வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label சினிமா-பெரியார்-பகுத்தறிவு-மூடநம்பிக்கை-சிவக்குமார். Show all posts
Showing posts with label சினிமா-பெரியார்-பகுத்தறிவு-மூடநம்பிக்கை-சிவக்குமார். Show all posts

Thursday, May 13, 2010

நடிப்பு என்றால் என்ன? உண்மையல்ல என்பதன் மறுபெயர்தானே!

ராணி இதழில் உங்க-ளோடு பேசுகிறேன் எனும் தலைப்பில் நடிகரும், ஓவி-யருமான சிவகுமார் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இந்த வார இதழில் (16.5.2010) அவர் குறிப்பிட்ட ஒரு கருத்து சுரீர் என்று தைக்கிறது. திரையு-லகத்தில் மின்னிக் கொண்டே, அந்த மோகத் திரையைக் கிழித்துள்ளது _ அசாதாரண-மானதே!

சினிமாவில் காட்டப் படும் அத்தனையும் உண் மையில் மாயை, கட்டுக் கதை என்பதை அறிவுப் பூர்வ மாக மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டால், சினிமாவுக்கு உள்ள கவர்ச்சி அடியோடு அழிந்து விடும். மக்களின் அறி யாமை தொடரும்வரை அரசியலுக்கும், சினிமா வுக்கும் அழிவில்லை என்ற கருத்தினைப் பதிவு செய்துள்ளார் நடிகர் சிவகுமார்.

உண்மைதானே; சினிமா ஒரு தொழில்; அதில் நடிப்ப-தெல்லாம் தொழிலைச் சார்ந்தது என்பதைத் தவிர அதற்குமேல் என்ன வாழ்-கிறது?
முதலில் ஒன்றைத் தெளி-வாகப் புரிந்துகொள்ள-வேண்டும். நடிப்பு என்றால் என்ன? உண்மையல்ல என்பதன் மறுபெயர்தானே!

அந்த நடிப்பை நிஜம் என்று நினைத்துவிட்டால் விபரீதம்தானே!
இப்பொழுதெல்லாம் மக்களிடத்தில் தம்மைப்பற்-றிய வடிவம் (இமேஜ்) பேருருப் பெறவேண்டும் _ மக்களின் மனத்தில் ஆணி அடித்து உட்காரவேண்டும் _ அதன்மூலம் கிடைக்கும் பாமரத்தனமான செல்-வாக்கை அரசியலுக்கு மினுமினுப்பாகப் பயன்-படுத்திக் கொள்ளவேண்டும் _ அதன்மூலம் இந்த நாட்டையே ஆளவேண்-டும் என்ற மனப்பால் குடித்து, வேண்டுமென்றே திட்ட-மிட்டு சில வசனங்களைக் கதாநாயகன் பேசுவதுபோல சித்திரிக்கிறார்கள்.

நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னதற்குச் சமம் என்பது போன்றவை எல்-லாம் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.

எப்பொழுது வரவேண் டுமோ, அப்பொழுது வரு வேன்! என்பதெல்லாம் இரு பொருளில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள்.

இப்பொழுது இந்தக் களத்தில் போட்டிகள் அதி-கரித்துவிட்டன. சினிமாவில் நடிக்கும் கதாநாயகர்கள் பெரும்பாலோர் அடுத்த முதலமைச்சர் நாம்தான் என்ற மனப்பான்மையில் மிதக்கின்றனர்.

நாட்டுக்காகப் பாடுபட்டு இருக்கவேண்டாம்; தியாகம் செய்திருக்கவேண்டாம்; சில வசனங்களைப் பேசினாலே போதும்; இந்த அப்பாவிப் பாமர மக்களின் வாக்குகளை சுலபமாக, சாமர்த்தியமாக ஜேப்படி செய்துவிடலாம் என்று நினைக்கும் போக்கை மனதில் கொண்டுதான் நடிகர் சிவகுமார் நறுக்-கென்று பட்டுத் தெறித்தது-போல் கூறியிருக்கிறார்.

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று வாழப்பாடியில் (19.5.1962) 48 ஆண்டுகளுக்குமுன்பே தந்தை பெரியார் கூறிய தொலைநோக்கை என்ன வென்று கூறுவது!

 - விடுதலை(13.05.2010) மயிலாடன்


Tamil 10 top sites [www.tamil10 .com ]