Tuesday, September 06, 2011
கல்லை கல்லுன்னு நீ சொன்ன என்ன - நான் சொன்ன என்ன?
முதலாளி: கடை வீதியிலே யாருட்டேயோ சொன்னியாமே - எங்க எஜமான் ஊருக்கு
நல்லதுதான் செய்றாரு.ஆனா கோயிலில் இருக்கிறேதேல்லாம் கல்லுன்னு சொல்லுறாருன்னு
சொன்னியாமே! அப்படியா சொன்னே கோயில்லே கல் இல்லாம வேற என்னாட இருக்கு?
வேலை ஆள்: சாமிதானுங்க எசமான் இருக்கு
முதலாளி: சாமியா? இங்கே வாடா (வருகிறான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்குடா.
கையை இப்படி வைடா. (நடராஜர் சிதம்பரத்திலிருப்பதுபோல் நிற்க்கச் செய்கிறார்).
நிற்கிறான் வேலை ஆள். பத்திரிகை படித்துகொண்டு இருக்கிறார் முதலாளி.(வேலை ஆள் காலை
ஊண்டுகிறான்). டேய் தூக்குடா காலை. நில்லுடா (மறுபடியும் காலை தூக்கி சிறிதுநேரம்
நின்று விட்டு காலை ஊண்டுகிறான்). டேய் ஏண்டா உண்டுன. தூக்குடா காலை.
வேலை ஆள்: காலை வலிக்குதுங்க எஜமான்
முதலாளி: ஏண்டா ரெண்டு நிமிஷம் நிக்கிறதுக்கு காலை வலிக்குதுன்னு சொல்றியே -
அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊண்டாமே இருக்குதேடா?
வேலை ஆள்: அது கல்லு எஜமான்
வேலை ஆள்: இனிமே சொல்லமாட்டேனுங்க எஜமான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment