வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label மார்கழித் திங்கள். Show all posts
Showing posts with label மார்கழித் திங்கள். Show all posts

Wednesday, December 16, 2009

பார்ப்பான் தந்திரம் சும்மாவா.........

மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி பார்ப்பன ஏடுகளும், தமிழர்கள் நடத்தும் _ மூட-நம்பிக்கையை மூலதனமாக்கிப் பிழைக்கும் ஏடுகளும், ஊடகங்களும் வழக்கம்போல் மக்களை ஏய்க்க, மூடநம்பிக்கைச் சேற்றில் தள்ளத் தயாராகிவிட்டனர்!


ஆண்டாள் அருளிய திருப்பாவையிலிருந்து,

‘‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்...’’ என்று பாட்டு போட்டு, ‘மார்கழி வழிபாடு’ என்று தலைப்பிட்டு அன்றாட வியாபாரம் செய்கின்றவர்களுக்கு இரண்டு கேள்விகள்:

‘மார்கழி மாதம் பீடை மாதம்’, ‘திருமணம், வீடு குடிபோதல் (கிரகப்பிரவேசம்)’ முதலிய ‘‘சுப-காரியங்கள்’’ அம்மாதம் முழுவதிலும் நடைபெறவே கூடாது என்று கூறுவது இதே பக்தகோடிகள் _ மதவாதிகள்தான்.

இவை இரண்டில் எதை நம்புகிறீர்கள்?  பக்த பஜனையாளர்களே பதில் கூறுங்கள்.
அது மட்டுமா?

திரு. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ஆண்டாள் என்று ஒரு பக்தை இருக்கவே இல்லை; அது முற்றிலும் கற்பனைப் பாத்திரம் என்று குறிப்பிட்டுள்ளாரே _ அதுபற்றி புலவர்களே, பக்தர்களே! உங்கள் பதில் என்ன?

- ‘சர்ச்லைட்’  விடுதலை 16.12.2009
ஒருவேளை இந்த மாதத்தில்தான் பார்பனர்கள் தங்களுக்கு திருமணம், வீடு குடிபோதல் போன்ற காரியங்களை எளிதாக செயிதுகொல்வர்கள் போலும். தமிழர்களை  இதுமாரி ஒரு பொய்யை சொல்லி ஏதும் செய்ய விடாமல் தடுத்துவிட்டு பார்பன புத்தியோடு தந்திரமாக மிக குறைந்த செலவில் திருமண மண்டபங்களை பிடித்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், தங்கள் காரியங்களை எளிதாக நிறைவேற்றிகொள்கிறார்கள். இது போலவே வீடு கட்ட இலுப்பை மரத்தை பயன்படுத்தாதீர்கள் அது ஆகாது வீட்டுக்கு என்று கூறிவிட்டு அவர்கள் வீட்டில் இலுப்பை மரத்தால் ஆனா உத்திரம் மற்ற அனைத்தும் செயிது இருப்பார்கள். பார்பான் தந்திரம் சும்மாவா.........

Tamil 10 top sites [www.tamil10 .com ]