வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label நித்தியானந்தா-ரமண மகர்ஷி-சாமியார்கள்-பெரியார். Show all posts
Showing posts with label நித்தியானந்தா-ரமண மகர்ஷி-சாமியார்கள்-பெரியார். Show all posts

Tuesday, June 15, 2010

ரமண மகரிஷி, நித்தியானந்தா..எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்..

மக்களைச் சொர்க்கத்-துக்கு அழைத்துச் செல்வ-தாகக் கூறி நாள்தோறும் காமக் களியாட்ட சொர்க்கத்-தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நித்யானந்தா என்ற ஆசாமி சிறை என்னும் நரகத்தில் வாசஞ் செய்து இப்பொழுது ஜாமீனில் வெளியே வந்-துள்ளார்.

இவருக்கு ஜாமீன் கேட்டு, அவரின் வழக்குரைஞர் பி.வி. ஆச்சாரியார் நீதிமன்றத்தில் வாதாடினார்.

சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தா தன்னுடன் பெண்களைக் காரில் அழைத்துச் செல்லுவது அவருடைய பக்தர்களின் மனதைக் காயப்படுத்தாதா? என்று நீதிபதி சுபாஷ் கேட்டார்.

அதற்கு நித்யானந்தாவின் வழக்குரைஞர் சொன்ன பதில் அனைவரையும் தூக்கி வாரிப் போடச் செய்தது. இந்தக் காவி வேட்டிகளின் கபடத்தனத்தை-யும் ஒரு வகையில் தோலுரித்-தும் காட்டியது.

அப்படி என்னதான் சொன்னார் நித்யானந்தாவின் வழக்குரைஞர்?
நித்யானந்தா சாமியார் அல்ல. அவர் தன்னை ஒரு-போதும் சாமியார் என்று சொல்லிக் கொண்டதும் கிடை-யாது. சில ஆசிரமங்களில் குடும்ப வாழ்க்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, நித்யானந்தாவையும் சாதாரண மனிதராகத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த வழக்கையும் சாதாரண விஷயமாகத்தான் எடுத்துக்-கொள்ளவேண்டும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

இதுவரை நித்யானந்-தாவை ஆண்டவனிடத்தில் வைத்துப் பார்த்தனர் _ அவர் சாதாரண மனுஷன்தான் என்று அவரது வழக்குரை-ஞரே முகத்திரையைக் கிழித்துக் காட்டிவிட்டார்.

பக்தி சமாச்சாரங்கள் இந்த யோக்கியதையில்தான் உள்ளன என்று பக்தர்கள் என்றுதான் புத்தியைப் பயன்-படுத்தி உணரப் போகிறார்-களோ என்று தெரியவில்லை.

ஏதோ நித்யானந்தாதான் இப்படி என்று இல்லை. ரமண மகரிஷி ரமண மகரிஷி என்று பூதாகரப்படுத்துகிறார்களோ, அந்தப் பெரிய மனுஷன் என்ன செய்தார் தெரியுமா?

தொடக்கத்தில் முற்றும் துறந்த முனிவர்போல, பற்-றற்றவர்போல காட்டிக்-கொண்ட இந்த வெங்கட ரமண பார்ப்பனருக்குச் சொத்துக்கள் குவியக் குவிய சொந்த பந்தங்களும் சுற்றி வந்து சூழ்ந்துவிட்டன.

கடைசியில் என்ன செய்-தார்? தன் தம்பிக்குச் சொத்-துக்களை எழுதி வைத்து-விட்டார்.

ரமண ரிஷியின் அந்தரங்-கச் சீடராகவிருந்த பெருமாள்-சாமி என்பார் நீதிமன்றம் சென்றார்.

நித்யானந்தாவின் வழக்-குரைஞர் நித்யானந்தா சாமியாரே இல்லை என்று சொன்னதுபோல _ ரமண ரிஷி-யின் விஷயத்திலும் நடந்தது.
நீங்கள் சந்நியாசியாயிற்றே, எப்படி அண்ணன், தம்பி பாச-மெல்லாம்? என்ற கேள்வியை நீதிபதி எழுப்பியபோது, நான் எப்பொழுது சந்நியாசம் வாங்கினேன்? என்று எதிர்க்-கேள்வியைப் போட்டாரே பார்க்கலாம், இதுதான் சாமி-யார்களின், ரிஷிகளின் யோக்கியதை!

பூரி சங்கராச்சாரியார் மனைவி மக்களுடன் குடும்-பம் நடத்துகிறாரே, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிகூட அதிகாரப்பூர்வ-மாகக் குடும்பம் நடத்தாவிட்-டாலும், ஏராளான வைப்பு-களை வைத்துக்கொண்டு சல்லாபம் செய்யவில்லையா? சிறைக் கம்பிகளை எண்ணி ஜாமீனில் நடமாடவில்லையா?
சாமியார்களில் காமியார்-கள் என்ற பெயரில் ஒரு சங்கத்தைக் கூட ஆரம்பிக்க-லாமே!

இதற்கு மேலும் பக்தியா? ஆன்மீகமா? வெண்டைக்காயா?

- விடுதலை(14.06.2010) மயிலாடன்

Tamil 10 top sites [www.tamil10 .com ]