வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, April 18, 2010

வெட்கமில்லை...பக்தி என்றால் வெட்கமும் அறிவும் கெட்ட இடம் தானே!

மத்திய அமைச்சர் வயலார்ரவி குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தனது எடைக்கு எடை சர்க்கரையைக் காணிக்கை-யாகக் கொடுத்துள்ளார். பீதாம்பரப்பட்டு, கதளி எனும் வாழைப் பழங்-களையும் காணிக்கை-யாகக் கொடுத்தாராம். நீண்ட நேரம் கோயிலில் தியானத்தில் ஆழ்ந்தாராம்.


நம் நாட்டு அரசியல்-வாதிகள் இப்படிப் பக்திப் பழமாகக் காட்டிக் கொள்-வது ஒன்றும் அதிசய-மல்ல.

இதே குருவாயூரப்பன் கோயிலில் இதே வயலார் ரவிக்கு எப்படியெல்லாம் அவமதிப்பு நடந்தது என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வயலார் ரவியின் பேரன் ராஜீவ் கிருஷ்ணா-வுக்கு அன்னபிரச்சானம் (முதன் முறையாகக் குழந்-தைக்கு உணவு ஊட்டும் சடங்கு) குருவாயூர் கோயில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சி நடந்த மறுநாள் அந்தக் கோயி-லில் என்ன நடந்தது? புண்யாகவசனம் நடத்தி-னார்கள் -_ அதாவது தீட்-டுக் கழித்து உள்ளனர்.

அதற்குக் காரணம் என்னவாம்? வயலார் ரவியின் மகன் மணந்து கொண்டது ஒரு கிறிஸ்-துவப் பெண்ணையாம். கிறிஸ்துவப் பெண்ணுக்-குப் பிறந்த பிள்ளைக்கு குருவாயூர் கோயிலில் எப்படி அன்னபிராச்-சனம் நடத்தலாம்? அதற்காகத்-தான் தோஷம் கழிக்கும் நடவடிக்கையாம்.

(பிண்டம் பிடிப்பதில்-கூட பிர்மா மதம் பார்த்து-தான் செயல்படுகிறோரோ!)

சரி.. அந்தச் சடங்கு நடப்ப-தற்குமுன் அது கிறிஸ்துவக் குழந்தை என்று தெரியாதா? ஏன் அப்பொழுதே தடுக்க-வில்லை? இங்குதான் இருக்கிறது அவர்களின் கோயில் பிசினஸ்; அன்னபிராச்-சனம் என்பதற்கும் ஒரு வசூல் - _ அதன்பின் தீட்-டுக் கழிப்பதற்கும் ஒரு வசூல்

இப்பொழுது பாருங்-கள். அதே குருவாயூரில் வயலார் ரவி எடைக்கு எடை காணிக்கை கொடுக்-கிறார். அதனை சாங்கோ பாங்கமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

கொள்ளு என்றால் வாய் திறப்பு கடிவாளம் என்றால் இறுக மூடலோ!

வயலார் ரவியின் குடும்பம் இப்பொழுது ஒட்டு மொத்தமாக இந்துக் குடும்பமாகி விட்டதா?

கோயில் கும்பலுக்கும் வெட்கமில்லை; வயலார் ரவி போன்றவர்களுக்கும் வெட்கமில்லை. பக்தி என்றால் வெட்கமும் அறிவும் கெட்ட இடம் தானே!

------- நன்றி விடுதலை மயிலாடன் (18.04.2010)

Saturday, April 17, 2010

துக்ளக் சோ ராமசாமி குறுக்குச்சால் ஓட்டப் பார்க்கிறார்.

திரைப்பட நடிகையான குஷ்பூ திருமணத்திற்குமுன் கூடி வாழ்வது குறித்துத் தெரிவித்த கருத்தின் அடிப்-படையில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தினை மய்யப்படுத்திப் பல்வேறு விமர்சனங்கள் வெடித்துச் சிதறிக் கொண்டு இருக்கின்றன.


இதுதான் சந்தர்ப்பம் என்று திருவாளர் சோ ராமசாமி -_ தந்தை பெரி-யார் அவர்களைக் குறுக்கே கொண்டு வந்து நிறுத்தி குறுக்குச்சால் ஓட்டப் பார்க்கிறார்.

பொதுவாக அவரின் விமர்சனமும், கருத்தும் வலுவான எடுத்துக்காட்டு-களைக் கொண்டதாக அமையவே அமையாது. எடுத்துக் காட்டப்படுபவை-களுக்கான ஆதாரம் என்பது அவரிடம் எதிர்பார்க்கவே முடியாத ஒன்றுதான். எல்லாம் பொத்தாம் பொதுவாகத் தானிருக்கும்.

நகைச் சுவை உணர்வு என்பது மிகச் சிறந்த அம்சம். அதுபொருள் பொதிந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும்.

ஆனால் நகைச்சுவை என்ற பெய-ரால் சிரிப்பை மூட்ட வேண்டும் என்ப-தற்காக உடலில் பல சேட்டைகளைச் செய்து காட்டுவார்கள் -_ அந்த இரண்-டாந்தர வகையைச் சேர்ந்ததுதான் சோவின் பாணி.

குஷ்பு கூறிய கருத்து _ உச்சநீதிமன்ற தீர்ப்பு _ இவற்றைப் பற்றி எழுத வந்த சோ பெரியாருக்கு ஒரு நியாயம், குஷ்புவுக்கு ஒரு நியாயமா? எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை தமது துக்ளக்கில் (7.4.2010) நீட்டி முழங்கி-யிருக்கிறார். நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்-வளவு கேவலமாக ஆக்கி விட்டார்-கள்?....

..எனவே பெண்ணடிமை ஒழிய, திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல, மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டும் என்-றாலும் இந்தத் திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்...

பெண்கள் அடிமை நீங்க வேண்டு-மானால், முதலாவதாக அவர்களை கற்பு என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும்..

கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்-சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்று-தான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்...
..பெண்கள் விடுதலைக்கும், சுயேச்-சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்கின்றோம்.

இன்னும் சிறிது வெளிப்படையாய், தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதா-னால், இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும், அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்-தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்-கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்-கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவைதான் தந்தை பெரியார் சொன்னதாக திருவாளர் சோவால் எடுத்துக்காட்டப்பட்டிருப்பவை.

தொடர்ச்சி ஏதும் இல்லாமல், துண்டு துண்டாக தமது வசதிக்கு ஏற்ப முன்னும் பின்னும் இல்லாமல் தந்தை பெரியார் கூற்றுகளைக் கையாண்டுள்-ளார். இது ஒரு முடக்குவாதமும் அறிவு நாணயமற்ற மோசடியுமாகும்.

கற்பு என்பது பற்றி தந்தை பெரியார் கூறியுள்ள கருத்து ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டதாகும். அது பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது _ ஆணுக்குத் தேவையற்றது என்றிருக்கும் நிலைப்-பாட்டை நிலைகுலைய வைக்கும் கருத்துக் கணைகளை வீசியிருக்கிறார் தந்தை பெரியார்.

கற்புபற்றி மட்டுமல்ல -_ பெண்களை அடக்கி ஒடுக்கும் சமாச்சாரங்கள் குறித்து நேர்மையான முறையில், அழுத்தமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பெண் ஏன் அடிமையானாள் என்ற தந்தை பெரி-யார் அவர்களின் நூலினை ஆழமாகப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையாக, பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்-டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்-யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.

கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்.

கற்புக்காக மனத்தில் தோன்றும் உண்மை அன்பை காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாத-வனுடன் இருக்க வேண்டும் என்கிற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

எனவே இக்கொடுமை நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய, நிர்ப்பந்தங்களாலும், ஒரு பிறப்புக்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காண முடியாது என்பதுடன், அடிமைக் கற்பையும் நிர்ப்பந்தக் கற்பையும் தான் காணலாம். அன்றியும், இம்மாதிரியான கொடுமையைவிட வெறுக்கத்தக்க காரியம் மனித சமூகத்தில் வேறொன்று இருப்பதாக என்னால் சொல்ல முடியாது (பெண் ஏன் அடிமை-யானாள்? முதல் அத்தியாயம் கற்பு எனும் தலைப்புக்குக்கீழ் தந்தை பெரியார்) இவ்வாறு கூறியுள்ளார்.

கற்புப்பற்றி தந்தை பெரியாரின் கருத்து மிகத் தெளிவாக இதில் கூறப்பட்டுள்ளது.

கற்பு என்பது ஆண் பெண் இருவ-ருக்-கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

பெண்ணுக்கு மட்டும் கற்பு தேவை; ஆணுக்குத் தேவையில்லை என்பதை ஏற்க முடியாது.

ஆண் _ பெண் இருவருக்கும் சமமான சுயேச்சைக் கற்பு தேவை!

கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடாது என்று தந்தை பெரி-யார் தெரிவித்துள்ள கருத்தில் எந்த இடத்தில் குற்றம்? எந்த இடத்தில் நொள்ளை? எடுத்துக்காட்டி விவாதிக்க முன் வர வேண்டாமா? மொட்டைத்-தாதன் குட்டையில் விழுந்தான். நெட்டை மனிதன் வேடிக்கை பார்த்-தான் என்பதெல்லாம் கிறுக்குவதற்கு சுவையாக இருக்கலாமே தவிர அறிவுத்-தன்மைக்கு உவப்புடையதாக இருக்க முடியாது.

நாசமாகப் போகிற கற்பு கற்பு என்று சொல்லி நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்-டார்கள். பார்ப்பானோ மிகக் கெட்டிக்-காரன், ஆயிரம் பேரை அவள் பார்த்-திருந்தால்கூட, அவளைப் பத்தினி-யாக்கி விடுவான். சீதை, துரோபதை, தாரை இவர்களே இதற்கு உதாரணம்; கற்பு என்றால் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியாக அல்லவா இருக்க வேண்-டும்? பைத்தியக்காரத்தனமாக மூட நம்பிக்கைகளை புகுத்திப் பாழாக்கி விட்டார்கள்

கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத் திற்காகவும் கற்பு ஒரு காலமும் கூடாது! கூடவே கூடாது! வாழ்க்கை ஒப்பந்தத் திற்காகவும், காதல் அன்பிற்காகவும் இருவரையும் கற்பு என்னும் சங்கிலி யால் எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கிற கற்பு மாத் திரம் அடிமைப்படுத்துவதில் ஆசை, மூர்க்கத்தனமே அல்லாமல், அதில் கடுகளவு யோக்கியமும், நாணயமும் பொறுப்பும் இல்லவே இல்லை

பாவத்திற்குப் பயந்து பதிவிரதை-யாய் இருப்பவளும் காவலுக்குப் பயந்து பதிவிரதையாயிருப்பவளும், மானத்திற்-குப் பயந்து பதிவிரதையாயிருப்பவளும் ஒரே யோக்கியதை உடையவளே ஆவாள் (நூல்: சுயமரியாதைத் திருமணம் -_ ஏன்?

வாழ்க்கை ஒப்பந்தத்துக்காகவும் காதல் அன்பிற்காகவும் ஆண் பெண் இருவரையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும் என்று தந்தை பெரியார் கூறியதன் மூலம் கற்பின்மீது அவருக்-குள்ள நிலைப்பாடு எத்தகையது என்-பது வெளிப்படை; ஆனால் கற்பு என்-பது ஒரு சார்பானது. பெண்ணுக்கு மட்டுமே உண்டு. ஆண் எப்படி வேண்-டு-மானாலும் நடந்து கொள்ளலாம் என்கிற ஆண் ஒடுக்குத்தன்மையைத்-தான் தந்தை பெரியார் தயவு தாட்-சண்யம் ஏதுமின்றி நொறுக்கித் தள்ளு-கிறார்.

உண்மை இவ்வாறு இருக்க சோ பார்ப்பனர் சகட்டு மேனிக்கு ஒழுக்-கத்தைப் பற்றியே கவலைப்படாதவர் பெரியார் என்ற போக்கில் கிறுக்குவது போக்கிரித்தனம்தானே!

திருமணம் கிரிமினல் குற்றமாக்-கப்பட வேண்டும் என்று தந்தை பெரி-யார் கூறியது உண்மைதான். அதற்குக் காரணம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கொடுமை நிலவுவதும் ஆண் பெண் சுயசிந்தனைகளுக்குத் தடையாக இருப்பதும்தான். குடும்ப வாழ்வில் சிக்கிய மனிதன் சுயநலப் பிராணியாக வாழ்ந்து தொலைக்கிறான் என்ப-தால்தான்.

இதுபற்றி தந்தை பெரியார் கூறுகிறார்.

சொத்துரிமை இல்லாத ருசியா போன்ற நாடுகளில் ஆண்களும், பெண்களும் கணவன் -_ மனைவி என்று இல்லாமல் நண்பர்கள், காதலர்களாக இருந்துவருகின்றனர்; திருமணம் என்ற அமைப்பு முறையில் அமைப்பும் ஏற்பாடும் இல்லாமலே வாழ்கிறார்கள். இதற்குக் கட்டுப்பாடற்ற காதல் என்று பெயர். சுதந்திரமான ஆண் -_ பெண் உறவு வாழ்க்கை அங்கே இருக்கிறது. சொத்து, வாரிசு உரிமை இருக்கிற காரணத்தால்தான் நம்முடைய நாட்டில் கட்டுப்பாடுள்ள குடும்ப முறை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.

ருசியா போன்ற சொத்துரிமையற்ற நாடுகளில் இது போன்ற கட்டுப்பாடு-கள் தேவை இல்லாமல் போய் விட்டது. ஏதோ இயற்கை உணர்ச்சிக்காக ஓய்வு நேரங்களில் சாந்தி ஏற்படுவதற்காக ஒரு வாழ்க்கைத் துணை இருக்க வேண்டும்; அவர்கள் சினேகிதர்கள் மாதிரி என்-றைக்கும் இருப்பார்களே தவிர, அங்குக் கல்யாண முறையே கிடையாது. இது-தான் அங்குள்ள ஆண் பெண் உறவுத்-தன்மை

(நூல்: சுயமரியாதைத் திருமணம் ஏன்?) என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

திருமணம் குடும்ப அமைப்பு முறை என்பது சுயநல அமைப்புத் தன்மை கொண்டது என்பதும், தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற கடுகு உள்ளம் அவர்களை ஆட்டிப் படைத்-திருக்கிறது என்பதும்தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தியலாக இருக்கிறது.

பிறருக்குத் தொண்டாற்ற வேண்டும் என்று விரிந்த இதயத்தை இந்தத் திருமண வழிப்பட்ட குடும்ப அமைப்பு முறை அளிப்பதில்லை.

அன்னை நாகம்மையார் மறைவுற்ற-போது தந்தை பெரியார் எழுதிய இரங்கல் இலக்கியத்தில்கூட தனக்-கிருந்த ஒரே கட்டும்கூட இப்பொழுது இல்லை. முழுமையாகப் பொதுத் தொண்டில் மூழ்குவேன் என்றாரே!

தந்தை பெரியார் ஒரு தொலை-நோக்காளர்; பற்றற்ற முறையில் சிந்திக்கக் கூடியவர்; அந்தக் கண்-ணோட்-டத்தில் அவர் எடுத்து வைக்-கும் கருத்து ஒரு கட்டத்தில் கடும் விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளானாலும், காலத்தைக் கடந்து அவை வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆசா பாசச் சூழலில் சிக்கிக் கொள்ளாமல், ஒரு பிரச்சினையின் தன்மையை நிர்வாணமாய் பார்க்கும் துணிவு எத்தனைப் பேருக்கு உண்டு?

திருமணம் என்ற அமைப்பு முறை இல்லாமல் நண்பர்களாகக் குடும்பம் நடத்துவோர் எண்ணிக்கை உலகில் பெருகிக் கொண்டே வருகிறது.

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நண்பர்களாக வாழ்வதைக் கொச்சைப்-படுத்துபவர்கள் யார்? அவர்களின் யோக்கியதை என்ன? ஒரு சந்தர்ப்ப-வாதத்-துக்காக எதையோ தூக்கிப் பிடிக்கும் சோ கூட்டத்தின் கற்பு நிலைப்-பாடு என்ன? ஒழுக்கத்தின் சீர்மைதான் என்ன?

அய்வருக்கும் தேவியான துரோபதை-தானே அழியாத பத்தினி! அந்தப் பெண் அய்ந்து பேர் போதாது என்று ஆறாவதாக கர்ணனையும் காதலித்-தாள் என்பதைப் பயபக்தியோடு ஏற்றுக் கொள்ளும் சோ கூட்டம் ஒழுக்கக் கேடுபற்றி வாய் திறக்கலாமா?

திருமணத்தில் பார்ப்பான் சொல்-லும் மந்திரம் குறித்து பாபா சாகேப் அம்பேத்கர் கூறுவது என்ன?

ஆரியர்கள், தங்கள் மனைவியரைத் தேவர்கள் வைத்துக் கொள்வதையும், தேவர்களால் கர்ப்பமாக்கப்படுவதையும் தங்களுக்குக் கிடைத்த கவுரவமாகக் கருதினார்கள். இந்திரன், யமன், நசத்யா அக்னி, வாயு முதலிய தேவர்கள் மூலம் ஆரியப் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றனர் என்ற குறிப்பை மகாபாரதத்-திலும் ஹரிவம்சத்திலும் காணலாம்.

தேவர்களுக்கும் ஆரியப் பெண்-களுக்குமிடையே முறைகேடான உட-லுறவு அடிக்கடி நிகழ்ந்தது. நாளடை-வில் தேவர்களுக்கும், ஆரியர்களுக்கும் இடையே உறவு வலுப்பட்டது. அது நிலப்பிரபுத்துவமாக வடிவம் பெற்றது. தேவர்கள் ஆரியர்களிடமிருந்து இரண்டு வரங்களைப் பெற்றார்கள்.

ராட்சசர்களுக்கு எதிராகத் தேவர்கள் போர்செய்து, ஆரியர்களைப் பாதுகாத்ததற்காக, ஆரியர்கள் தேவர்களுக்கு அவ்வப்போது யக்ஞம் நடத்தி விருந்து படைக்க வேண்டும் என்பது முதல் வரம்.

ஆரியப் பெண்களை அனுபவிக்கும் முதல் உரிமை தங்களுக்கு வேண்டும் என்று தேவர்கள் ஆரியர்களைக் கேட்டார்கள். இது இரண்டாவது வரம். மிகப் பழங்காலத்திலேயே இது நடைமுறைக்கு வந்துவிட்டது. ரிக்வேதத்தில் (ஙீ_-85_40) இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது.

அதன்படி ஓர் ஆரியப் பெண்ணை அனுபவிக்கும் முதல் உரிமை சோமனுக்கு; இரண்டாவது உரிமை கந்தர்வனுக்கு; மூன்றாவது அக்கினிக்கு; கடைசி உரிமை ஆரியனுக்கு. ஒவ்வொரு ஆரியப் பெண்ணும் பூப்படைந்தவுடன் யாராவது ஒரு தேவனிடம் அவன் அனுபவிப்பதற்காக ஒப்படைக்கப்-படுவாள். (நூல்: டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்-களும் பேச்சுக்களும் - தொகுதி -_ 4 பக்கம் 302)

மேற்கண்டவாறு அம்பேத்கர் அவர்கள் குறித்துள்ளமைக்கு ஏற்ப, ஆரியப் பெண்களுக்கு வழமையாக இருந்ததை மந்திரங்களாக்கி, இதரர்-களுக்கு குறிப்பாக, சூத்திரர்களுக்கும் திருமண காலத்தில் புரோகிதர் கூறுகிறார்.

சோம ப்ரதமோ
விவிதே கந்தர்வோ
விவித உத்தர:
த்ருத்யோ அக்நிஷ்டேபதி
துரியஸ்தே மனுஷ்யஜா

ஆரியப் பண்பாடும் ஒழுக்கமும் இவ்வளவு மோசமாக இருப்பதைத் தமிழர்களோ தன்மானமுள்ள எவ-ருமோ ஏற்க முடியுமா? அதை ஒழிப்ப-தற்கே சுயமரியாதைத் திருமணத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தோற்று-வித்தார்!

(கி. வீரமணி அவர்கள் எழுதிய சுயமரியாதைத் திருமணம் -_ தத்துவமும், வரலாறும் _ எனும் நூலிலிருந்து)

கற்பு என்பதும், ஒழுக்கம் என்பதும் ஆண் -_ பெண் இருவருக்கும் பொதுவானது என்பது தந்தை பெரியார் அவர்களின் ஒழுக்கவியலாகும்.

அதனைக் கொச்சைப்படுத்தும் சோ வகையறாக்களின் பண்பாடு என்பது -_ அம்பேத்கர் எடுத்துக்காட்டிய மேற்-கண்ட தன்மை கொண்டதாகும்.

எது நெறி? எது வெறி? என்பதைத் தெரிந்து கொள்வீர்!

--------- மின்சாரம் எழுதிய கட்டுரை , விடுதலை (17.04.2010)

மாணவர்களைக் காப்பாற்றும் இயக்கம்....திராவிடர் மாணவரணி....மாநாட்டின் முத்தாய்ப்பான தீர்மானங்கள்


திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு _ வரலாற்றுப் பெருமை தாங்கும் வகை-யில், எல்லா வகையிலும் நிறைவு ஒளி வீசும் வகையில் சென்னை பெரியார் திடலில் மிகக் கம்பீரமாக நடைபெற்றது. மாலை 5 மணிவரை பெரியார் திடலிலும், அதன்பின் சென்னைப் புரசைவாக்கம் தாணா தெருவிலும் பல்வேறு அணிகலன்களை உள்ளடக்கி ஒரு பெரும் மாநாடாக நடைபெற்றது.


மாநாட்டில் பொறுக்கு மணிகளென பத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்-களின் அருமையை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., ஆகியோர் பெரிதும் பாராட்டினர்.

1929 செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாடு தொடங்கி இன்றுவரை நடைபெற்றுவரும் கழக மாநாடுகளின் தீர்மானங்கள் _ நாளைய அரசுகளின் சட்டங்-களாகவும், திட்டங்களாகவும் மாறியிருக்கின்றன என்ற கருத்தைக்கூட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திறந்தவெளி மாநாட்டில் மிகச் சரியாகக் கணித்துக் கூறினார்.

இன்றைய சூழலில் மாணவர்கள் பல்வேறு போதைகளின் தாக்குதலுக்கு ஆளாகி நிலைகுலைந்து போயிருக்கின்றனர். இதனைப் பலரும் விமர்சனமாகக் கூறினாலும், இப்போக்-கிலிருந்து மாணவ உலகத்தை மடைமாற்ற எந்த ஓர் உருப்படியான ஆக்க ரீதியான ஆலோ-சனைகளையும், நிவாரணங்களையும் சொன்ன-தில்லை.

உலகம் முழுவதும் இந்த நிலைதான் இருக்கிறது என்பது யோக்கியமான சமாதானமாக இருக்க முடியாது.

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் துப்பாக்கிகளுடன் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லுகின்றனர்; சில நேரங்களில் சக மாணவர்களைச் சுட்டுக் கொன்றும் விடுகின்றனர் என்பதற்காக, நமது நாட்டிலும் இத்தகைய போக்குகள் வளர்ந்தால் குற்றம் இல்லை என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?

கல்வி நிறுவனங்களில், விடுதிகளில் உள்ள பழைய மாணவர்கள், புதிய மாணவர்களிடம் மேற்கொள்ளும் கேலி (ஈவ்டீசிங்) அளவு கடந்து மிகவும் அநாகரிகமாக, படு கொச்சைத்தனமாக நீள்கின்றனவே, இது சட்டப்படி குற்றம், சிறைத்-தண்டனை என்று சொல்லப்பட்டாலும், இந்தக் குற்றம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது என்கிற தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டுதானி-ருக்கின்றன.

இந்தப் போக்கால் மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது கூட நடந்துகொண்டுதானிருக்-கிறது.

மாணவிகளின் விடுதிகளும்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. படிக்கும் மாணவர்கள் இப்படி பண்பற்ற வகையிலே நடந்துகொள்கிறார்-களே, பொது இடங்களில் பேரிரைச்சல் போடுகிறார்களே, பேருந்துகளின் செல்லும்போது அவர்கள் அடிக்கும் அரட்டைக் கச்சேரிகள் கண்ணியமானவர்களைக் கூனிக் குறுகச் செய்கின்றனவே_

மது, சினிமா, கிரிக்கெட் என்று பல்வேறு போதைகளில் சவாரி செய்துகொண்டு இருக்-கிறார்கள் (இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்).

இதுகுறித்து மாணவர்கள் மத்தியிலே விழிப்புணர்வுப் பிரச்சாரம் தேவை!

மாணவர்களின் சிந்தனை நேர்வழியில் செலுத்தப்பட விளையாட்டு, நூலகங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட திசைகளில் கொண்டு செலுத்தலாமே!

இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள்_ மாண-வர்கள் என்ற ஓர் இணைப்பு தேவைப்படுகிறது. தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படவேண்டும்.

விஞ்ஞான வளர்ச்சி தறிகெட்டு மாணவச் சமுதாயம் அழிவதற்குக் காரணிகளாக இருப்பது மாபெரும் அவலமே! கைப்பேசி, இணைய தளம் என்பதெல்லாம் மாணவச் சமுதாயத்தை அரித்துத் தின்னும் ஆபாச மிருகங்களாகவா மாற-வேண்டும்?

இதுகுறித்து திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாடு முதல் தீர்மானமாகவே சில கருத்துகளைக் கூறியிருக்கிறது.

தீய விளைவுகளிலிருந்து மாணவர்களை, இளைஞர்களைக் காப்பாற்றிட ஊர்தோறும் ஓர் அமைப்பினை (Save Our Youths - Movement) ஏற்-படுத்த-வேண்டும் என்று முதல் தீர்மானம் கூறுகிறது.

கழக மாணவரணி, இளைஞரணிப் பொறுப்பாளர்கள் இதற்கான களப் பணிகளில் உடனே ஈடுபடுவார்களாக!

------------ நன்றி விடுதலை தலையங்கம் (17.04.2010)

உள்ளம் குமுறுகின்றது...பார்வதி அம்மாள் செய்த குற்றம்தான் என்ன? பிரபாகரனுக்குத் தாயாக இருந்ததுதானா?


பிரபாகரனின் தாயார் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டவர். அவர் ராஜபச்சே அனுமதியோடு சிகிச்சை பெற சென்னை வந்தால், மத்திய அரசு அதிகாரிகள் அவரை கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்புவதா? பாகிஸ்தானி யருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கின்றீர்கள். மத்திய அரசின் அதிகாரிகள் பிரபாகரனின் வயதான தாயாரை திருப்பி அனுப்பியது மனிதநேயமற்றது, மாபெரும் கண்டனத்திற்குரியது. உலகமே வெட்கித் தலை குனிய வேண்டிய செயல் என்று தமிழர்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.


அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரபாகரனின் தாயார் பார்வதி

இலங்கையில், ஈழப் பகுதியில்_ அதுவும் ராஜபக்சே அரசின் கண்காணிப்பில்_- முகாமில் வாழ்ந்த விடு-தலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்கள் (அவர் ஓய்வு பெற்ற (யாழ்ப்-பாணத்தில்) அரசு ஊழியர்). இயக்க நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் வாழ்ந்தவர். அவரது துணைவியார்_ பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் (வயது 81).

பக்கவாதத்தால் தாக்கப்பட்டவர்

ஏற்கெனவே, அவர் பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பக்க வாதத்தினால் தாக்கப்பட்டவர்; தனது கணவர் திரு. வேலுப்பிள்ளை இறந்த செய்தியைக்கூட சரி-வரத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உடல்-நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தவர்.

கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பினர்

இன்று காலை சில செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திப்படி, நேற்றிரவு 10.30 மணிக்கு (16.4.2010) மலேசி-யத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மருத்துவ சிகிச்-சையை சென்னையில் பெறுவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், தனக்கு உதவியாக ஒரு நர்சு-டன் வந்துள்ள அவரை, சென்னையில் இறங்கி சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது என்று, விமான நிலைய அதிகாரிகள் மறுத்து, அதே விமானத்திலேயே வைத்து அவரை மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்பிள்ளார்கள் என்று தெரிய வருகிறது.

முறைப்படி எல்லாம் இருந்துள்ளது

அவரிடம் முறைப்படி மருத்துவ சிகிச்சை பெறு-வதற்கான விசாவும் இருந்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அப்படியிருந்தும் அந்த முதுமையடைந்த தாயை 81 வயதில் பக்கவாதத்திற்கு சென்னையில் சிகிச்சை பெறக்கூட அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பப்படுவதைவிட மனிதாபிமானம் அறவே அற்ற கொடுஞ்செயல் வேறு இருக்க முடியுமா?

மத்திய அரசா? ராஜவிசுவாச அதிகாரிகளா?

இதற்கு யார் பொறுப்பானவர்கள்_- மத்திய அரசா அல்லது அதில் பணிபுரியும் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாச அதிகாரிகளா என்பது நமக்குப் புரியவில்லை.

யார் இதற்குக் காரணமானாலும் உலகமே வெட்கித் தலைகுனியக் கூடிய, மத்திய அரசின் செயல் கண்-டனத்திற்குரிய செயலாகும் இது _ உண்மையில் அவர்-கள் ஆணையிட்டிருப்பார்களானால்!

பாகிஸ்தானியருக்கு இங்கு சிகிச்சை

தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் காசாப்புகளுக்கு கவசமாக உள்ளது என்று குற்றம் சாற்றப்படும் பாகிஸ்-தானத்திலிருந்து நோயாளிகள் இங்கே வந்து அறுவை சிகிச்சை மருத்துவம் செய்து திரும்பவில்லையா?

தீவிரவாதம் இங்கே புகுந்து கொள்ளுமா?

81 வயதான அந்த அம்மையாருக்கு சிகிச்சை அளித்-தால் தீவிரவாதம் இங்கே வந்து புகுந்துகொள்ளுமா?

மலேசிய நாடு அவரை ஏற்றுத் தங்க வைத்துக் காட்டும் நிலையில், தமிழ்நாட்டுக்கு தொப்புள்கொடி உற-வுள்ள 30 கல் தொலைவில் உள்ள ஈழம், இலங்கையில் இருந்து வந்தவர் மனித உரிமை அற்றவரா?

கலைஞர் அரசுக்கு அல்லவா கெட்ட பெயர்?

எவ்வகையில் இது நியாயம்? நீதி? மத்திய அரசோ, அதன் அதிகாரம் செலுத்தும் அதிகாரிகளோ, அல்லது உளவுத் துறையோ இந்தச் செயலைச் செய்தாலும், சென்னை விமான நிலையத்தில் இக்கொடுமை நடந்-துள்ளபடியால், தி.மு.க. அரசுக்கும், கலைஞர் ஆட்சிக்-கும் அவை சில கெட்டப் பெயரைத் தருவதாக அமை-யாதா?

ராஜபக்சே அரசு கூட அனுமதித்திருக்கிறது

இலங்கையின் ராஜபக்சே அரசுகூட அந்தத் தாய், மருத்துவ சிகிச்சை பெற, மலேசியா செல்வதற்கு விசா வழங்கி அனுமதித்துள்ள நிலையில், இந்திய அரசு இப்படி இதயமற்ற செயலில் இறங்குவது முறையா?

ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பது எங்கள் அரசின் கடமை என்றும், தீவிரவாதத்தினைத் தான் நாங்கள் எதிர்ப்பவர்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் கூறியிருக்கிறார்களே, அதன்படி பார்த்தால் திருமதி பார்வதி அம்மாள் செய்த குற்றம்தான் என்ன? பிரபாகரனுக்குத் தாயாக இருந்ததுதானா?

உள்ளம் குமுறுகின்றது

நமது உள்ளம் குமுறுகின்றது. மனிதாபிமானம் இப்படி செத்து சுண்ணாம்பாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதானா நம் கடமை? அந்தோ வெட்கம்! வேதனை!! இனியாவது பரிகாரம் தேடட்டும்!

--------- நன்றி விடுதலை (17.04.2010)

Friday, April 16, 2010

நாட்டை நாசமாக்கும் வர்த்தக சூதாட்டம்-கிரிக்கெட்..

கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பண ஊழலிலும், ஒழுக்கக் கேட்டிலும் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மத்திய அமைச்சர் சசிதரூர் போன்றோரை காங்கிரஸ் ஆட்சியில் வைத்திருக்கக் கூடாது; உடனே வெளியேற்றுங்கள் என்று பிரதமருக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வர்த்தக சூதாட்டம்-கிரிக்கெட்

அண்மையில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையிலிருந்து மாறி, மிகப்பெரிய வர்த்தக சூதாட்டமாகி விட்டது. ஊழல்களின் சுரங்கமாகவும் ஆகிவிட்டது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இதில் புரளுகின்றன.

விளையாடுகின்ற விளையாட்டாளர்களையும் கூட நல்ல விலை கொடுத்து வாங்கியே வெற்றி_ தோல்விகளை முன்கூட்டியே நிர்ணயிக்கின்றனர்!

நம் நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் முதற்கொண்டு வயது முதிர்ந்த பாட்டிகளையும்கூட இப்போதை விடவில்லை என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

முன்பெல்லாம் ஆண்டுக்கொருமுறை, இருமுறைதான் இது சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பெருநகரங்களில் சில நாள்கள் நடக்கும்.

ஆனால் இப்போது அய்.பி.எல்., (மி.றி.லி) என்ற அமைப்பு_ கிரிக்கெட் அணிகள் உருவாகி, ஏல மோசடி முதற்கொண்டு பலவும் நடை-பெறுவதும், இதில் பல செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள், மத்திய அமைச்சர் நிலையில் உள்ளவர்கள், நட்சத்திரங்கள் ஈடுபட்டு, இந்த வர்த்தக சூதாட்டத்தை நடத்துகின்றனர். இது மிகவும் கேவலமானது.

நாட்டை நாசமாக்கி வரும் கிரிக்கெட் போதை

பஞ்ச பாண்டவர் காலத்திலேயே பாரதக் கலாச்சாரமாக இந்த கிரிக்கெட் போதை, நாட்டை நாசமாக்கி வருகிறது என்பது தான் இதற்கு மூலவேர் ஆகும்!

கடந்த சில நாள்களாக, ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது_இந்த அய்.பி.எல். (மி.றி.லி) 20 ஓவர் கிரிக்கெட்டுகளில் புழங்கிய பண விளையாட்டும், பரஸ்பர குற்றச்சாட்டு ஊழல்களும்தான்!

நடுத்தர வர்க்கம் முதல் எளிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளைப் போல, இது மக்களைச் சுரண்டுகிறது, 3 ஆண்டுகளாக.

அய்.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 8 அணிகள் உள்ளனவாம்! உலகின் அனைத்து நாட்டு வீரர்களும் (உலக மயத்தின் மற்றொரு கூறு போலும் இது) இதில் பங்கேற்கிறார்களாம்!

மர்மம் நீடிக்கிறது

இதனால்_ போட்டியின் மொத்த பணப்புழக்கம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்கள்! இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அய்.பி.எல். போட்டிக்கு மேலும் 2 அணிகளைச் சேர்க்க முடிவு செய்-யப்-பட்டதாம். சமீபத்தில் அந்த 2 அணிகளுக்கான (கொச்சி, புனே அணிகள்) ஏலத்தின் மூலம் நடந்தனவாம். கொச்சி அணி 1530 கோடி ரூபாயும், புனே அணி 1670 கோடி ரூபாயும் கொடுத்தும் அய்.பி.எல்.லில் இடம் பிடித்துள்ளனவாம்!.

இதில் கொச்சி அணி தேர்வு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி-யுள்ளது.

கொச்சி அணியின் விளையாட்டு அமைப்பான ரெண்டஸ்வஸ் (ஸிமீஸீபீணீஸ்ணீக்ஷ்) என்ற நிறுவனம் கொச்சி அணியை விலைக்கு வாங்கி-யுள்ளது. அதன் உரிமையாளர் யார் என்று தெரியாதாம்!. இதனால் (எப்படி இருக்கிறது நியாயம் பார்த்தீர்களா?) கொச்சி அணியை வழிநடத்தப்போகும் உரிமையாளர்கள் யார்? யார்? என்று மர்மம் நீடிக்கிறது.

செய்தியாளர்களிடம் அய்.பி.எல். போட்டி ஆணையர் லலித் மோடி என்பவர், கொச்சி அணி உரிமையாளர் யார் என்பது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது என் கடமையாகும்.

காஷ்மீரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணுக்கு கொச்சி அணியில் உள்ள 25 சதவிகித பங்கில் 19 சதவிகித பங்கு (70 கோடி ரூபாய்கள் மதிப்பு) இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாம்!

சசி தரூர் என்ற கேரளப் பார்ப்பனர்

சர்ச்சைகளை நாளும் உருவாக்கி அதனையே சுவாசிக்கும் வழக்கமாக்கிக்கொண்டே அறிவு ஜீவி, சசிதரூர் என்கிற (கேரளப் பார்ப்பனர் இவர்) பெயரும் இதில் பெரிதும் உருளுகிறது. நாடாளுமன்றத்திலும்,எதிர்க்கட்சியான பா.ஜ.க., இடதுசாரிகளாலும் பேசப்பட்டு வருகிறது!.

அந்த இலவசப் பங்கு பெற்றதாகக் கூறப்படும் காஷ்மீர் பெண்ணை இந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் என்பவர் மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம்!. இதனால் நிதி அமைச்சரின் விசாரணைக்கு இவர் அழைக்கப்பட்டு விளக்கம் அளித்துள்ளாராம்!

ஏன் நனைந்து சுமக்க வேண்டும்?

இத்தகையவர்களை அமைச்சகளாக, மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் ஏன் நனைந்து சுமக்கிறது என்பது நம்மைப் போலவே பலருக்கும் புரியவில்லை!.

இது போலவே சர்ச்சைகளுக்குப் பெயர்போன அமைச்சர் மேலும் 2,3 பேர்கள் இடம்பெற்று, மத்திய ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்ற நிலையும் உள்ளது.

ரூ.70 கோடி கைமாறியிருக்கிறது

சசி தரூர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அய்.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில், தலையிட்டார் என்றும், அவரது உத்தரவின் பேரில் சுனந்தா (காஷ்மீர் அழகிக்கு) ரூபாய் 70 கோடி கைமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது!.

லலித் மோடியின் இணையதளத்தில், சசி தரூர் ஏன் அய்.பி.எல். ஏலத்தில் தலையிடுகிறார் என்று கேட்டிருந்தார்; அதற்கு சசிதரூர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தாராம்!.

ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளில் லலித்மோடிக்கு ரகசியமாக பங்கு உள்ளது. அதுபற்றி அவர் ஏன் வாயைத் திறப்பது இல்லை என்று சசிதரூர் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி ஊழல் ஒரு தொடர் கதை_ இத்துறையில் எனக்காட்டி வருவதாக தெரிகிறது!

இதற்கிடையில் கொச்சி அணியின் செய்தித் தொடர்பாளர் சத்திய ஜித் கெய்க்குவாட் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், லலித்மோடி எங்களைத் தொடர்புகொண்டு ரூ.230 கோடி தருகிறேன்; கொச்சி அணியை நான் சொல்பவர்களிடம் விற்றுவிடுங்கள் என்றார், நாங்கள் மறுத்துவிட்டோம் என்று ஒரு தகவல்!

திடீர் சோதனை

இதற்கிடையில் ஒரு நல்ல செய்தி: வருமான வரித்துறையினர் இந்த அய்.பி.எல். அலுவலகங்களை திடீர் சோதனையிட்டனர் என்பது _ கொள்ளை லாபக் குபேரர்களை வருமான வரித்துறை விட்டுவிடக் கூடாது. திமிங்கலங்கள் தப்பி, சிறுசிறு மீன்கள்தான் வலையில் சிக்குவது வழமை. இதற்கு மாறான நடவடிக்கையாக அது அமையவேண்டும்.

காங்கிரசுக்கு தலைவலி-திருகுவலி

காங்கிரஸ் கட்சி_ஆட்சிக்கு இப்படி ஒரு தலைவலி_ திருகுவலி தேவையா? இவர் போன்றவர்களை விரைவில் வெளியேற்றுவதுதான் நாட்டிற்கும், ஆட்சிக்கும், அக்கட்சிக்கும் நல்லது. இந்த கிரிக்கெட் ஊழல்களுக்கு என்றுதான் முற்றுப்புள்ளியோ?

----- நன்றி விடுதலை (16.04.2010) 

Thursday, April 15, 2010

திராவிடர் மாணவர் மாநில எழுச்சி மாநாடு தமிழகம் முழுவதுமிருந்து திரளுகிறார்கள்....

திராவிடர் மாணவர் கழக மாநில மாநாடு ஏப்.16 அன்று காலை சென்னை பெரியார் திடலிலும் மாலை புரசைவாக்கம் தாணா தெருவிலும் மிக பிரம்-மாண்டமான ஏற்பாட்-டுடன் எழுச்-சியுடன் நடைபெறுகிறது.


தமிழகம் முழுவதுமிருந்து

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களி-லிருந்தும் இளைஞர் பட்டாளத்-தினர் சென்னை நோக்கித் திரண்டு வருகின்றனர். கார், வேன், ரயில் மற்றும் பல வாகனங் களில் வரும் செய்திகள் தலைமைக் கழகத்திற்கு வந்த வண்-ணம் உள்ளன.

பெரியார் திடலில் மாநாடு தொடக்கம்

16.4.2010 அன்று காலை 9 மணிக்கு சென்னை பெரியார் திட-லில் நடிகவேள் ராதா மன்றத்தில் திராவிடர் மாணவர் கழக மாநில மாநாடு தொடங்குகிறது.

இன்னிசையுடன் தொடங்குகின்ற மாநாட்-டிற்கு மாநில மாணவ-ரணி துணைச் செய-லாளர் மு.சென்னியப்பன் தலைமை தாங்கி உரை-யாற்றுகிறார்.

காலை 11 மணிக்கு சுயமரியாதைச் சுடரொ-ளிகளின் படத்தினை கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமி-துரை திறந்து வைத்து பேசுகிறார்.

மாநாடு திறப்பு-ஈரோடு தமிழன்பன்

காலை 11.10 மணிக்கு கவிஞர் ஈரோடு தமிழன்-பன் மாநாட்டைத் திறந்து வைத்து உரை-யாற்றுகின்றார். பகல் 12.10 மணிக்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்-றுகிறார்.

மாநாட்டு இடைவே-ளைக்குப் பிறகு மந்திரம் அல்ல தந்திரமே என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. விவாதப் போர்

அடுத்து விவாதப் போர் நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலா-ளர்கள் கவிஞர் கலி.பூங்-குன்றன், சு.அறிவுக்கரசு, துணைப் பொதுச்செயலா-ளர்கள் துரை.சந்திரசேக-ரன், பிரச்சாரச் செய-லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஆகி-யோர் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர்.

பின்னர் மாலை 4.30 மணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

பிர்மாண்ட பேரணி அடுத்து மாணவர்க-ளின் எழுச்சிப் பேரணி மாலை நேரத்தில் மாநாடு நடைபெறும் தாணா தெரு நோக்கிப் புறப்படுகிறது.

பேரணிக்கு கழக தலைமை நிலையச் செய-லாளர் வீ.அன்புராஜ் தலைமை தாங்குகிறார். பேரணியை கழக துணைப் பொதுச்-செயலாளர் உரத்தநாடு இரா.குணசே-கரன் தொடங்கி வைக்-கிறார். துணைப்-பொதுச்-செயலாளர் டாக்-டர் பிறைநுதல் செல்வி, மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், வட-சென்னை மாவட்ட திக தலைவர் கவிஞர் செ.வை.ர.-சிகாமணி, வழக்குரைஞர் த.வீரசேகரன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வ-நாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் தி.இரா.-இரத்-தினசாமி ஆகியோர் ஊர்வலத்திற்கு முன்-னிலை வகிக்கின்றனர்.

திறந்தவெளி மாநாடு

பின்னர் மதவெறி மாய்ப்போம்! மனித-நேயம் காப்போம் மற்-றும் பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் வெளியீட்டு விழா சென்னை புரசை வாக்கம் தாணா தெருவில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. பல்சுவை இசை நிகழ்ச்சி, வீதி நாடகம், நடை பெறுகிறது. மாண-வரணி அமைப்பாளர் சு.மணி-கண்டன் வர-வேற்புரை-யாற்று-கிறார். மாநில மாணவரணி செயலா-ளர் ரெ.ரஞ்சித்-குமார் தலைமை உரை-யாற்று-கிறார். தலைவர்கள் உரை

மாநாட்டில் எஸ்.டி.-கொரியர் நவாஷ்கனி (நூலைப் பெறுகிறார்) திமுக எம்.பி டி.கே.எஸ்.-இளங்கோவன், மாநகர மேயர் மா.சுப்பிரம-ணியன், விடுதலை சிறுத்-தைகள் கட்சித் தலை-வர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலை-வர் கி.வீரமணி ஆகி-யோர் உரையாற்றுகின்-றனர்.

------ நன்றி விடுதலை(15.04.2010)

ஈழத் தமிழர்கள் நிலை....தமிழ்நாடு கொந்தளித்து எழக்கூடிய நிலைதான் ஏற்படும், -எச்சரிக்கை!

இலங்கையில் உள்நாட்டில் வாழ இயலாமல் கப்பல்மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 254 தமிழர்கள் நடுக்கடலில் கடந்த ஆறுமாத காலமாகத் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அரசு இவர்களுக்கு அகதிகளாக அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் ஏற்பட்டதே இந்த அவல நிலைக்குக் காரணமாகும்.


ஆஸ்திரேலிய பிரதமர் கெவின்ரூட்டின் ஆணைப்படி இந்தோனேசியக் கடற்படை ஈழத் தமிழர்கள் பயணம் செய்த கப்பலை இடை-மறித்-தது. கிறிஸ்துமஸ் தீவுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனாலும் ஈழத் தமிழர்கள் கப்பலை விட்டு இறங்க மறுத்துவிட்டனர்.

ஓர் ஆறு மாத காலம் கடலில் தத்தளிக்கும் மக்களின் அன்றாட வாழ்வு என்பது எவ்வளவு பெரிய தொல்லைகளுக்கும், மன உளைச்சலுக்கும், உடல்நலக் கேட்டிற்கும் ஆட்பட்டு இருக்கும் என்பதை மனித நேயம் உள்ள ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.

பிறந்து வளர்ந்து வளமாக வாழ்ந்த சொந்த நாட்டிலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. அடைக்-கலம் நாடிச் சென்ற நாடும் நடுக்கடலில் வழி மறித்துவிட்டது. இந்த நிலையில், இத்-தமிழர்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது.

ஈழத் தமிழர்களை கொடுங்கோலன் ராஜபக்சே கொன்று குவித்தபோதும் அய்.நா. தன் கடமையினைச் செய்ய முன்வரவில்லை; இந்த இக்கட்டான காலகட்டத்திலும் தன் மனித நேயக் கரத்தை நீட்ட முன்வரவில்லை.

மீண்டும் இலங்கைத் தீவுக்கே அனுப்பி வைத்து விடுவார்களோ என்ற அச்சம் ஈழத் தமிழர்-களை ஒரு பக்கம் உலுக்கிக் கொண்டி-ருக்கிறது.

இன்னும் முள்வேலி முகாமுக்குள் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

ராஜபக்சே அதிபர் ஆகிவிட்டார். நாடாளு-மன்றத் தேர்தலிலும் வெற்றியைக் குவித்து-விட்டார். இதனால் ஈழத் தமிழர்களுக்கு அடி-மேல் அடிதான். குடிக்கும் நீரைக்கூட நிறுத்தி-விட்டார் என்ற கொடுமையான தகவல்கூடக் கசிந்-தது. இந்த நிலையில் நடுக்கடலில் தத்-தளிக்கும் 254 ஈழத் தமிழர்களும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்களேயானால் மிகப்-பெரிய அளவுக்குச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகள் அய்.நா.விடம் வலியுறுத்தவேண்டும்.

ஆஸ்திரேலியா அடைக்கலம் கொடுக்க மறுப்பதில் பிடிவாதமாக இருக்குமேயானால், இத் தமிழர்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிட மற்ற நாடுகள் முன்வரவேண்டாமா? இந்தியாவுக்கு அந்தக் கடமையில்லையா? ஏற்கெனவே ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் வாங்கிக்கட்டிக் கொண்ட இந்தியா, இந்த இக்கட்டான நேரத்திலாவது அரவணைத்துக் கொள்ள முன்வந்தால் அந்தக் கறையைக் கொஞ்சம் கழுவிக்கொள்ள ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தது என்று பொருளாகும்.

உலகின் மனித உரிமை அமைப்புகள் இம்-மக்களுக்கு உரியது செய்ய முன்வரவேண்டும். அவர்களும் ஏன் இப்பிரச்சினையில் தூங்கி வழிகிறார்கள் என்பது விளங்கவில்லை.

வெளியுலகத் தொடர்புக்கும் வழியில்லாமல் ஆக்கப்பட்ட இத் தமிழர்கள் வலுக்கட்டாயமாகக் கப்பலில் இறக்கப்படுவார்கள் என்று கருதிடவும் இடமிருக்கிறது. அப்படி செய்யப்பட்டால் அதைவிட மனித வதை வேறு ஒன்று இருக்க முடியாது.

இப்படி ஒவ்வொரு நொடியும் சித்திரவதை அனுபவிப்பதை விட கடலில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டால் என்ன என்று நினைக்கும் அளவுக்குக்கூட, சூழல்கள் அவர்-களை விரக்தியின் எல்லைக்குத் துரத்துமானால் அதற்கு ஆஸ்திரேலியா மட்டுமல்ல, அய்.நா. மன்றம் உள்பட உலக நாடுகள் அனைத்துமே பொறுப்பேற்க வேண்டிவரும்.

உலகில் மிகவும் பரிதாபத்துக்குரிய இனம் என்ற பட்டியலில் தமிழர்கள் முதலாவதாகவும், கடைசியானதாகவும் இருப்பார்கள் போலும்.

கடலில் தத்தளிக்கும் தமிழர்களுக்குப் புது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்காவிட்டால், தமிழ்நாடு ஏதோ ஒரு வகையில் மேலும் கொந்தளித்து எழக்கூடிய நிலைதான் ஏற்படும், -எச்சரிக்கை!

---- விடுதலை தலையங்கம் (15.04.2010)


Wednesday, April 14, 2010

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் (14.04.2010) சிந்தனைகள்....

இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் (1891). இந்துமத வருணாசிரமப் பிரிவால் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமராவ் ராமராவ்தான் பிற்காலத்தில் டாக்டர் அம்பேத்கர் என்னும் பெரு மகனாய் ஜொலித்தவர்.


வடநாட்டில் பிறந்த அண்ணல் அம்பேத்கரும், தென்னகத்தில் பிறந்த தந்தை பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். உலக அறிஞர்களுள் ஒருவர் -_ போற்றத் தகுந்தவர் அம்பேத்கர் என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர். இருவரும் சம காலத்தில் வாழ்ந்த சமூகப் புரட்சியாளர்கள்.

வருணாசிரம எதிர்ப்பு, அதன் தோற்றுநர் களான பார்ப்பனர் எதிர்ப்பு இவற்றில், இரு தலைவர்களும் ஒரே போக்கில் நிமிர்ந்து எழுந்த இமயமலைகள்!

நோயின் மூலபலத்தை எதிர்கொண்டு தாக்கியதில் இவர்களுக்கு இணையானவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எவரும் இலர்.

காந்தியார் எதிர்ப்பு - _ காங்கிரஸ் எதிர்ப்பு என்று எடுத்துக் கொண்டாலும் இருவரும் இணைக் கோடுகள்தாம்.

இந்தியா ஒரு சமத்துவம் இல்லாத நாடு. இந்தியா பல அடுக்குகளை உடைய கோபுரம் போன்றது, ஆனால் இதற்கு நுழைவு வாயிலே இல்லை. ஓர் அடுக்கிலிருந்து மற்றொரு அடுக் கிற்குச் செல்ல ஏணிப்படி ஏதும் இல்லை. ஓர் அடுக்கில் பிறந்தவர் அங்கேயேதான் மடிய வேண்டும் என்று மிகத் துல்லியமாகக் கணித்த சிந்தனையாளர் அவர்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி என்ற பிரச்சினையில் லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் நேருக்கு நேர் காந்தியாரையே எதிர் கொண்ட செம்மல் அவர். எதிர்த்ததோடு அல்லா மல் தமது அறிவார்ந்த நாணயமான முறை யீட்டால் அதில் வெற்றி பெற்றவரும்கூட!

கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்கு ஒரு வழி காட்டும் திட்டமான தனித் தொகுதியை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், உடன் இருந்தவர்களே அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கைவிட்ட கொடுமைகளை என்னென்பது!

அந்த நேரத்தில்கூட ஒரு காந்தியாரின் உயிரைவிட கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக் களின் உரிமை வாழ்வுதான் முக்கியம் _ பணிந்து விடாதீர்கள்! என்று அண்ணல் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்த ஒரே இந்தியத் தலைவர் தந்தை பெரியார் தான்.

அதனால்தான் தந்தை பெரியார் அவர்களிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார் அண்ணல்.

சட்ட அமைச்சராக இருந்த நேரத்தில் இந்து சட்டத்திருந்த மசோதாவை தாம் எண்ணிய போக்கில் கொண்டு வர முடியவில்லை என்ற நிலையில், பதவியில் ஒட்டிக் கொண்டு சுகமான பாக்கியங்களை அனுபவிக்க வேண்டும் என்று நினையாமல், பதவியைத் தூக்கி எறிந்து _ கொள்கையே பிரதானம் என்ற சான்றாண்மையை சூரியன் உள்ள வரைக்கும் நிலை நாட்டிய நீண்ட புகழுக்குரிய மாமணியாக நம்மிடம் ஒளிர்கிறார்.

இன்றைய நிலையில் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமைத் தகர்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை என்கிற கண்ணோட்டத்தில் இவ்விரு மாபெரும் தலைவர்களின் சிந்தனைக் கூர்மைகள் நிச்சயம் தேவைப்படுகின்றன.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைபற்றி இவ்விரு தலைவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இவ்விரு பகுதி மக்கள்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் பெரும்பான்மை மக்கள் ஆவார்கள். ஆட்சி அதிகாரம் இவர்கள் கைகளுக்கு வருவதுதான் உண்மையான மக்களாட்சியாக இருக்க முடியும்.

இந்த ஒற்றுமையைச் சிதற அடிக்க ஆதிக்க சக்திகள் பல்வேறு யுக்திகளை, தந்திரங்களை அவ்வப்போது பிரயோகப்படுத்தி வருகின்றன. ஏன்? உச்சநீதிமன்றம்கூட பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்ததுண்டு.

இந்தக் கண்ணிவெடியில் சிக்காமல் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் சிறுபான்மையினரும் கைகோத்துத் தோள் தூக்கி எழுந்தால் சமத்துவமும், சமதர்மமும் ஒரே நொடி யில் பூத்து மலரும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 120ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனையாக இதனைக் கொள்வோமாக!

------ நன்றி விடுதலை தலையங்கம் (14.04.2010)


விக்ருதியாம்! பார்ப்பனீய ஆண்டுப் பிறப்புக்கு வாழ்த்துக் கூறுவதா?

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தாம் -_ தெரிவித்-துள்ளார் அண்ணா திமுக பொதுச் செயலா-ளர் செல்வி ஜெயலலிதா.


உண்மையிலே அண்-ணாவின் கொள்கையை ஏற்பவராகவிருந்தால், அண்ணாவின் சிந்தனை-கள்-பற்றிய அடிப்படை ஞானமிருந்தால், சித்தி-ரையை முதல் நாளாகக் கொண்ட பழைய பத்-தாம் பசலித்தனமான பார்ப்-பனீய ஆண்டுப் பிறப்-புக்கு வாழ்த்துக் கூறு-வாரா?

விக்ருதி என்று இந்த ஆண்டுக்குப் பெயர் கொடுக்கப்பட்-டுள்ளதே -_ இந்த சொல் தமிழ்தானா?

இந்த ஒரு சொல் இருக்கட்டும்; - 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்றே ஒன்று _ கண்ணே கண்ணென்று தமிழில் சொல்லுவதற்கு தப்பித் தவறி ஒரே ஒரு சொல் உண்டா?

இதற்கென்று ஒரு வரலாற்றுப் பின்னணி-யாவது உண்டா? துரு-நாற்றம் பிடித்த _ கேவலமான ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று பார்ப்பனீயத்துக்கே உரித்-தான ஆபாசக் கற்-பனையில் உருவகப்-படுத்தப்பட்டுள்ள புராணக் குப்பையைக் கோபுரத்தில் தூக்கி வைக்க ஆசைப்பட-லாமா?

இதைவிட தரம் தாழ்ந்த மூடநம்பிக்கை ஒன்று இருக்க முடியாது என்று சொல்லும் அள-வுக்குள்ள ஒன்றுக்காக வாழ்த்துக் கூறுகிறார் முன்னாள் முதல்வர் என்றால் இதன் பொருள் என்ன?

இந்த அம்மையார் அய்யா, அண்ணா பெயரை உச்சரிப்பதே அவசியத்துக்கும் அவசரத்-துக்கும், ஊரை ஏமாற்றுவதற்கும்தானே தவிர, மற்றபடி அந்தரங்-கத்-தில் ஆரிய சொரூபம் தான் அவருக்கானது என்பது அப்பட்டமாக விளங்கிடவில்லையா?

சரியான சந்தர்ப்பத்-தில் எல்லாம் சரியாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்கிறார் இந்த ஆரியக் குலத் திலகம்!

அண்ணா திமுகவில் உள்ள திராவிட இயக்கக் கொள்கைகளில் நம்பிக்-கையுள்ள ஒரே ஒருவ-ராவது அக்கட்சியில் இருப்பாரேயானால், இந்த நிமிடம் முதற்-கொண்டே அந்தத் தலை-மையை உதறி எறிந்த வெளியில் வந்து தன்மான உணர்வைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

அது சரி, மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் சகோதரர் வைகோவும் அம்மை-யாருடன் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறாரே _ எங்கே போய் முட்டிக் கொள்ள? வைகோ அவர்கள் அணிந்திருக்-கும் கறுப்புச் சால்வை அவரைக் கேலி பேசாதா?

- விடுதலை மயிலாடன் (14.04.2010)





Tuesday, April 13, 2010

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தொடங்க....சுயமரியாதை என்ன எங்கள் அப்பன் வீட்டு சொத்தா?

நானும் வெளிநாட்டில் உள்ள ஒரு நண்பரும் உரையாடி கொண்டிருந்தோம். அப்போது நான் கூறினேன் இப்போ எங்கே பார்த்தாலும் வேலை நேரம் போக ஏன் வேலை நேரத்திலும் கூட நாலு பேரு சேர்ந்த (குறிப்பாக கணினி துறை அன்பர்கள்) என்ன பேசுகிறார்கள் என்றால் சினிமா,கிரிக்கெட்,பப்,வார இறுதிநாள் வெளியில் செல்லும் இடம் மற்றும் பல... தப்பி தவறி கூட பகுத்தறிவோ இல்ல நாட்டு நடப்பை பற்றியோ பேசிவிட மாட்டார்கள். நாம் இடையில் ஏதேனும் திசை திருப்பி முற்போக்கு விசயங்கள் பேசினால்...சை வந்துடன்ய என்று அலுதுகொள்ளும் அளவிற்கு இருக்கிறார்கள் என்றேன். உடனே அந்த தோழர் சொன்னார் நீ பகுத்தறிவு மோகம் கொண்டு அலைகிறாய் அவர்கள் சினிமா மோகம் கொண்டு அலைகிறார்கள். எப்படி அவரின் ஒப்பீடு.(மனைவியும் விபசாரியும் ஒன்றா?) எந்த அளவு அவரின் புரிதல் இருந்தால் பகுத்தறிவை மோகம் என்பார். மோகம் என்ற சொல் எதுக்கு பொருந்தும் என்பதே அறியாமல் அவரின் பேச்சு. உதரனத்திற்க்கு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் சாதா அதே நினைப்பில் இருந்து கொண்டு இருக்கிறார் என்றால் அவர் இருதய மோகம் கொண்டு அலைகிறார் என்று கூறுவோம (அவரின் அளவிற்கு இரங்கி பதில் கூற வேண்டியுள்ளது நிலைமை...கொஞ்சம் புரிந்தவர்கள் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம்). அது போல பகுத்தறிவாதிகல் பகுத்தறிவு பற்றி விவாதிப்பது , சாதி ,மதம், மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றி விவாதிப்பது என்பது பகுத்தறிவு மோகம் கொண்டு அலைவதா? என்ன ஒரு அறிவாளித்தனம்...

சரி விவாதப்படி பகுத்தறிவு மோகம் கொண்டே அழைக்கிறோம் என்றாலும் கூட, அதனால் ஏற்படும் நன்மைகள் நம் வாழ்க்கையை நெறிப்படுத்தவும் அதனை மற்றவர்களுடன் விவதிப்பதினால் அவர்கள் நடைமுறை பக்குவப்பட்டு வாழ்க்கையில் நல்வழி பெறுவதும் நிச்சயம். அதில் ஏதேனும் தவறு காண இயலுமா?. பகுத்தறிவு பற்றி விவாதம் செய்வதால் ஏற்படும் மாற்றங்கள் (கணக்கில் இட முடியாது ..இருந்தாலும் ஒரு சில )

--- மூடநம்பிக்கை ஒழியும்.
-- பகுத்தறிவு, சுயமரியாதை உணர்வு ஏற்படும்
-- மதவெறி மாய்ந்து மனித நேயம் மிளிரும்
-- எந்த ஒன்றும் கேள்விக்கு உட்படும்

இப்படி அடிகிகொண்டே போகலாம்...அனால் சினிமா மோகம் என்ன பண்ணும்...அதுவும் இன்றைய சினிமா ... யோசியுங்கள்..எழுதவே கூசுகிறது..வாசகர்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

மேலும் நாம் சிலரிடம் பேசிகொண்டிருக்கும் பொழுது முற்போக்கு சிந்தனைகள் பற்றி பேசினால் ..நீ முதலில் உன் வீட்டில் உள்ள நபர்களை திருத்து அப்புறம் உலகுக்கு  சொல்லலாம் என்ற செய்தியையும் நம்மிடம் எடுத்து வைக்கிறார்கள். நன்றாக கவனியுங்கள் இங்கு "திருத்து" என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லாமல் இருக்கிறது. எப்படி என்றால் ஒருவன் தவறு செய்தால் தானே திருந்த வேண்டும் அல்லது திருத்த முயற்சிக்க வேண்டும். இங்கு நாம் என்ன தவறு செய்தோம்?. இப்படி மூடநம்பிக்கை,சாதி,மதம்,கடவுள்,சாஸ்திரம் என்று நாம் பிரிந்து கிடக்கிறோம்.இப்படி பிரிந்து கிடப்பது பற்றி ஏன் என்று பகுத்தறிவோடு விவாதம் செய்ய கூடாத? இப்படி கிடப்பது அவர்களே தவறு என்று ஒப்புகொள்ள வருகிறார்களா? எனக்கே புரியவில்லை. ஒரு மனிதன் நல்ல சிந்தனையோடு,மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் நல்லொழுக்கத்துடன், ஒற்றுமையுடம் மனிதநேயம் காத்து அடிமைத்தனம் இல்லாத வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்க்கான ஒரு வழிகாட்டுதலை பகிர்ந்துகொள்ளுவது என்பது திருத்துவதா? இப்போது புரிகிறது, சுயமரியாதை என்ன எங்கள் அப்பன் வீட்டு சொத்தா என்று ஏன் பாரதிதாசன் கேட்டார் என்று. இவர்களிடம் நாம் என்ன செய்வதெல்லாம் பொது நலத்தோடு இருக்க வேண்டும் என்றா சொல்லுகிறோம்,  குறைந்த பட்ச பொதுநலம் தான் நாம் எதிர்பார்கிறோம் எப்படி என்றால் பராசக்தியில் கலைஞர் அவர்கள் சொல்லுவரே "மீன் எப்படி தன் உணவிற்காக மனிதனின் புண்ணினை பிடுங்கி தின்கிறதோ" அந்த மாறி. மீன் நம் கால் பகுதியில் உள்ள சிரங்கை பிடுங்கினால் அதற்கும் உணவாகி விடும் நாமும் விரைவில் அதில் இருந்து குணம் அடைந்து விடுவோம். அந்த அளவு பொது நலம் இருந்தால் போதும்.

சரி இப்படி இந்த அறிவை மற்றும் தமக்கு தெரிந்த முற்போக்கான விசயங்களை பகிர்ந்துகொள்ள,எடுத்துரைக்க முதலில் தன் குடும்ப உறுபினர்களிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்பது எவளவு அறியாமை தனமான ஒரு பேச்சு. அவர்களும் பொதுமக்களின் ஒரு பகுதிதான். உதரனத்திற்க்கு புதிதாக சென்னை க்கு வந்த ஒரு தோழர் வெளியில் இரு சக்கர வாகனத்தில் கிளம்புகிறார் அப்பொழுது நாம் பக்கத்தில் இருக்கிறோம் அப்போ அவரை பார்த்து நண்பரே தலை கவசம் அணித்து, சிக்னலில் பார்த்து செல்லவும் இல்லேன்னா இங்கே அபராதம் அதிகம் வசூலிப்பார்கள் என்று சொன்னால் உடனே அவர் முதல்ல நீ இத போய் உன் குடும்ப நபர்களிடம் சொல்லு அப்புறம் ஏன் கிட்ட சொல்லலாம் என்றால் எவளவு அப்பதாமோ அவளவு அபத்தம் தன் குடும்ப உறுபினர்களிடம் சொல்லி என்னிடம் வா என்பது. குடும்பதில் உள்ளவர்களிடம் நாம் விவாதம் செய்கிறோம் ஏற்று கொள்ளுபவர்கள் ஏற்று கொள்ளட்டம் அதே போலதான் வெளியிலும் விவாதம் செய்கிறோமே தவிர அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்றைக்கும் பெரியார் தொண்டர்கள் கூறியதே கிடையாது. பிடிச்சா  ஏத்துக்கோ  இல்லையா தூக்கி போட்டு போய்கிட்டே இரு. இதேதான் குடும்ப உறுபினர்களுக்கும் பிடிச்ச ஏத்துக்க போறாங்க இல்ல அவங்க வழில போக போறாங்க. நீங்கள் விவாதம் செய்யும் பொழுது உங்கள் எதிர் வினைகளை கேள்விகளாக கேட்காமல் அதற்க்கு பதில் அளிக்க இயலாமல் தப்பிக்க பயன்படுத்தும் ஒரே வார்த்தையாக இதனை பயன்படுத்த வேண்டாமே...பேசுவது எல்லாம் நல்லதாக தெரிந்தும் நம்மால் அவைகளை ஏற்க மனம் இடம் கொடுக்க வில்லை என்பதற்காக..அதில் இருந்து விடுபட இப்படி ஒரு அறியாமை தனமான கேள்விகளை கேட்பது கண்ணிருந்தும் குருடராய்,காதிருந்தும் செவிடராய் இருப்பது போல கல்வி பெற்றும் அறியாமையின் பிடியில் இருப்பதை தானே வெளிப்படுத்துகிறது.

அய்யா பெரியார் அவர்கள் தான் சொல்லுவார்கள் இங்கே இருப்பவர்கள் மானம் கெட்டு  மதி இழந்து கிடக்கும் சுயசிந்தனை அற்ற கூட்டம் இதில் போய் எனக்கு நல்லவன் என்று பட்டம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மிக மிக முட்டாள்தனம். எனவே நான் முடிந்த அளவு கேட்ட பேரு வாங்கத்தான் ஆசை படுகிறேன் என்று கூறுவார்கள் அந்த அறிவு ஆசானின் வழி வந்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய பொருட்டா. ஏதோ விவாதம் செய்தவர் ஒரு சிந்தனை வாதி என்பதினால் என் நேரம் செலவிட்டு இதனை எழுதும் நிலைமைக்கு ஆளானேன். (ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் நான் சொல்லி இருக்கும் அனைத்தும் அடிபடையே .அதனால் வாசிப்பவர்கள் இதனை ஏன் இவன் எழுதணும் என்று நினைக்கலாம் அல்லவா.அதனால்தான்.)

எவளவு இடையூறுகள் வந்தாலும் பெரியாரின் வழி சென்று சாதி,மதம்,சாஸ்திரம்,கடவுள்,மூடநம்பிக்கை ஒழித்து வளரும் சமூகம் பகுத்தறிவு ஒளி வீசும் சமூகம் ஆக மாற பெரியார் கொள்கைகளுக்கு உங்களால் முயன்ற பங்களிப்பை கொடுங்கள்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

படைபோல் தடை உடைத்து பெரியார் திடலை நோக்கி வாருங்கள்!

ஏப்ரல் 16 வெள்ளியன்று சென்னையில் நடக்க விருக்கும் திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு குறித்தும், மாணவச் சிங்கக் குட்டிகளின் வருகை குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


வருகின்ற 16 ஆம் தேதி (16.4.2010) வெள்ளியன்று திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு சென்னையில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி, இரவு புரசை தாணா தெருவில் நடைபெறும் திறந்த-வெளி அரங்கில் இரவு 9 மணிவரை மிகப்பெரிய அளவில் நடைபெற மாணவர் கழகப் பொறுப்-பாளர்-களும், தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும் தேனீக்-களாக பறந்து திரிந்து ஏற்பாடுகளைச் செய்து வரு-கின்றனர்!

படாடோப மாநாடு அல்ல!

படாடோபம் இல்லாது, பசுமையான உள்ளங்-களோடு பறந்துவரும் சிட்டுக்களாக எமது பத்தரை மாற்றுத் தங்கங்களான மாணவக் கண்மணிகள் திசை-யெட்டிலுமிருந்து திரண்டு வர ஆயத்தமாகிவிட்டனர் என்ற செய்தி தேன் வந்து பாயும் செய்தியாக இருக்கிறது, இனிக்கிறது!

மாணவர்களின் கல்விக் கண்ணைப் பாதுகாக்கும் பணிதான் தந்தை பெரியார் என்ற அறிவு ஆசானின் ஈடு இணையற்ற பணி.

சமூகநீதிக்காகப் பிறந்த இயக்கம்

தற்குறிகளாக இருந்து, மனு தர்மத்தால் மடிந்து கொண்டிருந்த கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, ஒதுக்-கப்பட்ட மாணவர்களுக்குக் கல்விக் கண்ணொளி அனைவருக்கும் தரப்படல் வேண்டும் என்பதற்-காகவே பிறந்ததுதான் சமூகநீதி இயக்கமாம் _ நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் _ திராவிடர் கழகம் _ திராவிடர் இயக்கம் எல்லாம்!

கல்வி நீரோடை ஆரிய முதலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, நம் பிள்ளைகள் இறங்கிட முடியாத நிலையை எதிர்த்துப் போராடி, நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!

இடையில் எத்தனையோ தடைக்கற்கள்!

ஆச்சாரியார் போன்ற பெரிய மனிதர்கள் பதவிக்கு வந்து ஏற்கெனவே இருந்து வந்த பள்ளிகளை (ஆரம்பப் பள்ளிகளை) ஆயிரக்கணக்கில் இழுத்து மூடிய நிலையில், அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு, இன்று கல்வியை அடிப்படை உரிமையாக்கும் அளவுக்கு இந்த நாட்டை வளப்படுத்திய சமூகப் புரட்சி இயக்கம் திராவிடர் இயக்கம்!

குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர்கள் நாம்!

அதே குல்லூகப்பட்டரால் குலதர்மக் கல்வித் திட்டம் 1952 இல் கொண்டு வந்து நுழைக்கப்பட்டபோது (அப்பன் தொழிலேயே மகன் செய்யக் கற்றுக்கொள்ள-வேண்டும்; அரை நேரத்தில் வெளுப்பவன் மகன் வெளுக்க-வேண்டும்; சிரைப்பவன் மகன் சிரைக்க-வேண்டும்; தோட்டியின் மகன் மலம் எடுக்கவேண்டும்) அதை எதிர்த்துப் போராடியதனால்தான் இன்று எங்கெங்கு காணினும் பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் முதலிய பட்டதாரிகள்!

இவை ஒரு காலத்தில் அக்கிரகாரத்தின் ஏகபோக உடைமைகள்! 1900-_த்தில் நூற்றுக்கு ஓரிருவர்கூட தமிழர்கள் படித்தவர்கள் இல்லை!

அந்த நிலை மாறாமல் இருக்கவேண்டும் என்றுதான் ஆச்சாரியார் எழுப்பிய தடுப்புச்
சுவர் _ குலக்கல்வித் திட்டம்!

வகுப்புரிமைக்கு உலை வைத்தார்களே!

அதற்குமுன் வகுப்புரிமை _ சமூகநீதி ஆணை _ செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பு; 1928 முதல் 1950 வரை நடைமுறையில் கிடைத்த உரிமைக்கு உலை வைக்கப்பட்டது!

அதை எதிர்த்து போர்ச் சங்கு ஊதிய தலைவர்தான் தந்தை பெரியார்!

இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு, அந்நிலையை மாற்றியவர் தந்தை பெரியாரே! சாவு மணி அடிக்கப்பட்ட சமூகநீதிக்கு மீண்டும் உயிரூட்டினார்கள்!

இன்று எங்கெங்கு திரும்பினும் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் பூத்துக் குலுங்குகின்றன!

இவை சரஸ்வதி கடாட்சத்தினால், வந்தவை அல்ல.

நீதிக்கட்சி ஆட்சி என்ற திராவிடர் ஆட்சியில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தொண்டு, பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசரின் அரிய முயற்சி; அண்ணா வழியில் கலைஞர் ஆட்சியாலும் கைமேல் கிட்டிய பலன்கள்! இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்ட இடையூறுகள் ஆயிரம் ஆயிரம் என்றாலும், அந்தத் தடை ஓட்டப் பந்தயத்தில் (பிக்ஷீபீறீமீ) தாண்டி நிற்கும் ஒரே மண் தமிழ்மண்!

இட ஒதுக்கீட்டைப் பறிக்கச் சதி!

இன்றோ...? இட ஒதுக்கீட்டைப் பறிக்க மத்திய அரசின் மறைமுகச் சட்டங்களும், திட்டங்களும் தலைதூக்கப் பார்க்கின்றன. கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து மாற்றி பொதுப் பட்டியலுக்குக் கொண்டுபோனதன் சூட்சமம் (சூழ்ச்சி) இன்று புரிகிறது! வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை இறக்குமதி செய்து, சமூகநீதிச் சட்டங்களை சவப்பெட்டிக்குள் வைக்கும் ஏற்பாடு அமைதியாக _ ஆனால், உறுதியாக மத்திய அரசின் கல்வித் துறையால் _ மனித வள மேம்பாட்டுத் துறையால் தொடங்கப்பட்டு, துணிச்சலுடன் நடைபெறுகிறது!

வருமுன் காப்போம்!

நம் மாணவர்களின் நிலை ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் வேதனை மலிந்த நிலை! எப்போதும் விழிப்போடும், சமூகநீதியை கண்ணைக் காக்கும் இமைபோல நம் இயக்கம் செயல்படுவதால், வருமுன் காக்க வரிசையாக அணிவகுக்கத் தவறுவதில்லை நமது இயக்கமும், அதன் பாசறைத் தோழர்களும்! மதவெறியைப் பரப்பி, மனிதநேயத்தை மண்ணுக்குள் புதைக்க காவிக் கூட்டம் தனது அணியாகிய ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினை (ஏபிவிபி) ஆயத்தப்படுத்தி வருவது ஆபத்தான போக்காகும்!

சரியான நேரத்தில் மாணவரணி மாநாடு

எனவேதான், சரியான நேரத்தில் நமது மாணவர் அமைப்பு தலைநகரில் கூடுகிறது! கொள்கை சிங்கக் குட்டிகளே, பதவி, பட்டம், புகழ் என்ற போதை-களுக்கோ, ஜாதி, மதப் பேதங்கள் என்ற மயக்க பிஸ்-கெட்டுகளுக்கோ ஆளாகாத மாணவச் செல்வங்களே, உங்களைக் கட்டித் தழுவிடக் காத்திருக்கிறோம்!

உயர்நிலை காண உழைக்கும் தன்னலம் அறியாத தணலின் பிழம்புகளே _ உங்களால் சுட்டெரிக்கப்படக் கூடிய குப்பைகள் அநேகம். சுற்றுச்சூழலைப் பாது-காக்கும் வண்ணம் அதனையும் லாவகமாகச் செய்ய நல்ல திட்டங்களைத் தீட்டிட வாரீர்! வாரீர்!!

படைபோல் தடை உடைத்து வருகவே!

தலைநகர் நோக்கி, தந்தை பெரியார் திடலை நோக்கி வாருங்கள்!
உண்டிக்கல்ல, உயர்வுக்கல்ல;
தொண்டுக்காக தூயவர்களே வாருங்கள்!
அணி அணியாய் வந்து பணிமுடித்து மகிழ படைபோல் வருக!
சமூகத் தடை உடைக்க வருக!

---- நன்றி விடுதலை (13.04.2010)

Monday, April 12, 2010

கல்கி இதழ் கூறுவது திருவிழாவா? பார்பன தந்திரமா? சிந்தீப்பீர்

திருவிழா ஸ்பெஷல் என்ற தலைப்பிட்டு இவ்-வாறு கல்கி இதழ் பல்-வேறு தகவல்களைத் தந்திருக்கிறது.


பிரமோத்சவம் என்-றால் என்ன என்பதில் ஆரம்-பித்து பல தகவல்-களை அது தந்திருக்கிறது.

சாமிக்கு எப்படி எப்-படியெல்லாம் அலங்-காரங்-கள் என்று ஆரம்பித்து, உத்ஸவங்களுக்குள்ளிருக்கும் தாத்தா _ பாட்டிக் கதை-கள்-வரை சொல்லப்பட்-டுள்ளது.

கிராம தேவதை உத்ஸ-வம் என்று தொடங்கி (கிராமத்துக் காவல் தெய்-வத்துக்கு நடைபெறும் விழாவாம்).

அனுக்ஞை, வாஸ்து சாந்தி, ம்ருத் சங்கிரகணம், ரக்ஷாபந்தனம், பேரீதாட-னம் அஸ்திர தேவர் பூஜை, திக்பந்தனம், விசர்-ஜனம், தீர்த்தவாரி ரக்ஷா விசர்ஜனம் என்று ஒரு நீண்ட பட்டியல் தரப்பட்-டுள்ளது.

இதனைப் படிக்கும் எவருக்கும் ஓர் அய்யப்-பாடு எழத்தான் செய்யும்_ எழுந்திடவும் வேண்டுமே!

இந்தச் சொற்களில் ஒன்றுகூட தமிழ் இல்-லையே, அனைத்தும் சமஸ்-கிருதத்தில்தானே இருக்-கிறது. அப்படியிருக்கும்-பொழுது தமிழ்நாட்டுக்-கும், தமிழர்களுக்கும், இந்தக் கோயில் விழாக்-களுக்கும் என்ன ஒட்டு உறவு?

நியாயமாக எழ வேண்-டிய அறிவார்ந்த வினா இது என்பதில் அய்ய-மில்லை.

ஆரியர் தமிழில் தமிழ்-நாட்டில் ஊடுருவியதன் பின்விளைவே இந்தக் கோயில் விழாக்கள் என்-பதற்குப் பெரிய பெரிய ஆய்வுகள் தேவைப்படா.

இந்தக் கோயில் சமாச்-சாரங்கள் என்பவற்றைத் தோலுரித்துப் பார்த்தால் பார்ப்பன ஜாதிக்கு அதி-முக்கியத்துவம் தலை-தூக்கி நிற்பதை எளிதில் அறிந்துகொள்ள முடி-யுமே!

கோயில், அதற்குள் வடித்து வைக்கப்பட்டுள்ள மூல விக்ரகம், இவற்றின்-மீது மக்களுக்கு மிகப்-பெரிய பக்தியை _ மரி-யாதையை உண்டு பண்-ணுவது; இவற்றோடு அணுக்கமாக _ நெருக்-கமாக_ தொடர்புடையவர்-களாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள் என்ற எண்-ணத்தை ஏற்படுத்துவது _ இந்தப் பின்னணியில் அவர்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள், கட-வுளால் மேல் நிலையில் படைக்கப்பட்டு இருப்பவர்-கள் என்ற நம்பிக்கையை அழுத்தமாக நிறுவுவது இதன் பின்னணியில் இருப்பதைக் கவனிக்க-வேண்டும்.

கடவுளுக்கு உகந்த மொழியும், பார்ப்பனர்-களின் சமஸ்கிருதம்தான் _ அதுதான் தெய்வ மொழி என்று ஆக்கப்-பட்டதன் சூழ்ச்சியைக் கவனித்தால்_ கடவுள் என்பதைவிட, அந்தப் பெயரைப் பயன்படுத்தி பார்ப்பன ஜாதி ஆதிக்-கத்தைக் கட்டுவதுதான் இந்தக் கோயில், குளங்-களின் தந்திரம் என்பதைப் பக்திப் போதையில் தத்-தளிக்கும் மக்கள் உணர்-வார்களா?

- விடுதலை (11.04.2010) மயிலாடன்



பத்திரிக்கைகளே மூடத்தனத்தை வளர்க்காதே! முற்போக்குச் சிந்தனையை மழுங்கடிக்காதே!!

நாரதன் என்ற ஆணுக்கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த அறுபது குழந்தைகள்தாம் தமிழ்ப் புத்தாண்டுகள் என்ற அருவருப்பான ஆபாசக் கதையை அடிப்படையாகக் கொண்ட_- சித்திரை முதல் நாளாகக் கொண்ட அந்தக் குழப்பத்துக்கு இடமான கணக்கு முறையைத் தூக்கி எறிந்து, தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சியை மய்யப்படுத்தி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.


இந்த நிலையில் பிரபவ என்று தொடங்கும் அந்தப் பார்ப்பன ஆண்டு முறை என்பது காலாவதியாகிப் போய்விட்ட ஒன்றாகும்.

ஆனால் பார்ப்பனர்கள் விடாப்பிடியாகவும், பார்ப்பனர்களுக்குத் துணை போகும் சில தொங்கு சதைகளும் பழைய பத்தாம்பசலித்தனமான ஆண்டு முறையை நிலைநாட்டும் வகையில் நடந்து கொள்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழர்களின் தன்மான உணர்வுக்கும்,- மறுமலர்ச்சிக்கும் தடை போடும் அற்பத்தனமுமாகும்.

தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு, அந்தத் தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில், பழைய சேற்றுக் குட்டையில் தமிழர்களை விழச் செய்யும் வகையில் தமிழ் நாளேடுகள் சில விக்ருதி ஆண்டு ராசி பலன்கள் என்ற பெயரில் இணைப்புகளை (ஷிஜீஜீறீமீனீமீஸீ) வெளியிடுவது அசல் வெட்கக்கேடாகும். இந்த ஏடுகளின் இத்தகைய போக்குகள் கண்டிக்கத்தக்கதும், வெட்கப்படத்-தக்கதுமாகும்.

இதில் ஒரு வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்த ஆண்டுப் பிறப்பில் ஏதோ விஞ்ஞான உண்மைகள் இருப்பது போலவும், வான அறிவியல் கொஞ்சி விளையாடுவது போலவும், வானியல் புறந்தள்ளிய குப்பைகளை முட்டாள்தன-மாக கூசாது எழுதித் தொலைக்கின்றன.

12 ராசிகளிலும் சூரியன் தங்கியிருக்கும் காலம்தான் ஒரு மாதம். சித்திரை ஒன்றாந்தேதி சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும். தற்போது விரோதி ஆண்டு முடிந்து விக்ருதி ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் சனி பகவான் மற்றும் ராகு, கேது ஆகியோர் பெயர்ச்சி அடையவில்லை. சனிபகவான் ஆண்டு முழுவதும் கன்னி ராசியிலும், ராகு தனுசிலும், கேது மிதுனத்திலும் இருக்கிறார்கள் என்றெல்லாம் தம் போக்கில் எழுதுகிறார்களே, அவர்களை நோக்கி அறிவியல் வானியல் விடுக்கும் வினா இதுதான்:

கோள்களில் ராகு, கேது என்று இருக்கின்றனவா? எந்த வானியல் அறிவு இதனை ஏற்றுக் கொண்-டிருக்கிறது?

ராகு என்ற பாம்பும், கேது என்ற பாம்பும் சந்திரனை விழுங்குகின்றன என்றெல்லாம் மனிதர்-களுக்குத் தவறான-_ முட்டாள்தனமானவற்றைச் சொல்லிக் கொடுக்கலாமா? மோசடிக் குற்றத்தில் இவர்களைக் குற்றக்கூண்டில் நிறுத்தவேண்டாமா?

சூரியன் என்பது நட்சத்திரம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அதனைக் கோளாகச் சித்திரிப்பவர்களுக்கு எந்த அளவுக்கு வானியல் அறிவு இருக்கிறது?

மக்களிடத்தில் பக்தி இருக்கிறது;- பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால், புராணங்களின் பெயரால் கூறப்படுபவற்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு காரணத்தால் எந்தக் குப்பையையும் கொட்டி பத்திரிகைகளாக்கி, பாமர மக்களின் பணத்தைப் பறிக்கும் வழிப்பறி அல்லாமல் இது வேறு என்னவாம்?

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்க்கவேண்டும்_- இது ஓர் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதற்கு எதிராக மக்களை மூடக் குழியில் தள்ளும் இந்த ஊடகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது தவறல்ல!

குற்றங்களில் மாபெரும் குற்றம் மக்களின் அறிவைத் திசை திருப்புவதாகும்.

தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசு ஏற்றுக் கொண்டு, சட்டமியற்றியதற்குப் பிறகு, பழைய முறையில் எழுதினால் அது எப்படி தவறோ, குற்றமோ, அதேபோன்றதுதான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் ஒருமித்த குரலில் ஒரு சட்டத்தை நிறைவேற்றி செயல்-படுத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்த பின், அதற்கு நேர் எதிரான ஒன்றைக் கடைபிடிக்கச் சொல்வது குற்றம்தான்.

தமிழ் உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் இத்திசையில் மக்களைக் குழப்பும் சக்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்-கிறோம்.

மூடத்தனத்தை வளர்க்காதே,- மக்களின் முற்போக்குச் சிந்தனையை மழுங்கடிக்காதே என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

----------- நன்றி விடுதலை தலையங்கம் (12.04.2010)

Sunday, April 11, 2010

விகடன் குழுமமும் மூடநம்பிக்கையும் (மேலுலகமாம்! கடவுளாம்!! எண்ணெய்க் கொப்பரைச் சட்டியாம்!)

ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து புற்றீசல்-போல பல இதழ்கள் வெளிவந்து கொண்டி-ருக்கின்றன. இன்னும் நாளேடு நடத்தவேண்டியது-தான் பாக்கி.


அந்தப் புற்றீசலில் நாணயம் விகடன் என்ற ஓர் இதழில் ஒரு செய்தி:

கடவுள் என்ற ஒருவர் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில், எந்த ஆசாபாசங்களுக்கும் மயங்காமல் வாழ்ந்து முடித்து மேலுலகம் செல்கிறார் ஒருவர். அங்கே போனால் கடவுள் என்று ஒருவரே கிடையாது என்பது தெரிய வர அதிர்ச்சியாகிறார்!

அதேபோல், இன்னொருவர் கடவுள் இல்லை என்ற எண்ணத்தில் உலகில் போடாத ஆட்டம் எல்லாம் போட்டுவிட்டு இறுதியில் மேலுலகம் செல்கிறார். அங்கே போனால் கடவுள் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையுடன் காத்திருக்கிறார்...!

கடவுள் இருக்கிறார் என்ற எண்ணத்தில் வாழ்ந்தவருக்கு கடவுள் இல்லாவிட்டாலும் பெரிய இழப்பு ஒன்றுமில்லை. ஆனால், கடவுள் இல்லை என்று ஆடாத ஆட்டம் ஆடிவிட்டு போனவருக்கு மிகப்பெரிய தண்டனை காத்திருந்தது. ஒருவேளை கடவுள் இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன் இருந்திருந்தால் அவர் அப்படி ஆடியிருக்கமாட்டார். அதுபோலத்தான் ஒருவர் முதலீடு செய்யும்போது நஷ்டம் வரலாம் என்ற எண்ணத்துடன், தன்னால் எவ்வளவு நஷ்டத்தை தாங்க முடியுமோ அதை அளவுகோலாக வைத்து முதலீட்டில் இறங்கவேண்டும்.

சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நாணயம் விகடன் நடத்திய வாசகர்களுக்கான கேளுங்கள், சொல்-கிறோம் என்ற நிகழ்ச்சியில் பேசிய கோயம்புத்தூர் கேப்பிட்டல் மார்க்கெட் சர்வீஸஸின் இயக்குநர் எஸ். கார்த்திகேயன் இப்படி ஒரு எடுத்துக்காட்டுடன் நிகழ்ச்சியை ஆரம்பிக்க, ஆரம்பமே அமர்க்களப்-பட்டது! அதைத் தொடர்ந்து பல வகையான முதலீடுகளைப் பற்றியும் அவற்றில் நாம் செய்யும் தவறுகள் குறித்தும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.   (நாணய விகடன், 15.4.2010)

மேலுலகமாம்! கடவுளாம்!! எண்ணெய்க் கொப்பரைச் சட்டியாம்!

இவர்கள் எல்லாம் எந்தக் காலகட்டத்தில் எந்த உலகத்தில் இருக்கிறார்கள்?

என்னதான் படித்திருந்தாலும், அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி இதழ்களை அச்சிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், அந்த ஆபாச அழுக்குக் குட்டையை விட்டு கரையேற மறுக்கிறார்களே!

நாம் வாழும் காலத்தில் கடவுள் பிரச்சினைபற்றி பல விவாதங்களை அறிவு இயக்கம் முன்னெடுத்து வைத்துள்ளது.

தந்தை பெரியார்தம் வாழும் காலத்திலேயே கம்பீரமாக அறிவாயுதங்களை எடுத்து வீசினார்.

தந்தை பெரியார் வீற்றிருந்த மேடையிலே பட்டையும், கொட்டையும் கட்டிக்கொண்டு பேசிய பெரியவர்கள்கூட, அய்யா மன்னிக்கணும், எங்-களுக்குக் கொஞ்சம் கடவுள் நம்பிக்கை உண்டு என்று, கடவுள் நம்பிக்கை என்பதைக் குற்ற-வுணர்வோடு சொல்ல வைத்தவர் தந்தை பெரியார்.

பகுத்தறிவுவாதிகள் இதுவரை எழுப்பிய வினாக்களுக்கெல்லாம் விடை எழுப்ப வக்கற்ற விலா எலும்பு இல்லாதவர்கள், ஏதோ ஓர் அரங்-கத்தில் கூடிக்கொண்டு அரட்டைக் கச்சேரி அடிப்பதும், அதில் கடவுள் மறுப்பாளர்களைச் சீண்டுவதும் அறிவு நாணயம் ஆகாது.

மேல் உலகம் என்று ஒன்று இருக்கிறதா? ஆகாயத்திலா? சந்திர மண்டலத்துக்கு அருகிலா? அல்லது சூரியனுக்குப் பக்கவாட்டிலா? செவ்வாய்க் கிரகத்தின் வாலிலா?

அயல்கிரகங்களுக்கெல்லாம் விண்கலம் அனுப்பிப் புதுமைகளை அறிவியல் சிண்டைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருக்-கிறதே _ இவர்கள் கூறும் மேலுலகம், கீழுலகம் எங்கே இருக்கிறது என்று குறைந்தபட்சம் அட்ரசையாவது கொடுக்கவேண்டாமா?

அன்பே உருவானவன் ஆண்டவன் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு கடவுள் இல்லை என்பவர்களைச் சித்திரவதை செய்வதற்காகக் கொப்பரைச் சட்டியுடன் காத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுவது _ கடவுளையேகூட கேவல-மாகச் சித்திரிப்பதுதானே! கடவுளைக் கொடூரன் என்று காட்டுவது ஆகாதா?

உருவமற்றவனான கடவுள் எப்படி அங்கு நின்று கொண்டு இருந்தானாம்? இவர் போய் நேரில் பார்த்து வந்தாரோ!

கடவுள் இல்லை என்பவர்கள் ஒரு விழுமிய கருத்தை முன்வைக்கிறார்கள் அறிவார்ந்த முறையில்.

ஆனால், கடவுள் நம்பிக்கைக்காரர்கள்தான் கடவுளுக்கு உருவம் கற்பித்து பெண்டாட்டிகளைக் கட்டி வைத்து, வைப்பாட்டி வீடுகளை ஏற்பாடு செய்து, கற்பழிப்புப் புராணங்களை உண்டாக்கி, நாலாந்தரக் காலிகளைவிட கீழான கடைந்தெடுத்த அயோக்கியர்களாகக் கடவுளைக் காட்டுகின்றனர்.

அரட்டைக் கச்சேரிகளில் விளம்பரத்துக்காக சிலர் உளறுகின்றனர் என்றால், அதை வெளியிடும் இந்த ஆனந்தவிகடன் குழுமத்துக்குப் புத்தி எங்கே போயிற்று?

-------நன்றி விடுதலை (04.04.2010)  கருஞ்சட்டை




Saturday, April 10, 2010

ராம நாமம் சொல்-வோம்! தவறுகளைத் திருத்திக் கொள்வோம்

ராம நாமம் சொல்-வோம்! தவறுகளைத் திருத்திக் கொள்வோம் என்று பார்ப்பனர்களால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள திருச்சி கல்யாணராமன் கூறியதாக ஒரு பார்ப்பன ஏடு பிரஸ்தாபித்துள்ளது.


அத்வைகானந்த... எனத் தொடங்கும் ராம கவசம், அகத்திய மாமுனிவர் கூறு-வதுபோல் அமைந்துள்ளது. தினமும் காலையில் புளிய-தோரை, பால் பாயசம், நைவேத்தியத்துடன் இந்தக் கவசத்தை 45 நாள்கள் பாராயணம் செய்து வந்தால் சர்வ காரிய சித்தியும், சகல மங்கலமும் பெறலாம்.

விசுவாசமித்திரருடன் இருந்தபோதும், அதன் பின்னர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்ட போதும், ஸ்ரீராமர் நீர் _ மோர் மற்றும் பானகம் மட்டுமே அருந்தினாராம். அதனாலேயே ராம நவமியன்று நீர் _ மோரும், பானகமும் நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்-படுகின்றன என்று இ-ன்னொரு ஏடு எழுதுகிறது.

ராம நாமம் சொல்லி மற்றவர்கள் திருந்திக் கொள்-வது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அந்த ராமனே தவறு இல்லாத உத்தமனாக வாழ்ந்தானா என்பதுதான் கேள்விக்குறி.

ஒரே ஒரு எடுத்துக்-காட்டு போதுமே!

தசரதனுக்குப் பிறகு நாடு பரதனுக்கு உரியது என்று இராமனுக்குத் தெரியும்.

கைகேயி வயிற்றில் பிறக்கின்ற மகனுக்கே முடிசூட்டுவதாகக் கைகேயி-யிக்கும், அவன் தந்தைக்கும் தசரதன் வாக்குறுதி கொடுத்-திருந்ததை ராமன் அறிவான். அந்த வாக்குறுதி தனக்குத் தெரியும் என்பதைச் சித்திரக் கூடத்தில் பரதனிடம் பேசிய-போது இராமன் தெரிவித்-தான். (திரு. டி. அமிர்தலிங்க அய்யரால் எழுதப்பட்ட ஸிணீனீணீஹ்ணீஸீணீ க்ஷிவீனீணீக்ஷீணீ ஜீ403).

இது நன்கு தெரிந்திருந்-தும் பரதன் தன் பாட்டனார் வீட்டில் இருந்தபோது, அவனுக்குத் தெரியாமல் தன் தந்தையார் தசரதன், தனக்குப் பட்டம் சூட்ட முடிவு செய்ததை ஏற்றுக்-கொண்டானே _ இத்தகைய ராமன்தான் வாய்மை-யா-ளனா? நற்குணம் வாய்ந்த-வனா?

இத்தகையவனை நினைத்-தால் தவறுகளை எப்படி திருத்திக் கொள்ள முடியும்?

கடவுள் தான் உலகைப் படைத்தார் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, சிவன் திருவாதிரை நட்சத்-திரத்திலும், ராமன் நவமி திதியிலும், கிருஷ்ணன் அஷ்டமி திதியிலும், விநாயகன் சதுர்த்தியிலும், சுப்பிரமணியன் விசாக நட்சத்திரத்திலும் பிறந்தார்கள் என்பது எப்படி?

அப்படியானால், இந்தக் கடவுள் கந்தாயங்கள் பிறப்பதற்கு முன்பே உலகம் ஒன்று இருந்திருக்க-வேண்-டும் என்று ஆகிவிடவில்-லையா?

ராம நவமியில் புளியோ-தரை சாப்பிட்டு நீர்_ மோரும் பருகினால் நினைத்தது நடக்கும் என்றால், ராம பாலத்தைக் காப்பாற்ற ராம பக்தர்கள் புளியோதரை சாப்பிடுவதை யார் தடுத்தது? நீர்_ மோர் குடிப்பதற்குக் குறுக்கே நின்றவர்கள் யார்?

ராமன் பாலத்தைக் காப்பாற்ற உச்சநீதிமன்றம் சென்ற சு.சாமியும், ஜெய-லலிதா அம்மையாரும் பதில் சொல்லட்டுமே, பார்க்கலாம்.

- விடுதலை மயிலாடன் (09.04.2010)





Friday, April 09, 2010

தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்திற்குப் பதிலாக திருவள்ளுவர் உருவம் பொறிக்கவேண்டும்!

கடவுள் படங்களை அகற்றச் சொன்னவர் அண்ணா. நடைபாதைக் கோயில்கள் சாலைகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி கட்டப்பட்டதை இடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பே உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வர் கலைஞர் சுற்றறிக்கை அனுப்பி ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்றிடவேண்டும். கோபுர சின்னத்தையும் மாற்றி மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட தமிழக அரசும், முதல்வரும் துணிந்து முன்வரவேண்டு மென்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:

தமிழக அரசுக்கு வேண்டுகோள்

நேற்று (8.4.2010) சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை-பற்றிய விவாதத்தின்போது பேசிய விடுதலை சிறுத்-தைகள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் திரு. ரவிக்-குமார் அவர்கள் மிக அருமையான, ஆக்க ரீதியான ஒரு வேண்டுகோளை தமிழக அரசுக்கு வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்தை மாற்றி...

தமிழ்நாடு அரசின் அடையாளமாக (Emblem of the State) கோபுரத்தைத் தற்போது போட்டிருப்பதை மாற்றி,திருவள்ளுவரைப் போட்டு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று போடலாம் என்று கூறி-யிருக்கிறார்.

இது பாராட்டி வரவேற்கவேண்டிய முக்கியக் கருத்-தாகும். மதச் சார்பின்மை (Secular) அரசுதான் மத்திய, மாநில அரசுகள்.

அப்போதே திராவிடர் கழகம் கண்டனம்

இதில் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் சின்னமே; சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்தான் அது! 1947 வாக்கில் யாரையும் கலக்காமல் காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக (ஓமாந்தூரார் ஆட்சிக்காலத்தில்) எடுக்கப்பட்ட முடிவு அது.

அப்போதே திராவிடர் கழகமும், விடுதலையும் _ மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமானது இது என்பதைச் சுட்டிக்காட்டி தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது!

அசோக ஸ்தூபி சக்கரம்

இந்திய அரசுக்கு அசோக ஸ்தூபி சக்கரம் உள்பட தேர்வு செய்துள்ளது நியாயமானது. எம் மதத்தையும் சாராத ஒன்று. இஸ்லாமியரின் மசூதி, கிறித்துவரின் சர்ச், சீக்கியரின் தங்கக்கோயில் என்பது போன்ற பன் மதத்தவரின் பல சின்னங்கள் இருக்கும்போது, திடீ-ரென்று இந்துத்துவா எப்படியோ நுழைந்துவிட்டது! இது நியாயமற்றது, முரணானது.

பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என்ற சமாதானத்தையோ, விளக்கத்தையோ யார் எந்தத் தரப்பிலிருந்து கூறினாலும் ஏற்க இயலாது.

தமிழ் வருட ஆபாசத்தை கலைஞர் அரசு ஒழித்தது

கணினி ஆன்லைன் நிருவாகம், வீடியோ கான்ஃபரன்சிங் பல ஆண்டுகாலமாக இல்லை. அதனை நாம் ஏற்கவில்லையா?

பல ஆண்டுகாலமான தமிழ் வருடப் பிறப்பு என்ற ஆபாசத்தைக் கலைஞர் அரசு துணிச்சலுடன் ஒழித்துக்-கட்டி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணைமூலம் அறிவித்து மிகச் சிறப்பாக கொண்டாடிடவில்லையா?

(பார்ப்பன ஏடுகள் விக்குருதி வெங்காயம் என்று விளம்பரப்படுத்திட முயன்றாலும், அம்முயற்சி வெற்றி அடையப் போவதில்லை. பழையன கழிதல் _ காலத்தின் கட்டாயம்).

அண்ணா கடவுள் படங்களை அகற்றினார்

அறிஞர் அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தவுடன், அரசு அலுவலகங்களில் உள்ள கடவுள், கடவுளச்சிகள் படங்களை அகற்றிட அத்துணை அரசு தலைமை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை விடுத்து, அகற்றும் பணியும் தொடங்கியதே!

ஆச்சாரியார் போன்றவர்கள் எதிர்த்ததைக்கூட, அறிஞர் அண்ணா உறுதியாகப் புறந்தள்ளினார்களே _ பல ஊர்களில் அரசு மருத்துவமனைகள், வட்டாட்-சியர் அலுவலகங்களில், (நடைபாதை ஆக்கிரமிப்பு கோயில்கள் தனி) ஆங்காங்கு இந்து முன்னணி தூண்டுதலில் கோயில் கட்டி, திராவிடர் கழகம், பகுத்தறி-வாளர் கழகத்தவரின் சட்டபூர்வ நடவடிக்கையால் இடித்துத் தள்ள நீதிமன்ற ஆணை _ தீர்ப்பும் பெறப்-பட்டுள்ளது!

உச்சநீதிமன்ற தீர்ப்பேயுள்ளது!

உச்சநீதிமன்றமே நடைபாதை கோயில்கள், அனுமதியின்றி ஆக்கிரமிப்புக்களாகக் கட்டப்படும் கோயில்களை இடிக்கவேண்டும் என்ற ஆணையை _ தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இதுகுறித்து எல்லா மாவட்ட ஆட்சியருக்கும் மாண்பு-மிகு முதல்வர் அவர்கள் ஒரு சுற்றறிக்கை _ ஆணை _ தாக்கீது அனுப்பி, அகற்றிட வேண்டியவை-களை அகற்றிடவேண்டும்!

விஸ்வரூப அனுமார்

மதக்கலவரங்களுக்கு வித்திட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் அரசு வளாகங்களில் கோயில் கட்டுவது, நெடுஞ்சாலைகளில் விஸ்வரூப அனுமார் சிலையை வைப்பது இப்படிப் பலவும் செய்கின்றனர்! குறிப்பாக, முஸ்லிம், கிறித்துவர் வாழும் பகுதிகளில்!

இந்த அரசே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்; என்ற போதிலும், முதல்வர் கலைஞர், துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டு திறந்து வைக்கும் தந்தை பெரியார் சிலைகளுக்குக்கூட முறைப்படி, சட்டப்படி அனுமதி வாங்காமல் நாம் ஓர் இடத்தில்கூட வைப்பதில்லையே!

கோபுரச் சின்னம் நீண்ட கால அநீதி!

மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கப்படவேண்டும்; கோபுரம் போன்ற குறிப்பிட்ட மதச் சின்னம் இடம்பெற அனுமதித்ததே நீண்ட கால அநீதி; அதைச் சரிப்படுத்திட வேண்டும்.

முதல்வருக்கு வேண்டுகோள்!

துணிந்து நல்ல முடிவெடுத்து ஜனநாயகத்தின் முக்கிய கூறுபாடான, மதச் சார்பின்மையைக் காப்-பாற்-றிட தமிழக அரசும் முதல்வர் அவர்களும் முன்வர-வேண்டும்.

தந்திகள், தீர்மானங்களும் குவியட்டும்!

முற்போக்குச் சக்திகள் அனைத்தும் இதற்குப் பேராதரவு அளிப்பது உறுதி! உறுதி!!

--------- நன்றி விடுதலை (09.04.2010)

மக்களுக்காகப் பேசாமல், குழுவிக் கற்களுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.இ.அ.திமு.க., உறுப்பினர் செந்தமிழன் அவர்கள் சென்னையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நடை-பாதைகளில் உள்ள 260 கோயில்களை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துவருகிறது _ அக்கோயில்களை இடிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் தர வேண்டும் என்று பேசியுள்ளார்.

இதுகுறித்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று முக்கிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பொறுப்பு வாய்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் நடைபாதைக் கோயில்களைப்பற்றி பேசுவதற்கு-முன் அக்கோயில்கள் அரசு அனுமதியுடன் கட்டப்பட்டதா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு பேசியிருக்க வேண்டும்.

அரசு அனுமதியில்லாமல் நடைபாதைக் கோயில்களைக் கட்டக் கூடாது; அப்படிக் கட்டியிருந்தால் அவற்றை அகற்றிவிட வேண்டும் என்று மத்திய _ மாநில அரசுகளின் ஆணை-கள் தெளிவாகவே இருக்கின்றன.

அதற்குமேலே உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பாண்டாரி மற்றும் எம்.கே. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் எப்.எம். இப்புராஹிம் கலிபுல்லா அவர்களும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ள எந்த மதக் கோயில்களையும் அகற்றிட வேண்டும் என்று தெளிவாகவே ஆணை பிறப்பித்-துள்ளனர்.

அறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தம் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா திமுக இந்தப் பிரச்சினையில் அண்ணாவின் நிலைப்பாடு என்னவென்று குறைந்தபட்சம் தெரிந்து வைத்துள்ளனரா?

அண்ணா அவர்கள் 1967இல் முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன் தெளிவாக ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார்.

எந்த மதத்தைச் சேர்ந்ததாயினும் கடவுள்களின் படங்கள், சிலைகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்களிலிருந்து நீக்க வேண்டும் (G.O.No.7553/66-2 ஏப்ரல் 1968) என்று அண்-ணாவின் அரசு ஆணை பிறப்பித்துள்ளதே_ இதுவரை தெரியவில்லையென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினரைக் கேட்டுக் கொள்கிறோம்.

குந்தக் குடிசையின்றி மனிதன் அல்லல்படு-கின்றான். அரசுக்குச் சொந்தமான இடத்தில் குடிசை போட்டால் சாலை விரிவாக்கம் கருதி அவற்றை அகற்றி விடுகின்றனர். உணர்வுள்ள மனிதர்கள் விஷயத்திலேயே சட்டம் தன் கடமையைச் செய்யும் போது, குழவிக் கற்களாக அடித்து வைக்கப்பட்டுள்ள அஃறிணைப் பொருள்களான கோயில்களை, கடவுள்களை அகற்றக் கூடாது என்று சொல்லுவது பகுத்தறிவுதானா? மனிதாபிமான சிந்தனைதானா?

நடைபாதைக் கோயில்களால் பொது மக்களுக்கு எப்படிப்பட்ட அவதிகள்! நடை-பாதைக் கோயில்களால், மக்கள் நடைபாதையில் நடக்க முடியாமல், வாகனங்கள் செல்லும் பகுதி-களில் நடக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது; அதன் காரணமாக சாலை விபத்துகளும் நிகழ்கின்றன.

மக்களின் பிரதிநிதியாக சட்டப் பேரவை உறுப்பினர் உயிருள்ள மக்களுக்காகப் பேசாமல், குழுவிக் கற்களுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்?

அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில், மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு சிந்திப்பதுதான் _ செயல்படுவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பதை நினைவூட்டுகின்றோம். இந்து முன்னணி இராம. கோபாலன் கூறுகிறார் என்றால் அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களோடு அண்ணா பெயரை ஒட்டிக் கொண்டு இருக்கிறவர்கள் கை கோக்கலாமா?

----- நன்றி விடுதலை தலையங்கம் (08.04.2010)

Thursday, April 08, 2010

எழுச்சி மிக்க இனத்தின் போர்வாட்களே! வாருங்கள்! வாருங்கள்!!

இளைஞர்களே!


படுக்கையிலிருந்து எழும்போது உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்! ஒன்றும் செய்யாத நாளை வீணாய்ப் போனதாகவும், உங்கள் வாழ்நாளில் ஒன்று குறைந்ததாயும் நினையுங்கள். ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உணருங்கள். உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக் கொடுக்கும் பாக்கியத்தை அடைய தபசு இருங்கள்!_ என்றார் எழுச்சிக் கதிரவனாம் நம் தந்தை பெரியார்.

நாடு இளைஞர்களை, மாணவர்களை நம்பித்தான் இருக்கிறது. அந்த இளைஞர்கள், மாணவர்கள் எப்படி உருவாகவேண்டும்?

அவர்களாக உருவாவார்களா? நிச்சயம் முடியாது _ அவர்கள் உருவாக்கப்படவேண்டும்.

எந்தப் பட்டறையில் உருவாக்கப்படவேண்டும்? சுயமரியாதைப் பட்டறையில், பகுத்தறிவுச் சாணையில் கூர் தீட்டப்படவேண்டும்.

அந்தப் பட்டறை எது? அறிவில் அழுக்கு இல்-லாத-வர்கள் நன்றாக அறிவார்கள்; மிக நன்றாகவே அறிவார்கள். அந்தப் பட்டறை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பட்டறை _ கருஞ்சட்டையின் பாடிவீடு.

ஆம், அங்கு பகுத்தறிவு மட்டும் பாடமல்ல, தன்மானம் மட்டும் தரப்படும் வகுப்பல்ல!

தனி மனித ஒழுக்கம், பொது ஒழுக்கம், சொல்-லிக் கொடுக்கப்படும், பயிற்றுவிக்கப்படும் பகுத்தறிவுச் சாலை.

இல்லறம், துறவறம்பற்றித்தான் மக்கள் அறிந்-திருக்கிறார்கள். தொண்டறம் என்ற ஒன்று உண்டு; அது அந்த இரண்டிற்கும் மேலானது, உயர்ந்த சீலம் என்ற மகரந்தத்தை உள்ளடக்கமாகக் கொண்டது.

தனி நலத்தைத் தூக்கித் தூரப் போட்டு, இன நலத்தை இருவிழிகளாகக் கொண்டது.

சமூகநீதியை சன்மார்க்கமாகக் கொண்டது. பெண்ணுரிமையை முழக்கமாகக் கொண்டது; சம தர்மத்தை தழைக்கச் செய்வதை சான்றாண்மையாகக் கொண்டது.

அரசியல் பாதையைக் காட்டக்கூடிய இயக்கமல்ல; பதவிப் போதையைப் புகட்டக் கூடிய சரக்குகள் இங்கு கிஞ்சிற்றும் கிடையாது.

வாழ்ந்த இனம் வீழ்த்தப்பட்டதை எடுத்துக்கூறி வீறு கொண்டு எழச் செய்யும் வித்தகத்தைக் கொண்டது.

எதிரிகளைப் பார்த்து பாடம் கற்றுக்கொள் என்பதைப் பாங்காக எடுத்துக் கூறக் கூடியது.

முற்போக்குச் சிந்தனை இதன் மூச்சுக்காற்று! நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஈரோட்டுக் கண்ணாடிமூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது.

தமிழினத்தைச் சூழும் ஆபத்துகளை அறிந்து எச்சரிக்கை ஒலியை எழுப்பக்கூடியது.

இனப் பகைவரின் தந்திர முதுகுக் கூட்டை சுக்கல் நூறாக உடைத்து நொறுக்கக் கூடியது.

கல்வி ஓடையில் நுழையும் ஆரிய முதலைகளை இனம் கண்டு அதன் மூச்சுக் காற்றை அடக்கக் கூடியது.

வேலை வாய்ப்பில் வேலை காட்டும் விஷமச் சக்திகளின் கோரப் பற்களைப் பிடுங்கி எறியக் கூடியது.

இன்றைய காலகட்டத்தில் தமிழர்முன் மூண்டு நிற்கும் பிரச்சினைகள் ஒன்றல்ல; இரண்டல்ல; சர்க்கரைப் பூச்சு விஷ உருண்டைகள் கல்வியின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் நம்முள் திணிக்க நயவஞ்சக நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

தமிழரா? திராவிடரா? என்ற குழப்ப மோகினிகளை அனுப்பி தமிழின இளைஞர்களைப் பாதைத் தவறிக் குழியில் வீழச் செய்யும் குழப்பவாதிகள் சிலர் தமிழ்நாட்டில் தலைதூக்கப் பார்க்கின்றனர்.

திராவிடர் என்பதன் உட்பொருளைப் புரிந்துகொள்ளா-மலும், பார்ப்பனப் பகையின் ஆபத்தை அறிந்து கொள்ளாமலும் சிறுபிள்ளைத்தனமாக ஊளையிடும் நரிகளும் மேடை போட்டு பேச ஆரம்பித்துள்ளன.

இந்த எல்லா வகைப் பிரச்சினைகளையும் முகத்துக்கு முகம் சந்தித்து, சாட்டையடி கொடுக்கும் மாநாடுதான் சென்னையில் வரும் 16 ஆம் தேதி வெள்ளியன்று காலை முதல் இரவு வரை நடக்க இருக்கும் _ திராவிடர் கழக மாணவரணி மாநில எழுச்சி மாநாடு.

தமிழர் தலைவர் சங்க நாதம் செய்கிறார் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தோள் தட்டுகிறார்.

திராவிடர் இயக்கக் கொள்கைகளை உள்வாங்கி அதனைச் சுவாசக் காற்றாகக் கருதும் நமது தோழர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. எழுச்சி முரசு கொட்டுகிறார்.

ஈரோட்டை முன்னொட்டாகக் கொண்டு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தவறாத_

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் தமக்கே உரித்தான
முத்திரையைப் பதிக்க இருக்கிறார்.

இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?
இளைஞர்களே,
இளைஞர்களே,

எழுச்சி மிக்க இனத்தின் போர்வாட்களே!

தந்தை பெரியார் கூறிய அந்த சுயமரியாதை உணர்வுக்கு, உயிர் கொடுக்கத் தபசு இருப்போம் வாருங்கள்! வாருங்கள்!!

எங்கும் எங்கும் கருஞ்சட்டை இளைஞர் படை!

மாணவர் பட்டாளத்தின் தலைகளே தலைநகரில் காணப்படவேண்டும்!

ஏ, அப்பா பெரியார் பட்டாளம் இத்தனைப் பெரிதா? பெரியாருக்குப்பின் இளைஞர்கள் இத்தனை ஆயிரம் திராவிடர் கழகத்தில் அணிவகுப்பா?_ என்று எதிரிகள் குலை நடுங்க, தமிழர்கள் உள்ளத்-தில் ஆயிரம் ஆயிரம் நம்பிக்கை அலைகள் எழுந்து பொங்க,

தமிழர் தலைவர் அழைக்கிறார், வாருங்கள்!
புதிய சரித்திரம் படைப்போம், கூடுங்கள்! கூடுங்கள்!!

---------- மின்சாரம் விடுதலை (08.04.2010)

வெட்கமில்லை, இந்த ஊடகங்களுக்கு

அநியாயத்துக்காக சானியா என்ற பெண்-மணியின் திருமணம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் இடம்-பிடித்து ஆட்டுகின்றன. தனிப்பட்ட ஒரு பெண்-மணியின் வாழ்க்கையை இப்படியெல்லாம் சர்ச்-சைக்கு ஆளாக்குவது நாகரிகமானதுதானா?


முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் எளிதில் புக முடியாத டென்னிஸ் விளையாட்டுக் களத்தில் அடி வைத்த நாள் முதற்-கொண்டு எதையாவது அந்தப் பெண்ணின்மீது வீசி எறிவதையே தொழி-லாகக் கொண்ட ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருக்கவே செய்கிறது.

அவர் குட்டை உள்-ளாடை அணிந்து ஆடு-கிறார் என்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில அடிப்படைவாதிகளும் கடுமையாக விமர்சித்த-துண்டு. அது மறைந்த நிலையில் அந்தப் பெண்ணுக்குத் திரு-மணம் முடிவு செய்யப்-பட்ட நிலையில், மண-மகனாக வந்தவர் அந்தப் பெண்ணின் மீது தன் ஆண் ஆதிக்க எண்ணச் சுமையைத் திணிக்க ஆரம்பித்தார்.

அங்கே போகாதே! இங்கே போகாதே! அந்த ஆணுடன் சேர்ந்து விளையாடாதே! என்-றெல்லாம் திருமணத்-துக்கு முன்னதாகவே ஆண்களுக்கே உரிய அகம்பாவ விளையாட்டு-களை ஆரம்பித்து-விட்-டார்.

புத்திசாலியான அந்தப் பெண் அதனை அடையாளம் கண்டு, திருமணத்திற்கு முன்னதாகவே அவரை வெட்டிக் கொண்டது ஒரு சரியான நிலைப்-பாடே!

அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்-டுக்-காரருக்கும்_ சானியா-வுக்கும் திருமணம் என்றவுடன், இந்தியா-வில் உள்ள இந்துத் தாலிபான்களான சங்பரி-வார்க் கும்பலும், சிவ-சேனா கூட்டமும் மிகக்-கேவலமான முறை-யில் சானியாவை விமர்-சித்தன. அவர் உருவப்-படத்தைத் தீயிட்டுக் கொளுத்தின. அசிங்கங்-களை வாரியிறைத்தன.

இதற்கிடையே சானி-யாவின் மணவாளர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்ற ஒரு புயல் வெடித்துக் கிளம்-பியது. அதுபற்றி பக்கம் பக்கமாகச் செய்திகள்.

வெட்கமில்லை, இந்த ஊடகங்களுக்குத்தான் கிஞ்சிற்றும் வெட்கம் இல்லை. ஓர் ஆணும்_ பெண்ணும் இணைந்து வாழ்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை! அதில் மூக்கை நுழைக்க மூன்றாவது ஆளுக்கு உரிமை ஏது? அது பச்சையான அதிகப் பிரசங்கித்தனமே!
- விடுதலை (08.04.2010) மயிலாடன்

துக்ளக் சோ பார்ப்பான்! குழப்படி குல்லுகபட்டர்!

பார்ப்பனர்கள் தங்கள் ஆசாமி என்றால் அடேயப்பா எப்படியெல்லாம் தூக்கி நிறுத்துவார்கள்_ சுமப்பார்கள் தெரியுமா?


கண் வைத்து, காது வைத்து, மூக்கு வைத்து, இறக்கைகளையும் கட்டிவிட்டு பறக்கவிட்டு, செவ்வாய்க் கிரகம்வரை சென்று வந்தார் என்று அசத்துவார்கள்.

ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும்தான் அவர்கள் அடுப்பங்கரையில் இருக்கின்றனவே_- ஊதிவிடக் கேட்கவா வேண்டும்?

அப்படி அவாளுக்குக் கிடைத்த புத்திர சிகாமணிதான்_ மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் வழக்கமாக முடிச்சுப் போட முயற்சிக்கும் திருவாளர் சோ ராமசாமி.

இந்த வார துக்ளக் (7.4.2010)கைப் புரட்டினால் தலையங்கம் பகுதியிலே ஒன்று தட்டுப்படுகிறது. இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை அது.

பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு செய்ய அரசியல் சட்டம் அனுமதித்தது; அதுவும் பத்து வருடங்களுக்குத்தான். இப்படி ஆரம்பித்த இந்த இட ஒதுக்கீடு பல திருத்தங்கள், மாறுதல்களைக் கண்டு, இன்னும் சில பிரிவுகளில் உள்ள செல்வந்தர்கள், அரசியல் செல்வாக்கு உடையவர்கள் ஆகியோரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது என்று தலையங்கத்தின் முதல் பத்தி கூறுகிறது.

இவர் எழுதப் போனது கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து.

ஆனால் இவர் சொல்லியிருப்பதோ, தேர்தலில் சட்டமன்றங்களிலும், மக்களவையிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கீட்டின் தனி தொகுதிகளைப் (Reserved Consituency) பற்றி.

இதற்குத்தான் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் தேவைப்படுகிறதே தவிர, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு செய்வதற்கு அரசமைப்புச் சட்டப்படி எந்தவிதக் காலவரையறை நிர்ணயமும் கிடையாது, -கிடையவே கிடையாது.

ஒருமுறை அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி இப்படித்தான் கூறினார். அவராவது அரசியலுக்கு அவசரமாக வந்தவர்!

இவர் அப்படியல்லவே. அரசியலை அப்படியே கரைத்துக் குடித்தவர்; எதையும் அக்குவேறு ஆணி வேறாக அலசக் கூடிய அசகாய சூரர் ஆயிற்றே!

அணு முதல் அண்டார்டிகா வரை அவருக்குத் தெரியாத அல்ப விஷயமும்கூடக் கிடையாது என்று அள்ளிவிடுகின்றனர் பார்ப்பனர்கள். அப்படிப்பட்ட ஆசாமிதான் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டப்பிரிவையும், கல்வி, வேலை வாய்ப்புகளில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தையும் வாணலியில் போட்டு புரட்டோ புரட்டென்று புரட்டுகின்றார்.

அவருக்குத் தெரியாமலா எழுதியிருக்கிறார்?

எதையாவது குழப்புவதுதான் அவர் வேலை. இதனை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

கேள்வி: துக்ளக் விலையேற்றத்தைப்பற்றிய அறிவிப்பிலும், தாங்கள் குழம்பியிருப்பதாக எனது நண்பர்கள் சிலர் கூறுகிறார்களே?

பதில்: குழப்புவது என்று பிறப்புரிமை. (துக்ளக், 1.12.1987, பக்கம் 9)

இந்தப் பின்னணியில்தான் அவர் இப்படி எழுதியுள்ளார் என்றால்,

இந்த ஆசாமியின் அறிவு நாணயத்தை, துக்ளக் வாசகர்கள்தான் எடை போட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வைதிகப் பார்ப்பான், லவுகிகப் பார்ப்பான் என்று இருவகைப் பார்ப்பனர்கள்பற்றிப் பேசப் படுவதுண்டு. இந்தப் பார்ப்பானோ இரண்டும் கலந்த ஆபத்தான பார்ப்பான்!

கடித்தவுடனேயே சாகடிக்கும் பாம்புக்குத்தானே இந்த நாட்டில்_ நல்ல பாம்பு என்று பெயர்!

தமிழில் வெளியிடப்பட்டு, தமிழர்களிடத்திலே விற்றுக் காசு பறித்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு, சமூகநீதி இவற்றைக் கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்களை தமிழர்கள் என்றைக்குத்தான் அடையாளம் காண்பார்களோ! அவரது பிழைப்பு எப்படி நடக்கிறது? இதோ அவரே பதில் சொல்லுகிறார் கேளுங்கள்:

கேள்வி: துக்ளக்கை 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியும், எந்தப் பலனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லையே என்று என்றாவது நீங்கள் விரக்தி அடைந்ததுண்டா?

பதில்: எந்தப் பலனும் இல்லையென்று எப்படிச் சொல்வது? எனக்குப் பிழைப்பு நடந்திருக்கிறதே! (துக்ளக், 24.10.2005, பக்கம் 26)

இந்தப் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடவேண்டாமா? தமிழர்களே, சிந்திப்பீர்!

----------- நன்றி  கருஞ்சட்டை விடுதலை (05.04.2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]