வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

Thursday, December 17, 2009

சாஸ்திரம் எழுதி வைத்-துள்ள நாட்டில் எப்படி ஒழுக்கம் வளரும்?

மதத்தை அபினுக்கு ஒப்பிட்டார் கார்ல் மார்க்ஸ். நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடமானது -_ மதம் என்னும் சிமென்ட் சுண்ணாம்பினால், கடவுள் கற்களைக் கொண்டு என்றும் அழியாதது மாதிரி பலமாகக் கட்டி, வேத சாஸ்திர, புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூச்சுப் பூசப்பட்டிருக்கிறது” என்கிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (“குடிஅரசு” 30.6.1929) 

மனிதன் தன்னறிவு பெறவும், தன்மீது அழுந்திக் குந்தியிருக்கிற ஆதிக்கக் கோட்டைகளைத் தகர்க்கவும் பகுத்தறிவு என்னும் பேராயுதம் தேவைப்படுகிறது.

மதம் தனி மனிதனை மட்டும் கெடுதலுக்கு ஆளாக்கவில்லை. ஒட்டு மொத்தமான சமுதாய வளர்ச்சிக்கே பெருங்கேடாகக் குடி கொண்டிருக்கிறது.

எடுத்துக்காட்டாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது நாட்டுக்கான ஒரு வளர்ச்சித் திட்டம். அதில் கொண்டுவந்து ராமன் என்ற இந்து மதச் கதா பாத்திரத்தைத் திணித்து, அந்தத் திட்டத்தையே முடக்கி விட்டார்களே! மதம் என்னும் வெறியில் திளைக்கிறார்களே தவிர, மனித சமூகத்துக்குத் தேவையான ஒரு வளர்ச்சித் திட்டம் தடுக்கப்படுவது பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லையே!

இந்த மதப் போதை சாதாரண பாமரனிடத்தில் மட்டுமல்ல, படித்தவர்களிடத்திலும், நீதிமன்றத்திலே குளுகுளு அறையிலே வாசம் செய்பவர்கள் மத்தியிலும்கூட ஆழமான இடம் பிடித்துவிட்டது.

மக்களிடத்திலே பரம்பரை பரம்பரையாக வந்து பழக்கப்பட்ட இந்தப் பக்திப் போதை
மான உணர்ச்சியைக்கூட பறி கொடுக்கக் காரணமாக இருக்கிறது.

பக்தியின் பெயரால் பெண்கள் நிர்வாணப் பூசை நடத்துவது, சாமியார்களைத் தேடிச் சென்று தங்களின் உடலைப் பறிகொடுப்பது _சாமியார்களும் மக்களின் பக்திப் போதையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவது என்பதெல்லாம் நாட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டதே!

ஜெகத் குரு என்று விளம்பரப்படுத்தப்படும் ஆசாமிகள் பெண்களைப் போகப் பொருள் என்று கருதி வேட்டையாடுகிறார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தைகளை கோயில் கருவறைக்குள்ளேயே அர்ச்சகப் பார்ப்பான் “காமப்பசி”யாறுகிறான். சென்னையில் வேலை தேடி வந்த ஒரு பெண்ணுக்குக் காபியில் மயக்க மருந்து போட்டுக் கொடுத்து அந்தப் பெண்ணைக் சூறையாடிதாக ஏடுகளில் தற்போது செய்திகள் வந்துள்ளன.

முற்றும் துறந்தவர்கள் என்பதற்கு அடையாளம் காவி வேட்டி என்று பிரச்சாரம் செய்து வைக்கப்பட்டுள்ளதால், அதனை நம்பி அந்த ‘முகமூடிக் கொள்ளையர்களிடம்’ பெண்கள் பரிதாபமாக மானத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

பணம் சம்பாதிக்க இந்தப் பக்தியும், மதமும் எளிய மார்க்கமாகி விட்டன. திருப்பதி உண்டியலில் கோடிக்கணக்கில் பணம் குவிவது அந்த அடிப்படையில் தானே! “முற்றும் துறந்த மடங்களில்” சொத்துகள் குவிந்து கிடப்பது எப்படி? பணத்தை பாதகாணிக்கை என்று கொட்டிக் கொடுக்கிறார்களே! அந்தப் பணத்தைக் கண்ணிவெடியாக வைத்துக் கன்னிகளைப் பிடிக்கிறார்களே!

ஒழுக்கம் குறைந்து வருவதற்குக் காரணம் _ பக்தி குறைந்து வருவதுதான் என்று சந்தடி சாக்கில் கந்தகப் பொடி தூவும் சில விளம்பரம் பெற்ற ‘பெரிய மனிதர்கள்’ உண்டு.

அந்த மனிதர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே போனார்கள்? காஞ்சிபுரம் தேவநாதன் லீலைகளையும், சென்னை மாம்பலம் ஈஸ்வர ஸ்ரீ குமார்களின் அயோக்கியத்தனங்களையும் விமர்சிக்க இவர்கள் முன்வராதது ஏன்?

திருநீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சாஸ்திரம் எழுதி வைத்-துள்ள நாட்டில் எப்படி ஒழுக்கம் வளரும்? சாமி-யார்-களைக் கண்காணிக்க காவல் துறையில் ஒரு தனிப் பிரிவை அரசு ஏற்படுத்தினால்கூட நல்லதுதான்!.

Tamil 10 top sites [www.tamil10 .com ]