வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, May 03, 2010

பார்பனிய கும்பலை வேரறுக்க...பெரியார், டில்லியில் மய்யம் கொண்டுள்ளார்

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக்கவிஞர். தந்தை பெரியாரின் சிந்தனைகளைத்-தான், தத்துவங்களைத்தான் கவித்துவம் நிறைந்த தன்மையில் சிந்தனையூற்றை மண்டைச் சுரப்பு என்று உருவகப்படுத்திக் கூறினார்.


தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, அவர் மறைந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில்தான் அதிகம் பேசப்படுகிறார் _ தேவைப்படுகிறார்.

உலகெங்கும் மதச் சண்டைகள் மும்முரமாகத் தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகள் உலகிற்கே தேவைப்படுகின்றன. மதமற்ற ஓர் உலகுதான் மனித வாழ்வில் அமைதித் தென்றலை, சகோதரத்துவப் பிணைப்பைக் கொண்டுவரும் என்பது யதார்த்தமாகும்.

அத்தகு சமூகத்திற்கு தந்தை பெரியார் சிந்தனைகள் தேவைப்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை மத மாச்சரியங்களுக்கு எதிராக மட்டுமல்ல, சமூகநீதிக்கு தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் பெரிதும் தேவைப்படுகின்றன.

இதன் அருமையை உணர்ந்து திராவிடர் கழகம் தந்தை பெரியார் கொள்கை பரப்பும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டது; பல திட்டங்களைக் காலத்தின் தேவை கருதி செயல்படுத்த முனைந்தது.

இந்தியாவின் தலைநகரமான டில்லியில் பெரியார் பெயரில் மய்யம் ஒன்றை உருவாக்கி உலகம் முழுவதும் அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் ஒப்புயர்-வற்ற சிந்தனை ஒளியைக் கொண்டுவரத் திட்டம் தீட்டப்பட்டது.

டில்லியையடுத்த பாம்னோலி பகுதியில் 4 அடுக்குகளைக் கொண்ட பெரியார் மய்யம் திறக்கப்பட்டது (1.10.2000). டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் கட்டடத்தின் கல்வெட்டினைத் திறந்து வைத்தார்.

உலக மனிதநேய அமைப்பின் (IHEU) தலைவர் லெவி ஃபிராகல் மய்யத்தினைத் திறந்து வைத்தார். மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தார்.

பல சமூக நலப் பணிகள் அதில் தொடங்கப்பட்-டன. மத்திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் அந்த மய்யத்தில் மருத்துவமனையைத் திறந்து வைத்தார் (20.11.2001). பெரியார் கல்விப் பயிலகத்தை மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் மு. கண்ணப்பன் திறந்து வைத்தார் (20.11.2001).

பெரியார் தையற் பயிற்சிக் கூடமும் இடம்பெற்றது. பெரியார் நூலகம் ஒன்றும் இயங்கியது.

வட்டார மக்களின் ஆதரவுடன் பெரியார் மய்யம் தன் பகுத்தறிவுப் பணிகளைப் பரப்ப ஆரம்பித்தது.

பொறுக்குமா பாரதீய ஜனதா, சங்பரிவார்க் கும்பலுக்கு?

சு.சாமிகளின் விஷமமும் பின்னணியில்; டெல்லி லெப்டினன்ட் கவர்னரின் உத்தரவுப்படி சட்ட விரோத-மாக பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது (3.12.2001).

அந்த நேரத்திலும் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நிலைகுலைந்து போய்விடாமல், உறுதியாகச் சொன்ன வார்த்தைகளை இந்த நேரத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.

டிசம்பர் 3 ஆம் தேதி (2001) பெரியார் மய்யத் தின் 4 மாடிக் கட்டடத்தின் இடிப்பு என்பது தற் காலிகமாக பார்ப்பன சக்திகளுக்கு, பெரியார் தத்துவ எதிரிகளுக்குக் கொண்டாட்டமாக இருக்க லாம்; சிரித்து மகிழலாம்; ஆனந்தக் கூத்தாடலாம்; ஆனால், இறுதியில் சிரிக்கப் போவது யார் என்பது அவர்களுக்கு இப்போது புரியாது.

நமது அறிவு ஆசான் சொல்வார்; அவர் களுக்கு எப்போதும் முன்புத்தி கிடையாது, பின்புத்தி தான் என்று.

டில்லி நிகழ்ச்சி அதை இப்போதும் நிரூபித் துள்ளது. டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்து தங்கள் இன்னுயிர்களை ஈந்த லட்சிய வீரர், வீராங்கனைகளின் தியாகத்தின் மீது சபதம் செய்கிறோம். முன்பு இருந்ததைவிட, டெல்லி பெரியார் மய்யம் பிரம்மாண்டமானவை களாக பெரு உருப்பெற்று எழும், எழுப்பப்படும் (விடுதலை, 5.12.2001) என்று கட்டடம் இடிக்கப்பட்ட 24 மணிநேர இடைவெளியிலேயே சூளுரைத்தார்.

அது வெறும் வார்த்தை விளையாட்டு என்று யாராவது நினைத்திருந்தால், அவர்களின் நெஞ்சில் சூடு போட்டு, நிமிர்ந்து நிற்கிறது ஜஸோலாவின் பெரியார் மய்யம்.

ஆம், பெரியார், டில்லியில் மய்யம் கொண்-டுள்ளார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பகுத்தறிவுப் புயல் வீசப் போகிறது.

பிற்போக்குச் சக்திகளை ஆணி வேரோடு வீழ்த்த அந்தப் புயல் நாலாத் திசைகளிலும் சுழன்றடிக்கப் போகிறது. உலகெங்கும் உள்ள பெரியார் பற்றாளர்கள், முற்போக்காளர்கள் மகிழ்ந்து கொண்டாடவேண்டிய அறிவுத் திருநாள் மே 2 (2.5.2010) என்பதிலும் அய்யமுண்டோ!
 
------------- விடுதலை தலையங்கம் (03.05.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]