Saturday, June 04, 2016
மோ(ச)டியின் “திருவிளையாடல்!”
போட்டோஷாப் 1
நவம்பர் மாதம் சென்னையில் வெள்ளம் வந்த போது அதை பார்வையிட ஹெலிகாப் டரில் வந்த மோடி தனது சமூக வலைதளத்தில் படம் ஒன்றை வெளியிட்டி ருந்தார். பொதுவாக விமா னம் மற்றும் ஹெலிகாப் டரின் ஜன்னல் வழியாக எடுக்கப்படும் படங்கள் மங்கலாக இருக்கும். ஆனால் பிரதமர் அலுவல கம் ஜன்னல் வழியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையை பார்வையிடுவது போல் போலியான படத்தை வெளியிட்டது.
போட்டோஷாப் 2
ஈழத்தில் போரால் பாதிக் கப்பட்ட தமிழ்க் குடும்பம் ஒன்றை அவுட்லுக் பத்திரிகை அட்டைப் படமாக வெளி யிட்டது, அதை வைத்துக் கொண்டு கேரளத்தில் ஊட்டச் சத்து குறைவினால் குழந்தை கள் பாதிக்கப்படுகின்றனர் என்று போட்டோஷாப் மூலம் மாற்றங்கள் செய்து காண்பித் தார் பிஜேபி தலைவர் அமித்ஷா. இவ்விவகாரம் தொடர்பாக உண்மை வெளிவந்த பிறகு அவுட் லுக் பத்திரிகை மீது பழியைப் போட்டுவிட்டு தங்கள் மீது தவறு இல்லை என்று விளக்கம் கூறினார்.
போட்டோஷாப் 3
2014- மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கும் போது மோடியின் தேர் தல் பேச்சை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவ ரது சகாக்களும் ஆர்வத் துடன் பார்ப்பது போன்ற ஒரு படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளி யானது. ஆனால் அந்தப் படம் பாகிஸ்தான் அப்டா பாத்தில் ஒசாமா பின்லே டனை பிடிக்க நடந்த ஆபரேசன் ஜொரோமா நேரடி சம்பவங்களை கண்காணிக்கும் படமா கும். - அதை ‘உல்டா’ செய்து இப்படி வெளியிட் டுள்ளனர்.
போட்டோஷாப் 6
பாஜகவின் இணையதளத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி முதல் அமைச்சராகவிருந்த குஜராத் அகமதாபாத்தில் புல்லட் ரெயில் ஓடுகிறது என்று ஒருபடம் வெளியிட்டிருந்தனர். இந்தியாவில் புல்லட் ரெயிலே இல்லை என்று சமூக வளைதளத்தில் பலர் கிண்டல் அடிக்க ஆரம்பித்ததும், யாரோ மோடி அனுதாபி மிகைப்படுத்தி இப்படத்தை வெளியிட்டு விட்டார்; என்றும் வேலைப் பளுவில் கவனிக்காமல் அந்தப் படத்தை வெப்சைட்டில் வெளியிட்டு விட்டோம் என்று அறிக்கை விட்டு ஏமாற்றினர்.
போட்டோஷாப் 7
2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்ற மோடி வெள்ளை மாளிகையில் ஒபாமாவுடன் உரையாடி நடந்து வருவது போன்ற ஒரு செய்தியை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த படம் போலியானது என்றும் வெள்ளைமாளிகையில் ஒபாமாவும் அவரது மனைவியான மிகையிலும் நடந்து வரும் காட்சியில் மிகையிலின் படத்தை எடுத்துவிட்டு மோடியின் படத்தை ஒட்டிவிட்டனர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தப் போட்டோ மோடியின் உதவியாளர் அமெரிக்காவில் இருந்து அனுப்பியதாகவும் அது உண்மையா போலியா என்றும் பார்ப்பது எங்கள் வேலையில்லை என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இது மாதிரி ஒரு பிரதமரை எங்காவது பார்த்திருந்தால், படித்திருந்தால் அவசியம் தெரியப்படுத்துங்கள்.
போட்டோஷாப் 5
சமூக வலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடி தனது இளம் வயதில், ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் துடைப்பம் எடுத்து தரையைப் பெருக்குவது போல் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. 1988ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக மோடி இருந்தபோது, அதன் பொதுக் கூட்டம் நடந்த இடத்தை பெருக்கியபோது எடுக்கப்பட்ட படம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அஹமதாபாதைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், அந்த புகைப்படம் உண்மை தானா என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் கோரியுள்ளார். இதையடுத்து வந்த பதிலில், அந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்றும் கணினி மூலம் மறு ஆக்க வேலை(போட்டோஷாப்) செய்யப்பட்டது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி: விடுதலை ஞாயிறு மலர், 04-06-2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment