வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, January 08, 2009

தமிழர் திருநாள் - பகுத்தறிவு பொங்கல் பொங்குக!....

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பார்பனர்கள் தான் சங்கராந்தி என்று கூறி தங்களது ஆரியக் கலாச்சாரத்தையொட்டி - வடமொழியில் பெயரிட்டு சங்கராந்திதான் கொண்டாடு வார்களே தவிர - ஒருபோதும் பொங்கல் என்று வாய் தவறியும் சொல்லிவிடமாட்டார்கள்!
அதனிலும் மதச்சேற்றைப் போட்டுக் குழப்பி சங்கராந்தி என்றும் பெயரிட்டு தங்கள் முத்திரையைக் குத்தி வைத்து இருக்கின்றனர். அந்த மதநாற்றத்தை இதோ கேளுங்கள்

சூரியன் தனுர்; ராசியில் சஞ்சரிக்குங் காலம் இது தேவர்களுக்கு விடியற் காலம். மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தட்சீணாயனம் ஆறு மாத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத் தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவமாய் அதஞ்செய்திருந்த படியால் அப்பசுக்களைக் கொண்டு அப்புலியுருக்கொண்ட சக்தியை ஓட்டின நாள். இதனை மாட்டுப்பொங்கல் சொல்லுவார்களாம்.

இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தைமாதம் முதலில் அறுத்த, முதற்பயிரை மழைக்கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின் அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற , கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தலை அவிழ்த்துவிட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண்பொங்கல் எனவும் சொல்லுவார்களாம்.

இப்படி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டு வருணபகவான், சூரியன் என்று கூறி நம் தமிழர் திருநாளை மதத்தோடு தொடர்பு படுத்தி வைத்து இங்கு நம் தமிழர்களை முட்டாளாக்கி வைத்து அவர்கள் குளிரக்காயகிரர்கள். இது தெரியாமல் நம் மக்களே சிலர் கூமுட்டைகலாகி, அவர்களின் மூட விலங்கினில் இருந்து வெளிய வரமுடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த அடிமட்ட கூமுட்டை மக்களுக்கு எவளவு கூறினாலும் நீ பெரியார் இயக்கத்தை சேர்ந்தவன் தானே அதனால் தான் இப்படி சொல்லுகிறாய் நாங்கள் நம்ப தயாராக இல்லை என்று சொல்லுவதோடு மட்டும்மல்லாமல், நாத்திகம் பேசும் நீ ஏன் இந்த விழாவை கொண்டாடுகிறாய் என்கிற ஒரு வக்கிர புத்தி யோசனையில் ஒரு கேள்வி வேறு நம்மிடம் கேட்கிறார்கள் இந்த அதிபுத்திசாலி மூட அடிமைகள்.

படிக்கதவர்கள்தான் இதனை நம்புகிறார்கள் என்றால், படித்த நம் அறிவுசிவிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இந்த கல்வியறிவு இல்லாதவர்கள் கூட நம் கருத்தை சற்று யோசித்து ஏதோ சரி போல தெரிகிறதே என்று ஏற்க தயாராகிறார்கள். அனால் இந்த படித்த அறிவுசிவிகள் நாம் சொல்லுவதையும் ஏற்க மறுத்து வேதண்டவதம் செய்வார்கள். சரி அதற்க்கு ஆதாரமான நூலை தருகிறேன் உன்றி படித்து உண்மையாவது தெரிந்துகொள் என்று அவர் வழிக்கு விட்டாலும், எ அப்பா இந்த வெட்டி வேலை (ஒருமணி நேரத்துக்கு மேல் போனில் கடலை போடுவது, செக்ஸ் புக் படிப்பது, இன்னும் எவலோவோ...... இதெல்லாம் பயனுள்ளது அனால் நல்ல நூல்களை படித்து பகுத்தறிவை வளர்ப்பது இவர்கள் பாசையில் வெட்டி வேலை.) எல்லாம் எங்களுக்கு எதுக்கு.

பெரியார் இயக்கத்தை சேர்ந்த யார் எழுதும் நூலும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று புலம்பல் வேறு. என்னமோ பெரியாரும் அவர் வழிவந்தவர்களும் புத்தகம் எழுதி பிழைப்பு நடத்த வந்தவர்கள் போல. இந்த அடிமட்ட கூமுட்டைகளை பார்பனர்களின் மூட சூழ்ச்சி நூல்களில் (உதாரணம்: பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம் ...........நீளும்) இருந்து மீட்டு எடுத்து, சூத்திர பட்டதை ஒழித்து, அறிவும், நாணமும் கொண்ட சுயமரியாதை உள்ளவர்களாக்க தானே பெரியாரும் அவர் தொண்டர்களும் பாடுபட்டார்களே தவிர வேற என்ன வெங்காயம். சும்மோ ஏதோ கேள்வி கேட்க வேண்டும் வாதம் செய்ய வேண்டும் இல்லாமல் இதோ தமிழர் திருநாளான பகுத்தறிவு பொங்கல் என்ன என தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!.....

(அறிஞர் அண்ணாவின் பொங்கல் மலர் கட்டுரையில் இருந்து ......)

பொங்கல் புதுநாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.

ஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விடடதற்காகக் கொண்டாடும் நாளன்று! ஆரியர் பண்டிகை, வெறியாட்டம்! அவைகள் சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள். பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.
பாடுபட்டால் பலன் உண்டு! உழைத்தால் வாழ்வுண்டு! என்ற மூலக் கொள்கைக்கு ஏற்றநாள் அது.

காட்டைத் திருத்தி, நிலமாக், மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.

உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனதில் இருத்த வேண்டி, பாற்கொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல்! எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.அந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை நினைவிலிருத்துவர் என நம்புகிறோம்.திருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்கத் தன்னாட்சி முளைக்கவில்லை.

வரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, மார்க்கம் ஆகியவைகள் ஆரியத்தால் சிதைக்கப்படாதிருக்கவேண்டித் தன்மானம் எனும வரம்பு கட்டத் தவறியதால், இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.

உழுது நீர்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும கோரமான களை இருக்கிறது. பார்ப்பனீயம் எனம் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்தருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும் கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவைகள் போக்கப்படா முன்னம், பயிர் ஏது? இவகைளைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.

எனவே பொங்கல் பண்டிகை என்பது அறிஞர் அண்ணா கூறியது போல பழயன கழிதலும் புதுவென புகுதலும் ஆகும். எனவே ஒவ்வொரு பொங்கலுக்கும் புதிய சிந்தனை பொங்கி பழைய சிந்தனைகளை வேறுடன் அறுத்து ஆண்டுதோறும் பகுத்தறிவு பொங்கலாக கொண்டாடுவோமாக!.....

புத்துயிர் பெறட்டும் பகுத்தறிவு பொங்கல் !
புதுமை பொங்கட்டும் !

(தமிழக முதல்வரின் முயற்சியால் இவ்வாண்டு பொங்கல் தமிழ் புத்தாண்டோடு சேர்ந்துவருவது தேனினும் இனிமையான புதுமை பொங்கல்)

Tuesday, January 06, 2009

உத்தரவாதம் கொடுப்பார்களா ராஜபக்சேயின் பக்தர்கள்?....

இலங்கை தலைநகரான கொழும்புவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என மகிந்தா ராஜபக்சேயைக் குடியரசுத் தலைவராகக் கொண்ட சிங்கள வெறி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், இது மூன்றாவது முறையாகத் தமிழர்களை இழிவுபடுத்தவும், அச்சத்திற்கு உள்ளாக்கவும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஆகும் (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4).

காலை 6 மணிமுதல் குளிரையும் பொருட்படுத்தாது, பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்துத் தமிழர்களும், கொழும்பு காவல் நிலையங்களுக்குமுன் காணப்பட்டனர்; மாலை நெடு நேரங்கழித்தும் பதிவு வேலை நடந்தது.

கிளிநொச்சியைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிவிட்டதாக, சிங்களவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்துவரும் சூழல்; அந்நிலை யில் இதுநாள்வரை ஈழத்தை ஆதரிக்காத தமிழரும்கூட, பதிவு செய்யும் அவமானத்துடன் வாழ்வதைவிட, எப்படியும் ஈழத்தை அடைந்துவிட்டால் மானத்தோடு வாழலாமே என எண்ணத் தொடங்கிவிட்டனர் எனச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறீலங்கா எல்லாச் சமூகத்தினருக்கும் உரியது எனில் தமிழ ருக்கெதிராகத் தொல்லை தரவும், அவமானம் உண்டாகவும் வகை யிலான நடவடிக்கைகள் ஏன்? எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர், கொழும்புவாழ் தமிழர்கள்.
மேற்கண்ட செய்தியை டெக்கான் கிரானிக்கல் ஆங்கில ஏடு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது (5.1.2009).

ராஜபக்சேயின் சிங்களவெறி ஆட்சிக்காக பாதப்பூஜை செய்யும் இந்நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் இந்த நிலைக்கு என்ன நியாயத்தைக் கற்பிக்கப் போகிறார்கள்?

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே தமிழர்கள். அப்படியிருக்கும்பொழுது காவல் நிலையத்துக்குச் சென்று ஏன் அவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் - தங்களைப்பற்றிய தகவலைத் தெரிவிக்கவேண்டும்?

அப்படியென்றால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அனை வரும் கிரிமினல்களா? குற்றவாளிகள் குறிப்பிட்ட இடத்தில் தங்கிக் கொண்டு நாள்தோறும் காவல் நிலையத்துக்குச் சென்று கையொப்ப மிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிப்பதுண்டு - அதே நிலைதான் கொழும்பில் வாழும் தமிழர்களுக்குமா?

சில ஆண்டுகளுக்குமுன் கொழும்பில் வந்து உற்றார், உறவினர்கள், தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்ற உத்தரவு போட்டது மட்டுமின்றி பலாத்காரமாக வெளியேற்றிய வெறியர்தான் இந்த ராஜ பக்சே. கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிய நிலையில், உச்சநீதி மன்றம் எச்சரித்த நிலையில், ஆச்சரியமாக இந்தியாவும் குரல் கொடுத்தவுடன், அந்த நிலை பின்வாங்கப்பட்டது.

விடுதலைப்புலிகளிடம் இருந்த ஒரு பகுதி தங்கள் வசம் வந்துவிட்டது என்ற இறுமாப்பின் அடுத்தகட்டமாக குடிமக்களான தமிழர்களின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது போலும்! விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாகக் கூறி தமிழர்களான குடிமக்களைக் கொன்று குவித்தும் இன்னும் வெறியடங்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

இராணுவத்தின்மூலம் தீர்வு ஏற்படாது என்ற இந்திய நிலையில் மாற்றம் இல்லை என்றும், அரசியல் தீர்வுதான் சரியானது என்றும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கரமேனன் நேற்றுகூட கிளிப்பிள்ளைபோல சொல்லியிருக்கிறார்.

அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு அரசே முதலமைச்சர் தலைமை யில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, போரை நிறுத்த வழி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டும் இலங்கையில் நடந்தது என்ன? போரைத் தடுக்க இந்திய அரசு மேற் கொண்ட நாணயமான செயல்முறை என்ன? வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்புவதாகக் கூறிய பிரதமரின் வாக்குறுதி என்னாயிற்று?

அதற்குப் பின்னாலே வெளியுறவுச் செயலாளர் இவ்வாறு கூறுவதைக் கண்டு சம்பந்தப்பட்ட மக்கள் நகைக்க மாட்டார்களா? இந்தியாவின் நம்பகத்தன்மையே கூட இப்பொழுது கேள்விக் குறியாகி விட்டதே!
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், ஈழத்தமிழர்ப் பிரச்சினை யில் இந்திய அரசு நடந்துகொண்ட தன்மையில் கடும் வெறுப்பும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை இந்திய அரசு உணருமா?
போராளிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக விவாதத்துக்காக ஒப்புக்கொள்வதாகவே வைத்துக்கொள்வோம் - அடுத்து ராஜபக்சே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையான உரிமைகளைக் கொடுக்கப் போகிறார்கள்? ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தமான வடக்கு கிழக்கு மாகாண இணைப்புகளை உறுதிப்படுத்துவாரா?

ராஜபக்சேவுக்குக் காலைக் கழுவிவிடும் பக்தர்கள் அதற்கு உத்தரவாதம் கொடுப்பார்களா?

நன்றி: விடுதலை



Tamil 10 top sites [www.tamil10 .com ]