நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்தால் அதற்குத் தகுந்தவாறு நேரத்தை நீடித்துக் கொள்ள அனைத்து மாகாண உள்ளூர் நிர்வாகத்துக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். அவ்வப்போது யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். மாகாண வாரியாகவும் முன்னிலை அறிவிக்கப்படும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜோன் மெக்கெயினும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினெய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் வானொலி தொகுப்பாளர் சக் பால்ட்வினும், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினியும், சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இருப்பினும், ஜோன் மெக்கெயின்ஒபாமா இடையே தான் நேரடிப்போட்டி நிலவுகிறது.
ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் இன்று நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலையொட்டி, கடந்த ஜுன் மாதம் ஜோன் மெக்கெயினும், ஒபாமாவும் அவரவர் கட்சி வேட்பாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, வாக்காளர்களிடம் இருவரும் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.
இன்று தேர்தல் நடப்பதையொட்டி, இருவரும் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். ஜோன் மெக்கெயின், வேர்ஜினியா மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். இந்த மாநிலத்தில், 1964 ஆம் ஆண்டில் இருந்து குடியரசு கட்சிதான் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு ஜோன் மெக்கெயின் பிரசாரம் செய்கையில், கருத்து கணிப்பில் பின்தங்கி இருந்தாலும், முன்னேறி வருவேன் என்று கூறினார்.
நெவடா, கொலராடோ, மிசோரி ஆகிய மாநிலங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இவை கடந்த தேர்தலில் புஷ்சுக்கு வெற்றி தேடித்தந்த மாநிலங்கள் ஆகும். ஒபாமா தனது பிரசாரத்தின்போது, எங்களுக்கு சாதகமான அலை வீசுகிறது, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன், அமெரிக்காவில் முழுமையாக மாற்றத்தை கொண்டு வருவோம், எங்களால் முடியும் என்று கூறினார்.
பொறுத்திருந்து பார்ப்போம் .......யாருக்கு வெற்றி........
No comments:
Post a Comment