வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, November 13, 2009

பெண்களும் மதமும்....


“கடவுளிடத்திலும், _ அவரால் ஒன்றுக்கொன்று முரணாகவும், போட்டியாகவும் உண்டாக்கப்பட்டுள்ள பல்வேறு மதங்களிடத்திலும், நீங்காப்பற்றுக் கொண்டுள்ள ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை பன் மடங்கு பெரிதாகும். பல “சர்ச்களில்” கணக்கிட்டுப் பார்த்ததில் ஆண்களைவிட 5_6 மடங்கு அதிகமாகவே பெண்கள் இருந்தனர். முன்னாள் மதத்தலைவர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, “நரகம் என்ற நம்பிக்கையும், பெண்களின் ஆதரவும் இல்லா விட்டால் எங்கள் ‘சர்ச்’ (கோவில்) நாளைக் காலையிலேயே அழிந்து போய்விடும்’, என்று தெரிவித்தார்.

இதன் காரணமென்ன? பெண்கள் மிகமிகக் காரியவாதிகள் என்றாலும், ஆண்களைக் காட்டிலும், சுளுவாக ஏமாறக் கூடியவர்கள்; தத்துவ ரீதியாக சிந்திக்கக் கூடிய திறமையற்ற-வர்கள். உதாரணமாக, பர்ட்ரண்டு ரஸ்ஸல் எழுதி-யுள்ள ‘மேல் நாட்டுத் தத்துவ வரலாறு’ என்ற மாபெரும் நூலைப் படித்துப்பார்த்தால், அதில் பெண் தத்துவ ஞானி ஒருவரைக்கூடக் காண முடியாது. அதுவும் ரஸ்ஸல், ஸ்பினோசா, சாக்ரட்டீஸ், ஹ்யூம், லாக்கே, மாண்டேன், காண்ட், ஹெகல், லியனார்டோ போன்ற உலகப் பெரியார்களைப் போல் ஒரு பெண்கூட இல்லை. மனித வரலாறு முழுவதையும் பார்த்தாலும், ஆண்களுக்குச் சமமாக வைத்து எண்ணக்கூடிய பெண் பெரியோர்-கள் இரண்டே இரண்டு பேர்தாம் : மேரி க்யூரி;’ ஃபளாரன்ஸ் நைட்டிங் கேல்! இது போதுமா? பெண்களுக்-குத் தத்துவ ரீதியான சிந்தனா சக்தி இல்லாத படியால்தான் மதவாதிகளிட-மும், மந்திரவாதிகளிடமும், சோதிடர்-களிடமும், அர்ச்சகரிடமும் சுளுவில் ஏமாந்து விடுகின்றனர்.

“நான் என் தாயாரின் மடியில் என் மதத்தைக் கற்றுக் கொண்-டேன்” என்று ஆண்கள் கூறு-வதைக் கேட்டி-ருக்கிறோமல்லவா? நான் ஒரு சர்வாதிகாரியா-யிருந்தால் எந்தத் தாயாரும் நின்ற நிலை-யிலேதான் தங்கள் குழுந்தை-களுக்கு எதையும் கற்றுத் தர வேண்டும் என்று உத்தரவிடுவேன்!

“மதத்துக்கு விரோதமாகவும் கடவுளுக்கு விரோதமாகவும் எந்த விவாதத்தையும் பெண்கள் பொதுவாகக் கேட்க விரும்புவதேயில்லை.

“பெண்கள் கற்பிற் சிறந்தவர்களாயிருக்கலாம்; தனி அன்புடையவர்களாகவும் இருக்கலாம். ஆனால் சரி - _ தப்பு என்ற தத்துவ ரீதியான ஆராய்ச்சி உணர்ச்சி _ அவர்களுக்குப் போதாது. குறிப்பாக மதத் துறையில் அவர்கள் ஆபத்-தானவர்கள். ஏதோ, இரண்டொரு விதி-விலக்கு இருக்கலாம் என்பதை மறுப்பதற்-கில்லை.”

_ ‘ஃப்ரீதிங்க்கர்’ (தொகுப்பு விடுதலை 13.11.09)

“விளையாட்டாகக்’’கூட பெண்களை அங்கீகரிக்க மாட்டார்களோ!


விளையாட்டில்கூட ஆண் _ பெண் பேதம் இருக்கிறது என்ற செய்-தியை அறியும்போது நெஞ்சைப் பிளக்கிறது.


சீனாவில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து நாடு திரும்-பிய இந்தியப் பெண்கள் அணி வீராங்கனை-க-ளுக்கு அரசு தரும் சலு-கைகள் பெறத் தகுதி-யில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் எந்த-வித சாதனைகளையும் படைக்காத இந்தியாவின் ஆண்கள் அணிக்குப் பல்வேறு சலுகைகளாம்.

ஹாக்கி விளையாட்டு என்றால், இந்தியாதான் என்று கொடிகட்டி ஆண்ட-தெல்லாம் பழங்கதை! மிகக்குறுகிய காலத்தில் ஹாக்கி விளையாடத் தொடங்கிய நாடுகள் எல்லாம் இந்தியாவுக்குத் தண்ணீர் காட்டுகின்றன.

ஆனால், பெண்கள் அணி சீனா சென்று இரண்டாவது இடம்பெற்று வெற்றிப் பேரிகை முழங்க இந்தியா வரும்போது பெரிய அளவில் வரவேற்-புக் கொடுத்திருக்க-வேண்-டாமா?

விளையாட்டில்கூட ஏனிந்த ஆண் _ பெண் பேதம்? அண்மையில் தங்க-மங்கை பி.டி. உஷா அவமதிக்கப்பட்ட செய்தி ஒன்று கசிந்தது.

இன்னொரு முக்கிய விஷயம் விளையாட்டில்-கூட கிரிக்கெட் என்றால் பிராமணன் _ மற்றவை என்-றால் சூத்திரன் என்கிற வர்ண தர்மப் பார்வை இருப்பதையும் இந்த இடத்-தில் சுட்டிக்காட்டியே தீரவேண்டும்.

கிரிக்கெட்டில் 8 மூத்த வீரர்களுக்கு ஆண்டு ஒன்-றிற்கு ரூ.50 லட்சம் ஊதியம்; அடுத்த நிலை-யில் உள்ள (பி_ பிரிவு) கிரிக்கெட் விளையாட்டுக்-காரர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.35 லட்சம்; மூன்றாவது பிரிவு (சி) காரர்களுக்கு ரூ.20 லட்சம். இவற்றோடு விளை-யாடும்பொழுது (மேட்ச்) உள்நாடு என்றால் ஒவ்-வொரு ஆட்டக்காரர்க-ளுக்கும் ஊதியம் 2 லட்-சம்; வெளிநாடு என்றால், ரூ.2.40 லட்சமாம். ஒரு நாள் விளையாட்டுக்கு உள்நாட்டில் 1.60 லட்சம்; வெளிநாட்டில் ரூ.1.85 லட்சமாம்.

இவ்வளவுக்கும் இவர்-கள் கிழித்த சாதனை என்ன? ஆஸ்திரேலியக்-காரன் இந்திய மண்ணில் விளையாடி, இந்திய வீரர்-களின் முகத்தில் கரியைப் பூசிச் சென்றதுதான் மிச்சம்.

கால்பந்து போலவோ, ஹாக்கி போலவோ கடு-மையான உழைப்பைச் செலுத்தக்கூடியதும் அல்ல கிரிக்கெட்.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி-யில் பெண்கள்தான் கொஞ்-சம் மானத்தைக் காப்பாற்றி-யிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், அதனை அங்கீகரிக்கும் மனப்பான்மை ஆணா ஆதிக்கச் சமூக அமைப்-பில் இல்லை என்பது வெட்கக்கேடானதாகும்.

“விளையாட்டாகக்’’கூட பெண்களை அங்கீகரிக்க மாட்டார்களோ!

விடுதலை  13.11.09 - மயிலாடன்

Thursday, November 12, 2009

அசல் நாத்திகர்கள்...அய்யப்பன் கோவில் நிருவாகிகள்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நிருவாகிகள், அறங்காவலர்கள் அசல் நாத்திகர்கள் போல தோன்றுகிறது. இல்லாவிட்டால் அய்யப்பனுக்கு சக்தி இல்லை என்று இவளவு கேவலமாக அறிவிப்பார்களா?

18 படிகளை தாண்டி அய்யபனை தரிசிக்க வரும் அணைத்து பக்தர்களையும் தீவிரமாக சோதனை நடத்திட திடமிடபட்டுள்ளதாம். இதன் பொருள் என்ன?

பக்தர்கள் வெடிகுண்டுகளை எடுத்துசென்று அய்யப்பன் மீது வீசியிரிவார்கள் என்ற பயம் தானே!

அய்யப்பன் சர்வசக்தி வாய்ந்தவன்.அவனை யாரும் அசைக்கவோ அழிக்கவோ முடியாது என்ற நம்பிக்கை கோவில் அரங்காவளர்களுக்கு இருந்தால் இது மாதிரி நடவடிக்கையில் ஈடுபடுவார்களா?

அதே போல முதல் படிக்கட்டில் ஏறி 18 படிகளை தாண்டி பக்தர்கள் சரண கோசம் எழுப்பி தேங்காய் உடைப்பது வழக்கமேயாகும்.இப்பொழுது அதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அய்யபனை அசிங்க படுத்தியே தீருவது என்று அறங்காவலர் குழு தீர்மாநிதுவிட்டதாக தெரிகிறது.

தேன்காய்குள் வெடிபொருட்களை வைத்திருந்தால் அய்யப்பன் கதி என்னாவது என்ற என்னதில்தானே இந்த தடை?

நியமாக அய்யப்பன் மீதும் அவன் சக்தியின் மீதும் அபார நம்பிக்கை வைத்துள்ள யாரவது ஒரு பக்தர் அய்யப்பன் கோவில் அறங்காவலர் குழு நாத்திக பாணியில் செயல்படுகிறது இது எங்களின் உள்ளத்தை அதிக ஆழமாக புண்படுத்துகிறது என்று கூறி நீதிமன்றத்திற்கு செல்லவேண்டமா?

நீதிபதிகளுக்கு தான் வேறு என்ன வேலை இது போன்ற நாட்டுக்கு தேவையான பிரச்சினைகளில் தலையிடாமல் வேறு எந்த கடமையை செய்ய போகிறார்கள்.

ஏற்கனவே மகர சோதி என்பது பொய். அது ஒரு பித்தலாட்டம். கேரளா மின்வாரிய தொழிலாளர்கள்தான் பொன்னம்பல மேட்டிலிருந்து ஒரு சட்டியில் சூடத்தை கொளுத்தி காட்டுகிறார்கள் என்ற உண்மையை கேரளா பகுத்தறிவாளர்கள் நிருபித்துவிட்டார்கள். அது உண்மைதான் என்று கேரளா அறநிலைய துறை அமைச்சர் ஜி.சுதாகர், அய்யப்பன் கோவில் தலைமை பூசாரி கண்டேறு மகேஸ்வரரு, தேவச்தன் போர்ட் முன்னால் தலைவர் ராமன் நாயரும், முன்னால் முதலமைசர் ஈ.கே. நாயனாரும் ஆமாம் மகர சோதி என்பது உண்மையல்ல, மோசடிதான். செயற்ககையநதுதான் என்று ஒப்புக்கொண்டுவிட்டனர்.

இவலவுக்கு பிறகும் மகரஜோதி என்றால் அய்யோகியதனத்தின் மோசடியின் புகலிடம்  என்பது விளங்கவில்லையா?

விடுதலை 12.11.09

Wednesday, November 11, 2009

வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும் ஏன்?



பொதுவாக யாருக்கு பிறந்த நாள் கொண்டாடினாலும் பிறந்தநாள் என்பது கொள்கையை பாராட்ட, பரப்ப என்கிற கருத்திலேயே ஆகும். வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும். அந்த வார்த்தைக்கு உண்மையில் மதிப்பே கிடையாது. நாமம் போட்டுக் கொள்வது எப்படி முட்டாள்தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம் தான் வாழ்த்துக் கூறுவதுமாகும். பார்ப்பான் பிச்சை எடுப்பதற்கு ஆசீர்வாதம் என்று ஆரம்பித்தான். அதையே தமிழாக்கி இவன் வாழ்த்து என்கிறானே ஒழிய அதில் எந்த பலனும் கிடையாது. ஒருவன் நூறு வருஷம் வாழவேண்டும் என்று சொன்னதனாலேயே எவனும் வாழ்ந்துவிடமுடியாது. அதுபோல வசை கூறுவதால் எவரும் கேட்டுப் போய்விடபோவதும் இல்லை. என்னை வாழ்துகிரவர்களை விட வசை சொல்லுகிறவர்கள் தான் அதிகம். அதற்க்கு உண்மையான பலனிருக்குமானால் நான் இத்தனை ஆண்டுகள் உயிரோடுடிருந்திருக்க முடியாது. எனவே வாழ்த்துவதற்கும் வசை கூருவதர்க்குமுள்ள பலன் ஒன்றே ஆகும். வாழ்த்துவது வாய்க்கும் காதுக்கும் இனிமையாக இருக்குமே தவிர பலனில் ஒன்றுமில்லை.

விடுதலையில்  (12.12.1968) அய்யா அவர்கள் வாழ்த்துவதன் பலன் பற்றி கூறியது. நம் வாழ்கையில் நிறைய பேருக்கு பொருந்தும். இதனை சொல்லுவதால் யாரையும் வாழ்த்தவேண்டம் என்ற அர்த்தம் இல்லை. ஒரு சிலர் அவர் எனக்கு வாழ்த்து கூறவே இல்லை என்று கூறி மிகவும் வேதனை படுவார்கள். எனவே யாரும் நமக்கு வாழ்த்துவதை எதிர்பார்கவும் தேவை இல்லை.நாமும் அதற்க்கா வேதனை படவும் தேவையும் இல்லை.

அன்றைக்கு அய்யா அவர்கள் சொன்னது என்றும் பொருந்த கூடிய ஒன்றுதான்.

மார்க்சியம் என்பது மந்தையோடு மந்தையாக செல்வது-தானா?


உலகில் ஒரே இந்து நாடாகவிருந்த நேபாளத்-தில் இந்துமத ஆட்சி மாறினாலும், மாவோயிஸ்ட்கள் கையில் ஆட்சி வந்தாலும் இந்து மத சனாதன சடங்குகள் மட்டும் ஆணி அடித்ததுபோல அப்படியே ஆணிவேருடன் அப்படியே நிலை பெற்றுதான் இருக்கின்றன.


அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நேபாள நாட்டின் தென்பகுதியில் உள்ள பர மாவட்டத்தில் நேபாள பெண் கடவுளான காதிமையைச் சாந்திபடுத்த அய்ந்து லட்சம் ஆடு, மாடு, கோழி, புறா, வாத்துகளைப் பலி-யிடு-வார்களாம். இம்மாதம் 24, 25 ஆகிய நாள்களில் இந்த காட்டுவிலங்காண்டித்தனமான நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம்.

ஒருகணம் நினைத்துப் பார்ப்போம்; அய்ந்து லட்சம் உயிர்களைப் பலியிடுவ-தென்-றால் அது எவ்வளவுப் பெரிய அச்சுறுத்தக்-கூடிய பயங்கரமான செயலாக, கோர காட்சியாக இருக்க முடியும்? அந்த வட்டாரமே ரத்த வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடாதா? அந்தப் பகுதிவாழ் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படாதா? சுற்றுச்சூழல் பாதிக்கப்-படாதா? எவ்வளவு குரூர நெஞ்சம் படைத்-திருந்தால் அய்ந்து லட்சம் உயிர்களை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லுவார்கள்!

இந்த நிகழ்ச்சியைத் தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை நேபாள அரசு நிராகரித்து-விட்டதாம். மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடாதாம் நேபாள அரசு.

பக்தியின் பெயரால் நடக்கும் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தைத் தடுக்க முடியவில்லையே மாவோயிஸ்ட்களால் என்றால், அந்நாடு மன்னராட்சியிலேயே இருந்து-விட்டுப் போகலாமே! மார்க்சியம் என்பது மந்தையோடு மந்தையாக செல்வது-தானா? மூட நம்பிக்கைகளை அழிக்கும் சக்தியை, ஆற்றலை, அறிவை மார்க்சியம் அளிக்கவில்லையா? அல்லது அதனை இந்த மாவோயிஸ்ட்கள்தான் புரிந்துகொள்ள-வில்லையா?

பசுவதையைத் தடுக்கவேண்டும் என்று கூறும் சங்கராச்சாரியார்களும், சங் பரிவார்க் கும்பலும் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது.

இவர்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் மனிதர்களையே கொன்று யாகம் நடத்தி-யிருக்கிறார்களே, அதற்கு “புருஷ யஜ்ஞ’’ என்று பெயர் ஆகும்.

“இந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம்’’ (இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்தில் பதிப்பு வால்யூம் ஒன்று 405 ஆம் பக்கம்).

மனிதனையே கொன்று குவிக்கும் கொலைகாரத்தனத்துக்கு இந்து மதம் சூட்டும் பெயர் “புருஷ யஜ்ஞ’’வாம்.

மாட்டுக்குத் தார்குச்சி போட்டால் அது மிருகவதை என்று கூறி, அது குற்றச்செயல் என்று (ஷிறிசிகி) தண்டிக்கும் சட்டம் தனியே இருக்கிறது. ஆனால், யாகம் என்ற பெயரால் மாடுகளையும், ஆடுகளையும் வெட்டிக் கொல்-லுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்றால், இது என்ன இரட்டை அளவுகோல்!

ஒரே நேரத்தில் 5 லட்சம் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது உலகில் வேறு எங்குமே கிடையாதாம்.

வேறு எங்கு இருக்க முடியும் _ ஒரு இந்து நாட்டைத் தவிர? இதே நேபாளத்தில்தானே (2001) சோதிடக் கிறுக்குத்தனம் காரணமாக தாய், தந்தையர் உள்பட எட்டு பேர்களைச் சுட்டுக் கொன்றான் இளவரசன்.

எந்த சோதிடனும் இதுபோல் நடக்கும் என்று முன்கூட்டியே சொல்லவில்லையே! இவ்வளவு கொடூரம் நடந்ததற்குப் பிறகும்கூட அதுபற்றிய உரத்த சிந்தனைக்கு இடமில்லாமல், தோஷம் கழிக்கும் பார்ப்பனிய சடங்குகளைத்-தானே நடத்தினார்கள்.

இது ஏதோ நேபாள நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்று மற்ற நாடுகள் ஒதுங்கிக் கொள்ளக்-கூடாது. கொடூரமான செயல்கள் எங்கு நடந்தாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்த உலக நாடுகள் கடமைப்படவில்லையா?

விடுதலை தலையங்கம் 11.11.09

Tuesday, November 10, 2009

காந்தியார் கிளப்பி-விட்ட கூத்து!



1. “மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையி-லிருந்து இட்டவேலி சாஸ்தான் கோயில் சாலை (வழி) தெங்கன் விளை, ஹரிஜன் காலணி சாலை கி.மீ. 0/0.1/0.


குமரி மாவட்டம் செருப்-பாலூரில் இருந்து அதன் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட-வர்கள் இருக்கிறார்களாம். அதைக் குறிப்பிடுவதற்-காக இப்படி ஒரு விளம்பரப் பலகையினை நெடுஞ்-சாலைத் துறை பொறித்தி-ருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் ‘ஹரிஜன்’ அதாவது இந்து மதக் கடவுளான விஷ்ணு-வின் புத்திரர்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் ‘ஹரன்_ சிவனின்’ புத்-திரர்களா?


இது காந்தியார் கிளப்பி-விட்ட கூத்து! கடவுளின் பிள்ளைகள் என்றால் அதன் பொருள் தீண்டத்-தகாதவர்கள் என்று அர்த்-தமா? ஊருக்கு வெளிப்-புறத்தில் குப்பைமேடு-களில் வாழவேண்டும் என்று பொருளா?

இந்த ஹரியின் புத்-திரர்கள் சிறீரங்கம் ரெங்க-நாதர் கோயில் கருவறைக்-குள் நேராக நுழைய முடியுமா?

தாழ்த்தப்பட்ட தோழர்-களைத் தனியே பிரித்துக் காட்டும் அவசியம் நெடுஞ்-சாலைத் துறைக்கு என்ன வந்தது? அதுகூட காலனி அல்லவாம் _ காலணி-யாம்! உண்மைதானே, செருப்பாகத்தானே அந்த உழைப்பாளித் தோழர்-களை பாழ்படுத்தும் இந்த இந்து மதம் இறுக்கி வைத்-திருக்கிறது.

ஹரிஜன நலத்துறை என்ற பெயர் ஆதிதிராவி-டர் நலத்துறை என்று மாற்-றப்பட்டதுகூட நெடுஞ்-சாலைத் துறைக்குத் தெரிய-வில்லையே!

2. குமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணிய-சாமிக்கு ஆராட்டு விழா-வாம். நடந்து தொலையட்-டும்! அதற்குப் பேரூராட்சி மன்றத்தின் நிதியிலிருந்து நாளேட்டுக்கு பல்லாயிரம் ரூபாய் செலவில் விளம்-பரமாம்.

இங்குதான் இடிக்கிறது. பேரூராட்சி என்பது மதச் சார்பற்றது. அப்படியி-ருக்-கும்போது குறிப்பிட்ட ஒரு மதத்தின் விழாவுக்கு ஊராட்சி நிதியிலிருந்து எப்படி பணம் செலவு செய்யலாம் என்பது நியாய-மான வினாதானே?

3. நாகர்கோவிலில் சட்டப்பேரவை உறுப்பி-னர் நிதியிலிருந்து குறிப்பிட்ட கோயிலுக்கு ரூபாய் 5 லட்சம் தரப்பட்டதற்காக இந்து முன்னணி நன்றி தெரிவித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்-பி-னர் நிதி மக்கள் நல்-வாழ்வுக்குப் பயன்பட-வேண்டுமே தவிர, குட்டிச் சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவதற்காக அல்லவே! இதுகுறித்தெல்லாம் தெளிவு-படுத்தி அரசு சுற்றறிக்கை-விட்டால் நல்லது.

விடுதலை 10-11-09

Monday, November 09, 2009

பார்ப்பான் பண்ணை-யம் கேட்பாருண்டோ?


திருச்செந்தூர் முருகன் கோயிலில் அண்மையில் வேள்விச் சாலை (யாகம்) நடத்தினார்கள். செலவு எவ்வளவு தெரியுமா? பதினாறு லட்சம்தான்.


அப்படி யாகத்தில் என்னதான் செய்வார்கள்? உணவுப் பொருள்களை-யும் (மிக முக்கியமாக நெய், பால் வகையறாக்-கள்) பட்டுத் துணிகள் முதலானவற்றையும் தீயில் போட்டுக் கொளுத்துவார்-கள். அதாவது மக்க-ளுக்கு அன்றாடத் தேவையான உணவுப் பொருள்களைத் தீயில் போட்டுப் பொசுக்கி நாசப்படுத்துவார்கள்.

இவ்வளவுக்கும் இந்தி-யாவில் 50 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் மரணம் அடைகின்றனர். ஊட்டச்-சத்து இல்லாத உலக மக்-களில் 27 விழுக்காட்டி-னர் இந்தியாவில் உள்ள-னராம்.

இந்த நிலையில்தான் 17 லட்சம் ரூபாய் மதிப்-புள்ள உணவுப் பொருள்-கள் உள்ளிட்ட இன்றிய-மையாத பொருள்களை பக்தி என்ற பெயரால் ‘‘கிரி-மினல் வேலையில்’’ ‘பிள்ளை விளையாட்டாக’ ஈடுபட்டுக் கொண்டிருக்-கின்றனர்.

இந்த யாகத்தில் பொருள்கள் நட்டமடைந்-தாலும், யாகப் புரோகிதப் பார்ப்பான் வயிற்றில் மட்-டும் அறுத்துக் கட்டுவது ஏராளம்.

பார்ப்பான் வயிறு பர-லோகத்துக்குத் தபால் பெட்டியோ என்பார் நடிக-வேள் ராதா இரத்தக்-கண்ணீர் நாடகத்தில் அதுதான் நினைவிற்கு வருகிறது.

பாலில் நீர் கலந்தால் கலப்படக் குற்றத்தின்கீழ் கைது செய்யும் சட்டம் இருக்கிறது. ஆனால், நெருப்பில் உணவுப் பொருள்களைக் கொட்டி-னால், அது தெய்வ காரிய-மோ!


இதில் இன்னொரு கொடுமையும் கூத்தாடு-கிறது. இந்த யாகத்தைச் செய்வதற்குமுன் பூமி பூஜை செய்யவேண்டு-மாம்; அதைச் செய்யாமல் யாகம் செய்துவிட்டார்-களாம் _ அது சாத்திரக் குற்றமாம்! நீதிமன்றம் எதற்கு இருக்கிறது?

இந்து மதவாதி ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்-தார். கனம் நீதி-மன்றம் சாத்திரங்களை-யெல்-லாம் கரைத்துக் குடித்து சோதனை செய்து பார்த்து, ‘ஆமாம், ஆமாம் சாத்திரக்குற்றம்தான், எனவே, பரிகாரப் பூஜை செய்யவேண்டும்’ என்று ‘கறாராக’ தீர்ப்பு அளித்து-விட்டது.

இந்தப் பரிகாரப் பூஜைக்கு ஆன செலவு என்ன தெரியுமா? மறு-படியும் ரூ.17 லட்சமாம்.பார்ப்பனிய அமைப்-பில் சாத்திரப்படி நடந்து-கொண்டாலும் அவா-ளுக்கு இலாபம் _ சாத்தி-ரத்தை மீறி நடந்துகொண்-டாலும் கொள்ளை இலாபம்.

இந்தத் தகடுதத்தம் _ மோசடியை உலகில் எங்-காவது கேள்விப்பட்ட-துண்டா?

நியாயப்படி என்ன செய்திருக்கவேண்டும்? பூமிப் பூஜை செய்யாத-தால் ஏற்பட்ட நட்டத் தொகையை, அதற்குக் காரணமான புரோகிதர்-களிடமிருந்துதானே பறி-முதல் செய்திருக்கவேண்-டும்?



பார்ப்பான் பண்ணை-யம் கேட்பாருண்டோ?


- மயிலாடன் (விடுதலை 09-11-09)

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால் அவர்களைக் கொண்று ஒழிப்பது என்பது அல்ல….


வாயில் - நாக்கில் - குற்றம் இருந்தா லொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; இபறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு இறைச்சி உண்ணாது. அதுபோன்றதே பார்ப்பனர் தன்மை. தன் சுய இன நன்மை ஒன்றே அவர்கள் குறியாக இருக்கும்.


பார்ப்பான், பணக்காரன் என்ற இரண்டில், பணக்காரன் என்பது இயற்கையான பேதம் அல்ல; செயற்கையே யாகும். அதாவது எவனும் தான் பிறக்கும் போதே பணக்காரனாகவே பிறந்து பின் சாகும்போதும் பணக்காரனாகவே சாவான் என்பதில்லை. ஆனால், பார்ப்பான் பேதம் அப்படியில்லையே. அது அவன் அம்மா வயிற்றிலிருந்து வரும் போதே நான் பார்ப்பானாக வருகின்றேன் என்கின்றான்.

பார்ப்பானுடைய தர்மம் உடல் வியர்க்கப் பாடுபடல் கூடாது. பிச்சை எடுத்துப் புசிக்க வேண்டும். பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரம்) தர்மம். பார்ப்பான் யாரிடம் பிச்சை கேட்டாலும் தன் பொருளையே சொத்தையே வாங்கிக் கொள்கிறான். பூமி, பணம் எல்லாம் பார்ப்பானுடையது. அதைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தர்மம். ஏர் கலப்பை, வட கயிற்றைப் பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம். நாம்தான் உழ வேண்டும்.

ஆரியர் இந் நாட்டுக்கு வருமுன், நிலம், நீர் , இடம் காரணமாக மக்கள் பழக்க, வழக்க, இயற்கைத் தன்மைகளில் பேதமிருந்ததாக்க் காணப்படுவதல்லாமல் மதம், மதத்தின் பயனாய் ஏற்பட்ட வேடம், சடங்கு, சாதி என்பவைகள் காரணமாகப் பேதம், பிரிவு இருந்ததாகச் சொல்லுவதற்கு அறிகுறிகள் காணப்படவில்லை.

பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது.ஒரு இடத்தில் ஒரு வியாதி ஏற்பட்டால் - வியாதிவந்தவனைப் பார்த்துப் பார்த்து மருந்து கொடுத்துக கொண்டு வருவதால் - வியாதியை ஒழித்துவிட முடியாது. வியாதியின் மூலாதாரத்தைக் கண்டுபிடித்து, அதை அடியோடு அழிக்க வேண்டும். அது போலவே கொசுக்கள் இந்த மண்டபத்திற்குள் வருவதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டு பிடித்து அதை அழிக்க வேண்டும். இந்த மண்டபத்தில் இவ்வளவு அதிகமான கொசுக்கள் கொச கொச வென்று இருக்கின்றனவென்றால் இதற்குக் காரணம் இங்குள்ள ஓதம், அருகிலுள்ள நீர்த் தேக்கம், அதிலுள்ள அசுத்தம், அழுக்கு ஆகிய காரணங்களால்தான் கொசுக்கள் உண்டாகின்றன என்பதை நன்றாய் அறிய வேண்டும். கொசு உபத்திரவங் கூடா தென்கிறவர்கள் மேற் கண்ட அசிங்கங்களையும் தீர்த் தேக்கங்களையும் அழிக்க வேண்டும். அக்கம் பக்கம் உள்ள வல்லா இடமும் சுத்தமாக வைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் கொசுக்கள் ஒழியும், இல்லா விட்டால் வெட்ட வெட்டத் தழைக்கும் மரம் போல எவ்வளவு அழித்தாலும் வட்டியுடன் பெருகும் என்பதை என் அபிப்பிராயம். அது போலவே பார்ப்பனர்கள் எப்படி உண்டானார்கள்? அவர்கள் தொல்லை எதனால் ஏற்பட்டது? அதை எது பாதுகாத்து வளர்க்கின்றது? என்பவைகளைக் கண்டு பிடித்து அவற்றை அழியுங்கள்; நசுக்குங்கள்; அதுதான் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் மார்க்கமாகும்.

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டு மென்றால் அவர்களைக் கொண்று ஒழிப்பது என்பது அல்ல…. சாக்கடைக் கசுமாலமு ஒழிந்தால் எப்படி கொசு ஒழியுமோ அப்படி இந்த மதம், கடவுள், கோயில், புராணம் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.

இந்து மத எதிப்புக்கோ, இந்துத்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள் மீது உள்ள பரிதாபமே காரணம்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவைகளில் தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல. இந்த நிலையில் உள்ள எல்லோரிட்த்திலுமே வெறுப்புக் கொள்கிறேன்.

பார்பானை  என்ன நாங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டாம் என்றா கூறுகிறோம்? தாராளமாக இருக்கட்டும் ஆனால் அவர்களு மனிதர்களாக இருக்கட்டும். தேர்களாக இருக்க வேண்டாம் என்றுதானே நாங்கள் கூறுகிறோம். எங்களுக்கும் மற்ற மதத்தவர்களுக்கும் இடையூறில்லாத எந்த உரிமையையும் பார்ப்பனர்க்கும் வழங்க நாங்கள் தயாராகத்தானே இருந்து வருகிறோம்.


----------பார்பனியம் பற்றி தந்தை பெரியார்

Friday, November 06, 2009

பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும்


பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாத - கடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.


தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான் இவர்களைச் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன்.

நாத்திகம் என்பது: நாத்திகம் அவரவர்கள் மன உணர்ச்சி - ஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல; ஒரு கட்சி அல்ல; ஒரு மத மல்ல.

ஒருவனை ஒருவன் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாத்திகமாகும். கடவுளைச் சரியாக அறியாத்தே யாகும். அந்த வார்த்தையை உண்டாக்கினவர்களே நல்ல நாத்திகர்களாவர். கடவுள் இருந்தால் ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்கவாவது முடியுமா? ஆகவே நாத்திகம், நாத்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளேயாகும். கடவுள் வியாபாரக்காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்தக் கவலையே இருக்க நியாயமில்லை.

நாத்திகன் ஆத்திகன்: காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.
நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை யென்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு: சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.


நாத்திகத்தின் பிறப்படம்: எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ ங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒருவனைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில் கடவுளுக்குத்தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே ஒரு மனிதன் இப்படி முட்டாள் தனமான காரயத்தைச் செய்வானா அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியதைதச் செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை நாத்திகன், கடவுளை மறுக்கிறவன் என்று குறையோ குற்றமோ சொல்ல மாட்டான்.

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

---------பெரியாரின் புரட்சி மொழிகள்

கிரிக்கெட் விளையாட்டு........சிந்தியுங்கள்!!!



கிரிக்கெட் என்ற அந்நிய நாட்டு விளையாட்டு நம் இந்தியாவை தொற்றிக்கொண்டு அட்டிவிப்பது கொஞ்சம் நஞ்சமல்ல. இதுதான் நம் தேசிய விளையாட்டு போலவும் ஆகிவிட்டது இதற்க்கு அரசாங்கம் ஊக்குவிப்பு வேறு. என்ன ஒரு வெட்க்ககேடு மானகேடு. நம் தேசிய விளையாட்டகிய காக்கியை மறந்து ஒவொரு இளைங்கர்களும்,சிறுவர்களும் ஏன் தள்ளாத முதியர்வல்களும் கூட சச்சின் என்ன ஸ்கோர் என்று கேட்க்கும் அளவுக்கு, இந்த கிரிகெட் மோகம் பத்தாம் பசலித்தனமாக எங்கும் பரவி கிடக்கிறது. இது அரோகியமா? என்றால் இல்லை என்று ஒடெனே சொல்லிவிடலாம்.

நம் நாட்டில் எத்தனையோ நம் பண்பாடு சார்ந்த விளையாட்டுகள் அழிந்து இதனை போன்றதொரு விளையாட்டு மோகம் நம்மவர்களிடம் வளர்ந்து வருபவதை அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட்  வீரர்களிடம் சூதாட்டமாகவும் மற்றும் மக்களிடம் ஒரு போதயயை (பான்பராக், குடிபழக்கத்தை விடவும் மோசமாக) போலவும் இருக்கிறது.

சரி இந்த கிர்க்கெட் விளையாட்டில் யாரேனும் வசதி இல்லாதவர்கள் விளையாடமுடியுமா என்றால் அது நினைத்து கூட பார்க்க முடியாது. எவளவு திறமை இருந்தாலும் நல்ல வசதியும் கொஞ்சம் பார்பன வாடை உள்ளவர்களாகவும் இருந்தால் தான் இந்த முட்டாள் விளையாட்டில் சேர இயலும் என்பது இன்னொரு விஷயம். இதற்க்கு உதரணமாக வேறு எங்கும் போக தேவை இல்லை நம் தமிழ்நாட்டிலேயே எடுத்துக்கொண்டோமானால் வெங்கட்ராகவன் தொடங்கி கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்,டபுள்.வீ. ராமன்,சடகோபன் ரமேஷ்,தினேஷ் கார்த்தி இன்னும் தேர்ந்தெடுத்து போவோர் அனைவரும் அவாள் தான். இப்பொழுது புரிந்திருக்கும் கிரிக்கெட் ஒன்றும் சிரமமான விளையாட்டு இல்லை ஒரு சோம்பேறி விளையாட்டு என்று. ஏன் சொல்லுகிறேன் என்றல் அவாள் தேர்ந்தெடுக்கும் அனைத்தும் நோகாமல் நொங்கு தின்பது (மற்றவர்களை ஏமாத்தி பிழைப்பது) தான் கோவில் கற்பகிரகம் உட்பட.

சரி நம் பொது மக்களுக்கு இதனால் என்னதான் பெருமை என்றல் ஒன்றும் கிடையாது. கிட்டத்தட்ட 7 மணிநேரம் தான் விரயம் வேறு ஒன்றும் இல்லை. "மேலும் உலக கோப்பை போன்ற சமயத்தில் செயிதிதாள்களில் என்ன செய்தி என்றால் மேட்ச் பார்க்கும் பொது ஒரு பாலில் ரெண்டு ரன் இந்தியா அடிக்க முடியமால் போன பதட்டத்தில் மாரடைப்பு வந்து மேட்ச் பார்த்த இடத்திலே ஒருவர் சாவு".  எந்த அளவு மோகம் நம்மவர்களுக்கு அனால் சச்சின்,டோனி எல்லோரும் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஒரு மேட்ச் க்கு இவளவு என்று பணம் வங்கி கொண்டு விடுவர். அதுவும் இப்பொழுது ஏலம் வேறு விடுகிறார்கள் கோடி கோடி ரூபாயாக டாலர் களாக. இந்த சூதாட்டத்தை பார்க்க நம்மவர்கள் கூட்டம் கடைக்கு கடை, வீதிக்கு வீதி, அப்புறம் வேலை சேயும் இடங்களில் இன்டர்நெட்டில் வச்ச கண்ணை திருப்பாமல் ஸ்கோர் பார்த்து கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறார்கள்.

இதனை போன்று பார்த்து விட்டு வாரம் சனி கிழமை அனால் மட்டையும் பந்தையும் எடுத்து கொண்டு மெரினா போண்டற இடங்களில் (உட்புற சாலைகளில்) யாரையும் வாகனம் ஓட்ட விடாமல் விளையாடுவது. ஏன் சாலைகளிலேயே இந்த கிரிக்கெட் விளையாட்டால் நிறைய பொது மக்களும் பாதிக்க படுகிறார்கள்.

இவளவு இடையூறும் கஷ்டமும் தரும் இந்த பணக்கார, சோம்பேறி, முட்டாள், சூதாட்ட விளையாட்டு நம்மை போன்ற வளரும் நாடுகளுக்கு தேவை தனா?. சீனா,ஜப்பான்,அமெரிக்க,பிரான்ஸ்,ஜெர்மனி,ரஷ்ய.....(இவை அனைத்தும் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வெல்லும் நாடுகள்) மற்றும் பல முனேற்ற நாடுகளில் இந்த சூதாட்ட விளையாட்டு விளையாடுவதில்லை. ஏன் விளையாடும் அவுஸ்திரேலியா (கிரிக்கெட் தேசிய விளையாட்டு) போன்ற நாடுகளில் கூட மக்கள் இந்த அளவு போதை கொண்டு இருக்கவில்லை.

ஆதனால் தான் பெரியார் அவர்கள் சொன்னார்கள்  11 முட்டாள்கள் விளையாட 11000 சோம்பேறிகள் பார்க்கும் விளையாட்டுதான் இது என்று. அது எவளவு பொருத்தம் என்பது இன்று தெரிகிறது.

 இளைய தலைமுறைகளே, வருங்கால இந்தியாவின் தூண்களே இந்த கிரிகெட் போதை தேவையா?  தயவு செய்து சிந்தியுங்கள்!!!

Thursday, November 05, 2009

இவன்தான் பிள்ளை - யார்!


திருவிராகம் பண் வியாழக் குறிஞ்சி, 1ஆம் திருமுறை திருவலிவலம் திருங்கனசம்பந்தர் (தேவாரம்)

"பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே"

இப்பாடலின் கருத்து:

சிவபெருமானின் மனைவியாரான உவமையால் பெண் யானை வடிவத்தை மேற்க்கொள்ள இளமை மிகுந்த ஆண் யானையின் வடிவத்தை சிவபெருமான் மேற்க்கொள்ள இருவரும் கூடினர். அப்படிக் கூடியதால் கணபதி பிறந்தார். சிவபெருமான் தன்னுடைய அடியை வழிபடும் அடியவர்களின் துன்பங்களை போக்க கனபதியயை பெற்றுடுத்தனர். அத்தகைய சிவபெருமான் திருவலம் என்ற ஊரில் உள்ளவர், தங்களிடத்து வந்து இரந்தவர்கு இல்லை என்னாது இயன்ற உதவிகளை செய்யும் கோடை பண்புடைய மக்கள் வாழும் ஊர் வலிவலம் ஆகும் என்பது கருத்து.

உயிரினங்களின் பெரிதும் வலிவுடயதும் யானையாகும். ஆணும் பெண்ணுமாக கூடி ஆபவிக்கும் உயிரின இன்பங்களில் யானையும் யானையும் கூடி அனுபவிக்கும் உயிரின் இன்பம் பெரிதாக இருக்கலாம் என்னும் நினைப்பில் சிவபெருமானும், பார்வதியும் யானை வடிவு கொண்டு கூட, அதன் விளைவாக யானை முகத்தோடு யானை கன்று ஆகிய பிள்ளையார் பிறந்தார் என்று பாடியுள்ளார்.

திருகனசம்பந்தர் எழுதிய இந்த தேவார பாடல் தஞ்சை மாவட்டம் வலிவலத்தில் உள்ள கோயிலிலும் வடிக்கப்பட்டுள்ளது. மும்மலமும் கடந்த கடவுள் என்று ஒரு பக்கம் கூறி கொண்டு காமவெறியுடன் காட்டு யானைகளாக உருவெடுத்து அம்மையும், அப்பனும்(சிவனும் பார்வதியும்) கலவி செய்தார்கள் என்பதும், அதன் காரணமாக விநாயகர் என்கிற பிள்ளையார் பிறந்தார் என்பதும் எவ்வளவு பெரிய காட்டுமிரண்டித்தனம்!

சும்மாவா, சொன்னார் பெரியார் கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று....சிந்தியுங்கள் தோழரே!!!

பெரியாரால் என்ன பயன்?


சில தோழர்களுடன் நான் உரையாடி கொண்டிருக்கும்பொழுது அவர்கள் கேட்பது பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார். அவரால் ஒரு நன்மையும் கிடையாது. இதுதான் இந்த தோழர்களின் வசைபாடக உள்ளது. இப்படி கேட்பவர்கள் மேலும் சொல்லுவார்கள் பெரியாரும் அவருடைய ஆட்களும் இந்து கடவுள்களை மட்டும்தான் விமர்சிக்க முடியும் உங்களால் மற்ற இஸ்லாமிய, கிருஸ்தவ கடவுள்களை விமர்சிக்க முடியாது என்று.

பெரியாரும் அவரை சார்ந்தவர்களும் ஒன்றும் தானாக எதனையும் பேசவில்லை. இந்து மதத்தில் பார்ப்பார்கள் கடவுள் கதைகளை எழுதி இந்த கூமுட்டைகளை அடிமையாக்கிய யோகிதயைதான் சொல்ளிஇருக்கிரர்கள்.மற்ற இரண்டிலும் இவளவு அபசமோ மற்ற மனிதர்களை அடிமைகளாக நடத்துவதோ கிடையாது. இது ஒரு அடிப்படை கருத்துதான் என்றாலும் நிறைய தோழர்களுக்கு இது புரிவதில்லை. இதனை விளக்குவது என்றல் இன்னும் எழுதி கொண்டே போகலாம்.

சரி விசயத்துக்கு வருகிறேன். அப்படி என்னதான் பெரியார் செய்து கிழித்து விட்டார். இவரால் ஒன்றும் பயன் கிடையாது இனியும் கிடக்க போவதில்லை என்று உதட்டை பிதுக்கும் கூமுட்டைகளுக்கு அடிபடியிலேயே ஒன்றும் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இப்படி கூறும் கூமுட்டைகளின் வீட்டிலேயே இட ஒதுக்கீடை அனுபவித்து அவரோ மற்றும் அவருடைய சகோதரர்களோ, சகோதரிகளோ ஒரு மருத்துவராகவோ,பொறியியல் வல்லுனர்களவோ, ஆசிரியர்களாகவோ வந்து இருப்பார்கள். இது அவர்களுக்கு தானாக ஏற்பட்ட மாற்றம். இனிவரும் காலத்திலும் அதனை அனுபவிக்க IIT,IIM போன்ற இடங்களில் காத்திருப்பார்கள். அனால் என்ன பயன் ஒன்றும் கிடையாது என்று மீண்டும் இந்த கூமுட்டைகளின் கூவல். இந்த கூமுட்டைகளுக்கு புரியவில்லை என்றால் நமக்கு ஒன்றும் கவலை இல்லை.

பெரியாரின் தாக்கத்தை பார்ப்பனர்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார்கள். அனால் எதிரிகள் புரிந்து வைத்திருக்கும் அளவிற்கு இவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர்களுக்கு பெரியார் பற்றியும் ,திராவிட இயக்கம் பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் ஒரு கடுகளவு கூட படிதிருக்கவோ அல்லது கேட்டிருக்கொவோ வாய்ப்பே இல்லை.(இவர்கள் தினசரி பத்திரிக்கையை ஒப்புக்குதானும் எட்டி பார்ப்பது கிடையாது அப்புறம் எப்படி இதனை எதிர்பார்க்கமுடியும். ஒருவேளை ஏதேனும் அகவிலைப்படி உயர்வு என்று வந்தால் பத்திரிக்கை எட்டி பார்பார்கள்).

பெண்கள் முன்னேற்றம் பற்றி பெரியார் கூறியது எல்லாம் இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. பெண் அடிமை (இதில் பார்ப்பன பெண்களும் அடங்குவர் , பெரியார் பார்பன எதிரி என்றல் இதில் பார்பனரல்லாத பெண்களுக்கு மட்டும்தான் போராடியிருக்க வேண்டும் ஆனால் அவர் அப்படி யல்ல மனித அடிமை தனத்திற்கு எதிராக போராடியவர் என்பதை இதன் மூலமாவது சில கூமுட்டைகள் புரிந்து கொள்ளவேண்டும் ) பற்றி பெரியார் செய்த செயல்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

ஆண்களுக்கு நிகராக ஆக்குவதற்கு அவர்கள் பட்ட பாடு இவர்களுக்கு எங்கு புரியபோகிறது. பெண்களுக்கு கல்வியில் ஆண்களுக்கு நிகராக வர 50% பெண்களுக்கு இடம் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடியபொழுது எல்லோரும் கேட்டார்கள் ஆண்கள் சண்டைக்கு வரமாட்டார்களா என்று அதற்க்கு அய்யா அவர்கள் ஏன் அவருடைய தங்கை, மகள்,மனைவி போன்றவர்கள் பயனடைவர்களே என்று. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மனித இனத்தின் அடிமைத்தனத்தை ஒழிக்க எவளவோ செய்து இருக்கிறார்கள். பெரியாரை பற்றி நன்கு தெரிந்தவர்கள் நினைக்கலாம் ஏன் பெரியாரை பற்றி இந்த அடிப்படி செய்தி கூட தெரியாத என்று. அனால் இந்த மிக மிக அடிப்படை செய்தி கூட தெரியாத கூமுட்டைகளும் இந்த தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு விதண்டாவாதம் பேசிக்கொண்டு தானிருக்கிறார்கள்.

கவியரசு வைரமுத்து கூறியது போல

புத்தர் வந்தார் அவர் ஒரு வாழ்க்கை சாவி தந்தார்
நபிகள் வந்தார் அவர் ஒரு வாழ்க்கை சாவி தந்தார்
இயேசு வந்தார் அன்பு எனும் சாவி தந்தார்
காந்தி வந்தார் அகிம்சை எனும் சாவி தந்தார்
பெரியார் வந்தார் பகுத்தறிவு எனும் சாவி தந்தார்
அனால் இன்று இவை அனைத்தும்
ஈயம்,பித்தளைக்கு கொடுத்து பேரிச்சம்பளம்
வாங்கி விட்டார்கள்.
(நினைவில் இருந்த வரிகள் மட்டும் கூறியிருக்கிறேன்)

இவர்களை நினைக்கும் போது மேலும் ஒரு கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன்
பிணம் எரித்துக் கொண்டிருக
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?


இனியாவது பெரியாரைப்பற்றி அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்டு சிந்தித்து செயல் படுவோம் .......

Wednesday, November 04, 2009

மரகத லிங்கத்துக்கு மறுவாழ்வா?



திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயிலில் மரகத லிங்கம் திருட்டுப்போன கதை ஊர் சிரித்தது. அதன் மதிப்பு ரூ.50 கோடி என்-றெல்-லாம் கூறப்பட்டது.முகூந்த சக்ரவர்த்தியால் தேவர்களின் தலை-வரான இந்திரனிடம் கொடுக்கப்பட்டது என்றும், இந்திரனே வழிபட்ட மரகதலிங்கம் என்றும் பெருமையாகவும் பேசப்பட்டது.

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 நாள்கள் சிறப்புப் பூஜைகள் எல்லாம் தட-புடலாக நடத்தப்பட திட்டமிடப்பட்ட நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி இரவு (கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட எட்டாம் நாளில்) அக்கோயிலின் மரகதலிங்கம் களவு போய்விட்டது. ஆமாம், இந்திரனால் வழிபட்ட சக்தி வாய்ந்த லிங்கம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட அதிக விலைமதிப்புள்ள அந்த மரகதலிங்கத்தை இருவர் திருடிச் சென்றுவிட்டனர். சர்வசக்தி வாய்ந்த சாமியை சாதாரண ஆசாமிகள் திருடிக்கொண்டு சென்றுவிட்டனர்.

எட்டு மாதங்கள் கழித்து காவல்துறையின் திறமை--யால் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு; மூலச் சரக்கான மரகதலிங்கம் கைப்பற்றப்பட்டது.
கடவுள் சக்தி என்பதெல்லாம் கவைக்கு-தவாதது _ அது அடித்து வைக்கப்பட்ட சிலை _ அவ்வளவுதான் என்று பகுத்தறிவுவாதிகள் பிரச்சாரம் செய்ததெல்லாம் மாபெரும் உண்மை-யென்று பாமர மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

வெட்கம் கெட்டவன் வெறுமனே உடலோடு செல்லத் தயங்கமாட்டான் என்பதுபோல, காவல்துறையினரால் திரும்பக் கொடுக்கப்பட்ட அந்தப் பொம்மையான மரகதலிங்கத்தை மேள-தாளத்துடன் வீதிஉலா நடத்தி கோயிலுக்குக் கொண்டு சென்றார்களாம். வெள்ளிப் பெட்டியில் வைத்து 24 மணிநேரமும் துப்பாக்கி சகிதத்துடன் காவல்துறை பாதுகாப்பாம்!

மரகதலிங்கத்துக்குச் சக்தியில்லை _ காவல்துறைக்கும், துப்பாக்கிக்கும் தான் சக்தி உண்டு என்பதற்கு இதைவிட அப்பட்டமான ஆதாரம் வேறு ஒன்றும் தேவையோ!

இது ஒரு பச்சையான நாத்திகச் செயல்தானே? கடவுளை மற, மனிதனை நினை என்றார் பகுத்-தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இப்பொழுது கோயிலில் தர்மகர்த்தாக்களே தங்கள் கோயில் கடவுள் சிலையைக் காப்பாற்ற காவல்துறையை _ அதாவது மனிதர்களை நாடிவிட்டனரா இல்லையா?

இதில் இன்னொரு கோமாளித்தனத்தையும் கவனிக்கத் தவறக்கூடாது.
சிலை திருடப்பட்டுச் சென்றதால் தோஷம் ஏற்பட்டுவிட்டதாம். யாருக்கு? கடவுளுக்கு! அப்படியென்றால் தோஷம் பெரியதா? கடவுள் பெரியதா? என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?

சரி, தோஷம் நீக்கப்படுவதற்குப் பரிகாரங்கள் செய்யப்படவேண்டாமா? அதன்மூலம் புரோகிதப் பார்ப்பனர்களின் தொப்பை நிரம்பவேண்டாமா? சுரண்டல் வியாபாரம் ஜாம்ஜாமென்று நடக்க-வேண்டாமா?

வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்-தாலும் அவற்றின் பலாபலன் என்பது பார்ப்பனர்-களுக்கு இலாபம் _ வரும்படி என்கிற ஒரு வட்டத்-துக்குள் பக்தி, கோயில், மதச் சமாச்-சாரங்கள் அடங்கிவிடும். இது பார்ப்பனியத்தின் அலாதியான சூட்சுமமான ஏற்பாடாகும்.

அந்த முறையில் திருடப்பட்டு கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள மரகதலிங்கத்தின் தோஷம் கழிப்பதற்காக பூஜை புனஷ்காரங்கள், பரிகார செயல்கள் தொடங்கப்பட்டுவிட்டன. 108 லிட்டர் பாலாபிஷேகமாம்! தேனாபிஷேகமாம். சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதிட ருத்ர ஹோமமாம்.

ஹோமம் (யாகம்) என்றால் பார்ப்பனர்களுக்கு எல்லா வகையான தானங்களும் தடபுடலாக நடக்குமே!பக்தி ஒரு வியாபாரம். அதுவும் பார்ப்பனர்-களுக்கு மூலதனம் தேவையில்லாத ஒரு வியா-பாரம் என்பதைத் தமிழர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ!

இஸ்ரோ தலைவர்


இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தின் (இஸ்ரோ) தலைவராக அறிவிக்கப்-பட்-டுள்ள கே. இராதாகிருட்--டினன் தாம் பொறுப்பை ஏற்குமுன் அவசர அவசர-மாக குருவாயூர் கோயி-லுக்குச் சென்று எடைக்கு எடை வாழைப் பழங்-களைக் கொடுத்து பகவா-னின் ஆசியைப் பெற்றுக்-கொண்டிருக்கிறாராம்.


அறிவியலில் நோபெல் பரிசு பெற்றவ-ரான சி.வி. ராமன் கூறிய கருத்துக் குறித்து பொது உடைமைவாதியான ஏ.எஸ்.கே. தாம் எழுதிய கடவுள் கற்பனையே _ புரட்-சிகர மனித வரலாறு எனும் நூலின் முன்னுரை-யில் பின்வருமாறு குறிப்-பிட்டுள்ளார்.

முதல் மனிதன், யூரி காரின் 1962 இல் விண்-வெளி _ அகண்ட காஸ்-மாசில் (Cosmos) சென்-றதை விஞ்ஞானியாக இருந்தும் கடவுள் நம்-பிக்கைக் கொண்ட நல்ல-வர் டாக்டர் சி.வி. ராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்திற்கு மனி-தன் தன் பூத உடலுடன் செல்லுவது மிகமிகப் பாவம் செய்வதாகும் என்றார்.

அறிஞர் என்று பட்-டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண்ணங்-கொண்-டவராக இருந்தார் என்றால், நம் நாட்டின் பாமர மக்கள் நிலையை நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை; கூறாமலேயே விளங்கும் என்று தம் வேதனையை வெளிப்படுத்தினார் தோழர் ஏ.எஸ்.கே.

நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்-புக்கான ஒரு லைசென்சு என்று தந்தை பெரியார் அவர்கள் துல்லியமாகக் கணித்துக் கூறியதை இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்-பது பொருத்த-மா-னதே!

ராகேஷ் சர்மா _ பெயர் நினைவிருக்கிறதா? முதல் விண்வெளி வீர-ரான இந்தியர் (1984) அவர்.

அப்பொழுது பார்ப்ப-னர்கள் நடத்திய தாம்-பிராஸ் என்ற ஏடு என்ன எழுதியது தெரியுமா?ராகேஷ் சர்மா ஆம் வான்வெளியில் பறந்த உலகத்தின் உச்சியிலே பறந்த முதல் இந்தியர்.

பாரதமே தலை நிமிர்ந்து நிற்கிறது!நாமும் தலைவணங்கி நிற்கிறோம்.எதற்காக? அவன் நம் இனத்தைச் சேர்ந்தவன் என்பதனாலா?விண்வெளி கலத்தில் காலடி எடுத்து வைப்ப-தற்கு-முன் உதிர்த்தானே மூன்று முறைகள் அந்தக் காயத்ரி மந்திரத்துக் காக! என்றது பார்ப்பன ஏடு. சென்றவனின் அறி-வுத்தீட்சண்யமும், தாம்-பிராசில் எழுதுபவர்களின் புத்தியும் எப்படி மேய்-கின்றன பார்த்தீர்களா?

இந்நிலையில் விஞ்-ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டியது ஒவ்-வொரு இந்தியனின் அடிப்-படைக் கடமை என்று இந்-திய அரசமைப்புச் சட்டம் கூறு-வதையும் எண்ணிப்-பார்ப்-போம் (51ஏ).

இஸ்ரோ விஞ்ஞானக் கூடத்தின் தலைவரே குரு-வாயூரப்பனுக்கு வாழைப்-பழம் (அல்வா கொடுக்கி-றாரோ) கொடுக்கிறார். இந்தியாவின் பார்ப்பனியம் எல்லாவற்றையும் ஏப்ப-மிட்டு விடும், எச்சரிக்கை!



விடுதலை 04-11-09

Tuesday, November 03, 2009

அந்த நாள் என்று வரும்?

தமிழ்நாட்டில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் போராட்டம்



வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - தந்தை பெரியார் அவர்களின் பணிகள் குறித்து போர்வாள் தீட்டிய அரிய கட்டுரைக் கருவூலம் இது


1924 இல் ஆரியத்தின் திருவிளையாடல் கதர் போர்ட், தென்னாட்டில் கதர் நிர்-வாகம் பற்றிய அலுவல்களைக் கண்காணிப்-பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு. அதன் செயலாளராய் இருந்த சிறீமான் சந்தானம் என்பவர்_- பிரமன் முகத்துதித்த வகுப்பினர்_ அந்த நிலையத்தின் அலுவல்கள் அத்தனைக்கும் ஆரியரையே நியமித்தார் வரிசை வரிசையாக. கண்டார் பெரியார். ஏதோ தற்செயலாக, நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் ஆரியராக உள்ளனர் போலும் என்றெண்ணினார் முதலில். பிறகு அதுவே நித்திய நிகழ்ச்சியாக இருப்பதைக் கண்டதும் கொதித்தெழுந்து கேட்டார், என்ன சந்-தானம், ஏன் இப்படி என்று. தக்க பிராமணல்லாதார் கிடைக்கவில்லை_- கிடைக்கும் பிராமண-ரல்லாதார்க்கோ தகுதியும் திறமையுமில்லை என்று விடை கூறினார் சந்தானம். பெரியார் நம்ப வில்லை இதனை. அலசிப் பார்த்தார் உண்மைகளை. உத்தியோக நியமனங்களை ஆராய்ந்து பார்த்தார். ஆரியர்களே அடுக்-கடுக்காக, வரிசை வரிசையாக, வேண்டு-மென்றே, நெஞ்சுத் துணிவுடன் நியமிக்கப் படுகின்றனர் என்பதை உணர்ந்தார். ஓகோ! அந்த ஜஸ்டிசுகள் சொல்வது மெய்தான் போலிருக்கிறது என்றெண்ணினார். எண்ணியது மட்டுமா, இந்தப் போக்கை இனி நீர் வளரவிடக் கூடாது_- பிராமணர்களையே வரிசையாக நியமிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார் செயலாளர் சந்தானத்திற்கு, தான் தலைவர் என்ற முறையில். சந்தானம் உடனே காரியதரிசி பதவியை ராஜினாமா செய்தார். வழக்கு காந்தியாரிடம் சென்றது_- விசாரணைக்கு! அப்போதுதான் காந்தியார் நாய்க்கர்ஜீயை (பெரியாரை காந்தியார் அப்படித்தான் குறிப்பிட்டு வந்தார் அந்த நாளில்) அழைத்து ஏன் இந்த சிக்கலென்று கேட்டார். அதற்குப் பெரியார் கொடுத்த பதில், காந்தியார் அளித்த தீர்ப்பு, ஆச்சாரியார் செய்த வியாக்யானம், உண்மை நிலையைக் கண்டு சங்கர்லால் பாங்கர் திடுக்கிட்டது இவை அத்தனையும் உள்ளடக்கியதுதான் இக்கட்டுரை துவக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள உரையாடல்.

தகுதியும் திறமையும் ஒரு கூட்டத்தார்க்கு மட்டுமே உரிய சொந்த சொத்து என்று இன்று கூறப் படுவது போலத்தான் அன்றும் கூறப்பட்டது என்றால் சாதாரண மனிதர்களால் அல்ல _ அன்பர் ஆச்சாரியார் போன்ற மதிப்பு மிக்க தேசியத் தலைவர்களால்! தகுதியையும் திறமையையும் காட்டிக் காட்டி ஆரியம் திராவிடத்தை ஏய்த்த கதை புதிதல்ல - பழையது; மிகப் பழையது. தம் இனத்தவரே அறிவின் திருவுடையார்; பிறரெல்லாம் அத்துணை கூர்மதி அமை-யாதார் என்று ஆரியர் நெஞ்சு நிமிர்ந்து சொல்லி வருகின்றனர் இன்று நேற்றிலி-ருந்-தல்ல. பலப்பல ஆண்டுகளாக, ஒரு துறையில் இரு துறையில் அல்ல. எல்லாத் துறை-களிலும், கதர் போர்ட் நிர்வாகம் இந்த விபரீத வாதத்திற்கு இரையான பரிதாப நிகழ்ச்சிகளில் ஒன்று. பெரியாரின் உள்ளத்தை ஒரு குலுக்கு குலுக்கி விட்டது இந்த நிகழ்ச்சி. அது-வரையில் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று பிரித்துப் பார்க்க ஒவ்வாத பெரியாரை_- பிராமணர்களென்றும் பிராமணர் அல்லாதார் என்றும் உள்ள பாகுபாடுகளைத் தன் உள்ள-மென்னும் உலகத்தில் உலவா வண்ணம் துரத்தியடித்த பெரியாரை_- இந்தியாவைச் சுரண்டி வந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டுவதிலேயே தன் உள்ளம், உரை, செயல் அத்தனையையும் பறி-கொடுத்து--விட்ட பெரியாரை - என்ன இருந்தாலுமே இந்தப் பேத புத்தி ஆகுமோ என்று ஜஸ்டிசுகளை நோக்கி கேலிக்கவிதை பாடிவந்த பெரியாரை முதன்முதல் சிந்திக்க வைத்தது இந்தக் கதர் போர்ட் நிகழ்ச்சி.

பார்ப்பனியத்தின் சலசலப்பு :

பெரியார் உள்ளத்தில் சிந்தனை

சந்தானத்திற்கு ஆரிய உணர்ச்சியா! நான் உள்ளன்போடு நேசித்து வந்த என்னருமை நண்பர் இராசகோபாலாச்சாரியர் உள்ளத்-திலும் பிராமணீய உணர்ச்சி இத்துணை ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறதா! ஆரியம் உண்மையிலேயே இவ்வளவு சூழ்ச்சியும் கரவும் வஞ்சமும் நச்சுத் தன்மையும் நிறைந்-ததா! ஒரு குலத்துக்கொரு நீதி என்றுரைக்கும் மனுநீதி இன்னும் மாயவில்லையா! காங்-கிரசிலும் இந்த அநீதியா! எல்லாரும் ஓர் குலம்; எல்லாரும் ஓர் இனம்; எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று கவி பாடும் கலைவாணர்களும், அதைக் காட்டி உரையாடும் நாவாணர்களும் நனிநிறைந்த தேசிய இயக்கத்திலும் இது இருக்கிறதா! பெரியார் இது போல எண்ண-லானார், கதர்போர்ட் பிராமண போர்ட் என உருமாறிய விந்தை கண்டு. முதன் முதலாக அவருடைய உள்ளத்தில், பிராமணர் - அல்-லாதார் என்ற இரு சொற்களுக்கும் நடுவே உள்ள இடைவெளி, மிகப் பயங்கரமான, மிக மிக ஆழமான, பலப்பல நூற்றாண்டு-களாகக் கொஞ்சமும் குறையாது உள்ள இடை-வெளியின் சாயல் படர்ந்தது -முதலில் லேசாக; பிறகு கொஞ்சம் அழுத்தமாக; பிறகு மேலும் மேலும் அழுத்தமாக.

விவிவி

மகரிஷி வ.வே.சு.அய்யர் எல்லோரு-டைய மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்றவர். சீமையில் வெள்ளைக்காரர்கட்கு எதிராகப் பயங்கரப் புரட்சி செய்யத் திட்டமிட்டு வந்த வீரசவர்க்காருக்கு உற்ற துணைவராகவும் உரிய நண்பராகவும் இருந்தவர். கலை பல பயின்றவர்; திருக்குறள் உணர்ந்தவர்; அறிஞர், விவேகி, வீரர், தீரர் என்றெல்லாம் புகழுரைகள் சூட்டப்பட்டவர். அப்படிப்-பட்டவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சேரன்மா தேவியில் பரத்துவாச ஆசிரமம் என்ற பெயரில் தேச பக்தர்-களையும், தேசிய வீரர்களையும் தயாரிப்-பதற்கு என்பதாகக் காரணம் காட்டி ஒரு குரு-குலம் அமைக்கிறார் என்ற சேதி கேட்ட-போது தமிழ் நாட்டுக் காங்கிரஸ் துள்ளிக் குதித்தது, மகரிஷியின் வீரம், தியாகம், மேல்நாட்டில் வாழ்ந்ததால் பெற்றஅநுபவம், ஆழ்ந்த கலைப் பயிற்சி, ஆங்கில அறிவு, பயங்கரப் புரட்சியில் ஏற்பட்ட பழக்கம் இத்தனையும் குருகுலத்தை எத்தனை வளப்படுத்தும் என்று எண்ணி எண்ணி தேசிய வட்டாரம் களிப்புக் கடலில் குதித்துக் குதித்துக் கூத்தாடிற்று. அவர் உதவித் தொகை வேண்டுமென்று கேட்டதும் தமிழ் மாகாண காங்கிரஸ் 10,000 ரூபா நன்கொடை தருவதாக உடனே பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டது.

அப்போது தமிழ் மாகாண காங்கிரசிற்கு இரண்டு கூட்டுக் காரியதரிசிகள். ஒருவர் பெரியார், மற்றவர் கே.எஸ்.சுப்பிரமணிய அய்-யர் என்பவர். பெரியாரின் பணி செக்கிலே கையெழுத்திடுவது. பிற கடிதங்கள் ஆதா-ரங்கள் முதலியவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு மற்ற செயலாளருக்கு. வ.வே.சு.-அய்யர், மாகாண காங்கிரஸ் தீர்மானித்தபடி என் குருகுலத்திற்கு தரவேண்டிய நன்-கொடையைத் தாரும் என்று பெரியாரிடம் கேட்டபோது, பெரியார், தாராளமாகத் தருகிறேன். அதற்கென்ன? நீங்கள் குருகுலம் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? அதனுடைய சட்ட திட்டங்கள், நடைமுறை விதிகள் முதலியவற்றைக் கொண்டு வாரும்; அவற்றைப் பதிவு செய்து கொண்டு பணம் தருகிறேன் என்று சொன்னார். அவர் சரி என்று சொல்லிவிட்டு, இன்னொரு செய-லாளராக சுப்பிரமணிய அய்யரிடம் சென்று, பெரியாருக்குத் தெரியாமல் ரூபா 5,000 க்கு செக் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

குருகுலப் போராட்டம் மூட்டிவிட்ட தீ

இதற்கு இடையில் வ.வே.சு. அய்யரின் குருகுலம் துவக்கப்பட்டுவிட்டது. துவக்கிய சில நாட்களுக்குள் அங்கு பிராமணர்_- பிராமணரல்லாதார் வேற்றுமை மிகவும் பாராட்டப்படுவதாகத் தமிழ்நாடு முழுவதும் ஒரு சேதி காட்டுத்தீப் போல பரவிற்று. தமிழகம் முழுவதும் அதே பேச்சு. அரசியல் உணர்வுடையார் அனைவர் உரையாடலிலும் குருகுல வேற்றுமையைப் பற்றிய கருத்துப் பரிமாறல். எங்கும் எவரும் இதைப் பற்றியே சிந்திக்கவும் பேசவும் எழுதவும் முனைந்-தனர்.

ஒரு நாள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டி-யார் (ஆமாம்! இப்போது சென்னை மாகாண முதலமைச்சராய் உள்ளவர்தான்) பெரி-யாரைக் கூப்பிட்டு, பரத்வாஜ குருகுலத்தில் பயின்றால் நல்ல பண்பாடும், அறிவு வளர்ச்சியும், சகோதர நேயமும், ஜாதி வேற்றுமையற்ற பரந்த உள்ளமும் ஏற்படும் என்று கருதி தன் மகனை அங்குப் பயிலும் பொருட்டுத் தான் அனுப்பியதையும், அவன் தன்னை ஒரு பிராமணர் அல்லாதவன் என்ற காரணத்தற்காக அங்கு இழிவாகக் கருதி பிராமணப் பிள்ளைகள் உண்ணாத இடத்தில் இருக்க வைத்து உணவு கொடுத்-ததாகத் தன்னிடம் தெரிவித்ததையும் விளக்கமாக எடுத்துச் சொல்லி, இந்த அநி

ய-யத்திற்கு நாம் ஒரு பரிகாரம் தேட வேண்-டாமா என்று மனம் வருந்திக் கேட்டார்.

மகரிஷி என்றும், சிறந்த அறிஞர் என்றும், கலைஞர், தியாகி, புரட்சி வீரர் என்றும், அஞ்சாமையின் சின்னம் என்றுமெல்லாம் போற்றப் பட்டு வந்த வ.வே.சு. இந்த வேற்று-மையைப் பாராட்டுவதில் முனைந்து நிற்கிறார் என்று அறிந்த போது பெரியார் திடுக்கிட்டுப் போய் விட்டார். அவரைப் போலவே, காங்கிரசில், அதுபோது, இரவு பகல் எனப் பாராது, ஓய்வு ஒழிவு என்பது கருதாது, அலைச்சல் திரிச்சல் என்பன அறியாது, சுழலும் சூறாவளி என நாடெங்கும் சுழன்று, சுழன்று பணியாற்றி வந்த திரு வி.கலி-யாணசுந்தரனாரும் டாக்டர் வரதராஜுலு நாயுடுவும் நெஞ்சம் துணுக்குற்றனர். நாயுடு _நாயக்கர் - _ முதலியார் என்று தமிழகத்தால் செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்த இம் மூவரும் குருகுல சம்பவத்தால் பாறையில் மோதிய மரக் கலமென மனங் கலங்கிப் போயினர். காங்கிரசுக்கு வெளியே பெருத்த ஆரவாரம் புரிந்து வந்த ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புவாத நச்சுக் கருத்தினர் என்று அன்று வரை எள்ளி நகையாடி வந்த இவர்கள் உள்ளம் இச்சேதி கேட்டதும் இவர்-களையே எள்ளி நகையாடத் தொடங்-கிற்று. ஆம்! முதன் முதலாக, காங்கிரசில் பார்ப்பனர்_- பார்ப்பனரல்லாதார் என்ற வேற்றுமை வித்து ஊன்றப்பட்டது. வ.வே.சு. வின் குருகுல அமைப்பால்_ அது நடத்தப்-பட்ட முறையால்_ அதனால் எழுந்த புகைச்-சலால்_ புகைச்சல் தமிழரிடையே கிளம்பிய மனக்கொதிப்பால்!

சில நாள் பொறுத்து, டாக்டர் டி.எஸ்.எஸ். இராஜன் வீட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி கூடியபோது, முன்னர் கமிட்டியால் ஒப்புக் கொள்ளப் பட்ட தீர்மானப்படி 10,000 ரூபா நன்கொடை தர வேண்டியதில் ரூபாய் 5,000 கொடுக்கப்பட்டது. போக மிச்சப் பணம் இன்னும் தரப்படவில்லை என்று வ.வே.சு. அய்யரின் நண்பரான ஓர் ஆரியர் புகார் செய்தார். பெரியார் வெகுண்டெழுந்து, முன்வாங்கிக் கொண்ட 5,000 ரூபாயே முறை தவறுதலாகவும், தன் விருப்பத்திற்கு மாறாகவும், தனக்குத் தெரியாமலும், நேர்-மையற்ற வழியில் வாங்கப்பட்டதென்பதை எடுத்துரைத்தார்.

அய்யர் குருகுலத்தில் பிராமணர்க்கு உயர்வும் அல்லாதார்க்குத் தாழ்வும் காட்டப்-படுவதாக ஏராளமான தோழர்கள் எனக்கும் கடிதம் எழுதி உள்ளனர், ஏன் தமிழ்நாடு இதழில் வெளியிட என்று உடனே குறிப்-பிட்டார் டாக்டர் வரதராஜுலு நாயுடு. ஓமந்தூர் ரெட்டியார் எழுந்து, சாப்பாட்டில் மட்டுமல்ல, படிப்பு சொல்வதிலும் வேறுபாடு உள்ளது; பார்ப்பனருக்கு சமஸ்கிருதக் கல்வியும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்க் கல்வியும் மட்டும்தான் கற்பிக்கப்படுகின்றன என்று கூறினார். குருகுலத்தில் ஆசிரியராய் உள்ள மற்றொருவர் எழுந்து தமிழ்ப் பிள்-ளைகள் வேத சுலோகங்களைச் சொல்லக்-கூடாது என்பதாக ஒரு தடை இருப்ப-தாகவும் குறிப்பிட்டார். இவற்றை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வ.வே.சு. அய்யர் வைதிகர்கள் உள்ள இடத்தில் நான் என்ன செய்வது என்பதாக சமாதானம் சொன்னாரே தவிர இப்படியெல்லாம் இல்லை என்பதை மறுத்துரைக்கவில்லை என்பதையும், ஆச்சாரியாரும், டாக்டர் ராஜனும் இந்தப் பிரச்சினையிலும் வ.வே.சு. அய்யர் பக்கமே நிற்பதையும் கண்ட பெரியார் இனம் இனத்தோடு என்பது இதுதான் போலும் என்பதை நன்குணர்ந்து கொண்டு, திரு. வி.க., டாக்டர் நாயுடு இருவரிடமும் கலந்து பேசிக் கொண்டு, இந்த மனுநீதி குருகுலத்தை ஒழித்தே தீர்வது என்ற திட்டமான முடிவுக்கு வந்தார். திரு.வி.க. நவசக்தியிலும் டாக்டர் நாயுடு தமிழ்நாட்டிலும் குருகுலத்தைக் கண்-டித்தனர். பெரியாரும் நாயுடுவும் தமிழகத்-தைச் சுற்றிச்சுற்றி வலம் வந்து குருகுலத்-திற்கு இருந்து வந்த ஆதரவைக் குலைத்-தனர். தேசிய குரு குலத்திற்குப் பணம் தருவது தேசிய பாவம் என்று டாக்டர் நாயுடு முழங்கினார். குருகுலம் ஒழிந்தது. ஆனால் அது தமிழ் நாட்டு அரசியலில் மூட்டிவிட்ட தீ ஒழியவில்லை -வளர்ந்தது. மேலும் மேலும் வளர்ந்தது. வளர்ந்து வளர்ந்து, பெரிய பெரிய அநீதிகளையெல்லாம் சுட்டுப் பொசுக்கிற்று - பொசுக்குகிறது இன்றும்.

விவிவி

சதிச் செயல்கள் சாய்ந்தன - நீதியும் நேர்மையும் நிலைத்தது

1924 இல் திருச்சியில் கூடிய தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பெரியார், காங்கிரஸ் செயலாளராகவும் கொஞ்ச நாள் அதன் இடைக்காலத் தலை-வராகவும் இருந்து செய்து வந்த வேலை-யைப் பாராட்டி ஒரு தீர்மானம் செய்யப்-பட்டு, அந்த ஆண்டு திருவண்ணாமலையில் கூடும் மாகாண காங்கிரசுக்குத் தலை-வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத் தீர்மானம் நிறைவேறியது கண்டு மனம் குமு-றிய வ.வே.சு. அய்யர் பெரியார் மீது நம்-பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார் - அப்போதே, அதே இடத்தில்! அது கண்ட திரு.வி.க. பாழும் பார்ப்பனர் - அல்லாதார் என்ற உணர்ச்சியைத் தமிழ்நாடு காங்கிரசில் வ.வே.சு. புகுத்தி விட்டமை கண்டு வருந்து-கிறேன். எத்தனையோ ஆண்டு-களுக்குப் பிற்பாடு, இன்றுதான் ஒரு பார்ப்பனரல்-லாதார் மாகாணக் காங்கிரஸ் தலைவரானார். அவர் பண்புகளைப் பாராட்டிப் பேசிய பத்து விநாடிகளுக்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தவறு என்று இடித்துரைத்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றது. ஆனால் பிராமணர் - அல்லாதார் உணர்ச்சி வலுத்தது.

விவிவி

1925 இல் டாக்டர் வரதராஜுலு நாயுடு தமிழ் மாகாண காங்கிரஸ் தலைவர். அவர் ஒரு தமிழர் என்ற காரணத்தை உள்ளத்திற் கொண்டு அவர் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது ஆரியரால். டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், சி.ஆர். இரு-வரும் அதை ஆதரித்தனர். ஆனால் பெரியார் அவர்கள் உடனேஅதை எதிர்த்துப் பேசித் தோற்கடித்தார். பிறகு டாக்டர் நாயுடு மீது நம்பிக்கை இருப்பதாக ஒரு தீர்மானம் பெரியாரால் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களிலும் ஆரிய உறுப்-பினர்கள் அனைவரும் ஒரு பக்கமாகவும், திராவிட உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பக்கமுமாக வாக்களித்தனர்.

அதோடு வ.வே.சு. அய்யர் குருகுலத்தைக் கண்டித்தும், அங்கு காட்டப்படும் ஜாதி வேறுபாடு தொலைய வேண்டுமென்பதை வலியுறுத்தியும், தீண்டாமையோடு ஜாதிப் பாகுபாடும் தொலைய வேண்டுமென்பதை வலியுறுத்தியும் பல தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன. உடனே சி.ஆர்., டாக்டர் ராஜன், டாக்டர் சாமிநாத சாஸ்திரி, கே. சந்-தானம், என்.எஸ்.வரதாச்சாரி முதலிய பதின்மர்_- பதின்மரும் ஒரே இனத்தவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்தே ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினர்.

காங்கிரசில் நிகழ்ந்த ஆரிய - திராவிடப் போரின் மற்றுமோர் அத்தியாயம் அது.

விவிவி

இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா பனகால் அரசரால் - ஜஸ்டிஸ் அமைச்சர்_ குழு-வினால் - கொண்டு வரப்பட்டது. ஏறத்தாழ இதே காலத்தில், இதனால் மதத்திற்கு ஆபத்து! ஆண்டவனுக்கு ஆபத்து! என்று அபாயக் குரல் எழுப்பினர் ஆரியர் அனைவரும்_ காங்கிரஸ் பிராமணர் உட்பட. மசோதா ஜஸ்டிஸ் கட்சியினரால் கொண்டு வரப்படுகிறது என்றாலும் இதைக் கண்ட பெரியார், கட்சி வேற்றுமை பாராட்டாது பொதுமக்கள் நன்மைக்கான இம்மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார். டாக்டர் நாயுடுவும், திரு வி.க.வும் இதனை ஆதரித்தனர். பார்ப்பனர் அனைவரும் கட்சி வேற்றுமையின்றி மசோ-தாவை எதிர்க்கவும், அல்லாதார் அனை-வரும் அதே போல கட்சித் திரைகளைக் கிழித்துக் கொண்டு அதனை ஆதரிக்கவு-மான நிலை ஏற்பட்டது. காங்கிரசில் நிகழ்ந்த பிராமணர் -அல்லாதார் போராட்டத்தின் மற்றொரு பகுதி இது.

விவிவி

காங்கிரசில் தமிழர்களுக்கு பார்ப்பனர்கள் மீது வெகு வேகமாக வளர்ந்து வரும் அதி-ருப்தியை அடியோடு ஒழிக்க வேண்டு-மானால், அந்தந்த வகுப்புகளின் தொகைக்-கேற்ப அவரவர்கட்கு உரிமை தரப்பட-வேண்டும்_- அதாவது வகுப்பு வாரி பிரதி-நிதித்துவத்தை காங்கிரஸ் அதிகார பூர்வமாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பெரியார் இந்த நிகழ்ச்சிகளின் பின்பு வற்புறுத்தலானார்.

1925 இல் காஞ்சிபுரத்தில் தமிழ் மாகாண காங்கிரஸ் கூடிற்று. பெரியார் வகுப்பு வாரித் தீர்மானத்தை அங்கு கொண்டு வந்தார். அது பல்வேறு சூழ்ச்சிகளின் விளைவாக ஒதுக்கப்பட்டது.

உடனே பெரியார் மாநாட்டில் எழுந்து, இன்று காங்கிரஸ் என் சொல்லை ஏற்க மறுக்-கிறது. ஆனால் என்றேனும் ஒரு நாள் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவமே வகுப்புப் பூசலைத் தீர்ப்பதற்குரிய சரியான வழி என்பதை அது உணரவே போகிறது. பார்ப்பனியம் காங்கிரசிலும் வெளியிலும் விளைவித்து வரும் கொடுமைகளை நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்குவதே இனி என் வேலை என்று சூளுரைத்து விட்டு வெளியேறினார்.

உண்மை உலவுகிறது - 22 ஆண்டுகளுக்குப் பின்

அவர் 1925 இல் உரைத்த அந்த நாளும் வந்தது - 1947 நவம்பர் 20 இல்,

இடையே உள்ள காலப் பள்ளம் 22 ஆண்டு-கள்! ஆம், 22 ஆண்டுகள் தேவைப்-பட்டது உண்மை உலவுவதற்கு!

20.11.1927 இல் வெளியான சென்னை காங்கிரஸ் அரசியலார் அறிக்கை இது:

இதுவரையில் உள்ள வகுப்பு விகிதாசர உத்தரவுப் படி காலியாகிற ஒவ்வொரு 12 ஸ்தானங்களுக்கும் பிராமணல்லாதார் 5, பிரா-மணர் 2, முகமதியர் 2, ஆங்கிலோ இந்-தியர், கிறித்துவர் 2, அரிஜன் 1 என்ற முறை-யில் வழங்கப்படும்.

ஹரிஜனங்களுக்குப் போதுமான படியும், பிராமணல்லாதாரில் பிற்போக்கானவர்க்கும், பதவிகள் கிடைப்பதில்லை என்பதனால் சர்க்கார் இந்த வகுப்புவாரி உத்தரவைப் பின்-கண்டவாறு மாற்றுகிறது. இனி காலியாகிற ஒவ்வொரு 14 ஸ்தானங்களுக்கும் கீழ்க்கண்ட முறைப்படி ஆளெடுக்கப்படும்.

1. பிராமணரல்லாதார்

2. ஹரிஜன்

3. பிற்போக்கு பிராமணரல்லாதார்

4. பிராமணரல்லாதார்

5. பிராமணர்

6. பிராமணரல்லாதார்

7. முசல்மான்

8. பிராமணரல்லாதார்

9. ஆங்கிலோ இந்தியர், கிறிஸ்தவர்

10. பிராமணரல்லாதார்

11. ஹரிஜன்

12. பிராமணரல்லாதார்

13. பிராமணர்

14. பிற்போக்கு பிராமணரல்லாதார்

புதிய உத்தரவு மத்திய சர்க்காரின் விகி-தாசார ஏற்பாட்டுக்கும், ஜனத் தொகைக்கும் ஏற்றதாகப் பொதுவாக இருக்கிறதென்று தெரிவிக்கப்படுகிறது. விவிவி

காங்கிரஸ் சர்க்கார் பழைய விகி-தா-சாரத்தை மாற்றி புதிய விகிதாசாரத் திட்-டத்தை அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறது. அதாவது பழைய விகிதாசாரம் தவறு என்று எண்ணிற்றே தவிர, காங்கிரஸ் சர்க்கார், விகிதாச்சாரப்படி பதவிகளை வழங்கும் முறையே தவறு என்று எண்ணவில்லை. வழங்கும் அளவு தவறு என்றதே தவிர வழங்கும் முறை தவறு என்று கூறவில்லை. ஆகவே, வழங்கும் முறையை -வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்பவே பதவிகளை வழங்கவேண்டுமென்ற திட்டத்தை - வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ற தத்துவத்தை அது ஒப்புக்கொண்டது என்று பொருள்.

காங்கிரஸ் சர்க்கார் இன்று அந்தந்த வகுப்-புகளுக்குத் தந்துள்ள உரிமைகளின் அளவு சரியா? சரியில்லை என்றே நாம் கருது-கிறோம். ஆனால் அது வேறு பிரச்சினை.

அந்தந்த வகுப்புகளின் எண்ணிக்கைக்-கேற்ப உத்தியோகங்களின் எண்ணிக்கை வகுக்கப்பட்டு இருக்கிறதா? இல்லை. பார்ப்-பனர்கட்கு உரியதைவிட அய்ந்து மடங்கு அதிகமாகவும், திராவிடர் ஆதிதிராவிடர் முசு-லிம்-கள் ஆகியோருக்கு உரியதிலும் பார்க்க மிகக் குறைவாகவும் விகிதாசாரம் உள்-ளது. ஆனால் அதுவும் வேறு பிரச்-சினை. ஆனால், காங்கிரஸ் சர்க்கார் வகுப்-புகளின் எண்ணிக்கைக்கேற்பவே பதவி-களை வழங்கவேண்டும் என்ற தத்துவத்தை 1925 இல் பெரியார், காங்கிரசை ஒப்புக்-கொள்ளுமாறு வலியுறுத்திய, ஆனால், காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுத்த தத்-துவத்தை - இன்று 1947 இல் மனமுவந்து ஒப்புக்-கொள்வது கண்டு நாம் மிக மகிழ்கிறோம்.

பெரியார் 1925 இல், 1947 அய்க் கண்-டார். காங்கிரஸ் சர்க்கார் 1947 இல் 1925 அய்க் காண்கிறது. ஆனால் இன்-றேனும் காண்கிறதே அதுவரை மகிழ்ச்சி நமக்கு.

சென்னை சர்க்கார் அறிக்கையில் இங்கே மட்டுமல்ல, மத்திய சர்க்காரிலும் இது போன்ற விகிதாசார ஏற்பாடு இருக்கிறது என்கிற அந்தப் பகுதி உண்மையிலேயே அனைவரும் கவனித்தற்குரியது. சின்னத் தலைகள் (கல்கியின் பாஷை!) மட்டுமல்ல, பெரிய தலைகளும்கூட வகுப்புவாரி ஏற்பாட்டினையே ஒப்புகின்றன என்பது நம் கவனத்திற்குரியதுதானே!

பெரியார், 1925 இல் சொன்னதை இன்று சாதித்து விட்டார். வகுப்பு வாரித் திட்டம் ஒன்று தவிர வகுப்புச் சிக்கல் தீர மருந்-தில்லை என்பதை, காங்கிரஸ் நடை முறை-யிலேயே ஏற்கும் அந்த நாளைக் கண்டு-விட்டார். பார்ப்பனியம் அழியும் நாளையே இன்னும் அவர் காணவில்லை. அதையும் காண்பார் விரைவில் என்பதில் ஏது அய்யம்?

காஞ்சி மாநாட்டிலிருந்து வெளியேறிய விநாடி முதல் இன்று வரை அந்த மாவீரர் பார்ப்பனியத்தின் கொடுமைகளை மக்களுக்கு விளக்கியே வந்திருக்கிறார். ஆரியத்தின் ஆணவத்தை - வர்ணாசிரம ஏற்பாட்டின் அநீதியை தமிழ் வீரர் கூட்டம் நன்குணர்ந்த வீறுகொண்டெழுந்து வீரப் போர் தொடுக்கச் செய்துவிட்டார். பார்ப்-பனியம் என்னும் மாறு பெயர் கொண்ட பழமையை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எத்தனையோ ஆயிரமாயிரம் இளங்காளைகளின் உள்ளத்தில் தூவி விட்டார். பெரியதோர் பட்டாளத்தை - அறி-வும் திறமும் சிந்தனை-யும் படைத்த தமிழர் சேனையை உருவாக்கி விட்டார். வாழ்க வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்கவே! என்னும் பண் பாடச் செய்து-விட்டார். சிறுத்தையின் குகை-யில் சிறுநரி-களின் வாசமா என்னும் கேள்வி எங்கணும் எழச் செய்து விட்டார். புதிய தமிழகம் இனி உருவாகவேண்டும் - அது ஒன்றுதான் பாக்கி - அதற்கான பாதை வகுக்-கும் பணியைச் செம்மையுறச் செய்து முடித்துவிட்டார். புதிய தமிழகம் உருவாக வேண்டுமானால் பழைய பார்ப்பனியம் அழிய வேண்டும். அது கல்லறை புகும் நாள் என்று வரும்? ஆம், புரட்சித் தமிழகம் பூக்கும் அந்த நாள் என்று வரும்?

போர்வாள், 6.12.1947

ராஜபக்சேவும், ஏழுமலையானும்


திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினரு-டனும், ரதகஜ துரக பதாதிகளுடனும் (80 பேர்கள் கொண்ட குழு) திருப்பதி வந்து வெங்கடாசல-பதியைத் தரிசித்தனர் என்ற செய்தி ஏடுகளில் தடபுடலாக வெளிவந்தது.


இவர்களின் வருகையால் பக்தர்கள் பல மணிநேரம் காத்துக் கிடக்க நேர்ந்தது என்ற தகவலும் கசிந்துள்ளது.கோயில் மரியாதைப்படி அதிபரின் குடும்பத்-திற்கு முகத்பார தரிசனம் செய்ய அனுமதிக்-கப்-பட்டதாம்.
அதிபருக்காக ஆகமங்களுக்கு விரோதமாக விஷயங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது.

கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி என்பது வேறு இடத்தில் கேட்கப்-பட்ட பாடல்.கையில் காசில்லை என்றால் கடவுளிடத்திலும் வேலை நடக்காது என்பது நடைமுறையாகும்.ராஜபக்சே ஒன்றும் இந்து மதக்காரர் அல்லர். பவுத்த மதத்தைச் சார்ந்தவர். இன்னொரு மதக்-காரரை எப்படி இந்து மதக் கோயிலில் நுழைய விடலாம் என்ற கேள்வி எழும். பவுத்தமும், இந்து மதத்தில் ஒரு பிரிவு என்று வளைத்துப் பேசியதன் அடிப்படையில் இது நடந்திருக்கிறது என்று இந்து வகையறாக்கள் சமாதானம் கூறக்கூடும்.

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், பவுத்தர்கள் தங்களை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. ஒருமுறை அத்வானி அவ்வாறு சொல்லிவிட்டு நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.அகிம்சையை வலியுறுத்திய புத்தர் நெறியை மதமாக்கி, தமிழர்களின் ரத்தத்தை புத்தர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் அளவுக்கு ஒரு கேடு-கெட்ட நிலை சிங்கள நாட்டில் நடை-பெற்றதை யாரும் மறந்திருக்க முடியாது.

நெறி மதமானால், அது வெறியாகிவிடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். ஹிந்து மதத்தின் வருணக் கோட்பாடுகளையும், சடங்-காச்-சாரங்களையும் தலைகீழாகப் புரட்டியடிக்கத்-தான் கவுதம புத்தர் புதிய நெறிமுறைகளைக் கொடுத்தார்.மகாவிஷ்ணுவுக்கு உள்ள பல பெயர்களில் வெங்கடேசனும் ஒன்று. அந்த மகாவிஷ்ணு அவதாரம் எடுத்துதான் கொலைகள் பலவற்றை நிகழ்த்தியிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

அப்படிப் பார்க்கப் போனால் பவுத்த நெறிக்கு எதிர்மாறான தத்துவத்தைக் கொண்டதுதான் திருப்பதி ஏழுமலையான் கோயில். புத்தரை ஆயுதந்-தூக்கியாக மாற்றி அமைத்துக்கொண்ட சிங்கள இனத்தின் அதிபர் அந்தக் கண்-ணோட்டத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க வந்தால் வியப்பில்லை.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துச் சென்றுவிட்ட பிறகுதான், இலங்கையில் விடு-தலைப்புலிகளை தம்மால் ஒழித்துக்கட்ட முடிந்ததாக ராஜபக்சே கூறியிருக்கிறார்.அப்படியென்றால், ஏழுமலையானைப் பகுத்-தறிவுக் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்க-வேண்டும் என்பது ஒன்று; மனிதாபிமானக் கண்-ணோட்டத்தில் எப்படிக் காணவேண்டும் என்பது இன்னொன்று; தமிழர்கள் நோக்கில் எப்படிக் கணிக்கவேண்டும் என்ற மூன்றாம் நிலை.பொதுவான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக இருந்தாலும் மக்களைக் கொன்று குவித்திட கடவுள் பக்தி பயன்பட்டு இருக்கிறது. கருணை-யானவன் கடவுள் என்னும் பிரச்சாரம் எவ்வளவு மோசடியானது என்ற முடிவுக்காவது குறைந்த-பட்சம் வரவேண்டாமா? என்பதுதான் நமது கேள்வி.

இதில் இன்னொரு சூட்சமும் குடிகொண்டி-ருக்கிறது. தாம் செய்த மனிதப் படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) கடவுள் பக்தி என்னும் மூடு திரைமூலம் மறைக்கும் ஒரு தந்திரமும் இதில் மறைந்திருப்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.இலங்கையில் நடைபெறும் கலவரங்களுக்கான பரிகாரம் ஒன்றை ஆன்மிகவாதிகள் கூறினார்கள். சிறீரங்கத்தில் உள்ள ரெங்கநாதன் கோயில் கோபுரம் வாஸ்து முறையில் சரியானபடி அமையவில்லை.

அதைச் சரி செய்ய கொழும்பில் ஒரு அரங்கநாதன் கோயிலைக் கட்டவேண்டும் என்று சொன்னார்களே நினைவிருக்கிறதா?எந்தப் பிரச்சினையானாலும் அதனை பார்ப்பனியத்தின் இலாபமாக _ சுரண்டலாக மாற்றும் ஒரு சூழ்ச்சி _ அடங்கியிருப்பதை ஆறாவது அறிவைக் கொண்டு சிந்திப்பார்களாக!

விடுதலை 03-11-09

Monday, November 02, 2009

மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள்

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகி விட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், ‘அண்ணன் மிக பத்திரமாக இருக்கார்.

அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரை விலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!’ என உறுதியாகச் சொல்கிறார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருபதாயிரத்துக்கும் மேற் பட்ட அப்பாவி மக்கள் பிரபாகரனின் சம காலத் தளபதிகள் என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்பு களையும், ஈழத்தின் கடைசி நிமிடங் களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள். அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!முப்பது வருடப் போராட்ட காலத் தில் அடுத்து என்ன நடக்கும்? என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர்.




கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசி வரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோ சித்த தலைவர், ”நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம்.

அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!” என்று சொல்லி இருக்கிறார். அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சி குடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக் கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார். கடைசி வரை களத்தில் நின்ற கரிகாலன்! மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர்.

இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப் போனார்கள். ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வ பத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளி யேறினார்.

களத்தில் சார்லஸ் !தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளி வாய்க்காலில் தங்கவைத்திருந்தார். முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசி நேர நெருக்கடிகள் மிகுதியானபோது புலித் தளபதிகள் மக்களிடம், ”நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய் விடுங்கள். ரசாயன குண்டுகளை வீசி மொத்தமாக அழிக்கப் போகிறார்கள்!”’என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ”மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் இராணுவக் கட்டுப் பாட்டுக்குப் போகமாட்டோம்” என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற் புறுத்தியிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்து போனார்கள். கடைசி நாளில்: அடுத்தபடியாக மக்கள் மீது இராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!’- என்று நிறுத்தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை.

அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன். அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராச பக்சேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ”ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் இராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்”’என்று ராசபக்சே சொல்லி இருக்கிறார். தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்அவர்களும் ராசபக்சேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத் தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள். ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த இராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ர வதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத்தகவலையும் பெற முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற இராணுவத்தினர், காயம் பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக் கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை. அந்த உடல்: ஈழத்தையே முழுவதுமாக அழித்த இராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது. அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது இராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப் பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல இராணுவம் காட்டுகிறது. மாவீரர் தினத்தில் வருவார் !!!இராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27ஆம் தேதி – வீரவணக்க’தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலை வருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்! – என்கிறார்கள் உறுதி குறையாமல்.

நன்றி:தென்செய்தி

பாதுகைப் பூஜை


ஸ்ரீ குரு பாதுகை களை பூஜித்தால் அனைத்து கஷ்டங்களும் விலகும். சகல கார்யங்களும் கைகூடும். எல்லா ஐஸ்வர் யங்களும் வந்து சேரும். அஞ்ஞானம் விலகி ஞானம் உண்டாகும் குரு பாதுகா பஞ்சகத்தில் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரர் இப்படி தெரிவிக்கிறார்.



ஸ்ரீ ஜகத்குருவின் பாது கைக்கு பூஜை செய்தால் சகல மேன்மையையும் அடையலாம். இந்த அரிய வாய்ப்பு உங்கள் வீட்டி லேயே கிடைக்க உள்ளது. ஸ்ரீஜகத்குரு பாகைகள் புதுவை ரங்கப்பிள்ளை வீதி ஸ்ரீமடம் இடத்தில் உள்ளது.

இந்துக்கள் அனை வரும் ஜாதி வேறுபா டின்றி குடும்பத்துடன் சங்கல்பம் செய்துகொண்டு எளிய கட்டணத்தில் பூஜையில் பங்கேற்கலாம். நாடெங் கிலும் மக்கள் வழங்கும் இக்கட்டணத்துகையில் 100 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீமஹாஸ்வாமிக்கு தங்கத்தேர் செய்யப்படு கிறது._ இவ்வாறு ஒரு விளம்பரம் ஏடுகளில் வெளிவந்துள்ளது.

பக்திக்கு எந்தவித சேதாரமும் வந்துவிடக்-கூடாது என்பதிலேயே பார்ப்பனர்கள் எப்பொ-ழுதும் குறியாகவே இருப்-பார்கள்.

அதற்காக ஒன்று போனால் இன்னொன்-றைத் தயாராகவே வைத்தி-ருப்பார்கள்.பாதுகை என்றால் ஏதோ பெரிய சமாச்சாரம் என்று கருதிவிடக்கூடாது. செருப்பு என்று அதற்குப் பொருள்.

இப்பொழுது புரிந்தி-ருக்கவேண்டுமே! சங்க-ராச்-சாரியாரின் செருப்பைப் பூஜிக்கத்தான் அழைப்புக் கொடுத்திருக்கிறார்கள் _ இதனை விளம்பரமாகவும் தந்துள்ளார்கள்.

மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலந்து குடித்-தால் (பஞ்சகவ்யம்) புண்-ணியம் என்கிறார்கள். பக்-தர்களும் அதற்காகத் தட்-சணை கொடுத்தும் குடிக்-கிறார்கள்.

இப்பொழுது என்னடா என்றால், சங்கராச்சாரி-யாரின் கால் செருப்பைப் பூஜிக்கவேண்டும் என்கி-றார்கள்.



காற்செருப்பைப்
பிறனொருவன்
கழிவிடத்தில்
தள்ளிடினும்
பொறாத உள்ளம்

என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.

இதற்குப் பெயர்தான் சுயமரியாதை என்பது.இந்தச் சுயமரியா-தையை அவமரியாதை செய்வதுதான் அவாளின் நோக்கம்.யார் இந்த சங்கராச்சாரி-யார்? தீண்டாமை க்ஷேமக-ர-மானது என்று சொன்ன-வர்,

இதற்காகப் பிணையில் வெளியில் வர முடியாத குற்றத்தின்கீழ் அவரை உள்ளே தள்ளியிருக்க-வேண்டாமா?

பக்தியென்றால் சுயமரி-யா-தைக்கு இழப்பு என்று இன்னும் புரியவில்லையா?

இவரது செருப்பைத் தொழ, பூஜை செய்ய அழைப்பாம்!

அவர்களைச் சொல்-லிக் குற்றமென்ன? இதற்-கும் தயாராக உள்ள சூத்-திரர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

Sunday, November 01, 2009

தமிழர் நிலை மாறவேண்டும்


தமிழர்களான கவிஞர்கள், கட்டுரையாளர்கள், அறிவுப் பிரச்சாரம் செய்பவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிப்புத் துறையில் உள்ளவர்கள், முதலில் யாவரும் தங்கள் கலைகளை மக்களுக்குப் பயன்படும் வகையில் அவற்றைக் கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள் புரட்சிகரமான மாறுதலடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

தமிழர்களைக் கைதூக்கிவிட எந்தக் கலையும் எந்தக் கவிஞரும் இல்லை. உள்ளவர்கள்-எல்லோ-ரும் பத்தாம் பசலிக்காரர்கள் என்ற சொல்லும்படி, பழைமையைக் கண்டே தங்கள் கலைகளைப் பயன் படுத்துகிறார்கள்.

தமிழர்களைத் தாழ்த்தியதும் தலை தூக்க வொட்டாமல் அழுத்தியதும் தமிழறிஞர், கலைஞர், கவிஞர், புலவர் முதலியவர்கள் கையாண்ட சமய இலக்கியமும் முன்னோர்களைப் பின்பற்றி வந்த நடப்புகளும், தமிழர்களைக் குலைத்து உருவாக்கிய அரசியலுந்தான்.

தமிழன் வளர்ச்சிக்கு, அறிவிற்கு, கலைகளுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்கு - பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர, ஒரு தமிழன் காட்டிய வழி என்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நமது கலைஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், அரசியல்-வாதிகள் பார்ப்பானைக் குறை மட்டும் சொல்லிக் கொண்டு, அவன் கலாச்சாரத்தில் மூழ்கி, அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கிறவர்-களாகத்தான் இருந்து வந்தார்கள்; வருகிறார்கள் என்பதல்லாமல் தமிழர் நலனுக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீக்கத்திற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலை-யாவது நீட்ட முடிகிறதா?

எல்லாத் தமிழ் உணர்ச்சியாளரும், எப்படிப் பட்ட பார்ப்பன வெறுப்பாளரும் சுயநலத்திற்கு வேண்டு-மான அளவுதான் வெறுப்பைக் காட்டிக் கொள்-கிறார்களே தவிர, தமிழ் நலத்திற்கு, தமிழர் சமுதாய நலத்திற்கு என்பதாகக்காட்டிக் கொண்டவர்கள் தமிழர்களில் மிகமிக அரிதாகவே இருந்து வருகிறார்கள்.

தமிழ்ப் பெரியோர்கள், கல்வியாளர்கள், மேதாவி-கள், பெரும் பதவியாளர்கள் யாவரும் தமிழர்களின் கேட்டிற்கும், இழிவிற்குமே பார்ப்பனர்களால் கற்பனை செய்து உண்டாக்கப் பட்ட கதைகள், காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவைகளில் புகுத்தப்பட்ட கடவுள்கள் - கந்தன், சிவன், விஷ்ணு, கணபதி, இராமன், கிருஷ்ணன் முதலியவற்றைக் கும்பிடு-கிறவர்களாகவும் இவர்களது பெண்டு பிள்ளைகளையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் இருக்-கிறார்களே தவிர - அறிவைப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ, இன நலத்தைப் பற்றியோ சிந்தித்தவர்கள் என்று சொல்லி ஒருவரையும் குறிப்-பிடமுடியவில்லையே!

எந்தப் பெரிய மனிதன் - அறிஞர், கவிஞர், வித்துவான், மேதாவி என்பவர் யாரானாலும் - அவர், திவசம், திதி முதலிய பார்ப்பனக் காரியங்களைச் செய்-ப-வரும்; இவை சம்பந்தமான நெற்றியில் சாம்பல், செம்மண், சுண்ணாம்பு, பூச்சுப்பட்டை அடித்துக் கொள்பவர்களும்தான் இருக்கிறார்களே ஒழிய, இவை எதற்கு, இவற்றால் பலன் என்ன என்று சிந்தித்தவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒருவரையும் காண முடியவில்லையே!

இன்னும் தமிழன் சூத்திரனாக இருக்கிறான் என்றால் - இருந்து கொண்டு திவசம், திதி செய்து கொண்டு, சாம்பல் மண்ணைநெற்றியில் அடித்துக் கொண்டு கோவில் குளங்களுக்குப் போய்க் கொண்-டி-ருக்கிறான் என்றால் - தமிழன் எந்த வகையில் முன்-னேறத்-தக்கவன் என்பது புரியவில்லை. பார்ப்பானைக் கூப்பிட்டுத் திதி கொடுக்கிற தமிழன், எப்படித் தன்னைச் சூத்திரன் அல்லன் என்று சொல்லிக் கொள்ள முடியும்?

இன்னும் தமிழனுக்கு மானம், வெட்கம், பகுத்தறிவு வரவில்லையென்றால் மற்ற எந்த நூற்றாண்டில் வரமுடியும்? சமுதாயப் புரட்சிக்கு உண்மையாகவே இந்தச் சமயம் மிகவும் பொருத்தமான காலம் என்பது எனது கருத்து.

இன்று நமக்குப் பெரும் சனியாக அய்க்கோர்ட் ஒன்று இருக்கிறது. மற்ற ஸ்தாபனங்களும் பெரிதும் நமக்கு அனுகூலமாக இருக்கிறதென்றே சொல்லலாம். எனவே தமிழனுக்குப் புத்தி, மானம் இருக்க வேண்டும்; இருந்தால்தான் எளிதில் மாற்றம் உண்டாக்கிக் கொள்ள முடியும்.

கல்வி இலாகாவில் பகுத்தறிவு புத்தகங்களையும், பகுத்தறிவு ஆசிரியர்களையும் நல்ல வண்ணமாக ஆக்க வேண்டும்.

உத்தியோக இலாகாவில் பெரிதும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைப் புகுத்த வேண்டும், மேன்மேலும் கிராமக் கணக்கு, மணியம் பதவிகளை தாழ்த்தப்-பட்டவர்கள் அதிகமாகப் பார்க்க வேண்டும்.

மற்றும் நிருவாகத் துறையில் அய்.ஏ.எஸ். ஒழித்துக் கட்டியாகவேண்டும். வெள்ளையன், தன் ஜாதியாரிடமே நீதித்துறை, நிருவாகத் துறை இருக்க வேண்டுமென்று செய்த சூழ்ச்சியேயாகும். ஆகவே இவை தமிழர்களைத் தலையெடுக்கவொட்டாமல் செய்து வரும் காரியங்களுக்காக இருந்து வருகின்றன.

இந்தக் காரியங்களை இன்றைய ஆட்சி செய்து விடுமானால், இந்த ஆட்சியை எவரும் அசைக்க முடியாது என்பதோடு, தமிழர் நிலை நல்ல அளவுக்கு முன்னேற்றமடையக் கூடும் என்பதுதான் எனது கருத்து.

தந்தை பெரியார்



(விடுதலை: தலையங்கம்: 7.10.1972)

Saturday, October 31, 2009

பூணூல்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சங்கர நாராயணப் பெருமாளுக்கு ஜெயேந்திரர் 3 அடி நீளமுள்ள 288 கிராம் எடையில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப் பூணூல் அணிவித்தாராம்.

இது இப்பொழுது மட்-டுமல்ல, திருப்பதி ஏழு-மலை-யானுக்கே 3 கிலோ தங்-கத்தில் பூணூல் அணி-வித்தார் (5.4.2002).

கடவுளுக்கே பூணூலா? ஆச்சரியமாக இருக்கிறதா!

இதன் பொருள் என்ன? பக்தியுள்ளவர்கள் கூட கொஞ்சம் புத்தியைச் செலுத்தினால் மிகமிக எளி-தில் புரிந்துகொள்ளலாம்.

கடவுளும், பார்ப்பனர்-களும் ஒரே ஜாதி; இன்-னும் சொல்லப்போனால், கடவுளுக்கும்மேலே பிராமணர்கள் என்பது-தான் அவர்களின் நினைப்-பும், ஏற்பாடுகளும் ஆகும்.

தமிழ்நாடு பார்ப்பனர்-கள் சங்கம் வெளியிட்ட அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்னும் நூலினை வெளியிட்ட ஜெயேந்திர சரஸ்வதி கடவுளுக்கும்மேலே பிரா-மணர்கள் என்று சொன்-னதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை புரியும்.

இவர் மட்டுமல்ல, அவர்களின் வேதங்களும் அதனைத்தான் குறிப்பிடு-கின்றன.

தேவாதீனம் ஜெகத்-சர்வம்

மந்த்ரா தீனம் ததேவதா

தன் மந்த்ரம் பிரம்மாதீனம்

பிராமண மம தேவதா

(ரிக், 62 ஆவது பிரிவு 10 ஆம் சுலோகம்)

இதன் பொருள்:

உலகம் தேவர்-களுக்-குக் கட்டுப்பட்டது; தேவர்-கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்-திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்-களே நமக்குக் கடவுள் ஆவர்.

இந்து மதத்தைப் பொருத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே பார்ப்-பனர்களை முதன்மைப்-படுத்துவதேயாகும்.

பூணூல் அணிவது அவர்கள் இரு பிறவியா-ளர்கள் என்பதற்கு அடை-யாளம். பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று பறைசாற்றுவதாகும்.

சூத்திரர்கள் பூணூல் அணிவது மனுதர்மப்படி தடை செய்யப்பட்ட ஒன்-றாகும்.

சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை _ பூணூல் முதலியதைத் தரித்தால், அரசன் சூத்திரனின் அங்-கங்களை வெட்டவேண்-டும் (மனுதர்மம் அத்தி-யாயம் 9; சுலோகம் 224).

கடவுளுக்கும் பூணூல் போடுவதன் தாத்பர்யம் இப்பொழுது விளங்-குகிறதா?

- மயிலாடன்

விடுதலை 30.10.2009

பிரதோஷம்

பிரதோஷம் பிர-தோஷம் என்று ஆன்-மிகத்-தில் சொல்கிறார்களே, அது எத்தனைப் பக்தர்-களுக்குத் தெரியும்?

தேவர்களும், அசுரர்-களும் பாற்கடலைக் கடைந்-தார்களாம். (பால் கடல் எங்கிருக்கிறது புவி-யியல் படித்த மேதாவி-கள் கொஞ்சம் சொல்லக்-கூடாதா?).

பாற்கடலை எதைக் கொண்டு கடைந்தார்-களாம். மந்தாரமலையைக் கொண்டாம். அதற்குப் பயன்படுத்திய கயிறு வாசுகி என்னும் பாம்பாம்.

சிவபெருமான் அனு-மதி பெறாமல் கடைந்த-தால் பாம்பு விஷம் கக்கிற்றாம். முப்பத்து முக்கோடி தேவர்களும், விஷ்ணு, பிரம்மா உள்பட அனைவரும் சிவனை சரண் அடைந்தார்களாம். நந்தி பகவானை அழைத்து அந்த நஞ்சைக் கொண்டு வருமாறு சிவன் கட்டளை-யிட்டானாம்.

கொண்டு வரப்பட்ட அந்த நஞ்சை சிவன் லபக்கென்று விழுங்கினா-னாம். பார்வதி தேவியா-கிய சிவனின் பாரியாள், விஷம் கீழே இறங்காமல் இருக்க தொண்டையை லபக்கென்று பிடித்தா-ளாம். விஷம் இறங்கிய-தால் சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றா-னாம்.

விஷம் அருந்திய சிவன் மூர்ச்சையானா-னாம். (சிவன் சக்தி இவ்-வளவுதானா?) அப்-பொழுது நந்தீஸ்வரன் (காளை) சிவனைத் தொழுது மூர்ச்சை தெளிய வைத்தானாம்.

சிவன் விழித்த இந்தக் காலம்தான் பிரதோஷ காலமாம். அமாவாசை மற்-றும் பவுர்ணமிக்குப் பிறகு வரும் 13 ஆம் நாள்தான் பிரதோஷமாம். மாலை 4.30 மணிமுதல் 7.30 மணி-வரை உள்ள அந்த நேரத்-தில் சிவனைத் தொழு-தால் கடன், வறுமை, துர்-மரணம், செய்த பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடு-மாம். சிவனுக்கு உதவி புரிந்த நந்திக்கும் அபி-ஷே-கம் செய்யவேண்டுமாம்.

இந்த விரதத்தை சித்-திரை, வைகாசி, அய்ப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்-களில் சனிக்கிழமையன்று பிரதோஷ வேளையில் ஆரம்பிப்பது மிகச் சிறப்பாம்.

சிவதரிசனம் செய்த பிறகு உணவு உண்ண-வேண்டும். தொடர்ந்து 12 ஆண்டுகள் (300 தடவை) இந்தப் பூஜை செய்தால், ராஜாங்க சிம்மாசனப் பதவி கிடைக்குமாம். (அமைச்சர்கள் ஆக விரும்புபவர்கள் கவனிக்க).

இந்தக் கதை கடுகத்-தனை அளவாவது அறி-வுக்குப் பொருந்துகிறதா? சிவன் அனுமதி பெறாத-தால்தான் நஞ்சு வந்தது என்பதை, விஷ்ணு உள்-ளிட்டோர் சிவனை வேண்-டிக்கொண்டனர் என்-பதையும் வைஷ்ண-வர்கள் ஏற்றுக்கொள்-வார்களா?

எந்தப் பாவமும் நீங்-குமாம். தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு சிவன் மோட்சம் கொடுத்-தானாம். (திருவிளை-யா-டல் புராணம் _ மாபாதகம் தீர்த்த படலம்).

இந்தக் கேடுகெட்ட அருவருப்பான பக்தித் துர்நாற்றத்தை என்னென்று தான் சொல்லுவதோ! திரு-நீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சொல்லுவோரை லாடம் கட்டி அடிக்க-வேண்-டாமா? சிந்திப்பீர்

விடுதலை 31-10-2009

Thursday, October 29, 2009

மதம் பிடித்தது யாருக்கு? யானைக்கா? மனிதனுக்கா?


அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில், கவிஞர் கண்ணதாசன் எழுதினார்: அதற்குரிய மறுப்பினை பகுத்தறிவாளர் மஞ்சை வசந்தன் (எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்) அர்த்தமற்ற இந்துமதம் எழுதினார். பல பதிப்புகள் வெளிவந்து உலகம் முழுவதும் இதுவும் சென்றடைந்துள்ளது!

இந்து மதம் அர்த்தமுள்ளதா? அனர்த்தம் உள்ளதா? என்று பக்தகோடிகள் கேள்வி கேட்கும் அளவுக்கு பக்த கேடிகளைப் போன்று, வடகலைப் பார்ப்பனர், தென்கலைப் பார்ப்பனர் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலில் நடந்துகொண்டவிதம், மந்திரங்களை உச்சரிப்பதைவிட ஆபாசமான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு அடிதடியில் இறங்கியுள்ள செய்தி, பார்ப்பன ஏடான ஜூனியர் விகடனே 1.11.2009 அன்று தேதியிட்டு நேற்று (28.10.2009 அன்று) வெளிவந்த இதழிலேயே கட்டுரை வடிவில் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. (அதை அப்படியே எட்டாம் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்).

இந்த காஞ்சி வரதராஜபெருமாள் சன்னதியில்தான், சங்கராச்சாரிகளை முதல், இரண்டாவது குற்றவாளிகளாகக் கொண்டு நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்குக்குரிய கொலை சில ஆண்டுகளுக்குமுன் நடந்தது!

வரதராஜப்பெருமாள் அப்படியே ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்; தனது கோயில் நிருவாகி இப்படி அநியாயமாகக் கொல்லப்படுவதற்காக ஒரு சிறு அனுதாபத்தைக்கூட தெரிவிக்காதது மட்டுமல்ல; ஒவ்வொரு சாட்சியாகக் கலைக்கும் பகவத் காரியங்கள் நடைபெறுகின்றன.

பல சாட்சிகள் தலைகீழ் அந்தர்பல்டி அடிக்கிறார்கள்; ஆனால் அந்த வரதராஜப் பெருமாளோ அன்று எப்படி குத்துக்கல்லாய் கிடந்து வேடிக்கை பார்த்தாரோ, அதேபோல இன்றும் உள்ளார்!

இப்போது அதே கோயிலில் அடிதடி ஆபாச வார்த்தைகள் பரிமாற்றம்; ரத்தக் காயங்கள். பகவான் வரதராஜனோ சிவனேன்னு வேடிக்கை பார்த்துண்டிருக்கான்.

பிரச்சினை என்ன சாதாரணமா? அற்ப தேசியப் பிரச்சினையா அல்லது சர்வதேசப் பிரச்சினையா? மிகப்பெரிய தீர்வு காண முடியாத பிரச்சினை அல்லவோ!

அங்குள்ள கடவுள்களுக்கு யார் மரியாதை செய்வது என்பதில் போட்டி! பகவான்கள் மரியாதை இழந்து பரிதாபமான நிலையில் இருப்பதால் ஜூ.விகடனுக்கு எஸ்.ஓ.எஸ். (S.O.S) கொடுத்துள்ளார்கள் போலும்!

நம்மாழ்வார் சந்நிதி அர்ச்சகர் எப்படி ஆரத்தி காட்டலாம், என்று வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரச்சினை கிளப்பி, பகவான்களுக்குப் பாடம் கற்பித்துவிட்டார்கள் _ அதோடு மட்டுமா? தென்கலைப் பிரிவினர் நையப் புடைத்துவிட்டார்களாம்!

அதென்னய்யா வடகலைப் பிரிவு, தென்கலைப் பிரிவு என்று புதிதாக, அர்த்தமுள்ள ஹிந்துமதம்பற்றி அறியாதார் கேட்கக்கூடும்!

பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில் இந்த வழக்கை பல ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்தது (நம் ஊரில் உச்சநீதிமன்றங்கள் வருவதற்குமுன் கடைசி அப்பீல் செய்யும் பெரிய கோர்ட் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்தான்).

எல்லோரும் வெள்ளைக்கார நீதிபதிகள்தான் அங்கு. அவாளுக்கு வடகலை, தென்கலை சண்டை என்னவென்று விளங்காததால், அவாள் கேட்டள்,“What is Vadkalai and Thenkalai” தென்கலை என்றால் என்னவென்று.

உடனே அவாளுக்கு எளிதில் புரிய வைக்க,“These two partites fight for our English Alphapet) Y and U” (அதாவது பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம்) சண்டை என்றவுடன், வெள்ளைக்கார நீதிபதிகள் கேட்டு சிரி சிரியென்று சிரித்துவிட்டு, அந்தக் கோயில் யானையின் நெற்றியில் எந்த நாமம் _ வடகலையா, தென்கலையா போடுவது என்பதற்குத்தானே அப்பீல் வழக்கு. அதுவும் நீச்ச பாஷை பேசும் மிலேச்ச ஜட்ஜ்கள்முன்!

யானையின் கருத்தை இதில் கேட்க முடியாதே! அதனால் ஆறு மாதம் வடகலை என்று போடுங்கள்; மற்றொரு ஆறு மாதம் தென்கலை என்று போடுங்கள் என்று விசித்திரத் தீர்ப்பு வழங்கினார்கள்.

நம் நாட்டின் கோர்ட்டுகளைத் தாண்டி வழக்கு பிரிட்டிஷ் பிரிவி கவுன்சிலுக்குச் சென்றபோதிலும், முடிந்தபாடில்லை இன்றுவரை! நேற்று காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் யானைக்குள்ள நாமப் பிரச்சினைபற்றி ஜூனியர் விகடன் செய்தியாளர் தரும் சுவையான தகவல் இதோ:

வடகலை, தென்கலை பிரிவினை பேதத்தின் காரணமாக யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று இருதரப்பினரிடையே பலத்த போட்டி ஏற்பட்டது _ தனிக்கதை (மேலே சுருக்கமாக சொல்லப்பட்டது).

.... பின்னரும் பிரச்சினை தொடரவே, இரண்டு பிரிவுக்கும் தனித்தனியே யானைகள் வைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கிறார்கள்.

அத்துடனாவது பிரச்சினை முடிவுக்கு வந்ததா? அதுதான் இல்லை.

இருந்தும் திருவிழாக்காலங்களில் யானைகள் வீதியுலா வரும் சமயத்தில், எங்கள் யானைதான் முன்னால் நடந்து வரவேண்டும் என்று மீண்டும் இருதரப்பினரும் வாய்ச்சண்டை போட்டனர். ஆகவே, இரண்டு யானைகளும் ஒரே வரிசையில் ஒன்றுபோல் நடந்து வரவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்!

நம் நாடு 21 ஆம் நூற்றாண்டில் எவ்வளவு முக்கியப் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது பார்த்தேளா?

இவ்வளவுக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் வரதராஜப்பெருமாள் வாயே திறக்கல்லே!

மதம் பிடித்தலைவது இந்த ஆறறிவுள்ள பக்தர்களா? அல்லது ஆறறிவு இல்லாத யானைகளா? இதைக் கண்டுபிடித்துச் சொல்பவருக்கு அந்த யானைமேல் சவாரி! வடகலை யானைமீது ஒருமுறை; தென்கலை யானைமீது ஒருமுறை. ஆனால், ஏககாலத்தில் எப்படி ஏறி அமர்வது? அதுதான் புரியாத புதிர்! அய்யய்யோ, சொல்ல வெட்கமாகுதே!

விடுதலை 29.10.09

தினமலத்தின் ஜாடை...........

வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஒபாமா தீபாவளி கொண்டாடியிருக்கிறார். உண்மையான ஜனநாயகம் அமெரிக்காவில்தான் நடக்கிறது. கிறித்துவ மதத்-தைச் சார்ந்தவராக இருந்-தாலும் மத வித்தியாசம் பார்க்க-வில்லை அமெரிக்க அதிபர்.

இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாக அரசியல்-வாதிகள் கொண்டாடும்-போது இங்குள்ள தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துச் செய்திகூட வெளியிடாமல், இருப்பது ஏன்? என்று தினமலர் சிண்டைப் பிய்த்துக் கொள்கிறது.

இப்படி வாயிலும், வயிற்-லும் அடித்துக்கொள்ளும் தினமலர் கூட்டத்தை நோக்கி திருப்பி அடிக்கி-றோம். அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்!

கிறித்துவரான அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பெருந்தன்மை இருக்கிறது. அதே பெருந்தன்மை தின-மலர் கூட்டத்துக்கு உண்டா?

ஜனவரி முதல் தேதி ஆங்-கில வருடப் பிறப்பன்று கோயில்களுக்குச் சென்று இந்துக்கள் வழிபட்டு வரு-கிறார்கள். அதுகுறித்து காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

கிறித்துவ ஆண்டு பிறப்-புக்காக இரவு நேரத்தில் கோயிலைத் திறந்து வைப்-பதா? இது ஆகமத்துக்கு விரோதம், விரோதம் என்று கூக்குரல் போட்டாரே _ நினைவிருக்கிறதா?

இன்னொரு முக்கியமான தகவல் உண்டு. தலாய்லாமா இந்தியா வந்தார். அவர் அனைத்து மதக் கோயில்-களுக்கும் செல்ல விரும்பி-னார். கேரளாவில் புகழ்-பெற்ற செயின்ட் ஜோசப் சர்ச்சில் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்கத் தயார் என்று கூறினார்கள். பாளயம் மசூதி இமாம் தலாய் லாமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராக இருப்-பதாகவும், காலை சிற்றுண்டி அளித்து உபசரிக்க விரும்-புகிறோம் என்றும் அறி-வித்தார்.

அர்த்தமுள்ள இந்து மதத் தலைவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

தலாய்லாமா ஹிந்து மதத்தை ஏற்காதவர். அவரது பாரம்பரிய மத ரீதியான ஆடைகளைக் களைந்து-விட்டு, காலணிகளை வெளியே விட்டுவிட்டு வந்தாலும் எந்த இந்துக் கோயிலுக்குள்ளும் நுழைய தலாய்லாமாவை அனுமதிக்க-மாட்டோம் என்று சொன்-னார்-களே! (ஆதாரம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 18.12.1992).

ஒபாமா தீபாவளி கொண்-டாட தயாராகிறார். இந்-துக்களோ தலாய்லாமாவை கோயிலில் உள்ளே நுழை-யக்கூட தடை போடுகிறார்-கள்.

இரண்டு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு இதில் தெரியவில்லையா?

ஒபாமாவின் ஜனநாயகத்-தைப் பாராட்டும் தகுதி தினமலர் வகையறாக்-களுக்கு உண்டா?

முதலமைச்சர் கலைஞர் தீபாவளி வாழ்த்துச் சொல்ல-வில்லையாம் _ அதற்குத்-தான் தினமலர் ஜாடை பேசுகிறது!

தீபாவளி கொண்டாடாத தீரர்களின் பட்டியலைச் சேர்ந்தவராயிற்றே கலைஞர் _ எப்படி தீபாவளி வாழ்த்து கூறுவார்?

நன்றி விடுதலை 28.10.09

Tuesday, October 27, 2009

மரகதலிங்கம்


நேற்று மாலை ஏடு-களில் ஒரு பரபரப்பான செய்தி.

50 கோடி ரூபாய் மதிப்-புள்ள திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயி-லுக்-குச் சொந்தமான மரக-த-லிங்கம் கைப்பற்றப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

இது 12 ஆம் நூற்-றாண்-டைச் சேர்ந்ததாம். இந்த மரகதலிங்கத்தை இந்திரனே பூஜித்து வந்தா-னாம். (இடையில் விட்டு-விட்டானோ!)

லிங்கம் என்றால் ஆண் குறி! அது மரகதத்-தில் செய்யப்பட்டதாம்! ஆகா, எப்படிப்பட்ட பக்தி!

இன்னும் இந்த மரகத-லிங்-கத்துக்கு என்ன கூடு-தல் விசேஷம்? (கதை அளப்புக்கு என்ன பஞ்சமா?).

அந்த மரகதலிங்-கத்தை முசுகுண்ட சக்ர-வர்த்தியிடம் கொடுத்து ஏழு பிரசித்திப் பெற்ற கோயில்களில் பிர-திஷ்டை செய்து வழிபட்டு வரு-மாறு இந்திரன் கூறினா-னாம்.

இதன் பொருள் என்ன? இந்த மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்-ளது என்பதுதானே இதன் அய்தீகம்.

இவ்வளவு சக்தி வாய்ந்த _ அதுவும் தேவர்களின் தலைவ-னான இந்திரனே வழி-பட்டு வந்த லிங்கத்தை கொள்ளையர்கள் எப்படி திருடியிருக்க முடியும்?

அப்படி திருடியிருக்-கிறார்கள் என்றால் இந்த லிங்கங்கள் தெய்வ சக்தி வாய்ந்தவை என்பதெல்-லாம் அசல் டூப்பாக இருக்க-வேண்டும். இரண்-டில் ஒன்றுதானே உண்-மை-யாக இருக்கவேண்-டும்.

நம் முன் நிற்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். மரகதலிங்-கத்துக்குத் மகாசக்தி உண்டென்றால், அதனைத் திருடிச் செல்ல முடியுமா? அதனைத் திருடியிருக்-கிறார்கள் என்பதிலிருந்து லிங்கத்துக்குச் சக்தியாவது, புடலங்காயாவது என்-பதை மரியாதையாக, நாண-யமாக ஒப்புக்கொள்ள வேண்-டுமா_ இல்லையா?

இந்த சிவலிங்கத் திரு-டர்களைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி யார் தெரியுமா? காதர் பாஷா.

இது என்ன அநி-யா-யம்? சிவலிங்கத் திருட்டை ஒரு சாயபு கண்டுபிடிக்க-லாமா? என்று அக்ரகாரத்-தார் அலறக்கூடும்.

இது கருணாநிதி சதி என்று இந்து முன்னணி _ ஆர்.எஸ்.எஸ். வகை-யறாக்கள் கூக்குரல் போட்-டாலும் போடுவார்கள் _ யார் கண்டது?

கடவுளையே கண்டு-பிடித்துக் கொடுக்க மனி-தர்கள் (காவல்துறை-யி-னர்)தான் தேவைப்படுகி-றார்கள்.

கடவுளை மற, மனி-தனை நினை! என்ற பெரியார் வாக்கு பலித்-ததா இல்லையா?

- மயிலாடன்

நன்றி விடுதலை 27.10.09

Tamil 10 top sites [www.tamil10 .com ]