வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, January 30, 2011

பார்ப்பனர்களின் வக்கீலாக இன்றைய தினம் சோ ராமசாமி களத்தில் நிற்கப் பார்க்கிறார்

கேள்வி: எல்லோருக்கும் பொதுவானவர் ஒரு மாநில முதலமைச்சர். அவரே பூணூல்,பஞ்சகச்சம்,ஆரியம், திருடன் என்று பிராமணர்களை மேடைகளில் இழிந்து பேசலாமா? இது சட்டப்படி சரியா? 
 
 பதில்: முதல்வரின் பல பேச்சுக்கள் இந்தியன் பீனல் கோட் விவரித் துள்ள குற்றங்கள் சிலவற்றின் கீழ்வருபவைதான்

(துக்ளக் 26.11.2011 பக்கம் 20)

நமது விளக்கம்: பிராமணன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொள்வதைவிட பெரிய குற்றம் வேறு எதுவாக இருக்க முடியும்? நீவிர் பிராமணன் என்றால் நாங்கள் யார்?

நீ பிர்மாவின் நெற்றியில் பிறந்த வன் என்றால் நான் பிர்மாவின் பாதத்தில் பிறந்தவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமே.

நான் சூத்திரன் என்றால் உன் மனு தர்மப்படி எங்கள் நிலைப்பாடு என்ன?

நாங்கள் விலைக்கு வாங்கப்பட்ட வர்கள், விபச்சாரி மகன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே. (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

என்னை விபச்சாரி மகன் என்று சொல்லும் பிராமணனாகிய நீ குற்றவாளியா? சுயமரியாதை உணர்வின் அடிப்படையில் அதனை எதிர்க்கும் கலைஞர் குற்றவாளியா? கலைஞர் சொன்னது இந்தியன் பீனல்கோட் விவரித்துள்ள குற்றங் கள் சிலவற்றின் கீழ்வரும் என்று உறுதியாக நீவிர் கருதினால், உமக்குத் துணிவிருந்தால், அறிவு நாணயம் இருந்தால் கலைஞர்மீது வழக்குத் தொடு பார்க்கலாம்.

அதைத்தானே நாங்களும் எதிர் பார்க்கிறோம். வீதியில் முழங்குவதை நீதிமன்றத்தில் முழங்குவோமே! தோலை உரித்து மஞ்சள் பொடி தடவிக்  காயப் போட்டு விடுவோமே!

முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அரசியலில் -_ ஆட்சியில் இருப்பதால் சிலவற்றைக் கூறிடத் தயக்கம் காட்ட முடியும்.

எங்களுக்கு என்ன வந்தது? எங்களி டம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை.

இனத் தலைவர் _ தந்தை பெரியார் இடித்துச் சொல்லி விட்டும் போய்விட் டார் -_ அதுவும் தன் இறுதி உரையிலே _ மரண சாசனமாக (19.12.1973).

நண்பர் வீரமணி சொன்னதுபோல, கிறிஸ்தவன், முஸ்லிம், பார்சி தவிர, மற்றவன் எல்லாம் இந்து. நூற்றுக்கு மூன்று பேர் பார்ப்பனர் தவிர பாக்கி 97 பேர் தேவடியாள் மக்கள், பார்ப் பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுதி வைத்திருக்கிறார் கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? திருப்பிச் சொல்லாத காரணம், அவர்களைக் கண்டிக்காத காரணம்; பார்ப்பானைக் கண்டால் வாப்பா, தேவடியாள் மகனே, எப்ப வந்த? என்று கேட்க வேண்டும். ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? என்றால் நீ எழுதி வைத்ததடா _ என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே, உன்னைத் தேவடி யாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும்! அதில் என்ன தப்பு? என்று ஈரோட்டு எரிமலை, தன்மான உணர்வை தமது இறுதி உரையிலே சொல்லி விட்டுச் சென்றுள்ளாரே அடுத்த கட்டம் இதுதான் நடக்கப் போகிறது.

கலைஞரை மிரட்டலாம் என்று நினைக்க வேண்டாம். கருஞ்சட்டைப் பட்டாளத்தை முதலில் சந்தித்து விட்டுத்தான் அவரை அணுக வேண் டும் _ எச்சரிக்கை!

கடவுள் இல்லை என்று சொல்ப வனின் தலையை அறுக்க வேண்டும் என்று உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார் (நாலாயிரப் பிரபந்தம்) கூறுவான். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் -_ எதிர்த்து ஒரு கருத்துக்கூட கூறக் கூடாது.

பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களின் கற்பை அழிக்க வர வேண்டும் என்று உங்கள் திருஞான சம்பந்தன் பாடுவான் _ அதனையும் பயபக்தியோடு நாங்கள் பவ்யமாக ஏற்க வேண்டும்.

இவற்றையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்டால் இந்தியன் பீனல் கோட் காட்டி அச்சுறுத்துவீர்களா?

இந்திய அரசியல் சட்டம் அசல் மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று அரசியல் நிர்ணய சபை கூடி அதனைத் தயாரித்து வெளியிட்ட நேரத்திலேயே எங்கள் ஆசான் அய்யா அடித்துச் சொல்லி விட்டாரே!

சட்டத்தை நானே உருவாக்கியி ருந்தாலும், அதைக் கொளுத்துவதிலும் நான்தான் முதல் மனிதனாக இருப்பேன் என்று அண்ணல் அம்பேத்கர் மாநி லங்களவையிலேயே பதிவு செய்தாரே -_ அதுவும் இந்த அடிப்படையில்தான்.

6 பேருக்கு 4 பார்ப்பனர்கள் அரசமைப்புச் சட்டத் தயாரிப்பில் பங்கு கொண்டிருந்தால் அது அசல் மனுதர்ம சாஸ்திரமாகத்தானே இருக் கும்?

சமூகப் புரட்சித் தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் அதனால்தான் இதில் ஒரே கருத்தில் சுருதிப்பேதம் இல்லாமல் சொல்லியுள்ளனர்.

இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்ச மர்கள் என்றும், உரிமையற்றவர்கள் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ள வேதங்களை, (சுருதிகளை), உபநிஷத் துக்களை, மனுதர்ம சாஸ்திரங்களை (ஸ்மிருதிகளை) இதிகாசங்களை, புராணக் குப்பைகளைக் கொளுத் தாமல், அவற்றை உச்சி மோந்து தலையில் தூக்கி வைத்து ஆடும் பார்ப்பனர்கள், சட்டத்தைக் காட்டி மிரட்டுவார்கள் என்றால், அடுத்த கட்டத்தைப் பற்றி பெரும்பான்மை யான மக்கள் யோசித்துத்தான் தீர வேண்டும்.

பார்ப்பனர்களின் வக்கீலாக இன்றைய தினம் சோ ராமசாமி களத்தில் நிற்கப் பார்க்கிறார்.

பச்சையாக மனுதர்மத்துக்கு வக் காலத்து வாங்கி எழுதிக் கொண்டும் இருக்கிறார். நம்மைத் தேவடியாள் மக்கள் என்று சொல்லாமல் சொல் லுகிறார். மறைக்காமல் உண்மையாக பார்ப்பனர்களின் புத்தியைக் காட்டிக் கொள்வதற்காக ஒரு வகையில் அவரைப் பாராட்டக் கூடச் செய்யலாம்.

இப்பல்லாம் பார்ப்பனர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் எப்பொழுதோ மாறி விட்டனர்? என்று சொல்லக் கூடிய அதி மேதா விகள் பார்ப்பனர் அல்லாதாரில் பலரும் இருக்கத்தானே செய் கிறார்கள்?

அவர்களுக்கு அடையாளம் காட்ட அடையாளப் பூர்வமாக ஒருவரைக் காட்டித் தொலைக்க வேண்டாமா? அதற்கு சோ ராம சாமிதான் பொருத்தமானவர். எனவே அசல் அவாளாக பிரா மணராக ஆரியப் புத்திரராக பூணூலை உருவிக் கொண்டு தம் அடையாளத்தைக் காட்டட்டும் _ அதுதான் நம் மக்கள் இனவுணர்வு மழுங்காமல் இருக்கப் பெரிதும் பயன்படும்.

கேள்வி: பிராமணர்கள் ஓட்டு எல்லாம் திமுகவுக்குத்தான் என்று பிராமணர்கள் முடிவெடுத்தால் கருணாநிதி, தனது பிராமண எதிர்ப் புக் கொள்கையையும், கடவுள் மறுப்புக் கொள்கையையும் மாற்றிக் கொள்வாரா?

பதில்: அதோடு மட்டுமல்ல; இலவச பூணூல் திட்டம்கூட கொண்டு வருவார்.
(துக்ளக் 26.1.2011)

நமது விளக்கம்:

அப்பொழுதுகூட பார்ப்பனர்கள் தங்களின் ஜாதி ஆணவத்தை பிறப்பின் அடிப்படையில் நாங்கள் பிராமணர்கள் தான் எனும் ஆணவத் திமிரை விட்டுக் கொடுக் கத் தயாராக இல்லை _ அந்த ஆணவத்தைக் குறிக்கும் பூணூலை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர்களின் சாணக்கியரான ஆச்சாரியார் என்ன சொன்னார்?

பிராமணர்களே, பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரிய னுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லவில்லையா? அப்பொழுது அண்ணா இலவசமாகப் பூணூல் தருவேன் என்றா தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்?

ஆச்சாரியாரைத் தான் சாணக் கியர் என்று சொல்வார்கள். அந்தச் சாணக்கியரையே சட்னி யாக்கி, தேர்தல் வெற்றியை, திருச்சியில் இருந்த தந்தை பெரி யாரை நோக்கிச் சென்று காணிக் கையாக ஆக்கினாரே அறிஞர் அண்ணா _ நினைவிருக்கிறதா?

இப்பொழுது எகிறிக் குதிப்பது போலத்தான் 1971 தேர்தலிலும் இதே சோ கும்பல் தினமணி திரிக் கூட்டம் ஆட்டம் போட்டது.

ஆரியர் _ திராவிடர் யுத்தமே நடந்தது. முடிவு என்ன? 1967-இல் 138 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 1971இல் 183 இடங்களை யல்லவா கைப்பற்றியது?

இராமனை செருப்பாலடித்த கட்சிக்கா ஓட்டு என்று பிரச்சாரம் செய்து பார்த்தீர்களே! கோயில் கதவு பெரிசு சுவரொட்டிகளை ஒட்டினீர்களே! துக்ளக் சிறப்பிதழே வெளியிட்டதே! பிள்ளை பிழைத் ததா? விளக்கெண்ணெய்க்குத்தானே கேடாய் முடிந்தது?
இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. நாட்டை விட்டே வெளியேறத் தீர்மானித்து விட்டார்கள் என்று உங்கள் மூதறிஞர் குல்லுகப்பட்டர் ராஜாஜி சரணாகதி அடையவில்லையா? அவரை விடவா நீங்கள்?

புலியை இடறிப் பார்க்க ஆசைப் பட வேண்டாம். எச்சரிக்கை!

--- விடுதலை யிருமலர் (28-01-2011), மின்சாரம்


Friday, January 21, 2011

போலி மது பானங்கள் காட்டாறாக ஓடும் மாநிலம் குஜராத்துதான்

துக்ளக் ஆண்டு விழாவாக இருந்தாலும் சரி, கேள்வி  - பதில் பகுதியாக இருந்தாலும் சரி, தலையங்கப் பகுதியாக இருந்தாலும் சரி, குஜராத் மாநில முதல் அமைச்சர்  - உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்ட நரேந்திரமோடியைத் தூக்கிப் பிடிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கக் கூடியவர்தான் துக்ளக் சோ ராமசாமி அய்யர்.

இந்த வார துக்ளக் இதழிலும் (26.1.2011) வழக்கம்போல அந்த வேலையைச் செய்துள்ளார்.
இவ்வளவுக்கும் நரேந்திரமோடி ஒன்றும் பார்ப்பனர்அல்லர். நரேந்திரமோடி பார்ப்பனர் அல்லாதாராக இருப்பது அவாளுக்கு ஒரு வசதியாகப் போய்விட்டது. ஒரு பார்ப்பனராக இருந்து குஜராத்தில் மதக் கலவரத்தைத் தூண்டியிருந்தால் அது பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்ற கலவரமாக திசை மாறியிருக்கும். குஜராத்தில் மட்டுமல்ல - குமரிமுனையில் உள்ள பார்ப்பான்கூட உதைபட்டு இருப்பான்.

பார்ப்பனர்கள் உதை படவும் கூடாது; அதே நேரத்தில் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்கள் கொலை செய்யப்பட வேண்டும்; அவர்களின் வீடுகள் தீக்கு இரையாக வேண்டும்; வணிக நிறுவனங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட வேண்டும் என்றால் பார்ப்பனர்களுக்கு ஒரு பார்ப்பனர் அல்லாத ஆசாமி சிக்க வேண்டும்.

அப்படிச் சிக்கிக் கொண்டவர்தான், தேவைப்பட்டவர்தான் இந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி. இந்த இந்து மத வெறியன்மீது படிந்துள்ள பாசிச ரத்தக்கறையைக் கழுவுவதற்குப் பார்ப்பனர்கள் கண்டுபிடித்த பொய்ப் பிரச்சாரம்தான் - இந்தியாவிலேயே நரேந்திரமோடி ஆளும் குஜராத்துதான் பொருளாதாரத் திலே சிறந்து விளங்குகிறது.

அங்கு செல்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

இதோ ஒரு கேள்வி - பதில்:

கேள்வி: குஜராத்தில் ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் தரும் டாஸ்மாக் துறை இல்லை; மக்கள் பிறர் கையை எதிர்பார்க்க வைக்கும் இலவசங்கள் இல்லை. ஆனால், அய்.நா. சபையே உலகத்தின் இரண்டாவது சிறந்த மாநிலம் என்று பாராட்டும் அளவுக்கு, மாநிலத்தின் வளர்ச்சி அபாரமாக உள்ளதே?

பதில்: அது மட்டுமல்ல. வெளிப்படையான நிருவாகம்; பொறுப்பு ஏற்கிற தன்மை; பொதுச் சேவையில் மக்கள் கருத்துக்கு மதிப்பு.... போன்றவற்றில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதற்காக, குஜராத் மாநிலத்துக்கு, அய்.நா. சபையின் பொதுச் சேவை பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் சொல்கிற மாதிரி, டாஸ்மாக் இல்லாமல், இலவசங்கள் இல்லாமல், எப்படி இது சாத்தியமாயிற்று என்றால் - ஒரே ஒரு காரணம்தான்; நேர்மை, பொதுப் பணம் திருட்டுப் போகவில்லை; மக்கள் நலனுக்காகப் பயன்படுகிறது. அதனால்தான் இது சாத்தியமாகிறது என்கிறார் சோ.

டாஸ்மாக் இல்லாத குஜராத் என்று பெருமையாகக் கூறப்படுகிற பா.ஜ.க., ஆளும் மோடி முதல்வராக உள்ள அந்த மாநிலத்தில் உண்மை நிலை என்ன?

போலி மது பானங்கள் காட்டாறாக ஓடும் மாநிலம் குஜராத்துதான். போலி மது குடித்து மாண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

2010 மார்ச்சு 21ஆம் தேதி ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. ஆள் இல்லாத ஒரு கார் நின்று கொண்டி ருந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை காவல்துறை சோதனையிட்டபோது, 31 பெட்டிகளில் 372 மதுபாட்டில்கள் இருந்தன.

காரின் முன்புறத்தில் டீசா எம்.எல்.ஏ., என்று எழுதப்பட்டு இருந்தது. அவர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஆவார். ஆளும் கட்சி யினர் போலி மது பான தொழிலை ஒரு சாம்ராஜ்ஜியமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சிறு அத்தாட்சி அவ்வளவுதான். ஆளும் கட்சிக்காரர்களே போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருவதால் காவல்துறை கண்டு கொள்வதில்லை.

துக்ளக் பெருமையடித்துக் கொள்ளும் டாஸ்மாக் இல்லாத குஜராத் மாநிலத்தின் இலட்சணம் இதுதான்.

வெளிப்படையான நிருவாகம் குஜராத்தில் நடக்கிற தாம். இதனைப் படிக்கும் பொழுது வாயால் சிரிக்க முடியவில்லை.

குஜராத்தில் அரச பயங்கரவாதம் தலைதூக்கி ஆயிரக்கணக்கான முசுலிம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கலவரங்கள் மீதான விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை. உச்சநீதி மன்றமே புலனாய்வுக் குழு ஒன்றை நியமித்து விசாரிக்க ஆணை ஒன்றினைப் பிறப்பித்தது.

புலன் விசாரணைக் குழுவின் விசாரணையில் பல மோசடிகள் அம்பலமாயின. அதன் விளைவு குஜராத் மாநில காவல்துறைத் துணைத் தலைவர் வன்ஜாரா உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

மோடி ஆட்சியில் நிருவாகம் மிக வெளிப்படையானது என்று திருவாளர் சோ எழுதுகிறாரே, இதற்கு என்ன பதிலாம்?

இதைவிட உலகம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு பூகம்பப் பொய் ஒன்று இருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டால் சோ சொல்லும் அந்த வெளிப்படையான (?) மோடியின் நிருவாகத்தின்மீது காரித்தான் உமிழ் வார்கள்.

கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன என்றும், அவை பறிமுதல் செய்யப்பட்டன என்றும், அதற்குச் சாட்சியாக கோத்ரா அருகில் உள்ள பம்ப்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ஸ்மஷான் சாலையில் வாழும் மாலாஜி ஓடாஜி என்ற மார்வாடி என்பவர் சேர்க்கப்பட்டு இருந்தார்.

சாட்சியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அந்தச் சாட்சிக்கு நீதிமன்றத்தால் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவரோ சாட்சி சொல்ல வரவில்லை. அவர் எப்படி வருவார்? கோத்ரா நிகழ்வுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்தவர் ஆயிற்றே அவர்! அவர் எப்படி சாட்சிக் கூண்டு ஏறுவார்?

ஏழாண்டுகளுக்கு முன் செத்தவரை சாட்சியாகப் பதிவு செய்த நரேந்திரமோடிஆட்சியைப் போல வெளிப்படை யான நிருவாகத்தை எங்குப் போய்த் தேட முடியும்?

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டும் முப்புரிக் கூட்டம் எந்த அளவுக்கும் பொய்ச் சொல்லத் தயங்காதே!

------- நன்றி விடுதலை தலையங்கம்,21-01-2011


Thursday, January 20, 2011

தைபூசம்-ஒன்றை - எப்பொழுதாவது பக்தர்கள் எண்ணிப் பார்த்தார்களா?

ஆண்டுதோறும் தை மாதம் பவுர்ணமி அன்றோ அல்லது அந்த நாளையொட்டியோ (ஒரு நாள் முன்பின்) வருவது தைப் பூசமாம்.

அசுரர்களை அழிக்கவேண்டி சிவனிடம் தேவர்கள் முறையிட்டனராம். தேவர்களின் முறையீட்டை ஏற்று நெற்றி நேத்திரத்திலிருந்து ஆறு தீப்பொறிகள் சிதறினவாம். அவற்றை அக்னி, சிவமூர்த்தியின் கட்டளையால் கங்கையில் விட்டாராம். கங்கை வெப்பம் சகிக்காது, சரவணத்தில் வைத்தனள். அந்த இடத்திலிருந்த ஆறு பொறிகளும் ஆறுருக்களாய்க் கிருத்திகை முதலறுவர் பாலூட்ட வளர்ந்து உமா தேவியார் எடுக்க ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய் ஓருருவாய் எழுந்தருளியிருந்தவர் - அவர்தான் கந்தன்.

இன்னொரு ஆபாசமான பிறப்புக் கதை ஒன்றும் உண்டு. சிவனும், பார்வதியும் யுகயுகமாகப் புணர்ந்து கொண்டிருந்தனர். தேவர்கள் அஞ்சி இடையில் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்க இந்திரியம் ஆறாகப் பெருகி ஆறுமுகமாக உருவெடுத்ததாக ஒரு கதை - அதுதான் ஆறுமுகனான, ஸ்கந்தனின் கதை (ஸ்கந்தம் என்றால் இந்திரியம் என்று பொருள்)

பார்வதி தேவியார் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகனுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தானாம். அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகனாகிய கந்தன் அசுர குலத்தை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றினான் என்பது கதை!

இந்துமத புளுகுகள் அனைத்துமே, பத்து அவதாரங்கள் அனைத்துமே அசுரர்களை, அரக்கர்களை அழிப்பதைக் கருவாகக் கொண்டவைதான்.

கடவுள்தான் மனிதனைப் படைத்தாகக் கூறுவார்கள். அந்தக் கடவுள் ஏன் தேவர்களையும், அரக்கர்களையும் படைக்க வேண்டும்? தேவர்களுக்கு அரக்கர்கள் - அசுரர்கள் ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்? அதற்காகக் கடவுள் ஏன் ஆயுதங்கள் எடுத்துப் போர் செய்ய வேண்டும்? அசுரர்களை ஏன் கொல்ல வேண்டும்?

இவையெல்லாம் மனிதர்களிடையே நடந்தால்கூட சிறுபிள்ளைத்தனம் என்பார்கள். கடவுள்களிடத்திலே நடந்ததாக எழுதி வைத்துள்ளார்களே - இதைவிட அசல் சிறுபிள்ளைத்தனத்தை வேறு எங்குப் போய் காண்பதோ! கடவுள் அரூபி, (உருவமற்றவர்) எங்கும் நிறைந்தவர் என்று ஒரு பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்டு, கடவுள் பிறந்தார் கல்யாணம் கட்டிக் கொண்டார், வைப்பாட்டி வைத்துக் கொண்டார், கற்பழித்தார், பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார்; சண்டை போட்டார் என்று சொல்லுவது அசல் முரண்பாடு அல்லவா?

பிறப்பு - இறப்பு இல்லாதவன் கடவுள் என்று வேறு வெட்கம் இல்லாமல் சொல்லிக் கொள்கிறார்கள்; அதே நேரத்தில் இராமன் நவமியில் பிறந்தான்; கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான் என்றும் சொல்லுகிறார்கள். இப்படி முரண்பாடாகச் சொல்லுகிறோமே என்று யாரும் வெட்கப்படுவதாகத் தெரியவில்லை.

ஏன் இப்படி கதை எழுதி வைத்துள்ளார்கள்? உண்மையிலேயே தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? என்று வரலாற்றுக் கண்ணோட்டம் கொண்டு பார்க்கும் பொழுதுதான் ஓர் உண்மை தெரியலாயிற்று.

ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையை மய்யப்படுத்தியே இப்படிக் கதைகளைப் புராணங்களாகப் புனைந்து தள்ளியுள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

வரலாற்று ஆசிரியர்களும் வெளிப்படையாக இதுபற்றி எழுதியும் உள்ளனர்.

ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள், தஸ்யூக்கள் என்றும் ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள்

இது ஆரியக் கவிகள், திராவிடர்மீது கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகின்றது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., இராமசாமி அய்யங்கார் எம்.ஏ., (இந்திய சரித்திரம் 16,17ஆம் பக்கங்கள்)

பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே இப்படி எழுதுகிறார்கள் என்றால் இதன் உண்மைகளை எளிதில் தெரிந்து கொண்டு விடலாமே.

தீபாவளிக் கதை என்றால் ஒரு நரகாசுரன் வதம், ஓணம் பண்டிகை என்றால் ஒரு மாவலி வதை, சூரசம்ஹாரம் என்றால் ஒரு சூரபத்மன் வதை என்று தானே கதையெழுதி வைத்துள்ளனர். அந்த  வதைக்கப்பட்ட அசுரர்கள் செத்த நாளை ஒரு திருவிழாவாக்கி - அந்த அசுரர் குலத்தவரையே கொண்டாட வைத்த சூதினை என்னவென்று சொல்வது!

மாதா மாதம் இப்படி ஒரு விழா - அசுரர்களை வதைத்த விழாவைக் கொண்டாடும்படிச் செய்து விட்டார்களே! கடவுளோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்திவிட்டதால் பார்ப்பனர்களுக்கு அவர்கள் நினைத்த காரியம் எளிதாகவே முடிந்து விடுகிறது.

இதுபோன்ற விழாக்களுக்கு இல்லாததும் பொல்லாதது மான கற்பனைக் கதைகளைப் புனைந்து தள்ளியுள்ளனர். தைப் பூசத்தன்றுதான் உலகம் தோன்றியது. அப்படி யென்றால் உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே முருகனுக்குப் பார்வதி ஞானவேல் எடுத்துக் கொடுத்தது எப்படி?  உலகம் தோன்றிய அன்றே சண்டை போட வேல் எடுத்துக் கொடுத்தது ஏன் என்ற கேள்விகள் எழாதா? சாராயம் குடித்தவனைத் தேள் கொட்டினால் எப்படி உளறுவானோ, அப்படிப்பட்ட உளறல்கள் தானே இவை! சிவபெருமான், உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடித் தரிசனம் தந்த நாள் இந்நாள்தான் என்று தலபுராணம் எழுதி வைத்து விட்டனர்.

ஒன்றை - எப்பொழுதாவது பக்தர்கள் எண்ணிப் பார்த்தார்களா? இவர்கள் புளுகும் இந்த சமாச்சாரங்கள் எல்லாம் இறந்த காலத்தில், கடந்த காலத்தில் நடந்ததாக எழுதி வைத்துள்ளனரே, நிகழ் காலத்தில் ஏன் இப்படி நடப்பதில்லை - சிவனும், பார்வதியும் வந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் செய்வதில்லை? என்று யாராவது சிந்தித்துப் பார்த்தார்களா?
பிள்ளையார் பால் குடித்தார் என்று கதை கட்டினாலும் அது இரண்டே நாளில் அதன் குட்டு உடைந்துவிடும் நிலைதான் இப்பொழுது.

சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் மக்கள் என்பதால் பழைய கதைகளை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்துகின்றனர்; புதிதாகக் கரடி விட முடியவில்லை - அந்த அளவுக்குத் தமிழ் மண் தந்தை பெரியாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும் தைப்பூசம் போன்ற பித்தலாட்டத்தை உதறித் தள்ள முன்வர வேண்டும். அதுதான் மனிதனுக்கு மானமும் அறிவும் இருக்கிறது என்பதற்கு அழகாகும்.

----------விடுதலை தலையங்கம்,21-01-2011


தினமலர் அய்யருக்கு டவுட் தனபாலுக்குப் புரிந்தால் சரி!

தினமலர் செவ்வாயன்று ஒரு டவுட் தனபாலைப் பேச வைத்தது. நேற்றும் பேச வைத்துள்ளது. இரண்டுமே கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களைப் பற்றிதான்  -சுற்றிதான்!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தமிழகத்தில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை, பெரும் பாலும் வீட்டுக்கு வீடு சாமிகளும், கடவுள்களுக்கு கோவில்களும் உள்ளன. திருவிழாக்களுக்குப் பஞ்ச மில்லை. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது, குறிப்பிட்ட ஊர்களில் பக்தி வியாபாரம், கடவுளின் பெயரால் சுரண்டல், பிசின்ஸ் செழிப்பாக நடக்கிறது.

டவுட் தனபாலு: ஐயாவுக்கு அதுல என்ன வருத்தமோ...! திரா விடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகப் பொதுக் கூட்டங்கள்ல உண்டி யல் வசூல், துண்டு வசூல் நடத்தியும் ஒண்ணும் தேற மாட்டேங்குது.. கோவில்கள்ல மட்டும் கோடி கோடியா நிறையதேங்கிற வயித்தெரிச்சலோ..!

இதுதான் தினமலரின் டவுட் - கப்சா.

தி.க.வும், தி.மு.க.வும் உண்டி யல் வசூல் பண்ணுவது கூட்டம் நடத்துவது என்பது மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யத்தான். அந்தப் பிரச்சாரங்கள்தான், சிதம்பரம் கோயில் நிருவாகத்திலிருந்து ஆதிக் கத்திலிருந்து தீட்சதர்ப் பார்ப்பனர் களை வெளியேற்றியது.

பார்ப்பனச் சுரண்டல்களை சந்தி சிரிக்க வைத்துக் கொண்டும் இருக் கிறது. ஆனால் தினமலரின் டவுட் தனபால் எடுத்துக் காட்டியுள்ள - திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டிய அந்தக் கோயில் சமாச் சாரங்கள் என்ன?

சிதம்பரம் கோயில் தீட்சதப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், செலவு ரூ.37 ஆயிரம் மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்திலேயே கூறி னார்களா - இல்லையா?

அதே சிதம்பரம் கோயில், திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ள நிலையில் அக்கோயிலின் உண்டி யல் வசூல் மட்டும் என்ன தெரியுமா? 15 மாதங்களுக்கான வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய். அப்படியென்றால் எத்தனை நூற்றாண்டு காலமாக எவ்வளவுக் கொள்ளை அடித்திருக்கும் - இந்தத் தீட்சதப் பார்ப்பனக் கூட்டம்?

அது மட்டுமல்ல; இந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் சென்று விட்ட நிலையில் கோயிலில் உள்ள உண்டியல்களில் நெய்யை ஊற்றி ரூபாய் நோட்டுகளை நாசப்படுத்தும் கைங்கரியத்தையும் செய்தவர்கள் இதே தீட்சதர்ப் பார்ப்பனர்கள் தாம்.

தங்களுக்குப் பயன்படாதது எதுவாக இருந்தாலும் அது நாசமாகப் போக வேண்டும் என்பதுதானே பார்ப்பனர்களின் கல்யாணக் குணங்களும், பரந்த உள்ளமும்!

பக்தி வியாபாரம் கடவுளின் பெயரால் சுரண்டல் பிசினஸ் செழிப்பாக நடக்கிறது என்று திரா விடர் கழகத் தலைவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை காலங் கடந்தாவது இப்பொழுதாவது தினமலர் அய்யருக்கு டவுட் தனபாலுக்குப் புரிந்தால் சரி!\
- கருஞ்சட்டை,விடுதலை,20-01-2011


Tamil 10 top sites [www.tamil10 .com ]