வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பெரியார்-இந்து மதம்-சாமியார்கள். Show all posts
Showing posts with label பெரியார்-இந்து மதம்-சாமியார்கள். Show all posts

Friday, March 12, 2010

ஊடகங்களால் வளர்க்கப்படும் சாமியார்கள்! திருந்துவார்களா பத்திரிக்கயாளர்கள்?

ஆசிரமம், யோகா, தியானம் என்ற போர்வை-களில் காவி வேடதாரிகள் நடத்தும் கயமை-களை, சுரண்டல்களைக் கண்டித்தும், இந்தக் குற்ற-வாளிகள்மீது அரசு சட்ட ரீதியான நடவடிக்கை-களை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்-பாட்டம் வெகு எழுச்சியுடன் நேற்று நடத்தப்-பட்டது.


சென்னையில் நடைபெற்ற இத்தகைய ஆர்ப்பாட்டத்-திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், இந்தப் பிரச்சினையில் ஏடுகள், இதழ்கள், தொலைக்-காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் நடந்து-கொள்-ளும் முறையை முக்கியமாகக் குறிப்பிட்டார்.

காவி வேடம் அணிந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப்பெரிய சிந்தனையாளர்கள் போலவும், தத்துவ ஞானிகள் போலவும், உலகை உயர்விக்க வந்த உத்தமர்கள் போலவும், அதற்காகவே அவதரித்தவர்கள் போலவும், அவர்களின் அறிவுரைகள் மக்களை நல்வழி-படுத்த வல்லவை என்பது போலவும் ஒரு பொய்-யான தோற்றத்தை உருவகப்படுத்திவிட்டனர்.

அவர்கள் கூறுவது எல்லாம் ஞானக் கண்களைத் திறந்துவிடும் கருவூலங்களாக கருதி அவர்களின் எழுத்துக்களை ஏடுகளில், இதழ்களில் இடம்பெறச் செய்தனர். ஒவ்வொரு இதழுக்கும் ஆஸ்தான சாமியார்கள் என்கிற அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டுவிட்டன.

தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திறந்தால் காலை வேளைகளில் இவர்களின் ஆப்த உரைகளைத்தான் செவிமடுக்க நேர்கிறது.

இவர்கள் நடத்தும் ஆசிரமம், அங்கு நடப்ப-தாகக் கூறும் யோகா, தியானம் குறித்துப் பக்கம் பக்கமாக படங்களுடன் வெளியிடப்படுகின்றன.

வாழ்வில் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிக் கிடக்கும், இயலாமையாலும், ஆற்றாமையாலும் அமைதியைத் தொலைத்துக் கிடக்கும் மக்களை அந்தக் காவிக் கூடாரங்களின் பக்கம் விரட்டி-யடித்ததில் இந்த ஊடகங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உண்டு.

இத்தகைய தவறுகளை இனிமேலும் செய்யாதீர்கள் என்று ஆர்ப்பாட்டத்தின்போது ஆங்கே வந்த ஊடகக்காரர்களைப் பார்த்து நேரிடையாகவே திராவிடர் கழகத் தலைவர் வேண்டுகோள் வைத்தார். (ஊடகங்கள் இந்தப் பகுதியை மட்டும் இருட்டடித்துவிட்டுச் செய்தி-களை வெளியிட்டன என்பது, அவை திருந்-தாதற்கான அடையாளமாகும்).

ஏடுகள் வாரந்தோறும் ஆன்மிக இதழ்களை இணைப்பாக வெளியிடுகின்றன. இவையன்னி-யில் வழக்கமாக வெளியிடும் நாள் ஏடு, வார இதழ்களிலும்கூட ஆன்மிகத்திற்கென்று அள-விறந்த பக்கங்களை ஒதுக்குகின்றன.

தடுக்கி விழுந்தவன் அரிவாள்மனையில் வீழ்ந்தது மாதிரி ஆகிவிட்டது நமது நாட்டு ஊடகங்களின் போக்கு.

அதனால்தான் இன்றைக்கு 55 ஆண்டு-களுக்குமுன்பே நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையையும் சேர்த்தார் தந்தை பெரியார்.

ஏடுகள், இதழ்கள் வெளியிடும் ஆன்மிகச் சமாச்சாரங்கள், அறிவுக்கும், ஒழுக்கத்துக்கும் நன்னடத்தைகளுக்கும் சற்றும் பொருத்தமில்லாத நிலையில், மிகவும் விழிப்பாக.... என்பது நம்பிக்கை... என்பது அய்தீகம் என்று எழுதி பாவ மன்னிப்பை சுலபமாகத் தேடிக் கொள்கிறார்கள்.

அறிவியல் அளித்த அச்சு இயந்திரங்கள் மூலமாக வெளிவரும் இந்த ஊடகங்கள் அறி-வியலுக்கு விரோதமான வேலைகளில் ஈடு-படுகின்றன. அஞ்ஞானத்தை விஞ்ஞானத்தின்-மூலம் பரப்புரை செய்கின்றன.

சமூகப் பொறுப்பு இல்லாத இந்தப் பகற்-கொள்ளை தடுத்து நிறுத்தப்படவேண்டும். பணம் கொடுத்து வாங்கும் மக்களைப் பழிவாங்குவது என்ன பண்பாடு? இது எந்த வகையான தொழில் தர்மம்?

தவறுகளை வளர்ப்பதன்மூலமும் வருவாய்; தவறுகளைப் பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பதன்மூலமும் வருவாய்.

பக்தியால் மண்ணாங்கட்டியாகிவிட்ட மக்களை இந்த ஊடகக்காரர்கள் தாங்கள் விரும்பிய வகையில் உருமாற்றும் பொம்மைகளாக ஆட்டிப் படைப்பது வெட்கக்கேடேயாகும். தேவை மாற்றம்!

Sunday, March 07, 2010

இந்து முன்னணி வகையறாக்கள் பகுத்தறிவு இருந்தால் சிந்திப்பார்கள்..

சாமியார்கள் மதத்தின் போர்-வையில் நடத்தும் அட்டூழியங்களும், ஆபாசங்களும் மக்கள் மத்தியில் சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டன.


பிரம்மச்சாரியம் என்றெல்லாம் பேசிக் கொண்டு இரவில் கா-மவேட்டையில் இறங்கும் விளம்பரம் பெற்ற சாமியார்கள் உண்டு. யோகா ஆசிரமம் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கோடி கோடியாக பணம் பறிப்பது பெருந்தொழிலாகவும் நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுகிறோம் என்று சொல்லி மக்களிடம் பணம் பறித்து தலைமறைவாகும் பேர் வழிகள் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

பீர் சாமியார் என்றும், பீடி சாமியார் என்றும் சுருட்டு சாமியார் என்றும், கெட்ட வார்த்தை பேசும் சாமியார் என்றும், நிர்வாண சாமியார் என்றும் பல்வேறு பெயர்களில் உலா வந்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் மதத்தின்மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விடுமே என்ற அச்சத்தில், இந்து முன்னணி வகையறாக்கள் தந்திரமான ஒரு வேலையில் ஈடுபட ஆரம்பித்-துள்ளனர்.

சாமியார்களின் இந்த ஆபாச நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாத நிலையில், வேறு வழியின்றி இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கிட முனைந்துள்ளனர்.ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

இது பொது மக்களை ஏமாற்றும் _ திசை திருப்பும் வேலையாகும். இதே இந்து முன்னணிக் கும்பல் காஞ்சி சங்கராச்சாரியார் கொலை தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டாரே - _ பெண்கள் விஷயத்தில் சிக்கினாரே, ஊரே சிரித்ததே _ அப்பொழுது எங்கே போனார்கள்? காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் முன்ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லையே -_ ஏன்?

கண்டிக்காததோடு மட்டுமல்ல; கொலைக் குற்றத்தின்கீழ் வேலூர் சிறையில் இருந்த அந்த ஆசாமிக்கு ஊர் தோறும் பவளவிழாக்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே _ ஊரெங்கும் கட் அவுட்டுகள் வைக்கப்படுகின்றனவே _ இவற்றைக் கண்டிக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரையிலாவது இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று குரல் கொடுக்க வேண்டியதுதானே! ஆங்காங்கே இத்தகைய விழாக்களை நடத்திட முன் வரிசையில் இருப்பது இந்தக் கும்பல்தானே! அதில்கூட பார்ப்பன சாமியாரா _ பார்ப்பனரல்லாத சாமியாரா என்று இனம் காண்கின்றனர் போலி-ருக்கிறது.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயிலில் கர்ப்பக்-கிரகத்தில் அர்ச்சகர்ப் பார்ப்பான் தேவநாதன் பெண்களிடம் காமவெறி விளை-யாட்டு விளையாடினானே. மானம் உள்ள பெண்கள்தான் துடைப்-பத்தையும், செருப்பையும் தூக்கிக் கொண்டு கிளம்பினார்களேதவிர, எந்த இந்து முன்னணி, எந்த ஆர்.-எஸ்.எஸ். தேவ-நாதனை எதிர்த்துப் போராட்டம் நடத்த வீதிக்கு வந்தன?

இப்பொழுது இந்த சாமியார்களை எதிர்த்து இந்துமுன்னணி வகை-யறாக்கள் போராடுவது உண்மை உணர்வின் அடிப்படையில்தான் என்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்து மதத்தில் குடி கொண்-டிருக்கும் புராண ஆபாசங்கள், இதிகாச ஆபா-சங்கள் இவற்றைப் பற்றி தெளிவான முடிவுக்கு அவர்கள் வர வேண்டாமா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளை சிவன் கற்பழித்தான். முனிவர்களின் சாபத்தால் சிவனின் சிசுனம் (ஆண் குறி) அறுந்து விழுந்தது என்றுள்-ளதே. இது ஆபாசமானது இல்லை என்று கூறப் போகிறார்களா?

பிர்மாவின் மகளும் சரஸ்வதி; மனைவியும் சரஸ்வதி என்று எழுதப்பட்டுள்ளதே இது வெட்கித் தலைகுனியத்தக்கது அல்ல என்று இயம்பப் போகிறார்களா? நாரதன் என்ற ஆண் கடவுளும் கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளும் புணர்ந்து பெற்ற பிள்ளைகள் 60 என்று அபிதான சிந்தாமணி என்னும் புராண அகராதி புகல்-கிறதே, -இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்? குரு பத்தினி தாரையைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்-லப்படுவதற்கு என்ன சமாதானம்? அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று பாஞ்சாலியை வருணிக்கிறதே மகாபாரதம் _ பஞ்சமா பாதகம் அல்லவா? அது மட்டுமா? அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதாக கர்ணன் மீதும் ஆசை கொண்டாள் அந்தப் பத்தினித் தேவதை என்று பாரதம் கூறுகிறதே _ பரிதாபத்துக்குரிய பாரத மாதா பக்திப் புத்திரர்கள் இதற்கு என்ன பதிலை வைத்துக் கொண்டிருக்-கிறார்கள்? சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் இராமன் வாளால் வெட்டிக் கொன்று கொலை பாதகம் செய்தானே இதற்குக் கூறப் போகும் நாணயமான பதில் என்ன?

இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். இந்து மதத்தின் ஆபாசக் கடல் இந்து மகா சமுத்திரத்தையும் தாண்டியது. இந்தக் கடவுள்கள் செய்த ஆபாசங்-களையெல்லாம் அப்படியே கரைத்துக் குடித்தவர்கள்தானே இந்த இந்துமத சாமியார்கள்?

பின் எப்படிதான் நடந்து கொள்-வார்கள்? எல்லாம் பகவான் காட்டிய வழிதானே! இந்து மதத்தின் மானம் கப்பலேறுகிறது _ மற்றவர்கள் முகத்தில் விழிக்க முடியவில்லை; சாதாரண மக்களும் காரித் துப்புகிறார்கள் என்றதும், தாங்களும் அவர்களை எதிர்ப்பதுபோல பாசாங்கு காட்டுகிறார்களே _ வீதிக்கு வந்து வேகமாக குரல் கொடுப்பதுபோல ஒரு நிர்ப்பந்தத்தால் காட்டிக் கொள்கிறார்களே _ அவர்களை நோக்கிப் பாயும் கேள்விக்கணைகள் இவைதாம். மூலக் கடவுள்களும் அவற்றின் முந்தானைவழி வந்த குட்டிக் கடவுள்களும் கற்பழித்து இருக்கும்போது, விபச்சாரம் செய்திருக்-கும்போது, கொலைகளைச் செய்திருக்கும்-போது அந்தக் கடவுள்களை நம்புகிற, வழிபடுகிற பக்தர்களான சாமியார்-களும் அதே வழியைப் பின்பற்று-கிறார்கள் என்று சொல்லலாம் அல்லவா?

நடிகையுடன் கட்டிப் புரண்ட சாமியார்களைக் கண்டிக்கும் அதே வாயால், தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளுடனும் கிருஷ்ணபகவான் அறுபதாயிரம் கோபியருடனும் கட்டிப் புரண்டதையும் கண்டிக்க முன்வர வேண்டாமா?

இந்து முன்னணி வகையறாக்கள் ஒரு நெருக்கடி முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டு விட்டார்கள். பகுத்தறிவு இருந்தால் சிந்திப்பார்கள். அவர்களி-டம்தான் அதை எதிர்பார்க்க முடியாதே!

- நன்றி விடுதலை ஞாயிறு மலர் (06.03.2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]