துவார் இந்து ஏட்டின் ஆசிரியர் என். ராம்.
தம் இன மக்களின் மான வாழ்வுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத் துக்கு ஆளானவர்களை இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் பயங்கர வாதிகள் என்று நாமகரணம் சூட்டுகிறார்கள்.
இலங்கை இன்னொரு நாடாம். அதில் தலையிடக்கூடாதாம். இந்த நிலையை எடுப்பதற்கு - பாகிஸ்தானோடு இந்தியா போர் நடத்தி வங்க தேசத்தை உருவாக்கித் தந்தது தவறு என்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வக்காலத்துப் போட்டு எழுதுகிறார் பார்ப்பன அம்மையார் இந்தியா டுடே இதழில்!
இந்தச் சாமர்த்தியம் எல்லாம் யாருக்கு வரும் - அவாளைத் தவிர!
தமிழில் ஏடு நடத்தி, தமிழர்களிடத்திலே விற்றுப் பணம் பறித்து தமிழர் களையே கொச்சைப்படுத்தும் இந்தப் பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்க வேண்டாமா?
தமிழர்களே சிந்திப்பீர் - செயல்படுவீர்!
நன்றி விடுதலை
Tuesday, November 04, 2008
பெரியார் சொல்லும் தமிழர் திருமணம்......
தந்தை பெரியார் அவர்கள் “சித்திர புத்திரன்” என்கிற புனைப் பெயரில்14-03-1950 விடுதலை நாளிதழில் “திருமண விழா: வினா விடை” என்ற தலைப்பில்சுயமரியாதைத் திருமணம் குறித்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்தவினா-விடை உங்கள் பார்வைக்காக:
சுயமரியாதைத் திருமணம் என்பது எது?
நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனை புரோகிதனாக வைத்து நடத்தாததிருமணம் சுய மரியாதைத் திருமணமாகும்.
பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?
நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்றுஅறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமானகாரியங்களைச் (சடங்குகள்) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவுதிருமணம் ஆகும்.
தமிழர் திருமணம் என்றால் என்ன?
புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ளஉரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனுநீதி இல்லாமல் வாழ்க்கையில், கணவனும் மனைவியும் சரிசம உரிமை உள்ள நட்புமுறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் (திராவிடர்)திருமணமாகும்.
சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?
ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கைஇல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல், அன்னியர்மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்தும், அல்லது தெரிந்து கொள்வதைப்பற்றிக் கவலையில்லாமல் மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும்,மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்துகாதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.
புரட்சித் திருமணம் என்றால் என்ன?
தாலி கட்டாமல் செய்யும் திருமணம் புரட்சித் திருமணமாகும்.
சிக்கனத் திருமணம் என்றால் என்ன?
கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம்,ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒருவேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதும் ஆன ஆடம்பர காரியங்கள்சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.
இவைகளையெல்லாம் சேர்த்து நடத்துகிற திருமணத்திற்கு ஒரே பேராக என்னசொல்லலாம்?
நவீனத் திருமணம் அல்லது தற்காலமுறைத் திராவிடத் திருமணம் என்றுசொல்லலாம்.
சுயமரியாதைக் கோட்டை......
காலையில் வடசேரி திருமணம், மதியம் மன்னார்குடி - மாலையிலே நீடாமங்கலம் பொதுக்கூட்டம் ஆகிய மூன்று ஊர்கள் சுற்றுப்பயணத்திற்கு நாள் சென்னையிலிருந்து புறப்படுகின்ற நேரத்தில் எதிர்பாராமல் முதல்வரை சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத் தது.
அப்பொழுது முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே கேட்டார்கள். நாளை சுற்றுப்பயணத்திற்கு எந்தெந்த ஊர்களுக்குப் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.
நான் வரிசையாகச் சொன்னவுடனே உடன் அமர்ந்திருந்த சில அமைச்சர் பெருமக்கள் மற்றவர்கள் எல்லோரிடத்திலும் முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார் கள், ஓகோ! நம்முடைய சுயமரியாதைக் கோட்டைகளுக்குச் செல்லுகிறீர்கள் என்று அந்த ஊர்களையெல்லாம் நினைத்து உடனடி யாக மகிழ்ச்சியோடு சொன்னார்கள் (பலத்த கைதட்டல்). எனவே இன்னமும் அவர் களுடைய கணிப்பிலே எந்தெந்த ஊர் எப் படிப்பட்டது என்பதை 85 வயது இளைஞ ராக இருக்கக் கூடிய அவர்கள் 95 வயது இளைஞரைத் தலைவராக என்றைக்கும் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களுடைய கணிப் பிலே இந்தப் பகுதி எப்படிப்பட்டதாக இருக் கிறது என்பதை எல்லாம் அறிந்தவர்கள் அவர்கள்.
எல்லா கிராமங்களிலும் எப்படி தந்தை பெரியார் அவர்களுடைய காலடி படாத இடமே இல்லை என்று நினைக்கின்றார்களோ, அதுபோல நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்களும் எல்லாப் பகுதிகளையும் புரிந்தவர்கள். அறிந்தவர்கள் - தெரிந்தவர்கள்.
(31-10-2008 அன்று நீடாமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து....)
Monday, November 03, 2008
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி யார் பராக் ஒபமாவா ? ஜோன் மெக்கெயினா ?
உலகெங்கும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்களிப்பு உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணி முதல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் 44வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க அமெரிக்காவின் 51 மாநிலங்களையும் சேர்ந்த சுமார் 130 மில்லியன் மக்கள் இன்று (11/04/2008) உத்தியோகபூர்வமாக வாக்களிக்கவுள்ளனர்.நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்தால் அதற்குத் தகுந்தவாறு நேரத்தை நீடித்துக் கொள்ள அனைத்து மாகாண உள்ளூர் நிர்வாகத்துக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். அவ்வப்போது யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். மாகாண வாரியாகவும் முன்னிலை அறிவிக்கப்படும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜோன் மெக்கெயினும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினெய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் வானொலி தொகுப்பாளர் சக் பால்ட்வினும், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினியும், சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இருப்பினும், ஜோன் மெக்கெயின்ஒபாமா இடையே தான் நேரடிப்போட்டி நிலவுகிறது.
ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் இன்று நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலையொட்டி, கடந்த ஜுன் மாதம் ஜோன் மெக்கெயினும், ஒபாமாவும் அவரவர் கட்சி வேட்பாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, வாக்காளர்களிடம் இருவரும் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.
இன்று தேர்தல் நடப்பதையொட்டி, இருவரும் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். ஜோன் மெக்கெயின், வேர்ஜினியா மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். இந்த மாநிலத்தில், 1964 ஆம் ஆண்டில் இருந்து குடியரசு கட்சிதான் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு ஜோன் மெக்கெயின் பிரசாரம் செய்கையில், கருத்து கணிப்பில் பின்தங்கி இருந்தாலும், முன்னேறி வருவேன் என்று கூறினார்.
நெவடா, கொலராடோ, மிசோரி ஆகிய மாநிலங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இவை கடந்த தேர்தலில் புஷ்சுக்கு வெற்றி தேடித்தந்த மாநிலங்கள் ஆகும். ஒபாமா தனது பிரசாரத்தின்போது, எங்களுக்கு சாதகமான அலை வீசுகிறது, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன், அமெரிக்காவில் முழுமையாக மாற்றத்தை கொண்டு வருவோம், எங்களால் முடியும் என்று கூறினார்.
பொறுத்திருந்து பார்ப்போம் .......யாருக்கு வெற்றி........
கருமாதி பத்திரிக்கையின் கவலை......
மலேசிய உள்துறை அமைச்சகம்: "ஹிண்ட்ராப்" வன்முறையை தூண்டி வருகிறது. மலேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்ப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டவுட்தனபாலு: வெறும் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருந்த அமைப்பே அங்கெ தடை சென்ச்சுட்டாங்க... இங்கே, முன்னால் பிரதமரையே கொன்ற அமைப்புக்காக, ஆளாளுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு இருக்காங்க....அப்புறம் ஏன் அங்கெ சட்டம் ஒழுங்கு நல்ல இருக்காது...!
மேலே உள்ள செய்தி 19.10.2008 தினமலர்(மலம்) கருமாதி பத்திரிக்கையில் "டவுட்தனபாலு" பகுதியில் வந்தது.
மகாத்மாவை சுட்டுக்கொன்ற கூட்டமாயிற்றே. அதனால் தான் இந்த கவலை போலும். இந்த கூட்டம் பாபர் மசூதியை இடித்து கலவரத்தை ஏற்ர்ப்படுத்திய கூட்டம். இவை அனைத்தையும் செய்துவிட்டு இந்த கூட்டம் ஒரு முறை இந்தியாவின் அட்சிபீடதிலும் அமர்ந்தது. இந்த ஆட்சியில் பாபர் மசூதி இடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஒருவர் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். அப்பொழுதெல்லாம் சட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்படாத இந்த தினமலம் இப்பொழுது சட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.
ஏய் தினமலமே முதலில் அந்த இயக்கத்தை தடை செய்ய சிபாரிசு செய்யலாமே?. நீங்கள் அதனை எல்லாம் செயமாட்டீர்கள் ஏனென்றால் நீங்கள்தான் அந்த இயக்கத்தின் சின்னத்தேயே தங்களது பத்திரிக்கையின் குறியீடாக வைத்துள்ளீர்கள். அப்படி பார்க்க போனால் உங்களையே தடை செய்ய நேரிடும். (சட்டம் ஒழுங்கை துண்டுபவருக்கு அதரவாக இருப்பதற்க்காக ). எதற்கும் உசாராக இருந்துகொள்ளுங்கள்.
Saturday, November 01, 2008
தினமலர்(மலம்) ஆவேசம்.....
வழக்கம் போல 02.10.2008 தினமலர்(மலம்) டவுட் தனபாலு பகுதியில் அதன் ஆவேசத்தை கருமாதி பத்திரிகை காட்டியுள்ளது.
நடிகர் கமலகாசன்: யார் பயங்கரவாதி என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அன்று பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட வாஞ்சி நாதன் இன்று நம்மால் தியாகியாக போற்றப்படவில்லையா?
டவுட் தனபாலு: ஆகா...அருமையான பேச்சு...ஆழ்ந்த கருத்துக்கள்...அன்னிக்கு பயங்கரவாதியாக இருந்த வாஞ்சிநாதன் இன்னிக்கு தியாகி ஆகிட்டாருன்னு சொன்னிங்க....அதே மாதிரி, அன்னிக்கு ராஜிவை கொன்னவங்களை, இன்னிக்கு எப்படி அலைக்கிரதுன்னு நீங்கேளே சொல்லிடுங்க....!
திரு.கமலகாசன் இந்த கூட்டத்தை விட்டு சற்றே விலகி இருப்பதால் தான் இந்த தினமலர்(மலம்)திற்கு திரு.கமலகாசன் மீது இவளவு ஆவேசம் போலும்.
டவுட் தனபாலுக்கு எவளவு நாம சொன்னாலும் அவரு லவுட் தனபாலவே இருக்காரு. ராஜிவை கொன்னவங்களை மட்டும் கேட்ட லவுட்டுக்கு, இன்னும் சிலவற்றை நான் நினைவுபடுத்துகிறேன்.
அன்று பாபர் மசூதியை இடித்து இந்தியாவில் மதக்கலவரத்தை எற்படிதியவர்களை இன்று நீங்கள் அவர்களை எப்படி அழைக்கிறீர்கள்?
அன்று மகாத்மாவை கொன்றவரை இன்று தியாகியாகியதொடு இல்லாமல் அவருக்கு பாராளுமன்றத்தில் சிலை வேறு.
இதனை எல்லாம் கருமாதி பத்திரிக்கையின் லவுட் நினைவில் வருவதில்லை. காரணம் இந்த மலமும் அந்த இனம் தானே அதனை அடிக்கடி நமக்கு நினைவுபடுத்துகிறது. ஏன்னா நாம் மறந்துவிடுவோம் அல்லவா அதனால். நீ எந்த இனம் (குள்ள நரிக்கூட்டம்) என்று நாங்கள் எந்த நாளிலும் மறக்க மாட்டோம். அதனால் இப்படி சொன்னேதேயே சொல்லி சொல்லி, எங்களையும் மீண்டும் அதே பதிலை சொள்ளவைக்கதே முட்டாள் மலேமே.
எனவே தினமலரை வாசித்துவிட்டு நாம் ஏதோ நடுநிலை செய்தியை பெற்றுவிட்டோம் என பெருமை படும் தமிழனே இப்பவாது புரிந்துகொள் அவர்கள் தமிழனுக்காக பத்திரிக்கை நடத்துகிறார்களா? இல்லை இல்லை அவாளுக்காக.
எனவே இந்த குள்ள நரிக்கூட்டம் எதனையாவது மிக மிக எதிர்த்தால் அது தமிழனுக்கு மிக பெரிய சாதகமான ஒன்றாக இருக்கும் என்று நினைவில் வைத்து இந்த கருமாதி பத்திரிக்கையை வாசிப்பீர்களாக....
Saturday, October 18, 2008
விடியல் ஏற்படட்டும் ஈழ தமிழருக்கு!
ஈழ தமிழர் படுகொலையை கண்டித்து மனிதசங்கிலி வரும் 21.10.2008 தேதி நடைபெறும் என தமிழக முதல்வர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்த முடிவு மிகவும் வரவேற்க படவேண்டிய ஒன்று.
ஆனால் முன்னால் முதல்வர் அம்மையார் ஜெ . ஜெயலலிதா அனைத்துக்கட்சி கூட்டத்தை ஒரு கபட நாடகம் என்று கூறிவிட்டு மனிதசங்கிளியால் ஒன்றும் ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
இதே மனிதச்சங்கிலி போராட்டம் தான் அமெரிக்காவில் ஒரு அரசையே பதவி இழக்க செய்தது. வியட்னாம் போரின்போது வியட்நாம் குடியரசுக்கு (தென் வியட்நாம்) அன்றைய அமெரிக்க ஜனாதிபதி Lyndon Baines Johnson பதினராயிரம் ஆக இருந்த அமெரிக்க ராணுவத்தை 550,000 அதிகப்படுத்தினார். இதனை அந்த நாட்டு மக்கள் எதிர்த்தனர் ( ஏனென்றால் மொத்தமாக 1.4 மில்லியன் இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் அமெரிக்கராவார். இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார்.). அதனால் இறப்பது நம் அமெரிக்க மக்களும்தான் என்று ஜனாதிபதி ஜோன்சனிடம் எதிர்ப்பை தெருவித்து வியட்நாமுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்பாதே என்று சுமார் இரநூறு கிலோமீடர் தூரத்திற்கு மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர் அனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அனுப்பினார். அனால் பின் நாளில் அந்த போராட்டமே நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி அவரை பதவி இழக்க செய்தது. எனவே மனிதசங்கிலி போராட்டம் என்பது அம்மையார் ஜெ. ஜெயலலிதா போன்றவர்களுக்கு சாதரண விசயமாக இருக்கலாம். நம்மை பொறுத்தவரை அது ஈழத்தில் ஒரு தீர்வை ஏற்படுத்தும் ( எப்படி அன்று அமெரிக்காவில் எற்படித்தியதோ அதனைபோல்) என்ற நம்பிக்கையில் அதனை ஆதரிப்போமாக.....
வெல்லட்டும் மனிதசங்கிலி போராட்டம்..
விடியல் ஏற்படட்டும் ஈழ தமிழருக்கு !