பால்யே பிதிர்வஸே விஷ்டேது
பாணிக்ரஹா யௌவ்வனே
புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
நபஜேத் ஸ்த்ரீ ஸ்வதந்த்தரம்
அதாவது, பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். என்று முதல் மூன்று வரிகளுக்கு அர்த்தம்.
நான்காவது வரி இன்னும் தெளிவாக சொல்லுகிறது, அதாவது, "பெண்ணே உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள் - ஆகவே ஆண் சொல்படி கேள்.” (ஆதாரம் நூல் : "சாதி மதம் வர்க்கம்", ஆசிரியர் கே வரதராசன்,வெளியீடு: பாரதி புத்தகாலயம் )
எவ்வளவு கேடுகெட்ட பெண்ணடிமை தனம்...எப்படி இருக்குது பார்த்தீர்களா? பெண்களே உங்களை பெற்றுடுத்த பெற்றோர்கள் இப்படி கூறினால் கூட பொறுத்துக்கொள்ள முடியாதுதானே....இதனை எதிர்த்து பெண்கள் போராட வேண்டாமா? கேள்வி கேட்க வேண்டாமா? சரி குறைந்தபட்சம் இப்படி மனுநீதி கூறும் இந்து மத கடவுளுக்கு அர்ச்சனை கூடை தூக்காமல் இருந்தால் போதுமே? இப்படி மனு நீதியை கூறும் கடவுளை ஒழிக்க பெண்கள் தான் தீர்வு காணவேண்டும்.