Saturday, August 30, 2014
பார்ப்பனர்கள் தயவில் பதவி பட்டம் கிடைத்தால்....
கேள்வி: பிரதமர் மோடி நல்ல சிந்தனைகளை தானே பேசுகிறார், அவரை ஏன் மாணவர் முன்னிலையில் பேச கூடாது என்று விமர்சிக்கிறீர்கள்?
பதில்: மோடி நன்றாகத்தான் பேசுகிறார். தன் சுதந்திர தின உரையில் கூட ஆன் பெண் பேதம் இருக்க கூடாது. பெண்களை போன்றே ஆண்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்பது போன்று சில சிந்தனை முத்துகளை வீசினார். ஆனால் அவரால் அந்த எல்லையை மீறி அதற்கு மேல் முற்போக்கு பேச முடியாது. தன் ஆர்.எஸ்.எஸ் காவி கொள்கைகளை தளர்த்தி முற்போக்காக நடக்க வேண்டும் என்று அவரே நினைத்தாலும் முடியாது. ஏன் என்றால் அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர். பார்ப்பனர்கள் தயவினால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். இதோ பார்ப்பனர் தயவினால் உயர்ந்து பிறகு அவர்களுக்கு எதிராக கருத்து சொன்னவர்கள் என்ன ஆனார்கள் என்று தந்தை பெரியார் கூறுவதை தருகிறேன்,
காந்தியார் கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. மதத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது; காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று சொன்ன 56 - ஆம் நாள், பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் காந்தியைப் போல் சுட்டுக் கொன்றிருப்பார்கள். காந்தியை மகாத்மாவாக்கி விளம்பரம் செய்து மகானாக்கியது பார்ப்பனர்கள்; அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களே அவரைக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று.
நான் பார்ப்பான் தயவில் இல்லை. என்னைப் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். என் ஒருவனைக் கொன்றால் காந்தியைப் போன்று நாதியற்றுப் போகாது. பலர் கொல்லப்படுவார்கள். கலகம் ஏற்படும். பார்ப்பனர்கள் தப்ப முடியாது என்பதால்தான் என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்னைக் கொல்வது சிரமம் என்பதால் அல்ல! என்னைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டிருப்பதாகப் புராணங்கள் சரித்திரம் வரையில் இருக்கிறது. [விடுதலை, 13.04.1971]
பெரியாரின் கூற்றை படித்தீர்களா? இப்போ புரிகிறதா? மோடி என்ன முற்போக்கு பேசினாலும் அது செயல் வடிவம் பெறவே பெறாது. அதற்கு மாறாக அதற்குள் காவி சங்கபரிவார் சிந்தனை தான் அதிகம் இருக்கும். அதை மறைக்கவே இடை இடையே மோடி சில முற்போக்கு கருத்துகளை பேசி வருகிறார். அந்த முற்போக்கு அவருக்கு பிடித்திருந்தாலும் கூட ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. அது செயல் வடிவம் பெறாது. இதை புரிந்துகொள்ள வேண்டும்
Subscribe to:
Posts (Atom)