வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, March 31, 2010

தினமலமும் குமுதம் ரி(ரீல்)ப்போர்ட்டரும் கிளப்பிவிடும் மூடநம்பிக்கைகள்

ஏடுகளிலும் இதழ்களிலும்தான் எத்-தனை எத்தனை செய்திகள், தகவல்கள், ஒப்பனைகள்!


ஏதாவது ஒரு துரும்பு கிடைத்தால் அதைத் தூணாக்கிக் காட்டினால்தான் மக்கள் மயங்குவார்கள்; அற்ப விட்டில் பூச்சிகளாக தங்களால் விரிக்கப்பட்ட வலையில் வீழ்வார்கள் என்கிற தந்தி-ரத்தை ஏடு நடத்தும் வியாபாரிகள் கண்டு-பிடித்துள்ள தொழில் நுட்பம்.

காது, மூக்கு வைத்து கதை கட்டினால்-தான் மக்கள் வாய் பிளப்பார்கள் என்ற இரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டார்கள்.

திடீர் என்று ஒரு தகவல்: வேப்ப மரத்தில் பால் வடிகிறது _ பக்தர்கள் கூட்-டம்! (இது எதனால் வருகிறது என்று தாவர இயல் அறிஞர்கள் தெளிவுபடுத்திய பிறகும்கூட, தங்களின் வியாபாரத் தந்திரத்தை கைவிடுவதாக இல்லை).

காளைமாட்டின் கண்ணில் எம்.ஜி.ஆர். உருவம் என்று இன்னும் சில நாள்கள் கழித்து அவிழ்த்து விடுவார்கள்.

அதற்குப்பிறகு அம்மன் கண்கள் திறந்தன_ அதில் கண்ணீர் வடிந்தது என்று கட்டி விடுவார்கள்.

இப்படி குறிப்பிட்ட காலத்திற்கொரு-முறை மாயாஜால வித்தைகளைக் கட்டுரைகளாக்கி மக்களின் பர்சுகளைக் காலி செய்து விடுவர்கள்.

இப்பொழுது கரூர் பக்கத்திலிருந்து ஒரு தகவல்_ குமுதம் ரிப்போர்ட்டர் (1.4.2010) கட்டிக் கொண்ட புண்ணியம்!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவில் உள்ள தரகம்பட்டியருகில் உள்ளது சந்தனத்தான் மேடாம்.

இரவு நேரங்களில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறதாம்.. யாரோ சொன்னார்களாம். இது ஒன்று போதாதா? தொலைக்காட்சி-களும், ஊடக செய்தியாளர்களும் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

சில பெரிசுகளை சந்தித்துப் பேட்டிகள். டி.வி.யில் முகம் தெரியும் என்ற ஆசை பெரிசுகளுக்குக்கூட பீறிட்டு விட்ட கால கட்டம் இது. அவரவர்களும் மனம் போன வாக்கில் அவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டனர். இந்த ஆவி, பிசாசு, முனீஸ்வரன், கொள்ளிவாய்ப் பிசாசு என்கிற சமாச்-ரங்கள் எல்லாம் பெரும்பாலும் நம் நாட்டுக் கிராமத்துப் பெண்களிடத்தில்தான் ஸ்பரிசம் அதிகம்.

கருப்பாய் வாந்தி எடுத்தான் என்று ஆரம்பித்து கடைசியில் குடை குடை-யாய் வாந்தி எடுத்தான்; காக்கா காக்-காயாய் வாந்தி எடுத்தான் என்கிற-வரை வால் நீண்டு கொண்டு போகுமே!

அந்தப் பகுதியில் பார்ப்பனர்கள் ராஜாக்களிடமிருந்து பெற்ற தங்கக் காசுகளைப் புதைத்து வைத்திருந்தன-ராம். அதைக் கேள்விப்பட்ட கொள்-ளையர்கள் அந்தப் பகுதிக்குச் சென்ற-போது, புதைத்து வைத்த இடத்தைப் பார்ப்பனர்கள். சொல்ல மறுத்து விட்டனராம்.

கொள்ளையர்கள் அந்தப் பார்ப்பனர்களைக் கொன்று போட்டுச் சென்று விட்டனராம். அந்தத் தங்கக் காசுகளை யாரும் எடுத்துப் போய் விடக் கூடாது என்று கொலை செய்யப்பட்ட பார்ப்பனர்களின் ஆவி இரவு நேரங்களில் நெருப்பாய்க் கொதிக்கின்றனவாம்!

இன்னொரு தகவல்:

ராஜா ஒருவர் நடனப் பெண்ணிடம் தவறாக நடந்து வந்ததாகவும், அந்த நடனப் பெண் அரண்மனைக்குள் தீக்-குளித்து பலியானதாகவும், அந்தப் பெண்ணின் ஆவிதான் தீயாக எரிகிறது என்றும் இன்னொருவர் கதைத்துள்ளார்.

அடேயப்பா, இவர்களெல்லாம் சினிமா கதை மற்றும் வசனம் எழுதக் கிளம்பினால், எழுத்தாளர்கள் எல்-லாம் வீட்டுக்குப் போகவேண்டியது-தான்!

அந்த இடத்திற்குச் சென்றவர்கள் ஆவி அடித்து செத்துப் போய் விட்டார்களாம்.

அந்த இடத்துக்குச் சென்ற ஒரு பெண் கிணத்தில் விழுந்து செத்துப் போச்சாம் ஆனால் காலில் செருப்புடனும், கையில் கொடு வாளுடனும் சென்ற-வரை அந்த ஆவியால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம்!

அப்படியென்றால் ஆவியின் சக்தியைவிட செருப்புக்கு அதிக சக்தி உண்டு என்று தானே அர்த்தம்?

இவ்வளவையும் ஒண்ணே முக்-கால் பக்கம் எழுதித் தள்ளிவிட்டு கடைசி ஒரு பத்தியில், இதுகுறித்து கரூர் அரசு கல்லூரி வேதியியல் பேரா-சிரியர் ஜஸ்வந்த் தெரிவித்த கருத்-தினை வெளியிட்டுள்ளது.

பாழடைந்த கிணறுகளில் தேங்கி நிற்கும் கழிவுகளால் மீத்தேன் என்கிற விஷவாயு உருவாகித் தீப்பந்துபோல் எரியும். அதேபோல சில இடங்களில் புதையுண்ட மரங்கள் மக்கிப் போய் பீட் (றிமீணீ) வகை கரிகள் உருவாகும். இப்படி மாஸ்கேஸ், பீட் ஃபார்மேஷன் ஆகிய இருவகை செயல்பாடுகளால் மட்டுமே இந்தப் பகுதியில் நெருப்பு உருவாகலாம். அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்ட பெரிய குழி இருந்து, அது காலப் போக்கில் மூடப்படும்போது அதனடியில் பெரிய வெற்றிடம் உருவாகும். அதனால்தான் கல்லைத் தூக்கிப் போடும்போது சத்தம் வருகிறது. உள்ளே இருக்கும் மக்கிய பொருள்கள் பகலில் அடிக்கிற வெயிலை உள்ளே கிரகித்துக் கொள்வதால், இரவு நேரங்களில் சூடான வாயுவாக வெளியேறும்போது, ஜுவாலையாகத் தோன்றவும் வாய்ப்புள்ளது என்றார்.

குமுதம் ரிப்போர்ட்டர்,1.4.2010 பக்கம்!)
கடைசியாக என்ன எழுதுகிறது இந்த ரிப்போர்ட்டர்? என்னவாக இருந்தால் என்ன? சந்தனத்தான் மேட்டில் தீயோடு தினந்-தோறும் அந்த நடனக் கதையும், புதுப்-பொலிவு பெற்றுக் கொண்டிருக்கிறது _ சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் என்கிறது இந்த இதழ்:
இப்படி ஒரு கட்டுரை குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த இதே கால கட்டத்தில் திருவில்லிப்புத்தூரையடுத்த தைலாபுரம் ஊரணியிலிருந்து ஒரு தகவலை தினமலர் (28.3.2010) வெளி-யிட்டுள்ளது.
அந்தத் தகவல் இதோ: ஊரணியில் தீப்பொறி பாதிப்பு ஏற்படாது: கனிமவளத் துறை ஆய்வில் தகவல் விருதுநகர் மாவட்டம் திருவில்லி-புத்தூரை அடுத்த அழகாபுரி அருகே இலந்தைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட தைலாபுரம் ஊரணியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தும் பணி நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை அப்-பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்-கெட் விளையாட, ஸ்டெம்ப் நடு-வதற்காக மண்ணை தோண்டியுள்-ளனர். அப்போது திடீரென வெள்ளை புகை வந்து தீப்-பொறி வந்துள்ளது. இதையடுத்து,ஏற்பட்ட பரபரப்பால் ஊரணியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கனிம வளத்-துறை அதிகாரிகள் வந்து மண்ணை பரிசோதனை செய்தனர். அத்துறையை சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது: ஊரணி மண்ணில் சுண்ணாம்பு படிவம் உள்ளது. இப்படிவம் உள்ள இடத்தில் மண்ணை வெயில் நேரத்தில் தோண்டி-னால், புகையோ, தீயோ ஏற்படாது. இரவு நேரத்தில் பகலில் அடிக்கும் வெயிலை சுண்ணாம்பு படிவம் ஈர்த்து வைத்துக் கொள்ளும். இரவில் சுண்ணாம்பு படி-வத்தை கடப்பாரை கொண்டு தோண்டும் போது புகை, தீப்பொறி வரும். நாங்கள் பகல் நேரத்தில் பரிசோதித்ததில் எந்த வித புகையோ, தீயோ ஏற்படவில்லை. இருந்தும் இரவிலும் பரிசோதனை செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க-வுள்ளோம். மற்றபடி மீத்தேன் போன்ற விஷ வாயுக்களோ, எரிமலையோ இல்லை. இது குறித்து மக்கள் பீதி-யடைய வேண்டாம், என்றார்.
ஒரு முட்டாள்தனமான_ அறிவுக்குப் பொருத்தமற்ற ஒன்றை, மூடநம்பிக்கை-யில் மூழ்கிப் போன மக்களின் வாயி-லிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பீதியைக் கிளப்பும் வகையில் இதழ்கள் வெளியிடுகின்ற-னவே_ அறிவியல் கண்டுபிடித்த கருவி-களைக் கொண்டு அச்சிட்டு களேபரம் செய்கிறார்களே!
இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் குடிமக்களின் அடிப்-படைக் கடமையா?
மக்களிடம் விஞ்ஞான மணப்பான்-மையை ஒவ்வொரு குடிமகனும் பரப்ப, வளர்க்கப் பாடுபட வேண்டும் என்பது, ஏடுகளுக்கும், இதழ்களுக்கும், ஊடகங்-களுக்கும் பொருந்தாதா?
லண்டன் தொலைக்காட்சியில் உத்திராட்சக் கொட்டையின் மகிமையை ஒளிபரப்பிய நிலையில், அரசு உடனடி-யாக அதனை மேலும் ஒளிபரப்ப விடாமல் தடை செய்ததே! அது நாடா _ இது நாடா?
நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?
- கருஞ்சட்டை விடுதலை (31.03.2010)

Tuesday, March 30, 2010

அறிவுக்கு விருந்தான குடியரசு தொகுதிகள் நூல் வெளியீடு விழா

இன்று (30.03.2010) பெரியார் திடலில் நடைபெற்ற குடியரசு நூல் வெளியீட்டு விழா ஒரு புத்தக வெளியீடு விழா மட்டுமல்லாமல் குடும்ப விழா அதாவது திராவிட இயக்க குடும்ப விழா போன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

மானமிகு மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்  வெளியிட முதல் பிரதியை மானமிகு அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய மதிபிற்குரிய கயல் தினகரன் அவர்கள் அறிவு ஆசான் அய்யா பெரியார் இல்லை என்றால் மானம்கெட்டு மதி இழந்து கிடந்த தமிழன் அடையாளம் தெரியாமல் ஆகி இருப்பான். அதோடு ராசகோபலச்சாரியர் கொண்டுவந்த  குல தர்ம கல்வி திட்டம் எந்த அளவு தமிழனை பாதித்தது அதனை எதிர்த்து பெரியார் போராடி இன்று பச்சையாக சொல்ல வேண்டுமானால் பள்ளர் பறையர் என்று எல்லோரும் I.A.S, I.P.S ஆக முடிகிறது என்றால் அது அய்யா அறிவு ஆசான் பெரியார் நமக்கு ஏற்படுத்தி கொடுத்த மிக பெரிய வாய்ப்பு. எனவே நீங்கள் இந்த கூட்டம் முடிந்து செல்லும் போது அனைவர் வீட்டிலும் பெரியார் படம் மாட்ட வேண்டும் என்று முடிவு எடுத்து செல்லுங்கள் என்றார். மேலும் தான் படிக்கும் பத்து வயதில் அரசு சார்ந்த புத்தகத்தில் எப்படி மனுதர்மம் திணிக்கப்பட்டு சிறுவயதில் ஆரிய நஞ்சு கலக்கபட்டதையும் விளக்கினார்.

அடுத்து பேசிய மாநில நூலக இயக்குனர் அறிவொளி தன் பங்குக்கு மிக அருமையாக தன் குடும்ப பின்னணி திராவிட இயக்க பின்னணி என்று ஆரம்பித்து ..இபொழுது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தன் மகன் பள்ளி புத்தகத்தை படிக்கிறாரோ இல்லையோ பெரியார் பற்றிய அனைத்து நூலையும் படித்து மிக அறிவு பூர்வமாக செயல்படுவதாக கூறினார்.

பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மிக சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்கள். அதில் பெரியார் பற்றியும் ஆசிரியர் பற்றியும் மிக தெளிவாக ஒப்பிடு செய்து உரை ஆற்றினார்கள். மேலும் தாங்கள் எந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றாலும் அய்யா முதல்வர் அவர்கள் அறிவுரை படி நூலை முழுமையாக படித்து விட்டு அந்த விழாவுக்கு செல்வோம் அனால் இங்கு ஆறு தொகுதிகள் வெளியிடும் வாய்ப்பு இருந்து ஒரு தொகுதி கூட படிக்க முடியவில்லை ஏன் என்றால் நாங்கள் வேறு ஒரு தொகுதிக்கு சென்று விட்டோம் என்று சொன்ன நேரம் தான் சிரிப்பு ஒலி நிற்க அயிந்து நிமிடம் ஆகிற்று.

தலைமை தாங்கிய ஆசிரியர் அவர்கள் பள்ளி கல்வி துறை அமைச்சர் உரையை புகழ்ந்தும் அந்த குடியரசு தொகுப்பில் இருந்து நல்ல மேற்கோள்களை எடுத்துக்காட்டி மிக சிறப்பானதொரு உரை நிகழ்த்தி விழாவை மிக சிறப்பாக முடித்து வைத்தார்கள்.

Monday, March 29, 2010

தந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட ராஜாஜியின் குலக்கல்வி திட்டம்

இந்த நாளை எந்த சூத்திரத் தமிழனும், பஞ்சமத் தமிழனும் மறக்கவே முடியாது, மறக்கவும் கூடாது.


இந்த நாளில்தான் (1954) நாகப்பட்டினத்திலிருந்து, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் படையொன்று சென்னைக்குப் புறப்பட்டது.

என்ன படை அது? குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படைதான் அது. நாகப்பட்டி-னத்தில் 1954 மார்ச் 27, 28 ஆகிய நாள்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின் அடிப்-படையில் இந்தப் படை புறப்பட்டது.

1952 இல் ராஜகோபாலாச்-சாரியார் சென்னை மாநிலத்-தின் முதலமைச்சராக வந்தார். வந்ததும், வராததுமாக அவர் செய்த ஒரு காரியம் அரை நேரம் படிப்பு; அரை நேரம் அவரவர்களின் குலத்தொழில் என்ற ஒரு கல்வித் திட்டத்தை அறிவித்தார். 6000 கிராமப் பள்-ளிகளையும் இழுத்து மூடி-னார்.

இப்பொழுது மட்டுமல்ல, 1937 இல் அன்றைய சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்தபோதும்கூட 2500 கிராமப்புறப் பள்ளிகளுக்கு மூடுவிழா செய்தார்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பது-தானே பார்ப்பனர்களின் மனுதர்ம சாஸ்திரம்?

1952 ஜூன் 13 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதல-மைச்சர் ஆச்சாரியார் (ராஜாஜி) எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது? நீங்கள் துணியைக் கிழிக்காமல் சலவை செய்யக் கற்றுக் கொள்-ளுங்கள் என்று இதோபதேசம் செய்தார்.

ஆச்சாரியாரின் குலக்-கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பெரும் புயலைக் கிளப்பினார் தந்தை பெரியார். 1954 சனவரி 24 இல் டாக்டர் எஸ்.ஜி. மண-வாள ராமானுஜம் அவர்கள் தலைமையில் ஈரோட்டில் குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்-டினைக் கூட்டி, அனல் பறக்கும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஆச்சாரி-யா-ரின் குலக்கல்வித் திட்டத்தால் 50 விழுக்காடு மாணவர்களும், 70 விழுக்காடு மாணவிகளும் படிப்பை நிறுத்திய அதிர்ச்சிக்கு உரிய தகவலை தந்தை பெரியார் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்துதான் நாகப்பட்டினத்தில் 1954 மார்ச் 27, 28 இல் மாநாடு கூட்டி, மார்ச் 29 இல் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப்படை நாகை-யிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட முடிவு செய்யப்பட்-டது.

ஆச்சாரியார் குலக்கல்-வித் திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால், கழகத் தோழர்களே, தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக வைத்திருங்கள் _ நாள் குறிப்-பிடுவேன், அக்ரகாரத்திற்குத் தீ வையுங்கள் என்று அபாய அறிவிப்பைச் செய்தார்!

நாகையிலிருந்து படையும் புறப்பட்டது. ஆச்சாரியாரால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை; உடல்நலம் சரியில்லை என்று பதவியிலி-ருந்து ஓடினார் (30.3.1954). தந்தை பெரியார் அவர்களின் ஆதரவோடு காமராசர் முத-லமைச்சர் ஆனார் (14.4.1954). ஏப்ரல் 18 இல் குலக்கல்வித் திட்டத்தின் கழுத்தில் கத்தியை வைத்துத் தீர்த்துக் கட்டினார். கல்வி வள்ளலாக மாறினார் காமராசர்.

அன்றைக்குக் குலக்கல்வித் திட்டம் தந்தை பெரியாரால், கழகத்தால் ஒழிக்கப்-படவில்லையானால், டாக்டர்-களையும், பொறியாளர்களை-யும் தமிழர்களில் காண முடியுமா? நன்றியோடு தமிழர்களே, சிந்திப்பீர்!

- நன்றி விடுதலை மயிலாடன் (29.03.2010)

அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணமாம்! வெட்கம்

சென்னையில் 300 ஆண்-டுகள் பழமைவாய்ந்த அரசமரத்துக்கும், வேப்-பமரத்துக்கும் கோலாகல-மாக திருமணம் நடந்த-தாம். சென்னை வண்-ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் மறைந்த காத்தவராயன் என்பவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகட்ட தோண்டிய இடத்தில் காமாட்சி அம்மன் சிலை ஒன்று கிடைத்ததாம். அதைத்-தொடர்ந்து அக்கோவில் 3 தலைமுறையில் விரி-வாக்கம் செய்யப்பட்டு இன்று பிரபலமாகி உள்-ளது. இக்கோவிலின் இடது பக்கத்தில் அரச மரமும், வேப்பமரமும் உள்ளது.


இந்த மரங்களை வலம் வந்தால் திருமணம் தடை-பட்டவர்களுக்கு திரு-மணம் கைகூடும் என்-றும், குழந்தை பேறு இல்-லாதவர்கள் இதனை வலம் வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்-றும், தீராத நோய்களும் இந்த மரத்தை சுற்றி வந்தால் குணமாகும் என்பதும் இப்பகுதியில் உள்ள மக்களின் நம்பிக்-கையாக இருந்து வருகிற-தாம். இந்த மூட நம்பிக்-கையை உண்மை என்று நம்பி பகுத்தறிவற்ற முட்-டாள் பக்தர்கள் அங்கு சென்று வருகின்றனர்.

300 ஆண்டு பழமை வாய்ந்த தெய்வீக மரங்-களுக்கு திருமணம் செய்து வைத்தால் இப்பகுதி மக்கள் எந்த குறையும் இல்லாமல் எல்லா வள-மும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்று கருதிய கோவில் நிருவா-கத்தினர் தெய்வீக மரங்-களுக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நாகராஜ சுவாமி என்கிற அரச-மரத்திற்கும், நாகாயட்-சினி அம்பிகை என்கிற வேப்பமரத்திற்கும் திரு-மணம் நடந்ததாம். இந்த திருமண நிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார பக்தர்கள் சீர்வரிசையுடன் கலந்து கொண்டார்களாம்.

21ஆம் நூற்றாண்டி-லும் இன்னும் மரங்களை சுற்றினால் குழந்தை வரம் கிடைக்கும், திரு-மணம் நடக்கும் என்று மூடத்தனமாக நம்பும் இந்த பாமரர்கள் எப்-போதுதான் திருந்தப்-போகிறார்களோ? இராய-புரம், வண்ணாரபேட்டை-யில் உள்ள மருத்துவ-மனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளை எடுத்துவிடலாமா? பக்தர்களே சிந்திப்பீர்!

---------- நன்றி விடுதலை (28.03.2010)

Sunday, March 28, 2010

அவாள் அப்பன் வீட்டுச் சொத்தோ!

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்பது ஒரு பழமொழி, இன்றைக்கு இந்தியன் வங்கியும் இந்த வகையில் பூணூல் கயிற்றில் மனு நீதிக் கொடியை ஏற்றி பார்! பார்!! எங்கள் பார்ப்பன தர்பாரைப் பார்! என்று பழிப்புக் காட்டுகிறது தமிழர்களைப் பார்த்து


கடந்த வாரத்தில் இரு தகவல்கள் வெளி-வந்துள்ளன. ஒரு சேதி இந்து ஏடு வெளியிட்ட-தாகும்.

Sankara Nethralaya Activities Hailed என்ற தலைப்பில்18.3.2010 அன்று வெளியானது.

The Bank donated Rs.1 crore to sankara Nethralaya for revamping infrastructure and introducing new services. இன்னொரு தகவல் தினமணியில் (18.3.2010) சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கி ரூ.1 கோடி நிதியுதவி என்பது தான் இந்த இரண்-டாவது சேதியாகும்.

இந்தியன் வங்கியின் தலைவராக (Chairman) இருக்கும் எம்.எஸ். சுந்தர்ராஜன் என்ற பார்ப்பனர் இந்த நிறுவனங்களுக்கு அரசுடைமையாக்கப்பட்ட இந்தியன் வங்கியின் பணத்திலிருந்து அண்டை வீட்டு நெய்யே அக்கிரகார மாமியின் கையே! என்ற போக்கில் தூக்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பார்ப்பனர்மீது சி.பி.அய். விசார-ணை-யெல்லாம் நடைபெற்றதுண்டு. எப்படியோ அவற்றிலிருந்து எல்லாம் தப்பித்து இந்தியன் வங்கியின் தலைவராகி, தங்கள் இனத்தைச் சேர்ந்த வாளுக்கு இப்படியெல்லாம் அள்ளிக் கொடுக்கிறார்.

இவ்வளவுக்கும் இந்தப் பார்ப்பனர் வரும் ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் நம்ம-வாளுக்கு எதையாவது செய்து கொடுக்க வேண்-டும்-என்ற துரித வெறியில் ஈடுபட்டு இருப்ப-தாகத் தெரிகிறது.

சங்கரா நேத்திராலாயா நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்.எஸ். பத்ரிநாத் என்ப-வரும் ஆந்திராவைச் சேர்ந்த - _ சங்கர மடத்தின் அத்தியந்த சிஷ்யக் கோடி.

இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் எல்லாம் சங்கராச்சாரியார் தான் தலைமை விருந்தினர்.

அதேபோல காஞ்சி மடம் ஏனாத்தூரில் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் பெயரில் நடத்தும் பல்கலைக் கழகத்துக்கும் கொலைக் குற்றத்தின்கீழ் திரிந்து கொண்-டிருக்கும். ஜெயேந்திர சரஸ்வதியிடம் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை இந்தியன் வங்கித் தலைவர் சுந்தர்ராஜன் கொடுத் துள்ளார்.

வங்கித் தலைவரான சுந்தர்ராஜன் தன்னிச்சையாகத் தூக்கிக் கொடுத்திருக்க முடியாது. அதன் தலைமை அமைப்பின் (Board) ஒப்புதல் பெற்றுத்தான் கொடுத்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் பிரதிநிதி, ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி என்று பல இயக்குநர்கள் அடங்கிய கூட்டத்தில் இதனைத் தீர்மானித்திருப்பர் என்பது உண்மைதான்.

ஆனாலும் அந்த இயக்குநர்களும் யார்? எல்லாம் அக்கிரகாரத்து மடிசஞ்சிக் கூட்டம்தானே!

இந்தியன் இ.பி.கோ. குற்றப் பிரிவின்கீழ் (302, 120-_பி, 34, 201) கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட பிரிவின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டு, கைதும் செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்த ஓர் அசிங்கமான பிறவிதான் ஜெயேந்திரர் என்பது ஊர் சிரித்த செய்தியாகும்.

இந்த யோக்கியதையுள்ள ஒரு மனிதரிடம் நாட்டுடைமையாக்கப்பட்ட அரசு வங்கியின் தலைவர் மக்கள் பணத்தை ஒரு கோடி தூக்கிக் கொடுக்கிறார் கொஞ்சம்கூட கூச்ச நாச்ச-மின்றியென்றால், பார்ப்பனர்களின் இனவெறி எந்த நிர்வாணக் கோலத்தில் கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு கூத்தாடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கொலைக் குற்றம் மட்டுமல்ல; பெண்கள் விஷயத்திலும், எவ்வளவு பெரிய பச்சை இந்த ஜெயேந்திரர் சரஸ்வதி என்பதை, பார்ப்பனப் பெண்ணான அனுராதா ரமணன் என்ற எழுத்-தாளரே தொலைக்காட்சியில் அம்பலப்-படுத்தினாரே!

தன் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் இந்தப் பெரியவாளு உடலுறவு கொண்ட அகோரத்தை என்ன சொல்ல என்று தலையில் அடித்துக் கொண்டாரே!

ஆனாலும் பார்ப்பனர்களின் இனப்பற்று இருக்கிறதே அது மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவி நிற்கும் தடிமன் கொண்டது.

வேசியர்களிடத்தில்கூட வெட்கமிருக்கும்; ஆனால் இந்த வேதியக் குலக் கொழுந்துகளிடம் மருந்துக்கும்கூட வெட்கம், கூச்சம் என்பது கிடையவே கிடையாது என்பதற்கு ஜெயேந்திர சரஸ்வதிகளையும் இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் சுந்தர்ராஜன்களையும் பார்க்கும்பொழுது புரியவில்லையா?

இந்த ஏனாத்தூர் பல்கலைக் கழகத்திலும், விடுதிகளிலும் பச்சையாக தீண்டாமைப் பாம்பு படம் எடுத்து ஆடியதே நினைவிருக்கிறதா? திராவிடர் கழகம் அதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதே!

இந்தியன் வங்கி ஒரு கோடி ரூபாயை, தூக்கிக் கொடுத்துள்ளதே -_ அந்தப் பல்கலைக் கழகம் யார் பெயரால் அமைந்தது? மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியான் பெயரால் அமைந்ததுதான்!

அவர் யார்? தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய இந்திய அரசமைப்புக் சட்டத்தின் 17ஆவது பிரிவின்கீழ் தீண்டாமை ஒழிப்புக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டியவர். அத்தகைய ஒருவரின் பெயரால் அமைந்திருக்கும் ஒரு பல்கலைக் கழகத்துக்கு அரசு வங்கி இவ்வளவு பெரிய தொகையைத் தானமாக வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள பொது நல விரும்பிகள் _ தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எந்த அடிப்படையில் சங்கரா நிறுவனங்களுக்கு இந்தியன் வங்கி இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தது? இதற்குமுன் இந்த மடத்துக்கு எப்பொழுதெல்லாம் அரசு வங்கியின் பணம் தாரை வார்க்கப்பட்டது?

இப்படி நிதியைக் கொடுக்க இந்தியன் வங்கி வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல், நிபந்தனைகள் என்னென்ன? வேறு யார் எல்லாம் இப்படி நன்கொடை கேட்டனர்? அவர்களுக்கெல்லாம் அளிக்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேளுங்கள்! கேளுங்கள்!!

கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் தங்கள் குலத் தலைவர் சங்கராச்சாரியார்! அவரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்தப் பார்ப்பனர்களை _ தமிழர்களே, தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்களின் இனநலம் எங்கே? நம் மக்களின் இனநலம் எங்கே? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!
----------- நன்றி விடுதலை (27.03.2010)

அஞ்சா-நெஞ்சன் அழகிரியும் பெரியாரும்

அஞ்சா நெஞ்சன் என்கிற அடைமொழி கழகத்தில் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்-களுக்கு மட்டுமே கிடைத்த அரிய பட்டம்.


முன்னாள் இராணுவ வீரரான அவர் தன்மான இயக்கக் காலந்தொட்டு தந்தை பெரியார் அவர்-களின் படைவரிசையில் தன்னிகரில்லாச் சிப்பாய்.

அவர் மறைந்தபோது (28-3-1949) அவரைப் பற்றி தந்தை பெரியார் வெளிப்-படுத்திய கருத்துகள் - அஞ்சா நெஞ்சன் புகழ் உடலில் என்-றைக்குமே தங்கி ஒளி-விடும் பதக்கங்களாகும்.

தோழர் அழகிரி நல்ல பேச்சாளர். மக்களின், சிறப் பாக இளைஞரின் அபி மானம் பெற்றவர். அவர் நல்ல செலவாளி. தனக் கென ஒரு காசும் சேர்த்துக் கொண்டவர் அல்லர். என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதை தனது பெரும் பணியாகக் கொண்டி ருந்தார்.

அவரைப் பல முறை கண்டித்திருக்கிறேன்; கோபித்திருக்கிறேன். அவர் முன்கோபி. ஆனால் என் னிடத்தில் எந்நிலையிலும் கருத்து வேறுபாடு கொண் டது கிடையாது. அவருக்கு அடிக்கடி பணக் கஷ்டங்கள் வருவது சகஜம். அதனால் அதில் அவருக்கு எவ்வித தொல்லைகள் ஏற்பட்ட போதிலும், தன் கருத் தையோ, கொள்கை யையோ, லட்சியத்தையோ, தொண்டையோ கொஞ்சம் கூட மாற்றிக் கொண்டது கிடையாது. பிடிவாதமான கட்சிப் பற்றுடன் நடந்து கொண்டார். அவரை விலைக்கு வாங்கிவிடலாம் என்று எண்ணிய எதிரி களை ஏமாற்றியிருப்பாரே யொழிய, அவர்களின் வலையில் ஒரு நாளும் சிக்கியவர் அல்லர்

நேற்று வரை கூறி வந்த கருத்துக்கு மாறுபாடான ஒரு கருத்தை எங்கோ ஒரு இடத்தில் நான் கூறினால், அதற்காக என்னிடம் எவ் வித விளக்கமோ, சமா தானமோ எதிர்பார்க்காமல், அக்கருத்தைப் பின் பற்றியே தமது பிரச்சாரத்தை ஆரம் பித்து விடுவார் என்று தந்தை பெரி-யார், அழகிரி பற்றிக் கூறி-னார் என்றால், இது தந்தை பெரியார், அஞ்சாநெஞ்சன் அழகிரியோடு மட்டுமே சம்பந்தப்பட்ட கருத்தல்ல. ஒரு இயக்கம், தலைமை, பின்பற்றுவோர்க்கிடையே இருக்க வேண்டிய பாலத்-தின் இலக்கணம் இது.

தமிழர்களிடையே உள்ள பெருங்குறை - ஸ்தா-பன ரீதியாகத் தொடர்ந்து பணியாற்றிடப் பழகிடாத, பக்குவப்படாத குணமாகும்.

அழகிரி பற்றி அய்யா கூறிய இந்தக் கருத்தை தொண்டர்கள் வாசிப்பது மட்டுமல்ல. சுவாசிப்பதும் முக்கிய-மாகும். கலைஞருக்கு கழகத்தில் ஒரு முன்மாதிரி அஞ்சா நெஞ்சன் அழகி-ரியே! அவர் நினைவாகத்-தான் தன் மகனுக்கு அப்-பெயரைச் சூட்டினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா-வுக்கு நடிகவேள் என்ற பட்டம் அளித்ததும் அஞ்சா-நெஞ்சன் அழகிரியே!

அஞ்சாநெஞ்சன் மறைந்த நாளில் அவர் நிலைக்க வைத்துச் சென்ற உணர்வுகளை உள்வாங்கிக் கொள்வோம்! வீறு நடை-போடுவோம்!!

வாழ்க பெரியார்! தொடர்க அழகிரியின்பாட்டை!!

----- விடுதலை (28.03.2010) மயிலாடன்

Friday, March 26, 2010

வரலட்சுமி விரதம் பார்ப்பனத் தந்திரம். சிந்திப்பீர்!

அஷ்ட அய்ஸ்வரர்யங்களுக்கும் அதிபதி வரலட்சுமி வரலட்சுமி விரதம் இருப்-பதால் குடும்ப நிம்மதி, கணவருக்கு நீண்ட ஆயுள், நெல், பொன், வாகனம், அன்பு, அமைதி, இன்பம், ஆரோக்கியம், புகழ் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது அய்தீகம். ஆவணி மாதத்தில் வரும் விரதங்களில் முக்கியமான விரதம் வரலட்சுமி விரதம். இந்த விரதத்தின் பெருமை பவிஷ்யேந்தர புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. (தினமலர்_-வாரமலர்)


பரமேஸ்வரனே பார்வதிக்கு வர-லட்சுமி விரத மகிமைகளை விளக்கிச் சொன்னார் என்று கூறுவார்கள்.

விரதம் வந்த கதை குண்டினபுரம் என்ற ஊரில் சாருமதி இருந்தாள். மனத்தால் கூட அடுத்தவர்களுக்குத் தீங்கு நினைக்காதவள். அவளுடைய பேச்சும் மிக இனிமையாக இருக்கும்.

சாருமதியின் கனவில் ஒரு நாள் மகாலட்சுமி தரிசனம் தந்து சாருமதி! நான்தான் வரலட்சுமி. தெலுங்கில் சிராவண மாதமும் தமிழில் ஆடி மாதமும் உள்ள பவுர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமை அன்று பக்தியோடு பூஜை செய்தால், உனக்கு வேண்டும் வரங்களைத் தருவேன் என்று சொல்லி மறைந்தாள். கனவு கலைந்து, பொழுது விடிந்ததும், உறவினர்களிடமும் தெரிந்தவர்களி-டமும், தான் கண்ட கனவை விவரித்-தாள் சாருமதி. நல்லகனவு, வரங்களை அள்ளித் தரும் அந்த வரலட்சுமி விரதத்தை நாம் அனுஷ்டிக்க வேண்டும் என்றார்கள் அனைவரும்.

சில நாட்களுக்குள்ளாகவே, வர-லட்சுமி விரதநாளும் வந்தது. அனை-வரும் சாருமதியின் தலைமையில் கூடி-னர். நீராடி, தூய்மையான ஆடைகள் உடுத்தி, ஒரு கலசத்தில் (பித்தளைச்-செம்பு அல்லது குடத்தில்) அரைஅரிசி கால்அரிசியாக ஒன்று கூட இல்லாமல், அனைத்தும் முழுசாக உள்ள பச்சரிசி-யைப்போட்டு, பூரணகும்பம் தயாரித்து, அதன்பின் அந்தக் கலசத்தில் வரலட்-சுமியை ஆவாகனம் (எழுந்தருள) செய்து

பத்மஸநே பதிமகரே ஸர்வலோகைக பூஜிதே
நாராயண ப்ரியதேவி. ஸுரப்ரீதா பவணாவதா

நாராயணனுக்குப் பிரியமான தேவியே! தாமரைப் பூவில் இருப்ப-வளே! தாமரைப்பூவைக் கைகளில் ஏந்தி-யவளே! உலகமெல்லாம் பூஜிக்கப்-படுபவளே! எங்களுக்குத் தரிசனம் தரவேண்டும் தாயே என்று துதித்துப் பூஜை செய்தார்கள். ஏற்கெனவே கன-வில் மகாலட்சுமி கூறியபடி சாருமதியும் அவளுடன் விரதம் இருந்தவர்களும் மகாலட்சுமியின் விரதத்தினால் (கருணை-யினால்) எல்லாவிதமான செல்-வங்களும் பெற்று வாழ்ந்தார்கள். அத்துடன் நமக்கு இந்த மங்கலங்கள் கிடைக்கக் காரணம் சாருமதி உபதேசித்த வரலட்சுமி விரதம் தான் என்று சொல்லி வருடாவருடம் அவர்-கள் வரலட்சுமி விரதம் இருந்தார்கள்.

கேட்ட வரங்கள் கொடுப்பது வரலட்சுமி விரதம் என்று உலகத்தில் பிரசித்தமாக இருக்கிறது. வரலட்சுமி விரத சரித்திரத்தைக் கேட்டவர்களும் அடுத்தவர்களுக்கு நன்றாகப் புரியும்படிச் சொன்னவர்களும் எல்லாவிதமான செல்வங்களையும் அடைந்து நலமாக இருப்பார்கள்.

பூஜைபற்றிய தகவல்கள் விரத பூஜைக்கான இடத்தை நன்கு மெழு-கித்துடைத்து, கோலம் போட்டு விளக்கேற்றி வைத்து வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் மேல் பூஜைக்குண்டான கலசத்தை வைக்க வேண்டும். கலசத்துக்குள் குறுநொய் இல்லாத பச்சரிசி, பொன் கருகமணி, மஞ்சள் முதலான மங்கலப் பொருள்-களைப் போட்டு, அதன் மேல் மாவிலை மற்றும் தேங்காய் வைக்க வேண்டும். பூஜையின் போது, அர்ச்சனை முடிந்த பின் கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி முதலான லட்சுமிஸ் தோத்திரங்-களையோ பாடல்களையோ பாடுவது நல்லது. கலசத்தில் வைத்த தேங்காயை அடுத்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து பாயாசம் பண்ணலாம்.

சிவனுக்கு வில்வம், மகாவிஷ்ணு-வுக்குத் துளசி; அதுபோல் மகாலட்-சுமிக்கு அருகம்புல். அருகம்புல் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது விசேஷம். பொதுவாக பெண்-களுக்கான விரதமாக இருந்தாலும் சித்ரநேமி, நந்தன், விக்ரமாதித்தன் முதலான ஆண்களும் வரலட்சுமி விரதம் இருந்து நலமடைந்ததாக ஞானநூல்கள் கூறுகின்றன.

விரதத்துக்கு மறுநாள் புனர்பூஜை முடித்து, அன்றுமாலை ஆரத்தி எடுத்த பிறகு, பூஜைக் கலசத்தை இரவில் அரிசிப் பானையில் வைப்பது வழக்கம். எப்போதும் அன்னலட்சுமிக்குப் பஞ்சமே இருக்காது (சக்தி விகடன்)

(அஷ்டலட்சுமிகள் என்று பல-ராலும் சொல்லப்படும் ஒரு கடவுளுக்கே எட்டு உருவங்கள் உள்ளன. தன-லட்சுமி, தான்யலட்சுமி வீரலட்சுமி, ராஜ-லட்சுமி, சந்தானலட்சுமி, ஆதி-லட்சுமி, வித்யாலட்சுமி, விஜயலட்சுமி என்பவைதான். வரலட்சுமி என்று ஒரு பெயர் இல்லை இவர்களில் யார் வர-லட்சுமி? சிவன் பார்வதிக்கு வரலட்சுமி விரதம் பற்றிச் சொன்னானாம். பார்வதி பூஜிக்கப் போகிறாளா? ஒரு பெண் தன் கனவில் மகாலட்சுமி வந்து விரதம் இருக்கச் சொன்னதாக எல்லோரிடமும் சொல்லி இந்த விரதம் வந்ததாம். அதற்குச் சொல்லப்பட்ட பாடல் மகாலட்சுமியைப் பற்றியதே. முதல் கூட்டம் பூஜை செய்த முறைக்கும் தற்போதுள்ளதற்கும் மாறுதல் உள்ளது. அது அவரவர் வசதியும் இஷ்டமும் போலும். ஓர் ஆண்டு விரதம் இருந்தால் தான் எல்லா செல்வங்களும் கிடைத்துவிடுமே. பின் ஏன் ஆண்டுக்கு ஆண்டு செய்ய வேண்-டும்? சொல்லப்பட்டுள்ள தோத்தி-ரங்கள் எல்லாம் வடமொழியே. கலசத் தேங்காயை அடுத்த வாரமே பயன்-படுத்தச் சொல்கிறாள். ஒரு ஆண்டு வைத்திரு என்று சொல்லவில்லை, இதில் ஆண்களும் விரதம் இருந்-தார்கள் என்ற ஒரு கதை. கலசத்தை அரிசிப் பானையில் வைக்க வேண்டும் என்றால் குடத்தை எப்படி அரிசிப் பானையில் வைக்க முடியும்? அன்ன-லட்சுமிக்குப் பஞ்சம் கிடையாதாம். யார் இவள்? இந்த விரதம் இருப்பதால் பல நலன்கள் கிடைக்கும் என்ற ஆசையைத் தூண்டி, பெண்கள் மாறாமல் இருக்கவே இந்தக் கதை. இந்த சரித்திரத்தைக் கேட்டவர்களும், பிறருக்குப் புரியும்படிச் சொன்னவர்-களும் பல நலன்கள் பெறுவராம். ஒரு கடவுளச்சிக்கு எட்டுப் பெயர்களுடன் எட்டு உருவங்கள் சொல்லி இன்னும் பல பெயர்கள் கூறப்படுகின்றன. மக்கள் என்றும் அறிவு பெறக்கூடாது என்பதே பார்ப்பனத் தந்திரம். சிந்திப்பீர்!

------------ நன்றி : விடுதலை (20.03.2010)

Thursday, March 25, 2010

ஸ்ரீராமநவமி கொண்டாடும் சூத்திரத் தமிழர்களே..கொஞ்சம் சிந்தியுங்கள்.!

இன்றைக்கு (24.3.2010) இராமன் பிறந்த நாளாம்! ஸ்ரீ இராம நவமி என்ற பெயரே, தமி-ழர்-களுக்கும், அக்கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பதைக் காட்டும். கடவுளுக்குப் பிறப்பும்_ இறப்பும் இல்லை என்று கூறும் கடவுள் நம்-பிக்கையாளர்கள் _பக்தர்களின் மனக்குழப்பம் மலைபோன்றது என்பதற்கு இந்தக் கடவுள்-களின் பிறந்த நாள் நிகழ்வுகளே போதுமானது ஆகும்.


ஸ்ரீராமநவமி
கிருஷ்ணஜெயந்தி (கோகுலாஷ்டமி)
விநாயகர் சதுர்த்தி இப்படிப் பலப்பல.

கேட்டால் ஆண்டவன் பூமியில் அவ-தரித்தார். ஆகவே இந்நிலை_ பிறப்புகளைக் கொண்டாடும் நிலை என்ற ஒரு பொய்ச் சமாதானத்தைக் கூறுவார்கள். அப்படியானால் விஷ்ணு_- திருமால்_- போன்று ஏன் சிவன் 10 அவதாரங்களை எடுக்கவில்லை? என்று கேட்டால் பதில் வராது!

10 அவதாரங்களிலேயே மிக அதிகமாக மக்களிடம் பிரபலமாக்கப்பட்ட அவதாரங்கள்_- கதைகள் இராமனுடையதும், கிருஷ்ணனு-டையதும்தான்.

முதலில் இராமன் காரணம், அந்த புரு-ஷோத்த இராமனின் முக்கியப் பணி பார்ப்பன வர்ணாஸ்ரம தர்மத்தைக் காப்பாற்றவும், பெண் அடிமைத்தனத்தைப் பேணிக் காப்பாற்றவும், ஆன பல தர்மங்கள் பரப்புவதற்குப் பயன்படும் என்பதால்தான்!

அமைதியான நாட்டில், இன்று நம் மக்கள் மத்தியில் அமளி, துமளி, கொலை, கொள்ளை, மதச்சண்டையில் மண்டை உடைதல் எல்லாம் நிகழ்வது, இராமன் பிறந்த இடத்தில் கோயில் கட்டுவோம் என்று முஸ்லிம் மதத்தினரை வம்புக்கு அழைத்ததால்தானே!

தீவிரவாதத்திற்கு உரமிடுவது இந்து மதத்தின் பேரால் பார்ப்பன வெறி அமைப்புகள் நடத்தும் அரசியல்தானே!

ஸ்ரீராமநவமி கொண்டாடுவோருக்கு 1928_லேயே_- அதாவது 82 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பச்சை அட்டை குடிஅரசு வார ஏடு மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு இன்றுவரை எவரும் பதில் அளித்ததே இல்லை!

1928 இல் வடநாட்டு சர்தார் வல்லபாய் படேல் (இவர் பார்ப்பனரல்லாதவராக இருந்தாலும்) பார்ப்பன இந்து மதவெறியராக இருந்து, காந்தியாரிடமே உண்மையாக அவர் வாழ்ந்தபோதும் சரி, - மறைந்த காந்தியார் பின்ன-ரும் சரி இல்லாது, பிரதமர் நேருவுக்குப் பின், துணைப் பிரதமர் தகுதியில் வாழ்ந்த ஒருவர்; மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதிய மிஸீபீவீணீ ஷ்வீஸீ யீக்ஷீமீமீபீஷீனீ என்ற நூலில் இந்த உண்மையை மனம் நொந்து கொட்டியுள்ளார் அபுல்கலாம். பார்ப்பனர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து சுயமரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேச வைத்து, பத்திரிகை விளம்பரத்தை சுயமரியாதை இயக்கத்திற்குத் தாராளமாகத் தந்தனர்!

அதற்கு ஒரு தலையங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் (1928 இல்) எழுதியது ஸ்ரீராமநவமி கொண்டாடுவோருக்கும் பொறி தட்டும் கேள்விகளாகும்!

இதோ தந்தை பெரியார் தம் சிந்தனையைத் தூண்டும் கேள்விக்கணைகள்:

தவிர இராமனையும், சீதையையும் சுயமரியாதை இயக்கம் இழித்துச் சொல்கிறது என்று திரு. படேல் சொல்லியிருக்கிறார்.

எந்த இராமனையும், சீதையையும் என்று திரு. படேல் சொல்லி இருந்தால் யோக்கியமாக இருந்திருக்கும்.

(1) பார்ப்பான் காலில் விழுந்த இராமனையா?
(2) மாமிசம் சாப்பிட்ட இராமனையா?
(3) கொலை செய்த (சம்பூகனை, வாலியை) இராமனையா? பார்ப்பனரல்லாத சம்பூகன் என்ற சூத்திரன் கடவுளைத் தோத்திரம்_- தபசு செய்ததற்காகக் கொன்ற இராமனையா?
(4) சுயநலத்திற்காக தம்பி பேச்சைக் கேட்-டுக்கொண்டு, நியாய அநியாயம் பார்க்காமல் பாரபட்சமாய் அண்ணனை (வாலியை)க் கொன்ற இராமனையா? _ (அதுவும் மரத்திற்குப் பின் மறைந்திருந்து).
(5) வருணாசிரமத்தை ஆதரித்த இராம-னையா?
(6) கடைசியாகப் பெண்ஜாதி (சீதை) நட-வடிக்கை மீது சந்தேகப்பட்டு கர்ப்பத்துடன் காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்த இராமனையா?

எந்த இராமனை, எந்த இராமனை? என்று படேலைக் கேட்கிறோம்.

அதுபோல நாம் குற்றம் சொல்லும் சீதையும்,

(1) இராமாயண சீதையா? அல்லது
(2) காந்தியுடைய வேறு சீதையா? என்பதைச் சொல்லிவிட்டால் ஒரு வரியில் ஒழிந்துபோகும்! அதுவரை இராமன் இழிவும், சீதை குற்றமும் மூடி மறைக்க முடியாதென்று கண்டிப்பாய் சொல்வோம்.

இதைச் சொல்லி பாமர மக்களைக் கிளப்பி விடுவதற்காக சுயமரியாதை இயக்கம் சிறிதும் பயப்படாது என்று சொல்லுவோம்!

என்னே அருமையான சிந்தனை?

இராமன்_- சீதை_- இராமாயணம்- இவைகளை வைத்துத்தானே வடநாட்டவர்கள் அரசியல் நடத்த மூலதனம் தேடுகிறார்கள்?

1971 இல் இராமனைச் செருப்பால் அடித்தவர்களோடு (தி.க.வினரோடு) இணைந்த தி.மு.க. _ கலைஞர் கட்சிக்கா உங்கள் ஓட்டு என்று, காமராசரும், ஆச்சாரியாரும் இணைந்து குரல் கொடுத்தும்கூட, தமிழர்கள் ஏமாறாமல், தி.மு.க.வுக்கு 184 சட்டமன்ற இடங்களைத் தந்து, காங்கிரஸ் பெற்ற 50 இடங்களை 15 ஆக ஆக்கியது எந்த அடிப்படையில்?

தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கம் செய்த பிரச்சாரத்தால்தானே?

அது மட்டுமா? 1992 இல் இந்தியாவின் இதர மாநிலங்கள் மதக் கலவரத்தால் நூற்றுக்கணக்கான கொலை,- கொள்ளை-களில் சிக்கித் தவித்த நேரத்தில்_- தமிழ் நாடுதானே அமைதிப் பூங்கா? மத நல்லிணக்கத்தோடு, சகோதரத்துவத்துடன் இருந்த ஒரே மாநிலம்! திராவிடர் இயக்கச் சாதனைதானே!

எனவே, நாட்டை அப்போதும் சரி_- இப்போதும் சரி_- காப்பாற்றியது _ காப்பாற்றுவது_ அயோத்தி இராமன் அல்ல!

சுயமரியாதை இயக்கம் கண்ட ஈரோட்டு இராமன் என்ற இராவணன்தான் என்பது வரலாற்றின் பதிவு அல்லவா?

எனவே, ஸ்ரீராமநவமி கொண்டாடும் சூத்திரத் தமிழர்களே, சம்பூகனின் வதையைக் கொஞ்சம் சிந்தியுங்கள்.

காலாவதியான மருந்துகளைவிட மிகவும் ஆபத்தானது காலாவதியான கடவுள், மதக் கருத்துகளை ஏற்பது_ மூளைக்கு!

----- நன்றி விடுதலை ஆசிரியர் வீரமணி கட்டுரை (24.03.2010)

பெரியார் களஞ்சியம் குடியரசு நூல் வெளியீட்டு விழா



பசுவதைத் தடுப்புச் சட்டமாம்...காளை, எருமை மாட்டுக் கறியைச் சாப்பிடலாம்

தென்னகத்தில் கருநாடக மாநிலம், சங்பரிவார்க் கும்பலின் பரிசோதனைக் களமாக ஆக்கப்பட்டு வருகிறது.


ஸ்ரீராம் சேனா என்ற ஒரு வானரப்படை கிளம்பி அட்டூழியங்களைச் செய்து வந்தது _ வருகிறது.

அகில இந்திய அளவில் நரேந்திர மோடியை விஞ்சவேண்டுமா என்று கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா கிளம்பிவிட்டார்.

கருநாடக மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸின் 2400 ஷாகாக்கள் நடைபெறுகின்றன என்றால், இதன் பொருள் _ சிறுபான்மையினருக்கு எதிராக வேட்-டைக்கு ஆட்கள் தயாரிக்கப்படுகின்றனர் என்று பொருள்படும்.

கருநாடக மாநிலத் தேர்தலுக்கு முன்னதாகவே ஒகேனக்கல் கருநாடகத்துக்கே சொந்தம் என்று கூறி, தமிழ்நாட்டின் எல்லைக்குள் வந்து, சற்றும் நாகரிகமின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள்தான் இந்த இடையூரப்பா!

2008 ஆம் ஆண்டில் மங்களூரில் பஜ்ரங் தள் தொண்டர்களால் கிறிஸ்துவ ஆலயம் தாக்கப்-பட்டதைக் கண்டித்து எழுதியதற்காக மங்களூரி-லிருந்து வெளிவரும் காவலி அலே ஏடு பலமுறை தாக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சீதாராம் கைவிலங்கு போடப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் இழுத்துச் செல்லப்பட்டார். சர்வதேச பத்திரிகையாளர் சங்கமும், இந்தியப் பத்திரிகையாளர் சங்கமும் கடுமையாக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தின.

மங்களூரில் விடுதி ஒன்றைத் தாக்கி அங்-கிருந்த பெண்களையும் அடித்துத் துன்புறுத்தினர்.

கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஒரே பேருந்து சுற்றுலா சென்றனர் என்று கூறி, அந்தப் பேருந்தை இடைமறித்துத் தாக்கினர். இந்து மாணவர்களும், பிற மத மாணவர்களும், மாணவி-களும் எப்படி பயணம் செய்யலாம் என்பதுதான் அந்தக் கும்பலின் சினத்துக்குக் காரணமாம்.

மதச் சார்பற்ற இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியம் செய்து பதவி ஏற்ற பா.ஜ.க. ஆட்சி எந்தத் தரத்தில் நடைபோடுகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இப்பொழுது அம்மாநில அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவரப் போகிறதாம். பசுவதைத் தடுப்புச் சட்டமாம். உணவுக்காகக் கூட பசு மாமிசம் பயன்படுத்தக் கூடாதாம்.

ஒரு தனி மனிதனின் உணவு விஷயத்தில் தலையிட ஓர் அரசுக்கு உரிமை உண்டா?

உலகம் முழுவதும் மாட்டுக்கறி என்பதுதான் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு ஓரளவு குறைந்த விலையில் கிடைப்பதும் மாட்டுக்கறிதான். அதில் கை வைப்பதன்மூலம் வெகுஜன எதிர்ப்புக்கு கருநாடக அரசு ஆளாகும் என்று எச்சரிக்கின்றோம்.

பசு மாட்டுக் கறியை மட்டும் உண்ணக்கூடாது, காளை மாட்டுக் கறியை சாப்பிடலாம்; எருமை மாட்டுக் கறியைச் சாப்பிடலாம் என்பதில் என்ன அறிவார்ந்த கருத்து வலிமை உள்ளது?

கோமாதா எங்கள் குலமாதா என்னும் இந்துத்துவா வெறித்தனம்தானே இதன் உள்ளடக்கம்? கருநாடக மாநிலம் இந்து ராஜ்ஜியமாக மாறிவிட்டதா?

அப்படியே பார்க்கப் போனாலும் இந்து மத சாஸ்திரங்களின்படி பசு மாமிசம் தடை செய்யப்பட்ட ஒன்றா?

இவர்களின் மகாபாரதம் என்ன கூறுகிறது?

அரசர்களின் மாளிகைகளில் பார்ப்பனர் களுக்கு விருந்து படைப்பதற்காக 2000 சமையற்காரர்கள் இருந்தனர். நாள் ஒன்றுக்கு 2000 பசுக்கள் வீதம் கொல்லப்பட்டன என்று மகாபாரதத்தில் துரோணபர்வம் (67_1_2) கூறுகிறதே!

இதற்கு நேர்மையான பதில் என்ன? ஒருவன் ஒரு மிருகத்தை உண்ணும்போது, அது தனக்கு உரிய உணவாகக் கருதுவானேயானால், அவன் பாவம் செய்தவன் ஆவான் என்று மனுதர்மம் கூறுவது குறித்து சி. இலட்சுமண அய்யர் என்ற பார்ப்பனரின் கடிதம் மெயில் ஏட்டில் (20.11.1966) வெளிவந்ததே!

அனைவருக்கும் உணவு, வீடு, உடை, அடிப்படைக் கல்வி இவற்றைக் கொடுப்பதில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் கவனம் செலுத்தட்டும். தேவையின்றி தனி மனிதனின் உணவு விஷயத்தில் மூக்கை நுழைத்து உடைபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

---------- நன்றி விடுதலை தலையங்கம் (25.03.2010)

Wednesday, March 24, 2010

யானைக்குக் கோவணமா? கங்கையைச் சுத்திகரிக்க ஆயிரம் கோடி...

புனித கங்கை என்று இந்து மதக்காரர்கள் போற்றிப் புகழ்பாடும் கங்கையைச் சுத்திகரிக்க ஆயிரம் கோடி ரூபாய் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.


இது போதுமானதல்ல; மேலும் மூவாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்து மதத்தில் புனித நதி என்றும் சிவபெருமான் தலையில் குடியிருக்கும் தெய்வப் பெண் என்றெல்லாம் பிரமாதமாகக் கூறுகிறார்கள்.

சூரிய வம்சத்துப் பிறந்த பகீரதச் சக்ரவர்த்தி தன் பாட்டன் முதலியவர்களின் சரிதங்களைக் கேட்கையில், பிதுர்க்கள் அநேகர் கபிலர் கோபத்-திற்குட்பட்டு சாம்பராய் நரக வேதனைப்படுதல் அறிந்து அதை நீக்க, அநேக ஆண்டுகள் பிர்மன், கங்கை, சிவமூர்த்தி முதலியோரை எண்-ணித் தவம் புரிந்து சிவமூர்த்தியால் கங்கையின் ஏழு துளிகளைப் பூமியில் வரப் பெற்றனர்.

பார்வதிதேவி விளையாட்டாக சிவமூர்த்தியின் கண்களை மூட, அக்கரத்தின் வழிப் பெருகிய நீர் வெள்ளங்கொள்ள, அதைச் சிவமூர்த்தி தரித்தனர் என்றும், விஷ்ணு திரிவிக்கிரம அவதாரங்கொண்டு மூவுலகளந்தபோது திருவடி சுவர்க்கமடைய அண்டமுடைந்து ஆகாய கங்கை கால்வழி ஒழுகியதால் உண்டானது என்றும் கங்கையைப்பற்றி அளந்து கொட்டி-யுள்ளனர்.

இந்தக் கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் என்றும், செத்த பின் உடலை எரித்து, அந்தச் சாம்பலைக் கங்கையில் கரைத்-தால் மோட்சலோகு கிட்டும் என்றும் அள்ளிக் கொட்டி வைத்துள்ளார்களே _ நமது வினாவெல்லாம் இதுதான்;

இவ்வளவு தெய்வத்தன்மை பொருந்திய கங்காதேவி எப்படி அசுத்தமானாள்? சுத்தப்-படுத்தவேண்டும் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது என்றால், இதன் பொருள் என்ன?

கங்கை புனிதமானது _ தெய்வத்தன்மை பொருந்தியது என்பது பொய்யாக இருக்க-வேண்டும். இல்லை, இல்லை, கங்கை புனித-மானவள்தான்; தெய்வத்தன்மை பொருந்திய-வள்தான் என்பது உண்மையானால், அதைச் சுத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை; அவ்வாறு அரசு நிதி ஒதுக்கி சுத்தம் செய்ய முற்படுவது தெய்வத்தன்மையை அவமதிப்ப-தாகும் என்றும் இந்து மதக் குத்தகையாளர்கள் குரல் கொடுக்கவேண்டும்.

உண்மையான நிலவரம் என்ன? கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரை அதன் பயண தூரம் 2,525 கிலோ மீட்ட-ராகும். வழிநெடுக இந்தக் கங்கையில் கலக்கப்படும் அசுத்தங்களையும், கழிவுகளையும் நினைத்தாலே குடலைப் புரட்டும்.

காசி நகரில் மட்டும் நாள் ஒன்றுக்கு இந்தக் கங்கையில் கலக்கும் சாக்கடையின் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள்தோறும் 400 பிணங்கள் எரிக்கப்பட்டு, அவற்றின் சாம்பல் கங்கை நீரில் கரைக்கப்படுகின்றன.

9000 கிழட்டுப் பசுக்கள் இந்தக் கங்கையில் உயிரோடு வீசி எறியப்படுகின்றன. காசியில் பட்டுத் தொழிலில் ஈடுபடுவோர் 2 லட்சம் பேர்கள். இதன் இரசாயனக் கலவை எல்லாம் இந்த நதியில்தான் சங்கமம் ஆகின்றன.

காசியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு மோட்சம் சென்றடையும் நம்பிக்கையில் குளிப்போர் எண்ணிக்கை 70 ஆயிரம்.

1927, 1963, 1970 ஆம் ஆண்டுகளில் இந்தத் தூய்மை கெட்ட கங்கை என்னும் சாக்கடையால் கடும் நோய் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கில் மடிந்தனர்.

பொதுவாக இந்தியாவில் குழந்தைகள் மரணம் என்பது 1000_க்கு 94 என்றால், காசி வட்டாரத்தில் அது 133.94 விகிதாச்சாரமாக உள்ளது.

காசியையடுத்து காஜியாபாத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் கழிவுகள் கங்கையில்தான் கலக்கின்றன. இந்தக் கழிவில் ஓபியம் என்ற போதை இருப்பதால், இந்தத் தண்ணீரைக் குடிக்கும் குரங்குகளும் போதை வெறிக்கு ஆளாகின்றனவாம்.

பிகார், பாட்னாவில் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்-கப்படுகின்றன. மிக அதிகமாகப் பாதிக்-கப்படும் நகரம் கொல்கத்தா என்று கூறப்படுகிறது.

இந்தச் சாக்கடைதான் புண்ணிய கங்கையாம், தெய்வாம்சம் பொருந்தியதாம் _ இதனைத்தான் சுத்திகரிக்கப் போகிறார்களாம் _ யானைக்குக் கோவணம் கட்டும் கதைதான்!

--- நன்றி விடுதலை தலையங்கம் (24.03.2010)

சாட்சாத் தினமலர் வெளியிட்ட தீபாராதனை லட்சணம்!

கருநாடக மாநிலம் கார்வாரில் காப்ரி என்-னும் கடவுளுக்கு எத்-தகைய அபிஷேகம் தெரியுமா? சாராயத்தால்; எந்த வகையில் தீபாராதனை தெரியுமா? சிகரெட்டால்.


ஏதோ நாத்திகர்கள் செய்யும் தமாஷ் அல்ல இது. ஆன்மிகத்தைக் காப்பாற்றவும், சங் பரி-வாரை வளர்க்கவும் அவ-தாரம் எடுத்ததுபோல் சிண்டை அவிழ்த்துவிட்-டுக் கிளம்பியிருக்கும் சாட்சாத் தினமலர் (22.3.2010, பக்கம் 3) தான் இதனை வெளியிட்டுள்ளது.

ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் அல்ல; ஆயிரம் லிட்டர் சாராயம் அபி-ஷேகமாம். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய வழிபாடு உண்டாம். இப்படி வழிபடுபவர்கள் கோவாவில் அடிமை-களாக நடத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் சந்ததியினராம்.

படையல்கள் எல்-லாம் மாமிசம்தானாம். இப்படியெல்லாம் படைத்-தால் தங்களுக்குத் தேவையானதை எல்லாம் காப்ரி கடவுளால் கிடைக்குமாம்.

இதில் ஆச்சரியப்படு-வதற்கு ஒன்றுமில்லை. கடவுளை உண்டாக்கிய-வர்கள் மனிதர்கள்தானே! அப்படியிருக்கும்போது தன்னைப் போன்ற உருவ அமைப்பும், தனது உணவு மற்றும் பழக்க வழக்கங்களை தம்மால் உருவகப்படுத்-தப்பட்ட அந்தக் கட-வுளின்மீது ஏற்றுவதும் இயல்புதானே.

கோவாவில் மட்டு-மல்ல. உலகம் முழு-வதும் கடவுள் உண்டாக்-கப்பட்ட விதம் இந்தக் கதியில்தான்.

ஆப்பிரிக்காவில் கற்பிக்கப்பட்ட கடவுள்-கள் யானையின் மீது சவாரி செய்யும்_ கார-ணம் அங்கு யானைகள் அதிகம்.

எஸ்கிமோக்கள் வாழும் பகுதிகளில் உருவகப்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் மிருகத்தோலை உடுத்துக் கொண்டிருக்கும். காரணம். அங்கு குளிர் அதிகம். அம்மக்கள் தாங்கள் உடுத்திக் கொண்-டிருக்கும் அதே மிருகத் தோலை தங்-களால் படைக்கப்பட்ட கடவுள்களுக்கும் கொடுத்திருக்கின்றார்கள்.

நீக்ரோக்களின் கட-வுள்களின் தலை முடி-யும் சுருண்டு இருக்கும். காரணம் வெளிப்படை-யானதே.

கடவுளைக் கற்பித்த-வன் மனிதன் என்பதற்-கும், அது காட்டுமிராண்-டிக்கால கற்பனை என்-பதற்கும் வேறு என்ன எடுத்துக்காட்டுகள் தேவையோ!

- விடுதலை மயிலாடன் (24.03.2010)

Monday, March 22, 2010

பா.ஜ.க.வின் அடையாளம் இதுதான்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு _ பரவலாக எதிர்பார்க்கப்படக் கூடிய சமூகநீதிச் சித்தாந்தம் ஆகும்.


மக்கள் தொகுதியில் கிட்டத்தட்ட சரி பகுதியாக இருக்கக்கூடியவர்களுக்கு அனைத்துத் தடத்திலும் உரிய பிரதிநிதித்துவம், உரிமை தேவை என்று எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றே!

சமூக அமைப்பில் ஆண் ஆதிக்கம் என்பது நங்கூரம் பாய்ச்சி இருப்பதால், இதற்குப் பெரும்பாலும் முட்டுக்கட்டையாகவே இருந்து வருகின்றனர். குடும்ப அமைப்பிலிருந்து நாடு வரை இந்த நிலைதான் கோலோச்சி நிற்கிறது.

சமூக மாற்றங்கள் வேகமாக நடந்துவரும் ஒரு காலகட்டத்தில் இந்தப் பிரச்சினையிலும் புரட்சி ஏற்பட்டு வருவது தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகும்.

காலத்தின் இந்தப் பார்வையை உணராதவர்கள் யாராக இருந்தாலும், ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள்.

பெண்கள் வளர்ச்சி என்பது படிப்படியாக பல்வேறு எதிர்ப்பு முனைகளைச் சந்தித்து நடந்துகொண்டுதானிருக்கிறது. இந்துச் சட்டத் திருத்தம் என்ற கட்டம் வந்தபோது எவ்வளவு பெரிய எதிர்ப்பு ஏற்பட்டது. கொள்கைக் காரணமாக அண்ணல் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்துவிட்டு வெளியில் வரவில்லையா?

பெண்களுக்குத் திருமண வயது உயர்த்தப்பட-வேண்டும் என்ற நியாயமான _ அறிவியல் ரீதியான குரலுக்குக்கூட எவ்வளவு பெரிய எதிர்ப்புப் புயல்கள் எல்லாம் தலைதூக்கி நின்றன.

33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற அண்-மைக்கால கோரிக்கையால் அரசியல் கட்சிகளும், ஆண்களும் நடந்துகொண்டுவரும் போக்கை உணர்ந்தவர்களுக்கு உண்மை விளங்காமற் போகாது.

இன்றுவரை ஆதிக்கம் என்ற அகந்தை ஆண்களைவிட்டு அகலவில்லை என்பதுதான் அது.

இந்தியா முழுமையும் 28 மாநில சட்டப்-பேரவைகளில் 4030 உறுப்பினர்கள் இருக்கி-றார்கள் என்றால், அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 311 மட்டும்தான்.

60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர் ஒருவரும் இல்லை.

பெண்கள் 10 விழுக்காடு உள்ள சட்டமன்-றங்கள் இந்தியாவில் வெறும் எட்டு மட்டுமே. இந்த நிலையில், எதிர்ப்பின் காரணமாக 33 சத-விகிதத்தைக் குறைக்கலாமா என்ற ஒரு கருத்துக்-கூட சன்னமாக நுழைக்கப்படுகிறது.

பெண்கள் இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் ஆதரவு அளிப்பதாகக் காட்டிக்கொண்ட பாரதீய ஜனதா, உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் அதனை எதிர்க்கப் போவதாக இப்பொழுது சொல்கிறது. கோணிப்பைக்குள் இருந்த பூனை இதன்மூலம் வெளியில் வந்துவிட்டது.

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு என்பது மத ரீதியானது. எனவே, எதிர்க்கிறோம் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

உள் ஒதுக்கீட்டால் சிறுபான்மையினர் மட்டும்தானா பயன் அனுபவிக்கப் போகிறார்கள்? மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பலன் அனுபவிப்பார்களே! அப்படியென்றால், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்-கும் இட ஒதுக்கீடு கூடாது என்பதுதானே பாரதீய ஜனதாவின் நிலைப்பாடு? இதன்மூலம் பாரதீய ஜனதாவின் உயர்ஜாதி சிந்தனைப் போக்கு வெளியில் வந்துவிட்டதே!

பாரதீய ஜனதாவில் சுஷ்மா சுவராஜ்களுக்கு இடம் உண்டே தவிர, உமாபாரதிகளுக்கு இடம் கிடையாதே!

இப்பொழுது நாடாளுமன்றத்தில் 59 பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால், இதில் 45 பெண்கள் உயர்ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம்! இந்த அறிகுறியை அடையாளம் காண-வேண்டாமா?

1990 இல் மண்டல் குழுப் பரிந்துரையின் ஒரு பகுதியான_ வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கணக்குத் திறக்கப்பட்டது. கல்வியில், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அதன் விளைவு என்ன? 20 ஆண்டுகளுக்குப் பிறகும்-கூட இன்னும் நடைமுறைக்கு வர முடியாத ஒரு தேக்க நிலைதானே!

அனுபவம் தந்த இந்தப் பாடத்தை தயவு செய்து அனைத்துத் தரப்பினரும் கவனத்தில் கொள்வார்களாக!

-------- விடுதலை தலையங்கம் (22.03.2010)

Sunday, March 21, 2010

எங்கே பிராமணன் என்று எபிசொட் போட்டு தேடி அலைபவர்களுக்கு மனுநீதி ஒரு மறுபார்வை நூல் கண்டுபிடித்து கொடுக்கும்

மனுநீதி ஒரு மறுபார்வை எனும் தலைப்பிலான நூல் மிகச் சிறப்பாக ஆய்வு செய்து எழுதிப் படைக்கப்பட்ட நூல். மனு-தருமம் என்றே பலரும் கூறும் இந்நூல் யாருக்கான தருமங்களைக் கூறுகிறது என்பதை விளக்கிக் கூறுகிறது இந்நூல். ஒரு குலத்துக்கான தருமம் என்பதனை விரி-வாக-வும் அக்குலம் பார்ப்பன குலம் என்பதையும் தெளிந்த நீரோடை போன்ற தமிழ் நடையில் வடித்துத் தந்திருக்கிறார் பேராசிரியர் ப.காளிமுத்து.

மனுதருமம் என்பது பெரும்பான்மை மக்களுக்கு மனு அதருமம் என்றே காட்சி தரும் நிலையை இந்நூலைப் படிக்கும் எவரும் தெற்றெனத் தெளியலாம். உலகின் மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கும் மகளிர்க்கான மனுதருமம் எத்தகைய கேடானது, - தீதானது, - மகளிரைக் கீழாக நினைக்க வைப்பது என்பதை மிகவும் ஆவேசத்தோடு ஆசிரியர் விளக்கியிருக்-கிறார். இந்தியச் சமூகத்திற்கு சட்டநூல் தந்த முதல்வர் (திவீக்ஷீ லிணீஷ் நிவீஸ்மீக்ஷீ) என்று பீற்றப்படும் மனு, வருணப் பாகுபாட்டின் அடிப்படையில் எந்த அளவுக்குக் கேடு பயக்கும் சட்டங்-களைக் கூறியிருக்கிறார் என்பதை அந்நூல் பகுதிகளில் எடுத்துக் காட்டி விவரித்திருக்-கிறார். ஆனாலும் கூட, இந்த மனு நூலின் அடிப்படையிலும் ஏனைய முனிவர்களின் பிதற்றல்களின் அடிப்படையிலும் இந்தியர்-களில் பெரும்பான்மையினரான இந்துக்-களுக்-கான குடிமைச் சட்டம் (சிவில் சட்டம்) தொகுக்கப்பட்டுள்ளது என்பது அவலம் மட்டுமல்ல, கேவலமும் கூட!
அப்பேர்ப்பட்ட மனுநூலை ஒருவர் எழுதவில்லை; பலரும் பலகாலத்தில் எழுதி இருக்கிறார்கள் என்பதை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிறுவியதை இந்நூல் குறிப்பிடுகிறது. ரிக் வேதமும், கீதையும் 4 மனுக்கள் என்றும் மனுநூலே 7 மனுக்கள் என்றும் குறிப்பதையும் இந்நூல் சுட்டுகிறது. காலவளர்ச்சியில், பலபேர் தொகுத்து வைத்த மனித விரோதக் கருத்துகளே மனுநீதி என்பதை விதவை மறுமணம்பற்றி இருவேறு கருத்துகளைக் கூறுவதில் இருந்தே அறியலாம். முற்பகுதியில் மறுமணம் கூடாது எனும் மனு பிற்பகுதியில் குழந்தை பாக்கியத்திற்காகச் செய்து கொள்ளலாம் என அனுமதிக்கிறது. ஒருவரல்ல, பலர் எழுதியதன் தொகுப்பே மனுதருமம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனாலும் கூட, உயர்நீதிமன்றங்களில் கூட மனுவுக்குச் சிலை வைத்திருக்கிறார்கள். காட்டாக, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சிலை வைக்கக் கூடாது என உயர்நீதி-மன்-றமே தடுத்தது. ஆனால், சில ஆண்டுகளில் மாநில ஆட்சியாளராக வந்துவிட்ட பாரதீய ஜனதா கட்சியினர் சிலை வைத்துட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவு சிலகாலம் மட்டுமே செல்லுமோ?
சென்னை உயர்நீதிமன்றத்தல் நிரம்ப சமத்காரமாக மனுநீதிச் சோழன் சிலை வைக்-கப்பட்டுள்ளது. அப்படி ஒரு சோழ அரசன் இருந்ததே கிடையாது என்பதை இந்நூலில் ஆணித்தரமாக நிறுவியுள்ளார் பேராசிரியர் காளிமுத்து. களப்பிரர் காலம்_ இருண்ட காலம் எனும் கருத்துகூட, மனுநீதிச் சோழன் திருவாரூரை ஆண்ட சரித்திரம் போலப் பொய்தான் என்பதை மயிலை சீனி.-வேங்கடசாமி போன்ற ஆய்வறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். களப்பிரர் காலத்தில் அல்லலுற்றது தமிழ்நாடு அல்ல, தமிழ்நாட்டில் இருந்த பார்ப்பனர்களே என்பது நிறுவப்பட்டுள்ள நிலையில் இதுபற்றி முந்திய கருத்தினை நூலாசிரியர் எடுத்-தாண்டிருப்பது நெருடலாக உள்ளது.
பார்ப்பனரும், அல்லாதாரும் சேர்ந்து உணவு அருந்துவது சாத்திர விரோதம் என்று வ.வே.சு. அய்யர் கூறி, சேரன்மா-தேவி குருகுலத்தில் காட்டிய பாகுபாடு காந்தியாரால்கூட ஒப்புக் கொள்ளப்பட்டு பெரும் விளைவைத் தமிழ்நாட்டில் 1925 ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது என்பது திராவிடர் இயக்கத்தின் தொடக்க கால வரலாறு. இந்தச் சாத்திரம் எந்தச் சாத்திரம் என்பதை நூலாசிரியர் எடுத்துக் காட்டி இருக்-கிறார். (பக்கம் 53). இதன் தொடர்பாக இவ்-வர-லாற்றுக் குறிப்பை உணர்த்தியிருந்தால் இன்றைய இளைய தலைமுறையும் எதிர்-வரும் தலை முறையும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.


உடலிலும் பிறப்புறுப்பிலும் நெய் பூசிக் கொண்டு, ஒருவனின் மனைவி தன் கணவன் அல்லாத வேறு ஆடவனுடன் (ஏழு தலைமுறை தாண்டியும் போகலாம்) உடல் உறவு கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்ளும் நியோகம் எனும் முறையை மனுநூல் விதித்திருப்பதை எடுத்துக் காட்டி-யுள்ளார். இந்த முறையில் பிறந்தவர்கள் நியோகி (பார்ப்பனர்கள்) என்று அழைக்-கப்படுகின்றனர். அந்தப் பார்ப்பனப் பிரிவினர் ஆந்திர மாநிலத்தில் அதிகம். அவர்களில் ஒருவரான காலஞ்சென்ற பி.வி.நரசிம்மராவ் இந்தியாவின் தலைமை அமைச்சராகவே பதவி வகித்தார். இந்த வகை நியோக சம்போகம் கைம்பெண்-களுக்கும் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதி வழங்கும் நிலையில் யார் யார் சாட்-சியம் அளிக்கத் தகுதியானவர் என்பதைக் கூட மனுநூல் குறிக்கிறது; ஆனால் மக-ளிரின் சாட்சியத்தை ஏற்கக்கூடாது என மனுநூல் தடை செய்வதையும்கூடக் குறிப்-பிட்டிருக்கிறார். நீதிபதிகளுக்கும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன_- ஜாதி அடிப்படையில்தான்! வழக்குகளை விசா-ரிக்-கும் வரிசை முறை பற்றி கூட, விஸ்தார-மாகக் கூறுகிறது மனுநூல்! இதிலும் ஜாதி-தான் அடிப்படை. முதலில் பார்ப்பனர் சம்பந்தப்பட்ட வழக்குகள், பிறகு க்ஷத்திரியர், பிறகு வைசியர், கடைசியில் சூத்திரர் சம்-பந்தப்பட்ட வழக்குகள் என்று மனுதருமம் முழுக்க சர்வம் வருண மயம் ஜகத்_தான்!
மகளிரைப் பழிக்கும் மனுதருமம் என ஓர் இயலையே ஆக்கி அளித்திருக்கிறார். மனுநூல் கொடுமைகளையும் தமிழ்நூல் தகைமைகளையும் ஒப்பிட்டுக் காட்டியி-ருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. நல்ல நெசவுக்கூறையில் தங்க இழை ஊடுருவது போன்று புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளை எடுத்து ஆண்டிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
பெண்ணையும் தந்து பொன்னையும் கொட்டிக் கொடுக்கும் வரன் தட்சணை முறை, எல்லாவற்றிலும் தட்சணை பார்க்கும் பார்ப்பனரின் பழக்கம் என்பதையும், பொன்னோ பொருளோ பரிசமாகக் கொடுத்து (முலை விலை) பெண்ணைக் கொள்வது தமிழரின் பழக்கம் என்பதையும் எடுத்துக் காட்டி எழுதியிருக்கிறார். இந்த இடத்தில் நாட்டில் உள்ள பெண்ணியவாதிகள் என்போரின் செயல்முறைகள்பற்றி நயமாக இடித்துரைப்பது, சரியான பெரியாரிஸ்ட் என்பதற்குச் சான்றாக உள்ளது.
புதையல் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மனுதருமம் கூறுவதை-யும், கரிகால் பெருவளத்தான் காலத்தில் புதையல் பற்றி நடந்த வழக்கையும் ஒப்-பிட்டுக் காட்டி தமிழரின் செம்மாந்த பழக்க வழக்கங்களைப் பெருமைபடப் பேசுகிறார்.
தமிழரின் பண்பையொட்டியவாறுதான் ஆங்கிலேயர் அமைத்த Treasure Trove Act இருக்-கிறது. பல கொலைகாரர்கள், பழங்-காலத்தில் தண்டிக்கப்பட்டதே கிடையாது_ -அவர்கள் பார்ப்பனர்கள் என்ற காரணத்-தினால் என்று கோபப்படுகிறார் - நியாயமாக! மனு தருமத்திற்கு எதிராக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனச் சட்டம் கொண்டு வந்த காரணத்தால்தான் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் மெக்காலேவைக் கண்டிக்கிறார்கள்.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் கொலை செய்த பார்ப்பானுக்குத் தூக்குத் தண்டனை உறுதி என்பதை அறிந்துகொண்ட திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யர், தீர்ப்பு நாளுக்கு முந்திய இரவு 12 மணிமுதலே நடை முறைக்கு வரும் வகையில் தூக்குத் தண்ட-னையை ரத்து செய்து சட்டம் போட்டார் என்பதை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார். (படிக்க. சங்கராச்சாரி-_யார்?)
நூலின் அருமை, பெருமைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம் என்கிற அளவுக்கு ஏராளமான மனுதருமக் கொடுமைகள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்-ளன இந்நூலில். இளைஞர்கள் படித்து எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் ஆற்றொழுக்கு நடையில் சிறப்பாக எழுதப்பட்டுள்ள நூல். எங்கே பிராமணன் என்று தேடுகிறார்கள். ஹிந்து மகா சமுத்திரம் என்று காட்டுகிறார்கள். வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்று கேட்கிறார்கள். அனைத்துக்கும் ஆணி அடித்தாற் போன்ற விடைகளைத் தரும் நூல் - ஆரியக் கொட்டத்தை அம்பலப்படுத்தும் நூல் மனுதருமம் ஒரு மறுபார்வை! எல்லோரும் வாங்கிப் படித்துத் தெளிவு பெறவேண்டும்.
- சு.அறிவுக்கரசு (விடுதலை 21.03.2010)

Saturday, March 20, 2010

மகாபாரதம் யோக்கியதை...சொன்னால் மானம் போகிறதாம்!

2009ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அளிக்-கும் விழா 16.10.2010 மாலை டில்லி சாகித்ய அகாடமியின்


காமினி அரங்கத்தில் நடை-பெற்றது. தெலுங்கு மொழியில் யர்லகட்ட லட்சுமி பிரசாத் என்ப-வருக்கு விருது அளிக்கப்பட்டது.

திரவுபதி என்னும் தெலுங்கு நூலை எழுதியதற்காக அந்த விருது வழங்கப்பட்டது.

அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களைச் சேர்ந்த பத்து பேர்கள் திடீரென்று மேடைக்கு ஓடிச் சென்று, விருது பெற்ற-வருக்கு எதிராகக் குரல் எழுப்பி, அவர் கையில் இருந்த விழா மலரையும் பறித்து வீசி எறிந்தனர். எதிர்பாரா விதமாக நடைபெற்ற இந்த அநாகரிக அவலத்தைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வளவுக்கும் விருது பெற்-றவர் சாதாரணமானவர் அல்லர். ஆந்திர மாநில இந்தி அகாடமி-யின் தலைவர், ஆந்திரப் பல்-கலைக் கழகம் விசாகப்பட்டினத்-தில் இந்தித் துறையின் தலைவ-ராகவும் இருந்தவர். மகாபார-தத்தை அடிப்படையாகக் கொண்டு திரவுபதைபற்றி எழுதிய அவரின் நூலுக்குத்தான் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

திரவுபதையை இழிவுபடுத்தி அந்த நூலில் எழுதப்பட்டதாகக் குற்றச்சாற்று.

அறிவுத்துறை வேலை செய்-திருந்தால் அந்த நூலுக்கு மறுப்பு எழுதி இருந்தாலும் கண்ணியம் கடுகு அளவுக்கும் அவர்களிடம் இருந்திருந்தால் வேறு வகைகளில் எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம்.

இரண்டும் இல்லாதவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதால் அவர்களுக்கே .உரித்தான தனித்-தன்மையான காலாடித்தனத்தில் இறங்கி இருக்கின்றனர்.

இந்தத் தகவலை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நேரில் சென்ற தோழர் அருள்பேரொளி (சென்னை -_ வேளச்சேரி) என்பவர் நமக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்து மதத்தின் இதி-காசங்கள் என்று கூறப்படும் இராமாயணம் மகாபாரதம் மற்றும் கீதையை அக்குவேர் ஆணி வேராக அலசி எடுத்து வந்திருக்-கிறோம் _ வருகிறோம் _ அவற்றை பல நேரங்-களில் எரியூட்டவும் செய்திருக்கிறோம்.

இராவண லீலாவே நடத்தி இராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களை பல லட்சம் மக்கள் முன் எரித்தும் காட்டியுள்-ளோம்! ஆனால் வேறு மாநிலத்தில் வேறு வகை-யாக நடக்கிறது என்றால் அதன் காரணம் என்ன?

அங்கு ஒரு பெரியார் இல்லை; அங்கு ஒரு மணியம்மையார் இல்லை; அங்கு ஒரு வீரமணி இல்லை; அங்கு ஒரு திராவிடர் கழகம் இல்லை; அங்கு கருஞ்சட்டைத் தொண்-டர்கள் இல்லை என்றுதான் பொருள்.

யார் இந்த திரவுபதி?

5 கணவன்கள் போதாது என்று கருதி ஆறா-வது ஆசாமியாகிய கர்ணன் மீதும் காமம் கொண்டவள் தானே? இல்லை என்று மறுக்க முடியுமா? அதற்கு அந்தத் திரவுபதி கூறும் காரணம் என்னவாம்?

தருமன் -_ சதா வேதாந்தம் படிப்-பவன்; பீமன் -_ உடல் பெரியவன், குண்டன், சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன்; அர்ச்சுனன் _ ஏகப்பட்ட மனைவி-களுக்குச் சொந்தக்காரன், ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்-சுனன் மனை-வியை எண்ண முடியாதாம்! நான்-காவது கண-வனான நகுலனும், 5ஆவது கணவ-னான சகாதேவனும் எனது பிள்-ளைகள் போன்றவர்கள். அதனால்-தான் கர்ணன் மீது காமம் கொண்-டதாக ஒருத்தி சொல்கிறாள் என்றால், அந்தப் பெண்ணின் யோக்கியதையை தெரிந்து கொள்ள வேண்டாமா?

அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்று இந்துமதம் இத்தகைய பெண்ணைப் போற்று-கிறது; கடவுளாகத் தொழுகிறது என்றால் இந்த மதத்தின் யோக்-கியதை எத்தகையது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாமே!

இந்து மதத்தில் அழியாத பத்தினியாக ஒருத்தி இருக்கவேண்டு-மானால் ஒரே நேரத்தில் பல கணவன்மார்கள் இருக்க வேண்டும் என்று தானே பொருள்? உண்மையைச் சொன்னால் உடல் எரிவானேன்? அறிவார்ந்த ஓர் அவையின் மேடையில் ஏறிக் காலித்தனத்தில் இறங்குவானேன்?

மகாபாரதத்தில் விபச்சாரத்தில் பிறக்காத ஒரே ஒரு ஆள் உண்டா? பந்தயம் கட்டிக் கேட்கிறேன் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கேட்டாரே, எந்த பாரதப் பிரசங்கி இதுவரை பதில் சொல்லி-யிருக்கிறார்? மகாபாரதத்தின் யோக்கியதைக்கு வேறு எங்கும் தேடிப் போக வேண்-டாம்.

தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது நேயர் ஒருவர் இந்து ஏட்டில் (18.12.1988) எழுதிய கடிதம் ஒன்று போதுமே! கடிதம் எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம். கடிதம் இதோ: தர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயுபுத்ரா (பீமா) ஆசியோடு குந்திக்கு, தருமர் ஆகியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள். அந்த பிறப்புபற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்றுதான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?

நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால், அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா? அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் புருஷலட்சணம் என்று அவர்களிடம் கூற முடியுமா? நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டு-களுக்குமுன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியதாகும். எனவே நள்ளிரவு சினிமாக்களை ஒளி-பரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது _ இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

இந்த யோக்கியதையில் உள்ளது-தான் மகாபாரதம். இதைச் சொன்னால் மானம் போகிறதாம்! அப்படியென்றால் இவர்களின் மான உணர்வின் யோக்-கியதைதான் என்ன?

---------------- நன்றி விடுதலை மின்சாரம் எழுதியது  (20.03.2010)

Friday, March 19, 2010

எது தமிழ் புத்தாண்டு? சிந்தியுங்கள்!

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.


மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.


தமிழர் கண்ட கால அளவீடு

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.

ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும்.

பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.

இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை
2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை
3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு
4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு
5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.


'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.

சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.

அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.

--------------- நன்றி: தமிழ்த்தோட்டம்

Thursday, March 18, 2010

தீர்மானம்! பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்குத் துறவிகள், சாமியார்கள் தரிசனம் கொடுக்கக்கூடது

இனி பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்குத் துறவிகள், சாமியார்கள் தரிசனம் கொடுக்கக்கூடது என்று துறவிகளின் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.


இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி-யுள்ள-தன் மூலம் துறவிகள், சாமியார்கள் என்றாலே காம வெறியர்கள், பெண்களைப் போகப் பொருளாகக் கருதும் மிருகங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் என்றுதானே பொருள்?

சாமியார்கள், - துறவிகளின் யோக்கியதை இவ்-வளவு கீழ்த்தரமானது என்று தெரிந்து கொண்டதற்குப் பிறகு ஆண் துணையுடன்தான் பெண்கள் எதற்காக அவர்களிடம் செல்ல-வேண்டும்? அதுதானே ஒழுக்கத்தை முன்-னிறுத்தும் சிந்தனையாகவும் இருக்க முடியும்?

கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர்_ எல்லா-வற்றையும் அவர் கவனித்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை பக்தர்களுக்கு இருக்குமேயானால், எதற்காக காவி உடையில் பதுங்கி இருக்கும் இந்த வேட்டை மிருகங்களை நாடிச் சென்றிட வேண்டும்?

கடவுள், மதம், பக்தி என்றாலே குழப்பம்_- குழப்பத்துக்குமேல் படுகுழப்பம்தான்_ முரண்பாடுகளின் மொத்தமாகத் திரண்ட சாக்கடைதான்!

கடவுள் இல்லை என்று சொல்லும் நம்மைத்-தான் நாத்திகர்கள் என்று சொல்கிறார்களே தவிர, ஒரு மதக்காரர் இன்னொரு மதக்காரருடைய கடவுளை ஏற்பதில்லையே, நம்புவதில்லையே_ அதற்கு என்ன பெயராம்? அது மட்டும் ஒரு மதக்காரர் இன்னொரு மதக்காரரின் பார்வையில் நாத்திகர் இல்லையோ!

நாம் நல்லது செய்தால் கடவுள் நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்குமானால், கோயிலுக்கு எதற்காகச் செல்லவேண்டும்? பூஜைகள் ஏன் செய்யவேண்டும்? காணிக்கைகள் ஏன் கொடுக்க வேண்டும்? விரதங்கள் ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும்?

கோயில் என்பதும், வழிபாடு என்பதும் வியா-பார ரீதியாக உருவாக்கப்பட்டதன் விளைவுதான் இவ்வளவு பித்தலாட்டங்களுக்கும், சுரண்ட-லுக்கும் இடம் கொடுத்துவிட்டன என்பதை மரியாதையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் சங்கராச்சாரியார்களும், வாரியார் போன்றவர்களும், பக்தி என்பது பிசினஸ் ஆகிவிட்டது என்று கூறியிருந்தாலும், அதனை விளம்பரமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில்லை. காரணம், கோயில் அமைப்பு முறை என்பதே அடிபட்டுப் போனால் சங்கராச்சாரியார்களின் ஜாதியைச் சேர்ந்தவர்-களுக்கான உயர்ஜாதி அந்தஸ்தும், பிழைப்பும் நாறிப்போய்விடுமே.

சரி, சாமியார்கள், துறவிகள் தனியாகச் சென்று பெண்களை ஆசீர்வதிக்கக்கூடாது; அவர்களும் தனியாக வரும் பெண்களுக்கு தரிசனம் கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் செய்து விட்டார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும்.

கோயிலுக்குச் செல்லும் பக்தைகளைப் பற்றி ஏன் தீர்மானம் போடவில்லை?
சங்கர மடத்திற்குச் செல்லும் பக்தைகள்பற்றி ஏன் தீர்மானிக்கவில்லை?

காஞ்சிபுரம் மச்சேந்திரநாதர் கோயில் குருக்கள் பார்ப்பனர் தேவநாதன், கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த பெண்களை கர்ப்பக்கிருகத்துக்-குள்ளேயே உறவு கொண்டான். - அர்ச்சகர் தொழிலைவிட இந்தத் தொழிலில்தான் அதிகக் கவனமாக இருந்தான் என்று தெரிந்துவிட்ட பிறகு, - இது குறித்து விளக்கமான - அழுத்தமான தீர்மானத்தை கோயில் அர்ச்சகர்கள்_ குருக்கள் கூடி தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டாமா?

தனியாகப் பெண்கள் கோயிலுக்குப் போகக் கூடாது, கூட்டமாகப் போகவேண்டும்; அல்லது ஆண்கள் துணையோடு போகவேண்டும்; கோயில் அர்ச்சகர்களும் தனியாக வரும் பெண்களுக்காக அர்ச்சனை செய்யக்கூடாது என்று கறாராக ஓர் ஏற்பாட்டைச் செய்திட வேண்டாமா? இந்து அறநிலையத்துறையாவது பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டினைச் செய்து தரவேண்டாமா?

எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை மற, மனிதனை நினை, சுயமரியாதை வாழ்வே சுக-வாழ்வு என்ற முடிவிற்குப் பக்தர்கள் வருவார்க-ளேயானால் அறிவுக்கு அறிவும் மிச்சம்; ஒழுக்-கத்திற்கு ஒழுக்கமும் மிச்சம்; - பணத்துக்குப் பணமும் மிச்சம்_ சிந்திப்பார்களா?

--------- நன்றி விடுதலை தலையங்கம் (18.03.2010)

அன்னை மணியம்மையார் வரலாற்று நூல் வெளியீடு

 நேற்று இரவு திடலுக்கு சென்று இருந்தேன். மிகவும் சிறப்பான ஒரு நூல் வெளியீடு விழா. வெகு நாள்களாக நான் நினைத்துக்கொண்டே இருந்த ஒரு நூல் வெளிவந்த மகிழ்ச்சி ஒருபக்கம். மற்றொரு புறம் அம்மையாரின் நினைவு நாள் சோகம். எது எப்படி ஆயினும் நம் கையில் அன்னை மணியம்மையாரை பற்றிய நூலை கொண்டு வந்து சேர்த்து விட்டார் ஆசிரியர் அவர்கள். இது அம்மையாரை பற்றி வேண்டாத வதந்திகளை எழுப்புவோருக்கு நல்ல சாட்டை அடி கொடுக்க மிக மிக பயனுள்ள எல்லா விபரங்களுயும் உள்ளடக்கிய நூல். இந்த நிகழ்ச்சி பற்றி மின்சாரம் அவர்களின் தொகுப்பு இதோ...........

நேற்று (16.3.2010) சென்னை_ பெரியார் திடலில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி _ பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்டது.
அன்னையார் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல் வெளிவந்ததுதான் அந்தச் சுடர்விடும் மகுடமாகும்.
சுயமரியாதை இயக்கம்பற்றி முதன்முதலாக ஆய்வு செய்து எம்.லிட்., பட்டமும், தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சியின் உள்கட்சிப் பூசல்பற்றி ஆய்வு செய்து பிஎச்.டி., பட்டமும் பெற்ற பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் எழுதிய தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் எனும் தலைப்பில் 512 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலின் வெளியீட்டு விழா என்பது ஆக்கப்பூர்வமானது.
கடைசிவரை கறுப்பு மெழுகுவத்தியாகவே இருந்து மறைந்த அந்தத் தாய்க்குள் தமிழர்தம் வாழ்க்கை மூச்சான தந்தை பெரியார் அவர்களை நூறாண்டு வாழ வைக்கவேண்டும் என்ற வெறியும், தொண்டு செய்து பழுத்த அந்தப் பழத்துக்குத் தொண்டு செய்ய-வேண்டும் என்ற வைராக்கியமும், எந்த நிலையிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளக்கூடாது என்ற திட்பமும், எளிமை என்றால் என்ன என்பதற்கான விளக்கமும் புதைந்து கிடக்கக் கூடியன!
இந்த நூலில் அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததன்மூலம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உதாரண குணங்களும், புதிய தலை-முறையினர் கடைப்பிடிக்கவேண்டிய கோட்பாடு-களும், பொதுத் தொண்டாற்ற ஆசைப்படுவோர் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுகலாறுகளும் பட்டி-யலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

ஓர் இயக்கத்துக்காகச் செய்யப்பட்ட ஆக்கப் பணி என்பதைவிட, சமுதாய மேம்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு கருவூலம் என்று இந்த நூலைச் சொல்லலாம்.
விழாவில் நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிகச் சரியாகச் சொன்னதுபோல இந்த நூலை உருவாக்கித் தந்ததன்மூலம் முனைவர் மங்கள முருகேசன் அவர்கள் எங்கள் இயக்கச் சுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது உண்மையே!
சுயமரியாதை இயக்கம்பற்றி ஆய்வு செய்து, அதன்பின் வகுப்புரிமை முன்னோடி எஸ். முத்தையா முதலியார் அவர்களின் வரலாற்று நூலை எழுதி, அதன் தொடர்ச்சியாக இந்த நூலையும் அவர் எழுதி-யதன்மூலமாக திராவிட இயக்க வரலாறு என்பதில் மிக முக்கியமான பணிகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் மிகப் பொருத்தமாகவே கணித்துக் கூறினார்.
இந்த வரலாற்றுப் பணிக்காக முனைவர் மங்கள முருகேசன் அவர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும் என்று தமிழர் தலைவர் சொன்னதை தமிழ்நாடே வழிமொழியும்!
பேராசிரியர் முனைவர் மு. தவமணி
திராவிடர் கழக மகளிரணி ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியின் வரவேற்புரையை சென்னை எத்திராஜ் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் மு. தவமணி வழங்கினார்.
தந்தை பெரியார் அவர்களின் ஆயுள் நீட்சிக்கு அம்மையார் காரணமாக இருந்ததோடு அல்லாமல், அய்யா அவர்களின் மறைவிற்குப் பிறகு கழகத்தையும் கட்டிக் காத்த அந்தப் பாங்கைப் பாராட்டிப் பேசினார்.
முனைவர் கு.ம. இராமாத்தாள்

விழாவுக்குத் தலைமை வகித்தவர் மேனாள் மகளிர் ஆணையத் தலைவர் பேராசிரியை முனைவர் கு.ம. இராமாத்தாள் ஆவார்கள்.

திராவிட இயக்கக் கொள்கையில், தன்மான இயக்கச் சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த அம்மையார் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. அவ-ருடைய மகனுக்குப் பெயர் இராவணன் என்பதாம்.

நூலிலிருந்து அன்னை மணியம்மையார் பாரதி-பற்றி கூறிய கருத்தினை எடுத்துக்காட்டி, பாரதி-தாசனை மறைத்துவிட்டு, பாரதியாரை பெண்-ணுரிமைக் கவிஞர் என்று கூறுவோர்க்குச் சாட்டையடி கொடுத்தார்!

ஒன்றே கடவுள் என்று கூறிக்கொண்டு, சர்வசக்தி வாய்ந்தவன் அவன் என்றும் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள கடவுள்களுக்கெல்லாம் சக்தியில்லை என்று கருதி திருப்பதிக்கும், சபரி-மலைக்-கும் செல்லும் தமிழினப் பக்தர்களை உண்டு இல்லை என்று கூறி வெளுத்து வாங்கினார்.

சட்ட எரிப்புப் போராட்டத்தில் திருச்சி சிறையில் மாண்ட கருஞ்சட்டைத் தோழர்கள் மணல்மேடு வெள்-ளைச்சாமி, பட்டுக்கோட்டை இராமசாமி ஆகியோரின் உடல்களைக் கொடுக்க மறுத்த சிறையதிகாரிகளுடன் போராடி, உடலை மீட்டு திருச்சியில் மாபெரும் இறுதி ஊர்வலத்தை நடத்திக்காட்டிய வீராங்கனை அன்னை மணியம்மையார் அவர்களுக்கு நிகர் யார் என்ற அவர்-களின் கேள்வி பார்வையாளர்களை உணர்வுபெறச் செய்தது.

நூலாசிரியர், பேராசிரியர் முனைவர் மங்கள முருகேசன்

மிகப்பெரிய செல்வத்துக்குச் சொந்தக்காரராக, பெரி-யாரின் துணைவியார் என்ற அந்தஸ்துக்கு உரியவராக இருந்த அம்மையார் எளிமையின் இலக்கணமாக கடைசி-வரை வாழ்ந்து காட்டிய பண்பாட்டுக்கு இணை-யாக இன்னொருவரைக் கூற முடியாது. 95 ஆண்டு காலம் பெரியாரை வாழ வைப்பதற்காக தம்மைப்பற்றி நினைக்காமல் 58 ஆண்டுகளுக்குள்ளேயே தம் வாழ்வை முடித்துக்கொண்ட தியாக தீபம் என்று கூறி பல எடுத்துக்காட்டுகளை நூலாசிரியர் விளக்கினார்.

கவிஞர் கனிமொழி எம்.பி.,

மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி நூலினை வெளியிட்டு அரியதோர் ஆய்வுரையை வழங்கினார்.

பெரியார் திடலுக்குள் நுழைவது _ தாயின் கர்ப்பத்துக்குள் மீண்டும் செல்லும் உணர்வினைப் பெறு-கிறேன் என்று எடுத்த எடுப்பிலேயே அவர் கூறிய-போது நெகிழ்ந்துபோய் அனைவரும் கரவொலி எழுப்பினர்.

கவிஞர் கனிமொழி அவர்களுக்கு அன்னை மணியம்மையார், ராஜாத்தி அம்மாள், சிறுமி கனிமொழி ஆகியோர் உள்ள நிழற்படத்தினை நினைவுப் பரிசாக அளித்தார் தமிழர் தலைவர். அதனையொட்டி கவிஞர் கனிமொழி மிக உருக்கமுடன் இன்றைக்கு 35 ஆண்டு-களுக்குமுன் நடந்த அந்த நிகழ்வை நெக்குருகக் கூறினார்.

நெருக்கடி நிலை என்ற ஓர் இருண்ட காலம். திரா-விடர் கழகம் மற்றும் தி.மு.க. முன்னணித் தலைவர்-களும், தொண்டர்களும் சிறையில் தள்ளப்பட்ட கால-கட்டம் அது.

வருமான வரித் துறையினர் கலைஞர் அவர்களின் வீட்டுக்குள் திபுதிபு என்று நுழைவார்கள். ஒவ்வொரு இடத்தையும் துருவித் துருவிப் பார்ப்பார்கள். பூந்தொட்டிகளைக்கூட ஆராய்வார்கள்.

கனிமொழியின் தாயாரை வருமான வரி அலு-வலகத்-துக்கும், வீட்டுக்குமாக அலைய விடுவார்கள். குடைந்து குடைந்து கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ஒரு நாள் ஓர் அம்மையார் கனி-மொழியின் வீட்டு வாயில்முன் வந்து நின்றார். அது-பற்றி கனிமொழி கூறினார். நான் விளை-யாடிக் கொண்டிருந்தேன். வீட்டில் யாரும் இல்லையா என்று அவர் கேட்டார். வீட்டில் அம்மா இருக்கிறார்கள் என்று சொன்னேன். உள்ளே சென்றார்கள். என் தாயாரைச் சந்தித்தார்கள். நடந்த சம்பவங்களையெல்லாம் தான் அறிந்து வேதனைப்பட்டதாகவும் கூறி தைரியத்தைக் கொடுத்தார்கள். ஆதரவாகப் பேசினார்கள். அந்த நேரத்தில் என் அன்னையாருக்கு அது பெரும் ஆறுதலாக, புண்ணுக்கு மருந்தாக இருந்தது. அந்த அம்மையார் யார் என்றால், அவர்கள்தான் அன்னை மணியம்மையார் என்று கவிஞர் கனிமொழி கூறிய-போது பார்வையாளர்கள் கண்களில் உணர்ச்சித் திவலைகள் ததும்பி வழிந்தன.

இந்த நிகழ்ச்சிக்கு நான் செல்லுவதாக என் தாயார் ராஜாத்தி அம்மாவிடம் சொன்னபோது, இந்த நிகழ்ச்சியை எனக்கு நினைவூட்டினார்கள். அப்பொழுது என் தாயாரின் கண்கள் கலங்கின என்றார் கவிஞர்.

புரட்சித்தாய் அன்னை மணியம்மையார் அவர்-களின் நினைவு நாள் அல்லவா? பெண்களின் யதார்த்தமான நிலையைப்பற்றி கவிஞர் கனிமொழி ஆழமான கருத்துகளை எடுத்து வைத்தார்.

இன்றைய சமூக அமைப்பில் பெண்கள் என்னதான் படித்திருந்தாலும், பதவிகளைப் பெற்றிருந்தாலும், பொருளாதார வசதிகளைப் பெற்றிருந்தாலும் குடும்ப உறவு என்ற கட்டினைத் தாண்டி வெளியே செல்ல முடியாது என்பதுதான் நிதர்சனம்.

எதை வேண்டுமானாலும் உடைக்கலாம்; ஆனால், குடும்பக் கட்டு என்பதை மட்டும் உடைக்க முடியாத நிலைதான் இன்றுவரை.

சமுதாயம் எப்படி இருக்கிறது?

ஒரு பெண்ணானவர் ஒரு சாமியாரைச் சந்திக்கப் போகலாம்; சாமியாரின் கை, கால்களை அமுக்கி-விட-லாம்; அதற்கு நம் குடும்பங்கள் தாராளமாக அனு-மதியளிக்கும்.

ஒரு பெண்ணானவர் ஒரு மனநல மருத்துவரை சந்திக்கவேண்டும் என்று விரும்பினால், அதற்கான அனுமதி சுலபமாகக் கிடைத்துவிடாது.

கலாச்சாரத்தின் காவலர்கள் என்று பெண்களைக் கூறு-வார்கள். ஆனால், அந்தக் கலாச்சாரத்தில் விற்பனைப் பண்டம் யார் என்றால், நம் நாட்டுப் பெண்கள்தான்.

கடவுள், மதம், பக்தி, சாமியார் என்று எடுத்துக் கொண்டாலும், இவற்றில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

இத்தகு சமுதாயத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணான அன்னை மணியம்மையார் அவர்கள், ஒரு சமூகப் புரட்சி இயக்கத்துக்குத் தலைமை தாங்கியது என்பது சாதாரணமானதல்ல.

சமுதாயத்தின் பல வகை தடைகளை உடைத்து பெண்களுக்கான உரிமைகள் பற்றிப் பேசவும், போராடவுமான ஒரு நிலையை உண்டாக்கியது திராவிட இயக்கமே என்றார் கவிஞர் கனிமொழி.

தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. அவர் உரையையும் நான் கேட்டதில்லை. ஆனால், பெரியார் அவர்களின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் நான் வரித்துக் கொள்வதற்குக் காரணமாக, ஊக்கச் சக்தியாக இருந்தது ஆசிரியர் அய்யா அவர்கள்தான் என்று மிகுந்த நன்றி உணர்ச்சியோடு சொற்களைப் பயன்படுத்தினார் கவிஞர் கனிமொழி.

அவர் உரை அய்யாவின் சித்தாந்த பார்வையில் தோய்ந்த கனமான கருத்து மழையாக இருந்தது என்றே சொல்லவேண்டும்.

தமிழர் தலைவர் கி. வீரமணி

நிறைவுரையை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் வழங்கினார்.

கவிஞர் கனிமொழியின் உரையைப் பாராட்டிய ஆசிரியர் அவர்கள் இன்றைய தலைமுறையினருக்கும், வரும் தலைமுறையினருக்கும் பாலமாக இருக்கக் கூடியவர் என்று அவரைக் குறிப்பிட்டார்.

நெருக்கடி காலத்தைப்பற்றி இங்கு பலரும் பேசி-னார்கள். அது ஓர் இருண்ட காலம். பொது வாழ்க்-கையில் உள்ளவர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்த காலகட்டம் அது.

ஆனாலும், பொதுத் தொண்டாற்றுவோருக்கு அது ஒரு பொற்காலம் என்பது எனது கருத்து. தொண்-டறத்தை மேற்கொள்பவர்கள் இத்தகைய அனுபவப் பாடங்களைக் கற்கத்தான் வேண்டும் என்று புதிய கோணத்தில் கருத்துகளை எடுத்து வைத்தார்.

பாலியல் உரிமைபற்றி பெரிதாகப் பேசப்படும் காலகட்டம் இது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்-களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதுபற்றி சர்ச்சைகள் எழுந்துள்ள காலகட்டம் இது.

பாலியல் நீதி கிடைத்தாலும், சமூகநீதி கிடைக்காத ஒரு அவலநிலைதான் இப்பொழுதும். அரைக் கிணறு இப்பொழுது தாண்டப்பட்டுள்ளது. மீண்டும் கதவு அடைக்கப்படுமோ என்ற அய்யப்பாடும் எழுந்துள்ளது. அப்படி மூடப்பட்டால், அந்தக் கதவுகளை உடைக்கும் கரங்களாக கனிமொழிகள் இருப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

இந்த நாட்டிலே ஆண்களுக்கு அடையாளம் உண்டு; பெண்களுக்கு அடையாளம் உண்டா? . இது எனது ஆடு, எனது மாடு என்று சொல்-வதுபோலத்தான் ஆண்கள் பெண்களைக் கருது-கிறார்கள், சொல்லவும் செய்கிறார்கள்.

ஆண்களால் பெண்களுக்கு உரிமை கிடைக்கவே கிடைக்காது என்றார் தந்தை பெரியார். பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? என்று இயற்கையான சூழலில் வினாவை எழுப்பினார்.

அப்படியென்றால், பெரியாரும் ஆண்தானே? அவர் பெண்களுக்காகப் பாடுபட்டது எப்படி என்று வானொலி நிலையத்தில் உதவி இயக்குநராக இருந்த ஒரு பெண்மணி கேட்டபோது,

பெரியார் ஆண்தான்; ஆனால், அவர் ஒரு சமு-தாய விஞ்ஞானி என்று தாம் பதிலாகச் சொன்னதை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.

கற்பழிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக பாலியல் தாக்குதல் என்ற சொல் பயன்படுத்தப்படவேண்டும் என்று மத்திய உள்துறை முடிவு செய்துள்ளதுபற்றி கூறிய திராவிடர் கழகத் தலைவர் இது தந்தை பெரியார் கருத்துக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார்.

கற்பு என்று சொல்லி அது பெண்ணுக்கு மட்டும்தான் உண்டு என்று கூறி, கற்பின் பெயராலும் பெண்களை ஒடுக்கி வந்தார்கள்.

கற்பைப்பற்றி தந்தை பெரியார் கூறிய ஆழமான கருத்து இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியது பொருத்தமானது.

கற்பு என்பதற்குப் பதிவிரதம் என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டதனாலும் பெண்கள் அடிமையாவதற்கும், புருஷர்கள் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.(நூல்: பெண் ஏன் அடிமையானாள்? -கற்பு- முதல் அத்தியாயம்)

விபச்சார வழக்கு என்று பெண்களைத்தான் குற்றவாளியாக்கும் நிலை இருந்து வந்தது. இப்பொழுது விபச்சாரத்துக்கு ஆண், பெண் இருவரும் பொறுப்பு என்ற வகையில் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

இதனைத் திராவிடர் கழகம் நீண்ட காலமாகவே சொல்லி வந்திருக்கிறது.

9.2.1985 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் எண் 3:
விபச்சாரத் தடைச் சட்டத்தின்கீழ் பெண்கள் மட்டுமே தண்டிக்கப்படும் அநீதி மாற்றப்பட்டு, குற்றமானால் இருசாராரும் தண்டிக்கப்பட வேண்-டியவர்களாக வேண்டும். கற்பு என்பது ஆணுக்குத் தேவையில்லை என்ற தத்துவமே நடைமுறையாக இருக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் தத்துவம், திராவிட இயக்கத்தின் கொள்கைகள் நாளும் வெற்றி பெற்று வருவதை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டினார்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சில கத்துக்குட்டிகள் காது கிழிய கதற ஆரம்பித்துள்ளன. அவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமானவை.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று ஏடுகளைப் புரட்டினால் இந்த உண்மைகள் புரியாமல் போகாது!

அன்னை மணியம்மையார் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தாழமிக்கதாகவும், ஆக்க ரீதியான படைப்பாகவும் அமைந்தது என்பது பெருமிதத்திற்குரியதே!

Wednesday, March 17, 2010

குறுகிய நேரத்தில் குவலயமே காரி உமிழ்ந்தது காவிப்போர்வை மீது!

சாமியார் வேடத்தில் நித்யானந்தா என்பவர் செய்துள்ள ஒழுக்கக்கேடுகள், மோசடியாக சேர்த்த சொத்துக்கள் இவற்றின்மீது சி.பி.அய். விசாரணை நடத்திடவேண்டும் என்று திராவிடர் கழகப் தலைவர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓர் இளைஞன் _ ராஜசேகரன் என்ற பெயருள்ளவர் _ வெறும் டிப்ளமோ படித்தவர் என்று கூறப்படுகிறவர், ஆன்மிக வியாபாரம் _ சாமியார் வேஷம்தான் செழிப்பான வியாபாரம் என்று நன்கு புரிந்து _ (ஏனெனில், திருவண்ணாமலை ரமணாவில் தொடங்கிய ஆசிரமங்களின் வருவாய், எச்சில் சாமியார், சுருட்டுச் சாமியார், பீடிச் சாமியார், பீர் சாமியாரிணி _ நல்ல வருவாய் தரும் வழி என்பதை உணர்ந்து) அதைத் தொடக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக, தியானம், யோகா என்ற மூலதனத்தை முதலீடாக்கி, ஆன்மிக வியாபாரம் தொடங்கி, பல்லாயிரக்கணக்கில் சொத்து சேர்த்து ராஜசேகரன்கள் நித்யானந்தா சுவாமி-கள் ஆகி, நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளவர்-களையும் வளைத்துப் போட்டு, நல்ல அறுவடையை _ விதைக்காது விளையும் கழனியிலிருந்து பெற்று வந்தார்!

சிவ ரூபத்தில் சிரித்திடும் நரிகள்

இப்படிப்பட்ட இவருக்கு _ எடுபிடி சீடகோடிகள் _ பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் எழுதி, வெளி-யிட்டும், எலக்ட்ரானிக் மீடியாக்களான நவீன மின்னணு தொழில்நுட்ப உத்திகளையும் துணைக்கழைத்துக் கொண்டார். இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களிலும் ஆசிரமங்கள் அமைத்து, அறிஞர் அண்ணா வேலைக்-காரியில் எழுதிக் காட்டியது போல் சிரித்திடும் நரி சிவசொரூபத்தில் இருந்து நன்றாக பக்தி என்ற செழுமையான வியாபாரம் நடத்தினார்.

திரைப்பட நடிகர், நடிகைகள், தியானம், யோகா, நிம்மதி நாடி, மணவிலக்கு வாங்கியவர்கள் உட்பட பலரும் சென்ற நிலையில்தான், சில நாள்களுக்கு-முன் சன் தொலைக்காட்சி அந்த ஆனந்தாவின் ஆனந்த சொரூப, ஆன்மிக வகுப்பு ஆராய்ச்சி ஒரு பெண்மணியோடு நடைபெறுவதை அப்பட்டமாகக் காட்டியது.

அதனால் குறுகிய நேரத்தில் குவலயமே புரிந்து கொண்டு, காரி உமிழ்ந்தது காவிப்போர்வை மீது!

பக்தர்களாலேயே தொடுக்கப்பட்ட வழக்கு

மோசடி வழக்குகள்_- பக்தர்களாலேயே தரப்பட்டது. பிரதான சீடர்கள், சீடிகள் எல்லாம் இப்படி அந்தரங்-கத்தை_- அவலத்தைப் பற்றி விளக்கி சந்தி சிரிக்க வைத்தனர்.

பல பக்தர்கள் சாமியாரின் படங்களை எரித்தனர்; வேறு சில பக்தர்கள் பாதுகா பட்டாபிஷேகத்தை நடத்தி_ பக்தி பகல் வேஷத்தை அம்பலமாக்கி, இவரது கிருஷ்ண லீலைகளின் மீது அருவருப்புக் காட்டியது நாடறிந்த செய்தியாகும்.

எத்தனை எத்தனை முரண்பாடுகள்!

முதலில் இவரது தரப்பில் இந்த வீடியோ காட்சியில் இருப்பது இந்த மகான் கடவுள் அவதாரம் அல்ல; கிராபிக்ஸ் (graphics) மூலம் செய்யப்பட்ட புரட்டு என்று கதைவிட்டனர்.

பிறகு அதை எடுத்தவர், உண்மைகளை காவல் துறையிடம் கக்கி விட்டதனால், அதிர்ச்சி அடைந்து, அடுத்தக்கட்ட புளுகுப் படலத்தில், நான்தான் அது; ஆனால் தவறு நடக்கவில்லை, கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்துள்ள நிலை அது, எனக்குத் தொண்டு செய்த தூய்மையின் கோலம் அது என்றார்!

அடுத்த கட்டம்_ - கெட்டபின்பு ஞானம் என்பது போல, வாழ்க்கையில் இன்பம்_ துன்பம், புகழ்ச்சி_ இகழ்ச்சி இவையெல்லாம் சர்வசாதாரணம் என்று மாயாவாதத் தத்துவ ஞானியாக வியாக்கியானம் செய்து இப்போதும் பல மீடியாக்களை_- பெரும் பதவியாளர்-களை எல்லாம் தன்வயப்படுத்திக் கொள்வதில் தற்காலிக வெற்றி பெற்றுள்ளார் இந்த மோசடிப் பேர்வழி!

அபத்தமான செய்தி

கருநாடக அரசு தரப்பிலிருந்து ஓர் அபத்தமான செய்தி வந்துள்ளது; இது சரியான செய்தி என்றால் அதை விட அந்த அரசுக்கு மகாவெட்கம் எதுவும் இல்லை.

யாரும் புகார் கொடுக்கவில்லை இந்த ஆனந்த சாமியார் மீது எனவே எந்த வழக்கும் தொடுக்க முடியாது என்பதுதான் அந்தச் செய்தி.

கொலை நடந்தால், ஆள் கடத்தல் நடந்தால், கற்-பழிப்பு நடந்தால், சமூக விரோத செயல்கள் நடந்தால்_ புகார்களைத் தேடிக் கொண்டா இருக்கிறார்கள்? சட்டம்_ ஒழுங்கினைக் காக்க வேண்டிய அரசுகள் மெத்தனமாகவா நடந்து கொள்ளும்?

தமிழ்நாடு அரசு இவர் மீதான வழக்கினை கருநாடகாவிற்கு மாற்றியுள்ளதே, அது பற்றிய நிலை என்ன?

மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்

பல மாநிலங்களில் சொத்துக் குவிப்பு, மோசடி முதலிய இ.பி.கோ. பல்வேறு பிரிவுகளை ஈர்க்கும் குற்றங்களைப் புரிந்ததாக குற்றம் சாற்றப்பட்டுள்ள இந்த (ஆ)சாமிமீது உடனடியாக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.அய்- சிஙிமி) விசாரணைக்கு எடுத்துக்-கொண்டு, சமூக விரோத செயல்கள்பற்றி விருப்பு- வெறுப்பின்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்கப்பட வேண்டும்.

மற்ற மோசடிகளை விட இந்த பக்தி மோசடி, ஒழுக்கமற்ற அருவருக்கத்தக்க ஆபாசங்கள் எப்படி சகிப்புக்குரியவைகளாகிவிடுவது?

வருமான வரித்துறையின் கடமை

இந்த சாமியார்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து குவிந்தது என்று வருமான வரித்துறை முழு விசாரணை செய்ய வேண்டும்.

சாதாரணமாக உழைத்துப் பணம் சேர்க்கும் வியாபாரிகள் முதல் ஊராளும் அரசியல்வாதிகள் வரை_ யாருக்கும் தாட்சண்யம் காட்டாமல் சுழலும் வருமான வரித்துறை இந்த சாமியார்களின் கோடி கோடியான சொத்து வருமானம் பற்றி ஆய்வு செய்யவேண்டும். ஆங்காங்கு கூட்டங்கள் நடத்தி, மக்களுக்கு இதனை வற்புறுத்தி, மத்திய அரசினை செயல்பட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி விடுதலை (16.03.2010)

Monday, March 15, 2010

பார்பனர்கள் திருந்திவிட்டார்களா? பட்டப்பகலில் சூரியனுக்கு விலாசமா தேவை?

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்பிராயம் தான் என்ன?


பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள். (18-.3.-2009)

கேள்வி: பெண்களுக்கு சமஉரிமை என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: யார் இப்படியெல்லாம் என்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்களோ, தெரியவில்லையே! பெண்களுக்குச் சம உரிமை தேவை-தான். மாமியார், மருமகள் ஆகி-யோருக்குச் சம உரிமை வந்தால், அது வரவேற்கத் தக்கதுதான். (22-.-4.-2009)

கேள்வி: பெண்களிடம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

பதில்: என்ன தவறு செய்தாலும், அந்தத் தவறை தான் செய்யாதது போலவும், மற்றவர்கள்தான் அதற்குக் காரணம் என்பது போலவும் நடந்து கொள்கிற திறமை, அதைக் கற்றுக் கொண்டால் ஆண்களும் கூட நிம்மதியாக இருக்கலாமே? (20-.5.-2009)

கேள்வி: மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சராக தமிழகத்திலிருந்து ஒருவர் கூட நியமிக்கப்படவில்லையே?

பதில்: தப்பித் தவறி ஏதாவது நல்லது நடக்கிற மாதிரி தெரிந்தால் போதும் _ உங்களைப் போல் பலருக்கு ஆட்சேபம் வந்துவிடுகிறது. யார் கண்டது? உங்கள் குறை தீராது என்று சொல்லிவிட முடியுமா என்ன? குடும்பத்தில் சமநீதி காண்பதற்கு வழி பிறந்தால், உங்கள் குறை நீங்கிவிடலாமே! (17-.6-.2009)

கேள்வி: மக்களவையில் மகளிருக்காக இட ஒதுக்கீடு மசோதா நூறு நாள்-களுக்குள் நிறைவேற்றப்படும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறியுள்-ளாரே?

பதில்: சில தண்டனைகள் சொன்ன-படி நடப்பதில்லை. அஃப்ஸல் தூக்குத் தண்-டனை _ அப்படியே பெண்-டிங் ஆக இருக்கிறதே? அந்த மாதிரி இதுவும் தொங்கலில் விடப்பட்டால்தான் உண்டு. (24-.6.-2009)

கேள்வி: மக்களவை சபா-நாயகர் பெண் என்றால் இனி அமளியின்றி சபை நடைபெறுமா?

பதில்: ஒரு வீட்டில் பெண்கள் அதிகாரம் ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் அமளி, துமளி இல்லாமல் போய்விடுமா? அந்த மாதிரிதான் இதுவும். (1-.7.-2009)

கேள்வி: இந்தியாவில் உள்ள 617 ஹைகோர்ட் நீதிபதிகளில் 45 பேர்-தான் பெண் நீதிபதிகளாக உள்ளனர். மேலும் 6 ஹைகோர்ட் நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. அதே போல் சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. இது குறித்து தங்கள் கருத்து என்ன? (டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3.-8.-2009)

பதில்: நாடு சுதந்திரம் அடைந்த-போதும், அதைத் தொடர்ந்து சில வருடங்களிலும் பெண் நீதிபதிகளே இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது 45, 61 என்றெல்லாம் கணக்கு வருகிறது. சரி, சுதந்திரம் அடைந்தபோதும், அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலும், நீதித் துறையிடம் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இருக்கிறதா? நீதித் துறையில் பெண்களின் எண்ணிக்கை வளர்ந்து என்ன முன்னேற்றம் காணப் பட்டது? அந்த எண்ணிக்கையை அதிகமாக்குவதால், மேலும் என்ன முன்னேற்றம் வந்து விடும்? (2-.9-.2009)

கேள்வி: பெண்கள் சிறப்பு ரயில் திட்டம் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்-கான அச்சாரம் - என்று ப.சிதம்பரம் கூறுகிறாரே?

பதில்: அப்படியானால் சிறப்பு ரயில் ஓட்டாமலேயே, இத்தனை காலமாக பெண்கள் பலர் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றிருக்-கிறார்களே, அதெல்லாம் என்ன? கள்ளப் பயணம் மாதிரி, அதுவும் கள்ளப் பதவிகளா? (2-.9.-2009)

கேள்வி: பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதே?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹாபாரதத்தில், இது மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது, ஆராய்ச்சியின் முடிவு. அதை ஏற்காத-வன் மூடநம்பிக்கையில் உழல்பவன். (14.-10.-2009)

கேள்வி: பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை ஏற்றுக் கொள்-கிறீர்களா?

பதில்: இருக்கலாம். அந்தக் கண்-களின் பார்வையைச் சரி செய்கிற மூக்-குக் கண்ணாடிகள்தான் ஆண்-கள் என்-பதும் சரியாக இருக்கலாமே! (4-.11.-2009)

கேள்வி: கருநாடகாவில், ஷோபா-வின் அமைச்சர் பதவி தியாகத்தாலும், பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்து வைத்த சமரசத்-தாலும் கருநாடக பா.ஜ.க. அமைச்-சரவையின் சிக்கல் தீர்ந்துள்ளதே? பெண்களின் பெருமை இப்போதாவது தங்களுக்குப் புரிந்திருக்குமே?

பதில்: புரிகிறதே! ஒரு பெண்மணி தன் பதவியைவிட்டு விலகுவதாலும், மற்றொரு பெண்மணி தனக்கு எந்தப் பதவியையும் நாடாமல் சமரசம் தேடிய-தாலும் பிரச்சினை தீர்ந்திருக்-கிறது. அதாவது பெண்களில் பத-வியை நாடா-மல் இருக்கிற வரை பிரச்சினைகள் தீர வழியுண்டு. இதைத்-தானே நீங்கள் சுட்-டிக் காட்டுகிறீர்கள். புரிகிறது. (2-1.2.-2009)

மேற்கண்ட கேள்வி பதில்கள் எல்லாம் இடம் பெற்ற பத்திரிகை எதுவாக இருக்க முடியும்?

21 ஆம் நூற்றாண்டின் மனுவின் தத்துப் புத்திரனாக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமியின் துக்ளக்-கில் எழுதப்பட்டவைதான் இவை.

இவை ஒவ்வொன்றிற்கும் தனியே பதவுரை, பொழிப்புரை, கருத்துரை தேவைப்படாது.

பட்டப்பகலில் சூரியனுக்கு விலாசமா தேவை?

பார்ப்பனர்களா?

பழைய காலமெல்லாம் மாறிவிட்டது இன்றைக்கு எவ்வளவோ மாற்றம்
எவன் அவுட்டுத்திரி வைத்திருக்கிறான்?

எவன் பஞ்சகச்சம் வைத்துக் கட்டுகிறான்?

காலமாற்றம் அவர்களையும் விட்டு வைக்கவில்லை என்று அவாளுக்காக வக்காலத்து வாங்கும் ஆசாமிகள் நம்மவாளிடத்திலே உண்டு.

மாற்றமா? அது வெளிப்புறத்தில்-தான்.தோற்றத்திலும் மாற்றம் இருக்-கிறது. மறுக்கவில்லை.

ஆனால் உள்ளத்தில் மாற்றம் உண்டா? எண்ணத்தில் ஏற்பட்டு-விட்டதா மாற்றம்? சிந்தனையில் சிறிதாவது முன்னேற்றம் உண்டா என்றால் இல்லை - இல்லவே இல்லை என்பதற்கு ஆணி அடித்தாற் போன்ற எடுத்துக் காட்டுதான் மேலே எடுத்துக் காட்டப்பட்டவை.

எந்த ஓர் இடத்திலாவது பெண்கள் என்றால் அவர்களுக்கு மனிதக் கூறுதான் என்று ஏற்றுக் கொள்ள இடம் இருக்கிறதா?

பெண்கள் உயர்ந்தவர்கள்தானாம். ஆனால் இப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்களாம்.

உயர்ந்தவர்களாக இருக்க விருப்பம் இல்லாதவர்கள் எப்படி உயர்ந்தவர்-களாக இருக்க முடியும்?

இப்படி ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் அந்தர் பல்டி அடிக்கும் ஆசாமி-கள்தான் அவாள் அகராதியில் அறிவாளியோ அறிவாளி!

ஒரு முறை பின்பொறியால் சிரித்துத் தொலையுங்கள்.இதில் ஒரு வெட்கக்கேடு என்ன தெரியுமா?

இவ்வளவு இழிவாகப் பெண்களை இந்தப் பார்ப்பான் விமர்சித்திருந்தாலும், கொச்சைப் படுத்திக் கூவினாலும், முற்போக்கு முத்திரை குத்தி அலையும் எந்தப் பெண்கள் அமைப்பும் அது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. ஒரு கண்டன அறிக்கைகூட கொடுப்ப-தில்லை.

திராவிடர் கழகம்தான் தீயாக எழவேண்டும். விடுதலைதான் வேங்-கைப் புலியாக பாயவேண்டும்.

எழுத்துக்கு எழுத்து செம்மையாகக் கொடுக்கும் சாட்டை பெரியார் திடலில்-தான் இருக்கிறது. கருஞ்சட்டைக்காரரின் கையில்தான் அது சுழன்று கொண்டே இருக்கிறது.

பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்-கீடு பற்றிய பிரச்சினையில் இருவேறு கருத்துகள் உண்டு. ஒன்று உள் ஒதுக்கீடு இல்லாத இட ஒதுக்கீடு; இன்னொன்று உள்ஒதுக்கீடு இருந்தே தீரவேண்டும் என்கிற வற்புறுத்தல்.

மூன்றாவது ஒரு கூட்டம் இருக்கிறது. அதுதான் சோ போன்ற மனுதர்ம மலத்தை மடியில் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம்.

தினமணி என்ற பெயர் இருக்கும்; இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற நாமம் இருக்கும்; கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளையான குருமூர்த்தி வடிவத்திலும் இருக்கும்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடவே கூடாதாம். அது வீண் வேலையாம். இந்தச் சட்டம் வருவதால் பெண்களுக்-குப் புதிதாக ஆகப் போவது ஒன்றும் கிடையாதாம்; - வெறும் கண்துடைப்பு-தானாம்.

பெண்கள் மீதான அக்கறை காரண-மாகச் சொல்லப்படுவதா இவை? அல்ல, அல்ல. பெண்கள் மீதான வக்கிரக் குணத்-துடன் வடிகட்டி எழுதப்படும் வருணாசிரமவாதிகளின் குமட்டல்கள் இவை.

டெக்கான் கிரானிக்கல் (9-.3-.2010) ஆங்கில நாளேட்டில் (பக்கம் 2 இல்) திருவாளர் சோ ராமசாமியின் பேட்டி வெளிவந்துள்ளது.

அப்பட்டமான மனுதர்மத்தின் அசல் அக்மார்க் முத்திரையுடன் கருத்துச் சொல்லியிருக்கிறார்.

சட்டமன்றங்களும், நாடாளுமன்ற-மும் பெண்களுக்கான சட்டங்களை இயற்றவில்லையா? பின் எதற்காக பெண்-களுக்கென்று தனி ஒதுக்கீடு? அதனால் என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது?

பெண்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப் பட்டால் அந்த இடத்தில் யார் நிறுத்தி வைக்கப்படுவார்கள்? ஏற்கெ-னவே சட்ட மற்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்-பவர்களின் மனைவிமார்களோ மகள்-களோதான் நிறுத்தி வைக்கப்படுவார்-கள்?

தேர்ந்தெடுக்கப்படும் இந்தப் பெண்-கள் ஆண்களின் பினாமியாகத் தானி-ருப்பார்கள் என்று மூக்கால் அழுகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்-களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பொழுதும் இதே கூட்டம் இந்த வகை-யில்தான் மண்ணை வாரி இறைத்தது.

உள்ளாட்சிகளில் பெண்கள் போய் உட்கார்ந்ததால் என்ன கெட்டுப் போய்-விட்டது? எதில் தோல்வி அடைந்து-விட்டார்கள்?

வாய்ப்புக் கொடுப்பதற்கு முன்பே வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஆற்றாமையின் வெளிப்பாடு. மனுதர்ம குயுக்தியின் கோணல் புத்தி!

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் குறைந்த பட்சம் 181 பெண்கள் வீற்றிருக்கப் போகிறார்களே - பொறுக்குமா இந்தப் பூதேவர்களுக்கு? வீங்கி வெடித்திட மாட்டார்களா?

தங்கள் உரிமைகளுக்காக இன்னொரு-வரிடம் கையேந்தி நின்ற காலத்திற்குக் கல்தா கொடுக்கப் பட்டுவிட்டதே!

ஆண்களுக்கு உள்ள ஒவ்வொரு உரிமையும் தங்களுக்கும் வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுப்பார்களே _ அது இன்னொரு வகையில் இந்த ஈரோட்டுக் கிழவனாரின் கொள்கைக்கு அல்லவா வெற்றியாக முடியும்?

தமிழ்நாட்டைப் பீடித்த பெரியார் சரக்கு டில்லிப் பட்டணம் வரை அம்-பலம் ஏறிவிட்டதே என்ற ஆத்திரத்தில் அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறது சோ கூட்டம்.

33 சதவிகிதத்துக்காகப் போராடும் பெண்களின் கவனம் இந்த மனுவாதி-களின் பக்கமும் திரும்பும் நாள் எந்-நாளோ!

---------  நன்றி விடுதலை (13.03.2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]