Showing posts with label பெரியார்-கந்தபுராணம்-வாலி-இராமன்-இராமாயணம்-ஆபாசம்-பகுத்தறிவு-புராணங்கள். Show all posts

Saturday, February 27, 2016
சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது
வனபுத்திரி
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7,இளங்கோ தெரு
தேனாம்பேட்டை , சென்னை -– 600018.
பக்:112 , விலை : ரூ. 80/-
சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது....
புராணக் கதாபாத்திரங்களை மறுவாசிப்பு செய்து சிறுகதைகள் படைத்து நம் நெஞ்சைக் கொள்ளை கொண்டு வந்த சுப்பாராவின் முதல் நாவல் இது . அவர் தன்பாணியில் சற்றும் விலகாமல் இந்நாவலையும் படைத்துள்ளார் .பாராட்டுகள்.புராண பாத்திரங்களை பெண்ணிய நோக்கில் , தலித்திய நோக்கில்என பல கோணங்களில் மறுவாசிப்புச் செய்யும் போது புதிய வெளிச்சம் கிடைக்கும் ; கட்டியமைக்கப்பட்ட புனிதம் நொறுங்கும் .இராமாயணம் படைத்த வால்மீகியும் இராமாயணக் கதாநாயகியும் சந்தித்தால் என்கிற ஒற்றை வரியில்கதையின் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது .வெறுமே கற்பனைச் சரடுகளைஅவிழ்த்துவிடாமல் இராமாயணத்தைக் கூர்ந்து படித்து உள்வாங்கி நுட்பமாய் சில இடைவெளிகளை இட்டு நிரப்பி இராமாயணத்தின் சாதிய , ஆணாதிக்கக் கூறுகளை படம் பிடிக்கிறார் .இராமனால் துரத்தப்பட்ட சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி குழந்தை பெற காத்திருக்கிறார் .இராமகாதையை அரங்கேற்றி நிஷாதகுலத்தில் பிறந்த தான் பிரம்மரிஷி எனப் புகழ்பெற வேண்டும் என்றஅடங்கா வேட்கையுடன் வால்மீகிஇராமகாதையின் ஒவ்வொரு பாத்திரமாக தேடி பேட்டி கண்டுவிவரம் சேகரித்து எழுதிக்கொண்டிருக்கிறார் .
ராமனைப் பேட்டிகாணச் சென்ற வால்மீகியின் அனுபவம் எப்படி இருந்தது ? “ அயோத்தியில் பத்துநாட்களுக்கு மேல் காத்திருந்தும் சக்கரவர்த்தியின் பேட்டி கிடைக்கவில்லை ……. ரிஷிகளுக்குள்ளும் வர்ணம் பார்க்கிறார்களே! என் மகத்தான கவிதைகளைப் படிக்கும் வரை என்னை நிஷாதனாகத்தானே பார்ப்பார்கள் ....” என சுப்பாராவ் எழுதிச் செல்லும் போது சமூகவிமர்சனம் சாட்டையாய் விழுகிறது .“ கதாநாயகனைப் பார்க்க பத்துநாள் காத்திருந்த உங்களுக்கு கதாநாயகியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையே?”என நெத்தியடியாய் சீதை கேட்கும் கேள்வி பெண்சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாய் ஒலிக்கிறது.ராமாயணத்தில் சீதையின் தாயார் பெயர் ஏன் விடுபட்டது ; வளர்ப்புத் தாய் பெயர் ஏன் விடுபட்டது; லட்சுமணனின் தாயார் சுமித்திரையின் பரம்பரை ஏன் சொல்லப்படவில்லை.; இப்படி எழும் ஒவ்வொரு கேள்வியும் மநுவின் முகத்திரையை விலக்கி கோர உருவத்தைக் காட்டுகிறது .அனுமன் இலங்கையில் சீதையை சந்தித்ததை விவரிக்கும் வால்மீகி ஏன் அனுமன் வாயால் சீதையின் பேரழகை விவரிக்கிறார் ?கட்டைப் பிரமச்சாரிக்கு ஏன் இந்த வேலை ? வாலிவதை குறித்த உரையாடல் இன்னொரு முனையைக் காட்டுகிறது . விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் நடந்த போது ; இராவணனின் மனைவியை கட்டாயப்படுத்தி விபீஷணனின் பட்டத்து ராணியாய் வலம் வரச் செய்யும் இடம்;பெண்களின் வலியை, ரணத்தைஉணராத ஆணாதிக்க முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும். இப்படி புராண கதாபாத்திரங்களூடே உள் நுழைந்து புதிய சேதிகளை அள்ளிக் கொண்டுவரும் நுட்பம் சுப்பாராவுக்கு மிகவும் கைவரப் பெற்றிருக்கிறது என்பதற்கு இந்நூல் நெடுக நிறைய சாட்சிகள் உண்டு .நூலின் கிளைமாக்ஸ்தான் சூப்பர்.ராவணனின் மனைவி மண்டோதரியை அங்கதன் தூக்கிக் கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை புரிகிறான் . இராவணன் தேடிச் சென்று மீட்டு வருகிறான் .
ஊரார் அவளை அங்கேயே கொன்றுஎறிந்திருக்க வேண்டும் என தூற்றுகின்றனர் .இராவணன் அவளை ஏற்றுக் கொள்கிறான் . ஆனால் அயோத்தியில் இராமன் என்ன செய்தான் ?தீக்குளிக்கச் சொன்னான் . இந்த இரண்டையும் ஒப்பிட்டு சீதை அசை போடுவது நெற்றியடியாகும் . சீதையின் எந்தத் திருத்தமும் வால்மீகியால் ஏற்கப்படவில்லை . நாரதர் தலையிட்டு திருத்தங்களை தீக்கிரையாக்கச் செய்துவிட்டார் . அதன் சாம்பல் துகள்களிலிருந்து இந்த நாவல் கிளைத்திருக்கிறது .இராமனை தேசிய கதாநாயகனாகக் காட்டி மதவெறி தூபம் போடும் இன்றையச் சூழலில் இந்தநாவல் அந்த புனிதப் பூச்சை அழித்துத் துடைக்கிறது .இது இன்றையத் தேவை . ராஜம் கிருஷ்ணன் எழுதிய , இராமாயணம் குறித்த இரண்டு மறுவாசிப்பு நூல்களும் ;அதுபோன்ற வேறு பல நாவல்களும் சிறுகதைகளும் இப்போது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தக்கவை.வாசிக்க வேண்டும் . இந்த நாவலையும் இன்னும் கூர்மையாக்கி பிரளயன் போன்றோர் நெறியாளுகையில் நாடகமாக்கலாமே ! இது என் வேண்டு கோளும் கூட . இந்நாவலில் உரையாடல்கள் தனித்துப் பளிச்சிடும் வகையில் எழுத்துப் பாணியும் கட்டமைப்பும் இருந்திருப்பின் வாசிப்பு சுகம் கூடும் .
எல்லோரும் படிக்க வேண்டிய நூல் இது . சுப்பாராவுக்கு வாழ்த்துக்கள்.
தகவல்: சு.பொ.அகத்தியலிங்கம் @ தீக்கதிர் நாளிதழ், 28-02-2016
Monday, June 07, 2010
சிறீரங்கத்து அய்யங்கார்...ஆபாசத்தை புதுக் கவிதையில் மொண்டு கொடுக்க முனைந்துள்ளார்
கந்தபுராணத்தை மிஞ்சிய புளுகு வேறு எந்த புராணத்திலும் கிடையாது என்ற பழமொழியே உண்டு. அந்த அளவுக்குப் புளுகு மூட்டை மட்டுமல்ல, ஆபாசக் குட்டையுமாகும்.
அந்தக் கந்தபுராணத்தை புதுக்கவிதை நடையில் நூலாக ஆக்கித் தந்திருக்கிறார் சினிமா கவிஞர் வாலி. இதற்கு முன் இராமாயணத்தையும் புதுக்கவிதையில் ஆனந்த-விகடனில் தொடராக எழுதி பிறகு நூலாகவும் வெளிவந்தது.
என்னதான் திராவிட இயக்கத் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவர்களின் கலாச்சாரத்திலும், நம்பிக்கையிலும், அனுஷ்டானத்திலும், அவற்றைக் கட்டிக்காப்பதிலும் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும்தான் இருக்கிறார்கள்.
இராமாயணத்தில் ஆரியர் திரவிடர் போராட்டம் என்பது மய்யப் புள்ளியாகும். கந்த புராணமும் அதே அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே என்று அன்னை மணியம்மையார் அவர்கள்_ நிரூபித்து எழுதியுள்ளார்கள்_ தக்க எடுத்துக்காட்டுகளுடன்.
இரண்டு கதைகளுக்கும்மூலம் சமஸ்கிருமாகும். இரண்டு கதைகளும் தேவர்கள் என்பவர்களுக்கும், அசுரர்கள் என்பவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் என்ற பாவனை வைத்துக் கற்பிக்கப்பட்டவையே!
இரு கதைகள் உற்பத்திக்குக் காட்டப்பட்ட காரணங்கள் அசுரர்களின் தொல்லைகள்
பொறுக்கமாட்டாமல் தேவர்கள் பிர்மா, விஷ்ணு, சிவன் என்னும் கடவுள்களைப் பிரார்த்தித்துத் தங்கள் துன்பங்களைத் தீர்க்கும்படி வேண்டிக்கொண்டதாகும்.
இராமாயணத்துக்கு விஷ்ணு_ இராமனாக அவதரித்து கதாநாயகனாகவும், கந்த புராணத்திற்கு சிவன்_ கந்தனாக (சுப்பிரமணியனாக)ப் பிறந்து கதாநாயகனாகவும் இருக்கிறார்கள்.
இராமாயணத்தில் இராவணன் அரக்கன் என்றால், கந்தபுராணத்தில் அரக்கன் சூரபத்மன் ஆவார்.
இராவணனுக்கு விரோதமாக அவன் தம்பி விபீஷணன் இருந்தான். சூரபத்மனுக்கு விரோதமாக அவன் தம்பி சிங்கமுகன் என்பவன் எதிரிக்குக் கையாளாக இருந்தான்.
வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சுரர்_அசுரர் போராட்டம் என்பதெல்லாம் ஆரிய திராவிடப் போராட்டமே என்று வரலாற்று ஆசிரியர்களே அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.
உண்மை இவ்வாறெல்லாம் இருக்க, இந்த 2010 இல் ரெங்கராஜ அய்யங்கார் (கவிஞர் வாலி) கந்தபுராணத்தை புதுக் கவிதையில் எழுதி நூலாக வெளியிடுகிறார் என்றால் இதன் பார்ப்பனீயப் பின்னணியை தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமன் பிறப்பு என்பது மிகவும் ஆபாசமானதாகும். வெட்டுண்ட குதிரையோடு தசரதனின் பத்தினிமார்கள் இரவு முழுவதும் கட்டிப் புரண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. யாகப் புரோகி-தர்-களிடம் பட்டத்து ராணிகள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள்-மூலம் சூலாக்கப்பட்டு, அதன்பின் தசரதனிடம் அளவற்ற திரவியத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களைத் தசரதனிடத்தில் கொடுத்து விட்டார்கள் புரோகிதர்கள் (பாலகாண்டம் சர்க்கம் 14, பக்கம் 46, 47 நரசிம்மாச்சாரியார் மொழி பெயர்ப்பு).
கந்தபுராணம் குறித்து தந்தை பெரியார் கூறுகிறார்: ஸ்கந்தனுக்கு அந்தப் பெயர் வந்ததற்குக் காரணம் என்ன-வெனில், ஸ்கந்தம்_ கந்தம் என்றால் இந்திரியம் என்ற பொருளும் காணலாம். கந்தன் பிறப்பு, சிவனுடைய ஒழுகிப்போன இந்திரியத்தில் இருந்து உற்பத்தியானவன் என்பதாகப் புராண ஆதாரம் இருப்பதால், அவனுக்குக் கந்தன் என்று பெயரிட வேண்டியதாயிற்று எனலாம்.
கதைக்கு மூலகாரணம் தேவர்களை அசுரர்கள் கொடுமைப்படுத்தியதாகக் காரணம் வைத்து, அசுரர்களை ஒழிக்கச் சிவனின் உதவியைத் தேவர்கள் கோரியதாகவும், சிவன் தான் ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொடுப்பதாகவும், அந்தப் பிள்ளை அசுரர்களை அழிக்கக்கூடியவனாவான் என்றும் கூறி - ஒரு பிள்ளையைப் பெறுவதற்காகத் தனது மனைவி பார்வதியிடம் கூடிக் கலவி துவக்கியதாகவும்; அக் கலவி தேவ வருஷத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு (நமக்கு ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள், இந்த நாள் 360 கொண்டது தேவர்களுக்கு ஓராண்டு; இந்தப்-படியாக ஆயிரம் ஆண்டு என்றால் 3,60,000 -(மூன்று லட்சத்து அறுபதினாயிரம் நாட்கள்) நடந்ததாகவும், அது-வரையில்கூட பார்வதிக்குச் சினை (கர்ப்பம்) ஏற்படவில்லை என்றும்; பிறகு தேவர்கள் வேண்டுகோளால் கலவியை நிறுத்தி இந்திரியத்தைப் பூமியில் விட நேரிட்டதாகவும்; அது ஆறாய் ஓடிக் கங்கையில் விழுந்து 6 பிரிவுகளாய் கங்கையில் மிதந்ததாகவும்; அதை ஆறு பெண்கள் எடுக்க, அது ஆறு குழந்தைகளாக ஆகி, ஆறு பெண்களிடமும் முலைப் பால் அருந்தியதாகவும்; பிறகு அவற்றை ஒன்றுபடுத்தியதில் ஆறு உடல்கள் ஓருடலாகித் தலை மாத்திரம் ஆறு தலைகளாக இருந்து அந்த ஓருடலில் ஒட்டிக்கொண்டதால் அது ஆறு தலைக் குழுந்தையாகி ஆறுமுகனானான் எனவும் கதை கட்டிக்கொண்டார்கள். இதன்படியும், இன்னும் கதையில் வரும் மற்ற சம்பவங்களின்படியும் பார்த்தால், இந்தக் கதை கற்பனை செய்துகொண்ட காலத்தில் ஆரியர்களுக்கிருந்து வந்த புத்தி, காட்டுமிராண்டித்தனமான புத்தி, அறிவு என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட காட்டுமிராண்டிக் கருத்துக் கொண்ட கந்தபுராணத்தை, வெகுகாலத்திற்குப் பிறகு வைணவர்கள் தங்கள் சமயமரபாக ஆக்கிக் கொள்ள விரும்பி, கந்த புராணக் கதைப் போக்கையே மூலமாகக் கொண்டு, பெயர்களையும், சம்பவங்களையும் மாற்றி, அதற்குக் கதா புருஷன் இராமன் என்றும், இராமன்_ விஷ்ணுவின் அவதாரம் என்றும் காட்டி, அந்நூலுக்கு இராமாயணம் என்றும் பெயர் வைத்துக் கற்பித்துவிட்டார்கள் என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.
இந்த ஆபாசத்தை புதுக் கவிதையில் மொண்டு கொடுக்க முனைந்துள்ளார் சிறீரங்கத்து அய்யங்கார். தமிழர்களை பார்ப்பனர்கள் வீழ்த்தத் தயாராக வைத்திருக்கும் போர்வாள் இந்தப் பக்திதான். எச்சரிக்கை!
-------- விடுதலை தலையங்கம் (25.05.2010)

Subscribe to:
Posts (Atom)