வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label சோ-ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-காவி பயங்கரவாதம்-நரேந்திர மோடி. Show all posts
Showing posts with label சோ-ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-காவி பயங்கரவாதம்-நரேந்திர மோடி. Show all posts

Wednesday, September 14, 2011

தாமோதரதாஸ் மோடி தேசிய அரசியலில் குதிக்கப் போகிறாராம்


பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, குஜராத்தில் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகளாக இருந்தாலும் சரி (2002) இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட சட்டத்தின் பிடியில் சிக்காமல், குற்றங்களுக்கான தண்டனைகளையும் அனுபவிக்காமல் சுதந்திர மனிதர்களாக - கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாமல் ராஜநடை போட்டுத் திரிகிறார்கள் என்றால் இதைவிட இந்தியாவுக்குத் தலைக் குனிவும், வெட்கக்கேடும் வேறு என்னதான் வேண்டும்?

இதுபற்றி திருச்சிராப்பள்ளியில் ஞாயிறு அன்று நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒரு தீர்மானமும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவர்களின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண் டனையையும் பெற்றுத் தராவிட்டால், நிருவாகம், சட்டம், நீதி இவற்றின்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமலேயே போய்விடும் என்பதோடு, வன்முறைக்கு ஊக்கம் தரும் என்றும் அந்தத் தீர்மானத்தில் அழுத்தமாகச் சுட்டிக் காட்டப்பட்டும் உள்ளது.

நேற்று மாலை ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி - குஜராத் மாநில முதல்வராக இருக்கிற நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி தேசிய அரசியலில் குதிக்கப் போகிறாராம். பி.ஜே.பி.க்கு அடுத்த அகில இந்தியத் தலைவர் அவர்தானாம். பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரும் அவரேதானம்.

பாரதீய ஜனதா கட்சியின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பது ஒரு புறம்; இந்தியாவின் அரசியல் தன்மை எவ்வளவுக் கேவலமாக உச்சக்கட்ட டிகிரியில் இருக்கிறது என்பது இன்னொரு புறம்.
காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்சான் ஜாப்ரி என்பவர் குஜராத் கலவரத்தில் மிகக் குரூர மான முறையில் கொல்லப்பட்டார். டயரைக் கொளுத்தி ஜாப்ரி யின் கழுத்தில் மாட்டி கொடுவாளால் நெஞ்சைப் பிளந்தார்கள். பின்னர் பெட்ரோலை ஊற்றியும் கொளுத்தினார்கள்.

இதுபற்றி மனைவியான ஜாக்சியா காவல்துறையிடம் புகார் கொடுத்தார். காவல்துறை ஒத்துழைப்புடன் மோடி ஆட்சியில் எல்லா வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. புகார் செய்து என்ன பலன்?

உச்சநீதிமன்றம் சென்றார். இப்பொழுது கீழ்க் கோர்ட்டிலேயே வழக்கைத் தீர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. (என்னே காருண்யம்!)

அவ்வளவுதான். குற்றத்திலிருந்து விடுதலையானது போன்ற உணர்ச்சியுடன் பி.ஜே.பி.யினரும், சங்பரிவார்க் கும்பலும் குதியாட்டம் போடத் துவங்கிவிட்டனர்.

இவ்வளவுக்கும் கீழ்க் கோர்ட்டில் இனிமேல்தான் விசாரணையே தொடங்கப்படவேண்டும். மோடி ஆட்சியில் கீழ்க்கோர்ட்டு எப்படி இருக்கும் என்று இப்பொழுதே முடிவு செய்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

இனி பிரச்சினை இல்லை. மோடி அகில இந்திய அர சியலுக்கு வரப்போகிறார் என்று டாம் டாம் அடிக்கத் தொடங்கி விட்டார்கள். சோ போன்ற பார்ப்பனர்களை இனிமேல் கையால் பிடிக்க முடியாது.

ஆக, இந்தியாவில் ஒருவர் அகில இந்தியத் தலைவராக வேண்டுமானால், அடுத்த பிரதமராக ஆக வேண்டுமானால், அவர் அதற்கு முன்னால், ஒரு மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கவேண்டும்; குறைந்த பட்சம் 2000 பேர்கள் படு கொலைகளுக்குக் காரணமான சூத்திரதாரியாக இருக்க வேண்டும். தங்களுக்கு வேண்டாதவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்பட வேண்டும்.

14 பேர்களை விறகுகள் போல ஒரே கட்டாகக் கட்டி பேக்கரி அடுப்பில் எரியூட்ட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து அந்தக் கருவை எடுத்து நெருப்பில் போட்டுப் பொசுக்க வேண்டும்.

வெளிநாட்டுக்கு அந்த முதலமைச்சர் போக விரும்பினால், அந்த நாட்டு அரசாங்கம் எங்கள் நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லவேண்டும். அதுதான் உலகளாவிய மகத்தான கவுரவமாகக் கருதப்படவேண்டும்.

அந்த முதலமைச்சரின் இத்தகைய செயலைக் கண்டு அந்த நாட்டின் பிரதமர் தன் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடுகளுக்குச் செல்வது என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழவேண்டும்.

யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்களைப் பொடாவில் கைது செய்யவேண்டும். முகாம்களில் சரணடைவோரைக் கேவலமாக, கொச்சைத் தனமாக விமர்சிக்கவேண்டும்.

இத்தகைய விஸ்தாரமான கல்யாண திருக்குணங்கள் இருந்தால்தான் இந்தியாவில் ஒருவர் தேசிய அரசியலில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு கிடைக்கும். அதற்குப் பின் பிரதமர் நாற்காலியில் அமருவதற்கான தகுதியும் வந்து சேர்ந்துவிடும். அப்படித்தானே?
பாரத புண்ணிய பூமியின் யோக்கியதையைக் கண்டு ஆடுங்கள்- பாடுங்கள் - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று கூவுங்கள்!

இந்த நாட்டு ஊடகங்கள் எவ்வளவு தூரம் சங்கை கெட்டுப் போயிருந்தால், மோடி போன்ற கொடூரங்களைத் தோளில் தூக்கிச் சுமக்கும்? திருவாளர் பொதுமக்கள் சிந்திக்கட்டும்!

---விடுதலை தலையங்கம்,14-09-2011


Monday, May 16, 2011

மோடி மஸ்த்தான் ஆட்சியின் யோக்கிதை....

‘மிகச் சிறந்த நிர்வாகி. வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறார். மிகவும் எளிமையானவர். மாநிலத்தை, தொழில் துறையில் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். எப்பேர்ப்பட்ட முதல்அமைச்சர் பாருங்கள். அவரைப் போலத்தான் ஆட்சி நடத்த வேண்டும்’

‘ஆயிரக்கணக்கான இசுலாமியர்களைக் கொன்று குவிக்கக் காரணமாயிருந்தார். இந்து மதவெறியர்களின் கொலைவெறித் தாண்டவம் முடியும் வரை எதுவும் செய்யக்கூடாது என காவல்துறைக்கு ஆணையிட்டார். நீதியை வளைத்து, உண்மையைப் புதைத்து, கொலைகாரர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டார்’

மேலே சொன்ன இரண்டுமே ஒருவரைப் பற்றிய செய்திதான். அவர் வேறு யாருமன்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான். ஒரே மனிதரைப் பற்றி, இரண்டுவிதமான செய்திகள், அதுவும் கொஞ்சமும் பொருத்தமில்லாத, முற்றிலும் முரண்பட்ட கோணத்தில். இரண்டில் எது உண்மை, இதில் மறைந்திருக்கும் அரசியல் என்ன?

2007, நவம்பர் 3ஆம் நாளிட்ட தெகல்கா புலனாய்வு வார இதழ் மோடியின் மதவெறியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. 2002 பிப்ரவரியில் நடந்த கலவரம், முதலமைச்சர் மோடி மற்றும் பிஜேபி தலைமையிலான நடுவண் அரசின் ஆதரவுடன், திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அந்தப் புலனாய்வு இதழ் மறுக்க முடியாத சான்றுகளுடன் முன்வைத்தது. இந்துத்துவக் கலவரக்காரர்களின் வாயிலிருந்தே அத்தனை உண்மைகளையும் காட்சிப் பதிவுகளாக வெளியிட்டது. இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்து வந்த காங்கிரஸ் தலைமையிலான நடுவண் அரசும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முன் வரவில்லை.

இந்நிலையில், குஜராத் உயர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திர பட், உச்ச நீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக ஒரு வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். “இந்துக்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள். அவர்கள் முஸ்லிம்களுக்குப் பாடம் புகட்டட்டும்” என்று முதலமைச்சர் நரேந்திர மோடி எங்களுக்கு உத்தரவிட்டார் என அந்த வாக்குமூலத்தில் சஞ்சீவ் பட் கூறியிருக்கின்றார். இவர் ஏதோ ஊகத்தின் அடிப்படையிலோ, கற்பனையாகவோ இதைச் சொல்லவில்லை. 2002 பிப்ரவரி 27 ஆம் நாள் குஜராத் முதல்வர் மோடி, தனது வீட்டில் கூட்டிய காவல்துறை உயரதிகாரிகளின் அவசரக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் இந்த சஞ்சீவ் பட். அன்று தங்களுக்கு முதல்வர் இட்ட உத்தரவைத்தான் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார் சஞ்சீவ் பட். அதோடு இவர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை, இவரது வாகன ஓட்டியான, தாராசந்த் யாதவ் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இவற்றின் மீது என்ன விசாரணை மேற்கொள்ளப்படும், மோடிக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்பதெல்லாம், உச்சநீதிமன்றத்தின் நேர்மைக்கான வினாக்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

சிறுபான்மை இசுலாமியர்களுக்கு எதிராக மதவெறியைக் கட்டவிழ்த்துவிட்ட பெரும்பான்மை இந்துக்களின் முதல்வராக மட்டுமே செயல்பட்டவர் நரேந்திர மோடி. இப்படிப்பட்ட மதவெறியரைத் தான், காந்தியவாதி என்று சொல்லிக்கொள்கின்ற அன்னா ஹசாரே முதல் தமிழ்நாட்டின் சீமான் வரை முன்மாதிரி முதல்வர் என்று போற்றுகிறார்கள். மோடிக்கு அவர்கள் சூட்டிய புகழாரம் தான் கட்டுரையின் முதல் பத்தி.

அன்னா ஹசாரே மோடி புகழ் பாடியதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அதுவும் குஜராத் மாநிலத்தின் சமூக ஆர்வலர்களிடமிருந்தே அந்த எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.(தி ஹிண்டு ஏப்ரல் 13, 2011)

மோடியின் கிராமப்புற மேம்பாட்டுக்கான மாதிரிகள், ஊடகங்கள் சொல்வது போலத் தொழில் முன்னேற்றம், வளர்ச்சிப் பாதையில் குஜராத் என்பதெல்லாம் தகரத்திற்குத் தங்க முலாம் பூசியது போன்றது என்பது அவர்களின் கூற்று. குஜராத்தின் வளர்ச்சி என்பது மேல்தட்டு மக்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிதானே ஒழிய, பெரும்பான்மை கிராமங்களின் வளர்ச்சியாக இல்லை. குஜராத்தின் பெரும்பான்மை சமூக சக்திகள், தங்களின் குறைகளை மறைக்க இந்த ‘குஜராத் முன்னேறுகிறது’  என்கிற முகமூடியை பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர் அவர்கள்.

இந்தக் கருத்துகளைத் தனித்தனியாக யாரும் சொல்லவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு, கூட்டறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. சமூகத்திற்காகப் பணியாற்றுபவர்கள். சமூக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.பந்துக்வாலா, மனித உரிமைகள் ஒருங்கமைப்பின் இயக்குனர் பிரசாந்த் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரோகித் பிரஜாபதி, சாராபாய், நந்தினி மஞ்ரேகர் ஆகியோர் அந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அன்னா ஹசாரே மோடியை ஆதரித்துப் பேசியதைத் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் அவர் தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்து விலகப்போவதாகவும் எச்சரித்திருக்கின்றனர். மேலும் அவர்கள் குஜராத்தின் பின்னோக்கிய வளர்ச்சியை அன்னா ஹசாரே நேரில் வந்து பார்த்துவிட்டுப் பிறகு தன்னுடைய கருத்தை விளக்கவேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

மோடி தலைமையிலான அரசு விவசாயிகள், பெண்கள், உழைக்கும் வகுப்பார், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலையில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எதிரானது என்றும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சரி, இப்போது செய்திக்கு வருவோம். ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இவற்றிற்கு நேர்மாறாக இருக்கின்றன. அவை  குஜராத்தின் தொழில் வளர்ச்சியையும், மோடியின் நிர்வாகத்தையும் வானளாவப் புகழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன. காரணம் பெரிய கட்டமைப்புகளைக் கொண்ட ஊடகங்கள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கின்றன. மோடியின் அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாராளம் காட்டி வருகிறது. டாடா கார் தொழிற்சாலை உள்ளிட்ட பெரிய தொழில்நிறுவனங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகத் தந்திருக்கிறது. இதனால் கிராமப்புற விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவைதான் குஜராத்தின் உண்மை நிலை. இதனை  இங்கிருந்து கொண்டு நாம் சொல்லவில்லை, அங்கே மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்ந்து, அவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர், பெருமுதலாளிகளின் கைப்பாவைதான் முதல்வர் மோடி என்று.

ஜெர்மானியர்களை யூதர்களுக்கு எதிராக மூளைச் சலவை செய்த, ஹிட்லரின் படுகொலைகளை நியாயப்படுத்திய கோயபல்சின் ‘தி அட்டாக்’ என்ற நாளிதழின் பணியைத்தான் இப்போது இந்த ஊடகங்கள் செய்துவருகின்றன. பளபளப்பான பக்கங்களை மட்டுமே காட்டி, மோடியின் மதவெறி முகத்தை மறைத்து, மக்களிடையே ‘ரொம்ப நல்லவர் மோடி’யின் மாய பிம்பத்தை உலவவிட் டிருக்கின்றன.

‘அங்கு இருக்கின்ற இசுலாமியர்களும் அமைதியாக இருக்கின்றனரே! 2002 கலவரத்திற்குப் பிறகும், மோடியைத்தானே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நிர்வாகத் திறமை மிக்கவர் மோடி என்பதால்தானே, அனைத்தையும் மறந்துவிட்டு, மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர் ’ என்று ஒரு பரப்புரை, தமிழ்நாட்டிலும் நடந்துவருகிறது. அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற அளவிற்கு, அங்கே சிறுபான்மையினரான இசுலாமியர்களின் வாக்கு வங்கி இல்லை. எதிர்த்துக் குரல் கொடுக்கின்ற அளவிற்கு, அவர்களுக்கு ஆதரவான வலிமையான அமைப்புகளும் அங்கு இல்லை. ஏற்கனவே மதப் பெரும்பான்மையினரால், கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான இசுலாமியர்கள், அச்சத்தின் பிடியில் ஆட்பட்டுக் கிடக்கின்றனர். இதுதான் உண்மை.

சு.சாமி, சோ.சாமி போன்ற ஜெயலலிதா வகையறாக்கள் மோடிக்குத் தலைவாழை இலைபோட்டு விருந்து வைப்பதும், விழா நாயகனாக்கித் தூக்கிப் பிடிப்பதும் ஏன் என்று புரிந்து கொள்ள அகராதியைப் புரட்ட வேண்டிதில்லை. அது அவாள்களின் இனப்பாசம். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் மோடியைப் போற்றிப் புகழ்கிறாரே எப்படி என்று ஒரு கேள்வி எழுகிறது. ஒரு வேளை, ஜெயலலிதாவையே ஆதரித்து, இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கும்போது, மோடியைப் புகழ்வதில் என்ன வந்துவிடப் போகிறது என்று அவர் நினைத்திருக்கலாம்.

தவறு செய்தவன் தனி மனிதாக இருந்தால், அவன் மனம் திருந்தும் நிலையில் மன்னிக்கலாம், ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நரேந்திர மோடி என்பவர் தனி மனிதர் அல்லர். இந்துத்துவாவின் அடையாளம். அகண்ட பாரதம் காணத் துடிக்கும், பிஜேபி தலைவர்களில் ஒருவர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மாநிலத்தின் முதல்வர். அங்குள்ள ஒட்டுமொத்த மக்களின் தன்மான நல்வாழ்க்கைக்குப் பொறுப்பானவர். அப்படிப்பட்டவர் செய்துள்ள மனித உரிமை மீறல்களை மறைத்து, மேலோட்டமாகப் பார்த்துக் கருத்துக்களைச் சொல்வது எப்படி சரியாகும்?

முடக்கி வைக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தோண்டி எடுக்க, நல்லதொரு வாய்ப்பை சஞ்சீவ் பட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதற்குப் பிறகும், மோடியே நேரடியாக வந்து சொன்னால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று சட்டமும், நீதிமன்றமும் கருதினால்... குஜராத்தின் தற்காலிக அமைதி இப்படியே காலத்திற்கும் நீடிக்கும் என்று சொல்லுவதற்கில்லை.

------ நன்றி: கீற்று இணையம்,கட்டுரையாளர் இரா.உமா


Saturday, December 04, 2010

பா.ஜ.க.வின்மீது சோவுக்கு இருக்கும் பாசம்..

                                   பிகாரும் - பார்ப்பனர்களும்!

இன்றைக்கு அனேமாக பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற தலைவர் திருவாளர் சோ ராமசாமிதான். அந்த அளவுக்குப் பார்ப்பனர்களின் தகுதி கீழிறக்கத்திற்கு ஆளாகிவிட்டது.

சு.சாமி போலவே அரசியல் தரகராகச் செயல்படக் கூடியவர்தான் இவர் என்பது எல்லோருக்கும் தெரியும். வேறு எந்தத் தனிப்பட்டவர் வீட்டுக்கும் செல்லாத ஜெய லலிதா சோ வீட்டுக்கு மட்டும் போவார்; விருந்துண்பார்; கலகலப்பாக சோ குடும்பத்தாருடன் கலந்து உறவாடுவார்.

இதற்கு என்ன காரணம்? அரசியலா? கொள்கைக் கோட்பாடுகளா? இனப் பாசத்தைத் தவிர இதில் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

அ.தி.மு.க. மீது அதிருப்தி தரும் பிரச்சினைகள் வரும்போதுகூட செல்லமாக சுட்டிக்காட்டி இப்படி நடந்து கொள்ளவேண்டும் என்னும் அறிவுரைதான்; மக்களவைத் தேர்தலின்போது திடீரென்று ஈழத் தமிழர்கள் மீது பாசம் கொட்டி கருத்து மழையை ஜெயலலிதா பெய்தபோது அப்படித்தான் நடந்துகொண்டார் சோ.

பா.ஜ.க.வின்மீது சோவுக்கு இருக்கும் பாசம்கூட பார்ப்பன ஜனதா என்ற பாசவெள்ளம்தான்.

கருநாடக மாநிலத்தில் எடியூரப்பா விசயத்தில் பா.ஜ.க. நடந்துகொள்வது பெருமைக்குரியதல்ல - அவ்வளவுதான் பா.ஜ.க.பற்றி சோவின் விமர்சனம் (துக்ளக், 8.12.2010).

ஊழலுக்குத் துணை போகும் இந்த பா.ஜ.க. பிகாரில் பா.ஜ.க.வுக்கு 91 இடங்கள் கிடைத்துவிட்டன என்றதும் தலைகால் புரியவில்லை.

அய்க்கிய ஜனதா தளத்துடன் கூட்டு சேர்ந்து பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில், பார்ப்பனர்களுக்கே உரித்தான விஷமத்தனத்துடன், அய்க்கிய ஜனதா தளத்துக்குக் கிடைத்த வாக்குகளின் சதவிகிதம் 81 தான்; அதேநேரத்தில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த சதவிகித வாக்குகள் 90 என்று எழுதுகிறார். நிதிஷ்குமார் போன்றவர்கள் இந்த இடத்தைக் கவனமாகக் கருத்தில் கொள்வது நல்லது.

இந்த வார துக்ளக் தலையங்கத்தில் (8.12.2010) அவர் என்ன சொல்கிறார் - முசுலிம்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித் துள்ளனர் என்கிறார். நரேந்திர மோடியை நிதிஷ்குமார் தேர்தல் கூட்டங்களுக்கு அழைக்காததால்தான் முசுலிம்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தார்கள் என்பது தவறு; அத்வானி குஜராத் தேர்தலில் நரேந்திர மோடியைப்பற்றிப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அப்படியிருக்கும்பொழுது நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு வராததால்தான் முசுலிம்கள் அய்க்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணிக்கு வாக் களித்தனர் என்று எப்படிக் கூற முடியும் என்று வாதாட முயற்சி செய்கிறார்.

சென்னையிலிருந்து பிகார் தேர்தல் பிரச்சினையை அலசுபவரைவிட, நேரிடையாக களத்தில் உள்ளவர் - ஆட்சியில் இருப்பவர் நிதிஷ்குமார். நரேந்திர மோடியை ஏன் அழைக்கக் கூடாது என்பதற்கு, அவருக்கு நேரிடையாகத் தெரிந்ததைவிட இந்த சோக்குத் தெரியும் என்று எதிர் பார்ப்பது அசல் சிறுபிள்ளைத்தனம்.

நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்று ஆசைப்படும் சோ வேறு விதமாக எழுதுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்தியாவுக்குப் பிரதமராக வரவேண்டும் என்றால், ஆயிரக்கணக்கான முசுலிம்களை தனது காவல்துறையைத் துணைக்கு அனுப்பி, சங் பரிவார்கள் மற்றும் கூலிகளின் கைகளில் கொலைகார ஆயுதங்களைக் கொடுத்துக் கொன்று முடிக்கவேண்டும்; அவர்களின் வீடுகளையும் வியாபார நிறுவனங்களையும் தீயிட்டுக் கொளுத்தி முடிக்கவேண்டும்.

கருவுற்ற பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை எரியும் தீயில் தூக்கி எறிந்து குதியாட்டம் போடவேண்டும்.

இப்படிப்பட்டவர் பிரதமராக வந்தால்தான் குஜராத்தில் மட்டும் நடந்தது இந்தியா முழுமையும் நடக்கும்; அதன் மூலம்தான் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்க முடியும்; இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக; பூணூல் ராஜ்ஜியமாக ஆக்க முடியும் - இதுதான் சோ பார்ப்பனரின் அந்தரங் கத்தில் துள்ளிக் குதிக்கும் ஆசை வெறி!

அது ஒருபுறம் இருக்கட்டும்; நரேந்திர மோடியின் செல்வாக்கு என்பது - குஜராத்துக்குள்தான் - வெளியில் செல்லுபடியாகாது என்று சொன்னவர் காங்கிரஸ் கட்சிக் காரர் அல்ல - பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர் - மக்க ளவையில் பா.ஜ.க.வின் தலைவர் - எதிர்க்கட்சித் தலைவர். இதற்கு என்ன பதில் இருக்கிறது இந்த சோ கூட்டத்திடம்?

சோ போன்றவர்கள் இப்படித் துள்ளிக் குதிப்பதற்கு காங்கிரஸ் செய்த தவறுதான் காரணம். பிகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ் வானின் லோக் ஜனசக்தி இவற்றுடன் கூட்டணி வைத்தி ருந்தால் பா.ஜ.க. கூடாரம் காலியாகி இருக்கும். தேர்தல் முடிவுகளின் வாக்குகள் பற்றிக் கண்ணோட்டம் செலுத்தும் போது இந்த நிலை மிகவும் தெளிவாகவே தெரிகிறது.

உ.பி.யில் பாடம் படித்ததற்குப் பிறகாவது காங்கிரஸ் புத்தி கொள்முதல் பெற்றிருக்கவேண்டும்.

காங்கிரசின் அணுகுமுறை குறைபாட்டால் பிகாரில் தேர்தல் முடிவு இந்த நிலைக்கு ஆளானது என்பது சோவுக்கும் அவர் வகையறாக்களுக்கும் நன்கு தெரியும். என்றாலும், பா.ஜ.க.வுக்கு எப்படியும் முட்டுக்கொடுத்துத் தூக்கி நிறுத்தவேண்டுமே - அதற்காக இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பிகார் தோல்விக்குப் பிறகாவது காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி தலைவர்கள் தங்கள் அணுகுமுறையில் மாற்றம் காண்பார்களாக!

-------- நன்றி விடுதலை (04-11-2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]