வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பெரியார்-கலைஞர்-அண்ணா-சுயமரியாதை-பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பெரியார்-கலைஞர்-அண்ணா-சுயமரியாதை-பகுத்தறிவு. Show all posts

Friday, July 02, 2010

பகுத்தறிவாளர்கள் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டாம்

 முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்கள், பகுத்தறிவு, தன்மான, இனமானக் கருத்துகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தாலும், அண்மைக்காலமாக அதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்து, அழுத்தம் கொடுத்துச் சொல்லி வருகிறார்.

தன்னைப் பற்றி ஒரு வரியில் சுயமதிப்பீடு என்று சொல்லும்போது மானமிகு சுய-மரியாதைக்காரன்! என்று திட்டவட்டமாகவே தெளிவுபடுத்திவிட்டார்.

டில்லியில் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தி.மு.க. தோழர்களுக்கு வேண்டு-கோள் அல்ல_கட்டளையாகவே தெரி-வித்தார்.

பெரியார் _ அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு கோவிலுக்குப் போவது, வாஸ்து பார்ப்பதெல்லாம் கூடாது என்றே தெளிவுபடுத்தியும் விட்டார்.

இந்தச் சூழலில் வேலூர் பகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவர் மானமிகு கலைஞர் அவர்களுக்குக் கோவில் எழுப்பி, மூன்று வேளை பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது; கண்டிக்கத்தக்கதுமாகும்.

தி.மு.க. தலைவராகவும், 5 ஆம் முறை-யாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் விளங்கக் கூடிய மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களை மதிப்பது, பாராட்டுவது, நன்றி காட்டுவது என்பது இது போன்ற மூடநம்பிக்கைச் செயல்களால் அல்ல!

அவரைப் பொறுத்தவரை பாராட்ட எத்தனையோ பரிமாணங்கள் உண்டே! 87 ஆண்டுகளில் 75 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர் பன்முகப் பேராற்றல் கொண்டவர். அவர்தம் நூல்களைப் பரப்பலாம்; அவர் முரசொலியில் எழுதி வரும் அறிக்கைகளை அச்சிட்டுப் பொது மக்களுக்கு_ குறிப்பாக இளைஞர்களுக்குக் கொடுக்கலாம்.

பகுத்தறிவு சார்ந்த நூல்களில் இடம் பெற்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். கலைஞர் பெயரில் படிப்பகத்தை ஏற்படுத்தி திராவிடர் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம்_தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த-லாம். கலைஞர் அவர்களின் பிறந்த நாளை-யொட்டி பள்ளிகளில், கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்திப் பரிசளிக்கலாம்.

பகுத்தறிவு அடிப்படையில் கலைஞர் அவர்களின் புகழை, சாதனைகளைப் பரப்பி அதன்மூலம் அவரை மதித்திட ஆயிரம் ஆயிரம் வழிகள் இருக்கும்போது, தன்மான -_ பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமாக கோயில் எழுப்பி அதில் கலைஞர் அவர்-களைக் கடவுளாக ஆக்குவது என்பது_-நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்றாகும்.

ஒருவருடைய கொள்கையை ஒழிக்க வேண்டுமானால், அவரை மகானாகவோ, கடவுளாகவோ ஆக்கினாலே போதும் என்பார்கள்.

கலைஞர் என்பவர் திராவிடர் இயக்-கத்தின் கருவூலம்! தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத் தனிப் பெரும் தளகர்த்தர்! இன்றைக்கு நம்மிடையே வாழும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்.

அவர் மனிதர்  மாபெரும் மனிதர் மதிக்கத்தக்க போராளி. அவரைக் கடவுளாக்கி, பகுத்தறிவாளர்கள் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டாம். அது சிலையாக இருக்-கட்டும்_அதன் கீழ் கலைஞர் அவர்களின் பகுத்தறிவுப் பொன்மொழி கல்வெட்டாகச் செதுக்கப்படட்டும். கோயில் _ பூஜை என்ற முயற்சியை உடனடியாகக் கைவிடுக!

------------ நன்றி விடுதலை தலையங்கம் (02.07.2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]