அடிமை
ஆசிரியர்: டாக்டர் அம்பேத்கர்
வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 41 -பி,
சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர்,
சென்னை - 600 098
பக் : 32 விலை ரூ. 20 /-
இந்தியாவில் அடிமைத்தனம் எப்போதும் இருந்ததில்லை. இந்து மதத்தின் பெருமையது என இப்போது சங்பரிவார் பீற்றித்திரிகிறது. அதேபோல் இந்து மதத்தை சகிப்புத்தன்மையின் மாதிரிபோல் சிலர் செப்பித்திரிகிறார்கள். இந்த இரண்டும் மிக மிக தவறான கண்ணோட்டம். இந்தியாவில் அடிமைத்தனம் இருந்ததையும், அடிமைத்தனத்தை விட மோசமான தீண்டாமை இருப்பதையும் மிகத் தெளிவாக வரையறை செய்து காட்டுகிறார் டாக்டர் அம்பேத்கர். சாதியஒடுக்குமுறை குறித்து மிக ஆழமான மிக நுட்பமான ஆய்வுகளை மேற்கொண்டு வலுவான ஆதாரங்களோடு தீண்டாமையை தோலுரித்து காட்டிய அம்பேத்கரின் கட்டுரைகளில் இது குறிப்பிடத்தக்கது. தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் ஒப்பிட்டு இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வரைந்துகாட்டி தீண்டாமையே ஆகப்பெருங்கொடுமை என்பதை இந்நூலில் நன்கு வாதிட்டுள்ளார் டாக்டர் அம்பேத்கர்.
நன்றி: தீக்கதிர், 20-07-2014