வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, April 30, 2010

புரட்சிக்கவிஞரைத் தமிழ்நாட்டுக்கு தந்த அறிவு ஆசான் பெரியார்

இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்-களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள். தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கவிதைத் தேனில் தந்த தேர்ந்த புலவன் பாரதிதாசன்.


ஒரு கட்டத்தில் மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு பாடிக் கொண்டிருந்த இந்தக் கவிஞர் புரட்சிக்கவிஞன் ஆனது _ மயிலாடு-துறையில் தந்தை பெரியார் அவர்களின் ஒரு சொற்பொழிவைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆகும்.

இது தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே உள்ள ஆளுமை! கருத்தின் வலிமை சேர்ந்த வளமை!!

தந்தை பெரியாரின் ஓர் உரை ஒரு புரட்சிக்கவிஞரைத் தமிழ்நாட்டுக்குத் தந்தது. ஒரு தொண்டரைத் திராவிடர் கழகத்துக்குத் தந்தது எனின் தந்தை பெரியார் அவர்களின் ஒப்பு-வமையில்லா சிந்தனைப் பெருக்கை எண்ணிப் பார்க்கவேண்டும் எவரும்!

தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தந்தை பெரியார் கருத்துகளை, கொள்கை முழங்கும் எழுத்துகளைக் கொண்டு சேர்ப்பதுவரைதான் நமது கடமையும், பணியும் ஆகும். அது கொண்டு போய் சேர்க்கப்பட்டால் அதன் வேலை-யைக் கண்டிப்பாய் செய்து முடித்தே தீரும் என்-பதில் எவ்வித அய்யமும் கிடையவே கிடை-யாது! புரட்சிக்கவிஞரே இதற்கொரு ஈடில்லா எடுத்துக்காட்டாகும்.

இந்து சமய கலை விழா என்று கூறி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சென்-னையில் 1983 இல் விழா ஒன்றை நடத்துவதாக அறிவித்தார். இந்துத்துவாவைத் திணிக்க, பரப்பிட சங்கராச்சாரியார் புது அவதாரம் எடுக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்த ஆண்டுமுதல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவை தமிழர் கலை,பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திட முடிவு செய்தார்.

சங்கராச்சாரியார் அந்த ஆண்டோடு அதனை மூட்டைக் கட்டிக் கொண்டாலும் திராவிடர் கழகம் தொடர்ந்து புரட்சிக்கவிஞர் விழாவை தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திக்-கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு விழாவில், அவர் கூறிய கருத்து ஒன்றுக்கு வலிமை சேர்கிறது. குடும்ப விளக்கு நான்காம் பகுதியில் திருக்குறள் குறித்து புரட்சிக்கவிஞர் கூறும் வரிகள் மிகவும் முக்கியமானவை _ நயமானவை.

நாடி முத்து வேடப்பனிடம்
இன்றியமையா ஒன்றுக்காகக்
கடன் பத்து ரூபாய் கொடுவென்று கேட்டான்
வேடன் கொடுப்பதாய் விளம்பினான் அதற்குள்
அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்
தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்
கோவிலுக் காட்டுப்பா என்று கூறினாள்
குறளில் கோயிலே இல்லையம்மா
என்றான் வேடன். இதனைக் கேட்ட
நாடிமுத்து நவிலுகின்றான்;
தில்லைக் கோவிலுக்குச் செல்ல எண்ணியே
பத்து ரூபாய் பணம் உன்னைக் கேட்டேன்
கோவில் இல்லையா குறளில்?
ஆயில் என் பணத்துக்கில்லை அழிவே!

இதன்மூலம் திருக்குறளில் கோயில் என்ற சொல்லே இல்லை என்பதை மிக அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார் புரட்சிக்கவிஞர்.

இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான கருத்துத் தலைதூக்கி எழுந்துள்ளது. தமிழ்நாட்டு அரசின் சின்னம் இந்து மதக்கோயில் கோபுரமாக உள்ளது.

மதச்சார்பற்ற ஓர் அரசின் சின்னம் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாக இருக்கலாமா என்ற அர்த்த-முள்ள வினா சட்டப்பேரவையில் எழுப்பப்-பட்டது. கோபுரத்திற்குப் பதில் திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் என்பதுதான் அந்த அறிவார்ந்த யோசனையாகும்.

திருக்குறளிலேயே கோவில் இல்லை என்கிறபோது, அரசு சின்னத்தில் கோயில் ஏன்? கோயி-லையோ, கடவுள் என்ற சொல்லையோ எந்த இடத்திலும் குறிப்பிடாத மிகமிகச் சிறந்த மதச் சார்பற்ற புலவரான திருவள்ளுவர் உரு-வத்தை கோயிலுக்குப்பதில் பொறிப்பது என்பது-தானே பொருத்தமானதும், அறிவார்ந்ததுமாக இருக்க முடியும்?

இந்தக் கருத்தை சட்டப்பேரவையில் தோழர் ரவிக்-குமார் தெரிவித்தாலும், இதற்கு அடி-யெடுத்துக் கொடுத்தவர் புரட்சிக்கவிஞர்தான் என்-பதை, கவிஞரின் பிறந்த நாளில் நினைவு கூர்வோம்.

அடுத்த கட்டத்திற்கு இந்தக் கருத்தை நகர்த்த சூளுரைப்போம்!

----------- விடுதலை தலையங்கம் (29.04.2010)

ஏழுமலையான் குத்துக்கல்லு என்று அர்ச்சகப் பார்ப்பான்களுக்குத் தெரியாத என்ன?

திருப்பதிக்கு கடந்த 19 ஆம் தேதி பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். அப்-பொழுது திருப்பதி ஏழு-மலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர் ரமணா தீக்ஷித்லு, முகேஷ் அம்பானி தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, கோவி-லின் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதமும் செய்தார்.


இது கோவில் விதி-முறைகளுக்கு எதிரானது, முக்கிய பிரமுகர்களுக்கு கோவிலுக்குள்தான் தலைமை அர்ச்சகர் பிர-சாதம் வழங்கவேண்டும். விதிமுறைகளை மீறியது ஏன் என்பதற்கு 10 நாள்-களுக்குள் பதில் அளிக்க-வேண்டும் என்று குறிப்-பிட்டு, தலைமை அர்ச்சகர் ஏழுமலையான் கோயில் அதிகாரி கிருஷ்ணாராவ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் (தினத்தந்தி, 29.4.2010, பக்கம் 3).

அனைத்து ஜாதியின-ருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று ஒரு அரசு சட்டம் செய்தால் _ ஆகம விதிகளைத் தூக்-கிக் கொண்டு உச்சநீதிமன்-றம் வரை இந்த உச்சிக் குடுமிகள் ஓடுகிறார்கள். அதேநேரத்தில், முகேஷ் அம்-பானி போன்ற பெரும் பண முதலாளிகள் என்-றால், கோயில் சம்பிரதா-யங்-களை மலம் துடைக்-கும் காகிதமாகக் கருதி வேறு மாதிரியாக நடந்து-கொள்கிறார்கள்.

ஆங்கிலப் பிறப்பின்-போது, ஜனவரி முதல் தேதி இரவு முழுவதும் இந்துக் கோயில்களைத் திறந்து வைக்கிறார்கள். இது ஆகம விதிகளுக்கு எதிரானது. அவ்வாறு செய்யக்கூடாது என்று சங்கராச்சாரியாரும், இராம-கோபாலனும் கரடியாகக் கத்துகின்றார்கள். எந்தக் கோயில் அர்ச்சகரும் அதுபற்றி எல்லாம் காதில் வாங்கிக் கொள்வது கிடை-யாது. காரணம், அர்ச்-சனை என்ற பெயராலே பார்ப்-பனர்களின் கல்லாப்-பெட்டி நிரம்பி வழியுமே! அதுவும் _ முகேஷ் அம்-பானி என்றால் லகரத்தில் தானே தொகை இருக்கும்.

சம்பிரதாயங்கள் ஆக-மங்-களைப் பார்த்தால் அதெல்லாம் நடக்குமா? பணம்தான் பாதாளம்-வரை பாயுமே! ஏழுமலையானைப்பற்றி மற்றவர்களை-விட அர்ச்சகப் பார்ப்பான்-களுக்குத்தான் நன்னா தெரியும். அது அடித்து வைக்கப்பட்ட குத்துக்கல்லு அல்லது அய்ம்பொன் பொம்மை என்று அர்ச்சகப் பார்ப்பான்-களுக்குத் தெரியாதா என்ன?

பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியா என்று அன்று சுவர் எழுத்தாளர் சுப்பை-யன் எழுதியதுதான் நினை-வுக்கு வந்து தொலை-கிறது!

- விடுதலை மயிலாடன் (30.04.2010)



Thursday, April 29, 2010

சென்ற 2003 ஆட்சியின் விளைவுதான் பார்வதியம்மாள் திரும்பி செல்ல காரணம்..

பிரபாகரனின் தயார் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

எச்சரிக்கை சுற்றறிக்கை

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்.அவரை விமான நிலையத்தில் இருந்த படியே அரசு அதிகாரிகள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது .நீதிபதிகள் தர்மாராவ் ,கே.கே.சசிதரன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர்.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி "தமிழக அரசு கேட்டுகொண்டதன் பேரில் தான் பார்வதியம்மாள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து கடந்த 2003 ம் ஆண்டு மத்திய அரசு எச்சரிக்கை சுற்றறிக்கையை அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் அனுப்பியது.அந்த அடிப்படையிலே சென்னை வந்த பார்வதியம்மாள் திருப்பி அனுப்ப பட்டு உள்ளார்."என்று தெரிவித்தார்.

தமிழக அரசு நிலை என்ன?

அதை அடுத்து நீதிபதிகள் கூறுகையில் "கடந்த 7 ஆண்டுகளில் சூழ்நிலைகள் மாறி இருக்கின்றன.இது குறித்து தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும் என்றும் விசாரணை இன்று(வெள்ளிகிழமை) தொடர்ந்து நடை பெரும் என்றும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் குடியேற்ற அதிகாரி அவி பிரகாஷ் ஐகோர்ட் டில் நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-

மனு தாரருக்கு இந்த மனுவை தாக்கல் செய்ய தகுதி இல்லை.அவர் பார்வதியம்மாளின் உறவினர் இல்லை.அவருக்கு வேறு எந்த விதத்திலும் தொடர்பும் கிடையாது.பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் குடியேற்ற அதிகாரிகள் சட்ட படிதான் நடந்து கொண்டுள்ளனர்.

பார்வதியம்மாள் இந்திய பிரஜை என்பது உறுதி செய்யப்படவில்லை.எந்த வெளி நாட்டவரையும் திருப்பி அனுப்பும் உரிமை குடியேற்ற அதிகாரிகளுக்கு உண்டு.

அடிப்படை உரிமை

தமிழக அரசு கேட்டு கொண்டதன் பேரிலேயே கடந்த 2003 ஆம் ஆண்டு பர்வதியம்மாளுக்கு எதிராக எச்சரிக்கை சுற்றறிக்கை அணைத்து இந்திய தூதரகங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியது.அதன் படி பார்த்தால் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் பார்வதியம்மாளுக்கு விசா வழங்கி இருக்ககூடாது.வெளி நாட்டவராக இருப்பதால் இந்தியாவில் அவருக்கு அடிப்படை உரிமை எதுவும் இல்லை.எனவே அவரை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் குடியேற்ற அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை குறை கூற முடியாது .

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி :தினத்தந்தி (30-04-2010)
http://dailythanthi.com/article.asp?NewsID=563656&disdate=4/30/௨௦௧௦

















அயூப்கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை...நம்புவீர்களா?

இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல், அயூப்கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, அன்னை தெரசா பயில்-வான் கூடம்; திருவிக சுருட்டுக்கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை என்றெல்லாம் பெயர் இருந்தால் சிரிப்பு மட்டுமா வரும்? அடுத்த நொடியில் எரிச்சல்கூட பீறிட்டுக் கிளம்பும்.


இப்பொழுது ஒரு செய்தி குஜராத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதி-களில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்-ணீரைப் பயன்படுத்தி குஜ-ராத் காந்திநகரில் காந்தி யாருக்குப் பிரம்மாண்ட-மான நினைவிடம் கட்டப்படும் என்பதுதான் அந்தச் செய்தி.

பரவாயில்லையே. நற்செய்தி தானே  இதில் என்ன பிரச்சினை என்ற வினா எழக்கூடும்;

இந்த அறவிப்பைக் கொடுத்தவர் யார் என்பது-தானே முக்கியம். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதர-தாஸ் மோடிதான். (மோடி வித்தை என்பது இது தானோ!) இந்த அறிவிப்-புக்குச் சொந்தக்காரர்.

இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்ப-தோடு -_ இப்பொழுது இதனைப் பொருத்திப் பார்த்தால் உண்மை பட்ட வர்த்தனமாகப் புலப்பட்டு விடுமே!

பகவத் கீதையிலிருந்து சுலோகத்தை எடுத்துக்-காட்டி காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே கதை ஒருபுறம் இருக்கட்டும்.

நாட்டில் நல்லவர், வல்லவர் என்று பீற்றிக் கொள்ளும் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கூட்டம் மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்-களே _நினைவிருக்கிறதா?

மை நாதுராம் கோட்சே போல்தா _ என்பதுதான் அந்த நாட-கத்தின் பெயர். நான் தான் நாதுராம் கோட்சே பேசு-கிறேன் என்பது தலைப்பு.

நான் காந்தியார் என்ற மனிதனைக் கொல்ல-வில்லை; காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றேன் என்று அந்த நாடகத்திலே கோட்சே கூறுகிறான். காந்தியாரைக் கொன்ற கோட்சே மகான் என்பது-தான் அந்த நாடகத்தின் அடிநாதம் _ உச்சகட்டம் (சிறீவீனீணீஜ்)

இந்தக் கூட்டம் காந்தியாருக்கு உலகப் பல பகுதிகளிலிருந்தும் மண்-ணையும், தண்ணீரையும் கொண்டு வந்து பிரம்-மாண்ட நினைவுச் சின்னம் எழுப்புகிறது என்றால் இதன் பொருள் என்ன?

படிப்பவர் புத்திக்கே விட்டு விடுவோம்!

- விடுதலை(29-04.2010) மயிலாடன்



Wednesday, April 28, 2010

இவளவு மேம்பாலங்கள் இருக்கும் போது..இன்னும் அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?

(புதனன்று (28.4.2010) மதுரையில் கள்ளழகர் திருவிழா நடைபெறுகிறதாம். இதன் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளவே இந்தக் கட்டுரை).


மதுரை மாநகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது அழகர் கோயில். அது அழகர்மலை என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. அங்கு ஓர் ஆட்சி நடந்ததற்கான ஆதாரங்களாக கோட்-டையும், பெரிய மதில் சுவர்களும் இன்றும் உள்ளன!

அழகர் என்பவர் கடவுளோ, கட-வுளின் அவதாரமோ கிடையாது. அவன் அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்பதே உண்மை. பண்டைய பாண்டிய அரசர்களால், தொடர்ந்து கள்ளர் சமூக மக்கள் அடக்-கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், நகர்ப்புறங்-களில் வாழவும், மலைசார்ந்த விளை நிலங்களில் புகவும், அவர்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டும் வந்தே உள்ளார்கள். கள்ளர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக அன்றைய அரசு அதிகாரத்துடன் பல்-வேறு போர்களை நடத்தி வந்தனர். இதனால், கள்ளர்கள் முதன்முதலாக கொரில்லா முறை தாக்குதல்களை நடத்தி தங்கள் வாழ்வுக்காக கொள்ளையடித்தும்; தானியம், ஆடு, மாடுகளைக் கவர்ந்தும் மலைகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தனர்.

அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.

திப்பு சுல்தான் கூட திண்டுக்கல் கோட்டையிலிருந்து கள்ளர்களுக்கு ஆதரவாக படை அனுப்பியதாக செய்திகள் உள்ளன.

இசுலாமிய மக்களும், கள்ளர்களும் ஒருவருக்கொருவர் இணக்கமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

கள்ளர்களின் திருமண முறை கூட இசுலாமிய முறைப்படிதான் நடந்து வந்தன. திருமணம் இரவு நேரங்களில், இந்து வைதீக முறைப்படியின்றி மணப் பெண்ணுக்கு மணமகனின் அக்கா கருகமணி சூட்டுவார்கள்.

திருமணத்தின் போது, கிடா அடித்து சாப்பாடு! தற்போதும் கூட, இப்பகுதியில் உள்ள கள்ளர் சமூகத் திருமணங்களில், 10, 20, 50 வரை என ஆடுகள் வெட்-டப்-பட்டு, அவரவர் செல்வாக்கிற்கேற்ப திருமணங்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலூர் வட்டாரத்தில் சென்னகரம்பட்டி, கள்ளம்பட்டி ஆகிய கிராமங்களில் கள்ளர் பலர் இசுலாமியராக மதம் மாறியுள்ளார்கள். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இப்போதும் கூட இந்து எனக் கூறிக்கொள்கிற கள்ளர்கள் ரம்ஜான் நோன்பின்போது, முசுலிம்-களுக்கு நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்று-கின்ற முறை, இங்கு நிகழ்ந்து வரு-கின்றது. இந்த நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவதற்காக பரம்பரை, பரம்பரையாக நஞ்சை நிலம் ஒதுக்கப்பட்டு அந்தக் காரணத்திற்காக அதன் வருமானங்கள், பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பிறமலைக் கள்ளர்கள் இசுலாமியார் போன்று சுன்னத் செய்வதும், முசு-லிம்கள்போல சிய்யான் (தாத்தா) என்ற பொருள்பட அழைப்பதும் உதாரணங்-களாகும்.

ஜாதி, சமூக வேறுபாடுகளில்லாத இம் மக்களுக்கு, ஆட்சியாளர்களும், பாண்டிய நாட்டு உயர் குடி மக்களும் வைத்த பெயர்தான் கள்ளன் என்பது. இன்று தீவிரவாதிகள், போராளிகள் என்றழைக்கப்படுவது போன்ற ஒரு சொல்லே கள்ளர் ஆகும். அது ஜாதி ஆகாது.

சித்திரைத் திருவிழாவுக்கும், அழகர் ஆற்றில் இறங்குவதற்கும் இன்றுள்ள-படியான மத ரீதியான தொடர்பு ஏது-மில்லை. சொல்லப்போனால் இவ்விரண்-டும், வெவ்வேறானவை. முரண்பட்-டவை.

சித்திரைத் திருவிழா, மதுரை மீனாட்சி சொக்க நாதர் திருமணத்தி-லிருந்து தொடங்குகிறது. பண்டைய நாள்களில் இந்த விழாவிற்கு பக்கத்து நாட்டு மன்னர்கள், மந்திரிகள், ஜமீன்-தார்கள், நிலப் பிரபுக்கள், திவான்கள், சிற்-றரசர்கள் என பெருந்தனக்காரர்கள் கூடுவார்கள். இன்று போல அன்று சாலைகள், அவற்றைக் கடக்கும் பாலங்-கள், விரைவாகச் செல்ல வாகனங்கள் இல்லாத காலம். பெரும்பாலும் இவர்கள் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளிலும், மாடு பூட்டிய கூண்டு வண்டிகளிலும், ஆட்கள் தூக்கும் பல்லக்குகளிலும் பயணம் செய்வர்.

பழைய மதுரை; அதாவது அன்-றைய பாண்டிய நாடு வைகை ஆற்-றுக்குத் தெற்காக இருப்பது மட்டும்தான்! ஆற்றின் வடக்கே இருந்த பகுதிகள் மருத மரங்கள் நிறைந்த பெரும் காடுகளாக விளங்கின.

வடபகுதியில் இருந்து வரக்கூடிய பயணிகள் இன்றைய ஆழ்வார்புரத்-திற்கு வந்து ஆற்றைக் கடந்துதான் மதுரைக்குச் செல்லவேண்டும். இதைப் பயன்படுத்தி கள்ளர் படை ஆற்றுக்குள் இறங்கி தக்க தருணம் பார்த்து பயணி-களின் வருகையை எதிர் நோக்கி இருப்பர்.

மீனாட்சி- சொக்கன் திருக்கல்யாணத்-திற்கு வருகின்ற சீமான்களைத் தடுத்து நிறுத்தி கொள்ளையிடுவது கள்ளர்-களின் திட்டமும் வழக்கமும் ஆகும்.

கள்ளர் தலைவன் அழகர் குதிரை-களுடன் தம் கூட்டாளிகள் துணையு-டன் வைகை ஆற்றில் இறங்கி அங்-கிருந்த புதர்களில் மறைந்திருந்து இத் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளான்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருள்-களுடன் வண்டியூர் சென்று தனது வைப்பாட்டியான துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கியிருப்பதும், பின் பாதுகாப்புடன் மலையேறுவதும், அவன் வழக்கமாயின!

அழகர் மலைக் கொள்ளையர்-களை, மதுரை வீரன் வரை போராடிப் பார்த்தும் அவர்களை அடக்கவும், ஒடுக்-கவும் முடியாமல் இருந்து வந்-துள்ளது. சங்கிலிக் கருப்பன் என்ப-வன் அழகரின் பின் தோன்றல் ஆவான். இந்த கள்ளர் படையின் தொல்லைகள் மதுரைப் பாண்டிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டது. இன்றைக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிரச்சினைபோல அது மிகப்பெரிய அளவில் இருந்தி-ருக்கலாம்.

பாண்டிய நாட்டு ஆட்சியை நாயக்-கர்கள் கைப்பற்றிக் கொண்டபோது, கள்ளர்களை எதிர்த்து அமைதியான ஓர் ஆட்சியை நடத்த முடியவில்லை.

கள்ளர் வாழ்வில் நல்லதொரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர் திருமலை நாயக்கரே என்றால் அது மிகையாகாது! கள்ளழகர் சமூக மக்களும் மற்ற மக்களைப்போல தம் பகுதியில் வாழ வழிவகை செய்யப்பட்-டது. அதன் விளைவாக அதன்பின் கள்ளர்கள் சித்திரைத் திருவிழா வின்போது கொள்ளையடிப்பது தடுக்கப்பட்டது. அரசருக்கும் ஆட்சிக்-கும் விசுவாமாக இருப்பது; அதே நேரத்தில் மேலூர் வட்டாரப் பகுதியை 18 கிராமங்-களுடன் கூடிய கள்ளர் சீமையை அமைத்து கள்ளர் தாமே சுயமாக ஆள்வது என அங்கீகரிக்-கப்பட்டது. இதன் மூலம் கள்ளர்களின் தலைவர் அடக்கமான அழகர் மலையில் கோயில் எழுப்பி மன்னர் அழகரைப் பெருமானாகக் கருதி வணங்கினர். பின் அழகர் கள்ளழகர் ஆனார்.

கள்ளர்கள் எக்காரணம் கொண்டும் மதுரைக்குள் நுழைவது இதன் மூலம் தடுக்கப்பட்டது. என்றாலும், வழக்கம்-போல அழகர் நினைவாக ஆற்றில் இறங்கி வண்டியூர் சென்று திரும்ப அழகர் மலை வந்து சேரும் நிகழ்வு-கள் அரசு துணையுடன் நடத்தப்பட்-டன. அவ்விழாவில் கலந்துகொள்ளும் கள்ளர்களுக்குத் தேவையான தானி-யங்கள், ஆடு, மாடுகள் இவற்றைத் தானமாக வழங்க அரசரால் ஆங்-காங்கே மண்டபப்படிகள் அமைக்கப்-பட்டு அரசரால் அவற்றிற்கு மானி-யங்கள் வழங்கப்பட்டன.

கள்ளர்கள் மலைகளில் தலை-மறைவு வாழ்க்கை நடத்தியதால் தம்-மோடு பெண்களை அதிகமாக வைத்திருக்கவில்லை.

நாயக்கர் காலத்தில் கள்ளர்கள் மீதிருந்த ஒடுக்கு முறை தளர்த்தப்-பட்ட-தால்மேலூர் வட்டாரப் பகுதியில் நல்ல கலாச்சாரத்துடன் பெரும்பான்-மை-யினராக இருந்த கோனார், வெள்-ளாளர் சமூக மக்களை எதிர்த்து அவர்-களிடமிருந்து ஆடு, மாடு இவற்-றுடன் அவர்கள் வீட்டுப் பெண்களை-யும் சிறை பிடித்து, கள்ளர் சீமை அமைந்தது என்றே சொல்லலாம்.

அதைப் போல பிறமலைக் கள்ளர்கள் உசிலம் பட்டியை மய்யமாக வைத்து அங்கு வாழ்ந்த வடுகர்களை விரட்டி-விட்டு வடுகப் பெண்களுடன் கூடி வாழ்ந்தனர். வடுக மொழி என்பது கொச்சைத் தமிழாகும்! இன்றும் கூட பிறமலைக் கள்ளர்கள் பேசும் தமிழ் கொச்சையாக இருப்பதைக் காண்கிறோம்.

இந்த அடிப்படையில்தான் கள்ளழகர் கள்ளர் வேடம் பூண்டு வைகை ஆற்-றில் ஆண்டு தோறும் இறங்கி விட்டு வண்டியூர் சென்று துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குவதும், தீட்டுப்படுவதும், அழகர் மலை சென்றதும், தீட்டு நீக்-கப்பட்டபின் கோயிலுக்குள் அனு-மதிப்பதுமான விழாக்கள் நடக்கின்றன.

திருக்கல்யாணத்தைக் காண, பார்ப்பனர்கள், உயர் ஜாதிக்காரர்கள் மற்றும் சற்சூத்திரர்களுடன் மீனாட்சி அம்மன் கோயில் செல்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களோ, அழகருடன் வந்து, அழகருடன் திரும்ப அழகர் கோயில்வரை செல்வதும், வணங்-குதுமான முறைகளை இப்போதும் கூட பார்க்க முடிகிறது.

இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து சைவ - வைணவ ஒற்றுமையை உருவாக்க நினைத்த சிலர் சம்பந்தமில்-லாத அழகரை, மீனாட்சி சகோதரர் எனவும், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விட்டதால், அழகர் கோபித்துக் கொண்டு வண்டியூர் சென்று விட்டதாக-வும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். பொய்யான பிரச்சாரம் பக்தியின் பெய-ரால் உண்டாக்கப்பட்டதை அதிநவீன காலத்திலும் பகுத்தறியாது, பக்திப் பரவசம் காண்கிற முட்டாள்களை என்னவென்பது?

தந்தை பெரியார் சொன்னது போல் அவர்களைக் காட்டு மிராண்டிகள் என்-பதில் என்ன சந்தேகம்? நியாயம்தானே!

அக்காலத்தில் வாகன வசதி இல்லை. நல்ல சாலை வசதிகள் இல்லை. ஒப்புக்-காக ஏற்றாலும்கூட, அப்போது, அழக-ரால் தன் தமக்கையின் திருமணத்துக்கு வந்து சேருவதில் தாமதம் உண்டாகி-யிருக்கலாம். இன்று அவ்வாறில்லை. வாகன வசதிகள் உள்ளன. ஹெலிகாப்-டரைக்கூட அவசரத்திற்குப் பயன்படுத்த-லாம். சாலை வசதிகளுக்கும், மேம்-பாலங்-களுக்கும் குறைவு இல்லை. மதுரை நகருக்குள் நுழைய 7,8 பாலங்கள் வரை கட்டப்பட்டுள்ளன.

வருஷம், வருஷமாக இந்த அழகர் தாமதமாக வருவது ஏன்? ஒருத்தருக்கு ஒரு முறைதானே திருமணம். நம்ம மீனாட்சி சொக்கநாதருக்கு ஆண்டு-தோறும் திரும்பத் திரும்பத் திருமணமா? நல்ல தமாஷாக உள்ளது. இந்தப் பொம்மைக் கல்யாணத்தை நம் பெரி-யவர்கள் எப்போது விடப் போகிறார்-களோ?

நம்ம மந்திரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை ஆணையாளர் சமூக முன்னேற்றத்தை அழகரிடம் எடுத்துச் சொல்லி, இந்த ஆண்டாவது முதல் நாளே புறப்பட்டு மதுரை வந்துவிடுங்கள். உங்கள் சகோதரியும் சந்தோஷமடைவாள். விரைவான சொகுசான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இனி மேலாவது தாமதிக்காமல் திருமணத்திற்கு வரவேண்டும் என ஏன் சொல்லவும், செய்யவும் மறுக்கிறார்கள்.

அழகர் ஆற்றில் இறங்க வேண்டிய-தில்லை. ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் வழியாக மதுரையம்பதி வரலாமே! செய்வார்களா நம் ஆட்சியாளர்கள்? பக்த கே()டிகள் இருக்கிறவரை, அழகர் ஆற்றைக் கடக்கமாட்டார்! அவர் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆள்வதாகவே நினைத்திருக்கலாம்! அழகரை வைத்து வைதீகக் கூட்டம் வயிறு நிறைப்பது... நிற்பது... எப்போது?

--- நன்றி விடுதலை (27.04.2010), சி.மகேந்திரன், வழக்கறிஞர் அவர்கள் எழுதியது.

தகுதி, திறமை பேசும் (பார்ப்பன) ஏடுகள் என்ன செய்யப் போகின்றன?

அண்மையில்அருந்தொண்டாற்றிய அந்தணர்களை அடையாளம் காணுவீர்!

1. சசிதரூர்: அண்மையில் ரூ.70 கோடி தன் காதலிக்குத் தந்ததாகக் கூறப்பட்டு, குற்றஞ் சாற்றப்பட்ட கேரளப் பார்ப்பனர்.


2. கேத்தன் தேசாய்: மண்டலை எதிர்த்து எழுந்த மனிதர்; மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க லஞ்சம் வாங்கி பிடிபட்ட பார்ப்பனர்.

3. வரதராஜ அய்யங்கார்: குமுதம் வார ஏட்டின் ஆசிரியர் கொடுத்த புகார்படி ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இப்பார்ப்பனர்மீது குற்றச்சாற்று!


கிரிக்கெட் விளையாட்டின் சூதாட்டம், வர்த்தக பேரம், கறுப்பு பணத் திமிங்கலங்களின் திருவிளை-யாடல்கள், வெளிநாட்டிலிருந்து வந்த பண பேரங்-கள் (ஹவாலா) போன்ற பல ஊழல்கள் புற்றீசல்போல ஒன்றின்பின் ஒன்றாகக் கிளம்பி, மத்தியில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மிகப்-பெரிய சோதனையை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

நாடாளுமன்றத்தினை உலுக்கிக் கொண்டுள்ளது. இதில் ஊழல் ஒழிந்து, அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுவதாலும், இதில் பல கட்சிகளும், பல்வேறு கட்சி ஆதர-வாளர்-களான திமிங்கலங்களும் ஈடுபட்டிருப்பதாக பேசப்-படுவதாலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைதான் சரியான தீர்வு; எனவே, இதனை ஏற்க யு.பி.ஏ. அரசு தயங்கக்கூடாது.

இல்லையேல், குற்றவாளிகளைப் பாதுகாத்த மாபெரும் குற்றத்திற்கு _ பழிக்கு _ வரலாற்றில் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்!

நம் நாட்டின் கிராமப்புறங்களில் எலுமிச்சை, புளியம்பழம் பற்றிக் கூறும் பழமொழி ஒன்று உண்டு.

உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கப்பன் அந்தக் கதைபோல, குஜராத் பார்ப்பனரான கேத்தன் தேசாய் என்பவர் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் என்பதைவிட மிகவும் சக்தி வாய்ந்தவரும்கூட!

இவர் பஞ்சாப் மெடிக்கல் காலேஜ் ஒன்றுக்கு அனுமதி _ மாணவர் சேர்க்கைக்காக முன் பணமாக 2 கோடி ரூபாய் லஞ்சம் பெறுகையில், கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்!

சி.பி.அய். இவரைக் கைது செய்து சிறையில் அடைத்ததோடு, 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் ஏற்பாடாகியிருக்கிறதாம்!

இவர்மீது 2000 ஆம் ஆண்டே, லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாற்று எழும்பி, அது மிகப்பெரும் அளவில் வெடித்து, அந்த மருத்துவக் கவுன்சில் (விசிமி) பொறுப்பிலிருந்தே விலகும்படிச் செய்யப்பட்டவர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் போட்ட வழக்கினால், இவர்பற்றிய பல உண்மைகள் வந்தும், வருமான வரித்துறை ரெய்ட் நடத்தி லஞ்சப் பணத்தை எடுத்தும் எல்லாம் நடந்தும், நாடாளு-மன்றத்தில் சில இடதுசாரிகள் கேள்வி எழுப்பியும், அன்றைய பா.ஜ.க. அரசு இவரைப் பாதுகாக்கவே செய்தது; அதற்குப் பிறகு வந்த இந்த அரசிலும் கூட இவரது செல்வாக்கு குறையவில்லை.

மத்திய சுகாதார அமைச்சர்கள் _ எக்கட்சியினர் ஆட்சி வந்தாலும் அவர்களை வசியப்படுத்தும் மந்திரக்கோல் உண்டு இந்த மகானிடம்!

முதலமைச்சர்கள்கூட இவரது தயவினைக் கோரும் அளவுக்கு நிலை உயர்ந்தது! காரணம், தத்தம் மாநிலத்தில் மெடிக்கல் காலேஜ்கள் வர-வேண்டும் என்பதாலும், அதற்கு ஓகே செய்ய-வேண்டிய அதிகாரம் இந்த குஜராத் பார்ப்பனரிடம்-தான் என்பதாலும் இந்நிலை!

ரூ.292 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் எடுத்துள்ளதாக செய்தி (வரி வேட்டையில் நேற்று) வந்-துள்ளது. வெறும் பனிப்பாறையின் முனை மட்டுமே!) தோண்டினால் இன்னும் பல மலைப் பாறைகள் உள்ளே இருக்கலாம்!

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மெடிக்கல் காலே-ஜில் 5 சீட்டுகள் இவருக்கு. அதனை நல்ல விலைக்கு விற்றுத் தருவதும் அவாளுக்கே. பணத்தை இவரிடம் சிந்தாமல், சிதறாமல் தரவேண்டும்.

இவர் எப்படி டாக்டர் ஆனார் தெரியுமா?

1990 இல் பிரதமர் வி.பி. சிங் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயலாக்க ஆணை பிறப்பித்ததை எதிர்த்து டெல்லியில் மாணவர்களைக் கிளப்பிவிட்ட மீடியா மற்றும் பார்ப்பன சதிகளின் மிகைப்படுத்தப்-பட்ட மாணவர் தீக்குளிப்பு போன்ற புரூடாக்களால் இவர் மெடிக்கல் காலேஜில் மாணவர் கவுன்சிலில் இடம்பெற்று மாணவர் தலைவராக, மண்டலுக்கு எதிராகக் கொடி தூக்கி, பிரபலம் ஆனார்! அந்த செல்வாக்கிலேயே மெடிக்கல் கவுன்சிலிலும் இடம் பிடித்து, தனது அபார சக்தியினால் எல்லா மத்திய சுகாதார அமைச்சர்களை _ எந்த அரசுகள் மத்தி-யில், மாநிலங்களில் வந்தாலும் இவர் செல்வாக்கு மாறாத அளவுக்கு நன்கு கவனித்துக் கொள்ளத் தெரிந்த மாமனிதர் இவர்!

மத்தியில் இந்திரன்கள் மாறினாலும் இந்த இந்திராணி மட்டும் மாறவே மாட்டார்.

2000_த்தில் பதவி இழந்தும், செல்வாக்கு இழக்காத வகையில் இருந்தவர்; 2009 இல் மீண்டும் தலைவர் பதவியை (விசிமி) பிடித்து இவ்வளவு திறம்பட நடத்தி வருகிறார்!

மத்தியில் கபில்சிபல் கொண்டு வருவதாகக் கூறும் புதிய கல்வி ஒழுங்குபடுத்தும் மசோதாகூட, இவரது ராஜ்ஜியத்திற்குள் புகாமல் பார்த்துக்கொண்ட கைவந்த நிபுணர் இவர்!

இந்த வழக்கு சில நாள் பரபரப்போடு முடிந்து-விடக்கூடாது!

இந்தியா முழுவதும் மக்கள் நிம்மதி அடை-வார்கள்!


தகுதி, திறமை பேசும் (பார்ப்பன) ஏடுகள் என்ன செய்யப் போகின்றன? பொறுத்திருந்து பார்ப்போம்!

------------ நன்றி  விடுதலை(24.04.2010)

Sunday, April 25, 2010

குத்துச்சண்டை என்ன, கிரிக்கெட் விளை-யாட்டா? சூதாடுவதற்கு

குத்துச்சண்டை வீராங்கனை துளசிபற்றி நாளேட்டில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. படித்-தால் கண்களில் இருந்து குருதிதான் கொட்டும்.


வறுமையின் தேள் கொட்டப்பட்ட குடும்பம்_ பத்தாம் வகுப்புக்குமேல் படிக்க வாய்ப்பும் இல்லை.

சிறுவயதிலேயே குத்துச்சண்டையில் மிக ஆர்வம். முறையாகப் பயிற்சிப் பெற வசதி-யில்லை. பயிற்சிக்குத் தேவையான கருவிகள் இல்லை.

அவரைச் சுற்றி இல்லைகள் என்பது ஏராளம். ஆனாலும், இந்த இல்லைகளைத் தாண்டி இந்தத் துளசி-யிடம் தன்னம்பிக்கை என்னும் செல்வம் பல-மாகவே இருக்கிறது.

2009 ஆம் ஆண்-டில் இந்திய அளவில் குத்துச்சண்டையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். மாநில அளவில் முதல் இடத்-தை-யும் தட்டிச் சென்றுள்-ளார்.

இந்திய அணிக்காக உலக அளவில் நடை-பெறும் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. காரணம் வறுமை _ பணத்துக்கு எங்கே போவது?

குத்துச்சண்டை என்ன, கிரிக்கெட் விளை-யாட்டா?_ சூதாடுவதற்-கும், பண மழை கொட்டுவதற்கும்?

ஒரு நாள் உள்நாட்-டில் விளையாடினால் ரூ.1.60 லட்சம்; வெளி-நாட்டில் விளையாடி-னால் ரூ.1.85 லட்சம். இது அல்லாமல் கிரிக்-கெட் வாரியம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கிரிக்-கெட்காரருக்கு அளிக்-கும் சம்பளம் ரூ.50 லட்சம். இவையல்லாமல், விளம்பரங்கள்மூலம் கொட்டுவது. பண மழையல்ல _ வெள்ளம்!

ஆறு ஓட்டம் எடுத்-தால் அதற்கொரு கொசுரு தொகை. பந்-தைப் பிடித்-தால் அதற்-கொரு பரிசு. ஓட்டம் எடுப்பதற்கும், பந்-தைப் பிடிப்பதற்கும்-தானே விளையாடப் போகி-றார்கள்? அதன்-பின் என்ன ஒவ்வொன்-றுக்கும் தனித்தனி ரேட்?

இவ்வளவுக்கும் குத்துச் சண்டையில் தனி மனிதர் சாதனை என்று சொல்லுவதுபோல கிரிக்கெட்டில் இடம் இருக்கிறதா?

பார்ப்பான் எதில் நுழைந்தாலும், அவ-னுக்-குத்தான் முதல் பந்தி _ சகல சவுபாக்கியங்-களும்!

சூத்திரப் பெண் துளசிக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகி-றது? தெரிந்திருந்தால் குத்துச் சண்டைக்கா போயிருப்பார்?

-விடுதலை மயிலாடன் (23.04.2010)





குறளா? கோயில் கோபுரமா? என்று கணக்-கெடுப்பு வைத்துக் கொள்ளத் தயார்தானா?

கேள்வி: தமிழக அரசின் கோபுரச் சின்னம் மாற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்-தைகள் கேட்க ஆரம்பித்-துள்ளனரே?


பதில்: அரசுச் சின்னம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று கார-ணம் கூறுகிறார்கள். சின்-னத்தை உருவாக்கிய அறிஞர்களுக்கு நமது மதச் சார்பின்மை தெரி-யாததல்ல. கட்டடக் கலை ரீதியில் தமிழகக் கோயில் கோபுரங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. கோபுரம் உடனடியாகத் தமிழகத்தை உணர்த்தும். அதற்காகத்தான் கோபுரச் சின்னமே தவிர மதத்-துக்காக அல்ல. மேலும், அசோகரின் சிங்கச் சின்ன-மும், தேசியக் கொடியும் அதில் உண்டு.

இவ்வாறு பதில் சொல்-லியிருப்பது ஒரு அக்கிர-கார இதழைத் தவிர வேறு யார்தான் சொல்லி-யிருக்க முடியும்? கல்கி (25.4.2010) இதழ்தான் இவ்வாறு பதில் சொல்லு-கிறது.

கல்கி கூறுவதை விவாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும், ஓர் அரசின் சின்னம் கட்டடக் கலையைத் தான் சார்ந்த-தாக இருக்க வேண்டுமா?

திருவல்லிப்புத்தூர் கோயில் கோபுரச் சின்னம் தான் அது என்பதை மறுக்க முடியுமா? அது இந்து மதக் கோயில் என்-பதைத் தான் புறந்தள்ள முடியுமா?

மதச் சார்பற்ற ஓர் அரசுக்கு மதம் சார்ந்த ஒன்று அரசு முத்திரை-யாக இருக்கலாமா என்ற வினா-வுக்குப் பதில் சொல்ல வக்கற்ற நிலையில் கட்ட-டக் கலை என்ற முக-மூடிப் போடுவதன் சூட்-சமம் தமிழர்களுக்குத் தெரியாதா?

திருவள்ளுவர் உலக மக்களுக்கே தேவையான உயர் கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளவர். காலங் கடந்து நிற்கும் கருத்துகளை ஒண்ணே முக்கால் அடியில் உணர்த்-துகிறார்.

மதம் சாராத _ அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்ற சிறப்பும் உண்டு. இந்த நிலையில் உள்ளபடி தமிழராக இருப்பவர்கள் எவரும் ஆயிரம் கைகளைக் கடன் வாங்கியல்லவா வரவேற்று வாழ்த்துப் பா படிப்பார்கள்.

குறளா? கோயில் கோபுரமா? என்று கணக்-கெடுப்பு வைத்துக் கொள்ளத் தயார்தானா என்று சவால் விட்டுக் கேட்கி-றோம்.

நாரதன் என்ற ஆணுக்-கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த பிள்ளை-தான் 60 தமிழ் வரு-ஷங்கள் என்று ஆபாச-மாக எழுதி வைத்-திருந்ததை மாற்றி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணை பிறப்பித்ததையே வரவேற்க மனம் இல்லாத வஞ்சகப் பார்ப்பனர்கள், கோபுரத்துக்குப் பதில் திரு-வள்-ளுவர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்-வார்கள்?

கோயில் ஒழிந்த இடம் பார்ப்பான் செத்த இடமாயிற்றே! அது சரி, கல்கி எழுதியதை ஆதார-மாகக் காட்டி மதிமுகவின் அதிகாரப் பூர்வ சங்கொலி ஏடு (30.4.2010) திருவள்ளுவர் உருவம் கூடாது, கோபுரம் தான் இருக்க வேண்டும் என்று எழுதுகிறதே, என்ன சொல்ல! ஓ, அது தெரியாதா? இதற்குப் பெயர்தான் மறுமலர்ச்சி என்பதோ!

- விடுதலை மயிலாடன் (25.04.2010)



Saturday, April 24, 2010

அய்யா தமிழர் தலைவர் அவர்களின் களத்திலே ஒரு மாணவனாக தொடங்கினேன்...தொல்.திருமா

தமிழினத்திற்காக 24 மணிநேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்ற தலைவர், உழைத்துக்கொண்டிருக்கிற தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறி விளக்கவுரையாற்றினார்.


சென்னை_புரசைவாக்கம் தாணா தெருவில் 16.4.2010 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரை வருமாறு:

தி.க. எடுத்த தொலைநோக்குப் பார்வை

ஈழத்தமிழர்களின் பிரச்சினையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டிருந்தபோது தொலைநோக்குப் பார்வையோடு தெளிவான முடிவெடுத்து ஈழவிடுதலைப் போராட்டத்தை உறுதியாக முன்னெடுக்கக் கூடிய வலிமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத்தான் உண்டு என்கிற வகையிலே அந்த இயக்கத்தைத் தொடக்கத்திலிருந்து ஆதரித்து வந்த பெருமை தமிழர் தலைவர் அய்யா அவர்களையே சாரும்.

அதிலும் இன்னும் குறிப்பாக அன்று நடந்த போராட்டத்தை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். நம்முடைய தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து அவர்களின் மகள் திருமணம் என்று கருதுகின்றேன். அந்தத் திருமணம் எழும்பூரில் நடைபெறுகிற அந்த நாளில்தான் தமிழர் தலைவர் அவர்கள் ஒரு ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தார்.

ரயில் மறியல் போராட்டம்

ரயில் மறியல் போராட்டம் அன்றைக்கு தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்து, ஈழத்தமிழர்களுக்கு எதிரான_ஒடுக்க முறைகளைக் கண்டித்து அப்பொழுது, பெரியார் திடலிலே அந்தப் போராட்டத்திற்கான வியூகங்களை எல்லாம் வகுத்தளித்து மாணவர்கள், இளைஞர்கள் ஆங்காங்கே சென்று இங்கே ஓடுகிற அந்த மின்சார ரயிலை எப்படி நிறுத்துவது? பிரச்சினை இல்லாமல், வன்முறை இல்லாமல் எப்படி அந்த போராட்டங்களில் பங்கேற்பது என்று குறித்து வழிகாட்டுதல் தரப்பட்டது. அப்படிப்பட்ட அந்த வழிகாட்டுதலை ஏற்று, அந்த ஒரு பிரிவிலே, ஒரு டீம் அந்த ஒரு பிரிவிலே நானும் கலந்துகொண்டு அந்த ரயிலை சைதாப்பேட்டையில் நாங்கள் மறித்து நிறுத்தினோம்.

எங்களை காவல் நிலையத்தில் வைத்தார்கள்

ஆறு பேரை கைது செய்தார்கள். எங்களைக் கொண்டு போய் குரோம்பேட்டைக்கு அந்தபுறம் ஒரு காவல் நிலையத்திலே வைத்துவிட்டார்கள்.

பிறகு இரவு 7 மணிக்கு மேல்தான் எங்களை விடுவித்தார்கள். அதன்பிறகு பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் அவர்களை நாங்கள் எல்லாம் சந்தித்து விட்டு விடைபெற்றோம்.

தமிழர் தலைவர் சொன்னார்

அப்படி சந்திக்கின்ற நேரத்தில் எங்களை எல்லாம் தரையிலே உட்கார வைத்து அய்யா அவர்கள் சொன்னார்கள்_இந்த விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வலிமை தம்பி பிரபாகரன் அவர்களுக்கு மட்டும்தான் உண்டு.

அவரை ஆதரிப்பதுதான் ஈழத்தை வெல்லுவதற்கு நாம் உற்றத் துணையாக இருக்க முடியும். ஆகவே இந்த போராட்டங்களை நாம் தொடர்ந்து எடுத்துச்செல்வோம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன் என்று அவர் பேசியது இன்னமும் எனக்கு நெஞ்சிலே அப்படியே பசுமையாக நினைவிருக்கிறது. அப்படி நான் முதன்முதலாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டேன்.

தி.க. நடத்திய போராட்டத்தில்தான்

சில மணிநேரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டேன் என்று சொன்னால், அது திராவிடர் கழகம் அமைத்த களத்தில்தான்_-போராட்டக் களத்தில்தான் தமிழர் தலைவர் நடத்திய அந்தப் போராட்ட களத்தில்தான் அவருடைய வழிகாட்டுதல் அடிப்படையில் நடந்த அந்தக் களத்தில்தான் நான் முதல்முறையாக கைது செய்யப்பட்டேன்.

ஆக இதை எல்லாம் நான் தமிழர் தலைவரை வைத்துக்கொண்டு பேசுவதினால் இட்டுக்கட்டிப் பேசுவதாக சிலர் எண்ணக்கூடும். அப்படிப்பட்ட தேவை எதுவும் கிடையாது.

என்னுடைய அரசியல் ஈடுபாட்டின் ஆரம்பமே

தமிழர் தலைவர் இல்லாத மேடைகளிலும் இதை நான் பேசியிருக்கின்றேன். இதுதான் என்னுடைய அரசியல் ஈடுபாட்டின் தொடக்க நிலை. எப்படி நான் நடை பயின்றேன். அரசியல் கற்றுக்-கொண்டேன். களப்பணிகளை ஆற்றக் கற்றுக்-கொண்டேன் என்பதற்கான செய்திகளாக இங்கே முன் வைப்பதில் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

அப்படி அய்யா தமிழர் தலைவர் அவர்களின் களத்திலே ஒரு மாணவனாக என் பயணத்தைத் தொடங்கி இன்றைக்கு திராவிடர் மாணவர் கழக இந்த மாநாட்டிலே பங்கேற்று தமிழர் தலைவர் அய்யா அவர்கள் கொடுத்த வாய்ப்பைப் பெற்றதை எண்ணி இறும்பூது எய்துகிறேன்.

தமிழர் தலைவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்

அதற்காக என்றென்றைக்கும் நான் தமிழர் தலைவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டி ருக்கின்றேன். நேற்றைக்கு முதல்நாள் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த மூன்று இயக்கமும் என்றைக்கும் இணைந்து நிற்கும் ஒரே களத்தில் நிற்கும் என்று சொன்னார்.

அப்படிச் சொல்லுகிறபொழுது அவர்கள் சொல்லுவதைப் போல நாங்கள் திரிசூலமாக இருப்போம் என்று சொல்லமாட்டோம்.

நாங்கள் முத்தமிழாக இருப்போம் என்று அழகாக அவருக்கே உரிய பாணியில் அந்த இலக்கிய நயத்தோடு, தமிழ் நயத்தோடு சொன்னார்கள். மறக்க முடியாத ஒரு நிகழ்வு

அது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம், மறக்க முடியாத ஒரு நிகழ்வு. தமிழர் தலைவர் அவர்கள் சொன்னதை அப்படியே நம்முடைய தமிழக முதல்வர் அவர்களும் வழிமொழிந்தார்.

நம்முடைய இளவல் அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். இந்த மூன்று இயக்கங்களும் ஒன்றாய் இருந்து களப்பணியாற்றும் என்று சொன்னார்கள்.

அடித்தளம் பெரியாரியம்

ஆக அடித்தளம் என்பது பெரியாரியம் என்பதை உறுதி படுத்துவதற்காக நான் சொல்லுகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை தார்மீகத் தலைவராக நான் ஏற்றுக்கொண்டு, அவருடைய கருத்தியல்களை இந்த அரசியல் இயக்கத்தின் கோட்பாடாக ஏற்று நான் செயல்பட்டாலும் பெரியாரியம் என்பதுதான் திருமாவளவனின் அரசியலுக்கு அடித்தளம் என்பதை என்றைக்கும் நன்றி உணர்வோடு சொல்ல நான் கடமைப் பட்டவனாக இருக்கின்றேன். இந்த எழுச்சி மிகுந்த மாநாட்டில் நீங்கள் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானங்கள் ஒவ்வொன்றும், போற்றுதலுக்குரியது, பாராட்டுதலுக்குரியது. இந்தத் தீர்மானங்களை விடுதலை சிறுத்தைகளின் சார்பில் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆதரிக்கிறோம் (பலத்த கைதட்டல்). தேசிய அளவில் ஒரே கல்வி என்கிற திட்டத்தை இந்த மாநாடு கடுமையாக எதிர்த்திருக்கிறது. வரவேற்கத் தகுந்த தீர்மானம்.

இந்தி வாலாக்களாக மாற்ற...

பல மொழிகளைப் பேசுகிற, பல இனங்களை கொண்டிருக்கிற, பல்வேறு கலாச்சார பண்பாட்டுத் தளங்களைப் பெற்றிக்கிற, இந்த தேசத்தில் ஒரே கல்வி என்று சொல்லுவதன் பொருள் என்னவென்றால் எல்லோரையும் இந்தி வாலாக்களாக மாற்றுவது என்பதுதான் அதனுடைய பொருள். எல்லோரையும் எதிர்காலத்தில் இந்தி பேசக்கூடியவர்களாக மாற்றுவதுதான் அதன் பொருள்.

எல்லோரையும் இந்திப் பண்பாட்டுக்குள்ளே கொண்டுவந்து முடிச்சுப் போட வேண்டும். இணைத்துப் போட வேண்டும். பிணைத்துப் போட வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

இரட்டைக் கலாச்சாரம்

ஆகவே நம்முடைய கலாச்சாரத்தை, நம்முடைய பண்பாட்டை விதைப்பதற்கு அது வழிவகுத்துவிடும். உலகில் மூத்த மொழி, முதுமொழி, முதல் மொழி தமிழ் என்பதை நம்முடைய மொழி இயல் வல்லுநர்கள் ஒவ்வொருவரையும் ஆய்ந்தறிந்து சொல்லியிருக்கின்றார்கள்.

இந்தியாவிலே இரட்டைக் கலாச்சாரம்தான். ஒன்று தமிழர் கலாச்சாரம். இன்னொன்று தமிழர் அல்லாத கலாச்சாரம். இரட்டை இனம்தான் ஒன்று தமிழினம். இன்னொன்று தமிழர் அல்லாத இனம். ஆகவேதான் வடவர்கள் எப்பொழுதும் தமிழைப் பகையாகவே கருதுகிறார்கள்.

தமிழர்களைப் பகைவர்களாக.....!

தமிழர்களையும் பகைவர்களாக கருதுகிறார்கள். கன்னடம் அல்லது மலையாளம் அல்லது தெலுங்கு இவை எல்லாம் இந்தியை ஒருபோதும் பகையாகக் கருதியது இல்லை. சமஸ்கிருதத்தை ஒரு போதும் பகையாகக் கருதியது இல்லை. வடவர் பண்பாட்டை எதிரானப் பண்பாடாக, மாற்றான பண்பாடாகக் கருதியது இல்லை. அவர்கள் பண்பாடுதான் இவர்கள் பண்பாடு. அவர்கள் பேசுகிற மொழிதான். இவர்கள் பேசுகிற மொழி. இந்திக்கும், அவர்கள் பேசுகிற கன்னட மொழிக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. சமஸ்கிருதம் ஏராளம் கலந்திருக்கும். இந்தி, சமஸ்கிருதத்தை எதிர்த்து....

தெலுங்கிலே சமஸ்கிருதம் ஏராளம் கலந்திருக்கும். மலையாளத்தில் அப்படி சமஸ்கிருதம் கலந்திருக்கிறது. அவர்களுடைய பண்பாட்டை அப்படியே அவர்கள் உள்வாங்கிக்கொள்கிறார்கள். ஏற்றுக்கொள்கிறார்கள். அதை அங்கீகரித்துக் கொள்கிறார்கள். அதற்கு இணைந்து போகிறார்கள். எப்போதும் எதிர்த்ததில்லை.

இந்திய அளவில் தன்னுடைய தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக போராடிய ஒரே மொழி தமிழ் மொழிதான் (கைதட்டல்). இந்தியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து அதற்காகப் பல உயிர்களை, களப்பலியாக்கி, தனித்தன்மையைக் காப்பாற்று வதற்காக களவாடிய ஒரே இனம் தமிழினம் மட்டும்தான்.

இந்தியாவில் வேறு எந்த இனமும் சமஸ் கிருதத்திற்கு எதிராகவோ, இந்திக்கு எதிராகவோ வாய் திறந்ததும் இல்லை. போராடியதும் இல்லை. இன்றைக்கு அரசியல் ரீதியான ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காகத்தான் மும்பையிலே வடநாட்டுக் காரர்களே திரும்பிச் செல்லுங்கள் என்று சொல்லுகிறார்களே தவிர, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாத அளவிலே இருக்கிறார்கள்.

வெளியே செல்லுங்கள்

குஜராத்காரர்களே வெளியே செல்லுங்கள். உத்திரபிரதேசத்துக்காரர்களே வெளியே செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். நாம் அப்படி அல்ல. நமக்கு ஒரு தனி பாரம்பரியம் இருக்கிறது. நமக்கு ஒரு தனி பண்பாட்டுத் தடம் இருக்கிறது.

அதனால் தான் நம்முடைய மொழி உயர் தனி செம்மொழி என்று அழைக்கப்படுகிறது. இன்றைக்கு இதை வைத்துக்கொண்டு மற்றவர்களும் செம்மொழி அந்தஸ்து கேட்டுப் போராடிக்கொண்டி ருக்கின்றார்கள்.

ஆனால் உலக அளவில் மூத்த மொழிகளின் வரிசையில் முதலிடம் பெறுகிற மொழியாக நமது அன்னைத் தமிழ் விளங்குகிறது.

எதிர்த்தார் பகுத்தறிவுப் பகலவன்

அப்படிப்பட்ட இந்தத் தமிழ் மொழியும், தமிழ் இனமும் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் சமஸ்கிருத மயமாதலை எதிர்த்தார். இந்தித் திணிப்பை எதிர்த்தார். இந்த இந்தித் திணிப்பிற்கும், சமஸ்கிருத மயமாதலுக்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய கருத்தியலாகப் பார்ப்பனீயத்தை எதிர்த்தார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்திருக்கிறார்கள். ஒரே கருத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள்.

பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள். இராமனை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

பெரியார்-அம்பேத்கர்

கிருஷ்ணனைத் தோலுரித்துக்காட்டி யிருக் கிறார்கள். நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் இவர் தென்னாட்டு அம்பேத்கர். அவர் வடநாட்டுப் பெரியார் என்று சொல்லக்கூடிய வகையில்தான் இந்த இரண்டு மாமனிதர்களும் மகத்தான தலைவர்களும் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள்.

எனவே நமக்கு வெவ்வேறு பெயர்கள் இருந்தாலும், விடுதலை சிறுத்கைள், திராவிடர் கழகம் என்று வெவ்வேறு பெயர்கள் இருந்தாலும் நாம் ஒரே இயக்கம்தான். ஒரே கருத்துக்களத்திலே இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரே போராளிகள்தான்.

கருஞ்சிறுத்தைகள்-விடுதலை சிறுத்தைகள்

கருஞ்சிறுத்தைகள் விடுதலை சிறுத்தைகள் அந்த அளவில்தான், நாம் இங்கே நடமாடிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே தந்தை பெரியார் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை இன்றைக்கு அதே வீரியத்தோடு, அதே துணிச்சலோடு இன்னும் சொல்லப்போனால், அதைவிட பன்மடங்கு பாய்ச்சல் நிறைந்த வலிமையோடு தமிழர் தலைவர் அவர்கள் அதை வலுவாக்கியிருக்கிறார். விரிவுபடுத்தி யிருக்கிறார். இன்றைக்கு அய்யா பெரியார் அவர்கள் இருந்தால் நம்முடைய தமிழர் தலைவர் அவர்களை உச்சி முகந்து பாராட்டுவார்.

அரசியலிலே வருவார்கள்-போவார்கள்

ஒரு இயக்கத்தைக் கட்டிக்காப்பாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அரசியல் கட்சிகளிலே நான்கு பேர் வருவார்கள், போவார்கள். அதற்கு ஆதாய நோக்கம் இருக்கிறது. இந்தக் கட்சியிலே சேர்ந்தால் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம். விரைவிலே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம். அதன் மூலம் விரைவாகப் பணக்காரர் ஆகிவிடலாம். வசதி பெருகிவிடும். பதவி, பவிசு கிடைக்கும் என்ற ஒரு சுயநலம் இருக்கும். அதனால் அரசியல் கட்சிகளில் எளிதாக வந்து மக்கள் சேருவார்கள். அதை வலிமைப்படுத்துவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது.

எதிர்பார்ப்பு இல்லாமல்....

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பதவி, பவிசு என்பதில் நாட்டமில்லாமல் நான் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவன் என்று சொல்லுவதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெரும் படை இருக்கிறது என்று சொன்னால், எந்த அளவுக்கு அவர் உழைத்திருந்தால் கட்டிக்காப்பாற்ற முடியும் என்பதை நாம் எண்ணிப் பார்த்து பிரமிப்படைய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

தமிழர் தலைவரின் அளப்பரிய உழைப்பு

நாங்கள் எல்லாம் திராவிடர் மாணவர் கழகம் என்பதை பெருமையாகச் சொல்லுகின்ற நேரத்தில் பகுத்தறிவுக் கருத்துக்களை உள்வாங்கி இங்கே மிகச்சிறப்பாக பேசக்கூடிய அளவுக்கு மாணவர்கள் வளர்ச்சி பெற்று வருகிறார்கள். எழுச்சி பெற்று வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழர் தலைவரின் அளப்பரிய உழைப்பிலிருந்து வெளிப்படுகிறது.

மாணவர்களை இன்றைக்கு நாம் பார்க்கின்றோம். வளருகிறபோதே, அடி எடுத்து வைக்கிற பொழுதே தலைவராக வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினராகி விடவேண்டும். இந்தத் தொகுதி எனக்கு வரவேண்டும், எப்படியும் அந்தத் தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்

நெஞ்சாரப் பாராட்டுகிறேன்

என்றெல்லாம் ஒரு மனப்பால் குடித்துதான் அரசியலிலே ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு இடையிலே, தமிழர் தலைவரின் தலைமையை ஏற்று, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட பிரச்சாரங்களை செய்கிறார்கள் என்று சொன்னால், நான் உள்ளபடியே திராவிடர் மாணவர் கழகத்தைச் சார்ந்த அத்துணை மாணவர்களையும் நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன் (கைதட்டல்).

இதற்கு நாம் தமிழர் தலைவருக்குத் தான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். அடுத்தடுத்த தலைமுறை தந்தை பெரியாருக்குப் பிறகு இப்பொழுது மூன்று தலைமுறை வந்துவிட்டது.

இந்த மூன்று தலைமுறைக்கும், அல்லது நான்கு தலைமுறைக்கும் தலைமை ஏற்று அவர்களை வழி நடத்துவது என்பது போதிய பின்னணி, வலுவான பின்னணி இருந்தால்தான் முடியும். 24 மணிநேரமும் விழிப்பாக இருந்து....

தமிழர் தலைவர் அய்யா அவர்கள் அத்தகைய அறிவு நுண்மான் நுழைபுலம் என்று சொல்லக்கூடிய அறிவு இருக்கின்ற காரணத்தால்தான், 24 மணிநேரமும் இதைப் பற்றி சிந்தித்து உரிய திட்டங்களைத் தீட்டி, இந்த சமூகத்தை எந்நேரமும் விழிப்பாக இருக்கக்கூடிய அளவிற்கு உழைத்து வருகிறார்கள். இயக்கத்தைக் கட்டிக்காத்து வருகிறார்கள்.





(தொடரும்)........(நன்றி விடுதலை 24.04.2010)

பூணூலை ஒரு முறுக்கு முறுக்கிக் கிளம்பியிருக்கும் தினமலரில் இன்று ஒரு தகவல்

கேள்வி: நம் நாட்டில் இறைவுணர்வு குறைந்து வருகிறதோ?


பதில்: என் அனுபவத்-துல சொல்றேன்... பக்தி அதிகமாயிக்கிட்டிருக்கு.

...கோயிலுக்குப் போற-வங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்-கிட்டே இருக்கு!

பழனியில் எம் பெரு-மான் முருகன் கோயில் உண்டியல் முன்னாடி-யெல்-லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்துச்சு! இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூன்று கோடி-யைத் தாண்டிடுது... பக்தி அதிகமாயிருக்கு... ஆனால், ஒழுக்கம்தான் குறைஞ்சு போயிடுச்சு.

கேள்வி: இறைவனி-டத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்-றால், ஒழுக்கமும் இருக்-கிற-தென்று சொல்லலாமே?

பதில்: ஊஹூம்... அப்-படியில்லை... பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்த-மேயில்லை...

(ஆனந்தவிகடன், 2.12.1991).

கேள்விகளுக்குப் பதில் சொன்னவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமா? சொன்னவர் சாட்சாத் திருமுருக கிருபானந்தவாரியார்தான்.

சரி... இப்பொழுது அதற்கு என்ன வந்தது? வாரியார் ஏன் சாட்சிக்கு அழைக்கப்படுகிறார்?

காரணம் இல்லாமலா? சங் பரிவார்களையும், பக்தியையும் தூக்கி நிறுத்-தவும், திராவிட இயக்கத்-தைக் கொச்சைப்படுத்த-வுமே அவதாரம் எடுத்த-தாகச் சிண்டை விசிறி-விட்டு பூணூலை ஒரு முறுக்கு முறுக்கிக் கிளம்-பியிருக்கும் தினமலரில் இன்று ஒரு தகவல்.

திருப்பதியில் தேவஸ்-தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில் தங்க விரும்புவோர் இனி கைரேகையைப் பதிவு செய்துகொள்ளவேண்டுமாம். அதேபோல, அறையைக் காலி செய்யும்போதும் கைரேகையைப் பதிவு செய்து முன் பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டு-மாம்.

இதற்கான காரணங்-கள் வெளிப்படை. திருப்-பதி கோயிலுக்குச் சொந்த-மான தங்கும் அறைகளில் பல்வேறு ஒழுக்கக்கேடு-களும், முறைகேடுகளும் அதிகம் நடந்து வருகின்-றன.

விபச்சாரம் அதிகம் நடக்கும் இடங்களில் திருப்பதிக்கு முக்கிய இடம் என்ற தகவலும் ஏற்-கெனவே வெளிவந்தது-தான்.

திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணும்-போது பெரிய கேமரா பொருத்தப்படுகிறது. காரணம், பணத்தை எண்-ணும்போது சுருட்டும் வேலை ஜோராக நடப்ப-தைக் கண்டுபிடிக்கத்தான்.

திருப்பதி டாலர் விற்-பனையிலும் கொள்ளை! டாலர் ரெங்காச்சாரி என்றே ஒருவருக்குப் பெயராம்.

ஏழுமலையானுக்குச் சொந்தமான நகைகளிலும் மோசடி நடந்துள்ளதால், கோயில் நகைகளின் இருப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தர-விட்டதும் நினைவில் இருக்குமே!

பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று இதற்கு மேலும் நம்பித் தொலைக்கலாமா?

---விடுதலை  மயிலாடன் (24.04.2010)




Friday, April 23, 2010

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்....அடுத்த விசாரணை 2011 பிப்ரவரியாம்!

தமிழர்களின் நூற்றாண்டு கடந்த கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்  இப்பொழுது உச்சநீதிமன்றத்தின் அறைக்குள் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது.


தமிழினத்துக்கு விரோதமாக பார்ப்பனிய முறையில் சிந்தித்துக் கொண்டிருக்கிற செல்வி ஜெயலலிதாவும், தனக்குப் பின்னால் சொல்லிக் கொள்வதற்கென்று ஒற்றை ஆள்கூட இல்லாத _ அதேநேரத்தில் பார்ப்பனர்களின் காகிதங்களால் (பத்திரிகைகளால்) தூக்கி நிறுத்தப்படும் சு.சாமியும் முற்றிலும் தமிழர்களுக்கு விரோதமாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படக் கூடாது என்ற ஒரே மூச்சில் உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிக் கெஞ்சினார்கள்.

17 லட்சத்து 25 ஆண்டுகளுக்குமுன் ராமன் என்கிற கற்பனைப் பாத்திரம் ஒன்று பாலம் கட்டியதாம் _ சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரால் அந்தப் பாலத்தை இடிக்கிறார்களாம். அது தடுத்து நிறுத்தப்படவேண்டுமாம்; மெத்தப் படித்த உச்சநீதிமன்றமும் அந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிப்பதோடு அல்லாமல், இப்பொழுது திட்டமிட்டுள்ள பாதைக்குப் பதிலாக வேறு பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள்பற்றி ஆராய ஆணையும் பிறப்பித்து விட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் பகுதியில் (51_ஏ) விஞ்ஞான அணுகு-முறை, மக்களிடத்தே ஏற்பட ஒவ்வொரு குடி-மகனும் கடமையாற்றவேண்டும் என்று கூறி-யுள்ளது.

ஒருக்கால் நீதிபதிகளுக்கு அது பொருந்தாது, சாதாரண குடிமகனுக்குத்தான் பொருந்தும் போலும்!

ஏற்கெனவே திட்டத்தின் பெரும்பகுதிப் பணிகள் முடிந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்ட நிலையில், போகாத ஊருக்கு வழிகாட்டுவதுபோல, மாற்றுப் பாதை குறித்து ஆராய ஆணை பிறப்பிப்பது உகந்ததுதானா என்பது நியாயமான வினாவாகும்.

தொல்பொருள் இலாகா தேவையில்லை; பொறியியல் துறை தேவையில்லை; கடல்சார் அறி-வியல் துறையை மூட்டைக் கட்டி கடலுக்-குள் தூக்கி எறிந்துவிடலாம்; புராணம் என்ன சொல்லுகிறது? இதிகாசத்தில் எந்த இடத்தில் என்ன குறிப்பு இருக்கிறது? யாக்ஞ வல்கியர் யாது கூறியிருக்கிறார் என்று மனிதன் பின்னோக்கி நடக்கவேண்டியதுதானா?

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி புவியியல் ஆய்வுத் துறைத் தலைவர் திரு. ராமானுஜம் அவர்கள் இந்து ஏட்டில் (17.3.2007) தெளிவாகவே குறிப்பிட்டு இருந்தார்.

இது மனிதன் கட்டிய பாலம் அல்ல. இது புவியியல் நிகழ்வால் ஏற்பட்டது என்று கறாராகக் கூறியுள்ளாரே!

ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே நீண்ட நெடிய தூரத்திற்கு இத்தகு மணற்பாலங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டியது ராமனா என்று பேராசிரியை தமயந்தி ராஜதுரை அறிவியல் முறையில் வினா எழுப்பினார்.

இந்தக் கேள்விகள் எல்லாம் செல்வி ஜெய-லலிதா, சு.சாமிகளின் காதுகளில் விழாமல் இருக்-கலாம். உலகத்துக்கே நீதி சொல்லும் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு நீதிபரிபாலனம் செய்யும் கனம் நீதிபதிகளின் கவனத்துக்குச் செல்லவில்லையா?

இந்த வழக்கு 21.4.2010 அன்று உச்சநீதிமன்றத்-திற்கு வந்தது. அடுத்த விசாரணை 2011 ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு விசாரணை நடந்து தீர்ப்பு கி.பி. 2020 இல் தான் கிடைக்கும் என்று நம்பலாம். ரூ.2,400 கோடி திட்டம் அப்பொழுது 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கக்கூடும்.

மக்கள் பணம் இப்படி நாசமாகப் போவதுபற்றி யாருக்குக் கவலை?

நம் தமிழர்களும் அந்தந்த நேரத்தில் சூடாக எகிறிக் குதிப்பார்கள். காலம் செல்லச் செல்ல அதைக் கண்டிப்பாக மறந்துவிடுவார்கள். உணர்ச்சிகளும் மரத்துப் போய்விடும்.

தமிழர்களின் இந்த இயல்பினை நம் இன எதிரிகள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஈரோட்டு எழுச்சி மூலிகைதான் தேவைப்படுகிறது.

கழகத் தோழர்களே, நமது பிரச்சாரமும், பணிகளும் மேலும் மேலும் தீவிரம் பெறட்டும் _ கூர்மை அடையட்டும்!

----------- விடுதலை தலையங்கம் (23.04.2010)

தந்தை பெரியார்தான் முதல் தொண்டர், முதன்மைத் தலைவர் என்பதில்தான் அய்யமுண்டோ!

வைக்கம் போராட்டம் என்பது இந்தியத் துணைக் கண்டத்து வரலாற்றிலே - மாபெரும் திருப்பத்தைக் கொடுத்த சமூகப் புரட்சிப் போர்!


தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக இருந்த நிலை-யிலே_- இன்னொரு மாநிலத்-தின் பிரச்சினையிலே தலை-யிட்டு, களம் அமைத்து இந்-தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த ஈடு இணையில்லாப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களே!

உள்ளூர் காங்கிரஸ்காரர்-களின் விருப்பத்துக்கு மாறாக-வும், ஏன் காந்தியாரின் இடை-யூறுகளைப் பொருட்படுத்தா-மலும் வெற்றிக்கொடி நாட்டிய வரலாற்று நாயகர் வைக்கம் வீரர் நம் அய்யா.

வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய இந்தப் போராட்டம்தான் மாகத் என்னும் இடத்தில் உள்ள பொதுக்குளத்தில் தீண்டத்-தகாதவர்கள் என்று ஒதுக்கப்-பட்ட மக்களை அழைத்துக் கொண்டு நீர் அருந்தும் போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் நடத்துவதற்குத் தூண்டுகோலாக இருந்தது.

இந்நாள்_- அதாவது ஏப்ரல் 22 இல்தான் (1924) தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் முதலாவதாகக் கைது செய்யப்பட்டு அருவிக்-குத்தி சிறையில் அடைக்கப்-பட்டார். திருவிதாங்கூர் அரசர் தந்தை பெரியார் அவர்களின் நட்புக்கு உரிய-வர் என்பதால் தண்டனை இலேசாகவே இருந்தது. சில நாள்களிலேயே விடுதலை செய்யப்பட்ட தந்தை பெரியார் மீண்டும் படுவேகமாகக் களத்தில் குதித்தார். மீண்டும் கைது செய்யப்பட்டு திரு-விதாங்கூர் மத்திய சிறைச்-சாலை-யில் கடின காவல் கைதியாக வைக்கப்பட்டார்.

திருவிதாங்கூர் சிறைச்-சாலையில் தந்தை பெரியார் எப்படி நடத்தப்பட்டார்? தந்தை பெரியார் எப்படி நடந்து கொண்டார்? என்பதை பாரிஸ்டர் கே.பி.கேசவமேனன் தமது சுயசரிதையில் பின்-வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்-கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்-கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அது-போல் இரு மடங்கு வேலை செய்கிறார்.

ஒரு சாதி இந்து என்று சொல்லக் கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்தி-லுள்ள தீண்டத்தகாத மக்-களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.

ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம், பெருந்-தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்-கின்ற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக தான் எவ்வளவு கஷ்ட நஷ்டங்-களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே_- அதைப் பார்த்து இந்த மாநில மக்-களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனு-பவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்-போதாவது வரவேண்டாமா?

-கே.பி.கேசவமேனன், மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108

எதிலும் தந்தை பெரியார்தான் முதல் தொண்டர், முதன்மைத் தலைவர் என்பதில்தான் அய்யமுண்டோ!

- விடுதலை மயிலாடன் (22.04.2010)

Thursday, April 22, 2010

(அதிகாலை ஒரு மணி) உங்களால் ஏதும் உதவ முடியுமா? என்று சுப.வீ டம் கேட்ட தோழர் தியாகு

கடந்த சில நாள்களாக, மிகுந்த பர-பரப்புடன் பேசப்பட்டு வரும் ஒரு செய்தியில், அடிப்படையான சில உண்மைகள் திட்ட-மிட்டு மறைக்கப்பட்டுள்ளன என்பதை இப்-போது அறிய முடிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார், தமிழக மண்ணில் கால் வைக்கவும் அனுமதிக்காமல், மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மனித நேயமற்ற செயலை அனைவரும் கண்டிக்கிறோம். மக்களவை-யிலேயே தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இதுகுறித்து கவன ஈர்ப்புச் செய்துள்ளார். இந்நிலையில், உண்மைகளை மூடிமறைத்துக் கலைஞரின் மீது பழி போட்டு, உண்ணாவிரதம், கண்டனம் என்ற ஒரு மலிவான அரசியல் இங்கே அரங்கேற்றப்படுகிறது.


இது தொடர்பாக மேலும் சில செய்திகளை இங்கு பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பு-கிறேன்.

விமான நிலையம் பரபரப்பாக இருந்த அந்த நள்ளிரவில் (அதிகாலை ஒரு மணி) தோழர் தியாகு, என்னைத் தொலை பேசியில் அழைத்து அந்தச் செய்தியைக் கூறினார். பத்திரிகை-யாளர்கள் மூலமாகக் கவிஞர் தாமரைக்குச் செய்தி கிடைத்ததாகக் கூறிய அவர், உங்களால் ஏதும் உதவ முடியுமா? என்று கேட்டார். முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வழி உள்ளதா? என்றும் வினவினார்.

இந்த நேரத்தில் அய்யாவை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும்? என்றேன். அதில் உள்ள நியாயத்தை அவரும் புரிந்து கொண்டார். பிறகு தமிழின உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அடுத்தடுத்துத் தொலைபேசியில் பேசினர். இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, உதவிட முடியுமா? என்று கேட்டார்.


அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்-துடன் அவரிடம் சொன்னேன். கலைஞரையும், அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும் இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன் கூட்டியே பேசியிருக்கக்-கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன். இல்லை-யில்லை. விசா கிடைத்துவிட்டால், பரபரப்-பாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் யாருக்-கும் சொல்லவில்லை என்று அவர் கூறினார்.

அப்படியானால், வைகோவிற்கும், நெடுமாறன் அய்யாவிற்கும் மட்டும் எப்படித் தெரிந்தது? என்ற என் கேள்விக்கு, அவருக்கும் விடை தெரியவில்லை.

வயதான தாயை அழைத்து வந்து, அவருக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட, அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமே இங்கு அரசியல் தலைவர்கள் சிலரிடம் விஞ்சியிருப்பதை இப்போது நம்மால் அறிய முடிகிறது.

விமான நிலையத்தில், தொடர்பே இல்லாமல் கலைஞரைக் குற்றஞ்சாட்டி வைகோ (வழக்கம் போல) ஆவேசமாய்ப் பேசுவதை ஜெயா தொலைக்காட்சி மறுநாள் தொடர்ந்து காண்பித்தது. அடடா, பார்வதி அம்மாள் மீது ஜெயலலிதாவிற்குத்தான் எத்தனை அன்பு என்று விவரம் அறியாதவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

கருணாநிதியைத் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது என்று அறிக்கை விட்டார் நெடுமாறன்.

எத்தனை பெரிய மோசடிகள் இவை! 2003 ஆம் ஆண்டு, பிரபாகரனின் பெற்றோரை இந்தியாவிற்குள் நுழையவே அனுமதிக்கக்-கூடாது, அவர்களைக் கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு வார்த்தை கூட கண்டிக்காதவர்கள், அவரால்-தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்-பட்டுள்ளார் என்ற உண்மையைத் திசை திருப்ப ஆடும் நாடகத்தைத்தான் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது.

பார்வதி அம்மாள் விரும்பினால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களை அழைப்பதற்கு ஆவன செய்வேன் என்று கூறும் கலைஞரைத் தமிழ்ச் சமுதாயம் போற்றும்.

வயது முதிர்ந்து, நோயினாலும் பல்வேறு சூழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள அந்தத் தாய் மன அமைதியுடன் வாழ நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை மனிதநேயம் கொண்ட அனைவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். நாம் அதற்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.

அதே நேரத்தில், திருப்பி அனுப்பிய பாவிகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்ப-வர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.

நீங்கள் தேடும் அந்தப் பாவி போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் உண்ணாவிரதப் போராட்-டத்தை நடத்துங்கள்.

(நன்றி: முரசொலி, அய்யா சுப.வீரபாண்டியன் எழுதியது, 22-.4.-2010





பெரியாரிடம் ஒருவர் கேட்ட கேள்வி.....பொதுவுடைமை என்று சொல்லுகிறீர்களே, உன் மனைவியைப் பொதுவுடைமை ஆக்குவாயா?

சென்னையில் நடைபெற்ற மாணவர் கழக மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் ஒரு புதுமை இணைப்பு!


இதுவரை எந்தக் கட்சி மாநாடும் கண்டிராத புதிய சேர்க்கை இது.

பார்வையாளர்கள் எழுப்பும் வினாக்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் விடை அளிக்கும் நிகழ்ச்சி இது.

விவாதப் போர்! என்ற தலைப்பில் இது நடை-பெற்றது. இப்படி ஒரு நிகழ்ச்சி என்றவுடனேயே ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எப்படிப்பட்ட வினாக்கள் எழுப்பப்படும்? எப்படி பதில் சொல்லப் போகி-றார்கள்? என்ற எதிர்பார்ப்புடன் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

சிலர் மேடைக்கே வந்து வினாக்களை எழுப்-பினார்கள்.

இன்னும் சிலர் கேள்விகளை துண்டுச் சீட்டில் எழுதி அனுப்பினார்கள்.

பொதுக்கூட்டங்களில் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது என்பது திராவிடர் கழகத்தில் சாதாரண-மானது.

அதுவும் தந்தை பெரியார் கூட்டத்தில் கேள்வி-களைக் கேட்பதற்கென்றே பலர் வருவார்கள். கூட்டத்தின் முடிவில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படும்.

அந்தக் கேள்வி _ பதில் பகுதி உற்சாகத்துடன் நடைபெறும். விஷயத்தைத் தெரிந்துகொள்ள-வேண்டும் என்ற நோக்கில் சிலர் கேள்விகளைக் கேட்கக்கூடும்; விஷமத்தனமாகக் கேட்பதற்கென்றே சிலர் வருவார்கள். அத்தனைக் கேள்விகளுக்கும் தந்தை பெரியார் அவர்கள் மிகவும் பொறுமையாக, நிதானமாகவே பதில் சொல்லுவார்கள்.

தந்தை பெரியார் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்-பயணம் செய்து தாயகம் திரும்பிய நிலையில், பொதுவுடைமைப் பிரச்சாரம் தூக்கலாக இருந்தது.

அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்களிடம் மன்னார்குடியில் எழுப்பிய வினா_ எல்லாம் பொதுவு-டைமை என்று சொல்லுகிறீர்களே, உன் மனை-வியைப் பொதுவுடைமை ஆக்குவாயா? என்ற வினா-வுக்குக்கூட தந்தை பெரியார் பொறுமையாகத்தான் பதில் அளித்தார்.

இதில் என்னைக் கேட்பதற்கு என்ன இருக்கிறது? என் மனைவியைக் கேளுங்கள் என்றாரே பார்க்கலாம்!

சிதம்பரத்தில் கூட்டத்தில் எதிரே உட்கார்ந்து கேள்வி எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த பார்ப்பனரின் பேனாவின் மை தீர்ந்துவிட்ட நிலையில், தன்னிடம் இருந்த பேனாவை எடுத்துக் கொடுத்து கேள்விகளை எழுதச் சொன்ன ஏந்தலாயிற்றே!

கோவையில் பொதுக்கூட்டம் _ சரமாரியாகக் கேள்விகள் _ அத்தனைக்கும் பதில் சொல்லி முடித்தார் அய்யா.

நான் செல்லும் ரயிலுக்கு இன்னும் நேரம் இருக்-கிறது. மேலும் கேள்விகளைக் கேளுங்கள் என்று பொது-மக்களைப் பார்த்து கேள்விகளைக் கேட்கச் சொன்ன அந்தத் துணிவு தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தானது.

அண்மைக்காலமாக கூட்டங்களில் கேள்வி கேட்கும் பழக்கம் ஓய்ந்துவிட்டதாகவே தெரிகிறது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள் கலி. பூங்-குன்றன், சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கழகப் பிரச்சார செய-லாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் வினாக்களுக்கு விடையளிக்கத் தயாராகவே இருந்தனர்.

கழகச் சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஒருங்கிணைப்பாளராக இருந்து விவாதப் போரைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.

1. நாட்டில் எங்கு பார்த்தாலும் கோயில் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. குட முழுக்குகள் நடந்து-கொண்டுள்ளன. கோயில் திருவிழாக்களுக்கு மக்கள் ஏராளம் கூடுகின்றனர்.

திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் தோல்வி அடைந்து-விட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்பது முதல் கேள்வி.

துணைப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திர-சேகரன் அவ்வினாவுக்கு நல்ல வகையில் பதில் சொன்னார்.

இன்றைய தினம் பக்தி என்பது ஒரு ஃபேஷன்; பிசினஸ் என்று சங்கராச்சாரியாரே ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று புராணப் பிரசங்கி கிருபானந்தவாரியாரே பேட்டி அளித்தார்.

கோயில் திருவிழாக்களில் ரெக்கார்டு டான்ஸ் அரை நிர்வாண ஆட்டங்கள் நடத்தி பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றனர்.

கடவுள் மீது பக்தியுடனோ, கடவுள் சக்தி வாய்ந்தவர், பக்தி செலுத்தாவிட்டால் கண்ணைக் குத்தி விடுவார் என்று அஞ்சியோ யாரும் கோயிலுக்குப் போவதில்லை.

கோயில் சிலைகள் திருட்டும் சர்வ சாதாரணமாக நடந்துவருகின்றன. சாமியார்களின் காலித்தனமும், ஆபாச நடவடிக்கைகளும் சந்தி சிரிக்க ஆரம்-பித்து-விட்டன. கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள்ளேயே பெண்-களைக் கர்ப்பம் உண்டாக்கும் வேலையை அர்ச்சகப் பார்ப்பான் செய்கிறான்.

சங்கராச்சாரியாரே கொலை குற்றவாளியாக அலைந்துகொண்டுள்ளார்.
பக்தியின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது.

சங்கராச்சாரியார்களும், சாமியார்களும் தமிழ்நாட்டில் கைது செய்யப்படுகிறார்கள் என்றால், அது திராவிடர் கழகப் பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றிதானே என்று விலாவை முறிக்கும் வகையில் பதிலடி கொடுத்தார்.

2. ஈழத்தில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்-பட்டனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அதற்குத் துணை போனது. அத்தகைய காங்கிரசைத் தேர்தலில் ஆதரித்தது சரியா என்ற வினாவை ஒரு தோழர் எழுப்பினார்.

கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருமை-யான வகையிலே பதில் அளித்தார்.

ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலை-யில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் கொதித்-தெழுந்-தனர். ஒவ்வொரு அமைப்பும் அவர்களுக்கு உகந்த வகையில் போராட்ட நடவடிக்கைகளை மேற்-கொண்டன. 1983 இல் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமை _ ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்த நிலை _ அந்தக் காலம் தொட்டு திராவிடர் கழகம் தன் கடமையைச் சரியாகவே செய்துவந்துள்ளது.

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியின்மீது தமிழ்-நாட்டுக்கு மக்கள் கடும் அதிருப்தி இருந்தது உண்மை-தான்.

அதேநேரத்தில், நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்ட அகில இந்திய கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக்கூடாது.

ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் வேறுபாடு ஒன்றும் கிடையாது. காங்-கிரசைத் தோல்வி அடையச் செய்வதன்மூலம் ஒரு மதவாத பார்ப்பனீய இந்துத்துவா ஆட்சியைக் கொண்டுவரும் தவறினைச் செய்துவிடக்கூடாது என்பது தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடாக இருந்தது என்று விளக்கிக் கூறினார் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி.

3. சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கேட்பதால்தான் அந்தச் சட்டம் நிறை-வேற்றப்படாமல் இருக்கிறது என்று கூறப்படுகிறதே என்று மாணவி ஒருவர் வினா தொடுத்தார்.

கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு அதற்கு ஆணித்தரமாகத் தக்க புள்ளி விவரத்துடன் பதிலடி கொடுத்தார்.

பெண்களுக்கு 33 சதவிகிதம் கூடப் போது-மான-தல்ல _ நியாயப்படி 50 விழுக்காடு கொடுக்கப்பட-வேண்டும். அதேநேரத்தில், உள் ஒதுக்கீடு கட்டாயம் தேவைப்படுகிறது. இல்லையென்றால், பெரும்பாலும் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதிப் பெண்கள்தான் சட்டமன்றங்களையும், நாடாளுமன்றத்தையும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள்.

இன்றைக்கேகூட இந்திய அளவில் வெளி உலகுக்-குத் தெரியக்கூடிய பெண் அரசியல்வாதிகள் யார்?

சுஷ்மா சுவராஜும், மம்தா பானர்ஜியும், பிருந்தா காரத்தும், ஜெயலலிதாவும்தானே!

அத்திபூத்ததுபோல ஒரு மாயாவதியும், உமா-பாரதியும் இருக்கிறார்கள். உமாபாரதி பிற்படுத்தப்-பட்டவர் என்பதால், பாரதீய ஜனதா அவரை ஓரங்-கட்டிவிட்டது.

மாநிலங்களவையில் உள் ஒதுக்கீடு இல்லாம-லேயே மசோதா நிறைவேற்றப்பட்டது என்றவுடன், அரசியலில் எதிரும் _ புதிருமாக இருக்கக்கூடிய பிருந்தா காரத்தும், சுஷ்மா சுவராஜும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்களே, இதன் பொருள் என்ன?

இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டை நினைத்துக்-கொண்டு மற்ற மற்ற மாநிலங்களைப் பார்க்கக்கூடாது.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார், தன்மான இயக்கம் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சமூகப் புரட்சிப் பாதையில் மக்களை அழைத்துச் சென்றுள்-ளனர். பெரும் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக எந்தக் கட்சியும் பார்ப்பனர்-களை வேட்பாளர்களாக நிறுத்த முன்வருவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு சட்டப்-பேரவையில் மொத்தம் உள்ள உறுப்பினர்களுள் இருவர் மட்டுமே பார்ப்பனர்.

ஒன்று ஜெயலலிதா; இன்னொருவர் எஸ்.வி. சேகர்.

விகிதாசாரப்படி அவர்கள் ஏழு பேர் வரை இருக்கலாம். அந்த அளவுகூட கொடுக்கத் தமிழர்கள் இங்கு தயாராக இல்லை. மற்ற மாநிலங்களில் அந்த நிலை இல்லையே! அதைத்தானே லாலுபிரசாத்தும், முலாயம்சிங்கும் சுட்டிக் காட்டுகிறார்கள்?

சட்டம் நிறைவேறாததற்குக் காரணம் உள் ஒதுக்கீடு கேட்பதல்ல; உள் ஒதுக்கீட்டை ஏற்காததுதான்.

முதலில் சட்டம் வரட்டும்; பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவது போலியான _ ஆபத்தான சமாதானமாகும். சட்டம் செய்யும்போதே, சரியாகச் செய்துவிடவேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலை என்பதை பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு விளக்கிக் கூறினார்.

4. திராவிடத்தால் வீழ்ந்தோம்; தமிழர்களை திராவிடத்திலிருந்து மீட்போம் என்று கூறி சிலர் புறப்பட்டுள்ளார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்பது ஒரு வினாவாகும்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் அந்த வினாவுக்கான விடையை அளித்தார்.

திராவிடர் என்பது திராவிட இயக்கத்தவர் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்ட கற்பனைப் பெயரல்ல. அது வரலாற்று ரீதியான உண்மையாகும்.

சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று சொல்லப்படுகிறதே அதனை மறுக்கிறார்களே! இந்தியா முழுமையும் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்பதும், ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் புகுந்தனர் என்பது வரலாற்றில் பாலபாடமாகும்.

பார்ப்பனர் அல்லாத மக்களின் உரிமைக்காகப் பாடுபடும் ஒரு இயக்கத்துக்கு என்ன பெயர் சூட்டுவது என்பதில் தந்தை பெரியார் மிகவும் கவனமாகவே இருந்திருக்கிறார்.

நீங்கள் கொடுக்கும் பெயரில் சூத்திரனல்லாத ஒரு தூசிகூடப் புகுந்து கொள்ள வசதியிருக்கக்கூடாது; அயலார் புகுந்துகொள்ளாமல் ஏதாவது ஒரு தடை இருக்கவேண்டும். திராவிடர் என்று கூறினால், திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்துகொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும் பிறவி காரணமான இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணம் இல்லை (நூல்: மொழி ஆராய்ச்சி) என்று திட்டவட்டமாக காரணா காரியத்தோடு வரையறுத்துக் கூறியுள்ளாரே தந்தை பெரியார்.

இந்தப் பார்ப்பன எதிர்ப்பு திராவிடர் இயக்கம்தானே தமிழனுக்குத் தன்மான உணர்வை ஊட்டியது. தமிழன் என்ற இன உணர்வை ஊட்டியது. கல்வி வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. தமிழர்கள் உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்தது.

தமிழ்மொழியை வளர்த்தது; எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. ஒரு புரட்சிக்கவிஞரையளித்தது. ஒரு புலவர் குழந்தையை கொடுத்தது. நமஸ்காரம் _ வணக்கமானதும், உபந்நியாசம் _ சொற்பொழிவானதும், அக்ராசனர் _ தலைவர் ஆனதும், வந்தனோபசாரம் _ நன்றியாக மலர்ந்ததும் திராவிடர் இயக்கத்தின் கொடையல்லவா?

இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று ஆக்கியது எந்த இயக்கம்?

திராவிடர் இயக்கம் என்ற பெயர் இருக்கிற காரணத்தால், சென்னையை ஆந்திராவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டோமா?

திராவிட நாடு என்று சொல்லப்பட்ட நான்கு மாநிலங்களையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றபோது, அதனை எதிர்த்து தந்தி அனுப்பியவர் திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் தானே!

திராவிடர் என்பதால் எதை விட்டுக் கொடுத்தோம்? விரலை மடக்கிக் கூற முடியுமா? என்று எதிர் வினாவைத் தொடுத்தார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன். தமிழன் என்றால், சோகூட தன்னைத் தமிழன் என்று கூறிக் கொண்டு தமிழர்களுக்காக நான்தான் தலைவன் என்பானே! என்றும் குறிப்பிட்டார் பொதுச்செயலாளர்.

5. இன்னொரு கேள்வியும் எழுத்துப் பூர்வமாக மேடைக்கு வந்தது. அது இடதுசாரி நண்பர்கள் சில நேரங்களில் வைத்த குற்றச்சாற்றாகும். (இது அடியேன் கேட்ட கேள்வி)

கீழவெண்மணியில் விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டபோது, பெரியார் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாற்று கேள்வியாக வந்தது.

உடனே அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆதாரக் குறிப்பை எடுத்து வந்து மக்கள் மத்தியில் படித்துக் காட்டினார்.

கடைசி நடவடிக்கையாக நேற்றுமுன்தினம் தற்காப்புக்காக ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட ஆண், பெண் குழந்தைகள் உள்பட 42 பேர்கள் பதுங்கிக்கொண்ட வீட்டை பூட்டிக் கொளுத்தி 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளையும், இதுபோன்ற அராஜகங்களையும், சட்ட விரோதங்களையும் அடக்-கிட ஆட்சிகளால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியர்களுக்குத் தகுதியில்லை. இதற்காக நம் நாட்டை நாம்தான் ஆளவேண்டும் என்று கருதத் தேவையில்லை. அதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை (விடுதலை, 28.12.1968) என்று தந்தை பெரியார் அவர்கள் விடுதலையில் வெளியிட்ட அறிக்கையைப் படித்துக் காட்டியபோது, இடதுசாரிகளின் பொய்ப் பிரச்சாரம் மண்ணுக்குள் புதைந்துபோனது.

கேள்விகள் வந்துகொண்டேயிருந்தன. இது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கே! ஆனாலும், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் ஓட்டம் கருதி, முக்கிய வினாக்களுக்கான பதில்களுடன் விவாதப்போர் நிறைவடைந்தது.

எஞ்சிய வினாக்களுக்கு விடுதலை ஞாயிறுமலரில் கேள்வி _ பதில் பகுதியில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய நிகழ்ச்சி இளைஞர்களையும், மாணவர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

- தொகுப்பு மின்சாரம், விடுதலை (21.04.2010

Wednesday, April 21, 2010

ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பு ஏற்படுத்தியதுதான் தமிழ்-நாடு தமிழருக்கே!

சக்ரவர்த்தி ராஜ-கோபாலாச்சாரியாரால் (ராஜாஜி) சென்னை மாகா-ணத்தில் கட்டாய இந்தி புகுத்-தப்பட்ட நாள் தான் இந்நாள் (1938).


சென்னை மாகாணத்தின் பிரதம அமைச்சர் என்ற முறை-யில், 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடிய கையோடு கட்டாய இந்தி-யையும் திணித்தார்.

இந்தியைப் புகுத்திய-தற்குப் பிரதமர் ஆச்சாரியார் சொன்ன காரணம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றும்-போது குறிப்பிட்டார்.

1926 ஆம் ஆண்டி-லேயே இந்தியின் இரகசி-யம்பற்றி எழுதினார் தந்தை பெரியார். தமிழிற்குத் துரோ-கமும் _ இந்தியின் இரகசிய-மும் (குடிஅரசு, 7.3.1926) என்ற தலைப்பில் எழுதி-யிருந்தார்.

1931 இல் நன்னிலத்தில் கூடிய நன்னிலம் வட்டார சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழைய புராணக் கதை களைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வட மொழி முதலிய மொழி களை நமது மக்கள் படிக் கும்படிச் செய்வது, பார்ப் பனீயத்துக்கு மறைமுக மாக ஆக்கம் தேடுவ தாகும் என்று 1931 ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கப்-பட்டது. அதைத்தான் 1938 இலும் லயோலா கல்லூரியி-லும் ஆச்சாரியார் எதிரொ-லிக்கிறார்.

பார்ப்பனர்களின் உள்-ளத்து ஆழத்தில் பதுங்கிக் கிடக்கும் நச்சுப் பொருள் எவ்வளவுத் தொலைநோக்-கோடு துல்லியமாகக் கண்-டறிந்து வெளிப்படுத்தப்பட்-டுள்ளது என்பதை நினைக்-கும்பொழுது மிகுந்த ஆச்-சரியமாகவே இருக்கிறது.

ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பும், அதனால் ஏற்-பட்ட எதிர்ப்பும்தான் தமிழ்-நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்களால் முழங்கச் செய்தது.

கட்சிகளை மறந்து ஜாதி மதங்களைத் துறந்து தமி-ழர்கள் என்ற உணர்வுடன் தந்தை பெரியார் தலைமை-யில் தமிழர்களை ஓரணியில் திரட்டியது ஆச்சாரியாரின் இந்தித் திணிப்புதான்.

இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், தந்தை பெரியார் தலைமை தாங்கிப் போர்க்குரல் எழுப்பி, இன-மான, மொழிமான, தன்மான எழுச்சிப் பேரலையைத் தமிழர்கள் மத்தியில் எழுப்-பியதன் விளைவுதான் பெண்கள் சென்னையில் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டத்தைக் கொடுக்-கும் உணர்வை ஊட்டியது (13.11.1938).

இறுதி வெற்றி தமிழர்-களுக்கே. கட்டாய இந்தி தொலைந்தது (21.2.1940).

எப்படியோ ஆச்சாரி-யாரின் சமஸ்கிருதத்தின் குட்டியான இந்தித் திணிப்பு தமிழர்கள் தம் தலைவரை அடையாளங் காணவும், தமிழர்கள் மத்தியில் இன உணர்வு வெடித்துக் கிளம்-பவும் பேருதவி செய்தது என்பது மட்டும் உண்மை!

- விடுதலை மயிலாடன் (21.04.2010)



மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்...மதம் என்ற காலத்தில் நாத்திகர், இனம் திராவிடர் என்று பதிவுசெய்யுங்கள்

சென்னையில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாட்டுத் தீர்மானங்களுள் முக்கியமானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பானதாகும்.


(1) நடக்க இருக்கும் 15 ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்,- சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்து-கிறது.

கணக்கெடுப்பின்போது மதம் என்று கேட்கப்படும் பகுதியில் மத நம்பிக்கையற்றவர்  நாத்திகர்  என்று தெரிவிக்குமாறு பகுத்-தறிவாளர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இது ஏழாவது தீர்மானமாகும்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதில் வெறும் மக்கள் தொகை என்பது மட்டு-மல்-லாமல் வேறு பல தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.

ஆடு, மாடுகள் உள்பட வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சிப் பெட்டி, குளிர் சாதனப்-பெட்டிகள் வரை கேட்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள் பற்றிய புள்ளி விவரங்களும் திரட்டப்படுகின்றன. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்ளும் கணக்கெடுப்பு மட்டும் திட்டமிட்டே தடுக்கப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுங்கூட நடுவண் அரசு கேளாக் காதுடையதாக இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

குறிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசக்கட்சியைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்றவாதி கே. எர்ரான் நாயுடு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தென்ன? 1931_க்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பெறவில்லை. எனவே அத்தகு கணக்கெடுப்பு அவசியம் தேவை என்று உச்சநீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டதே_ அப்படியிருந்தும் பிற்-படுத்தப்பட்டோருக்கான கணக்கெடுப்பு மேற்-கொள்ளப்படாதது_ பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பதை இருளில் மூழ்கடிக்கும் சதியாகும் என்று எழுதியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமீர் புஜ்பால் பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெளிவாக ஒன்றை நினைவூட்டி உள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான புள்ளி விவரங்கள் திரட்டப்படவேண்டும் என்று காகாகலேல்கர் ஆணையமும், மண்டல் ஆணயமும் வலியுறுத்தி-யிருப்பதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

திராவிடர் கழகம் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர் பற்றிய புள்ளி விவரம் தேவை-யில்லை என்பதற்கான நியாயபூர்வமான அல்லது சட்ட பூர்வமான எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமலேயே_- அதேநேரத்தில் அத்தகு விவரங்கள் திரட்டாத ஒரு நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது. மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள (மண்டல் குழு ஆணையத்தின் கணக்-கீட்டின்படி) பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிப்பதும், உரிமைகளைத் தடுப்பதுமாகும். இப்பொழுதுகூட காலம் தாழ்ந்துவிடவில்லை. இடையில் இன்னும் இரு மாதங்கள் இருக்கின்றன. மறுபரிசீலனை செய்து, நாட்டின் பெரும்பான்மையரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நல்லது செய்யுமாறு நடுவண் அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழக முதலமைச்சர் அவர்களும் இந்த மிக முக்-கியமான பிரச்சினை குறித்து பிரதமரை வலி-யுறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

(2) மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மதம் என்ற கலத்தில் மதமற்றவர் (ழிஷீஸீ-க்ஷீமீறீவீரீவீஷீ) நாத்திகர் (கிலீமீவீ) என்று சொல்லவேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பகுத்தறிவாளர்கள் எவ்வளவு என்கிற புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. உலகிலேயே தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள், - மத மறுப்பாளர்கள் புள்ளி விவரம் அதி-காரப்பூர்வமான புள்ளி விவரத்தில் இடம் பெற-வேண்டாமா?

தோழர்கள் இந்த முக்கியமான பிரச்சினையில் அலட்சியமாக இருந்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இனம் என்று வரும்போது திராவிடர் என்று கூறப்படவேண்டும். இது வரலாற்று ரீதியான உண்-மையாதலால் அதனையும் பதிவு செய்யவேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகம் உள்பட திராவிட நாகரிகம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலை-யிலும், பார்ப்பனர் அல்லாதார் எனும் கண்-ணோட்டத்திலும் இது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.


--------- நன்றி விடுதலை தலையங்கம் (20.04.2010)

Tuesday, April 20, 2010

மதுபோதையை விட ஆபத்தான போதை...வர்த்தக அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியைத் தடை செய்க!

சூதாட்டக் களமாக மாறியுள்ள அய்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை உடனே தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


நாம் பல ஆண்டுகளாகக் கூறிவரும் கிரிக்கெட் என்ற மேற்கத்திய விளையாட்டை இங்கே இறக்குமதி செய்து, படிப்படியாக அந்த விளையாட்டு இப்போது, நம்பர் 1 வர்த்தக சூதாட்டமாக ஆகி, கறுப்புப் பணம்_ ஊழல், லஞ்சம், மகளிரைக் கொச்சைப்படுத்தும் பல இழுக்குகள் - இவைகளின் புகலிடமாக்கப்பட்டு வந்-துள்ள நிலையில், அதன் அச்சு முறிந்து, வண்டியே குடை சாய்ந்து விழும் நிலை வெளிச்சத்திற்கு வந்து-விட்டது.

கிரிக்கெட் பற்றி அறிஞர் பெர்னாட்ஷா

கால்பந்து, கைப்பந்து, கபடி என்ற சடுகுடு போன்ற சிறந்த உடற்பயிற்சி, மனவளப் பெருக்கத்திற்கு வழிவகை செய்யும் ஆட்டம் அல்ல இது. இதுபற்றி அறிஞர் பெர்-னாட்ஷா அவர்கள்_ அது எந்த நாட்டிலிருந்து கிளம்பியதோ அந்த நாட்டவர்_ கூறியதைவிட அப்பட்டமான உண்மையை யாரும் கூறிவிடமுடியாது!

இது சோம்பேறி விளையாட்டானபோதிலும் பல்-வேறு நாடுகளுக்கிடையே ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறைதான் நடக்கும். அதுவே அண்மைக் காலத்தில் லஞ்சம், ஊழல், சூதாட்டம் மேல்பந்தயம் போன்றவைகளுக்கு வழி வகுத்தது; சில ஆண்டு-களுக்குமுன் முடைநாற்றம் வீசுவதாக அமைந்தது!

அதனால் அதன் மீதுள்ள மோகம் ஓரளவு குறைந்-தது. மீண்டும் அய்.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) என்று பல நாடுகளில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுடன் ஒப்பந்தம், சம்பளம், பங்கு பேசி, பல கம்பெனிகளாக்கி, எளிய, நடுத்தர மக்களைச் சுரண்டி கொழுக்கின்றன!

பாட்டியைக் கொலை செய்த பேரன்...

மதுபோதையை விட ஆபத்தான போதை இது என்பதற்கு இன்று வந்துள்ள ஒரு செய்தி: தனது பாட்டியிடம் கிரிக்கெட் பார்க்க பணம் கேட்ட இளை-ஞனுக்கு அவர் பணம் தரவில்லை. அதனால் கிரிக்கெட் பார்க்கப் போக முடியவில்லை என்ற ஆத்திரத்தினால், வயதான அப்பாட்டியை அடித்தே கொன்றுவிட்டு, இன்று சிறையில் வதைகிறது அந்த சின்ன மொட்டு! என்னே கொடுமை!

போதை மருந்து வாங்க பணத்திற்காக கொலைகள் சர்வசாதாரணமாக நடைபெறுவது போலத்தானே இதுவும்!

இந்த அய்.பி.எல். என்ற சூதாட்டக் கம்பெனிகள்-மூலம் எந்த அளவு அருவருக்கத்தக்க ஆபாசங்கள் நடைபெறக்கூடும் என்பதற்கு சசிதரூர் என்ற கேரளப் பார்ப்பனர் ஆடிய நாடகமே சான்று! 70 கோடி ரூபாய் தன்னுடன் 3 ஆவது திருமணத்திற்கு ரெடியான காஷ்-மீர் அழகு நிலையப் பெண்மணி சுனந்தா புஷ்கர் கதை ஒன்றே போதாதா?

இப்போதாவது நமது மத்திய ஆட்சியின் கண்கள் திறந்து, வருமானவரித்துறை பாய்ந்துள்ளதே. அது ஓரள-வுக்கு, பொது ஒழுக்கச் சிதைவுபற்றிக் கவலைப்படு-வோருக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது!

நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல்கள்!

நாடாளுமன்றத்தில் லாலு பிரசாத், முலாயம்சிங், சரத் யாதவ், குருதாஸ் குப்தா (சி.பி.அய்.), டி. ராஜா முதலிய தலைவர்கள் விடுத்த கோரிக்கை வரவேற்கத்தக்கது! நாம் நீண்ட காலமாக வற்புறுத்தி வந்த கோரிக்கை.

இந்த அய்.பி.எல். கிரிக்கெட் தடை செய்யப்பட-வேண்டும்! கிரிக்கெட் வாரியத்தின்மூலம் பல ஆயிரக்-கணக்கான கோடிகள் புரண்டு, கறுப்புப் பணமாகி, எங்கோ ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது நாடறிந்த ரகசியம் ஆகும்!

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில். அவர்களே கிரிக்கெட் இப்போது விளை-யாட்டல்ல, சூதாட்டம், வர்த்தக பேரமே என்று மனம் வெறுத்துக் கூறியுள்ளதைவிட வேறென்ன சான்றிதழ் தேவை?

கிரிக்கெட்டின் பெயரால் நடக்கும் ஆபாசங்கள்

கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நடக்கும் இரவு ஆட்டத்திலும் ரசிகர்கள் கலந்து-கொள்ளலாம்!

கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள், கவர்ச்சிக் கன்னிகளுடன் பேசலாம். ஆடலாம், கொண்டாடலாம்! வகை வகையான உணவு விருந்துடன் வயிறு முட்டக் குடிக்கலாம்! இசை நிகழ்ச்சியுடன் தேசிய அளவிலான முன்னணி கவர்ச்சிக் கன்னிகளின் ஃபேஷன் ஷோவும் தினசரி உண்டு. ஒரு போட்டிக்கு விலை அதிகார பூர்வ-மாக ரூ.35,000 (ஆனால் நிஜத்தில் 50 ஆயிரம் ரூபாய்) என்று சொல்லப்படுகிறது. செமி பைனல்ஸ், ஃபைனல்சுக்கு ஒரு டிக்கெட்டின் விலை தற்போதைய நிலவரப்படி 1,27,000 (ஒரு லட்சத்து இருபத்து ஏழாயிரம் _- மேலும் அதிகரிக்கலாம்!) முதல் போட்டியிலிருந்து கடைசி போட்டிவரை இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் செய்யலாம். அதற்கு ஒரு டிக்கெட்டின் விலை 5.5 லட்சம். வாழ்க அய்.பி.எல்., வளர்க அதன் கலாச்சாரம்.

என்று இன்று தினமணி நாளேட்டில், கார்ட்டூனிஸ்ட் மதி அவர்கள் ஆட்டம், பாட்டம், சூதாட்டம் என்று அரைப்பக்கக் கார்ட்டூன் படத்தில் எழுதியுள்ளார்!

அய்.பி.எல்.கிரிக்கெட் போட்டியைத் தடை செய்க!

வறுமைக் கோட்டுக்குக்கீழே உள்ள மக்கள் ஏறத்தாழ 30 கோடிமுதல் 50 கோடிவரை உள்ள நம் நாட்டில் இப்படிக் கூத்தடிப்பா?

இளைய தலைமுறை முதல் முதியவர்வரை பலரையும் இந்த சூதாட்டம் விட்டதாகத் தெரியவில்லை. வயதானவர்கள் எப்படியோ போகட்டும். ஆனால், இளந்தளிர்கள் காப்பாற்றப்பட வேண்டாமா?

எனவே, நாம் திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தைச் செயலாக்கத் தக்க தருணம் இதுதான் (ஷிணீஸ்மீ ஷீக்ஷீ ஹ்ஷீலீ னீஷீஸ்மீனீமீஸீ).

1. இந்த அய்.பி.எல். கிரிக்கெட்டினை அறவே அரசு தடை செய்யவேண்டும், உடனடியாக.

2. கிரிக்கெட் வாரியம் பல கோடி வருவாய் தருவது என்பதால் அதனை அரசே எடுத்து நடத்த முன்வரவேண்டும்.

இதுபோன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தினை திராவிடர் கழகம் விரைவில் மே மாதத்தில் தொடங்கி நடத்த-விருக்கிறது!

பொது ஒழுக்கச் சிதைவினை சாமியார்கள்_- சங்-கராச்சாரி முதல் நித்தியானந்தா வரை_- போப்பாண்-டவர்களின், கன்னியாஸ்திரீகளின், பாதிரிகளின் ஓரினச் சேர்க்கை போன்ற ஒழுக்கங்கெட்ட செயல்கள்வரை எல்லாம் எதனைக் காட்டுகின்றன?

கடவுள் பக்தி, மத உணர்வுகளால் பொது ஒழுக்-கத்தை_- ஆன்மிக வேடம் போட்டுக் காப்பாற்ற முடி-யாது, அறிவு ஒளியினால்தான், சுயமரியாதைச் சூரணத்-தால் மட்டுமே பொது ஒழுக்கம் (குறள் நெறி என்பதும் சுயமரியாதை நெறி என்பதும் ஒன்றுதான்) காப்பாற்றப்-பட முடியும். இதுபற்றி பல ஊர்களிலும் தீவிரப் பிரச்சாரம் அடை மழை போல் இந்தக் கோடையில் நடைபெற்றாக வேண்டும்.

ஒழுக்கமிலார் ஏதிருந்தும் இல்லார் - புரட்சிக் கவிஞர்.
சென்னை ,20.4.2010                                                                                               தலைவர்,                
                                                                                                                          திராவிடர் கழகம்

                                                                                                                                                                    
                                                                                                                                                       


கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று பெரியார் சிலைகளின் கீழ் பொறிப்பதன் முக்கியத்துவம் புரிகிறதா?

வைகுண்டசாமிகள் என்பவர் குமரியில், அன்று பெரிதும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களின் தன்மானத்திற்காகப் போர்க்-கொடி தூக்கிய பெரு-மகனார் ஆவார்.


கன்னியாகுமரிக்கு அரு-கில் பூவண்டன்-தோப்பு எனும் கிராமத்தில் நாடார் சமூகத்தில் பிறந்த-வர் (1809)

முடிசூடும் பெருமாள் என்று பெயரிடப்பட்டார். தாழ்ந்த ஜாதியினருக்கு இத்தகு மேன்மை தாங்-கிய பெயரைச் சூட்டக்-கூடாது என்பதுதானே மனுதர்மம்? மன்னர்ஆட்சி தடுத்தது. விளைவு_ புதுப்-பெயர் முத்துக் குட்டி.

அன்றைய தினம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மரம் ஏறும் மக்கள் சாணார் என்று அழைக்கப்பட்டனர். உரிமை-கள் அறவே மறுக்-கப்பட்ட பரிதாபத்துக்குரிய-வர்களாக அவர்கள் ஒடுக்-கப்பட்டனர். நம்பூதிரிப் பார்ப்பான் எதிரே வந்தால் அவர்கள் 36 அடிதூரம் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து 12 அடி தூரம் ஒதுங்கவேண்டும். பொதுவீதிகளில், சாலை-களில் நடக்க உரிமை-யில்லை. பெண்கள் ரவிக்கை (தோள் சேலை) அணிந்திடத் தடை!.

மன்னர் ஆட்சி மனு-தர்ம ஆட்சியாகச் சீறியது. இந்த நிலையில்தான் வைகுண்ட சாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட முத்துக்-குட்டி சமத்துவ சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

அவர் ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்-திருத்தங்களைச் செய்ய முன்வந்தார். அதே நேரத்-தில் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காணிக்கை கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது என்றார். மாந்திரீ-கர்களிடம் மதி மயங்காதீர் என்று எச்சரித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் உணவருந்து-மாறு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

காவி நிறத்தில் வெள்-ளைத் தீபச் சுடரைத் தாங்-கிய கொடியை அறிமுகப்-படுத்தினார். ஒரு வகை-யில் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சாயலை இவரிடம் காண முடியும்.

மன்னரையும் பார்ப்ப-னர்களையும் எதிர்க்கத் துணிந்த அவர் 110 நாள்-கள் கொடுஞ்சிறையையும் அனுபவிக்க நேர்ந்தது.

இன்றைய நிலை என்ன தெரியுமா? சென்னை மணலியில் அவருக்குக் கோயில் கட்டி கோபுரங்-கள் எழுப்பி, தேர்த் திருப்-பணியையும் நடத்தியுள்-ளனர்.

எந்த உருவ வழி-பாடு கூடாது என்றாரோ, அந்த உருவ வழிபாட்டை, அவரையே கடவுளாக்கி நடத்துகின்றனரே.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று தந்தை பெரியார் சிலை-களின்கீழ் கடவுள் மறுப்பு பொறிப்பதன் முக்கியத்-துவம் புரிகிறதா?


- விடுதலை மயிலாடன் (20.04.2010)



Monday, April 19, 2010

இளைஞர்கள் என்னும் சுவரை இடித்துவிட்டு, எந்த சித்திரத்தை, யாரால்தான் தீட்ட முடியும்?

திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாட்டில் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன (16.4.2010).


கல்வி, வேலைவாய்ப்புகளை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்-துவது மிக முக்கியமான தீர்மானமாகும்.

மாணவர்கள், இளைஞர்களின் இன்றைய சீர்கேடான போக்கு பல்வேறு போதைகளில் கூண்டுக் கிளிகளாக மாறிய அவலம்குறித்து முதல் தீர்மானம் பேசுகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாணவர்கள் வன்முறைப் போக்குகளின் பக்கம் சாய்வதற்கான காரணங்களில் ஒன்று _- நமது கல்வித் திட்டத்தின் கோளாறுமாகும். வெறும் மனப்பாடக் கல்வி பண்பாட்டுப் பக்குவத்தை உண்டாக்கிப் பதப்படுத்துபவை-யல்ல. வெறும் மதிப்பெண்களைப் பெற்று வேலைக்கு விண்ணப்பம் போடுவதற்கு உதவக்கூடிய காகிதப் பட்டங்கள் அவை. தந்தை பெரியார் மொழியில் கூறவேண்டு-மானால் வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்சு என்ற அளவுக்கு மட்டுமே உள்ள காகிதப்பட்டமாகும்.

அறிவைக் கூர்தீட்டும் தன்மையதாக மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சியாக, தன்னம்பிக்கை வீரியத்தைக் கொடுக்கக்-கூடிய சத்து நிறைந்ததாக, சொந்தக்காலில் நிற்கும் தைரியமூட்டுவதாக, சம்பந்தப்பட்ட மாணவர்களிடத்தில் குடிகொண்டிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, அதனை மேலும் வளர்த்துக் கொடுக்கும் வகையைச் சேர்ந்ததாக, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதாக உள்ள கல்வித் திட்டத்தை வகுத்து, அதனை மாணவச் சமுதாயத்-திற்கான அடிப்படை உரிமையாக ஆக்க வேண்டும்.

கல்வியில்லாதது களர் நிலமாகும்; கல்வி வளர்ச்சி என்பது சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட சகலவிதமான பரிணாமங்களைக் கொண்டதாகும்.

அதுபோலவே கல்வியைக் கட்டாயமாக, அடிப்படை உரிமையுடையதாக ஆக்கும் அரசு, அவர்களுக்கான வேலை வாய்ப்-பையும் அந்தப் பட்டியலில் சேர்த்தாக வேண்டும். - அதற்கான உத்தரவாதம் கண்டிப்-பாகத் தேவை.

அரசுத் துறைகளில் மட்டுமல்ல, தனியார் துறைகளிலும் கட்டாயம் அந்த வேலை வாய்ப்புக் கதவைத் தாராளமாக திறந்துவிட கட்டாய சட்டம் தேவை! தேவைதான்!!

இந்த அடிப்படையை மறந்துவிட்டு, காரணத்தைக் கைகழுவிவிட்டு, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வன்முறை தாண்டவமாடுகிறது_- நக்சலைட்டுகளாக மாறுகின்றனர் என்று பிலாக்கணம் பாடுவதில் அர்த்தம் ஏதும் இல்லை, இல்லவே இல்லை.

வேலை வாய்ப்பு என்பது, அவர்கள் சொந்தமாக நிறுவனங்களை நடத்துவதாக இருந்தால், அதற்கான வழிமுறைகள், பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளைச் செய்வது அரசின் அடிப்படைக் கடமையாக இருந்தாக வேண்டும்.

செல்வங்களில் மிகப்பெரிய செல்வம் இளைஞர்கள். அவர்களின்மீது அதிகபட்சம் கவனம் செலுத்துவது மிகமிகமிக முக்கியமானதாகும். அந்தச் சுவரை இடித்துவிட்டு, எந்த சித்திரத்தை, யாரால்தான் தீட்ட முடியும்?

அந்த வகையில் திராவிடர் கழக மாணவரணி மாநாட்டின் தீர்மானத்தை மாநில, மய்ய அரசுகள் ஊடுருவிப் பார்த்து, உண்மையை உணர்ந்து, உரிய செயல்-பாடுகளில் இறங்க வேண்டும், இறங்கியே ஆகவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

---------- நன்றி விடுதலை தலையங்கம் (19.04.2010)
                                                                                                                                                        




பார்வதி அம்மையாரை அழைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரை சென்னைக்குக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணம்_ 2002 இல் அ.தி.மு.க. முதலமைச்சராகவிருந்த ஜெயலலிதா அம்மையார் மத்திய அரசுக்கு எழுதி பெற்றுக்கொண்ட கடிதம்தான் என்பதையும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் பக்கவாத நோயினால் தாக்-குண்டு, பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இலங்கை-யிலிருந்து மலேசியாவிற்குச் சென்று, அங்கு சரியான சிகிச்சைக்கு வழி இல்லை என்பதற்காக விசா பெற்று இங்கே (தமிழ்நாட்டிற்கு) மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ள நிலையில், 16.4.2010 அன்று விமான நிலை-யத்தில் அவரை இறங்கவிடாமல், திருப்பி அனுப்பியது மனிதநேயத்திற்கு விரோதமான செயல் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்திருந்தோம் (17.4.2010).

பல கட்சியினரும் உணர்ச்சிபூர்வமாக அறிக்கை விடுத்தனர். அ.தி.மு.க.வைத் தவிர!

மூல காரணம் அ.தி.மு.க.வே!

இன்று சட்டப்பேரவையில் இந்நிலை ஏற்பட்டதற்கு மூல காரணம் 2002 இல் பிரபாகரனின் தாய், தந்தையர் இலங்கை சென்றுவிட்ட நிலையில், அவர்கள் மீண்டும் திரும்பி வந்தால், அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு ஆணையை _ மத்திய அரசுக்கு எழுதிப் பெற்ற பெருமை ஜெயலலிதாவைத்தான் சாரும். அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் இந்தச் சாதனையைச் செய்தார்! நம் அதிகாரிகளுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை இதனால்தான் என்ற உண்மையை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

அதோடு, பிரபாகரனின் தாயார் இங்கே வந்து மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால், மத்திய அரசுக்கு தமது அரசு கடிதம் எழுதி உதவிடத் தயார் என்றும் குறிப்பிட்டிருப்பது மிகவும் மனிதாபிமானத்துடன் கூடிய நல்ல செயல்; நம் முதல்வரின் கூற்றை வரவேற்பதோடு, அவர்கள் இம்முயற்சியைச் செய்யவேண்டும் என்றும் உலகத் தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்குமுன்புகூட, ஜெயலலிதா (அ.தி.மு.க.) ஆட்சியின்போது தோழர்கள் பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன் போன்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு, பேசத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாங்கிய நிலை தொடர்வதை ரத்து செய்து, அவர்களது வாய்ப்பூட்டை விலக்கிய செயலும் கலைஞர் அரசின் மனிதநேயம் _ மனித உரிமைக் காப்பினைக் காட்டுவ-தாகும்.

எனவே, இதற்குக் காரணமான அ.தி.மு.க. ஆட்சிபற்றி தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்துகொள்வது முக்கியமாகும்.



19.4.2010

சென்னை                                                                                            தலைவர், திராவிடர் கழகம்.

                                                                                                                               

Sunday, April 18, 2010

கடவுள்கள் கோயில்கள் - ராபர்ட் கீரின் இங்கர்சால்

கருத்து எனும் ஆயுதம் ஏந்தி கடவுள் மற்றும் மதம் என்னும் மரபினை உடைத்தெறிந்து கேள்விக்கணைகளால் மதவாதிகளின் அரிதாரங்களை அம்பலமாகியவர் இங்கர்சால். தான் சார்ந்த கிறித்துவ மதத்தின் மீது கடும் தாக்குதல் தொடுத்த ராபர்ட் கீரின் இங்கர்சால் என்றழைக்கப்பட்ட இங்கர்சால் உலக பகுத்தறிவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராவர். அவர் எழுதி நூல் தான் "கடவுள்கள் கோயில்கள்".
நான் இந்த நூலினை சென்னை புத்தக கண்காட்சியில் (Jan-2010) வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நூலின் மூலமாக, அருமையான செய்திகள் மற்றும் தர்க்க ரீதியான விளக்கங்களை இங்கர்சால் அவர்கள் நம்மிடம் தந்துள்ளார். 159 பக்கங்களை கொண்ட இந்த நூலிலிருந்து இதோ சில பகுதிகளை இங்கே பார்ப்போம்.

"கடவுள் எப்படிப்பட்டவர் தெரியுமா? " என்று ஆரம்பிக்கும் முதல் பக்கத்தில், கடவுள் மனிதனுடைய கற்பனை. அவனால் கற்பனை செய்யப்பட்டவர் தான் கடவுள். ஆனால் அந்தக் கடவுள்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியுமா? அவரிடம் அன்பு காட்டினாள் ஆதரவு காட்டுவார். துவேசித்தால் விரோதிகள் என்று கருதுகிறார். இது மட்டுமா! அந்தக் கடவுள்கள் அதிகாரம் உள்ளவர்களின் பக்கபலமாயும், வலிமையுள்ளவர்களை ஆதரித்துக்கொண்டும் தான் இருந்திருக்கிறார்கள். இதோடு மட்டுமல்லாமல் அந்த கடவுள்கள் தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டன. அவர்களுக்கு அர்ச்சகர்கள்,ஆச்சாரியர்கள்,குருக்கள் என்றும் பெயரிட்டன. இந்த பெரிய கூட்டத்தினரையும், தன்னையும் ஏழை மக்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளன. ஏன்? வற்புறுத்தியும் வந்திருக்கின்றன.

இந்தக் கடவுள்களால் தாங்கள் உண்டாக்கிய உலகம் உருண்டையா? அல்லது தட்டையா என்பதும் புரிந்து கொள்ள முடியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு இந்த உலகம் தட்டை என்று தவறாக கருதி வந்தன.

எனவேதான் கலிலியோ என்ற சாதாரண மனிதன் 1632  - ஆம் ஆண்டு அவனின் ஆராய்ச்சி நூலாகிய "உலக அமைப்பு" என்ற புத்தகத்திற்காக ஆலயவாசிகளால் கைதுசெய்யப்பட்டான். கொடும் சிறையில் அடைக்கப்பட்டான். முழங்கால் மண்டியிட்டு, பைபிளைக் கையிலேந்தி தான் செய்த குற்றத்திற்காக மன்னிப்பு கேட்க்குமாறு பலவந்தப்படுத்தப் பட்டான். ஒரு நாளல்ல; இரு நாட்களல்ல; பத்து பெரிய வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவித்தான்; இறந்தான். அவனுக்கு விடுதலை வாங்கித்தர மரணம்தான் மனமிரன்கியது. அவன் இறந்த பிறகும் கூட ஆலய வேந்தர்கள், புனித மானவர்கள் கலிலியோவின் உயிரற்ற உடம்பை எல்லோரையும் புதைக்கும் மயானத்தில் புதைக்கக் கூட அனுமதிக்கவில்லை.

மதத்தின் பெயரால் எவளவு துன்பங்கள் இழைக்கப்பட்டன. எவளவு கொடுமைகள் செய்தனர். ஆனால் அவர்கள் முயற்சி பலன் தந்ததா? பயத்தை காட்டி, பல வந்த்தத்தை பிரயோகித்து, மிரட்டி மனத்தின் எண்ணங்களை கட்டிப்போட்டுவிடலாம் என்று நினைத்தார்களே, அது என்னவாயிற்று? பயம் காட்டி மனதை அடக்க முடியாது என்பதை நிருபித்து விட்டதல்லவா?.

இப்படி பட்ட ஒரு வக்கிரமான, மடமை நிறைந்தவர்கள் தான் கடவுள்களையும் கோவில்களையும் உருவாக்கியவர்கள் என்கிறார் இங்கர்சால். இவர்கள் சார்ந்து இருக்கும் ஒவ்வொரு மதமும் குறிப்பாக மேலே கலிலியோவுக்கு கொடுமை விளைவித்த இந்த கிருத்துவ மார்க்கம் தான் நல்ல போதனை கொடுக்க போகிறதா? என்று நம்மிடம் கேள்வி எழுப்புகிறார் (அவருடைய சூழல் கிருத்தவ சுழல் என்பதால் அவரின் கண்டிப்பு அந்த மதத்தை சார்ந்தே இருக்கும் ...நமக்கு இங்கு இந்து மதம் என்று சொல்லக்கூடிய பார்பனியம்)

இங்கர்சால் அவர்கள்  கண்டிப்பதோடு நின்று விடாமல், மேலும் இவ்வாறு சொல்லுகிறார்

நாங்கள் எல்லா துறைகளிலும் முயன்று எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டோம் என்றோ, எங்கள் முடிவுதான் சரி என்றோ சொல்லமாட்டோம், சொன்னதில்லை. பின்னர் என்ன சொல்லுகிறோம் என்றால் கடவுள்களை கண்டு பயப்படுவதை விட நம்மை போன்ற மக்களிடம் அன்பு காட்டுவது மிக மிக சிறந்தது என்கிறோம்.

நாங்கள் எங்கள் வாழ்நாளிலேயே எல்லாக் காரியங்களையும் செய்து முடித்து விடுவோம் என்று நாங்கள் சொன்னதில்லை; நம்புவதில்லை. ஆனால் எங்களால் முடிந்ததை, மக்களுக்கு நன்மை அளிக்கும் என்று நாங்கள் நினைத்தவைகளை, சமுகத்தின் முன்னேற்றத்திற்க்காக நல்லெண்ணத்தோடு, சற்றும் அலுக்காமல் அயராமல் உழைப்போம், என்று கூறுகிறோம்.

கடவுள்களையும்,தேவதைகளையும்,பேய் பிசாசு,பூதங்கள் இவைகளையும் அழித்துவிடுவது மாத்திரம் எங்கள் எண்ணமல்ல; முடிவுமல்ல. அவை ஒரு சாதரணமான காரியமாகும். ஆனால் மனிதன் சுகமாக வாழவேண்டும், அவன் இன்ப வாழ்வு வாழ வழிகோல வேண்டும் என்பதுதான் எங்களின் மிக மிக உயர்ந்த உன்னதமான கொள்கையாகும். அதற்காகத்தான்  துணிவுடன் நாங்கள் தொண்டு செய்ய முற்பட்டோம். எங்கள் கருத்தும் அதுதான். எங்கள் செயல்களும் அதற்கே பயன்படும்! என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

இன்றுள்ள மக்கள் சமுதாயம் எப்படி இருக்கிறது. ஒரு பக்கத்தில் கொடிசுவரர்களுக்கு பிரபுக்கள் என்ற பட்டம் சூட்டி வைத்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கத்தில் உடல் மெலிந்து, கண் குழிவிழுந்து, ஓடு தாங்கி நிற்கும் மக்களுக்கு பிச்சைகாரர்கள் என்ற பட்டம் சூட்டி வைத்துகொண்டிருகிறது. ஒரு பக்கம் பண பலம் கொண்ட சோம்பலையும், மற்றொரு பக்கம், பண பலம் இல்லாத பஞ்சமுற்ற தொழிலையும் வைத்துக்கொண்டிருகிறது. ஒரு பக்கம் உண்மைக்கு கிழிந்து போன கந்தை தந்தும், மற்றொரு பக்கம் மூடநம்பிக்கைக்கு பட்டும், அணிகலன்களும், பொன்முடியும் அணிவித்து அதை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டு வருகிறது. இவைகள் ஒழியும் காலத்தை நாங்கள் மிக விரைவில் மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அந்த காலத்தை காண எங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்துக் கொள்கிறோம்.

இப்படியாக சொல்லும் இங்கர்சால் அவர்கள் கடைசியாக கீழ்க்கண்ட ஒரு வேண்டுகோளையும் நமக்கு வைக்கிறார்.

கடைசியாக ஒரு வேண்டுகோள். அறிவு ஆட்சி செலுத்தும் அந்த நல்ல காலம் சீக்கிரமே உண்டாக நீங்கள் உங்களால் முடிந்ததை செய்ய முற்படவேண்டும். உங்களின் குழந்தைகளுக்கு மூட நம்பிக்கை என்ற நஞ்சு கலக்காதீர்கள். அறிவு அமுதை ஊட்டுங்கள். வாலிபர்கள் இந்த அறிவு அமுதை கண்மூடி வழக்கங்களை பின்பற்றும் பழமை விரும்பிகளுக்கு அளியுங்கள். இவ்விதம் ஒவ்வொரு தனி மனிதனும், செய்யவேண்டும். இதை விட நாம் இந்த காலத்தில் செய்ய வேண்டிய முக்கிய வேலை கிடையாது. ஆகவே அறிவாளியை உலகெல்லாம்,மூலை முடுக்களிலெல்லாம் பரப்புங்கள்! இதை உங்கள் உயர்ந்த கடமை என்ற கருத்துடன் பணியாற்றுவதன் மூலம் அறியாமை நிரம்பிய, அர்த்தமற்ற கட்டுப்பாடுகள் நிரம்பிய, மூடத்தனம் நிரம்பிய, கண்மூடித்தனங்கள் நிரம்பிய உலகை சீர்திருத்துங்கள். அறிவு, ஆராய்ச்சி,அனுபவம் என்னும் இம்மூன்றையும் மறவாதீர்கள். உரிமையுடன் வாழுங்கள்!.

மேல் கண்டவாறு கூறி முடிக்கிறார் இங்கர்சால் அவர்கள்.

இது போல கடவுள் மற்றும் கோவில்கள் தோற்றம் பற்றியும் அதனால் பிழைப்பு நடத்தும் கூட்டம் பற்றியும் பல நல்ல அறிவுப்பூர்வமான கேள்விகளையும் அதன் மூலமாக நல்ல சிந்தனைகளையும் நம்மிடம் தூண்டுகிறார். அனைவரும் இந்த நூலினை வாங்கி பயனடையுங்கள்.

இதுபோன்ற நல்ல நூலின் மூலமாக மழுங்கி இருக்கும் பகுத்தறிவை சானைபிடித்து சாஸ்திரம்,சாதி,மதம், மூடநம்பிக்கைகள் மற்றும்  இவை அனைத்துக்கும் ஆணிவேராக இருக்கும் கடவுள் ஆகியவைகளை ஒழிப்போம். சமத்துவத்தை நிலைநாட்டுவோம்.

மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்                                                
                                                                                                                                              
                                                                                                                    
        

Tamil 10 top sites [www.tamil10 .com ]