வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label வால்மீகி-ராமாயணம்-பெரியார்-திராவிடர் கழகம். Show all posts
Showing posts with label வால்மீகி-ராமாயணம்-பெரியார்-திராவிடர் கழகம். Show all posts

Tuesday, October 25, 2011

வால்மீகி இராமாயணத் தையும், கம்ப ராமாயணத்தையும் அல்லவா தடை செய்யக் கோர வேண்டும்

அறிஞர் இராமானுஜம் அவர்களால் எழுதப்பட்ட 300 இராமாயணங்கள் - அய்ந்து உதாரணங்கள் - மொழிபெயர்ப்புக் குறித்து மூன்று சிந்தனைகள் என்னும் கட்டுரை டில்லிப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது என்பது வரலாற்று மோசடியாக என்றென்றும் பேசப்படும்.

வால்மீகி இராமாயணத்தில் அகலிகை வலிய இந்திரனை அழைத்ததாகவும், அதனால்தான் இந்திரனின் உடல் ஆயிரம் பெண்குறிகளாக மாறட்டும் என்று சாபமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுதான் தடை செய்யப் படுவதற்குக் காரணமாம்.

வால்மீகி இராமாயணத்தில் அவ்வாறு கூறப்பட வில்லை; வரலாற்றுப் பேராசிரியர் இராமானுஜம் தவறாக - கற்பனையாக எழுதியுள்ளார் என்று நிரூபித்து அந்தப் பாடத்தைத் தடை செய்திருந்தால் அதுதான் அறிவு நாணயமாகும். அவ்வாறு அவர்களால் சொல்லப்பட வில்லை - அவ்வாறு சொல்லவும் முடியாது; காரணம் பேராசிரியர் இராமானுஜம் கூறிய மூல நூலாகிய வால்மீகி இராமாயணத்தில் உள்ளதுதான், அதனைத்தான் அவர் கையாண்டுள்ளார்.

பாரதிய ஜனதாவின் மாணவர் பிரிவாகிய ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்தவர்கள் பல்கலைக் கழகத்தில் புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்தியதன் காரணமாகவே இத்தகைய தொரு விபரீத முடிவை பல்கலைக் கழகம் மேற்கொண்டுள்ளது. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை ஒரு பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது - வெட்கக்கேடானதாகும்.

நூலகங்களைக் கொளுத்துவது - பாடத் திட்டங்களை மாற்றுவது - கலாச்சார சின்னங்களைச் சீரழிப்பது என்பது  பாசிஸ்டுகளின் அணுகுமுறையாகும். அதனைத்தான் இந்துத்துவாவின் கும்பல், நாட்டில் செய்து கொண்டி ருக்கிறது.

கவுதம முனிவரின் மனைவி அகலிகை அழகினிற் சிறந்தவள்; அவளை உடல் ரீதியாக அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தவன் தேவர்களுக்கெல்லாம் தலைவனான இந்திரலோகத்து அரசனாகிய தேவநாதன் இந்திரன். (தேவநாதன் என்றால் காஞ்சிபுரம் மச்சேஸ்வர கோயில் குருக்கள் தேவநாதன் நினைவிற்குக் கூட வரலாம் - இவனும் அந்த தேவநாதன்  காட்டிய அந்த வழியைத்தான் கடைப்பிடித்திருக்கிறான்  என்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.)

விடியற்காலையில் எழுந்திருந்து கங்கைக்குச் சென்று நீராடி பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவது கவுதம முனிவரின் அன்றாடப் பணி.

இந்திரன் என்ன செய்தான்? அகால நேரத்தில் சேவல் மாதிரி கூவிட, கவுதமன் வழக்கமாக விடியற் காலம் வந்தது என்று கருதி கங்கைக்குச் சென்றான்.

சென்ற முனிவன் திடுக்கிட்டான். ஏதோ சூது நடந்துள்ளது என்று கூறி வேகமாக தம் ஆசிரமத்துக்குத் திரும்புகிறான். இந்த இடைவெளியில் இந்திரன், கவுதம முனிவன்பேர்ல வடிவம் எடுத்து அகலிகையை அணுகி உடல் இன்பம் அனுபவித்தான்.  அதுசமயம் திரும்பிய கவுதம முனிவன் இந்திரனுக்குச் சாபமிட்டான். எந்த இன்பத்திற்காக இந்த அடாத காரியத்தைச் செய்தாயோ, அதன் அறிகுறியாக உன் உடல் முழுவதும் ஆயிரம் பெண் குறிகள் தோன்றட்டும் என்று சாபமிட்டான். அகலி யையைக் கல்லாகக் கடவது என்றும் சாபமிட்டான். இவை மூல இராமாயணமாகிய வால்மீகியில் உள்ளதுதான்.

இந்த விவரமும் வால்மீகியைத் தழுவி தமிழில் எழுதிய கம்ப இராமாயணத்தில் (பாலகாண்டம்-அகலிகைப் படலம் - பாடல்கள் 545 முதல் 549 வ) விரிவாகக் காணப் படுகிறது.

இந்திரன் கவுதம முனிவரின் ஆசிரமத்திலிருந்து வெளியேறியபோது அவனது உருவத்திலேயே சென்றான் என்கிறார் வால்மீகி. கம்பனோ பூனை வடிவில் வெளியேறினான் இந்திரன் என்று எழுதியிருக்கிறார்.  இந்திரன்-அகலிகை புணர்ச்சியையோ, கவுதம முனிவரின் சாபத்தையோ கம்பனாலேயே மறைக்க முடியவில்லை.

புக்கவ ளோடுங் காமப்புதுமண மதுவின்தேறல்
ஒக்கவுணர்ந் திருத்தலோடு முணர்ந்தனள்
 உணர்ந்தபின்னோ
தக்க தன் றென்னத் தேறா டாழ்ந்தனள்
முக்கணனை வாற்றன் முனிவனும்
 முடுகி வந்தான்.

(கம்ப இராமாயணனம் - அகலிகைப் படலம், பாடல் 545)

இந்திரன் அகலிகையைப் புணரும்போது, அவன் தன் கணவன் கவுதமன் அல்லன்; வேறு ஆடவன் என்று உணர்ந்து கொண்டாளாம். தவறு நடந்துவிட்டது என்று தெரிந்திருந்தும் அதனின்றும் விடுபடாமல் ஆசை மிகுதியால் உடன்பட்டாள் என்று கம்ப நாட்டாழ்வாரே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், உண்மையைச் சொன்ன பேராசிரியர் இராமானுஜம் அவர்கள் எழுதிய கட்டுரையை தடை செய்தது - 2011 ஆம் ஆண்டில் இந்தியா சஞ்சரிக்க வில்லை; இன்னும் காட்டுவிலங்காண்டித்தன மதவெறி மனப்பான்மையுடன்தான் இருக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும்.  நியாயமாக வால்மீகி இராமாயணத் தையும், கம்ப ராமாயணத்தையும் அல்லவா தடை செய்யக் கோர வேண்டும்.
வெட்கக்கேடு!  மகா மகா வெட்கக்கேடு!!

----விடுதலை தலையங்கம்,25-10-2011


Friday, June 04, 2010

வால்மீகி திருடனா? திருடன் இல்லையா?

இராமாயணத்தை எழுதி-ய-தாகக் கூறப்படும் வால்மீகி திருடனா? திருடன் இல்-லையா? என்ற சர்ச்சை எழுந்-துள்ளது. இது பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி-மன்றம்-வரை சிரிப்பாய் சிரித்திருக்-கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தனியார் அலை வரிசை ஒன்று தயாரித்து ஒளிபரப்பி வரும் பிடாய் என்ற ஒரு தொடரில் வால்மீகி பற்றி இரு கதாபாத்திரங்கள் பேசு-கின்றன.

அதில் வால்மீகி திருட-னாக இருந்து மகரிஷியானார் என்ற உரையாடல் இடம் பெற்றுள்ளது. வால்மீகி ஜாதியைச் சேர்ந்த, ராவிகாஸ் என்பவர் இது எங்களின் மத உணர்வைப் புண்படுத்து-கிறது என்று கூறி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார் (2009).
இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் பல்லா வழங்கியுள்ள தீர்ப்பு வருமாறு:

வால்மீகி வாழ்க்கை வரலாற்றை கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டுவரை தோன்றிய, வேத இலக்கியங்களின் அடிப்படையில் பாட்டியாலா-வில் உள்ள பஞ்சாப் பல்-கலைக் கழகத்தின் மகரிஷி வால்மீகி இருக்கை ஆராய்ந்து, அவர் திருட-னாக இருக்க முடியாது என்றே முடிவுக்கு வந்துள்-ளது.

எலக்ட்ரானிக் ஊடகங்-கள் மத சம்பந்தப்பட்ட கருத்து-களை பரப்ப முற்-படும்போது கட்டுப்பாட்-டோடும், பொறுப்-புணர்-வோ-டும், கவனத்தோடும் ஒளி-பரப்ப வேண்டும். அக்-கருத்து பல்லாயிரக்கணக்-கான மக்களை பாதிக்கும் என்ற உணர்வும் வேண்டும் என்று நீதிபதி இதோபதேசம் செய்திருக்கிறார்.

ரொம்ப சரி, புராணங்-களின் பேரகராதி என்று ஒப்புக் கொள்ளப்படும். அபி-தான சிந்தாமணி வால்மீகி-பற்றி என்ன கூறுகிறது?

இவர் பிறப்பால் வேதி-யர். ஒழுக்கம் குன்றி, வேட-ருடன் கூடிக் களவு செய்து வாழ்ந்து வருகையில், ஒரு நாள் ஒரு முனிவரை வழி மறித்துப் பறிக்க முற்படுகை-யில் அவர் இவரிடம் கருணை கூர்ந்து நீர் செய்யும் பாபத் தொழில், உமது வருவாயால் சீவிக்கும் உமது இல்லோர்க்கும் உண்டோ எனக் கேட்டு வருகவென ஏவ, அவ்வாறு சென்று கேட்-கையில், அவர்-கள் மறுக்கக் கேட்டுக் கூறி மயங்கி நிற்கை-யில், முனி-வர் கருணை கூர்ந்து எதிரில் இருந்த மாமரத்தின் பெயரைக் கூறச் சொல்லிப் போயினர். கள்வர் அவ்வாறு இருந்து நெடுநாள் செபிக்க, மேல் ஒரு புற்று மூடி-யது. சில நாள் கழித்து அப்-புற்றில் இருந்து வெளிப்படு-கை-யில், வேடன் ஒருவன் கிரவுஞ்ச பட்சிகளைக் கொல்ல வர, அதனைக் கண்டு சினந்து அவனைச் சபிக்கத் தொடங்க, அச்சாபமே தம் வாயில் சுலோக ரூபமாக வெளிப்-பட்டு இனிய கானமாயிற்று. இவரே இராமாயணம் இயற்றிய வால்மீகி என்று புராணக் களஞ்சியம், அக-ராதியான அபிதான சிந்தா-மணி கூறு-கிறது. வால்மீகி வழிப்பறித் திருடன்தான் என்று சொல்லி-யிருக்கிறது. நீதிபதி புதிய புராணம் எழுதுவானேன்?

பக்தர்கள் திருடர்களாக இருக்க மாட்டார்களா? திருமங்கை ஆழ்வார் திரு-மங்கை ஆழ்வார் என்று கேள்விப்பட்டதுண்டா? அவன் என்ன செய்தானாம்! சைவ சித்தாந்தப் பதிப்பகம் வெளி-யிட்ட தஞ்சைவாணன் கோவை (பக்கம் 7, வரிகள் 26_-30) என்ன கூறுகிறது?

நாகப்பட்டிணத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந்தது. அதனை ஆலி நாடர் (திரு-மங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்-கத்து மதில் செய்-வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் கூறுநர் ஒருவரும் இலர் என்று கூறப்பட்டுள்ளதே!

திருட்டுப் பயல் ஒரு ஆழ்வாராம். திருடிய நேரத்-தில் கடவுள் தன்மையுடைய-வராக இருந்தானாம்! அத-னால் குற்றம் கூறக்கூடாதாம்! எப்படி?
-விடுதலை (04.06.2010)   மயிலாடன்


Tamil 10 top sites [www.tamil10 .com ]