தந்தை பெரியார் பற்றி வழக்கம் போல அவதூறு அள்ளிவிட்ட ரங்கராஜ் (பாண்டே) வீடியோ பார்த்தேன்.அந்த 20 நிமிட வீடியோவில் தந்தை பெரியாரின் பெண்ணுரிமை கருத்துக்கள் பற்றி கேள்வி கேட்பதாக சொல்லிவிட்டு, வாட்ஸாப்ப் ல வரும் மீம்ஸ்ஸை காட்டி இது பெரியார் 1925 ல் சொன்னார். அது இடதுசாரி இணையதளமான அவர்களின் கீற்று இணையத்தில் இருக்கு. இது 'விடுதலை வெப்சைட்ல' இருக்கு. இப்போ கூட .in ல இருந்து வெப்சைட் மாத்திட்டாங்க ன்னு நினைக்கிறேன். இப்படி பெரியாரின் பெண்ணுரிமை கருத்துக்களை கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்று அந்த வீடியோவில் எப்பொழுதும் போல சாராயம் குடித்த பைத்தியகாரனுக்கு தேள் கொட்டியதை போல உளறி கொட்டியிருக்கிறார். இறுதியில் அவர் முடிவு சொல்ல மாட்டாராம். அந்த 20 நிமிட வீடியோ கருமத்தை கேட்ட நம்மிடமே முடிவு பண்ணிக்க சொல்கிறார். என்ன முடிவுமாம்? பெரியார் பெண்ணுரிமைக்கு உண்மையாவே போராடினாரா ன்னு நாம் முடிவு பண்ணிக்கணுமாம்.
அந்த வீடியோ தொடங்கும்பொழுதே பாரதியாரின் பெண்ணுரிமை பாடலை ஒன்றை பார்ப்போம் நண்பர்களே ன்னு பாரதியார் கவிதை ஒன்றை ஒட்டிவிடுகிறார். பிறகுதான் உளற ஆரம்பிக்கிறார். இவர்கள் குப்பை போன்று மனுதர்மம் எழுதி பெண்களை இழிவுபடுத்தி வைத்திருப்பார்களாம். அதையெல்லாம் பெரியார் தொட்டு கேள்வி கேட்டு விமர்சனம் செய்தால்...அப்படியே பெரியாருக்கு எதிராக திருப்பி விட முயற்சிக்கிறார்கள். சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யதால் இறங்குபவர் உடலிலும் அது ஒட்டத்தான் செய்யும். அப்படி சாக்கடை போன்று மனுதர்ம எழுதி வைத்துக்கொண்டு, சனாதன தர்மம் ன்னு பெண்ணடிமை போதித்தார்கள்.போதித்து கொண்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து கேள்வி கேட்டு இந்து பார்ப்பனிய மத பெண்ணடிமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டினார் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெண்ணுரிமை கருத்துக்களிளிருந்து மூலைக்கு மூலை நறுக்கி எடுத்து, பெரியார் பெண்களை இப்படி சொல்லியிருக்கிறார், திருமணம் கிரிமினல் என்று சொல்லி இருக்கிறார் என்பது போன்ற வார்த்தைகளை எடுத்து காட்டி திரிபுவாதம் செய்வது அறிவு நாணயமா மிஸ்டர் ரங்கராஜ் பாண்டே? பெரியார் சில இடங்களில் கடும் சொற்களை கையாண்டிருக்கலாம் அதற்கு தேவையும் இருந்திருக்கும். ஆனால் அதற்கு காரணம் உன் பார்ப்பனிய மதத்திலிருக்கும் பித்தலாட்ட கருத்துக்கள். அதை வசதியாக மறைப்பது ஏன்?
இறுதியில் ஒன்றை ஒப்புக்கொண்டுள்ளார், நாங்க எழுதிய மனுதர்மம் என்றைக்கோ எழுதியது. அதை இன்றும் எடுத்து காட்டி பேசுவது சரியா ன்னு..மனுதர்மம் கேவலமானது ன்னு வெட்கம்விட்டு ஒப்புக்கொண்டுள்ளதற்கு ஒரு சபாஷ் போடலாம். ஆனால் இன்று நடைமுறையில் இல்லை என்பது உண்மையா? சரி நீங்களாவா சீர்திருத்தம் பண்ணீங்க? உடன்கட்டை ஏறுவதில் தொடங்கி, இன்று பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்பது வரை எல்லாம் உங்களை எதிர்த்து போராடி போராடி பெற்ற உரிமைகள். ஏதோ நீங்களா விட்டு விட்டது போன்று பம்முறீயே பாண்டே வெட்கமா இல்ல? இன்றைக்கும் சனாதன தர்மம், மனு தர்மமம் புனிதமென்று உங்கள் வீட்டு பெண்களையே சொல்ல வைக்கிறீர்களே அது என்னவாம்? ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் என்கிற பார்ப்பன அம்மையார் இதை ஒரு வேலையாகவே செய்துகொண்டிருக்கிறார். எங்கள் சனாதன தர்மம், மனுதர்மம் புனிதம் என்றே பதிவிடுகிறார். மனுதர்மம் நடைமுறையில் இல்லை என்றால் இதெல்லாம் என்ன? அடுத்த வீடியோவில் அறிவு நாணயத்தோடு பதில் சொல்லவும்.
சரி, பாண்டே உளறினார் என்றால், இப்படிபட்ட கேவலமான உளறலை சுமந் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் பண்ணி குஷியோடு சொல்கிறார். நல்ல விமர்சனமாம். பெரியாரிஸ்ட் யாரவது பதில் சொல்றீங்களா ன்னு அப்படியே குதுகூலமடைகிறார். இதையெல்லாம் பார்க்கும்பொழுது இவர்கள் அறிவு எவ்வளவு கேவலமா அற்பத்தனமா இருக்குன்னு நினைக்க தோணுது. ஆனால் வெளியில் அறிவுஜீவி மாறி திரிகிறார்கள்.
சரி, இறுதியில் பெண்களை இழிவுபடுத்தும் சனாதன இந்து மத மனுதர்ம பிட்டுகள் கொஞ்சம் உங்க பார்வைக்கு....
மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"
மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்
மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"
மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்"
(மனு தர்ம விளக்கம் ஆதாரம் நூல்: "ஆணாதிக்கமும் பெண்ணியமும்"
ஆசிரியர்: இரயாகரன் பி. வெளியீட்டாளர்: கீழைக்காற்று வெளியீட்டகம்)
இது போன்ற ஏராளமான மனு தர்ம குப்பைகளை தான் தந்தை பெரியார் கேள்விக்கு உட்படுத்தினார். அவற்றிக்கு எதிராக பெண்ணுரிமை கருத்துக்களை முன்வைத்தார். இது மகாகவி பாரதி வழியில் பெண்களை கும்மியடிக்கவும், கோலம் போடவும் தயார் செய்யும் பாண்டேக்களுக்கு இன்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அப்படி என்றால் புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே, பார்ப்பனர்கள் மாறவே மாட்டார்கள். கொஞ்சம் வாய்ப்பு கிடைத்தால் அனைத்தையும் மறுபடி நம் தலையில் கட்டிவிடுவார்கள். எச்சரிக்கை.
'ரங்கராஜ் பாண்டேக்கள் சாக்கிரதை' என்று போர்டு தொங்கவிடனும். அப்பொழுதுதான் சமூக வலைத்தளத்தில் உலா வரும் நம் இளைஞர்கள் எச்சரிக்கையா இருப்பார்கள்.
No comments:
Post a Comment