Saturday, June 04, 2016
பிளாட்பாரத்தில் வசிப்பவனுக்கு ஏது வாஸ்த்து சாஸ்த்திரம்?
ஞாயிறு சிறப்பு: படித்ததில் பிடித்த நூல் விமர்சனம்...வாய்ப்பிருந்தால் வாங்கி பயனடையவும்.
புத்தகத்தின் பெயர்: வாஸ்து சாஸ்திரமும் வளர்ந்து வரும் மூடநம்பிக்கைகளும்
‘வாஸ்து’ என்று சொல்லி கொஞ்சம் வசதிபடைத்த மக்களின் மனங்களில் பீதியையும், அச்சத்தையும் உருவாக்கிப் பணம் கரப்போர் உலவி வருகிறார்கள்.வசதியில்லாதவர்களு க்கு கொம்புகளும் கீற்றும்இருந்தால் போதும் குடிசையாக்கி எங்கேயும் வாழ்ந்து விடுவார்கள். அவர்கள் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை,பூஜையறை என்ற விதவிதமான வசதிகளை அறியாதவர்கள்.எனவே வாஸ்து என்பது நடுத்தர உயர்நடுத்தர, உயர்தர வருவாய்க் குடும்பங்களையே, பெரிதும் ஆட்டிப்படைக்கிறது. அனுபவிக்க அதிகம் வாய்ப்புள்ளவர்களுக்குத் தானே அச்சப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுவிடுகிறது. அவர்களுக்கு கெல்லாம் அறிவுரை மட்டும் கூறி நிறுத்தி விடாமல் வாஸ்து என்கிற பண்டைக் கால கட்டுமானமுறையில் உள்ள அறிவியல் அம்சங்களை நூலாசிரியர் எஸ்.ஏ.பெருமாள் எடுத்துக் காட்டுகளுடன் எடுத்துச் சொல்கிறார்.மின்சார வசதி கிடைத்த பின் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதால் கிணறு விசயத்தில் வாஸ்துக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.வாஸ்து மிரட்டல்காரர்கள் வீட்டோடு நின்றுவிடாமல் நாடாளுமன்றக் கட்டடம், மும்பை ரயில் நிலையம் போன்ற வற்றையும் விட்டுவைக்கவில்லை என்பதை எடுத்துச் சொல்லி வாய்ப்பு கிடைத்தால் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் எடுத்துச் சொல்லி வாய்ப்பு எப்படிப் பரப்பி விடுகிறார்கள் என்பதை அங்கதச் சுவையோடு சொல்வது இந்தச் சிறுநூலின் சிறப்பம்சமாகும்.
ஆசிரியர்: எஸ்.ஏ.பெருமாள்
வெளியீடு: நியூசெஞ்சூரி புக்ஹவுஸ் (பி)லிட்,
41-பி, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை - 600 098 பக்:44, விலை ரூ. 30/-
நன்றி : தீக்கதிர்,05-06-2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment